08.12.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே நீங்கள் உயிர்வாழும் வரைக்கும் தந்தையை நினைவு செய்யுங்கள். இந்த நினைவைக் கொண்டிருப்பதன் மூலமே உங்களுடைய ஆயுட்காலம் அதிகரிக்கும். இந்தக் கல்வியின் சாராம்சம் நினைவு செய்தலாகும்.

கேள்வி:
குழந்தைகளாகிய உங்களுடைய அதீந்திரிய சுகம் ஏன் நினைவு கூரப்படுகிறது?

பதில்:
பாபாவின் நினைவில் நீங்கள் சதா சந்தோஷத்துடன் கொண்டாடுவதால் ஆகும். இப்பொழுது உங்களுக்கு எக்காலமுமே நத்தார் ஆகும். கடவுள் உங்களுக்குக் கற்பிக்கிறார். இதனை விட அதிகளவு சந்தோஷம் வேறு எதுவாக இருக்க முடியும்? இது ஒவ்வொரு நாளுக்குமான சந்தோஷமாகும். இதனாலேயே உங்களுடைய அதீந்திரிய சுகத்தைப் பற்றிய புகழ் உள்ளது.

பாடல்:
அன்புக்கடவுளே குருடருக்கு வழி காட்டுங்கள்!

ஓம் சாந்தி.
மூன்றாவது ஞானக்கண்ணை அருள்பவரான ஆன்மீகத் தந்தை, ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். தந்தையைத் தவிர வேறு எவராலும் இந்த ஞானத்தின் மூன்றாவது கண்ணை வழங்க முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் இப்போது இந்த ஞானத்தின் மூன்றாவது கண்ணைப் பெற்றுள்ளீர்கள். பக்தியை இருளான பாதை எனத் தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். இரவில் ஒளி இல்லாததால் மக்கள் இருளில் தடுமாறுகிறார்கள். பிரம்மாவின் பகல், பிரம்மாவின் இரவு என்று பாடப்படுகிறது. இப்பொழுது உங்களுக்குப் பாதை காட்டப்படுவதால் சத்தியயுகத்தில் உங்களுக்குப் பாதை காட்டப்பட வேண்டும் என நீங்கள் கூற மாட்டீர்கள். தந்தை வந்து உங்களுக்கு முக்தி தாமம் மற்றும் ஜீவன்முக்தி தாமத்திற்கான பாதையைக் காட்டுகிறார். நீங்கள் இப்போது முயற்சி செய்கிறீர்கள். இன்னமும் குறுகிய காலமே எஞ்சியுள்ளது என்பதை நீங்கள் இப்போது அறிவீர்கள். உலகம் மாறப் போகிறது. எவ்வாறு உலகம் மாறப் போகிறது என்பதற்கான பாடல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் அப்பாவி மக்களுக்கு இந்த ஞானக்கண் இல்லாததால், எப்போது, எவ்வாறு, அல்லது யார் இந்த உலகை மாற்றுகிறார்கள் என்பதை அவர்கள் அறியாமல் இருக்கின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்போது இந்த ஞானத்தின் மூன்றாவது கண்ணைப் பெற்றுள்ளீர்கள். அதன் மூலம் நீங்கள் உலகச் சக்கரத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியை அறிந்து கொள்கிறீர்கள். இது உங்களுடைய புத்திகளில் உள்ள ஞான சக்கரீன் ஆகும். சிறிதளவு சக்கரீனுமே எவ்வளவு இனிமையாக உள்ளதோ, அவ்வாறே ‘மன்மனாபவ’ என்ற ஞான வார்த்தையும் அனைத்திலும் மிக இனிமையானதாகும். தந்தையை மாத்திரம் நினைவு செய்யுங்கள். தந்தை வந்து உங்களுக்குப் பாதையைக் காட்டுகிறார். அவர் உங்களுக்கு எங்கே செல்வதற்கான பாதையைக் காட்டுகிறார்? அமைதி தாமத்திற்கும் சந்தோஷ தாமத்திற்குமான பாதையைக் காட்டுகிறார். எனவே குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறீர்கள். எப்போது சந்தோஷம் கொண்டாடப்படுகிறது என்பதை உலகம் அறியாது. புதிய உலகில் சந்தோஷம் கொண்டாடப்படுகிறது. அனைவரும் அறிந்ததொரு பொதுவான உண்மை: பழைய உலகில் எவ்வாறு சந்தோஷம் இருக்க முடியும்? பழைய உலகிலுள்ள மக்கள் தமோபிரதானாக