09.07.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, விருட்சபதியான தந்தை குருதிசையை உங்கள் மீது பார்க்க வைத்துள்ளார். நீங்கள் இப்பொழுது அழிவற்ற சந்தோஷ பூமிக்குச் செல்கின்றீர்கள்.
கேள்வி:
எக்குழந்தைகள் அழிவற்ற குரு திசையைத் தங்கள் மீது அனுபவம் செய்கின்றனர்? இதனை எது சுட்டிக்காட்டுகின்றது?பதில்:
வாழும்போதே தங்கள் சரீர உறவுகள் அனைத்தையும் துறந்து, தாங்கள் ஆத்மாக்கள் என்ற நம்பிக்கையைக் கொண்ட புத்திகளை உடைய குழந்தைகளே தங்கள்மீது குரு திசையை அனுபவம் செய்கின்றார்கள். அவர்களைப் பற்றியே நினைவு கூரப்படுகின்றது: நீங்கள் அதீந்திரிய சுகத்தைப் பற்றி அறியவிரும்பினால், கோப கோபியரைக் கேளுங்கள். அவர்களின் சந்தோஷம் ஒருபோதும் மறையாது.பாடல்:
ஓம் நமசிவாய...ஓம் சாந்தி.
குழந்தைகளான நீங்கள் தந்தையின் புகழைக் கேட்டீர்கள். இன்றைய தினம் குரு திசையின் தினம், அதாவது விருட்சபதியின் தினம் என்று அழைக்கப்படுகின்றது. இன்றைய தினமே குருவின் தினமாகிய வியாழன் எனப்படுகின்றது. இது வெறுமனே குருவின் தினம் மாத்திரமல்ல, சற்குருவின் தினமாகும். வங்காளத்தில், மக்கள் இதில் பெருமளவு நம்பிக்கை வைத்துள்ளனர். மனித உலக விருட்சத்தின் விதை நினைவுகூரப்படுகின்றது. இதனாலேயே அவர் விருட்சபதி என்று அழைக்கப்படுகின்றார். அவரே விதையும், பதியும் (பிரபு) ஆவார். விருட்சத்தின் விதையானவர் தந்தை என்றும் அழைக்கப்படுகின்றார். அவரிலிருந்தே விருட்சம் வெளித்தோன்றுகின்றது. இது மனித உலக விருட்சமாகும். இதன் விதையானவர் மேலே உள்ளார். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அழிவற்ற இராச்சிய உரிமையைப் பெறுவதால் அழிவற்ற வியாழதிசை உங்கள்மீது உள்ளதை நீங்கள் அறிவீர்கள். சத்தியயுகம் அழிவற்ற சந்தோஷ பூமி என்றும், இந்தக் கலியுகம் அழிவற்ற துன்ப பூமி என்றும் அழைக்கப்படுகின்றது. இந்தத் துன்ப பூமி இப்பொழுது அழிக்கப்பட வேண்டும். அந்தச் சந்தோஷ பூமி அழிவற்றது. அது அரைக் கல்பத்திற்குத் தொடர்கின்றது, அது அழிவற்ற விருட்சாதிபதியாலேயே ஸ்தாபிக்கப்படுகின்றது. குழந்தைகளாகிய நீங்கள் சேவைக்காக இக்கருத்துக்களைக் குறித்துக் கொள்ள வேண்டும். இவையே கண்காட்சிகளில் விளங்கப்படுத்தப்பட வேண்டிய பிரதான கருத்துக்களாகும். ஏனெனில், மனிதர்களுக்கு எதுவுமே தெரியாது. உண்மையில், இதுவே ஞானம் ஆகும். தந்தை இப்பொழுது புதிய, பழைய உலகங்களின் சங்கமத்திலேயே இந்த ஞானத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார். பின்னர் அது மறைந்து விடுகின்றது. தேவர்களிடம் இந்த ஞானம் இல்லை. அவர்களிடம் சக்கரம் பற்றிய ஞானம் இருந்திருக்குமாயின், அவர்களால் இராச்சியத்தை அனுபவித்திருக்க முடியாது. இப்பொழுதுகூட உங்களுக்கு