09.09.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, யோக சக்தியினால் மாத்திரமே உங்கள் பாவங்களை நீங்கள் அழித்து, பாவங்களை வென்றவர்களாக முடியும்.
கேள்வி:
முயற்சி செய்கின்ற குழந்தைகளின் எந்த எண்ணம் அவர்களின் முயற்சியை நிறுத்துகின்றது?பதில்:
ஒரு முயற்சியாளர் இன்னமும் பெருமளவு காலம் எஞ்சியுள்ளது என்றும், பின்னர் தன்னால் முன்னேறிப் பாய்ந்து செல்ல முடியும் என்றும் எண்ணும் பொழுது, தந்தை விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே, மரணம் நிச்சயிக்கப்படவில்லை. நீங்கள் அனைத்தையும் நாளை என்று தள்ளிப் போடும்பொழுது, மரணம் இடையில் வந்து விட்டால், நீங்கள் எதனைச் சம்பாதித்திருப்பீர்கள்? ஆகவே, ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால், இயன்றளவு உங்களுக்கும், பிறருக்கும் தொடர்ந்தும் நன்மை செய்யுங்கள். நேரத்தைப் பற்றிச் சிந்திப்பதால், முயற்சி செய்வதை நிறுத்தாதீர்கள்.பாடல்:
ஓம் நமசிவாய.ஓம் சாந்தி.
அசரீரியானவரால் சரீரதாரி இல்லாமல் எந்தச் செயலையும் செய்ய முடியாது என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு இல்லாவிடின், அவரால் தனது பாகத்தை நடிக்க முடியாது. ஆன்மீகத் தந்தை வந்து, ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு பிரம்மாவினூடாக விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் யோக சக்தியினால் சதோபிரதானாகவும் உலக அதிபதிகளாவும் ஆக வேண்டும். ஒவ்வொரு கல்பத்திலும் தந்தை வந்து, பிரம்மாவினூடாக உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார் என்பது குழந்தைகளான உங்களின் புத்திகளில் உள்ளது. அவர் ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தின் ஸ்தாபனையை மேற்கொள்கின்றார், அதாவது, மனிதர்களைத் தேவர்களாக மாற்றுகின்றார். தேவர்களாக இருந்த மனிதர்கள் தூய்மையாக இருந்தார்கள், அவர்கள் 84 பிறவிகளின் பின்னர் மாற்றம் அடைந்து, இப்பொழுது தூய்மை அற்றவர்கள் ஆகியுள்ளார்கள். பாரதத்தைச் சேர்ந்தவர்கள் தெய்வீகப் புத்திகளைக் கொண்டிருந்த பொழுது, தூய்மை, அமைதி, சந்தோஷம் - அனைத்தையும் கொண்டிருந்தார்கள். இது 5000 வருடங்களுக்கான விடயம். தந்தை திகதி, நேரம் உட்பட, முழுக் கணக்கையும் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவரை விடவும் உயர்வானவர் எவருமில்லை. தந்தையே இங்கே அமர்ந்திருந்து, உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களை, அதாவது, கல்ப விருட்சத்தின் இரகசியங்களை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். பாரதத்தின் தேவதர்மம் இப்பொழுது மறைந்துள்ளது. விக்கிரகங்கள் நிச்சயமாக