09.11.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, இக்கல்வி மாத்திரமே உங்களைச் சாதாரண ஆணிலிருந்து நாராயணனாகவும், சாதாரணப் பெண்ணில் இருந்து இலக்ஷ்மியாகவும் ஆக்குகின்றது. ஆகவே, இக்கல்வியில் அதிகளவு கவனம் செலுத்துங்கள்.

கேள்வி:
எந்த யாத்திரையில் செல்வதாலுமோ அல்லது ஒரு காட்டுக்குச் செல்வதாலுமோ பெற முடியாத எந்த ஆஸ்தியைக் குழந்தைகளாகிய நீங்கள் தந்தையிடமிருந்து பெறுகின்றீர்கள்?

பதில்:
குழந்தைகளாகிய நீங்கள் அமைதி, சந்தோஷம், செழிப்பு என்னும் ஆஸ்தியைத் தந்தையிடம் இருந்து பெறுகிறீர்கள். நீங்கள் இதனை வேறெங்கும் பெற முடியாது. மக்கள் அமைதிக்காகக் காட்டுக்குச் செல்கிறார்கள், ஆனால் அந்த அமைதியோ, ஆத்மாவின் ஆதி தர்மம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

பாடல்:
உங்களைக் கண்டுகொண்டதும், நாங்கள் முழு உலகையும் கண்டுகொண்டோம். ஆகாயம், பூமி எங்களுக்கே உரியது.

