09.08.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, அதிமேன்மையான இந்தச் சங்கமயுகமே நன்மையளிக்கும் யுகமாகும். இந்த யுகத்திலே, கற்பதன் மூலம் நீங்கள் ஸ்ரீ கிருஷ்ணரின் தாமத்துக்கு அதிபதிகள் ஆக வேண்டும்.
கேள்வி:
தந்தை இந்த ஞானக் கலசத்தைத் தாய்மார்களின் மீது வைப்பது ஏன்? பாரதத்தில் மாத்திரம் தொடர்கின்ற ஒரு சம்பிரதாயம் என்ன?பதில்:
தந்தை இந்த ஞானக் கலசத்தைத் தாய்மார்களின் மீது வைக்கிறார், ஏனெனில் தூய்மை என்ற ராக்கியை தாய்மார்கள் அனைவருக்கும் கட்டி, தூய்மை அற்ற அனைவரையும் அவர்களால் தூய்மையானவர்கள் ஆக்க முடியும் என்பதால் ஆகும். இரக்ஷா பந்தன் என்னும் சம்பிரதாயம் பாரதத்தில் மாத்திரமே உள்ளது. ஒரு சகோதரி அவருடைய சகோதரருக்கு ஒரு ராக்கியைக் கட்டுகிறார். இது தூய்மையைக் குறிக்கிறது. தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, என்னை மாத்திரம் நினைவுசெய்தால், நீங்கள் தூய்மை ஆகுவீர்கள்; நீங்கள் தூய உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள்.பாடல்:
அப்பாவிப் பிரபுவைப் போன்று, தனித்துவமானவர் எவரும் இல்லை.ஓம் சாந்தி.
இது அருள்பவர் என அழைக்கப்படுகின்ற, அப்பாவிப் பிரபுவின் புகழாகும். ஸ்ரீ இலக்ஷ்மிக்கும், நாராயணனுக்கும் அவர்களின் இராச்சியப் பாக்கியத்தைக் கொடுத்தவர் யார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நிச்சயமாகக் கடவுளே அதை அவர்களுக்குக் கொடுத்திருக்க வேண்டும், ஏனெனில் அவரே சுவர்க்கத்தை ஸ்தாபிப்பவர். அப்பாவிப் பிரபு இலக்ஷ்மிக்கும் நாராயணனுக்கும் சுவர்க்க இராச்சியத்தைக் கொடுத்ததைப் போன்றே, அதைக் ஸ்ரீகிருஷ்ணருக்கும் கொடுத்தார். நீங்கள் இராதையும் கிருஷ்ணரும் என்றோ அல்லது இலக்ஷ்மியும் நாராயணனும் என்றோ கூறினாலும், எல்லாம் ஒன்றேயாகும். எவ்வாறாயினும், இப்பொழுது இராச்சியம் இல்லை. பரமாத்மாவாகிய, பரமதந்தையைத் தவிர வேறு எவராலும் அவர்களுடைய இராச்சியத்தை அவர்களுக்குக் கொடுக்க முடியாது. அவர்கள் சுவர்க்கத்தில் பிறவி எடுப்பதாகக் கூறப்படுகிறது. குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரம் அதை அறிவீர்கள். ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்தநாளைப் பற்றிக் குழந்தைகளாகிய உங்களால் மாத்திரமே விளங்கப்படுத்த முடியும். ஸ்ரீகிருஷ்ணரின் ஜனமாஷ்டமி (பிறந்தநாள்) இருப்பதால், இராதைக்கும் ஒரு பிறந்தநாள் இருக்க வேண்டும், ஏனெனில், இருவருமே சுவர்க்கவாசிகளாக இருந்தார்கள். இராதையும், கிருஷ்ணரும் தங்கள் திருமணத்தின் பின்னர் இலக்ஷ்மியும், நாராயணனும் ஆகுகிறார்கள். பிரதான விடயம்: அவர்களுடைய இராச்சியத்தை அவர்களுக்குக் கொடுத்தவர் யார்? அவர்களுக்கு