09.03.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, யாவருக்கும் நன்மை அளிப்பதே தந்தையின் பாகமாகும். அவ்வாறே நீங்களும் தந்தையைப் போல உபகாரிகள் ஆகுங்கள். உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்யுங்கள்.
கேள்வி:
குழந்தைகளின் எந்தச் சிறப்பியல்பைப் பார்க்கும் போது பாப்தாதா குதூகலம் அடைகிறார்?பதில்:
யக்ஞத்திற்காக ஏழைக் குழந்தைகள் ஒரு ரூபாவையோ அல்லது அரை ரூபாவையோ அனுப்பும் பொழுது பாபா குதூகலம் அடைகிறார். அவர்கள் கூறுகிறார்கள்: பாபா, இதற்குப் பதிலாக எனக்கு ஒரு மாளிகையைத் தாருங்கள். பாபா கூறுகிறார்: குழந்தைகளே, இந்த ஒரு ரூபாயும் சிவபாபாவின் பொக்கிஷக் களஞ்சியத்தில் சேர்க்கப்படுவதால் நீங்கள் 21 பிறவிகளுக்கு மாளிகையைப் பெறுவீர்கள். குசேலரின் (சுதாமா) உதாரணமும் உள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் ஒரு சிப்பியளவேனும் செலவு செய்யாமல் உலக ஆட்சியைப் பெறுகிறீர்கள். பாபா ஏழைக் குழந்தைகளின் இச் சிறப்பியல்பைப் பார்ப்பதில் மிகவும் குதூகலம் அடைகிறார்.பாடல்:
உங்களைக் கண்டதால், நாங்கள் முழு உலகையுமே கண்டுகொண்டோம்.. வானம், பூமி அனைத்தும் எங்களுக்கே சொந்தம்..........ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது பாபாவிடம் இருந்து உங்களுடைய எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுகிறீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்கள். குழந்தைகள் கூறுகின்றார்கள்: பாபா, உங்களுடைய ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால் நாங்கள் உங்களிடமிருந்து மீண்டும் ஒரு முறை எங்களுடைய எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுகின்றோம். இது ஒரு புதிய விடயமல்ல. குழந்தைகளாகிய நீங்கள் இந்த ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் சந்தோஷ தாமத்தின் ஆஸ்தியை தொடர்ந்தும் ஒவ்வொரு கல்பத்திலும் பெறுகின்றீர்கள் என்பதை புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் 84 பிறவிகளை எடுக்க வேண்டும். உண்மையில் நாங்கள் எங்களுடைய 21 பிறவிகளுக்கான ஆஸ்தியை எல்லையற்ற தந்தையிடம் இருந்து பெற்று, பின்னர் நாங்கள் அதனைப் படிப்படியாக இழக்கின்றோம். இந்நாடகம் அநாதியாக ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது என்பதைத் தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த உத்தரவாதம் தரப்பட்டுள்ளது. இந்த நாடகத்தில் பெருமளவு சந்தோஷம் உள்ளது என்பதும் உங்களுக்குத் தெரியும். அதன் இறுதியில் இராவணனிடம் இருந்து நீங்கள் துன்பத்தையே பெறுவீர்கள். இந்நேரத்தில் உங்களில் சிலரே உள்ளனர். நீங்கள் முன்னேறும் போது மேலும் பெருமளவு வளர்ச்சி இருக்கும். நீங்கள் மனிதர்களில் இருந்து தேவர்களாக மாறுகின்றீர்கள். நிச்சயமாக ஒவ்வொரு கல்பத்திலும் நீங்கள் தந்தையிடம் இருந்து உங்களது ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள் என்பதை இதயபூர்வமாக நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்கள். இங்கே வந்து இந்த