இவ்வெண்ணம் உள்ளது: எங்கள் இராச்சியத்தைக் கோரிய பின்னர் நாங்கள் மீண்டும் இதே நிலையை அடையப் போகின்றோமா? எவ்வாறாயினும், நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது, சக்கரம் சுழன்றாக வேண்டும். உலகின் வரலாறும், புவியியலும் மீண்டும் மீண்டும் இடம்பெறுகின்றன. அவை எவ்வாறு மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இது மனித உலகம் ஆகும். அசரீரி உலகின் விருட்சம் உங்களின் புத்திகளில் உள்ளது. ஒவ்வொருவரினதும் பகுதியும் தனித்தனியானது. இவ்விடயங்கள் ஒருபோதும் வேறு எவரது புத்தியிலும் இருக்காது. இவ்விடயங்கள் எந்த சமய நூல்களிலும் எழுதப்படவில்லை. ஆத்மாக்களாகிய நாங்கள் அனைவரும் ஆரம்பத்தில் சாந்திதாம வாசிகளாகவே இருந்தோம். நாங்கள் அழிவற்றவர்;கள், என்றும் அழிக்கப்பட முடியாதவர்கள். ஒரு குமிழியானது நீரில் தோன்றி அதனுள்ளேயே அமிழ்ந்து விடுவதாக அவர்கள் நம்புகின்றனர். அனைத்து இரகசியங்களும் உங்களின் புத்திகளில் உள்ளது. ஆத்மாக்கள் அழிவற்றவர்கள். அவர்களின் பாகம் முழுவதும் அவர்களுக்குள் பதியப்பட்டுள்ளது. சில இடங்களில் அவர்கள் சுவஸ்திகாவைக் காட்டியிருந்தாலும், இந்தச் சக்கரத்தின் ஞானம் வேறு எந்தச் சமயநூல்களிலும் குறிப்பிடப்படவில்லை. பல சமயங்கள் இருந்ததைக் காட்டுவதற்கு அவர்கள் பல கோடுகளையும், வட்டங்களையும் வரைந்து காட்டுகிறார்கள். பிரதானமாக நான்கு சமயங்களும், சமயநூல்களுமே இருந்தன எனத் தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். சத்திய, திரேதா யுகங்களில் எந்தச் சமயங்களும் ஸ்தாபிக்கப்படவும் இல்லை. அங்கு, எந்தச் சமய நூல்களும் இருக்கவும் இல்லை. அவை யாவும் துவாபர யுகத்திலேயே ஆரம்பிக்கின்றன. அதன் பின்னர் ஏற்பட்ட விரிவாக்கத்தைப் பாருங்கள்! அச்சா. கீதை எப்போது உபதேசிக்கப்பட்டது? தந்தை கூறுகிறார்: நான் சக்கரத்தின் சங்கம யுகத்தில் மட்டுமே வருகிறேன். அவர்கள் 'சக்கரம்" என்ற வார்த்தையைத் தவிர்த்து, நான் ஒவ்வொரு யுகத்திலும் வருவதாகக் கூறுகிறார்கள். உண்மையில், வேறு எந்த சங்கமத்திலும், எந்த சமயமும் ஸ்தாபிக்கப்படுவதில்லை. இஸ்லாம் மதம் திரேதாயுக இறுதியிலும் துவாபரயுக ஆரம்பத்திலும், ஸ்தாபிக்கப்பட்டது என்றில்லை. அது துவாபர யுகத்திலேயே ஸ்தாபிக்கப்பட்டது எனக் கூறப்படுகின்றது. இதுவே 'கும்ப" என்றும் அழைக்கப்படுகின்ற சங்கமயுகத்தின் அழகிய கணங்களாகும். 