இந்த இராஜயோகத்தைக் கற்பித்தவர் யார்? எப்பொழுது கற்பித்தார்? அது சுவர்க்கத்தில் கற்பிக்கப்பட்டிருக்க மாட்டாது. சத்தியயுகத்தில் அவர்கள் அதிமேன்மையானவர்கள். கலியுகத்தின் பின்னர் சத்தியயுகம் வருகிறது. ஆகவே, அவர்கள் தங்கள் புதிய பிறவியில் தங்கள் இராச்சியத்தை அடைய முடியும் வகையில், நிச்சயமாக அதைக் கலியுகத்தின் இறுதியிலேயே கற்றிருக்க வேண்டும். பழைய உலகம், தூய புதிய உலகமாக மாறுகிறது. நிச்சயமாகத் தூய்மையாக்குபவர் வந்திருக்கவே வேண்டும். இப்பொழுது, சங்கமயுகத்தில் என்ன தர்மம் நிலவுகின்றது என்பதை எவரும் அறிய மாட்டார்கள். இந்த அதிமேன்மையான சங்கமயுகமே, பழைய உலகிற்கும், புதிய உலகிற்கும் இடையில் உள்ளது என நினைவு கூரப்படுகின்றது. இலக்ஷ்மியும் நாராயணனும் புதிய உலகின் அதிபதிகள். பரமாத்மாவாகிய, பரமதந்தையே இந்த ஆத்மாக்களுக்கு அவர்களின் முன்னைய பிறவியில் இராஜயோகத்தைக் கற்பித்தார். இந்நேரத்தில் அவர்கள் செய்யும் முயற்சிகளின் வெகுமதியை அவர்கள் தங்களின் புதிய பிறவியில் பெறுகிறார்கள். இது அதிமேன்மையான, நன்மையளிக்கும், சங்கமயுகம் என அழைக்கப்படுகிறது. நிச்சயமாக யாரோ ஒருவர் அவர்களின் பல பிறவிகளின் இறுதியில் அவர்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்திருக்க வேண்டும். கலியுகத்தில் பல சமயங்கள் உள்ளன, சத்தியயுகத்தில் ஒரு தேவதர்மமே உள்ளது. சத்தியயுகத்தில் தங்களின் வெகுமதியை அடைவதற்கு, அவர்கள் முயற்சி செய்து இராஜயோகத்தைக் கற்பதற்கு, சங்கமயுகத்தில் உள்ள தர்மம் என்ன? சங்கமயுகத்தில் பிரம்மாவினூடாகப் பிராமணர்கள் உருவாக்கப்படுகிறார்கள் என்பது புரிந்து கொள்ளப்படுகிறது. பிரம்மாவினூடாக ஸ்ரீகிருஷ்ணரின் தாமம் ஸ்தாபிக்கப்படுகிறது என்பதும் படங்களில் காட்டப்படுகிறது. நீங்கள் அதை விஷ்ணுவின் தாமம் என்றோ அல்லது நாராயணனின் தாமம் என்றோ அழைத்தாலென்ன, எல்லாம் ஒன்றேயாகும். இதைக் கற்பதினூடாகவும், தூய்மை ஆகுவதனாலும், நீங்கள் கிருஷ்ணரின் தாமத்துக்கு அதிபதிகள் ஆகுகிறீர்கள் என்பதை இப்பொழுது அறிவீர்கள். இவை கடவுள் சிவனின் வாசகங்கள். ஸ்ரீகிருஷ்ணரின் ஆத்மாவே அவரின் பல பிறவிகளின் இறுதியில் இவ்வாறு ஆகுகிறார்; அவர் 84 பிறவிகளை எடுக்கிறார். இந்த 84 ஆவது பிறவியிலேயே அவர் பிரம்மா எனப் பெயரிடப்படுகிறார். இல்லாவிட்டால், பிரம்மா வேறு எங்கிருந்து வந்திருப்பார்? கடவுள் படைப்பைப் படைத்திருப்பின், எங்கிருந்து பிரம்மா, விஷ்ணு, சங்கரர் வந்தார்கள்? அவர்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டார்கள்? அவர்களை வெளிப்படச் செய்வதற்கு ஏதாவது மந்திரவித்தை செய்யப்பட்டதா? தந்தை மாத்திரம் அவர்களின் வரலாற்றை