09.11.25    Avyakt Bapdada     Tamil Lanka Murli    30.11.2007     Om Shanti     Madhuban


சத்தியம் மற்றும் தூய்மையின் சக்திகளை உங்கள் ரூபத்திற்குள் கொண்டுவருகையில் ஒரு குழந்தையாகவும், அதிபதியாகவும் இருப்பதில் ஒரு சமநிலையைப் பேணுங்கள்.


இன்று, சத்தியமான தந்தையும், சத்தியமான ஆசிரியரும், சற்குருவும் சத்திய சொரூபங்களாகவும், சக்தி சொரூபங்களாகவும் இருக்கின்ற, எங்குமுள்ள தனது குழந்தைகளைப் பார்க்கின்றார். சத்தியத்தின் சக்தியே அதி மேன்மையானதாக இருப்பதால், சத்தியத்தின் சக்திக்கான அடிப்படை முழுமையான தூய்மை ஆகும். உங்களுடைய எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள், உறவுமுறைகள், தொடர்புகள் அல்லது உங்களுடைய கனவுகளிலேனும் தூய்மையின்மையின் பெயரோ, சுவடோ இல்லாதிருக்கட்டும். அத்தகைய தூய்மையின் நடைமுறை ரூபத்தில் என்ன புலப்படுகிறது? அத்தகைய தூய ஆத்மாக்களின் முகத்திலும், நடத்தையிலும் தெய்வீகத்தன்மை தெளிவாகப் புலப்படுகிறது. அவர்கள் தமது கண்களில் ஆன்மீகத்தின் பிரகாசத்தையும், முகங்களில் எப்பொழுதும் மலர்ச்சியையும், தமது நடத்தையில், தமது ஒவ்வொரு அடியிலும் தந்தையைப் போன்று கர்ம யோகிகளாகவும் உள்ளனர். நீங்கள் அனைவரும் இந்நேரத்தில் சத்தியமான தந்தை மூலமாக சத்தியப் பாதையைப் பின்பற்றுகிறீர்கள் (சத்யவாதி). உலகிலுள்ள பலரும் தாங்கள் சத்தியப் பாதையைப் பின்பற்றுவதாகவும், சத்தியத்தையே பேசுவதாகவும் கூறுகின்றனர், ஆனால் முழுமையான தூய்மை மாத்திரமே உண்மையான சத்தியத்தின் சக்தி ஆகும், நீங்கள் அனைவரும் இந்நேரத்தில், இந்தச் சங்கம யுகத்தில் அவ்வாறு ஆகுகின்றீர்கள். இந்தச் சங்கம யுகத்தின் மேன்மையான பேறுகள் சத்தியத்தின் சக்தியும், தூய்மையின் சக்தியும் ஆகும். இவற்றினால் கிடைக்கும் பேறுகள் என்னவென்றால், பிராமணர்களாகிய நீங்கள் அனைவரும் சத்திய யுகத்தில் தேவர்கள் ஆகுவதும், ஆத்மா, சரீரம் இரண்டுமே தூய்மையாக இருப்பதுமாகும். உலகச் சக்கரம் முழுவதிலும் வேறெந்த ஆத்மாக்களுக்கும் ஆத்மா, சரீரம் இரண்டுமே தூய்மையாகுவதில்லை. ஆத்மாவைப் பொறுத்தவரை, அவர்கள் தூய்மையாகிறார்கள், ஆனால், அவர்களுக்கு ஒரு தூய சரீரம் கிடைப்பதில்லை. எனவே, இந்நேரத்தில், நீங்கள் அனைவரும் அத்தகைய முழுமையான தூய்மையைக் கிரகிக்கிறீர்கள். நீங்கள் ஆன்மீக போதையுடன் கூறுகிறீர்கள் - அந்த ஆன்மீக போதையுடன் நீங்கள் என்ன கூறுகிறீPர்கள் என உங்களுக்கு நினைவிருக்கிறதா? அதை நினைவு செய்யுங்கள். தூய்மை உங்களுடைய பிறப்புரிமை என உங்கள் இதயங்களிலிருந்தும், உங்கள் அனுபவத்திலிருந்தும் நீங்கள் அனைவரும் கூறுகிறீர்கள். பிறப்புரிமையானது இலகுவாகவே அடையப்படுகிறது, ஏனெனில், தூய்மையையும், சத்தியத்தையும் அடைவதற்கு, நீங்கள் அனைவரும் அனைத்திற்கும் முதலில் உங்களுடைய உண்மையான ஆத்ம ரூபத்தை இனங்கண்டுவிட்டீர்கள். உங்களுடைய உண்மையான தந்தை, ஆசிரியர் மற்றும் சற்குருவை இனங்கண்டுவிட்டீர்கள். நீங்கள் அவரை இனங்கண்டு, அவரை அடைந்துவிட்டீர்கள். ஒருவர் தனது உண்மையான ரூபத்தையும், உண்மையான தந்தையையும் இனங்காணாத வரைக்கும் அவரால் முழுமையான தூய்மையையோ அல்லது சத்தியத்தின் சக்தியையோ அடைய முடியாது.

