08.11.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, ஆத்ம உணர்வுடையவர் ஆகுங்கள், அப்பொழுது உங்கள் நோய்கள் அனைத்தும் நீங்கி, நீங்கள் இரட்டைக் கிரீடத்திற்குரிய உலக அதிபதிகள் ஆகுவீர்கள்.
கேள்வி:
எந்தக் குழந்தைகள் தந்தையின் நேர்முன்னிலையில் அமர வேண்டும்?பதில்:
ஞான நடனம் ஆடத் தெரிந்தவர்கள். ஞான நடனம் ஆடத் தெரிந்த குழந்தைகள் தந்தையின் நேர் முன்னிலையில் அமரும் போது, பாபா அவ்வாறான முரளியைப் பேசுகின்றார். பாபாவின் முன்னிலையில் ஒருவர் அமர்ந்திருந்து, அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டிருந்தால், அந்தக் குழந்தை எதனையும் புரிந்து கொள்ளவில்லை என்பதை பாபா புரிந்து கொள்கின்றார். அப்பொழுது பிராமண ஆசிரியரிடம்; பாபா வினவுகின்றார்: இங்கு நீங்கள் யாரை அழைத்து வந்திருக்கின்றீர்கள்? அவர் தந்தையின் முன்னிலையில் அமர்ந்திருந்து, கொட்டாவி விடுகின்றார்! குழந்தைகளாகிய நீங்கள் அத்தகைய தந்தையைக் கண்டு கொண்டதால் நீங்கள் சந்தோஷ நடனம் ஆட வேண்டும்!பாடல்:
தொலை தூர தேச வாசி அந்நிய தேசத்திற்கு வந்துள்ளார்.ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய நீங்கள் பாடலைச் செவிமடுத்தீர்கள். துன்பத்தை அகற்றுபவரும், சந்தோஷத்தை அருள்பவரும், தாயும் தந்தையும் என நினைவு கூரப்படுகின்றவர், ஆன்மீக பாபாவே என்பதை ஆன்மீகக் குழந்தைகளான நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அவரையே நீங்கள் கூவியழைக்கின்றீர்கள: மீண்டும் வந்து எங்களுக்கு அதிகளவு சந்தோஷத்தைக் கொடுங்கள். நாங்கள் சந்தோஷமற்று இருக்கின்றோம், முழு உலகமும் சந்தோஷமற்றுள்ளது, ஏனெனில் இதுவே கலியுகமான பழைய உலகமாகும். புதிய உலகிலும் புதிய வீட்டிலுமுள்ள அதேயளவு சந்தோஷம், பழைய உலகிலும் பழைய வீட்டிலும் இருக்க மாட்டாது. நீங்கள் உலக அதிபதிகளாக இருந்தீர்கள் என்பதையும், நீங்களே ஆதி சனாதன தேவ தேவியர்கள் என்பதையும், குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். நாங்களே 84 பிறவிகளையும் எடுத்தவர்கள். தந்தை கூறுகின்றார்;: குழந்தைகளே, உங்கள் சொந்தப் பிறவிகளையோ அல்லது நீங்கள் எத்தனை பிறவிகள் உங்கள் பாகங்களை நடிக்கின்றீர்கள் என்பதையோ நீங்கள் அறியமாட்டீர்கள். 8.4 மில்லியன் மறுபிறவிகள் உள்ளன என மக்கள் நினைக்கின்றார்கள். ஒவ்வொரு மறுபிறவியும் எத்தனை வருடங்களுக்கு நீடிக்கின்றது? 8.4 மில்லியன் பிறவிகளாயின், உலகச் சக்கரம் மிகவும் நீண்டதாக இருக்கும். ஆத்மாக்களாகிய உங்கள் தந்தையே உங்களுக்குக் கற்பிக்க வந்துள்ளார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொண்டீர்கள். நான் தொலைதூர தேச வாசியாவேன். நான் இவ்வுலக வாசியல்ல. நான் எனது பாகத்தை நடிக்கவே இங்கு வந்துள்ளேன். பரந்தாமத்தில் உள்ள தந்தையையே நாங்கள் நினைவு செய்கின்றோம். அவர் இப்பொழுது இந்த அந்நிய தேசத்திற்கு வந்துள்ளார். சிவன், பாபா என