உங்களுக்குக் கூறுகிறார். ஒருவர் தத்து எடுக்கப்படும் பொழுது, அவருடைய பெயர் மாற்றப்படுகின்றது. இவருக்கு ‘பிரம்மா’ என்னும் பெயர் முன்னர் இருக்கவில்லை. “பல பிறவிகளின் இறுதியில்….” எனக் கூறப்பட்டுள்ளது. ஆகவே, நிச்சயமாக அவர் ஒரு தூய்மையற்ற மனிதராக இருந்திருக்க வேண்டும். பிரம்மா எங்கிருந்து வந்தார் என்பதை எவரும் அறிய மாட்டார்கள். இது யாருடைய பல பிறவிகளின் இறுதிப் பிறவி? இலக்ஷ்மியும் நாராயணனும் மாத்திரமே பல பிறவிகளை எடுத்திருக்க வேண்டும். பெயர், ரூபம், தேசம் மற்றும் காலம் தொடர்ந்தும் மாறுகின்றன. ஸ்ரீகிருஷ்ணரின் படத்தில் 84 பிறவிகளின் கதை தெளிவாக எழுதப்பட்டுள்ளது. ஜனமாஷ்டமியின் வேளையில், ஸ்ரீகிருஷ்ணரின் பல படங்கள் விற்கப்படுகின்றன, ஏனெனில் அனைவரும் ஸ்ரீகிருஷ்ணரின் ஆலயத்துக்குச் செல்கிறார்கள்; அவர்கள் இராதா கிருஷ்ணரின் ஆலயத்துக்கும் செல்கிறார்கள். இராதை நிச்சயமாகக் ஸ்ரீகிருஷ்ணருடனே இருப்பார். இளவரசியும் இளவரசருமாகிய, இராதையும் கிருஷ்ணரும் பின்னர் சக்கரவர்த்தினியும் சக்கரவர்த்தியுமாகிய இலக்ஷ்மி நாராயணனாக ஆகுகிறார்கள். அவர்கள் 84 பிறவிகளை எடுத்து, தங்கள் இறுதிப் பிறவியில் பிரம்மாவும், சரஸ்வதியும் ஆகுகிறார்கள். இவருடைய பல பிறவிகளின் இறுதியில் தந்தை இவரில் பிரவேசித்து, இவருக்குக் கூறுகிறார்: நீங்கள் உங்களுடைய பிறவிகளைப் பற்றியே அறிந்து கொள்ளவில்லை. உங்கள் முதற்பிறவியில் நீங்கள் இலக்ஷ்மியும் நாராயணனுமாக இருந்தீர்கள். பின்னர் நீங்கள் இந்தப் பிறவியை எடுத்தீர்கள். எவ்வாறாயினும், அவர்கள் “அர்ஜுனன்” என்னும் பெயரைக் குறிப்பிட்டுள்ளார்கள், அர்ஜுனனுக்கு இராஜயோகம் கற்பிக்கப்பட்டது. அவர்கள் அர்ஜுனனை வேறாக்கி விட்டார்கள். ஆனால், உண்மையில், அவருடைய பெயர் அர்ஜுனன் அல்ல. பிரம்மாவின் வாழ்க்கைக் கதை இருக்க வேண்டும், ஆனால் எங்கும் பிரம்மாவை அல்லது பிராமணர்களைப் பற்றிய குறிப்பே கிடையாது. தந்தை மாத்திரமே இங்கு அமர்ந்திருந்து இவ்விடயங்களை விளங்கப்படுத்துகிறார். குழந்தைகளாகிய நீங்கள் அனைவருமே இவ்விடயங்களைச் செவிமடுத்துப் பின்னர் ஏனையோருக்கு அவற்றை விளங்கப்படுத்துகிறீர்கள். அவர்கள் பக்திக் கதைகளைச் செவிமடுத்துப் பின்னர் அவற்றை ஏனையோருக்கு விளங்கப்படுத்துகிறார்கள். நீங்கள் இதைச் செவிமடுத்துப் பின்னர் அவற்றை ஏனையோருக்குக் கூறுகிறீர்கள். இதுவே அதிமேன்மையான, லீப் யுகமான, மேலதிக யுகமான, சங்கமயுகம் ஆகும். லீப் மாதம் உள்ளபொழுது, 13 மாதங்கள் உள்ளன. ஒவ்வொரு வருடமும் அவர்கள் கொண்டாடும் விழாக்கள் இச்சங்கமயுகத்துக்கு உரியவை. இந்த அதிமேன்மையான சங்கமயுகத்தைப் பற்றி எவரும் அறிய மாட்டார்கள். இச்சங்கமயுகத்திலேயே