உள்ளன. சத்தியயுகத்தில் இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் இருந்தது என்பதைப் பாரத மக்கள் அறிவார்கள். அவர்கள் சமயநூல்களில் கிருஷ்ணரைத் துவாபரயுகத்தில் காட்டியுள்ள தவறைச் செய்து விட்டார்கள். இதனை மறந்து விட்டவர்களுக்குத் தந்தையே வந்து, வீட்டிற்கான பாதையைக் காட்டுகின்றார். அவர் முக்திக்கும், ஜீவன்முக்திக்குமான வழிகாட்டி என்று அழைக்கப்படுகின்றார். ஒரேயொருவரே அனைவருக்கும் முக்தியையும், ஜீவன்முக்தியையும் அருள்பவர். பாரதம் ஜீவன்முக்தியில் இருக்கும் பொழுது, ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் முக்திதாமத்தில் இருக்கின்றார்கள். இதனாலேயே, அவர் முக்தியையும், ஜீவன்முக்தியையும் அருள்பவர் என்று அழைக்கப்படுகின்றார். படைப்பவர் ஒருவரே, உலகமும் ஒன்றே. ஒரேயொரு உலக வரலாறும், புவியியலுமே உள்ளன, அவையே தொடர்ந்தும் மீண்டும் மீண்டும் இடம்பெறுகின்றன. சத்திய, திரேதா யுகங்கள் போன்றனவும், அதன்பின்னர் சங்கமயுகமும் உள்ளன. கலியுகம் தூய்மையற்றது, ஆனால் சத்தியயுகம் தூய்மையானது. சத்தியயுகம் வருவதற்கு முன்னர், முதலில், நிச்சயமாகக் கலியுகம் அழிக்கப்பட வேண்டும். விநாசத்திற்கு முன்னர் ஸ்தாபனை இடம்பெற வேண்டும். சத்தியயுகத்தில் ஸ்தாபனை இடம்பெற மாட்டாது. தூய்மையற்ற உலகம் தூய்மையாக்கப்பட வேண்டிய பொழுதே, கடவுள் வருகின்றார். தந்தை உங்களுக்குப் பயன்படுத்துவதற்கு, இலகுவானதொரு வழியைக் காட்டுகின்றார்: உங்கள் சரீரம், சரீர உறவினர்களுடனான உறவுமுறைகளைத் துண்டித்து, ஆத்ம உணர்வு உடையவர்களாகி, தந்தையை நினைவு செய்யுங்கள். தந்தையே பக்தர்களுக்கான பலனைக் கொடுக்கின்றார். அவர் பக்தர்களைத் தூய்மை ஆக்குவதற்கே, அவர்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். யோகமே அனைவரையும் தூய்மை ஆக்குகின்றது. ஞானக்கடல் வந்து, இவரின் வாயினூடாக இந்த ஞானத்தைப் பேசுகின்றார். அவர் தூய்மை அற்றவர்களைத் தூய்மையாக்குகின்றார். இந்நேரத்தில் ஆத்மாக்கள் அனைவரும் தூய்மை அற்றவர்களாகி உள்ளதால், தந்தையை அழைக்கின்றார்கள். ஏனெனில் தந்தை அன்றி, வேறு எவராலும் உங்களை தூய்மையாக்க முடியாது. கங்கையே தூய்மை ஆக்குபவராக இருந்தால், நீங்கள் ஏன் பாடுகின்றீர்கள்: சீதையின் இராமரே தூய்மையாக்குபவர். பரமாத்மாவான பரமதந்தை புதிய உலகின் ஸ்தாபனையையும், பழைய உலகின் விநாசத்தையும் மேற்கொள்வதற்கு, நிச்சயமாக மீண்டும் ஒருமுறை வருவார் எனப் புத்தியும் கூறுகின்றது. கல்ப விருட்சத்திற்கு ஒரு கால எல்லை உள்ளது. எதுவுமே முற்றிலும் உக்கிய நிலையை அடையும் பொழுது, அது தமோபிரதான் என்று அழைக்கப்படுகின்றது. இதனைப் புதிய உலகம் என அழைக்க முடியாது; இது கலியுக உலகமாகும். இவ்விடயங்கள் அனைத்தும் நீங்கள் பிறருக்கு விளங்கப்படுத்துவதற்காகவே உங்கள் புத்தியில் நிலைத்திருக்குமாறு செய்யப்படுகின்றது. ஒவ்வொரு வீட்டிற்கும் இந்தச் செய்தியைக் கொடுங்கள். ‘கடவுள் வந்து விட்டார்!’ என்று கூறாதீர்கள், சாதுரியமாக விளங்கப்படுத்துங்கள்: உங்களுக்கு இரு தந்தையர் உள்ளனர்: லௌகீகத் தந்தையும், ஆன்மீகத் தந்தையும். துன்ப வேளையில், நீங்கள் ஆன்மீகத் தந்தையை மாத்திரமே நினைவு செய்கின்றீர்கள். சந்தோஷ உலகில் எவரும் கடவுளை நினைவு செய்வதில்லை. இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமான சத்தியயுகத்தில் அமைதி, சந்தோஷம், தூய்மை இருந்தன் அங்கு அனைத்தும் இருந்தது. நீங்கள் தந்தையின் ஆஸ்தியைப் பெற்ற பின்னர், அவரை ஏன் அழைக்கப் போகின்றீர்கள்? அங்கே, சந்தோஷத்தைத் தவிர, வேறெதுவும் இல்லை. தந்தை உங்களுக்குத் துன்பத்தை விளைவிப்பதற்காக உலகைப் படைக்கவில்லை. இந்த நாடகம் முற்கூட்டியே நிச்சயிக்கப்பட்டது. இறுதியில் நடிப்பதற்கான பாகங்களைக் கொண்டிருப்பவர்கள், இரண்டு முதல் நான்கு பிறவிகளை எடுக்கின்றார்கள், எஞ்சிய நேரம் அவர்கள் முக்தி தாமத்தில் இருக்கின்றார்கள். எவ்வாறாயினும், எவருக்கும் நாடகத்தில் இருந்து விலகிச் செல்வது சாத்தியமல்ல. அவர்கள் ஓரிரு பிறவிகளை எடுக்கலாம், ஆனால் அது ஏனைய வேளையில் அவர்கள் முக்தியில் இருப்பதைப் போன்றுள்ளது. ஆத்மாக்கள் நடிகர்கள் ஆவார்கள். சிலருக்கு மேன்மையான பாகங்களும், சிலருக்குக் குறைந்த பாகங்களும் உள்ளன. கடவுளின் ஆழத்தை எவராலும் அடைய முடியாது என்று நினைவு கூரப்பட்டுள்ளது. கடவுள் மாத்திரமே வந்து படைப்பவரினதும், படைப்பினதும் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நான் ஒரு சாதாரண சரீரத்தில் பிரவேசிக்கின்றேன். நான் எவரது சரீரத்தில் பிரவேசிக்கின்றேனோ, அவருக்குத் தனது சொந்த பிறவிகளைப் பற்றித் தெரியாது. நானே இவரின் 84 பிறவிகளின் கதையை உங்களுக்குக் கூறுகின்றேன். இந்நாடகம் முற்கூட்டியே நிச்சயிக்கப்பட்டிருப்பதால், எப்பாகத்தையுமே மாற்ற முடியாது. இது எவரது புத்தியிலும் இருப்பதில்லை. நீங்கள் தூய்மையாகி, புரிந்துகொள்ள முயற்சிக்கும் பொழுது மாத்திரமே இது உங்கள் புத்தியில் நிலைத்திருக்க முடியும். அனைத்தையும் மிகத்தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு, நீங்கள் ஏழு நாட்களுக்கு ஒரு பத்தியில் (சூளையில்) இருக்க வேண்டும். அவர்கள் பாகவதம் போன்றவற்றை ஏழு நாட்களுக்கு வாசிக்கின்றார்கள். சிலரால் ஏழு நாட்களிலேயே அனைத்தையும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகின்றது, ஆனால் ஏனையோரோ தங்கள் புத்தியில் எதுவும் பதிவதில்லை என்று கூறுகின்றார்கள். அவர்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோரப் போவதில்லை எனில், அவர்களின் புத்தியில் இவ்விடயங்கள் எவ்வாறு இருக்கும்? அச்சா, குறைந்தபட்சம், அவர்கள் ஏதோவொரு நன்மையைப் பெறுகின்றார்கள். இவ்வாறு பிரஜைகள் தொடர்ந்தும் உருவாக்கப்படுகின்றனர். ஆனாலும், இராச்சியப் பாக்கியத்தைப் பெறுவதற்கு முயற்சி தேவை. தந்தையை நினைவு செய்வதனால் மாத்திரமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இதனை நீங்கள் செய்வதும், செய்யாததும் உங்களைப் பொறுத்தது; இருப்பினும் இது தந்தையின் வழிகாட்டலாகும். அழகான எதுவும் எப்பொழுதும் நினைவுகூரப்படுகிறது, இல்லையா? பக்தி மார்க்கத்தில் அவர்கள் கூறுகிறார்கள்: ‘ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்!’ நீங்கள் இப்பொழுது அவரைக் கண்டு கொண்டீர்கள். அவர் கூறுகிறார்: என்னை நினைவுசெய்யுங்கள், துரு அகற்றப்படும். நீங்கள் இராச்சியத்தை அவ்வளவு இலகுவாகப் பெற மாட்டீர்கள்! நினைவு செய்வதற்கு, சிறிது முயற்சி தேவைப்படுகின்றது. பாபாவைப் பெருமளவு நினைவு செய்பவர்கள் மாத்திரமே, தங்கள் கர்மாதீத ஸ்திதியை அடைவார்கள். பாபாவை முழுமையாக நினைவு செய்யாததால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படுவதில்லை. யோக சக்தியினால் மாத்திரமே உங்களால் பாவங்களை வென்றவர்களாக முடியும். கலியுகத்தின் இறுதியில் எவருமே தூய்மையாக இல்லாதபொழுது, இலக்ஷ்மியும் நாராயணனும் மாத்திரம் எவ்வாறு அவ்வளவு தூய்மை ஆகினார்கள்? இந்நேரத்தில் கீதா ஞானத்தின் அத்தியாயமே மீண்;டும் இடம்பெறுகின்றது. கடவுள் சிவன் பேசுகின்றார்: அனைவரும் தொடர்ந்தும் தவறுகள் செய்வதால், நான் வந்து எல்லோரையும் தவறுகள் செய்வதிலிருந்து விடுவிக்கிறேன். பாரதத்தின் சகல சமயநூல்களும் பக்தி மார்க்கத்திற்கு உரியவை. தந்தை கூறுகிறார்: நான் கூறியவற்றைப் பற்றி எவருக்கும் எதுவும் தெரியாது. என்னிடமிருந்து இதனைச் செவிமடுத்தவர்கள், 21 பிறவிகளுக்கான வெகுமதியைப் பெற்றுக் கொண்டார்கள். பின்னர் இந்த ஞானம் மறைந்து விட்டது. நீங்கள் சக்கரத்தைச் சுற்றி வந்த பின்னர், இப்பொழுது இந்த ஞானத்தைச் செவிமடுக்கின்றீர்கள். நீங்கள் மனிதர்களைத் தேவர்களாக மாற்றுவதற்கான மரக்கன்றை நாட்டுகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இது தேவ விருட்சத்தின் மரக்கன்றாகும். அம் மரங்களின் மரக்கன்றுகளையே மக்கள் தொடர்ந்தும் நாட்டுகின்றார்கள். தந்தை வந்து, அவற்றிற்கிடையே உள்ள வித்தியாசத்தைக் காட்டுகிறார். அவர்களது திட்டம் என்ன என்பதையும், உங்கள் திட்டம் என்ன என்பதையும் நீங்கள் காட்டுகிறீர்கள். அவர்கள் உலக