உங்கள் அனைவருக்கும் சத்தியம் மற்றும் தூய்மை சக்திகளின் அனுபவம் உள்ளதல்லவா? நீங்கள் அனுபவம் செய்துள்ளீர்களா? அனுபவம் செய்துள்ளீர்களா? அம்மக்கள் அதை அனுபவம் செய்வதற்காக முயற்சி செய்கிறார்கள், ஆனால் அவர்களால் தன்னுடைய மிகச்சரியான ரூபத்தையோ அல்லது உண்மையான தந்தையின் மிகச்சரியான ரூபத்தையோ அறிய முடியாதுள்ளது. எவ்வாறாயினும், இந்நேரத்தில் அனுபவத்தின் மூலமாக, நீங்கள் அனைவரும் தூய்மையை மிக இலகுவாகக் கிரகித்துள்ளீர்கள், இந்நேரத்தில் கிடைக்கும் பேறுக்கான வெகுமதி என்னவென்றால், தேவர்களின் தூய்மை இயல்பானதாகவும், அதுவே அவர்களின் சுபாவமாகவும் இருப்பதாகும். நீங்கள் மாத்திரமே அத்தகைய இயல்பான சுபாவத்தின் அனுபவத்தைப் பெறுகிறீர்கள். எனவே, நீங்கள் தூய்மை மற்றும் சத்தியத்தின் சக்திகளை உங்களுடைய இயல்பான சுபாவம் ஆக்கிவிட்டீர்களா எனச் சோதியுங்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? தூய்மை உங்களுடைய பிறப்புரிமை என நம்புபவர்கள் கைகளை உயர்த்துங்கள்! அது உங்களுடைய பிறப்புரிமையா அல்லது அதற்காக நீங்கள் முயற்சி செய்யவேண்டியுள்ளதா? நீங்கள் அதற்காக முயற்சி செய்ய வேண்டியதில்லை, அல்லவா? அது இலகுவானது, அல்லவா? பிறப்புரிமை இலகுவாகவே அடையப்படுகிறது. நீங்கள் அதற்காக முயற்சி செய்யவேண்டியதில்லை. உலகிலுள்ள மக்கள் அது அசாத்தியம் என நினைக்கிறார்கள், நீங்களோ அசாத்தியமானதை சாத்தியமானதாகவும், இலகுவானதாகவும் ஆக்கிவிட்டீர்கள்.

முதல் தடவையாக இங்கு வந்துள்ள புதிய குழந்தைகள் கைகளை உயர்த்துங்கள்! அச்சா, புதிய குழந்தைகள், இங்கு முதல் தடவையாக வந்துள்ள புதியவர்களுக்கு வாழ்த்துக்கள், ஏனெனில், பாப்தாதா கூறுகிறார்: நீங்கள் தாமதமாக வந்திருந்தாலும், மிகவும் தாமதமாக இங்கு வரவில்லை. புதிய குழந்தைகள் பாப்தாதாவிடமிருந்து பெற்றுள்ள ஆசீர்வாதம் என்னவென்றால், இறுதியாக வந்திருப்பவர்களால் துரித முயற்சி செய்து, முதல் பிரிவில் வரமுடியும், முதல் இலக்கத்தில் அல்ல, ஆனால் உங்களால் முதல் பிரிவில் வரமுடியும். எனவே, புதிய குழந்தைகள் அந்தளவு தைரியத்தைக் கொண்டிருக்கிறீர்களா? முதல் பிரிவில் வருபவர்கள் கைகளை உயர்த்துங்கள். கவனமாக இருங்கள், உங்களுடைய கைகள் தொலைக்காட்சியில் காட்டப்படுகின்றன. அச்சா. நீங்கள் தைரியத்தைக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுடைய தைரியத்திற்குப் பாராட்டுக்கள், ஏனெனில், நீங்கள் தைரியத்தைக் கொண்டிருக்கும்போது, நிச்சயமாக உங்களுக்குத் தந்தையின் உதவி கிடைக்கும், அத்துடன் முழு பிராமணக் குடும்பத்தின் நல்லாசிகளும், தூய உணர்வுகளும் உங்கள் அனைவருடன் கூடவே உள்ளது. எனவே, முதல் தடவையாக இங்கு வந்திருக்கின்ற நீங்கள் அனைவரும் இரண்டாவது தடவையாக பாப்தாதாவிடமிருந்தும், குடும்பத்திடமிருந்தும் பல்கோடி மடங்கு வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்ளுங்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள். முதல் தடவையாக இங்கு வந்திருப்பவர்களைப் பார்த்து நீங்கள் அனைவரும்கூட சந்தோஷப்படுகிறீர்கள், அல்லவா? பிரிந்திருந்த ஆத்மாக்கள் மீண்டும் ஒரு தடவை தமது குடும்பத்தில் ஒருவர் ஆகிவிட்டனர். பாப்தாதா சந்தோஷப்படுகிறார், நீங்கள் அனைவரும்கூட சந்தோஷப்படுகிறீர்கள்.