'கும்ப" என்பது சங்கமத்தில் நிகழ்கிறது (கும்பமேளா). இந்த சங்கமமே ஆத்மாக்களினதும் பரமாத்மாவினதும் சந்திப்பாகும். இந்த ஆன்மீகச் சந்திப்பு சங்கமயுகத்தில் மாத்திரமே இடம்பெறுகிறது. அவர்கள் பின்னர் கங்கை நீரின் புகழைப் பாடியுள்ளார்கள். அவர்களுக்குத் தூய்மையாக்குபவரான ஞானக் கடலைத் தெரியாது. தூய்மையற்ற உலகை அவர் எவ்வாறு தூய்மை ஆக்;கினார் என்பது எந்தச் சமய நூல்களிலுமே குறிப்பிடப்படவில்லை. தந்தை இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகிறார்: சதா என்னை மாத்திரமே நினைவு செய்யுங்கள்! சரீரத்தின் சமயங்கள் அனைத்தையும் துறவுங்கள். இதனை அவர் யாருக்குக் கூறுகிறார்? ஆத்மாக்களுக்கே கூறுகிறார். இதுவே மரணித்து வாழ்தலாகும். ஒருவர் மரணிக்கும்போது அவரது சரீர உறவுகள் அனைத்தும் முடிவடைந்து விடுகின்றன. தந்தை கூறுகிறார்: உங்களின் சகல சரீர உறவுகளையும் துறந்து, நீங்கள் ஆத்மாக்கள் என்பதில் நம்பிக்கை வையுங்கள். நம்பிக்கை நிறைந்த ஆத்ம உணர்வுடைய புத்தியைக் கொண்டிருங்கள்! எந்தளவிற்கு அதிகமாக நீங்கள் நினைவில் இருக்கின்றீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக உங்கள்மீது குரு திசையை அனுபவம் செய்வீர்கள். சிவபாபாவை எந்தளவிற்கு நீங்கள் நினைவு செய்கிறீர்கள் எனச் சோதித்துப் பாருங்கள். நினைவினால் மாத்திரமே துரு தொடர்ந்து அகற்றப்பட்டு, நீங்கள் சந்தோஷத்தை அனுபவம் செய்வீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் எந்தளவிற்கு தந்தையை நினைவு செய்கிறீர்கள் என்பதை உங்களாலேயே உணர முடியும். நீங்கள் குறைந்தளவே அவரை நினைவு செய்தால், குறைந்தளவு துருவே அகற்றப்படும். அத்துடன் குறைந்தளவு சந்தோஷமே அனுபவம் செய்யப்படுவதுடன், நீங்கள் பெறப்போகும் அந்தஸ்தும் குறைவானதாகவே இருக்கும். ஆத்மாவே சதோ, ரஜோ, தமோ நிலைகளைக் கடந்து செல்கிறார். 'அதீந்திரிய சுகத்தின் அனுபவத்தை நீங்கள் அறிய விரும்பினால் கோப கோபியரைக் கேளுங்கள்" என்ற புகழ் இந்நேரத்தையே குறிக்கிறது. நீங்கள் தந்தையைத் தவிர வேறு எவரையுமோ அல்லது எவற்றையுமோ நினைவு செய்யாதபோதே, உங்களின் சந்தோஷப் பாதரசம் அதிகரிக்கும். எங்கள் மீது குருதிசை, அதாவது சத்குருவின் பார்வை உள்ளது. பின்னர் இந்த சந்தோஷம் மறைந்ததும், குரு திசை மறைந்து இப்போது இராகுதிசை (கிரகணம்) வந்துவிட்டது எனக் கூறப்படுகிறது. பெரும் செல்வந்தர்கள் சிலர், பங்குச் சந்தையில் வியாபாரத்தில் இறங்கி பின்னர் கடனாளிகள் ஆகிவிடுகிறார்கள். பாரதத்தில், கிரகணம் ஏற்படும்போது கூறப்படுகிறது: தானம் செய்தால், அந்தக் கிரகணம் அகன்றுவிடும். உங்களின் தேவ தர்மம் 16 கலைகள் நிறைந்தது. இப்போது அதில் கிரகணம் பிடித்துள்ளது. மக்கள் ராகுவின் சகுனங்களை அனுபவம் செய்யும்போது, தேவ விக்கிரகங்களின் முன்னால் சென்று, பாடுகிறார்கள்: நீங்கள் சகல தெய்வீகக் குணங்களும் நிரம்பியவர்கள், நாங்களோ பாவிகள், ஏமாற்றுக்காரர்கள். கிரகணத்தின் சகுனங்கள் ஏற்பட்டதாலேயே அனைவரும் அவலட்சணம் ஆகிவிட்டார்கள் என்பதை நீங்கள் இப்போது புரிந்து