சனத்தொகை அதிகரிப்பதை நிறுத்துவதற்கு, குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைக் கொண்டுள்ளார்கள். தந்தை உங்களுக்கு மிகச்சிறந்த விடயத்தைக் கூறுகிறார். எண்ணற்ற சமயங்கள் யாவும் அழிக்கப்பட்டு, தேவ குடும்பம் ஸ்தாபிக்கப்படும் என்பதே அதுவாகும். சத்திய யுகத்தில் தேவதர்மம் என்ற ஒரு குடும்பமே இருந்தது; அப்பொழுது பல குடும்பங்கள் இருக்கவில்லை. பாரதத்திலே இப்பொழுது குஜராத் குடும்பம், சீக்கியக் குடும்பம் என எத்தனை குடும்பங்கள் உள்ளன எனப் பாருங்கள். உண்மையில் பாரதத்தில் ஒரேயொரு குடும்பமே இருக்க வேண்டும். பல குடும்பங்கள் இருக்கும் பொழுது, நிச்சயமாக முரண்பாடுகள் ஏற்பட்டு, பின்னர் உள்நாட்டு யுத்தமும் இடம்பெறுகின்றது. ஒரு குடும்பத்திலுள்ள இரு சகோதரர்களால் ஒற்றுமையாக வாழ முடியாததைப் போன்றே, குடும்பங்களுக்கு இடையேயும் உள்நாட்டு யுத்தம் நடைபெறுகிறது; அவர்கள் மத்தியில் ஒரு விரிசல் ஏற்படுகிறது. அவர்கள் தங்கள் மத்தியில் தண்ணீரைக் கூட பிரித்துக் கொள்கின்றார்கள். சீக்கிய சமயத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் சமயத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்திற்கே தாங்கள் அதிகளவு சந்தோஷத்தைக் கொடுக்க வேண்டும் என உணர்கின்றார்கள். தம் இனத்தை நோக்கியே ஒருவருக்குப் பெருமளவு ஈர்ப்பு இருக்கிறது. அவர்கள் தொடர்ந்தும் அதிகளவு பிரயத்தனம் செய்கின்றார்கள். இறுதியில் அவர்கள் தொடர்ந்தும் தங்கள் மத்தியில் சண்டை போடுவார்கள். விநாசம் இடம்பெற வேண்டும். அவர்கள் தொடர்ந்தும் பல குண்டுகளை உற்பத்தி செய்கிறார்கள். அந்த உலக மகா யுத்தம் நடைபெற்ற பொழுது, அவர்கள் இரு குண்டுகளைப் போட்டார்கள். இப்பொழுது அவர்கள் அவற்றில் பலவற்றைத் தயாரித்துள்ளார்கள். இது புரிந்து கொள்வதற்கான விடயம். இது அதே மகாபாரத யுத்தம் என்பதை நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். அவர்கள் யுத்தத்தை நிறுத்தாவிடில், முழு உலகும் எரியூட்டப்படும் என்று பிரமுகர்கள் கூட கூறுகிறார்கள். நெருப்பு எரியும் என்பது உங்களுக்கும் தெரியும். தந்தையே ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தை ஸ்தாபிக்கிறார். இராஜயோகம் சத்தியயுகத்திற்கே ஆகும். தேவதர்மம் மறைந்து விட்டது, அது மீண்டும் ஸ்தாபிக்கப்படும். இது இப்பொழுது கலியுகம், அதன்பின்னர் சத்திய யுகம் இருக்க வேண்டும். கலியுகத்தின் விநாசத்திற்காகவே இப்பொழுது இந்த மகாபாரத யுத்தம் உள்ளது. இவ்விடயங்கள் யாவற்றையும் நன்றாகவே கிரகித்து, பின்னர் அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். மனிதர்கள் அசுர குலத்திற்கு