இருப்பதனால் துயரத்தில் அழுகிறார்கள். தமோபிரதான் உலகில் எவ்வாறு சந்தோஷம் இருக்க முடியும்? சத்தியயுகத்தைப் பற்றிய ஞானம் எவருக்கும் கிடையாது. இதனாலேயே எதனையும் அறியாத அப்பாவி மக்கள் தொடர்ந்தும் இங்கு கொண்டாடுகிறார்கள். அவர்கள் நத்தாரை எவ்வாறு சந்தோஷத்துடன் கொண்டாடுகிறார்கள் என்று பாருங்கள். பாபா கூறுகிறார்: சந்தோஷத்தைப் பற்றி நீங்கள் ஏதாவது கேட்க விரும்பினால், எனது குழந்தைகளான கோபியரையும் கோபிகைகளையும் கேளுங்கள். ஏனெனில் தந்தை மிக இலகுவான பாதையை உங்களுக்குக் காட்டுகிறார். வீட்டில் உங்களுடைய குடும்பத்துடன் வாழ்ந்து உங்கள் தொழிலைச் செய்யும்போது, ஒரு தாமரை மலர் போலிருங்கள். இதுவும் ஒரு காதலனும் காதலியும் தமது பணிகளைச் செய்யும்போதும் ஒருவரையொருவர் நினைவு செய்வதைப் போன்றதே ஆகும். ‘லைலா மஜ்னு’ வைப் போன்றும் ‘ஹீர் ரஞ்சா’ வைப் போன்றும் அவர்கள் காட்சிகளைப் பெறுகிறார்கள். ஆனால் அவர்கள் விகாரத்திற்காக ஒருவரையொருவர் நேசிக்கவில்லை. அவர்களது அன்பு நினைவு கூரப்படுகிறது. அவர்கள் ஒருவர் மீது ஒருவர் காதல் கொண்டார்கள். எவ்வாறாயினும் இங்கு அவ்வாறு இல்லை. இங்கு பல பிறவிகளாக அந்த அதியன்பிற்கினியவரின் காதலிகளாக நீங்கள் இருந்திருக்கிறீர்கள். அந்த அன்பிற்கினியவர் உங்களுடைய காதலி அல்ல. ‘ஓ கடவுளே, வந்து குருடர்களுக்கு வழிகாட்டுங்கள்!’ எனக் கூறி இங்கு வருமாறு நீங்கள் அவரை அழைத்தீர்கள். நீங்கள் அவரை அரைக்கல்பமாக அழைத்தீர்கள். மக்களின் துன்பம் அதிகரிக்கும்போது அவர்கள் அவரை அதிகமாக அழைக்கிறார்கள். துன்ப வேளைகளில் அவரை அதிகமாக நினைவு செய்பவர்கள் இருக்கிறார்கள். பாருங்கள், அவரை நினைவு செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள். ‘அனைவரும் துன்ப வேளையில் அவரை நினைவு செய்கிறார்கள்….’ எனப் பாடப்படுகிறது. காலப் போக்கில் அவர்கள் மென்மேலும் தமோபிரதான் ஆகுகிறார்கள். எனவே, நீங்கள் மேலே ஏறுகிறீர்கள். ஆனால் அவர்கள் மென்மேலும் கீழே இறங்குகிறார்கள். ஏனெனில் விநாசம் இடம்பெறும் வரைக்கும் அனைத்தும் மேலும் தொடர்ந்து தமோபிரதான் ஆகும். நாளுக்கு நாள், மாயையும் மென்மேலும் தமோபிரதான் ஆகுகிறாள். இந்த நேரத்தில் தந்தையே சர்வசக்திவான் ஆவார். மாயையும் சர்வசக்திவானாகவே இருக்கிறாள். அவளும் அதிசக்திசாலியாக இருக்கிறாள். இந்த நேரத்தில் குழந்தைகளாகிய நீங்கள் பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்களும் பிராமண குல அலங்காரங்களும் ஆவீர்கள். உங்களுடைய குலமே அதி மேன்மையானதும் அதியுயர்ந்த குலம் எனவும் கூறப்படுகிறது. இந்த நேரத்தில் உங்களுடைய வாழ்க்கை மிகப் பெறுமதி வாய்ந்தது. இதனாலேயே இந்த வாழ்க்கையை (இந்த சரீரத்தை) கவனித்துக் கொள்ள வேண்டும். ஐந்து விகாரங்களால் மக்களுடைய சரீரங்களின் ஆயுட்காலமும் தொடர்ந்து குறைவடைகின்றது. எனவே, பாபா கூறுகிறார்: ஐந்து விகாரங்களைத் துறந்து யோகத்தில் நிலைத்திருங்கள். உங்களுடைய ஆயுட்காலம் அதிகரிக்கும். உங்களுடைய ஆயுட்காலம் படிப்படியாகத் தொடர்ந்து அதிகரிப்பதுடன் எதிர்காலத்தில் அது 150 வருடங்கள் ஆகும். தற்போது அது அவ்வாறு இருக்க முடியாது. எனவே தந்தை கூறுகிறார்: உங்களுடைய