தந்தை வந்து, தூய்மை ஆகுவதற்கான ஒரு சத்தியத்தைச் செய்யுமாறு உங்களைத் தூண்டுகிறார். அவர் தூய்மையற்ற உலகிலிருந்து தூய உலகை ஸ்தாபிக்கிறார். இரக்ஷா பந்தன் என்னும் சம்பிரதாயம் பாரதத்தில் மாத்திரமே உள்ளது. ஒரு சகோதரி அவருடைய சகோதரரின் மணிக்கட்டில் ஒரு ராக்கியைக் கட்டுகிறார். ஆனால், அந்தக் குமாரி பின்னர் தூய்மையற்றவர் ஆகுகிறார். தந்தை இப்பொழுது ஞானக் கலசத்தைத் தாய்மார்களாகிய உங்களின் மீது வைக்கிறார். இதனாலேயே ஸ்ரீ பிரம்மாகுமார்களும், குமாரிகளும் ஒரு ராக்கியைக் கட்டும்பொழுது, தூய்மை ஆகுவதற்கான சத்தியத்தைச் செய்யுமாறு ஏனையோரைத் தூண்டுகிறார்கள். தந்தை கூறுகிறார்: என்னை மாத்திரம் நினைவுசெய்தால், நீங்கள் தூய்மையாகித் தூய உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள். எவ்வாறாயினும், ராக்கி போன்றவற்றைக் கட்டுவதற்கான அவசியமில்லை. இது உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஒரு விளக்கம் மாத்திரமே. சாதுக்களும் சந்நியாசிகளும் தானத்தைக் கேட்கிறார்கள். சிலர் கூறுகிறார்கள்: உங்கள் கோபத்தைத் தானமாக வழங்குங்கள். சிலர் கூறுகிறார்கள்: இனிமேலும் வெங்காயத்தை உண்ணாதீர்கள். தாம் உண்ணாதவற்றையே அவர்கள் தானமாகக் கேட்கிறார்கள். எல்லையற்ற தந்தையே, உங்களை அனைத்திலும் அதிமுக்கியமான சத்தியத்தைச் செய்யுமாறு தூண்டுகிறார். நீங்கள் தூய்மையாக ஆக விரும்பினால், தூய்மையாக்குபவரான தந்தையை நினைவு செய்யுங்கள். துவாபர யுகத்திலிருந்து நீங்கள் தூய்மை அற்றவராகி வருகிறீர்கள். இப்பொழுது முழு உலகமும் தூய்மை ஆக வேண்டும், தந்தையால் மாத்திரம் இதைப் பூர்த்திசெய்ய முடியும். எம்மனிதராலும் அனைவருக்கும் சற்கதியை அருள்பவராக இருக்க முடியாது. தந்தை மாத்திரமே உங்களைத் தூய்மை ஆகுவதற்கான சத்தியத்தைச் செய்விக்கிறார். பாரதம் தூய சுவர்க்கமாக இருந்தது. பரமாத்மாவாகிய பரமதந்தை மாத்திரமே தூய்மை ஆக்குபவர். ஸ்ரீகிருஷ்ணரைத் தூய்மையாக்குபவர் என அழைக்க முடியாது; அவர் பிறவி எடுக்கிறார். அவருடைய பெற்றோர்களும் காட்டப்படுகிறார்கள். சிவன் மாத்திரமே தெய்வீகப் பிறப்பு உடையவர். தான் எவ்வாறு ஒரு சாதாரண சரீரத்தில் பிரவேசிக்கிறார் என்னும் தனது சொந்த அறிமுகத்தை அவரே கொடுக்கிறார். அவர் நிச்சயமாக ஒரு சரீரத்தின் ஆதாரத்தைப் பெற வேண்டும். நானே ஞானக்கடலும், தூய்மையாக்குபவரும், இராஜயோகத்தைக் கற்பிப்பவரும் ஆவேன். தந்தை மாத்திரமே சுவர்க்கத்தைப் படைப்பவரும், நரகத்தின் விநாசத்தைத் தூண்டுபவரும் ஆவார். சுவர்க்கம் இருக்கும்பொழுது, நரகம் இருப்பதில்லை. இப்பொழுது ஆழ்நரகமே உள்ளது. கலியுகம் முழுமையாகத் தமோபிரதான் நரகமாகி விடும்பொழுது, தந்தை