அழைக்கப்படுகின்றார். இராவணன் பாபா என அழைக்கப்படுவதில்லை. கடவுள் பாபா என அழைக்கப்படுகின்றார். தந்தையின் புகழ் தனித்துவமானது. ஐந்து விகாரங்களை எவரேனும் புகழ்வார்களா? சரீர உணர்வு மிகக் கொடிய நோயாகும். நாங்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகும் போது, நோய் எதுவும் இருப்பதில்லை, அப்பொழுது நாங்கள் உலக அதிபதிகள் ஆகுவோம். இவ்விடயங்கள் உங்கள் புத்தியில் உள்ளன. சிவபாபாவே ஆத்மாக்களாகிய எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஓர் இராச்சியத்தைப் பெறுவதற்காக, பாபா எங்களுக்கு இராஜயோகத்தைக் கற்றுக் கொடுப்பதற்கு வந்துள்ளார் என்பதை வேறு எந்த ஆன்மீக ஒன்றுகூடலில் உள்ளவர்களும் புரிந்து கொள்வதில்லை. பிறரை அரசர் ஆக்குகின்றவர் தனக்குத் தானே அரசராக இருக்க வேண்டும். ஒரு சத்திரசிகிச்சை நிபுணர் பிறருக்குக் கற்பித்து அவர்களையும் தன்னைப் போன்று சத்திரசிகிச்சை நிபுணராக ஆக்குகின்றார். அச்சா. உங்களை இரட்டைக் கிரீடத்திற்கு உரியவர் ஆக்குவதற்கு இரட்டைக் கிரீடம் அணிந்த ஒருவர் எங்கிருந்து வருவார்? இதனாலேயே மக்கள் கிருஷ்ணருக்கு இரட்டைக் கிரீடத்தைக் கொடுத்துள்ளார்கள். எவ்வாறாயினும், கிருஷ்ணரால் எவ்வாறு கற்பிக்க முடியும்? தந்தையே நிச்சயமாக சங்கமயுகத்தில் வந்து, இராச்சியத்தை ஸ்தாபித்திருக்க வேண்டும். தந்தை எவ்வாறு வருகின்றார் என்பது உங்களைத் தவிர வேறு எவரது புத்தியிலும் இல்லை. எங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிப்பதற்கு தந்தை தொலை தூர தேசத்தில் இருந்து வருகின்றார். தந்தை கூறுகின்றார்: என்னிடம் ஒளியிலான கிரீடமோ, இரத்தினத்திலான கிரீடமோ இல்லை. அவர் ஓர் இராச்சியத்தை என்றுமே பெறுவதில்லை. அவர் ஒருபோதும் இரட்டைக் கிரீடத்திற்குரியவர் ஆகுவதும் இல்லை. ஆனால் அவர் பிறரை அவ்வாறு ஆக்குகின்றார். தந்தை கூறுகின்றார்: நான் ஓர் அரசனாக வேண்டுமாயின், நானும் ஓர் ஆண்டியாகவும் வேண்டும். பாரத மக்கள் செல்வந்தராக இருந்தனர். இப்பொழுது ஏழைகளாகிவிட்டனர். நீங்கள் இரட்டைக் கிரீடத்திற்குரியவர் ஆகுகின்றீர்கள். ஆகையால், உங்களை அவ்வாறு ஆக்குகின்ற ஒரேயொருவரும் இரட்டைக் கிரீடத்திற்கு உரியவராகவே இருக்க வேண்டும். அப்பொழுதே உங்களால் அவருடன் யோகம் செய்ய முடியும். ஒருவர் எவ்வாறானவரோ, ஏனையோரையும் அவர் தனக்குச் சமமானவர் ஆக்குகின்றார். சந்நியாசிகள் பிறரைச் சந்நியாசிகள் ஆக்கவே முயற்சிக்கின்றார்கள். நீங்கள் ஓர் இல்லறத்தைச் சேர்ந்தவராகவும் அவர்கள் சந்நியாசிகளாகவும் இருப்பதால், உங்களால் அவர்களின் சீடர்கள் ஆக முடியாது. மக்கள் கூறுகின்றார்கள்: இன்னார் சிவானந்தரின் ஒரு சீடர். எவ்வாறாயினும், அந்தச் சந்நியாசி மொட்டை அடித்துள்ளார். ஆனால் நீங்கள் அவரைப் பின்பற்றி அவ்வாறு செய்வதில்லை. எனவே, நீங்கள் ஒரு சீடர் என ஏன் கூறுகின்றீர்கள்;? ஒரு சீடர் என்றால், உடனடியாகவே தனது ஆடையை மாற்றம் செய்து, காவி