உரியவர்களாக இருப்பதாலேயே, நீங்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முன்னைய கல்பத்தில் இருந்ததைப் போலவே, இப்பொழுதும் நிச்சயமாகத் தடைகள் இருக்கும். இந்த நாடகம் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டது, நாங்கள் அதற்குக் கட்டுப்பட்டுள்ளோம். நீங்கள் நினைவு யாத்திரையை ஒருபொழுதும் மறக்கக்கூடாது. பாடல் ஒன்று உள்ளது: “இரவு நேரப் பயணியே, களைப்படையாதீர்.” எவராலுமே அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியாது. இரவு முடிவடைந்து, பகல் வரும். இதில் அரைக்கல்பம் முடிந்து விட்டது, இப்பொழுது சந்தோஷம் ஆரம்பமாகும். தந்தையே உங்களுக்கு “மன்மனாபவ” என்பதன் அர்த்தத்தை விளங்கப்படுத்துகிறார். கீதையில் ஸ்ரீ கிருஷ்ணரின் பெயர் புகுத்தப்பட்டதால், அதற்கு அதேயளவு சக்தியில்லை. ஸ்ரீகிருஷ்ணரைச் சர்வசக்திவான் என ஒருபொழுதுமே அழைக்க முடியாது; அவரே முழு 84 பிறவிகளையும் எடுக்கிறார். இதனாலேயே கீதைக்கு அதேயளவு சக்தி இல்லை. நாங்கள் இப்பொழுது சகல மனிதர்களுக்கும் நன்மை செய்கிறோம். உபகாரிகள் ஆகுபவர்கள், ஓர் ஆஸ்தியைப் பெற்றுக் கொள்வார்கள். நினைவு யாத்திரை இன்றி, நன்மை பெற முடியாது. இந்த நேரத்திலே அவர்கள் அனைவருக்கும் அன்பற்ற புத்தியே உள்ளது: அவர்கள் கடவுளைச் சர்வவியாபி என்று கூறுகிறார்கள். அவரே எல்லையற்ற தந்தை என நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். பாரத மக்கள் தங்கள் எல்லையற்ற ஆஸ்தியை எல்லையற்ற தந்தையிடம் இருந்து பெறுகிறார்கள். பாரத மக்களாகிய நீங்களே 84 பிறவிகளை எடுத்துள்ளீர்கள். நீங்கள் இந்த ஞானத்தைத் தொடர்ந்தும் செவிமடுக்கின்றீர்கள், ஆனால் அதை இப்பொழுது நடைமுறையில் பார்க்கிறீர்கள். நாளுக்கு நாள், பல புதியவர்கள் உங்களிடம் வருவார்கள். பிரமுகர்களும் இப்பொழுது வருவார்களாயின், உங்கள் செய்திகள் மிகவும் விரைவாகப் பரவுவதற்கு அதிகக் காலம் எடுக்காது, அதன்பின்னர் எங்கும் குழப்பங்கள் ஏற்படும். இதனாலேயே அனைத்தும் தொடர்ந்தும் படிப்படியாக இடம்பெறுகின்றது. இந்த ஞானம் மறைமுகமானது. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை எவராலும் கூற முடியாது. பக்தியில் துன்பமும், இந்த ஞானத்தில் சந்தோஷமும் இருக்கின்றன. நீங்கள் எவ்வாறு இராவணனுடன் யுத்தம் செய்கிறீர்கள் என்பது உங்களைத் தவிர வேறு எவருக்குமே தெரியாது. கடவுள் பேசுகிறார்: நீங்கள் தமோபிரதானில் இருந்து சதோபிரதானாக வேண்டுமாயின், என்னை நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். தூய்மை ஆகுங்கள், நான் உங்களை என்னுடன் திரும்பவும் அழைத்துச் செல்வேன். அனைவரும் முக்;தியைப் பெறப் போகின்றனர். அனைவரும் இராவண இராச்சியத்தில் இருந்து விடுதலை அடைவார்கள். முன்னைய கல்பத்தில் செய்ததைப் போன்றே, பரமாத்மா பரமதந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால், பிரம்மாகுமாரிகளான, சிவசக்திகள் மேன்மையான உலகை ஸ்தாபிப்பார்கள் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். 