ஞானத்தைப் பெறுபவர்களுக்கு தாங்கள் ஞானக் கடலாகிய தந்தையிடம் இருந்து உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி என்பவற்றின் ஞானத்தைப் பெற்று விட்டோம் என்பது புரியும். ஞானக் கடலும் தூய்மையாக்குபவருமாகிய தந்தை ஒருவரே, தூய்மை அற்றவர்களைத் தூய்மை ஆக்குபவர். அதாவது அவர் ஒருவரே உங்களை முக்திக்கும் ஜீவன் முக்திக்கும் அழைத்துச் செல்வார். இந்நேரத்திலேயே இதனை நீங்கள் அறிகிறீர்கள். பலர் குருமார்களை ஏற்றுக் கொள்கிறார்கள். இறுதியில் அவர்கள் அக்குருமார்களையும் விட்டு விலகி வந்து இந்த ஞானத்தை எடுப்பார்கள். நீங்களும் இந்த ஞானத்தை இப்பொழுது பெற்றுள்ளீர்கள். இதற்கு முன்னர் நீங்களும் அறியாமையில் இருந்தீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்கள். உலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கிறது? சிவபாபா யார் என்பதையோ அல்லது பிரம்மா, விஷ்ணு, சங்கர் ஆகியவர்கள் யார் என்பதைப் பற்றியோ நீங்கள் எதுவுமே அறிந்திருக்கவில்லை. உலகின் அதிபதிகளாக நீங்களே இருந்தீர்கள் என்பதை இப்பொழுது அறிந்து கொண்டீர்களாயின், உங்களுடைய புத்தி அதி உயர்ந்த போதையைக் கொண்டதாக இருக்கும். தந்தையையும் உலகச் சக்கரத்தையும் தொடர்ந்தும் நினைவு செய்யுங்கள்: அல்பாவையும், பீற்றாவையும். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இதற்கு முன்னர் உங்களுக்கு எதுவுமே தெரியாது. உங்ளுக்குத் தந்தையையோ அல்லது அவருடைய படைப்பையோ தெரியாது. உலக மக்களுக்கு, தந்தையையோ அல்லது படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியைப் பற்றியோ தெரியாது. நீங்கள் இப்பொழுது சூத்திரர்களில் இருந்து பிராமணர்களாகி விட்டீர்கள். தந்தை குழந்தைகளான உங்கள் அனைவரிடமும் பேசுகிறார். பற்பல குழந்தைகளும் பற்பல நிலையங்களும் உள்ளன! இப்பொழுது பல நிலையங்கள் திறக்கப்படவுள்ளன. தந்தை விளங்கப்படுத்துகிறார்: முன்னர் உங்களுக்கு எதுவுமே தெரியாது. நீங்கள் செய்யும் முயற்சிக்கு ஏற்ப வரிசைக்கிரமாகவே நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். தந்தையினால் நீங்கள் தூய்மை அற்றவரிலிருந்து தூய்மை ஆக்கப்படுகின்றீர்கள் என்பதையும் இப்பொழுது புரிந்து கொண்டுள்ளீர்கள். ஏனைய மக்கள் தொடர்ந்தும் அழைக்கிறார்கள். ஆனால் நீங்களோ மறைமுகமானவர்கள். அவர்கள் பிரம்மாகுமாரர்கள், பிரம்மா குமாரிகள் எனப் பேசினாலும் எங்களுக்குக் கற்பிப்பவர் யாரென அவர்களுக்குத் தெரியாது. இவ்விடயங்கள் எந்தச் சமயநூல்களிலும் எழுதப்படவில்லை. கீதையின் அதே கடவுளே வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறார். இது உங்களுடைய புத்தியில் புக வேண்டும். நீங்கள் கீதையைக் கற்றிருப்பீர்கள். இந்த ஞானமார்க்கம் முற்றிலும் வேறானது என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். சமய நூல்களைக் கற்பதனால் பெறப்பட்ட 'விதூத்மண்டலி" போன்ற தலைப்புகள் அனைத்தும் பக்தி மார்க்கத்தின் சமயநூல்களை அடிப்படையாகக் கொண்டதே ஆகும். இந்த ஞானம் அவற்றில் இல்லை. தந்தை மட்டுமே வந்து