சூட்சும வதனத்தில், பாப்தாதா தாதியுடன் சேர்ந்து ஒரு பெறுபேறைப் பார்த்தார். அவர்கள் என்ன பெறுபேறைப் பார்த்தனர்? நீங்கள் அனைவரும் அதிபதிகளும், குழந்தைகளும் என்பதை நீங்கள் அனைவரும அறிந்து, ஏற்றுள்ளீர்கள், அல்லவா? நீங்கள் அதிபதிகள், அத்துடன் குழந்தைகள். நீங்கள் அனைவரும் இப்படியா? உங்கள் கைகளை உயர்த்துங்கள்! கை உயர்த்துவதற்கு முன்னர் கவனமாகக் கருத்திற் கொள்ளுங்கள், வெறுமனே உயர்த்தவேண்டாம். பாபா அதைக் கணக்கில் எடுப்பார், அல்லவா? அச்சா. கைகளைக் கீழே விடுங்கள். நீங்கள் ஒரு குழந்தையாக இருப்பதில் இலகுவாகவே நம்பிக்கையையும், போதையையும் கொண்டிருப்பதை பாப்தாதா பார்த்தார், ஏனெனில் நீங்கள் அனைவரும் பிரம்மா குமார்கள், குமாரிகள் என அழைக்கப்படுகிறீர்கள். நீங்கள் குழந்தைகள் என்பதால் பிரம்மா குமார்கள், குமாரிகள் என அழைக்கப்படுகிறீர்கள், நாள் முழுவதும் “எனது பாபா, எனது பாபா” என்ற விழிப்புணர்வை மாத்திரமே கொண்டிருக்கிறீர்கள், ஆனால் பின்னர் அவரை மறந்தும் விடுகிறீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் மீண்டும் மீண்டும் அவரை நினைவு செய்கிறீர்கள். சேவை செய்யும்போதும்கூட, “பாபா, பாபா” என்ற வார்த்தைகள் உங்கள் உதடுகளிலிருந்து இயல்பாக வெளிப்படுகின்றன. “பாபா” என்ற வார்த்தை உங்கள் உதடுகளில் இருந்து வெளிப்படாவிட்டால், இந்த ஞானம் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. நீங்கள் செய்யும் எந்தச் சேவையினதும் தாக்கம், நீங்கள் சொற்பொழிவுகளை ஆற்றினாலும், வெவ்வேறு தலைப்புக்களில் பாடநெறிகளை வழங்கினாலும், அந்த உண்மையான சேவையின் நடைமுறை வடிவமும், நடைமுறை அத்தாட்சியும் என்னவென்றால், உங்களைச் செவிமடுப்பவர்கள் தாங்களும் பாபாவிற்குச் சொந்தமானவர்கள் என்பதை அனுபவம் செய்வதாகும். அவர்களின் உதடுகளிலிருந்தும் “பாபா, பாபா” என்ற வார்த்தைகள் வெளிப்படட்டும். “ஏதோ ஒரு சக்தி உள்ளது”, “இது நல்லது” என்று அவர்கள் கூறக்கூடாது, ஆனால் “எனது பாபா” என்பதை அவர்கள் அனுபவம் செய்யவேண்டும். இதுவே சேவையின் நடைமுறைப் பலன் எனப்படுகிறது. நீங்கள் ஒரு குழந்தையாக இருப்பதில் மிகச்சிறந்த போதையையும், நம்பிக்கையையும் கொண்டிருக்கிறீர்கள். எவ்வாறாயினும், ஓர் அதிபதியாக இருப்பதில் போதையும், நம்பிக்கையும் வரிசைக்கிரமமாகவே உள்ளது. ஓர் அதிபதியாக இருப்பதன் போதை நடைமுறையில் உங்கள் நடத்தையிலும், உங்கள் முகத்திலும், குழந்தையாக இருப்பதனுடையதை விடவும் குறைவாகவே புலப்படுகிறது. சிலவேளைகளில் அது புலப்படுகிறது, ஏனைய நேரங்களில் அது குறைவாகவே புலப்படுகிறது. உண்மையில், நீங்கள் இரட்டை அதிபதிகள்: 1) நீங்கள் தந்தையின் பொக்கிஷங்களுக்கு அதிபதிகள். நீங்கள் அனைவரும் பொக்கிஷங்களின் அதிபதிகள், அல்லவா? தந்தை உங்கள் அனைவருக்கும் ஒரே பொக்கிஷங்களையே கொடுத்துள்ளார். அவர் சிலருக்கு நூறாயிரத்தையும், ஏனையோருக்கு ஆயிரத்தையும் கொடுக்கவில்லை. அவர் அனைவருக்கும் அனைத்துப் பொக்கிஷங்களையும் எல்லையற்ற முறையில் கொடுத்துள்ளார், ஏனெனில் தந்தையிடம் எல்லையற்ற பொக்கிஷங்கள் உள்ளன. அவரிடம் எதுவும் குறைவாக இல்லை. எனவே, பாப்தாதா அனைவருக்கும் அனைத்துப் பொக்கிஷங்களையும் கொடுத்துள்ளார், அவர் அனைவருக்கும் ஒரேயளவான பொக்கிஷங்களையே கொடுத்துள்ளார். 2) நீங்கள் சுயராச்சியத்தின் அதிபதிகள். இதனாலேயே, தனது ஒவ்வொரு குழந்தையும் ராஜா குழந்தை என பாப்தாதா போதையுடன் கூறுகிறார். எனவே, நீங்கள் ராஜா குழந்தைகள், அல்லவா? நீங்கள் பிரஜைகள் அல்ல, அப்படித்தானே? நீங்கள் இராஜ யோகிகளா அல்லது பிரஜா(பிரஜை) யோகிகளா? நீங்கள் இராஜ யோகிகள், அல்லவா? எனவே, நீங்கள் சுயராச்சியத்தின் அதிபதிகள். எவ்வாறாயினும், தாதியுடன் கூடவே, பாப்தாதா பெறுபேறைப் பார்த்தார்: ஓர் அதிபதியாக இருக்கின்ற போதையின் அளவு, ஒரு குழந்தையாக இருக்கின்ற போதையின் அளவைவிட குறைவாகவே உள்ளது. ஏன்? நீங்கள் ஓர் அதிபதியாக இருக்கின்ற அதிகாரத்தின் போதையை சதா கொண்டிருந்தால், அவ்வப்போது உங்களுக்கு வருகின்ற பிரச்சனைகளும், தடைகளும் வரமுடியாது. பிரச்சனைகளுக்கும், தடைகளுக்குமான குறிப்பான காரணம் உங்களுடைய மனமே என்பது கண்டறியப் பட்டுள்ளது. உங்கள் மனதிலேயே குழப்பங்கள் ஏற்படுகின்றன, இதனாலேயே பாப்தாதாவிடமிருந்தான மகா மந்திரம் ‘மன்மனாபவ’(உங்கள் மனதை என்மீது ஒருமுகப்படுத்துங்கள்.) என்பதாகும். அது ‘த்தன்மனாபவ’ (உங்கள் சரீரத்தை ஒருமுகப்படுத்துங்கள்) அல்லது ‘தன்மனாபவ’ (செல்வத்தை ஒருமுகப்படுத்துங்கள்) இல்லை, அது ‘மன்மனாபவ’ ஆகும். உங்களிடம் சுயராச்சிய அதிகாரம் இருந்தால், உங்களுடைய மனம் உங்களுடைய அதிபதியாக இருக்காது. உங்களுடைய மனம் உங்களுடைய சேவகனாக இருக்குமேயன்றி, உங்களின் ஆட்சியாளராக இருக்காது. ஓர் ராஜா என்றால் அதிகாரத்தைக் கொண்டவர். தங்கியிருப்பவர்கள் ராஜாக்கள் எனக் கூறப்படுவதில்லை. எனவே, என்ன பெறுபேறை பாபா பார்த்தார்? அதிபதியான, இராச்சியத்திற்கான உரிமையைக் கொண்டவரான நானே எனது மனதிற்கு அதிபதி.” நீங்கள் இந்த விழிப்புணர்வையும், தொடர்ச்சியான ஆத்ம உணர்வு ஸ்திதியையும் கொண்டிருப்பதில்லை. இதுவே முதல் பாடம் ஆகும். நீங்கள் பெற்ற முதலாவது பாடம் என்ன? நான் ஓர் ஆத்மா. கடவுள் பற்றிய பாடம் இரண்டாவது பாடமாகும். எவ்வாறாயினும், முதலாவது பாடம்: அதிபதியான, ராஜாவான நான் ஓர் ஆத்மா, இந்த பௌதீக அங்கங்கள் மீது அதிகாரம் கொண்டவர். நான் ஒரு சக்திசாலி ஆத்மா. சகல சக்திகளும் ஆத்மாவாகிய எனது உண்மையான குணங்களாகும். நான் எத்தகையவராக இருந்தாலும், எனது நடை மற்றும் செயற்பாட்டு முறைகளில் எவ்வாறிருந்தாலும், இவ்விழிப்புணர்வை இயல்பாகப் பேணி, அதன் அனுபவத்தை எனது முகத்தின் மூலமாக வழங்குவதற்கும், பிரச்சனைகளிலிருந்து விலகியிருப்பதற்கும் இவையனைத்திலும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை பாப்தாதா பார்த்தார். நான் ஓர் ஆத்மா என்பது மட்டுமல்ல, ஆனால் நான் என்ன வகையான ஆத்மா? இதை நீங்கள் உங்களுடைய விழிப்புணர்வில் வைத்திருந்தால், மாஸ்டர் சர்வசக்திவானாக உள்ள, அத்தகையதோர் ஆத்மாவிற்கு முன்னால் வருவதற்கு, எந்தப் பிரச்சனைக்கோ அல்லது தடைக்கோ எவ்வித சக்தியும் கிடையாது. இப்பொழுதும்கூட, பெறுபேறில் ஏதோவொரு பிரச்சனையோ அல்லது தடையோ தென்படுவதை பாபா பார்த்தார். அது உங்களுக்குத் தெரியும், ஆனால் நம்பிக்கையின் நடைமுறை வடிவமானது, உங்கள் நடத்தையிலும், முகத்திலும் ஆன்மீக போதையின் வடிவில் மேலும் வெளிப்படுத்தப்பட வேண்டும். இதற்கு, ஓர் அதிபதியாக இருக்கும் போதையை மீண்டும் மீண்டும் சோதித்துப் பாருங்கள். சோதிப்பது ஒரு விநாடிக்கான விடயமாகும். செயல்களைச் செய்யும்போது, நீங்கள் எந்தவொரு செயலையும் செய்ய ஆரம்பிப்பதற்கு முன்னர் சோதியுங்கள்: நான் ஓர் அதிபதியாக இருக்கும் அதிகாரத்தைக் கொண்ட, மற்றும் எனது கட்டுப்படுத்தும் சக்தியாலும், ஆளும் சக்தியாலும் எனது பௌதீக அங்கங்களைக் கொண்டு செயல்களைச் செய்விக்கின்ற ஆத்மாவா? அல்லது ஒரு சாதாரணமான முறையில் நான் செயல்களைச் செய்ய ஆரம்பிக்கின்றேனா? நினைவு சொரூபமாக இருந்து எந்தச் செயலையும் செய்ய ஆரம்பிப்பதற்கும், ஒரு சாதாரண ஸ்திதியில் இருந்தவாறு எந்தச் செயலையும் செய்ய ஆரம்பிப்பதற்கும் இடையில் பாரிய வேறுபாடு உள்ளது. எல்லைக்குட்பட்ட பதவிகளில் இருப்பவர்கள் தமது பணிகளை மேற்கொள்ளும்போது, அப்பணிகளைச் செய்வதற்கான தமது ஆசனங்களில் அமர்ந்த பின்னரே அப்பணிகளை ஆரம்பிக்கின்றனர். அதேபோன்று, ஓர் அதிபதியாக இருக்கும் அதிகாரத்தைக் கொண்ட உங்கள் ஆசனத்தில் அமர்ந்தவாறு ஒவ்வொரு செயலையும் செய்யுங்கள். அதிபதியாக இருக்கும் அதிகாரத்தைச் சோதிப்பதை அதிகரியுங்கள். அதன் அடையாளம், அதிபதியாக இருக்கும் அதிகாரத்தைக் கொண்டிருப்பதன் அடையாளம் என்னவென்றால், நீங்கள் டபிள் லைற்றாக இருந்து ஒவ்வொரு பணியிலும் சந்தோஷத்தை அனுபவம் செய்வதுடன், அதன் பெறுபேறாக இலகுவாக வெற்றியை அனுபவம் செய்வீர்கள். சில சந்தர்ப்பங்களில், இப்பொழுதும்கூட, ஓர் அதிகாரியாக இருப்பதற்குப் பதிலாக, நீங்கள் தங்கியிருப்பவர் ஆகிவிடுகிறீர்கள். தங்கியிருப்பதன் அடையாளமாக என்ன புலப்படுகிறது? மீண்டும் மீண்டும் நீங்கள் கூறுகிறீர்கள், “எனது சம்ஸ்காரங்கள்”. “அது நிகழவேண்டும் என நான் விரும்பவில்லை, ஆனால் இவை எனது சம்ஸ்காரங்கள், இது எனது சுபாவம்.”