சரீரத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். இல்லாவிடின் சரீரம் எதுவிதப் பயனும் அற்ற களிமண்ணினால் ஆனதொரு பொம்மை எனக் கூறப்படுகிறது. நீங்கள் உயிர்வாழும் வரைக்கும் பாபாவை நினைவு செய்ய வேண்டும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்போது புரிந்து கொண்டிருக்கிறீர்கள். ஆத்மா ஏன் தந்தையை நினைவு செய்கிறார்? ஆஸ்திக்காக. தந்தை கூறுகிறார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்வதுடன் தெய்வீகப் பண்புகளையும் கிரகிக்கும் போது நீங்கள் அவ்வாறு ஆகுவீர்கள். எனவே குழந்தைகளாகிய நீங்கள் இந்தக் கல்வியை மிக நன்றாகக் கற்க வேண்டும். நீங்கள் கற்பதில் சோம்பேறிகளாக இருக்கக்கூடாது. இல்லாவிடின் நீங்கள் தோல்வி அடைவீர்கள். நீங்கள் மிகக் குறைந்த அந்தஸ்தையே அடைவீர்கள். இந்தக் கல்வியின் பிரதானமான விடயம் சாரம்சமாகும். அதாவது தந்தையை நினைவு செய்யுங்கள் என்பதாகும். யாராவது ஒருவர் எப்போதாவது கண்காட்சிக்கோ அல்லது உங்களுடைய நிலையத்திற்கோ வரும்போது பாபாவே அதியுயர்ந்தவர் என்பதனால் அவர்கள் அவரையே நினைவுசெய்ய வேண்டும் என்பதை அனைத்திற்கும் முதலில் விளங்கப்படுத்துங்கள். அதியுயர்ந்தவர் மட்டுமே நினைவு செய்யப்பட வேண்டும். அவரை விடக் குறைவான எவரையும் நீங்கள் நினைவு செய்யக்கூடாது. கடவுள் அதிமேலானவர் கடவுளே புதிய உலகை ஸ்தாபிப்பவர் எனக் கூறப்படுகிறது. தந்தை கூறுகிறார்: பாருங்கள், நான் புதிய உலகை ஸ்தாபிக்கிறேன். இதனாலேயே நீங்கள் என்னை நினைவு செய்வதனால் உங்களுடைய பாவங்கள் அழிக்கப்படும். இதனை மிக உறுதியாக நினைவு செய்யுங்கள். ஏனெனில் தந்தையே தூய்மையாக்குபவர் ஆவார். அவர் கூறுகிறார்: நீங்கள் என்னைத் தூய்மையாக்குபவர் என்று அழைக்கும்போது நீங்கள் தமோபிரதானாகவும் மிகவும் தூய்மை அற்றவர்களாகவும் இருக்கிறீர்கள். இப்போது தூய்மையானவர்கள் ஆகுங்கள்! தந்தை வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: உங்களுடைய சந்தோஷ நாட்கள் வரவுள்ளன. உங்களுடைய துன்ப நாட்கள் இப்போது முடிவிற்கு வந்துவிட்டன. இதனாலேயே மக்கள் அவரை அழைக்கிறார்கள்: ஓ துன்பத்தை நீக்கி சந்தோஷத்தை அருள்பவரே! சத்தியயுகத்தில் சந்தோஷத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை என்பதை நீங்கள் மிக நன்றாக அறிவீர்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகிறார்: நீங்கள் அனைவரும் தொடர்ந்து அமைதி தாமத்தையும் சந்தோஷ தாமத்தையும் நினைவு செய்ய வேண்டும். இது சங்கமயுகம். படகோட்டி உங்களை அக்கரைக்கு அழைத்துச் செல்கிறார். இதில் படகோட்டி அல்லது படகு என்ற கேள்விக்கு இடமில்லை. ‘எனது படகை அக்கரைக்கு எடுத்துச் செல்லுங்கள்!’ என அவர்கள் புகழ் பாடுகிறார்கள். அது ஒரேயொரு நபரின் படகை அக்கரைக்கு எடுத்துச் செல்வதாக இருக்காதல்லவா? முழு உலகின் படகும் அக்கரைக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும். இந்த முழு உலகமும் அக்கரைக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டிய பெரியதொரு நீராவிக் கப்பல் போன்றது. எனவே குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு சந்தோஷத்துடன் கொண்டாட வேண்டும். ஏனெனில் உங்களுக்கு சதா சந்தோஷம் உள்ளது, சதா