உங்களுக்கு உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இந்த ஞானத்தை இங்கு வந்து தருகிறார். தந்தை வந்து உங்களுடைய புத்திகளின் பூட்டைத் திறந்துள்ளார். நீங்கள் முன்னர் எவ்வாறு இருந்து, இப்பொழுது எவ்வாறு ஆகியுள்ளீர்கள் என்பதையும் அறிவீர்கள். சக்கரம் முழுவதுமே உங்கள் புத்திகளில் பிரவேசித்துள்ளது. ஆரம்பத்தில் இதனை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. நாளுக்கு நாள் உங்களின் மூன்றாவது ஞானக்கண் தொடர்ந்தும் நன்றாகத் திறக்கிறது. கடவுள் எப்பொழுது வந்தார் என்பதோ அல்லது கீதையின் ஞானத்தை உபதேசித்தவர் யார் என்பதோ மக்களுக்குத் தெரியாது. குழந்தைகளாகிய நீங்கள் இப்போது இதனை அறிந்துள்ளீர்கள். முழுச் சக்கரத்தினது ஞானமும் உங்கள் புத்திகளில் உள்ளது. நீங்கள் தோற்கடிக்கப்பட்டபோது, எப்படி பாவப் பாதையில் சென்றீர்கள், நீங்கள் ஏணியிலிருந்து எவ்வாறு கீழ் இறங்கினீர்கள் ஆகிய அனைத்தும் படத்திலே மிகத் தெளிவாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. 84 பிறவிகளின் ஏணிப் படமும் உள்ளது. ஏணியில் நீங்கள் எவ்வாறு ஏறி இறங்கினீர்கள் என்பதையும், தூய்மை ஆக்குபவர் யார் என்பதையும், உங்களைத் தூய்மை அற்றவர்களாக ஆக்கியவர் யார் என்பதையும் நீங்கள் இப்பொழுது அறிந்துள்ளீர்கள். உங்களுக்கு இது இப்போது தெரியும், ஆனால் அம் மக்கள் தூய்மையாக்குபவரைப் பற்றிப் பாடுகிறார்கள். இராவண இராச்சியம் எப்பொழுது ஆரம்பமானது என்பதையோ அல்லது அவர்கள் எப்போது தூய்மை அற்றவர்கள் ஆகினார்கள் என்பதையோ அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தை சேர்ந்தவர்களுக்கே இந்த ஞானம் உரியது. தந்தை கூறுகின்றார்: ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தை நானே ஸ்தாபிக்கிறேன். தந்தையைத் தவிர வேறு எவராலும் உங்களுக்கு உலகின் வரலாற்றையும் புவியியலையும் விளங்கப்படுத்த முடியாது. உங்களுக்கு இது ஒரு கதையைப் போல் உள்ளது. நாங்கள் எவ்வாறு இராச்சியத்தைப் பெற்றோம், பின்னர் நாங்கள் எவ்வாறு அதனை இழந்தோம் என்ற வரலாறையும் புவியியலையும் பற்றி இப்பொழுது நாங்கள் கற்கின்றோம். இது ஓர் எல்லையற்ற விடயமாகும். நாங்கள் எவ்வாறு 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி வந்தோம், எவ்வாறு நாங்கள் உலகத்தின் அதிபதிகள் ஆகினோம்? பின்னர், இராவணன் எவ்வாறு எங்களது இராச்சியத்தை எங்களிடம் இருந்து அபகரித்தான்? என்பவற்றின் ஞானத்தை தந்தை மாத்திரமே தருகிறார். மக்கள் தசேராவை (இராவணனது கொடும்பாவியை எரிப்பது) கொண்டாடுகிறார்கள். ஆனால் உங்களுக்கும் இந்த ஞானம் இல்லாது இருந்ததைப் போலவே அவர்களிடமும் இந்த ஞானம் எதுவும் இல்லை. எவ்வாறாயினும், உங்களுக்கு இப்பொழுது இந்த ஞானம் இருப்பதினால் நீங்கள் மிகவும் சந்தோஷமாக உள்ளீர்கள். ஞானம் சந்தோஷத்தையே தரும். எல்லையற்ற இந்த ஞானத்தை நீங்கள் உங்களது புத்திகளிலே கொண்டுள்ளீர்கள். தந்தை இப்போது உங்களது புத்திகளை நிரப்புகின்றார். அவர்கள் கூறுகின்றார்கள்: எங்களது புத்திகளை நிரப்புங்கள்! யாருக்கு