உடையைத் தரித்துக்; கொள்பவராக இருக்க வேண்டும். நீங்கள் இல்லறத்தில் விகாரங்களின் மத்தியில் வாழ்கின்றீர்கள். அவ்வாறாயின் நீங்கள் சிவானந்தரின் ஒரு சீடர் என எவ்வாறு உங்களை அழைக்க முடியும்? சற்கதி அளிப்பதே ஒரு குருவின் கடமையாகும். ஒரு குரு என்றுமே கூறமாட்டார்: இன்னாரை நினைவு செய்யுங்கள். அவ்வாறாயின், அவர் ஒரு குருவாக இருக்க முடியாது. முக்திதாமத்திற்குச் செல்வதற்கு ஒரு வழிமுறை தேவையாகும். உங்கள் வீடு முக்திதாமம் என்றும் அசரீரி உலகம் என்றும் அழைக்கப்படுகின்றது எனக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஆத்மாக்கள் அசரீரி ஆத்மாக்கள் என அழைக்கப்படுகின்றார்கள். சரீரங்கள் பஞ்சதத்துவங்களால் ஆக்கப்படுகின்றன. ஆத்மாக்கள் எங்கிருந்து வருகின்றார்கள்? அசரீரி உலகமான பரந்தாமத்திலிருந்தே ஆகும். அங்கே பல ஆத்மாக்கள் வசிக்கின்றார்கள். அதுவே இனிய மௌனதாமம் என அழைக்கப்படுகின்றது. அங்கு ஆத்மாக்கள் இன்ப, துன்பத்திற்கு அப்பால் உள்ளார்கள். இதனை நீங்கள் உறுதியாக்கிக் கொள்ள வேண்டும். நாங்கள் இனிய மௌன தாம வாசிகள் ஆவோம். இது நாங்கள் எங்கள் பாகங்களை நடிப்பதற்காக வந்திருக்கும் நாடக அரங்கமாகும். சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் போன்றன இந்த அரங்கத்தின் ஒளிகளாகும். இந்த அரங்கம் எத்தனை மைல்களுக்கு அப்பால் உள்ளது என எவராலும் கணிப்பிட முடியாது. மக்கள் ஆகாயவிமானத்தில் மேலே செல்கின்றார்கள், ஆனால் அவர்களால் அதிகளவு உயரத்திற்குச் செல்ல முடியாது, ஏனெனில் அவர்களால் திரும்பி வரும் வரைக்கும் தேவையான அளவிற்கு அதிகளவு எரிபொருளை (பெற்றோல்) நிரப்பி வைத்திருக்க முடியாது. அவர்கள் பல மைல்களுக்கு அப்பாற் சென்ற பின்னர், திரும்பி வரும் பயணத்தைத் தாம் ஆரம்பிக்காது விட்டால், தாம் விபத்துக்குள்ளாகுவோம் என்பது அவர்களுக்குத் தெரியும். எவராலும் கடலின் எல்லையையோ அல்லது ஆகாயத்தின் எல்லையையோ அடைய முடியாது. தந்தை இப்பொழுது தன்னைப் பற்றிய ஆழமான ஞானத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார். ஆத்மாக்கள் ஆகாய தத்துவத்தையும் தாண்டி அப்பால் செல்கின்றார்கள். ரொக்கட் மிகப் பெரிதாகவே இருக்கும்! ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மை ஆகும் போது, நீங்களும் ஒரு ரொக்கட்டைப் போன்று பறப்பீர்கள். நீங்கள் அவ்வாறான சின்னஞ் சிறிய ரொக்கட்டுக்கள்;. நீங்கள் சூரியன் சந்திரனுக்கு அப்பால் அசரீரி உலகிற்குச் செல்வீர்கள். மக்கள் சூரியனுக்கும் சந்திரனுக்கும் செல்வதற்கு முயற்சிக்கின்றார்கள். தொலைவில் உள்ள நட்சத்திரங்கள் மிகச் சிறிதாகவே தோன்றுகின்றன. ஆனால், உண்மையில் அவை மிகப் பெரிதாகவே இருக்கும். நீங்கள் பட்டத்தைப் பறக்க விடும் போதும், அவை தூரத்தில் மிகவும் சிறிதாகவே தெரிகின்றன. தந்தை கூறுகின்றார்;: ஆத்மாக்களாகிய நீங்களே அதி வேகமாகச் செல்லக் கூடியவர்கள். ஒரு