பாப்தாதா உங்களிடம் முன்னரும் கேட்டிருக்கிறார், நீங்கள் “எனது சம்ஸ்காரங்கள், எனது சுபாவம்” என்று கூறும்போது, அந்தப் பலவீனமான சம்ஸ்காரங்கள் உங்களுடைய சம்ஸ்காரங்களா, அவை உங்களுடையவையா? அவை மத்திய காலப்பகுதியில் இராவணனின் சம்ஸ்காரங்கள். அவை இராவணனின் பரிசாகும். “அது என்னுடையது” என அதையிட்டுக் கூறுவது தவறாகும். தந்தையின் சம்ஸ்காரங்களே உங்களுடைய சம்ஸ்காரங்களாகும். சிந்தியுங்கள்: நீங்கள் “எனது, எனது” என்று கூறும்போது, அந்நேரத்தில் அவை அதிகாரியாகி, நீங்கள் தங்கியிருப்பவர் ஆகிவிடுகிறீர்கள். நீங்கள் தந்தைக்குச் சமனாக விரும்பினால், “எனது சம்ஸ்காரங்கள்” என உங்களால் கூறமுடியாது. “தந்தையின் சம்ஸ்காரங்களே எனது சம்ஸ்காரங்கள்.” தந்தையின் சம்ஸ்காரங்கள் எவை? ஓர் உலக உபகாரி, நல்லாசிகளையும், தூய உணர்வுகளையும் கொண்டவர். எனவே, அந்நேரத்தில், தந்தையின் சம்ஸ்காரங்களை உங்கள் முன்னால் கொண்டுவாருங்கள். உங்களுடைய இலக்கு தந்தைக்குச் சமனாகுவது, ஆனால் இருப்பதோ இராவணனின் தகைமைகள் ஆகும். எனவே, அது கலந்துவிடுகிறது, தந்தையினுடைய சில நல்ல சம்ஸ்காரங்களும், உங்களுடைய சில கடந்தகால சம்ஸ்காரங்களும். எனவே, இரண்டும் கலக்கும்போது, முரண்பாடுகள் தொடர்ந்துகொண்டேயிருக்கும். சம்ஸ்காரங்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன? நீங்கள் அனைவரும் அதை அறிவீர்கள், அல்லவா? உங்கள் மனதினதும், புத்தியினதும் எண்ணங்களாலும், செயற்பாடுகளாலும் சம்ஸ்காரங்கள் உருவாக்கப்படுகின்றன. முதலில் மனம் எண்ணங்களை உருவாக்குகிறது, பின்னர் புத்தி ஒத்துழைக்கிறது, பின்னர் அதன் மூலமாக நல்ல அல்லது தீய சம்ஸ்காரங்கள் உருவாக்கப்படுகின்றன.