5000 வருடங்களின் முன்னரே மேன்மையான உலகம் இருந்தது. இதனை உங்கள் புத்தியில் பதிய வையுங்கள். பிரதான கருத்துக்களை உங்கள் புத்தி கிரகித்தால், உங்களால் நினைவு யாத்திரையில் நிலைத்திருக்க முடியும். உங்களிற் சிலர் இன்னமும் நேரம் இருப்பதால், இறுதியில் நீங்கள் முயற்சி செய்வீர்கள் என்று நினைக்கிறீர்கள். எவ்வாறாயினும் மரணத்திற்கு எவ்விதக் கட்டுப்பாடும் இல்லை. நாளையே யாராவது இறந்தால் என்ன நடக்கும்? ஆகவே நீங்கள் இறுதியில் பாய்ந்து செல்வீர்கள் என நினைக்கக்கூடாது. அந்த எண்ணமானது உங்களை மேலும் அதிகமாக வீழ்த்தி விடும். இயலுமானவரை தொடர்ந்தும் அதிக முயற்சி செய்யுங்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கு நன்மை செய்ய வேண்டும். தந்தையை நீங்கள் எவ்வளவு நினைவு செய்கிறீர்கள் என்றும், தந்தையின் சேவையை எவ்வளவு செய்கின்றீர்கள் என்றும் உங்களையே நீங்கள் சோதித்துப் பாருங்கள். நீங்கள் கடவுளின் ஆன்மீக உதவியாளர்கள்; நீங்கள் ஆத்மாக்களை மீட்கிறீர்கள். தூய்மையற்ற ஆத்மாக்களால் எவ்வாறு தூய்மையாக முடியும் என்பதை நீங்கள் மக்களுக்குக் காட்டுகிறீர்கள். ஸ்ரீகிருஷ்ணரை நினைவு செய்வதால், உங்கள் பாவங்கள் அழிக்கப்பட மாட்டாது. அவர் ஓர் இளவரசராக இருந்து, தனது வெகுமதியை அனுபவம் செய்தார். அவரது புகழுக்கான அவசியமே இல்லை. நீங்கள் எவ்வாறு தேவர்களைப் புகழ்வீர்கள்? ஆம், அனைவரும் பிறந்ததினங்களைக் கொண்டாடுகிறார்கள்; இது ஒரு பொதுவான விடயம். எவ்வாறாயினும் அவர்கள் வேறு என்ன செய்தார்கள்? எவ்வாறாயினும் அவர்கள் தொடர்ந்தும் ஏணியில் இறங்கினார்கள். நல்ல, தீய மனிதர்களும் இருக்கிறார்கள்; ஒவ்வொருவருக்கும் தத்தமக்கென ஒரு பாகம் உள்ளது. இது ஓர் எல்லையற்ற விடயம். பிரதான கிளைகளும், சிறு கிளைகளையும் எண்ண முடியும், ஆனால் இலைகளோ எண்ணற்றவை. எவ்வாறு உங்களால் ஒவ்வொருவரையும் அமர்ந்திருந்து எண்ண முடியும்? தந்தை தொடர்ந்தும் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே, முயற்சி செய்யுங்கள்! அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுப்பதுடன், உங்கள் புத்தியின் யோகத்தையும் தந்தையுடன் இணைத்துக் கொள்ளுங்கள். தந்தை கூறுகிறார்: அனைவரையும் தூய்மை ஆகுமாறு கூறுங்கள், இதனால் அவர்களால் முக்தி தாமத்திற்குச் செல்ல முடியும். மகாபாரத யுத்தத்தின் மூலம் என்ன நடக்கும் என்பது உலகில் உள்ளவர்களுக்குத் தெரியாது. ஒரு புதிய உலகம் தேவைப்படுகின்றது என்பதாலேயே இந்த யாகம் உருவாக்கப்பட்டுள்ளது. எங்கள் யாகம் முடிவடையப் போகின்றது, ஆகவே அனைத்தும் அதில் அர்ப்பணிக்கப்படும். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. கடவுளின் உண்மையான உதவியாளராகி, ஆத்மாக்கள் அனைவரையும் மீட்கும் சேவையைச் செய்யுங்கள். அனைவருக்கும் நன்மை செய்யுங்கள்; அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள்.2. அனைவரிலும் அதி இனிமையானவரைப் (தந்தையை) பெருமளவு அன்புடன் நினைவு செய்யுங்கள். முற்கூட்டியே நிச்சயிக்கப்பட்ட நாடகத்தையிட்டு அசைக்க முடியாதவராக இருங்கள். தடைகளைக் கண்டு பயப்படாதீர்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் சகல பந்தனங்களில் இருந்தும் விடுபட்டு, சதா ‘மன்மனாபவ’ ஆகுவதன் மூலம் இனிமையான மனதின் ஸ்திதியை அனுபவம் செய்வதுடன் மற்றவர்களுக்கும் அந்த அனுபவத்தைக் கொடுப்பீர்களாக.தமது கலியுகச் சங்கிலிகளினதும் சூட்சும இழைகளினதும் பந்தனங்களை உடைத்து, பந்தனத்தில் இருந்து விடுபட்ட ஸ்திதியைக் கொண்டிருக்கும் குழந்தைகள், கலியுகத்தின் பௌதீக விடயங்களின் இனிமையில் இருந்தும் தமது மனங்களின் பற்றுகளில் இருந்தும் விடுபட்டு இருப்பார்கள். சரீர உணர்வோ அல்லது சரீரங்களின் பழைய உலகத்தின் எந்த விடயமுமோ அவர்களைச் சிறிதளவேனும் கவர முடியாது. பௌதீகப் புலன்களின் இனிமையின் கவர்ச்சி எதுவும் உங்களிடம் இல்லாதபோது, அதாவது, தற்காலிகமான இனிமையின் கவர்ச்சி எதுவும் இல்லாதபோது, நீங்கள் அலௌகீக அதீந்திரிய சுகத்தையும் மனதின் இனிமையையும் அனுபவம் செய்வீர்கள். இதற்கு, நீங்கள் சதா மன்மனாபவ என்ற ஸ்திதியைக் கொண்டிருக்க வேண்டும்.
சுலோகம்:
நீங்கள் அனைவரிடம் இருந்தும் ஆசீர்வாதங்களையும் அத்துடன் சந்தோஷத்தையும் அனுபவம் செய்யும்போதே உண்மையான சேவை இடம்பெறும்.அவ்யக்த சமிக்ஞை: இப்போது உங்களின் அருள்கின்ற ரூபத்தை வெளிப்படுத்துங்கள்.
உலக மக்கள் தானம் செய்வதை ஒரு புண்ணியச் செயலாகக் கருதுகிறார்கள். அருள்பவரின் குழந்தைகளான நீங்கள், சதா தானம் செய்கின்ற புண்ணியாத்மாக்கள் ஆவீர்கள். எந்தவோர் ஆத்மாவிடம் இருந்தும் தற்காலிகமான பேற்றினைப் பெறுகின்ற எந்தவொரு ஆசையும் உங்களிடம் இருக்க முடியாது: ‘இந்த ஆத்மா எதையாவது கொடுத்தால், நானும் கொடுப்பேன். இவர் எதையாவது செய்தால், நானும் எதையாவது செய்வேன்’. இத்தகைய எல்லைக்கு உட்பட்ட உணர்வுகளைக் கொண்டிராதீர்கள். அருள்பவரின் குழந்தைகளாக, நீங்கள் ஆத்மாக்கள் அனைவருக்கும் அன்பு, ஒத்துழைப்பு, சக்தியை வழங்கும் புண்ணியாத்மாக்கள் ஆவீர்கள்.