விநாடியில் நீங்கள் சரீரங்களை நீக்கிவிட்டு வேறு கருப்பைகளுக்குள் பிரவேசிக்கின்றீர்கள். ஓர் ஆத்மாவிற்கு இலண்டனில் கர்மக்கணக்கு இருக்குமாயின், அந்த ஆத்மா ஒரு விநாடியில் இலண்டனுக்குச் சென்று அங்கு பிறப்பெடுக்கின்றார். ‘ஒரு விநாடியில் ஜீவன்முக்தி’ என்பதும் நினைவு கூரப்படுகிறது. ஒரு குழந்தை கருப்பையில் இருந்து வெளியே வந்ததும் அவர் ஓர் அதிபதியாகுகின்றார். அவர் ஒரு வாரிசு ஆகுகின்றார். குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது தந்தையைத் தெரியும். அதாவது, நீங்கள் உலக அதிபதிகள் ஆகியுள்ளீர்கள். எல்;லையற்ற தந்தை வந்து உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றார். நீங்கள் ஒரு சட்டநிபுணர் ஆகுவதற்காக கல்லூரியில் கற்று, பின்னர் நீங்கள் சட்டநிபுணர் ஆகுகின்றீர்கள். நீங்கள் இரட்டைக் கிரீடத்திற்குரியவர்கள் ஆகுவதற்காகவே இங்கே வந்துள்ளீர்கள். நீங்கள் சித்தி எய்தினால் நீங்கள் நிச்சயமாக இரட்டைக் கிரீடத்திற்குரியவர் ஆகுவீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் நிச்சயமாக சுவர்க்கத்திற்குச் செல்வீர்கள். தந்தை எப்பொழுதும் அங்கேயே வசிக்கின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். ‘ஓ தந்தையான கடவுளே!’ என மக்கள் கூறும் போது, அவர்கள் மேல் நோக்கியே பார்க்கின்றார்கள். தந்தையான கடவுள் இருப்பதனால், அவரும் நிச்சயமாக நடிப்பதற்கென ஒரு பாகத்தைக் கொண்டிருப்பார். இப்பொழுது அவர் தனது பாகத்தை நடிக்கின்றார். அவர் பூந்தோட்டத்தின் அதிபதி என்றும் அழைக்கப்படுகின்றார். அவர் வந்து முட்களை மலர்கள் ஆக்குகின்றார். ஆகையால், குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டும். பாபா இந்த அந்திய தேசத்திற்கு வந்துள்ளார். தொலை தூர வாசி அந்நிய தேசத்திற்கு வந்துள்ளார். தந்தை தொலை தூர தேசத்திலேயே வசிக்கின்றார். ஆத்மாக்கள் அனைவரும் அங்கேயே வசிக்கின்றார்கள். அவர்கள் தங்கள் பாகங்களை நடிப்பதற்கே இங்கு வருகின்றார்கள். எவருக்கும் ‘அந்நிய தேசம்’ என்பதன் அர்த்தம் தெரியாது. பக்தி மார்க்கத்தில் மக்கள் எதனைச் செவிமடுக்கின்றார்களோ அவற்றைத் தொடர்ந்தும், “அது உண்மை! அது உண்மை!” எனக்; கூறுகின்றார்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு மிகத் தெளிவாக விளங்கப்படுத்துகின்றார். ஆத்மாக்கள் தூய்மையற்றிருப்பதால், அவர்களால் பறக்க முடிவதில்லை. தூய்மையாகாது எவராலும் வீடு திரும்ப முடியாது. ஒரேயொரு தந்தை மாத்திரமே தூய்மையாக்குபவர் என அழைக்கப்படுகின்றார். அவர் சங்கமயுகத்திலேயே வர வேண்டும். உங்களுக்கு அதிகளவு சந்தோஷம் இருக்க வேண்டும். பாபா எங்களை இரட்டைக் கிரீடத்திற்குரியவர் ஆக்குகின்றார். எவரும் அதனை விட உயர்;ந்ததோர் அந்தஸ்தைப் பெற முடியாது. தந்தை கூறுகின்றார்: நான் இரட்டைக் கிரீடத்திற்கு உரியவர் ஆகுவதில்லை. நான் ஒரு முறை மாத்திரமே வருகின்றேன். நான் அந்நிய தேசத்தில், ஒரு அந்நிய சரீரத்தில் வருகின்றேன். இந்த தாதா கூறுகின்றார்: நான் சிவன் அல்ல. நான் லேக்ராஜ் என்று அழைக்கப்பட்டேன். ஆனால் பாபாவிற்கு என்னை அர்ப்பணித்ததும், பாபா எனக்கு பிரம்மா என்று பெயரிட்டார். அவர் இவரில் பிரவேசித்துக் கூறினார்: உங்கள் சொந்தப் பிறவிகளை உங்களுக்குத் தெரியாது. 