எனவே, தாதிஜியுடன் சேர்ந்து பாப்தாதா பெறுபேறைப் பார்த்தார். அதாவது, ஒரு குழந்தையாக இருக்கும்போதுள்ள சுபாவத்தின் போதை, மற்றும் இயல்பான தன்மையுடன் ஒப்பிடும்போது, ஓர் அதிபதியாக இருப்பது எவ்வாறு குறைவாகவே இருக்கிறது என்று பார்த்தார். அதனாலேயே நீங்கள் ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பதற்கு, போராட ஆரம்பிக்கிறீர்கள் என்பதை பாப்தாதா பார்க்கிறார். நீங்கள் பிராமணர்கள், ஆனால் அவ்வப்போது, சத்திரியர்கள் ஆகிவிடுகிறீர்கள். எனவே, சத்திரியர்கள் ஆகாதீர்கள். நீங்கள் பிராமணர்களாகி, தேவர்கள் ஆகவேண்டும். சத்திரியர்கள் ஆகவுள்ள பலர் இனி வரவிருக்கின்றனர், அவர்கள் தாமதமாகவே வருவார்கள், ஆனால் நீங்கள் அதிகாரத்தைக் கொண்ட ஆத்மாக்கள். எனவே, நீங்கள் பெறுபேறைக் கேட்டீர்களா? எனவே, நீங்கள் மீண்டும் மீண்டும் “நான் யார்?” என்பதை உங்களுடைய விழிப்புணர்வில் கொண்டுவர வேண்டும். “நான் அப்படித்தான்” என்று நினைக்காதீர்கள், ஆனால் அவ்விழிப்புணர்வின் சொரூபம் ஆகுங்கள். சரிதானே?அச்சா. உங்களுக்கு பெறுபேறு கூறப்பட்டுள்ளது. இப்பொழுது பிரச்சனைகள், தடைகள், குழப்பங்கள், வீணான எண்ணங்கள், வீணான செயல்கள், வீணான உறவுமுறைகள் மற்றும் வீணான விழிப்புணர்வு பற்றிக் குறிப்பிடுவதைக்கூட நிறுத்துவதுடன், மற்றவர்களையும் அதை நிறுத்தச் செய்யுங்கள். சரிதானே? நீங்கள் இதைச் செய்வீர்களா? செய்வீர்களா? கைகளை உயர்த்தியவர்கள் திடசங்கல்பத்துடன் அதைச் செய்யுங்கள்: கைகளை உயர்த்துவதும் சாதாரணமானதாகிவிட்டது. எனவே, பாபா உங்கள் கைகளை உயர்த்துமாறு கேட்கவில்லை. உங்கள் மனதில் திடசங்கல்பம் என்ற கையை உயர்த்துங்கள். உங்கள் மனதில் உயர்த்துங்கள், உங்கள் பௌதீகக் கையை அல்ல. பாபா அதை ஏராளமாகப் பார்த்திருக்கிறார். உங்கள் அனைவருடைய மனதின் கரங்களும் திடசங்கல்பத்துடன் உயர்த்தப்படும்போதே உலகின் ஒவ்வொரு மூலையிலுமுள்ள அனைவரதும் சந்தோஷக் கரங்கள் உயர்த்தப்படுவதுடன், அவர்கள் கூறுவார்கள், “சந்தோஷத்தை அருள்பவரும், அமைதியை அருள்பவருமான எமது தந்தை வந்துவிட்டார்!”