வந்து, சதோபிரதான் சுவர்க்கத்தைப் படைக்கிறார். அவர் அதை 100வீதம் தூய்மை அற்றதிலிருந்து 100 வீதம் தூய்மை ஆக்குகிறார். நிச்சயமாக முதற்பிறவி சதோபிரதானாகவே இருக்கும். குழந்தைகளாகிய நீங்கள் ஞானக்கடலைக் கடைந்து, சொற்பொழிவுகளை ஆற்ற வேண்டும். ஒவ்வொருவடைய விளங்கப்படுத்தும் விதமும் வித்தியாசமானது. தந்தையே இன்று ஒரு விடயத்தையும், நாளை வேறொன்றையும் விளங்கப்படுத்துகிறார். அது சதாகாலமும் அதே விளக்கமாக இருக்க முடியாது. ஒருவர் ஓர் ஒலிநாடாவிலிருந்து இவ்விடயங்களை மிகச்சரியாகச் செவிமடுத்திருந்தால் கூட, அவரால் அவற்றை மிகச்சரியாகக் கூற முடியாது. நிச்சயம் ஏதோவொரு வித்தியாசம் இருக்கும். தந்தை உங்களுக்குக் கூறுகின்ற அனைத்து விடயங்களும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டவை என்பதை நீங்கள் அறிவீர்கள். மிகச்சரியாக ஒரு கல்பத்தின் முன்னர் அவர் உங்களுக்குக் கூறியதை, வார்த்தைக்கு வார்த்தை, அவர் இன்று உங்களுக்குக் கூறுகிறார். இந்தப் பதிவு, பதிவுசெய்யப்பட்டுள்ளது. கடவுளே கூறுகிறார்: 5000 வருடங்களுக்கு முன்னர் நான் உங்களிடம் பேசிய அதே வார்த்தைகளையே, நான் உங்களுடன் பேசுகிறேன். இந்நாடகத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே இடம்பெற்று விட்டது. இதில் சிறிதளவு வேறுபாடு கூட இருக்க முடியாது. அத்தகையதொரு சின்னஞ்சிறிய ஆத்மா பதிவுகளால் நிரப்பப்பட்டுள்ளார். ஸ்ரீகிருஷ்ணரின் ஜனமாஷ்டமி எப்பொழுது இடம்பெற்றது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இற்றைக்கு 5000 வருடங்களுக்கு முன்னர், ஒரு சொற்ப நாட்கள் குறைவாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. ஏனெனில் அவர் இப்பொழுது கற்றுக் கொண்டிருக்கிறார். புதிய உலகம் ஸ்தாபிக்கப்படுகிறது. குழந்தைகளாகிய உங்களின் இதயத்தில் அதிகளவு சந்தோஷம் இருக்க வேண்டும். ஸ்ரீகிருஷ்ணரின் ஆத்மா 84 பிறவிச் சக்கரத்தைச் சுற்றி வந்துள்ளார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் இப்பொழுது ஸ்ரீகிருஷ்ணரின் பெயருக்கும், ரூபத்துக்கும் திரும்பவும் மாறுகிறார். அவர் பழைய உலகை உதைத்து, புதிய உலகை தன்னுடைய உள்ளங்கையில் ஏந்திக் கொண்டிருக்கின்றார் என்பது படத்தில் காட்டப்பட்டுள்ளது. அவர் இப்பொழுது கற்கிறார். இதனாலேயே, ஸ்ரீகிருஷ்ணர் வருகிறார் எனக் கூறப்பட்டுள்ளது. அவருடைய பல பிறவிகளின் இறுதியில் தந்தை நிச்சயமாக அவருக்குக் கற்பிக்கிறார். இக்கல்வி ஒரு முடிவுக்கு வரும்பொழுது, ஸ்ரீகிருஷ்ணர் பிறவி எடுப்பார். இக்கல்விக்கென குறுகிய நேரமே எஞ்சியுள்ளது. எண்ணற்ற சமயங்கள் அனைத்தும் அழிக்கப்பட்ட பின்னர், நிச்சயமாகக் ஸ்ரீகிருஷ்ணர் பிறவியெடுக்க