நத்தார் கொண்டாட்டமே. குழந்தைகளாகிய நீங்கள் தந்தையைச் சந்தித்துள்ளதால் சதா உங்களுக்கு நத்தார் ஆகும். இதனாலேயே உங்களுடைய அதீந்திரிய சுகம் நினைவுகூரப்படுகிறது. பாருங்கள், ஏன் இவர் சதா சந்தோஷமாக இருக்கிறார்? ஓ! அவர் எல்லையற்ற தந்தையைக் கண்டு விட்டார்! அந்த ஒருவரே எமக்குக் கற்பிக்கிறார். எனவே நீங்கள் தினமும் இந்த சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். எல்லையற்ற தந்தை உங்களுக்குக் கற்பிக்கிறார் என்பது அற்புதமான விடயம். உங்களில் எவராவது இதனை முன்னர் கேள்விப்பட்டுள்ளீர்களா? கீதையில் ‘கடவுள் பேசுகிறார்’ என்றும் அவர் இராஜயோகத்தைக் கற்பிக்கிறார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறு அவர்கள் சட்டத்தரணி அல்லது சத்திரசிகிச்சை நிபுணராக ஆகுவதற்காக யோகத்தைக் கற்பிக்கிறார்களோ, அவ்வாறு ஆன்மீகக் குழந்தைகளான உங்களுக்கு நான் இராஜயோகம் கற்பிக்கிறேன். நீங்கள் இங்கு வரும்போது உண்மையில் இராஜயோகத்தைக் கற்கவே வந்துள்ளீர்கள். குழப்பம் அடைய வேண்டிய அவசியமில்லை. எனவே நீங்கள் இராஜயோகத்தைக் கற்று இந்தப் பாடநெறியைப் பூரணமாகக் கற்க வேண்டும். நீங்கள் விலகி ஓடக் கூடாது. நீங்கள் கற்று இதனை மிக நன்றாகக் கிரகிக்கவும் வேண்டும். நீங்கள் அதனைக் கிரகிப்பதற்காகவே ஆசிரியர் உங்களுக்கு இதனைக் கற்பிக்கிறார். ஒவ்வொருவரின் புத்தியும் வெவ்வேறு தரத்தில் உள்ளது. சிலருக்கு அது அதியுயர்ந்ததாகவும் சிலருக்கு அது மத்திய தரத்திலும் ஏனையவர்களுக்கு மிகக் குறைவான தரத்திலும் உள்ளது. எனவே உங்களையே கேட்டுப் பாருங்கள்: நான் அதியுயர் தரத்திலா மத்திய தரத்திலா அல்லது குறைவான தரத்திலா இருக்கிறேன்? நீங்கள் அதியுயர்தரப் பரீட்சையில் சித்தி எய்தி உயர்ந்த அந்தஸ்தைக் கோருவதற்குத் தகுதி உடையவர்களா என்பதை இனங்கண்டு கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். நான் சேவை செய்கிறேனா? தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, சேவையாளர்கள் ஆகுங்கள். பாபாவைப் பின்பற்றுங்கள். நான் சேவை செய்ய வர வேண்டும் என்பதாலேயே நான் இந்த இரதத்தை எடுத்துள்ளேன். எனவே நான் அதனை ஒவ்வொரு நாளும் செய்கிறேன். இந்த இரதம் மிகவும் உறுதியான, நல்ல இரதமாகும். அவர் சதா தனது சேவையை வழங்குகிறார். பாப்தாதா இவரின் இரதத்தில் எப்பொழுதும் இருக்கிறார். இவருடைய சரீரம் சுகயீனம் அடைந்தாலும் நான் அதில் அமர்ந்திருக்கிறேன். எனவே நான் இவருக்குள் அமர்ந்திருந்து எழுதுகிறேன். இவரால் அவருடைய வாயால் எதனையும் கூற முடியா விட்டாலும் என்னால் அதனை எழுத முடியும். முரளி ஒருபோதும் தவறவிடப்படுவதில்லை. இவரால் அமர்ந்திருந்து எழுத முடியும்போது என்னால் முரளியைக் கூறவும் அதனை எழுதவும் அதனைக் குழந்தைகளுக்கு அனுப்பவும் முடியும். ஏனெனில் நான் சேவையாளர் ஆவேன். எனவே தந்தை வந்து விளங்கப்படுத்துகிறார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, புத்தியில் நம்பிக்கை வைத்து உங்களைச் சேவையில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். இது தந்தையின் சேவையாகும்: இறை தந்தையின் சேவையில்! அவர்கள் ‘மேதகு அரச சேவையில்’ என எழுதுகிறார்கள். எனவே நீங்கள் என்ன