கொள்கிறீர்கள். ஒரு கோடு மாத்திரமே எஞ்சும்வரை சந்திரனும் தேய்ந்து செல்கின்றது. தந்தை விளங்கப்படுத்துகிறார்: தேவர்களாகிய உங்களின் உருவங்களும் உள்ளன. கீதையே ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தின் சமயநூல் ஆகும். எவ்வாறாயினும் அவர்களுடைய சொந்த தர்மத்தையே அவர்கள் அறியாதுள்ளனர். அவர்கள் சமயத் தலைவர்களுக்கான மாநாடுகளை நடாத்துகிறார்கள். கடவுள் சர்வவியாபகர் அல்ல என்பதையும்கூட அங்கே சென்று நீங்கள் விளங்கப்படுத்தலாம். அவரே எல்லையற்ற தந்தை. அவர் தனது குழந்தைகளுக்கு ஓர் ஆஸ்தியைக் கொடுப்பதற்காகவே இங்கு வருகின்றார். சாதுக்களும், புனிதர்களும் ஆஸ்தியைப் பெறுவதில்லை. எனவே, எவ்வாறு அவர்கள் இதை நம்பமுடியும்? குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். கடவுள் சர்வவியாபகர் அல்ல என்ற பிரதான விடயத்தை நீங்கள் நிரூபித்துக் காட்ட வேண்டும். சிவனின் பிறந்தநாளும் உள்ளது. நீங்கள் இதனைச் சிவனின் பிறந்தநாள் என்றோ அல்லது உருத்திரனின் பிறந்தநாள் என்றோ அழைக்கலாம். உருத்திரனே ஞானயாகத்தை உருவாக்குகிறார். அவரே சிவன். இதுவே விநாசத்தின் சுவாலைகள் வெளிப்படுகின்ற, அதே கீதை ஞானயாகம் ஆகும். எவ்வாறு அசரீரியான பாபா உருத்திரனின் ஞான யாகத்தை உருவாக்கினார் என்பதை உங்களால் நடைமுறையில் பார்க்க முடியும். சரீரதாரியால் எதுவுமே செய்ய முடியாது. இதுவே பழைய உலகம் முழுவதும் அர்ப்பணிக்கப்படவுள்ள, எல்லையற்ற யாகமாகும். ஏனைய அனைத்தும் லௌகீக யாகங்களாகும். இங்கு பகலுக்கும், இரவுக்கும் இடையிலான வித்தியாசம் உள்ளது! தந்தை கூறுகிறார்: இதுவே உருத்திரனின் ஞானயாகம் ஆகும், விநாசம் நிகழ்ந்தாக வேண்டும். நீங்கள் முழுமையான யோகியாகவும், ஞானியாகவும் ஆகி, முழுமையாகச் சித்தி எய்திய பின்னரே சுவர்க்கம் என்ற புதிய உலகம் உங்களுக்குத் தேவைப்படும். அப்பொழுது நரகம் நிச்சயமாக அழிக்கப்பட வேண்டும். 'சுயராச்சியத்திற்காக அர்ப்பணிக்கப்படும் குதிரை" என்ற வார்த்தைகள் சரியானவை. அவர்களும் ஒரு குதிரையை அர்ப்பணிக்கின்றனர். உண்மையில் இது உங்கள் இரதத்தையே குறிக்கிறது. தக்ஷ பிரஜாபிதாவின் யாகம் பற்றிய கதையும் உள்ளது. விருட்சாதிபதியான தந்தையே உங்களுக்குக் கற்பிப்பதால் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அதிக சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டும். எங்கள்மீது இப்பொழுது குருதிசை இருப்பதால் எங்கள் ஸ்திதியும் மிக நன்றாக உள்ளது. பின்னர் நீங்கள் முன்னேறிச் செல்லும்பொழுது, எழுதுகிறீர்கள்: பாபா, நான் குழப்பம் அடைந்துள்ளேன். ஆரம்பத்தில் நான் மிகவும் சந்தோஷமாகத்தான் இருந்தேன், ஆனால் இப்பொழுது என்ன நடந்ததென்றே தெரியவில்லை.” இங்கு வந்து தந்தைக்கு