அவர்கள் இதனைக் கூறினார்கள்? சாதுக்களுக்கோ அல்லது புனிதர்களுக்கோ அவர்கள் இதனைக் கூறவில்லை. அவர்கள் கள்ளம் கபடமற்ற பிரபுவாகிய சிவனுக்கே இதனைக் கூறுகிறார்கள். அவர்கள் அவரிடம் பிச்சை கேட்கின்றார்கள். இப்பொழுது உங்களுடைய சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை. நீங்கள் அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். உங்களின் புத்திகளில் பெருமளவு ஞானம் உள்ளது. எல்லையற்ற தந்தையிடம் இருந்து நீங்கள் எல்லையற்ற சந்தோஷத்தின் ஆஸ்தியை பெறுகின்றீர்கள். இப்பொழுது உங்களுக்கும் நன்மை செய்து, மற்றவர்களையும் நன்மை அடையச் செய்யுங்கள். அனைவரையுமே நன்மை அடையச் செய்யுங்கள்! முன்னர், நீங்கள் அசுரரின் கட்டளைகளை பின்பற்றியதாலேயே ஒருவருக்கொருவர் நட்டத்தை ஏற்படுத்தியதுடன் கெடுதல் செய்தீர்கள். நீங்கள் இப்பொழுது ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால் உங்களுக்கு நீங்களே நன்மை அடையச் செய்கிறீர்கள். அனைவருமே இந்த எல்லையற்ற ஞானத்தைக் கற்க வேண்டும் என்பதுடன் நிலையங்கள் தொடர்ந்தும் திறக்கப்பட வேண்டும் என்பதே உங்களுடைய இதய பூர்வமான ஆசையாகும். குழந்தைகள் கூறுகிறார்கள்: பாபா நீங்கள் கண்காட்சி ஒன்றைக் தருவதுடன் ஒளிப்படக் கருவி ஒன்றையும் எங்களுக்குத் தந்தீர்களானால் எங்களால் ஒரு நிலையத்தைத் திறக்க முடியும். நாங்கள் பெற்ற சந்தோஷத்தை, அதாவது, எங்களது சந்தோஷம் எனும் பாதரசத்தை அதிகரிக்கச் செய்த அனுபவத்தை, நாங்கள் மற்றவர்களுக்கும் கூறுவோம். நாடகத்திற்கு ஏற்பவே இந்த முயற்சியும் தொடருகிறது. மீண்டும் ஒருமுறை பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குவதற்காகவே தந்தை வந்துள்ளார். முன்னர் நரகவாசிகளாக இருந்த நீங்கள் இப்பொழுது மீண்டும் சுவர்க்க வாசிகளாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் விளங்கிக் கொண்டீர்கள். நீங்கள் இந்தச் சக்கரத்தை உங்களுடைய புத்தியிலே சதா தொடர்ந்தும் சுழற்ற வேண்டும். இவ்வாறு செய்வதால் உங்களுக்கு சதா சந்தோஷமே இருக்கும். மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவதில் உங்களுக்கு போதையும் இருக்க வேண்டும். நாங்கள் இந்த ஞானத்தைத் தந்தையிடம் இருந்து பெறுகின்றோம். இதைப் பற்றி அறியாத உங்களுடைய சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் இந்தப் பாதையைக் காட்டுவதே உங்களுடைய கடமை (தர்மம்) ஆகும். நன்மை செய்வதே தந்தையினுடைய பாகம், அவ்வாறே, எங்களுடைய பாகமும் அனைவருக்கும் நன்மை அளிப்பவராக ஆகுவதே ஆகும். பாபா எங்களை நன்மை அளிப்பவராக ஆக்கியுள்ளார். எனவே நாங்கள் எங்களுக்கும் பிறருக்கும் நன்மை அளிப்பவர்கள் ஆகுகிறோம். தந்தை கூறுகிறார்: வெவ்வேறு நிலையங்களுக்குச் சென்று சேவை செய்யுங்கள்! ஒரே இடத்தில் இருந்து சேவையைச் செய்யாதீர்கள். எவ்வளவு திறமையாக ஒருவர் ஆகுகின்றாரோ, அவ்வளவிற்கு அவர் ஆர்வம் கொண்டவராகி, சகல இடங்களிற்கும் சென்று சேவை செய்வார். இத்தகைய ஒரு புதிய நிலையம் திறக்கப்பட்டுள்ளது. சேவை