நீங்கள் தந்தையை வெளிப்படுத்துவதற்கான பொறுப்பை எடுத்துள்ளீர்கள், அல்லவா? நீங்கள் இப்பொறுப்பை எடுத்துள்ளீர்களா? உறுதியாகவா? ஆசிரியர்கள் இப்பொறுப்பை எடுத்துள்ளீர்களா? அச்சா. பாண்டவர்கள் இப்பொறுப்பை எடுத்துள்ளீர்களா? உறுதியாகவா? அச்சா. ஒரு திகதியை நீங்கள் நிச்சயித்துவிட்டீர்களா? உங்களுடைய திகதியை நிச்சயிக்கவில்லையா? எவ்வளவு காலம் உங்களுக்குத் தேவை? ஒரு வருடம்? இரண்டு வருடங்கள்? எத்தனை வருடங்கள் உங்களுக்குத் தேவை? நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய சொந்த முயற்சியால், உங்களுடைய கொள்ளளவிற்கேற்ப, உங்களுடைய இயல்பான முறையாகிய நடத்தல் அல்லது பறத்தலுக்கேற்ப, முழுமையடைவதற்கு உங்களுக்காக ஒரு திகதியை நிச்சயித்துக்கொள்ள வேண்டும்;;; என பாப்தாதா முன்னரே உங்களுக்குக் கூறியுள்ளார். பாப்தாதா கூறுவார்: நீங்கள் அதை இப்பொழுதே செய்யவேண்டும், ஆனால் உங்களுடைய கொள்ளளவிற்கும், உங்களுடைய முயற்சிக்கும் ஏற்ப, முழுமையடைவதற்காக உங்களுக்கான ஒரு திகதியை நிச்சயித்துக் கொள்ளுங்கள். பின்னர், அவ்வப்போது, உங்கள் மனதின் ஸ்திதியிலும், பேசும் ஸ்திதியிலும், உறவுமுறைகள் மற்றும் தொடர்புகளின் ஸ்திதியிலும் முன்னேற்றம் இடம்பெறுகிறதா எனச் சோதியுங்கள். ஏனெனில், நீங்கள் ஒரு திகதியை நிச்சயிக்கும்போது, உங்களுடைய கவனம் இயல்பாகவே அதை நோக்கி ஈர்க்கப்படும்.