84 பிறவிகளுக்கான கணக்கு இருக்க வேண்டும். அம் மக்கள் 8.4 மில்லியன் பிறவிகள் உள்ளன எனக் கூறுகின்றார்கள். ஆனால் அது முற்றிலும் சாத்தியமற்றது. 8.4 மில்லியன் பிறவிகளின் இரகசியங்களை விளங்கப்படுத்துவதற்கு ஆயிரமாயிரம் ஆண்டுகள் எடுக்கும். அவற்றை உங்களால் நினைவு செய்யவும் முடியாது. 8.4 மில்லியன் உயிரினங்களில் பறவைகள், மிருகங்கள், பல்வேறு உயிரினங்கள் அனைத்தும் உள்ளடக்கப்படுகின்றன. அதில் மனித பிறவியே பெறுமதிமிக்கது எனக் கூறப்படுகின்றது. மிருகங்களால் ஞானத்தைப் புரிந்து கொள்ள முடியாது. தந்தை வந்து, உங்களுக்கு ஞானத்தைக் கற்பிக்கின்றார். அவரே கூறுகின்றார்: நான் இராவண இராச்சியத்திலேயே வருகின்றேன். மாயை உங்கள் புத்தியைக் கல்லாக்கி உள்ளதால், இப்பொழுது தந்தை உங்கள் புத்தியை தெய்வீகமானதாக ஆக்குகின்றார். இறங்கும் ஸ்திதியில் உங்கள் புத்தி கல்லாகிவிட்டது. தந்தை இப்பொழுது உங்களை ஏறும் ஸ்திதிக்கு அழைத்துச் செல்கின்றார். அதுவும் வரிசைக்கிரமமாகவே உள்ளது. நீங்கள் ஒவ்வொருவரும், உங்கள் சொந்த முயற்சியில், இதனைப் புரிந்து கொள்ளலாம். நினைவு செய்வதே பிரதான விடயமாகும். இரவில் உறங்கச் செல்லும்போது நினைவு செய்யுங்கள்: பாபா, உங்கள் நினைவில் நான் உறங்கச் செல்கின்றேன். அதாவது, ‘நான் இப்பொழுது இந்தச் சரீரத்தை நீக்;கிவிட்டு உங்களிடம் வருகின்றேன்’. இவ்வாறாக, பாபாவின் நினைவில் உறங்கச் செல்லுங்கள். அப்பொழுது எவ்வளவு சந்தோஷமாக உள்ளது எனப் பாருங்கள். அப்பொழுது உங்களுக்குக் காட்சிகளும் கிடைக்கக் கூடும். எவ்வாhறாயினும் காட்சிகளினால் நீங்கள் திருப்தி அடைந்து விடக் கூடாது. ‘பாபா, நான் உங்களை மாத்திரமே நினைவு செய்கின்றேன். நான் உங்களிடம் வர விரும்புகின்றேன்’. அவ்வாறு தந்தையை நினைவு செய்யும் போது, நீங்கள் மிகவும் சௌகரியமாக அவரிடம் செல்வீர்கள். சூட்சும உலகிற்குச் செல்லும் சாத்தியமும் உள்ளது. எவராலும் அசரீரி உலகிற்குச் செல்ல முடியாது. வீடு திரும்புவதற்கான காலம் இன்னமும் வரவில்லை. ஆம், வைகுந்தத்தின் காட்சி உங்களுக்குக் கிடைப்பதைப் போன்று ஒரு புள்ளியின் காட்சி உங்களுக்குக் கிடைக்கும் போது, சின்னஞ்சிறிய ஆத்மாக்களின் விருட்சத்தையும் நீங்கள் காண்;பீர்கள். எவ்வாறாயினும் ஒரு காட்சி கிடைத்ததால் நீங்கள் வைகுந்தத்திற்குச் செல்ல முடியும் என்றில்லை. இல்லை. அதற்கான முயற்சியை நீங்கள் செய்ய வேண்டும். முதலில், நீங்கள் உங்கள் இனிய வீட்டிற்குச் செல்வீர்கள் என்றே உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஆத்மாக்கள் அனைவருமே