செய்யக் கூடியவர் யார், கீழ்ப்படிவாகவும், நம்பிக்கையாகவும் இருப்பவர் யார், கட்டளைகள் எல்லாவற்றையும் பின்பற்றுபவர் யார் என்பவற்றை நீங்கள் அறிவீர்கள். அறியாமைப் பாதையிலும் கூட தகுதியற்ற குழந்தைகளையிட்டு தந்தை அதிருப்தி அடைகிறார். எல்லையற்ற தந்தை கூறுகிறார்: நான் உங்களுக்கு மிகவும் எளிமையாக விளங்கப்படுத்துகிறேன். இதையிட்டு நீங்கள் பயப்படுவது என்ற கேள்விக்கே இடமில்லை. இதைச் செய்கின்ற எவருமே அதன் வெகுமதியைப் பெறுவார்கள். அதிருப்தி ஆகுதல் அல்லது சாபம் இடுதல் என்ற கேள்விக்கே இடமில்லை! தந்தை விளங்கப்படுத்துகிறார்: நன்றாகச் சேவை செய்யாமலும், உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நன்மை அளிக்காமலும் ஏன் நீங்கள் இருக்கிறீர்கள்? நீங்கள் எவ்வளவிற்கு மற்றவர்களை நன்மை அடையச் செய்கிறீர்களோ, பாபா அவ்வளவிற்கு குதூகலம் அடைவார். இத்தோட்டத்தில் உள்ள இம்மலர் மிகவும் சிறந்ததாக இருக்கிறதா என பாபா பார்ப்பார்! அவை அனைத்தும் இந்தப் பூந்தோட்டத்தில் உள்ளன. தோட்டத்தைப் பார்ப்பதற்காக அவர்கள் கூறுகிறார்கள்: ‘பாபா, நிலையங்களுக்கு நான் சுற்றுலாச் சென்று, அவர்கள் எவ்கையான மலர்கள் என்பதையும், அவர்கள் எப்படிச் சேவை செய்கிறார்கள் என்பதையும் பார்ப்பேன்.’ அங்கு செல்வதால் மாத்திரமே, அவர்கள் எவ்வளவு சந்தோஷத்தில் நடனம் ஆடுகிறார்கள் என்பதை உங்களால் கூற முடியும். அவர்கள் வந்து பாபாவிடம் கூறுகிறார்கள்: பாபா, நான் இம் முறையிலேயே இன்னார் இன்னாருக்கு விளங்கப்படுத்தினேன். இன்று, நான் எனது கணவரையும், சகோதரரையும் அழைத்து வந்தேன். பாபா எப்படி வந்தார் என்பதையும் அவர் இப்பொழுது எப்படி எங்களுடைய வாழ்வை வைரத்தைப் போன்று பெறுமதி மிக்கதாக ஆக்குகின்றார் என்பதையும், நான் அவர்களுக்கு விளங்கப்படுத்தினேன். அதைச் செவிமடுத்த போது, அவர்கள் தாங்களும் இதைப் பார்க்க விரும்பினார்கள். ஆகவே, குழந்தைகளுக்கு உற்சாகம் வரும் போது, அவர்கள் பிறரையும் அழைத்து வருவார்கள். நீங்கள் உலகின் வரலாறையும் புவியியலையும் அறிந்திருக்க வேண்டும். பாரதம் எப்படி முழு உலகின் அதிபதியாக இருந்தது என்பதை உங்களுக்கு உள்ளேயே நீங்கள் சீர்தூக்கிப் பார்க்கலாம். இப்பொழுது அதன் நிலைமையைப் பாருங்கள்! சத்திய திரேதா யுகங்களிலே பெருமளவு சந்தோஷம் இருந்தது. பாபா இப்பொழுது மீண்டும் ஒருமுறை உங்களை உலகின் அதிபதிகள் ஆக்குகின்றார். இறுதியிலே உலகில் பெருமளவு குழப்பங்கள் நிகழும் என்பதை நீங்கள் அறிவீர்கள். யுத்தம் ஓயப்போவதில்லை. எந்நேரமும் ஓரிடத்தில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். நீங்கள் பார்க்கும் இடமெல்லாம் சண்டையே நிலவுகிறது. எல்லா இடங்களிலும் பெருமளவு குழப்பங்கள் இடம் பெறும்! வெளிநாடுகளில் என்ன நடக்கிறது என்பதைப்; பாருங்கள்! அவர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதையே விளங்கிக் கொள்ளவில்லை. அங்கே பெருமளவு புயல்கள் ஏற்படுவதால் மக்கள் தொடர்ந்தும் மரணிக்கிறார்கள்! அதிகளவு துன்பம் உள்ள உலகம் இதுவாகும். இந்தத் துன்ப உலகை விட்டு நீங்கள் நீங்குகின்ற காலம் இப்பொழுது வந்து