வேண்டும். தனியே ஸ்ரீகிருஷ்ணர் மாத்திரம் இருக்க மாட்டார்; ஸ்ரீகிருஷ்ணரின் முழு தாமமுமே இருக்கும். பிராமணர்களாகிய நீங்களே இராஜயோகத்தைக் கற்று, பின்னர் தேவ அந்தஸ்தைக் கோருகிறீர்கள். நீங்கள் இந்த ஞானத்தின் மூலம் தேவர்கள் ஆகுகிறீர்கள். தந்தை வந்து இக்கல்வி மூலம் சாதாரண மனிதர்களைத் தேவர்களாக மாற்றுகிறார். இது ஒரு பாடசாலை. இதற்கு அதிகக் காலம் எடுக்கிறது. கல்வி இலகுவானது; யோகத்துக்கே முயற்சி தேவை. இப்பொழுது ஸ்ரீகிருஷ்ணரின் ஆத்மா பரமாத்மாவான பரமதந்தையிடம் இருந்து, எவ்வாறு இராஜயோகத்தைக் கற்கிறார் என்பதை உங்களால் அவர்களுக்குக் கூற முடியும். விஷ்ணு தாம இராச்சியத்தை எங்களுக்குக் கொடுப்பதற்காக, சிவபாபா, ஆத்மாக்களாகிய எங்களுக்கு பிரம்மாவின் மூலம் கற்பிக்கிறார். பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகளாகிய நாங்கள், பிராமணர்கள் ஆவோம். இதுவே சங்கமயுகமாகும். இது ஒரு மிகவும் சிறிய யுகமாகும். உச்சிக்குடுமியே மிகவும் சிறியதாகும். பின்னர் அதை விடவும் பெரிதான முகமும், பின்னர் கரங்களும், பின்னர் வயிறும், பின்னர் கால்களும் உள்ளன. அவர்கள் பல்வகை ரூபத்தைக் காட்டுகின்றார்கள். ஆனால், எவராலும் அதற்கான ஒரு விளக்கத்தைக் கொடுக்க இயலாதுள்ளது. 84 பிறவிகளின் சக்கரத்தின் இரகசியங்களைக் குழந்தைகளாகிய நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். சிவனின் பிறப்பின் பின்னர், ஸ்ரீகிருஷ்ணரின் பிறப்பு இருக்கிறது. இச்சங்கமயுகம் குழந்தைகளாகிய உங்களுக்கானதே; உங்களுக்குக் கலியுகம் முடிவடைந்து விட்டது. தந்தை கூறுகிறார்: இனிய குழந்தைகளே, நான் இப்பொழுது உங்களை அமைதி தாமத்துக்கும், சந்தோஷ தாமத்துக்கும் அழைத்துச் செல்லவே வந்துள்ளேன். நீங்கள் சந்தோஷ தாமவாசிகளாக இருந்தீர்கள், பின்னர் நீங்கள் துன்ப பூமிக்குச் சென்றீர்கள். நீங்கள் அழைக்கிறீர்கள்: பாபா, இப்பழைய உலகத்துக்கு வாருங்கள். இது உங்களின் உலகமல்ல. நீங்கள் இப்பொழுது என்ன செய்கிறீர்கள்? நீங்கள் யோகசக்தி மூலம் உங்கள் உலகத்தை ஸ்தாபிக்கிறீர்கள். அகிம்சையே தேவர்களின் பரம தர்மம் எனக் கூறப்பட்டுள்ளது. நீங்கள் அகிம்சாவாதிகள் ஆகவேண்டும். நீங்கள் காம வாளைப் பயன்படுத்தவும் கூடாது, சண்டை சச்சரவு செய்யவும் கூடாது. தந்தை கூறுகிறார்: ஒவ்வொரு 5000 வருடங்களின் பின்னரும் நான் வருகிறேன். அது நூறாயிரக்கணக்கான வருடங்களுக்கான கேள்வியல்ல. தந்தை கூறுகிறார்: தானங்களைக் கொடுத்து, தபஸ்யா செய்து, யாகம் போன்றவற்றை வளர்க்கும் பொழுது, நீங்கள் தொடர்ந்தும் கீழிறங்கியே வந்துள்ளீர்கள். இந்த ஞானத்தைக் கற்பதால் மாத்திரமே, உங்களால் சற்கதி அடைய முடியும். மனிதர்கள் கும்பகர்ண