உரியவராகுவது என்பது மகத்தான யாத்திரை ஆகும். மக்கள் தீர்த்தயாத்திரைகள் செல்லும்பொழுது பெருமளவு பணத்தைச் செலவு செய்கிறார்கள்! இங்கு எதையும் தானம் செய்வது என்ற கேள்விக்கு இடமில்லை. நீங்கள் இங்கு பணத்தைச் செலவுசெய்ய வேண்டியதில்லை. அது பௌதீக யாத்திரை, உங்களுடையதோ ஆன்மீக யாத்திரை ஆகும். பௌதீக யாத்திரைகளால் எவ்வித பயனும் இல்லை. பாடலில் பாடப்பட்டுள்ளது: பிறவி பிறவியாக நாங்கள் எல்லாத் திசைகளிலும் சுற்றித்திரிந்தோம், ஆனாலும் உங்களிடம் இருந்து விலகித் தொலைவிலேயே இருந்தோம். நீங்கள் எவ்வாறு பல யாத்திரைகளுக்குச் சென்றீர்கள் என்பதை இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள்! மக்கள் நிச்சயமாக ஏதோவோர் இடத்திற்குச் செல்கின்றனர். அவர்கள் நிச்சயமாக ஹரிதுவாரில் உள்ள கங்கைக்குச் செல்கின்றனர். அவர்கள் கங்கையைத் தூய்மையாக்குபவர் என்று நம்புகின்றார்கள். உண்மையில், நீங்களே உண்மையான இந்த ஞான கங்கைகள். பலர் உங்களிடம் வந்து, இந்த ஞானத்தினால் நீராட்டப்படுகிறார்கள். சற்குரு ஒருவரே என பாபா விளங்கப்படுத்தி உள்ளார். ஒரேயொரு சற்குருவைத் தவிர வேறு எவராலும் அனைவருக்கும் சற்கதி அருள முடியாது. தந்தை கூறுகிறார்: நான் ஒவ்வொரு சக்கரத்திலும் சங்கம யுகத்தில் வந்து, உங்களுக்கு சற்கதியை அருளி, உங்களைப் பூஜிப்பவர்களில் இருந்து பூஜிக்கத் தகுதி வாய்ந்தவர்கள் ஆக்குகின்றேன். பின்னர் நீங்கள் பூஜிப்பவர்களாகவும் சந்தோஷம் அற்றவர்களாகவும் ஆகுகின்றீர்கள். இந்நேரத்தில் மாத்திரமே நீங்கள் இதனை அறிந்து கொள்கின்றீர்கள். எங்கள் இராச்சியம் உண்மையாகவே அரைக் கல்பத்திற்கு நீடிக்கின்றது. பின்னர் துவாபர யுகத்தில், தேவர்களாகிய நாங்கள் பாவப் பாதையில் செல்கிறோம். இராவண இராச்சியம் ஆரம்பிக்கும்போதே பாவப் பாதையும் ஆரம்பமாகிறது. இதன் அடையாளங்களும் உள்ளன. ஜெகநாதர் ஆலயத்திற்கு நீங்கள் சென்றால் அங்கு கருங்கல்லால் செய்யப்பட்ட உருவங்களைப் பார்க்கலாம். அவலட்சணமான தேவர்களின் விக்கிரகங்களை அவர்கள் வெளியே வைத்திருக்கிறார்கள். முன்னர் அதன் அர்த்தத்தை நாங்கள் புரிந்து கொள்ளவில்லை. விகாரம் நிறைந்த மனிதர்கள் அவற்றை விகாரக்கண் கொண்டே பார்ப்பார்கள். ஆகையால், தேவர்களும் விகாரம் நிறைந்தவர்களே என்று அவர்கள் நினைப்பார்கள். தேவர்கள் பாவப்பாதையில் சென்றார்கள் என்று எழுதப்பட்டுள்ளது. அவர்கள் அவற்றைத் தேவர்களின் ஆடைகளுடன் காட்டியுள்ளார்கள். இங்குள்ள தில்வாலா ஆலயத்திற்கு நீங்கள் சென்றால், சுவர்க்கம் கூரையில் காட்டப்பட்டுள்ளதையும், கீழே தரையில் அவர்கள் தபஸ்யாவில் அமர்ந்திருப்பதையும் எவ்வாறு அவர்கள் காட்டி உள்ளார்கள் எனப் பார்க்கலாம். வேறு எவராலும் இந்த இரகசியங்கள் எதையும் புரிந்துகொள்ள