விட்டது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பாபா உங்களுக்கு பொறுமையைத் தருகின்றார். இது ஓர் அசுத்தமான உலகம் என்றும் அவர் உங்களுக்கு கூறுகின்றார். மிகக் குறுகிய காலத்திலேயே அமைதியாக நாங்கள் உலகை ஆட்சி புரிவோம். இதையிட்டு நீங்கள் சந்தோஷடைய வேண்டும், இல்லையா? நிலையங்கள் தொடர்ந்தும் திறக்கப்படும். புதிய நிலையங்கள் திறக்கும் போது, பாபா சிறந்த குழந்தைகளுக்கு எழுதி, அவர்களை அங்கே செல்லுமாறு கூறுவார். பாபா தனது இதயத்திலே அமர்ந்துள்ளவர்களின் பெயர்களையும் எழுதுவார். பலர் நன்மை அடைந்துள்ளனர். பல குழந்;தைகள் எமுதுகிறார்கள்: ‘பாபா, நான் பந்தனத்தில் உள்ளேன்!’ ஒரு சிறந்த நிலையம் எங்கேயாவது திறக்கப்படும் ஆயின், தங்களுடைய ஆஸ்தியைப் பெறுவதற்குப் பலரால் அங்கே செல்ல முடியும். இங்கே உள்ள அனைத்துமே அழியப் போகின்றது என்பதனால், எல்லோரும் நன்மையடையும் வகையில் உங்களிடமுள்ள அனைத்தையும் ஏன் நீங்கள் உபயோகிக்கக் கூடாது? நாடகத்தில் அவர்களுடைய பாகம் அவ்வாறானதே! நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய சொந்தப் பாகத்தை நடிக்கிறீர்கள். அவர்களிடம் நீங்கள் கருணை கொண்டுள்ளீர்கள். பந்தனத்தில் இருந்து பிறரை விடுதலை ஆக்குவதற்கு என்னாலான ஒரு சிறிதளவு உதவியையேனும் செய்வேன். அவர்கள் அவர்களது ஆஸ்தியைப் பெறட்டும்! எல்லோரும் காமச் சிதையில் எரிந்து கொண்டிருப்பதால் தந்தை மிகவும் அக்கறை கொண்டுள்ளார். உலகம் முழுவதுமே சுடுகாடாகப் போகிறது. கூறப்பட்டுள்ளது: அல்லா சுடுகாட்டிற்கு வந்து எல்லோரையும் விழித்தெழச் செய்து, அவர்களை வீட்டிற்கு திரும்பி அழைத்துச் செல்கிறார். இராவணன் எப்படித் தன்னைத் தோற்கடித்தான் என்பதை இவர் இப்பொழுது புரிந்து கொண்டுள்ளார். முன்னர் இவர் அதைப் புரிந்து கொள்ளவில்லை. அவர் ஒரு பெரும் கோடீஸ்வர நகைவியாபாரியாக இருந்தார், அவருக்குப் பல குழந்தைகள் இருந்தனர். அவருக்கு அந்தப் போதையே இருக்கும், இல்லையா? தான் முற்றிலும் தூய்மையற்று இருந்தேன் என்பதை இப்பொழுது அவர் புரிந்து கொள்கிறார். பழைய உலகிலே ஒருவர் எவ்வளவு பெரும் கோடீஸ்வரனாகவோ அல்லது பல்கோடீஸ்வரனாகவோ இருந்தாலுமே அவை அனைத்தும் சிப்பிகளின் பெறுமதியைக் கொண்டவை. இப்பொழுது அது முடிவிற்கு வருகிறது. மாயையும் மிகவும் சக்தி வாய்ந்தவள்! தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, ஒரு நிலையத்தை திறவுங்கள். அதில் பலர் நன்மை அடைவார்கள். ஏழைகளே விரைவில் விழித்தெழுவார்கள். ஆனால் செல்வந்தர்களில் எவரேனும் ஒருவர் அரிதாகவே விழித்தெழுவார். அவர்கள் தங்கள் சொந்த சந்தோஷத்திலேயே முழுக் கவனத்தையும் ஈடுபடுத்துவார்கள். மாயை அவர்கள் அனைவரையுமே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறாள். நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்தும் போது, அவர்கள் புரிந்து கொண்டாலும் அவர்களால் எப்படி விட்டுவிட முடியும்? எங்களைப் போலவே அவர்களும் அனைத்தையும் விட்டுவிட வேண்டி வருமென அவர்கள் பயப்படுகிறார்கள். அது அவர்களது பாக்கியத்திலே