தங்கள் பாகங்களை நடிப்பதில் இருந்து விடுதலை செய்யப்படுகின்றார்கள். ஓர் ஆத்மா தூய்மை ஆகும் வரை அவரால் வீடு திரும்ப முடியாது. ஒரு காட்சி கிடைப்பதால் எதனையும் சாதிக்க முடியாது. மீராவிற்கு வைகுந்தத்தின் காட்சி கிடைத்தது. ஆனால் அவர் அங்கு செல்லவில்லை. சத்தியுகத்திலேயே வைகுந்தம் உள்ளது. நீங்கள் வைகுந்தத்தின் அதிபதிகள் ஆகுவதற்கே இப்பொழுது ஆயத்தம் செய்கின்றீர்கள். நீங்கள் திரான்ஸில் அதிகமாகச் செல்வதை பாபா அனுமதிப்பதில்லை, ஏனெனில் நீங்கள் கற்க வேண்டும். தந்தை வந்து உங்களுக்குக் கற்பித்து அனைவருக்கும் சற்கதி அருள்கின்றார். விநாசம் உங்கள் எதிரிலேயே உள்ளது. யுத்தம் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் இடம்பெறுவதில்லை. உங்களுக்கு புதியதோர் உலகம் தேவை என்பதால், அவர்கள் தங்களுக்கிடையே சண்டையிட்டுக் கொள்கின்றார்கள். ஆனால் நீங்கள் மாயையுடனேயே யுத்தம் புரிகின்றீர்கள். நீங்கள் மறைமுகமான ஆனால் பிரபல்யமான போராளிகள். எவ்வாறாயினும், தேவியர் ஏன் அதிகளவு நினைவு கூரப்படுகின்றார்கள் என்பதை எவரும் அறியவில்லை. இப்பொழுது நீங்கள் யோகசக்தியினால் பாரதத்தை சுவர்க்கம் ஆக்குகின்றீர்கள். இப்பொழுது நீங்கள் தந்தையைக் கண்டுகொண்டீர்கள். அவர் உங்களுக்குத் தொடர்ந்தும் விளங்கப்படுத்துகின்றார். ஞானத்தின் மூலம் புதிய உலகிற்கான வெற்றி கிடைக்கின்றது. இலக்ஷ்மியும் நாராயணனும் புதிய உலகின் அதிபதிகளாக இருந்தார்கள். இப்பொழுது உலகம் பழையதாகி விட்டது. முன்னர் பழைய உலகின் விநாசம் ஏவுகணைகளின் மூலமும் இடம்பெற்றது. மகாபாரத யுத்தம் இடம்பெற்றது. அந்த நேரத்திலும் தந்தை இராஜயோகத்தைக் கற்பித்தார். இப்பொழுது தந்தை உங்களுக்கு நடைமுறை இராஜயோகம் கற்பிக்கின்றார். தந்தை மாத்திரமே உங்களுக்கு உண்மையைக் கூறுகின்றார். சத்தியமான பாபா வரும் போது, நீங்கள் சதா சந்தோஷத்தில் நடனம் ஆடுகின்றீர்கள். இதுவே ஞான நடனம் ஆகும். ஞான நடனம் ஆடுவதில் அதிகளவு ஆர்வம் உள்ளவர்கள் மாத்திரமே, பாபாவின் முன்னிலையில் அமர வேண்டும். எதுவும் புரியாதவர்கள் தொடர்ந்தும் கொட்டாவி விடுகின்றார்கள். அப்பொழுது அவருக்கு எதுவும் புரியவில்லை என்பதை பாபா புரிந்து கொள்கின்றார்;. அவர்களுக்கு ஞானம் புரியாத போது அவர்கள் அங்கும் இங்கும் சுற்றிப் பார்க்கின்றார்கள். அப்பொழுது பாபா பிராமண ஆசிரியரிடம் வினவுகின்றார்: இங்கே யாரை நீங்கள் அழைத்து வந்திருக்கின்றீர்கள்? கற்று பிறருக்குக் கற்பிப்பவர்களே இங்கு முன்னிலையில் அமர வேண்டும். அவர்கள் தொடர்ந்தும் சந்தோஷத்தை அனுபவம் செய்வதுடன், அவர்கள் நடனம் ஆடவும் விரும்புகின்றார்கள். இது ஞான நடனமாகும். கிருஷ்ணர் ஞானத்தை பேசவும் இல்லை, அவர் நடனம் ஆடவும் இல்லை. இது ஞானமுரளி ஆகும். தந்தை உங்களிடம் கூறியுள்ளார்: இரவில் நீங்கள் உறங்கச் செல்லும்போது, தொடர்ந்தும் தந்தையை நினைவு