முடியாது. பாபாவின் இரதம் மிகவும் அனுபவம் வாய்ந்தது. ஆத்மாக்கள் நீண்ட காலமாக பரமாத்மாவிடம் இருந்து பிரிந்திருந்தார்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்போது புரிந்து கொண்டுள்ளீர்கள். முதலில் அவரிடம் இருந்து பிரிந்த நீங்களே முதலில் அவரைச் சந்திக்கவும் வருகிறீர்கள். ஸ்ரீகிருஷ்ணரே சத்தியயுக முதல் இளவரசன் ஆவார். ஸ்ரீகிருஷ்ணரது தந்தையும் இருந்திருக்க வேண்டும். அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் பெற்றோரைப் பற்றி அதிகமாக எதுவும் காட்டவில்லை. அவரது தந்தை, அவரை ஒரு கூடையில் இட்டு தலைமேல் சுமந்து, ஆற்றைக் கடந்து சென்றார் என்று மட்டுமே அவர்கள் காட்டி உள்ளார்கள். இராச்சியம் போன்றவற்றை அவர்கள் காட்டவில்லை. அவரது தந்தைக்கு எந்தப் புகழும் இல்லாதிருப்பது ஏன்? ஸ்ரீகிருஷ்ணரின் ஆத்மா இந்நேரத்தில், இக்கல்வியை மிகவும் நன்றாகக் கற்றதாலேயே, அவரது பெற்றோரை விடவும் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெற்றார் என்பதை நீங்கள் இப்போது புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் ஸ்ரீ கிருஷ்ணரின் இராச்சியத்தில் இருந்தீர்கள் என்பதைப் புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் சுவர்க்கத்தில் இருந்தீர்கள். அதன் பின்னர் சந்திர வம்சத்தவர் ஆகினீர்கள். மீண்டும் ஒரு முறை சூரிய வம்சத்தவர் ஆகுவதற்கு நாங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றி, தூய்மையாகி அதன் பின்னர் தூய உலகிற்கு அதிபதிகள் ஆகுவோம். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களது சொந்த ஸ்திதியைப் பரசோதித்துப் பார்க்கலாம். நான் இச்சரீரத்தை இநத் நேரத்தில் விட நேர்ந்தால் எதனை அடைந்திருப்பேன்? உங்களைப் பற்றி நீங்கள் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளலாம். தந்தையை எந்தளவிற்கு அதிகமாக நீங்கள் நினைவு செய்கிறீர்களோ, அந்தளவிற்கு உங்கள் பாவங்கள் அழியும். மக்கள் ஏதாவது சிரமத்தையோ அல்லது துன்பத்தையோ அனுபவிக்கும்போதோ, அல்லது கடனாளிகள் ஆகும்போதோ, சாதுக்களின் சகவாசத்தைத் நாடிச் செல்கிறார்கள். அவர் சமயப்பற்றுள்ளவர் ஆதலால், எவரையும் ஏமாற்றமாட்டார் என்று அவர்கள் கருதுகின்றனர். அத்தகையவர்கள்கூட இரண்டிலிருந்து நான்கு வருடங்களுக்குள் பெரும் செல்வந்தர்கள் ஆகிவிடுகின்றனர். அவர்கள் அதிக பணத்தை மறைத்து வைத்திருக்கின்றனர். நீங்கள் ஒவ்வொருவரும் விளங்கிக் கொள்வதற்கு, உங்கள் புத்தியைப் பயன்படுத்தலாம். உங்கள் மத்தியிலும் பாபாவை மிகக் குறைவாகவே நினைவு செய்கின்ற பலர் உள்ளனர். ஆகையால் பாபா கூறுகிறார்: உங்களுக்கே நீங்கள் நன்மைசெய்ய வேண்டுமானால், உங்களுடன் ஒரு குறிப்புப் புத்தகத்தை