கூறுவீர்கள்? இந்த சேவை அந்த மேதகு அரச சேவையை விட உயர்ந்தது. ஏனெனில் பாபா உங்களைச் சக்கரவர்த்திகள் ஆக்குகிறார். நீங்கள் உண்மையில் உலக அதிபதிகள் ஆகுகிறீர்கள் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும். நன்றாக முயற்சி செய்யும் குழந்தைகள் மகாவீரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். எனவே பாபாவின் வழிகாட்டல்களைப் பின்பற்றும் மகாவீரர்கள் யார் என்பதை நீங்கள் சோதித்துப் பார்க்க வேண்டும். தந்தை விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி ஒவ்வொருவரையும் சகோதரர்களாகப் பாருங்கள். தந்தை தன்னைச் சகோதரர்களின் தந்தையாகக் கருதுவதுடன் அவர் சகோதரர்களை மட்டுமே பார்க்கிறார். அவர் அனைவரையும் பார்க்க மாட்டார். சரீரம் இன்றி உங்களால் செவிமடுக்கவோ அல்லது பேசவோ முடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள். நானும் ஒரு சரீரத்தில் பிரவேசித்துள்ளேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் இந்தச் சரீரத்தைக் கடனாகப் பெற்றுள்ளேன். சகலருக்கும் சரீரம் உள்ளது. சரீரத்தினூடாகவே ஆத்மாக்கள் இங்கே கற்கின்றார்கள். எனவே பாபா உங்களுக்குக் கற்பிக்கிறார் என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் இப்போது புரிந்து கொள்ள வேண்டும். பாபாவின் ஆசனம் எங்கே உள்ளது? அமரத்துவ சிம்மாசனத்தில். ஒவ்வோர் ஆத்மாவும் ஒருபோதும் அழியாத அமரத்துவ ரூபம் என பாபா விளங்கப்படுத்தி உள்ளார். அதனை ஒருபோதும் எரிக்கவோ, முடிக்கவோ அல்லது நீரில் அமிழ்த்தவோ முடியாது. அது சிறியதும் அல்ல. பெரியதும் அல்ல. சரீரம் பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருக்கும். இந்த உலகிலுள்ள மனித ஆத்மாக்கள் அனைவரது சிம்மாசனமும் நெற்றியே ஆகும். சரீரங்கள் வேறுபட்டவை. சிலருடைய அமரத்துவ சிம்மாசனம் ஆணாகவும் சிலருடையது பெண்ணாகவும் சிலருடையது குழந்தையாகவும் காணப்படுகிறது. எனவே நீங்கள் எவருடனாவது பேசும்போது, உங்களை ஆத்மாவாகக் கருதி உங்களுடைய சகோதரருடன் பேசுகிறீர்கள் எனக் கருதுங்கள். நான் தந்தையின் செய்தியை வழங்குகிறேன்: சிவபாபாவை நினைவு செய்யுங்கள். ஆத்மாவின் துரு நீக்கப்படும். தங்கத்தில் மாசு கலந்திருக்கும்போது அதன் மதிப்புக் குறைவடைகின்றது. அவ்வாறே உங்களுடைய மதிப்பும் குறைவடைந்துள்ளது. நீங்கள் இப்போது முற்றிலும் மதிப்பற்றவர்கள் ஆகியுள்ளீர்கள். இது கடனைத் தீர்க்க முடியாத நிலை எனப்படுகிறது. பாரதம் செல்வந்த நாடாக விளங்கியது. இப்போது அது தொடர்ந்து கடனாளி ஆகுகின்றது. அனைவரின் பணமும் விநாசத்தின் போது முடிவடைந்து விடும். கடன் கொடுப்பவர்களினதும் கடன் வாங்கியவர்களினதும் அனைத்தும் முடிவடைந்து விடும். அழியாத இந்த ஞான இரத்தினங்களை எடுத்துக் கொண்டவர்கள் மட்டுமே வந்து தமது பாக்கியத்தைக் கோரிக் கொள்வார்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாகிய பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையைப் பின்பற்றி பாபாவைப் போன்று சேவையாளர் ஆகுங்கள். நீங்கள் அதியுயர்ந்த பரீட்சையில் சித்தி எய்தி உயர்ந்த அந்தஸ்தை அடைவதற்குத் தகுதி வாய்ந்தவர்கள் ஆகிவிட்டீர்களா என்பதைச் சோதித்துப் பாருங்கள்.

2. தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றி மகாவீரர் ஆகுங்கள். பாபா எவ்வாறு ஆத்மாக்களைப் பார்த்து ஆத்மாக்களுக்குக் கற்பிக்கிறாரோ, அவ்வாறே, அனைவருடனும் பேசும் போது அவர்களை ஆத்மாக்களாக, அதாவது, சகோதரர்களாகப் பாருங்கள்.

ஆசீர்வாதம்:
உங்கள் மகத்துவத்தினாலும் பாப்தாதாவிற்கு நெருக்கமாக இருப்பதன் மூலமும் கல்பம் முழுவதற்கும் மேன்மையானதொரு வெகுமதியை உருவாக்கிக் கொள்கின்ற, ஓர் விசேட நடிகர் ஆகுவீர்களாக.

மரணித்து வாழ்கின்ற இந்த வாழ்க்கையில் மகத்துவத்திற்கு அடிப்படையாக உள்ள இரு விடயங்கள்: 1) சதா பிறரை ஈடேற்றுவது 2) பிறப்பிலிருந்து தூய்மையாக இருப்பது. ஆரம்பம் முதல் இறுதிவரையில் இந்த இரண்டிலும் நிலைத்திருப்பவர்களும் தூய்மையை எக்காரணத்தினாலும் கைவிடாத குழந்தைகளும் சதா உலகிற்கும் பிராமண குடும்பத்திற்கும் உபகாரிகளாக இருப்பவர்களும்: அத்தகைய விசேட நடிகர்கள் சதா பாப்தாதாவிற்கு நெருக்கமாக இருக்கிறார்கள். எனவே அவர்களுடைய மேன்மையான வெகுமதி முழுக் கல்பத்திற்காகவும் உருவாக்கப்படுகின்றது.

சுலோகம்:
உங்களுடைய எண்ணங்கள் வீணானதாக இருக்கும் போது உங்களுடைய பொக்கிஷங்களும் வீணானவை ஆகின்றன.

அவ்யக்த சமிக்ஞை: இப்பொழுது முழுமையாகவும் கர்மாதீத்தாகவும் ஆகுகின்ற ஆழமான அக்கறையைக் கொண்டிருங்கள்.

கர்மாதீத் ஸ்திதியை அனுபவம் செய்வதற்கு, இந்த ஞானத்தை செவிமடுத்து, இதனைக் கூறுவதுடன் இப்பொழுது தந்தை பிரம்மாவைப் போன்று பற்றற்றும் சரீரமற்றவராகவும் ஆகுவதில் விசேட கவனம் செலுத்துங்கள். தந்தை பிரம்மா கர்மாதீத் ஆகுவதற்கு முன்னர் சரீர வாழ்வில் பற்றற்றும் அன்பாகவும் இருப்பதற்கான நடைமுறை அனுபவத்தைக் கொடுத்தார். அவர் சேவை செய்வதை நிறுத்தவோ அல்லது வேறு செயல்களில் ஈடுபடவோ இல்லை. ஆனால் இறுதி நாள் வரையில் பற்றற்றவராக இருந்தார், தொடர்ந்தும் குழந்தைகளுக்குச் சேவை செய்தார். அவ்வாறாகத் தந்தையை பின்பற்றுங்கள்.