செய்வதுடன், உங்கள் புத்தியில் சக்கரத்தையும் சுழற்றுங்கள். ‘பாபா நான் இப்பொழுது இச் சரீரத்தை நீக்கிவிட்டு, உங்களிடம் வருகின்றேன்’. இவ்வாறாக அவரை நினைவு செய்தவாறே உறங்கச் செல்லுங்கள், அப்பொழுது உங்கள் அனுபவம் என்னவெனப் பாருங்கள். ஆரம்ப காலத்தில் அவர்கள் கப்ரிஸ்தான் (சுடுகாடு) ஒன்றை ஏற்படுத்தி, அவர்கள் மௌனத்தில் நிலைத்திருப்பதுண்டு. சிலர் நடனம் ஆடுவார்கள். தந்தையைத் தெரியாதவர்களால் எவ்வாறு அவரை நினைவு செய்ய முடியும்? மனிதர்களுக்குத் தந்தையைத் தெரியாது. அவ்வாறாயின் அவர்களால் எவ்வாறு அவரை நினைவு செய்ய முடியும்? இதனாலேயே தந்தை கூறுகின்றார்; : எவருக்குமே நான் யாரென்பதோ அல்லது நான் எவ்வாறானவர் என்பதோ தெரியாது. நீங்கள் இப்பொழுது அதிகளவு புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் மறைமுகமான போராளிகள். ‘போராளிகள்’ என்ற பெயரைக் கேட்;டதாலேயே அவர்கள் தேவியரை வாள், வில், அம்பு போன்றவற்றுடன் சித்தரித்துள்ளார்கள். நீங்கள் யோக சக்தி நிறைந்த போர் வீரர்கள். நீங்கள் யோகசக்தியினால் உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள். ஒருவர் பௌதீக சக்தியினால் வெற்றி கொள்ள எவ்வளவு முயற்சி செய்தாலும், அவரால் வெற்றியீட்ட முடியாது. பாரதத்தின் யோகம் மிகவும் பிரபல்யமாகும். தந்தை மாத்திரமே வந்து அதனைக் கற்பிக்கின்றார். எவருக்கும் இது தெரியாது. நடந்தும் உலாவித் திரியும் பொழுதெல்லாம் தொடர்ந்தும் தந்தையை நினைவு செய்யுங்கள். யோகம் செய்ய முடியவில்லை எனச் சிலர் கூறுகின்றார்கள். ‘யோகம்!’ என்ற வார்த்தையை அகற்றுங்கள். குழந்தைகள் தமது லௌகீகத் தந்தையை நினைவு செய்கின்றார்கள். அல்லவா? சிவபாபா கூறுகின்றார்: சதா என்னை மாத்திரமே நினைவு செய்யுங்கள். நான் மாத்திரமே சர்வசக்திவான்;. என்னை நினைவு செய்வதன் மூலம், நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். நீங்கள் சதோபிரதான் ஆகும் போது, ஆத்மாக்களாகிய உங்கள் ஊர்வலம் இடம்பெறும். தேனீக்கள் ஊர்வலமாகச் செல்வதைப் போன்றே, இது சிவபாபாவின் ஊர்வலமாகும். நுளம்புக் கூட்டத்தைப் போன்று, ஆத்மாக்கள் அனைவரும் சிவபாபாவைப் பின்தொடர்வார்கள். சரீரங்கள் அனைத்தும் அழிக்கப்படுகின்றன. அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. இரவில் உறங்கச் செல்வதற்கு முன்னர், பாபாவுடன் இனிய உரையாடல் ஒன்றை மேற்கொள்ளுங்கள். ‘பாபா, நான் இப்பொழுது இச்சரீரத்தை நீக்கிவிட்டு உங்களிடம் வருகின்றேன்’. இவ்வாறாக பாபாவின் நினைவில் உறங்கச் செல்லுங்கள். நினைவு செய்வதே பிரதான விடயமாகும். நினைவு செய்வதன் மூலமே, உங்கள் புத்தி தெய்வீகம் ஆகுகின்றது.2. ஐந்து விகாரங்களின் நோயிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு, ஆத்ம உணர்வுடையவர் ஆகுகின்ற முயற்சியைச் செய்யுங்கள். மிகவும் சந்தோஷமானவர் ஆகுங்கள். ஞான நடனம் ஆடுங்கள். வகுப்பில் சோம்பலைப் பரப்பாதீர்கள்.