வைத்திருங்கள். முழு நாளும் தந்தையை எந்தளவிற்கு நினைவு செய்கிறீர்கள் என உங்கள் அட்டவணையில் குறித்துக் கொள்ளுங்கள். சிலர் தங்களின் முழு வாழ்க்கை வரலாற்றையும் எழுதுகிறார்கள். நீங்கள் உங்களின் நினைவு அட்டவணையை எழுத வேண்டும். இதில் உங்களுக்கு நன்மை இருக்கிறது. நீங்கள் பாபாவை நினைவு செய்யாவிட்டால் உங்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தை அடைய முடியாது. உங்கள் பாவங்கள் அழியாதிருக்கும்போது உங்களால் எவ்வாறு உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறமுடியும்? தண்டனையையே அனுபவம் செய்ய நேரிடும். தண்டனையை அனுபவிக்காதவர்கள் சிறந்த அந்தஸ்தைப் பெறுவார்கள். தண்டனையை அனுபவித்து, குறைந்த அந்தஸ்தைப் பெறுவதில் என்ன பயன்? நீங்கள் தர்மராஜிடம் தண்டனையை அனுபவித்து உங்களின் கௌரவத்தை இழக்காமல் இருப்பதற்கு, முயற்சி செய்யுங்கள். சிவபாபா இங்கு அமர்ந்திருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். ஆனால் அந்நேரத்தில் தர்மராஜும் கூட இருப்பார். நீங்கள் செய்த ஒவ்வொன்றிற்குமான காட்சிகளும் உங்களுக்குக் கிடைக்கும்: இதனை உங்களால் நினைவுசெய்ய முடிகிறதா? அதற்கான தண்டனையை இப்போது அனுபவியுங்கள்! அக்கணத்தில் அனுபவிக்கப்படும் தண்டனையானது, பிறவி பிறவியாக நீங்கள் தண்டனை அனுபவிப்பது போன்றிருக்கும். இறுதி நேரத்தில் ஒரு சிறு துண்டு சப்பாத்தியைப் பெறுவதில் என்ன நன்மை இருக்க முடியும்? எவ்வித தண்டனையும் அனுபவம் செய்யப்படக் கூடாது. உங்களின் சொந்த ஸ்திதியைச் சோதித்துப் பாருங்கள். மக்கள் 6 அல்லது 12 மாதங்களுக்கான கணக்குகளை வைத்திருக்கிறார்கள். சிலர் தினமும் தங்களின் கணக்கை எழுதுவார்கள். தந்தை கூறுகிறார்: நீங்களும் வியாபாரிகளே. தந்தையுடன் இவ்வியாபாரத்தைச் செய்பவர்கள் மிகவும் அரிதாகவே உள்ளனர். உங்களிடம் பணம் இல்லாவிட்டாலும், உங்களின் சரீரமும், மனமும் உள்ளன. அவர் பங்குத்தரகர் என்றும் அழைக்கப்படுகிறார். அவர் உங்களுக்கு அனைத்தையும் மாற்றித் தருகிறார். நீங்கள் உங்களின் சரீரம், மனம், செல்வம் ஆகியவற்றை அவரிடம் கொடுக்கிறீர்கள். அதற்குப் பிரதிபலனாக, அவர் உங்களுக்கு 21 பிறவிகளுக்கான ஆஸ்தியைப் கொடுக்கிறார்! “பாபா, நான் உங்களுக்கு உரியவன், இந்த ஆத்மா, சரீரம் இரண்டும் இலக்ஷ்மி அல்லது நாரயணனுடையது போன்று ஆகுவதற்கான, வழியை எனக்குக் காட்டுங்கள்!” பாபா கூறுகிறார்: நான் உங்களை மிகவும் அழகானவர்கள் ஆக்குகிறேன்! உங்களின் வடிவம் முற்றிலும் மாறுகிறது. உங்களின் அடுத்த பிறவியில் நீங்கள் முதற்தரமான சரீரத்தைப் பெறுவீர்கள். நீங்கள் சுவர்க்கத்தில் அனைத்தையும் பார்ப்பீர்கள். மம்மாவும் பாபாவும், இலக்ஷ்மியும் நாராயணனும் ஆகுவார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இலக்கும் குறிக்கோளும் கூட