பாபா அனைத்து இடங்களிலிருந்தும், அனைவரிடமிருந்தும் செய்திகளைப் பெற்றுள்ளார். பாபா ஈமெயில்களையும் பெற்றுள்ளார். உங்களுடைய ஈமெயில் பௌதீகமாக பாப்தாதாவை அடைவதற்கு முன்பாகவே அவர் உங்களுடைய ஈமெயிலைப் பெற்றுவிடுகிறார். உங்கள் இதயத்தினுடைய எண்ணங்களின் ஈமெயில் மிக வேகமானது, அதுவே இங்கே முதலாவதாக வந்தடைகிறது. தமது அன்பையும், நினைவுகளையும், தமது ஸ்திதி மற்றும் சேவை பற்றிய செய்திகளையும் அனுப்பியுள்ளவர்கள் - பாப்தாதா அவை அனைத்தையும் ஏற்றுக்கொண்டார். நீங்கள் அனைவரும் மிகுந்த ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் அன்பையும், நினைவுகளையும் அனுப்பியுள்ளீர்கள். எனவே, பதிலாக, வெளிநாட்டவர்களாயினும் சரி, இந்நாட்டவர்களாயினும் சரி, பாப்தாதா உங்கள் அனைவருக்கும் அன்பையும், நினைவுகளையும் கொடுப்பதுடன், அன்பினதும், சக்தியினதும் சகாஷையும் இதயபூர்வமான ஆசீர்வாதங்களுடன் சேர்த்துக் கொடுக்கின்றார். அச்சா.

நீங்கள் அனைத்தையும் கேட்டீர்கள். அனைத்தையும் கேட்பது உங்களுக்கு இலகுவாக உள்ளது. அதேபோன்று, எதையும் கேட்காதவாறு அப்பால், இனிய மௌன ஸ்திதிக்குள் செல்லுங்கள். நீங்கள் விரும்பியபோது, விரும்பியளவு நேரத்திற்கு ஓர் அதிபதியாக இருங்கள். குறிப்பாக, முதலில் உங்களுடைய மனதிற்கு அதிபதியாகுங்கள். இதனாலேயே, மனதை வெல்பவர்கள் உலகை வெல்வார்கள் எனக் கூறப்படுகிறது. இப்பொழுது நீங்கள் கேட்டும், பார்த்தும் இருப்பதால், ஆத்மாக்களாகிய உங்களால் ராஜாக்கள் ஆகி உங்களுடைய மனம், புத்தி, சம்ஸ்காரங்களைக் கட்டுப்படுத்த முடியுமா? உங்களுடைய மனம், புத்தி, சம்ஸ்காரங்களின் அதிபதியாகி, இனிய மௌனத்தில் இருக்குமாறு அவற்றிற்குக் கட்டளை இடுங்கள். எனவே, அவற்றிற்குக் கட்டளையிடுவதாலும், மூன்றின் மீதும் அதிகாரத்தைக் கொண்டிருப்பதாலும் அவற்றால் உங்களுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்திருக்க முடிவதை நீங்கள் அனுபவம் செய்கிறீர்களா? இப்பொழுது, அதிகாரியாக இருக்கும் ஸ்திதியில் உங்களை ஸ்திரப்படுத்துங்கள். (பாப்தாதா அப்பியாசம் செய்வித்தார்.) அச்சா.