ஆசீர்வாதம்:
ஒரு மகாதானியாகவிருந்து, பல ஆத்மாக்களிடமிருந்து ஆசீர்வாதங்களை பெறுவதன் மூலம் சதா முன்னேறிச் செல்பவர் ஆகுவீர்களாக.ஒரு மகாதானியாக இருப்பது என்றால் பிறருக்குச் சேவை செய்வதாகும். பிறருக்கு சேவை செய்வதன் மூலம் இயல்பாகவே உங்களுக்கு நீங்கள் சேவை செய்கிறீர்கள். நீங்கள் ஒரு மகாதானியாக இருப்பது என்றால் உங்களை அனைத்து பொக்கிஷங்களாலும் நீங்கள் நிரப்பிக் கொள்வதாகும். எத்தனை ஆத்மாக்களுக்கு நீங்கள் சந்தோஷத்தை, ஞானத்தை, சக்தியை தானமாக வழங்குகிறீர்களோ அந்தளவிற்கு பேறுகளின் ஓசையும், அவர்களிடமிருந்து வெளிப்படுகின்ற ஆசீர்வாதமும் உங்களுக்கு ஆசீர்வாதங்களின் வடிவம் ஆகுகின்றது. அந்த ஆசீர்வாதங்களே நீங்கள் முன்னேறிச் செல்வதற்கு வழியாகின்றது. ஆசீர்வாதங்களை பெறுவர்கள் சதா சந்தோஷமாக இருக்கிறார்கள். எனவே ஒவ்வொரு நாளும் அமிர்தவேளையின் போது, ஒரு மகாதானியாக இருப்பதற்கு நிகழ்ச்சிநிரல் ஒன்றைத் தயாரியுங்கள். நீங்கள் தானம் செய்யாத ஒரு நாளேனும் இல்லாதிருக்கட்டும்.
சுலோகம்:
இந் நேரத்தில் உடனடியான, நடைமுறை பலனே ஆத்மாக்களுக்கு பறப்பதற்கான சக்தியை வழங்குகின்றது.அவ்யக்த சமிக்ஞை: சரீரமற்ற ஸ்திதியின் பயிற்சியை அதிகரியுங்கள் (அசரீரி மற்றும் விதேஹி).
தந்தைக்கு நெருக்கமாகவும் சமமாகவும் ஆகுவதற்கு, உங்கள் சரீரத்திலிருக்கும் போதே சரீரமற்றவராக இருப்பதற்கு பயிற்சி செய்யுங்கள். சக்கார் தந்தை பிரம்மா, கர்மாதீத் ஸ்திதிக்கு ஓர் உதாரணமாக இருந்ததைப் போன்றே, அவ்வாறாக தந்தையை பின்பற்றுங்கள். இந்தச் சரீரம் இருக்கின்ற போதே, கர்மஷேத்திரத்தில் உங்கள் பௌதீகப் புலன் அங்கங்களினால் உங்கள் பாகத்தை நடிக்கின்ற வேளையில், செயல்களை செய்வதற்கு உங்கள் பௌதீகப் புலன் அங்கங்களின் உதவியை பெற்றுக் கொள்ளுங்கள். அதன் பின்னர் விடுபட்டிருங்கள். இப் பயிற்சி உங்களை சரீரமற்றவராக ஆக்குகின்றது.