காட்டப்பட்டுள்ளன. இப்போது, நீங்கள் எந்தளவு முயற்சி செய்கிறீர்கள் என்பதிலேயே அது தங்கியுள்ளது. நீங்கள் முழுமையாக முயற்சி செய்யாது, குழப்பங்களை உருவாக்கிக் கொண்டிருந்தால், நீங்களே உங்களின் அந்தஸ்தை அழித்துக் கொள்வீர்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களின் சொந்த ஸ்திதியைச் சோதித்துப் பாருங்கள். உங்களின் சொந்த நன்மைக்காக தினசரி நாட்குறிப்பேட்டை வைத்திருந்து, உங்களின் நினைவு அட்டவணையை அதில் குறித்துக் கொள்ளுங்கள்.2. எல்லையற்ற தந்தையுடன் சேர்ந்து உண்மையான வியாபாரம் செய்யுங்கள். உங்களின் சரீரம், மனம், செல்வம் ஆகியவற்றைத் தந்தையிடம் அர்ப்பணித்து, அதற்குரிய பிரதிபலனை 21 பிறவிகளுக்குப் பெற்றுக் கொள்ளுங்கள். புத்தியில் நம்பிக்கை கொண்டிருந்து, உங்களுக்கு நன்மை செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் சந்தோஷ சக்தியைக் கிரகிப்பதன் மூலம் தடைகளை வென்றவராகி, தடைகளை வெற்றி கொள்வீர்களாக.எவ்வாறு சேமிக்க முடியும் என்பதை அறிந்துள்ள குழந்தைகள் சக்திசாலிகள் ஆகுகிறார்கள். நீங்கள் ஒரு கணம் ஏதாவது ஒன்றைச் சம்பாதித்து, உடனடியாகவே அதைக் கொடுத்து விட்டால், உங்களுக்காக எதையும் சேமிக்காவிட்டால், உங்களிடம் எந்தவிதமான சக்தியும் எஞ்சியிருக்காது. உங்களிடம் பகிர்ந்து கொள்வதன் அல்லது தானம் செய்வதன் சந்தோஷம் மட்டுமே இருக்கும். உங்களிடம் சக்தியும் சந்தோஷமும் இருக்குமாயின், உங்களால் இலகுவாகத் தடைகளைக் கடந்து, தடைகளை வென்றவர் ஆக முடியும். அப்போது எந்தத் தடைகளும் உங்களின் அன்பிலே எந்தவிதமான குழப்பத்தையும் உருவாக்க மாட்டாது. எவ்வாறு உங்களின் முகத்தில் சந்தோஷப் பிரகாசம் புலப்படுகிறதோ, அவ்வாறே சக்தியின் பிரகாசமும் புலப்படும்.
சுலோகம்:
பிரதிகூலமான சந்தர்ப்பங்களால் பயப்படுவதற்குப் பதிலாக, அவற்றை உங்களின் ஆசியரியராகக் கருதி, அவற்றில் இருந்து ஒரு பாடத்தைக் கற்றுக் கொள்ளுங்கள்.அவ்யக்த சமிக்கை: எரிமலை ஸ்திதியில் இருந்தவண்ணம், சக்திவாய்ந்த நினைவை அனுபவம் செய்யுங்கள்.
எஞ்சியுள்ள கடைசியான, வேகமான முயற்சி, எரிமலை ரூபத்திற்கு உரியதேயாகும். பாண்டவர்களால் யாதவர்கள் காத்திருக்கிறார்கள். பாண்டவர்களின் மேன்மையான, ஆன்மீகக் கண்ணியமான ஸ்திதி, யாதவர்களின் பிரதிகூலமான, துன்பச் சூழ்நிலைகளை முடித்துவிடும். துயரப்படும் ஆத்மாக்களுக்கு அமைதி மற்றும் சௌகரியத்தின் ஆசீர்வாதத்தை வழங்குவதற்கு உங்களின் கண்ணியத்தைப் பயன்படுத்துங்கள். எரிமலை ரூபமாக இருத்தல் என்றால் வெளிச்ச வீடு மற்றும் சக்திவீட்டின் ஸ்திதியைப் புரிந்து கொண்டு தொடர்ந்து அந்த முயற்சியைச் செய்வதே ஆகும்.