உறக்கத்தில் உறங்குகிறார்கள்; அவர்கள் முற்றாகவே விழித்தெழுவதில்லை. இதனாலேயே தந்தை கூறுகிறார்: ஒவ்வொரு கல்பத்திலும் நான் வருகிறேன். எனக்கும் நாடகத்தில் ஒரு பாகம் உள்ளது. ஒரு பாகம் இல்லாமல் என்னாலும் எதையும் செய்ய முடியாது. நானும் இந்நாடகத்தின் பந்தனத்தில் கட்டப்பட்டுள்ளேன். நான் சரியான நேரத்தில் வருகிறேன். நாடகத் திட்டத்துக்கேற்ப நான் குழந்தைகளாகிய உங்களைத் திரும்பவும் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறேன். நான் இப்பொழுது கூறுகிறேன்: “மன்மனாபவ!”. ஆனால் எவரும் இதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. தந்தை கூறுகிறார்: சரீர உறவினர்கள் அனைவரையும் துறந்து, என்னை மாத்திரம் நினைவுசெய்தால், நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். தந்தையை நினைவுசெய்வதற்குக் குழந்தைகளாகிய நீங்கள் தொடர்ந்தும் முயற்சி செய்கிறீர்கள். இது கடவுளின் பல்கலைக்கழகம். முழு உலகத்துக்கும் சற்கதியை அருள்கின்ற, கடவுளின் வேறெந்தப் பல்கலைக்கழகமும் இருக்க முடியாது. தந்தையாகிய கடவுளே, வந்து முழு உலகையும் மாற்றுகிறார். அவர் அதை நரகத்திலிருந்து நீங்கள் ஆட்சிசெய்கின்ற சுவர்க்கமாக மாற்றுகிறார். சிவன் பபுல்நாத் (முட்களின் பிரபு) எனவும் அழைக்கப்படுகிறார். ஏனெனில் அவர் வந்து உங்களைக் காம வாளிலிருந்து விடுவித்து, உங்களைத் தூய்மை ஆக்குகிறார். பக்தி மார்க்கத்தில் பெருமளவுக்கு வெளிப்பகட்டு உள்ளது. இங்கு, நீங்கள் மௌனத்தில் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். அம்மக்கள் அனைத்து வகையான ஹத்தயோகம் போன்றவற்றையும் செய்கிறார்கள். அவர்களுடைய துறவறப் பாதை முற்றிலும் வேறானது. அவர்கள் பிரம்ம தத்துவத்தில் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். அத்தத்துவத்தை நம்புபவர்களே, தத்துவங்களுடன் யோகம் செய்பவர்கள் ஆவர். அது பிரம்மாண்ட் என அழைக்கப்படுகின்ற, ஆத்மாக்களின் வசிப்பிடம் ஆகும். அம்மக்கள் பிரம்ம தத்துவத்தைக் கடவுள் எனக் கருதித் தாங்கள் அதில் இரண்டறக் கலப்போம் என நினைக்கிறார்கள். ஆத்மாவை அழியக்கூடியதாக ஆக்குகிறார்கள் என்பதே இதன் அர்த்தம். தந்தை கூறுகிறார்: நான் வந்து அனைவருக்கும் சற்கதியை அருள்கிறேன். சிவபாபா மாத்திரமே, அனைவருக்கும் சற்கதியை அருள்கிறார். ஆகவே, அவர் ஒரு வைரம் போன்றவர். அவர் உங்களைச் சத்தியயுகத்திற்கு அழைத்துச் செல்கிறார். உங்களுடைய இப் பிறவியும் ஒரு வைரம் போன்று பெறுமதியானது. பின்னர் நீங்கள் சத்தியயுகத்திற்குச் செல்கிறீர்கள். தந்தையே வந்து உங்களுக்கு இந்த ஞானத்தைக் கற்பிக்கிறார், நீங்கள் அதன் மூலம் தேவர்கள் ஆகுகிறீர்கள். பின்னர் இந்த