இல்லாது போனால், அவர்களால் தொடர முடியாது. அதிலிருந்து விடுதலை ஆகுவது அவர்களுக்குக் கஷ்டமாகவே இருக்கும். அந்த நேரத்தில் அவர்களுக்கு விருப்பமின்மை ஏற்பட்டு, உண்மையிலேயே இது ஒரு அசுத்தமான உலகம் என்பதை உணர்வார்கள். எவ்வாறாயினும், அவர்கள் அங்கே எதைச் செவிமடுத்தாலுமே அங்கேயே வி;ட்டுச் சென்று விடுவார்கள். பல மில்லியன்களில் ஒரு கைப்பிடி அளவினரே வருவார்கள். நூற்றுக்கணக்கான மக்கள் பம்பாய்க்கு வந்தாலும் அவர்களில் சிலர் நிறம் தீட்டப்படுகிறார்கள். அவர்கள் தாம் தமது எதிர்காலத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று உணர்கிறார்கள்.அதனால், சிப்பிகளுக்குப் பதிலாக வைரங்களைப் பெறுவார்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: உங்கள் மூட்டை முடிச்சுக்கள் அனைத்தையும் சுவர்க்கத்திற்கு மாற்றிவிடுங்கள். அங்கே நீங்கள் 21 பிறவிகளுக்கான ஓர் இராச்சியத்தைப் பெறுவீர்கள். சிலர் ஒரு ரூபாவையோ அல்லது அரை ரூபாவையேனும் அனுப்புகிறார்கள். தந்தை கூறுகிறார்: உங்களது ஒரு ரூபாயும் சிவபாபாவின் பொக்கிஷக் களஞ்சியத்தில் சேர்க்கப்பட்டு, நீங்கள் 21 பிறவிகளுக்காக ஒரு மாளிகையைப் பெறுவீர்கள். சுதாமரின் (குசேலரின்) உதாரணமும் இருக்கிறது. அவ்வாறான குழந்தைகளைக் காண்பதில் பாபா மிகவும் குதூகலம் அடைகிறார். குழந்தைகளாகிய நீங்கள் எவ்வித செலவும் இன்றி உலக ஆட்சியைப் பெறுகின்றீர்கள். அங்கே, யுத்தம் போன்றவை இல்லை. அம் மக்கள் சிறு நிலத்துண்டிற்காக பெருமளவு சண்டை செய்கின்றார்கள். உங்களுக்கு கூறப்பட்டது: மன்மனாபவ! அவ்வளவு தான். இங்கு வந்து அமர்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. நடக்கும் போதும் உலாவும் போதும் தந்தையையும் ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள். சந்தோஷத்தைப் பேணுங்கள். உங்கள் உணவும் பானமும் தூய்மையாக இருக்க வேண்டும். ஆத்மாக்களாகிய நீங்கள் அங்கு போய் ஓர் இளவரசனாகப் பிறப்பெடுப்பதற்கு எவ்வளவு தூரம் தூய்மையானவர்கள் ஆகவேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் நீங்கள் முன்னேறும் போது உலகின் நிலைமை மிக மோசமானதாக இருக்கும். உண்பதற்கு போதியளவு உணவும் கிடையாது. அத்துடன் நீங்கள் புல்லை உண்ணத் தொடங்கி விடுவீர்கள். அப்பொழுது வெண்ணெய் இல்லாமல் என்னால் வாழ முடியாது என நீங்கள் கூற மாட்டீர்கள்! நீங்கள் எதனையும் பெற மாட்டீர்கள். இப்பொழுதும் கூட பல இடங்களில் மக்கள் புல்லை உண்டு வாழ்கின்றார்கள். நீங்கள் மிகவும் சௌகரியமாக பாபாவின் வீட்டில் இருக்கின்றீர்கள். ஒரு வீட்டில் தந்தை தன்னுடைய குழந்தைகளுக்கே முதலில் உணவு ஊட்டுகிறார். உலகம் இப்பொழுது மிகவும் கெட்டுவிட்டது. நீங்கள் மிக்க சந்தோஷத்துடன் இங்கே அமர்ந்துள்ளீர்கள். தந்தையையும் ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள்! உங்களுக்கும் பிறருக்கும் நன்மையையே செய்யுங்கள்! பின்னர் அவர்கள் தன்னாலேயே வருவார்கள். அவர்களுடைய பாக்கியம் விழித்தெழும். அதனை விழித்தெழச் செய்ய வேண்டும். எல்;லையற்ற இராச்சியம் ஸ்தாபிக்கப்பட வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் முன்னைய கல்பத்தில் செய்தது போலவே முயற்சியைச் செய்கிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் பெருமளவு சந்தோஷத்தைப் பேண வேண்டும். நீங்கள் பாப்தாதாவின் படத்தைப் பார்த்தவுடனேயே சந்தோஷத்தினால் உங்களுக்கு புல்லரிப்பு ஏற்பட வேண்டும். அந்த சந்தோஷம் என்ற பாதரசம் நிரந்தரமாக உயர்வாக இருக்க வேண்டும். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. சதா சந்தோஷத்தைப் பேணுவதற்காக, எல்லையற்ற இந்த ஞானத்தை உங்கள் புத்திகளிலே வைத்திருங்கள். உங்களுடைய புத்திகளை இந்த ஞானரத்தினங்களால் நிரப்பி, உங்களுக்கும் பிறருக்கும் நன்மை செய்யுங்கள். இந்த ஞானத்தில் மிகமிகத் திறமை சாலிகள் ஆகுங்கள்.2. உங்களுடைய இராச்சிய பாக்கியத்தை எதிர்கால 21 பிறவிகளுக்கு பெறுவதற்கு உங்களுடைய மூட்டை முடிச்சுக்கள் அனைத்;தையும் மாற்றுங்கள். இந்த அசுத்தமான உலகில் இருந்து விடுதலை பெறுவதற்கு வழிமுறைகளை உருவாக்குங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரேயொரு தந்தையின் மீதுள்ள அன்பில் திளைத்திருந்து, சதா ஏறுகின்ற ஸ்திதியை அனுபவம் செய்வதன் மூலம், வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.சேவையில் வெற்றி பெறுவதற்கும் உங்களின் ஏறுகின்ற ஸ்திதிக்குமான பிரதானமான அடிப்படை, தந்தையின் மீது துண்டிக்காத அன்பைக் கொண்டிருப்பதே ஆகும். ஒரேயொரு தந்தையைத் தவிர, வேறு எதையும் பார்ப்பதற்கு உங்களை அனுமதிக்காதீர்கள். உங்களின் எண்ணங்களில் பாபா இருக்க வேண்டும், உங்களின் வார்த்தைகளில் பாபா இருக்க வேண்டும். உங்களின் செயல்களிலும் பாபாவின் சகவாசம் இருக்க வேண்டும். அன்பிலே திளைத்திருக்கும் ஓர் ஆத்மா, ஒரு வார்த்தையைக் கூறினாலும், அந்த அன்பான வார்த்தை ஏனைய ஆத்மாக்களையும் அன்பின் பந்தனத்தில் கட்டி விடுகிறது. அன்பிலே திளைத்திருக்கும் இத்தகைய ஆத்மாக்களின் ‘பாபா’ என்ற ஒரே வார்த்தை, மாயமந்திரம் போல் செயல்படுகிறது. அவர்கள் ஆன்மீக மந்திரவாதிகள் ஆகுகிறார்கள்.
சுலோகம்:
யோகி ஆத்மா என்பவர் அகநோக்கில் இருப்பவர், அத்துடன் ஒளி மற்றும் சக்தியின் ரூபத்தில் ஸ்திரமாக இருப்பவர் ஆவார்.அவ்யக்த சமிக்ஞை: உங்கள் நம்பிக்கை என்ற அத்திவாரத்தை பலப்படுத்தி, சதா பயமற்றவராகவும் கவலையற்றவராகவும் இருங்கள்.
உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள கடமையில் சதா மிகச்சரியாக இருங்கள். தமது கடமைகளில் மிகச்சரியாக இருப்பவர்களை அனைவரும் நம்பத் தகுந்தவர்களாகவே பார்க்கிறார்கள். இங்கும், தாம் செய்யும் சேவையில் மிகச்சரியாக இருப்பவர்கள், தந்தையின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள். ஒன்று, தந்தையில் பூரண நம்பிக்கை வைத்தல். மற்றையது, தந்தைக்கும் நீங்கள் செய்யும் சேவையிலும் நம்பத் தகுந்தவராக இருத்தல். இத்தகைய நம்பிக்கையுள்ள புத்திகளைக் கொண்டுள்ள, நம்பிக்கைக்குப் பாத்திரமான குழந்தைகள், சதா வெற்றியாளர்கள் ஆவார்கள். அத்துடன் அவர்கள் கவலையற்றவர்களாகவும் இருப்பார்கள்.