சதா தமது சுயமரியாதையைப் பேணுகின்ற, எங்குமுள்ள குழந்தைகள் அனைவருக்கும், சத்தியத்தின் சக்தியின் சொரூபங்களாக இருப்பவர்களுக்கும், தூய்மை மூலம் வெற்றி சொரூபங்களாக இருப்பவர்களுக்கும், சதா ஆட்ட அசைக்க முடியாத ஸ்திதியுடன் சுயத்தை மாற்றுபவர்களாகவும், உலகை மாற்றுபவர்களாகவும் உள்ள அனுபவசாலிகளுக்கும், அதிகாரத்தைக் கொண்டிருக்கும் தமது ஸ்திதியால் சகல ஆத்மாக்களையும் தந்தையிடமிருந்து தமது உரிமைகளைக் கோரவைப்பவர்களுக்கும், எங்குமுள்ள, பாப்தாதாவின் அதிர்ஷ்டசாலி மற்றும் அழகான ஆத்மாக்கள் அனைவருக்கும், இதயத்திலிருந்து இறையன்பையும், நினைவுகளையும், ஆசீர்வாதங்களையும் ஏற்றுக்கொள்ளுங்கள். பாப்தாதாவின் இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்கு நமஸ்தே.

ஆசீர்வாதம்:
உங்களை மாற்றி, உலகிற்கு ஒர் ஆதார மூர்த்தி ஆகுவதன் மூலம் ஒரு மேன்மையான அந்தஸ்திற்கான உரிமையைக் கோருவீர்களாக.

நீங்கள் ஒரு மேன்மையான அந்தஸ்தைக் கோருவதற்கு, பாப்தாதாவின் கற்பித்தல்கள்: குழந்தைகளே, நீங்கள் ஒவ்வொருவரும் உங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். உங்களை மாற்றுவதற்குப் பதிலாக, ஒரு சூழ்நிலையை அல்லது ஏனைய ஆத்மாக்களை மாற்றுவதைப் பற்றிச் சிந்திக்கும்போதோ அல்லது எண்ணங்களைக் கொண்டிருக்கும்போதோ அல்லது நீங்கள் சிறிது சற்கதி, ஒத்துழைப்பு அல்லது ஆதாரத்தைப் பெற்றால் உங்களை நீங்கள் மாற்றிக்கொள்வீர்கள் எனச் சிந்திக்கும்போதோ, ஏதாவது ஆதாரத்தின் அடிப்படையில் உங்களை மாற்றினால், உங்களுடைய வெகுமதியும் ஏதாவது ஆதாரத்தில் தங்கியிருக்கும். இது ஏனென்றால், நீங்கள் எத்தனை ஆதாரங்களை எடுத்தாலும், உங்களுடைய சேமிப்புக் கணக்கும் அதற்கேற்ப, இயல்பாகவே அத்தனைக்கிடையில் பங்கிடப்படும். எனவே, உங்களை உலகின் ஆதார மூர்த்தியாக மாற்றவேண்டும் என்ற இலக்கை சதா கொண்டிருங்கள்.

சுலோகம்:
ஒன்றுகூடல்களில் ஊக்கம், உற்சாகம், மற்றும் மேன்மையான எண்ணங்களைக் கொண்டிருக்கும்போது, வெற்றிக்கு ஏற்கனவே உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.

அவ்யக்த சமிக்ஞை: சரீரமற்ற ஸ்திதியைப் பயிற்சி செய்வதை அதிகரியுங்கள்(அசரீரி, விதேகி).

ஒருவர் பலவீனமாக இருக்கும்போது, அவருக்கு சக்தியைக் கொடுப்பதற்காக குளுக்கோஸ் வழங்கப் படுகிறது. அதேபோன்று, நீங்கள் உங்களை ஒரு சரீரமற்ற ஆத்மாவாகக் கருதும்போது, உங்களுடைய சரீரத்திலிருந்து விடுபட்டிருக்கும்போது, இந்தப் பற்றற்ற பார்வையாளர் ஸ்திதியானது உங்களை சக்தியால் நிரப்புவதற்கு செயற்படுகிறது. நீங்கள் பற்றற்ற பார்வையாளர் ஸ்திதியிலே இருக்கும் வரைக்கும், உங்களுடைய சகபாடியான தந்தையையும் நீங்கள் நினைவு செய்வீர்கள், அதாவது நீங்கள் அவருடைய சகவாசத்தைக் கொண்டிருப்பீர்கள்.