ஞானம் மறைந்து விடுகிறது. இலக்ஷ்மிக்கும் நாராயணனுக்கும் படைப்பவரினதோ அல்லது படைப்பினதோ ஞானம் இல்லை. அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய் தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. இப்பழைய உலகில் வாழும்பொழுது, இரட்டை அகிம்சாவாதிகளாகி, யோக சக்தி மூலம் உங்கள் புதிய உலகை ஸ்தாபியுங்கள். உங்கள் வாழ்வை ஒரு வைரம் போன்று பெறுமதி மிக்கது ஆக்குங்கள்.2. தந்தை உங்களுக்குக் கூறுகின்ற விடயங்களைக் கடைந்து, பின்னர் அவற்றை ஏனையோருக்கும் கூறுங்கள். இக்கல்வி ஒரு முடிவுக்கு வந்து நீங்கள் கிருஷ்ண தாமத்திற்கு செல்வீர்கள் என்று அறிந்து, சதா போதையைப் பேணுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் தூய்மையின்மையின் பெயர் மற்றும் சுவடு சகலதையும் முடிப்பதன் மூலம் ஒரு புனித அன்னமாகி, மேன்மைமிகு புனிதர் என்ற பட்டத்தைக் கோருவீர்களாக.எப்படி ஓர் அன்னம் ஒருபோதும் கற்களைப் பொறுக்காமல், இரத்தினங்களைத் தேர்ந்து எடுக்கிறதோ, அவ்வாறே, புனித அன்னங்கள் ஒருபோதும் எந்தவொரு குறைபாடுகளையும், அதாவது எந்தவொரு கல்லையும் கிரகிப்பதில்லை. அவர்கள் சக்திவாய்ந்தவற்றில் இருந்து வீணானவற்றை வேறாக்கி, வீணானவற்றை அப்பால் விலக்கி, சக்திவாய்ந்ததை உள்ளெடுக்கிறார்கள். இத்தகைய புனித அன்னங்கள் சுத்தமான, தூய ஆத்மாக்கள். அவர்களின் உணவும் அவர்களின் உறவுமுறைகளும் தூய்மையானவை. அசுத்தம் மற்றும் தூய்மை இன்மையின் சகல பெயர்கள் மற்றும் சுவடுகள் முடிவடையும்போது, உங்களால் எதிர்காலத்தில் மேன்மைமிகு புனிதர் என்ற பட்டத்தைப் பெற முடியும். ஆகவே, ஒருபோதும் தவறுதலாகவேனும் எவருடைய குறைபாடுகளையும் கிரகிக்காதீர்கள்.
சுலோகம்:
முற்றும் துறந்த துறவி என்றால், பழைய சுபாவம் மற்றும் பழைய சம்ஸ்காரங்களின் சந்ததிகள் எல்லாவற்றையும் துறந்தவர் ஆவார்.அவ்யக்த சமிக்கை: ஓர் இலகு யோகியாக இருப்பதற்கு, இறை அன்பை அனுபவிப்பவராக இருங்கள்.
எந்தவொரு பணியைச் செய்யும்போதும், தந்தையை நினைத்தவண்ணம் அன்பிலே அமிழ்ந்திருங்கள். எந்தவொரு சூழ்நிலையினதும் விரிவாக்கத்திற்குள் செல்லாதீர்கள். எந்தவொரு விரிவாக்கத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து, அதை ஒரு புள்ளியில் அமிழ்த்தி விடுங்கள். ஒரு புள்ளி ஆகுங்கள். ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள். சகல விரிவாக்கங்களும் மற்றும் வலை முழுவதும் ஒரு விநாடியில் அமிழ்ந்துவிடும். அப்போது உங்களின் நேரமும் சேமிக்கப்படும். முயற்சி செய்வதில் இருந்தும் நீங்கள் விடுபடுவீர்கள். நீங்கள் ஒரு புள்ளி ஆகுவீர்கள். ஒரேயொரு புள்ளியானவரின் அன்பிலே திளைத்திருப்பீர்கள்.