ஓம் சாந்தி.
தந்தை இங்கே அமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார், ஏனெனில் நீங்கள் இப்பொழுது பிரபுவுக்கும், அதிபதிக்கும் உரியவர்கள் ஆவீர்கள். ஏனைய மனிதர்கள் அனைவரும் அநாதைகள் ஆவார்கள். ஒரேயொரு தந்தையே பிரபுவும் அதிபதியும் என்று அழைக்கப்படுகிறார். குழந்தைகள் வீட்டில் சண்டையிடும் பொழுது, அவர்கள் வினவப்படுகிறார்கள்: உங்களுக்கென ஒரு பிரபுவோ அல்லது அதிபதியோ இல்லையா? இப்பொழுது முழு உலகின் மனிதர்கள் அனைவரும் தொடர்ந்தும் சண்டை சச்சரவில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் ஒருவரையொருவர் கொலையும் செய்கிறார்கள். காமமே கொடிய எதிரி என்பதைத் தந்தை மாத்திரமே வந்து விளங்கப்படுத்துகிறார். இவ்விகாரத்தின் மூலம் அனைவருமே அதன் ஆரம்பத்திலிருந்து மத்தியினூடாக இறுதிவரைக்கும் துன்பத்தை அனுபவம் செய்கிறார்கள். நீங்கள் இப்பொழுது எல்லையற்ற தந்தையிடம் இருந்து உங்கள் எல்லையற்ற சந்தோஷம் என்னும் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். தாங்கள் அமைதியை விரும்புவதாக மக்கள் கூறினாலும் அமைதி என்றால் என்ன என்பதையோ அல்லது அதனை எங்கே பெற முடியும் என்பதையோ அவர்கள் அறியார்கள். காட்டுக்குச் செல்வதால் அமைதியை பெற முடியுமா? அமைதியையும், சந்தோஷத்தையும் யார் கொடுக்கிறார்கள், எப்பொழுது கொடுக்கிறார்கள்? மக்கள் எதற்காக யாத்திரைகள் செல்கிறார்கள்? இவ்விடயங்களை எவரும் அறியார். பக்தி செய்வதனால், தாங்கள் கடவுளை அடைய முடியும் என்றே அவர்கள் கேள்விப்பட்டுள்ளார்கள், ஆனால் அவர்கள் கடவுளையும் அறியார்கள். தந்தை கூறுகிறார்: நான் வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு அமைதியையும், செழிப்பையும் கொடுக்கிறேன். இந்நேரத்தில், எவரிடமும் அமைதி, சந்தோஷம் அல்லது செழிப்போ கிடையாது. அதனைக் கொடுப்பவரையும் எவருக்கும் தெரியாது. தந்தை வந்து விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் பாடுகிறீர்கள்: ஓ துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவரே. காந்திஜியும் அழைத்தார்: ஓ தூய்மையாக்குபவரே, வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள்! “சீதைக்கு உரியவராகிய இராமரே தூய்மையாக்குபவர்” என அவர்கள் பாடுகிறார்கள், ஆனால் அவர்கள் அதன் அர்த்தத்தை அறியார்கள். தாங்கள் ஏன் பக்தி செய்கிறோம் என்பதையோ அல்லது அதனைச் செய்வதனால் தாங்கள் எதனைப் பெறுகிறோம் என்பதையோ அவர்கள் முற்றிலும் அறியார்கள். பக்தியும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. துவாபரயுகத்துடன் இராவண இராச்சியம் ஆரம்பிக்கிறது. இராவணன் என்றால் என்ன என்பதையோ அல்லது எவ்வளவு காலத்துக்கு அவர்கள் தொடர்ந்தும் இராவணனின் கொடும்பாவியை எரிப்பார்கள் என்பதையோ மக்கள் அறியார்கள். இராவணன் நீண்ட காலத்துக்கு முன்னரே பிறந்திருந்தாலும், அவர்கள் அவனுடைய கொடும்பாவியைச் செய்து அதனை எரிக்கிறார்கள். ஓர் ஆத்மாவை ஒருபொழுதும் எரிக்க முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இவ்விடயங்கள் அனைத்தையும் அறிவீர்கள். 5000 வருடங்களுக்கு முன்னர், பாரதம் சுவர்க்கமாக இருந்தபொழுது, அது இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமாக இருந்தது. இலக்ஷ்மியும் நாராயணனும் இறைவியும், இறைவனும் என்று அழைக்கப்படுகிறார்கள். பின்னர், திரேதா யுகத்தில், அது இராம இராச்சியமாக இருந்தது. எவ்வாறு அவர்கள் இராச்சியத்தைப் பெற்றார்கள் என்பதையோ அல்லது பின்னர் அந்த இராச்சியம் எங்கே சென்றது என்பதையோ எவரும் அறியார். அதாவது, படைப்பின் ஆரம்பம், மத்தி அல்லது இறுதியை எவரும் அறியார். நீங்கள் இந்த ஞானத்தினூடாகச் சுவர்க்க அதிபதிகள் ஆகுகிறீர்கள். பாடசாலையில் கற்பதனால், மாணவர்கள் நீதிபதிகளாக அல்லது சட்டநிபுணர்களாக ஆகுகிறார்கள். அவர்கள் இலக்ஷ்மியாகவோ அல்லது நாராயணனாகவோ ஆகுவதில்லை. அவர்கள் எந்தக் கல்வியின் மூலம் தங்கள் அந்தஸ்தைக் கோரினார்கள் என்பதை எவரும் அறியார். கடவுள் பேசுகிறார்: நான் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறேன். ‘நான் உங்களை இவ்வாறு ஆக்குகிறேன்!’ எனக் கூறுகின்ற வேறு எவரும் இருக்க மாட்டார்கள். இந்தக் கல்வியினூடாகவே இலக்ஷ்மியினதும், நாராயணனினதும் வம்சம் உருவாக்கப்பட்டது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இவ்விடயங்களை உலகம் அறியாதுள்ளது. சத்தியயுகத்தின் கால எல்லையானது நூறாயிரக்கணக்கான வருடங்கள் எனவும் அவர்கள் கூறுகிறார்கள். ஆகவே, இலக்ஷ்மியும் நாராயணனும் எங்கே சென்றார்கள் என்பதை அவர்கள் எவ்வாறு அறிய முடியும்? பாரதத்தில் மாத்திரமே இலக்ஷ்மி நாராயணனின் பல படங்கள் உள்ளன என்பதை உங்களால் பார்க்க முடியும். அவர்களுக்குப் பல ஆலயங்கள் கட்டப்பட்டு வருகின்றன. தாங்கள் அவர்களிடம் இருந்து செல்வத்தைப் பெறுவார்கள் என மக்கள் நம்புகிறார்கள். ஒவ்வொரு தீபாவளியின் பொழுதும், அவர்கள் மகா இலக்ஷ்மியிடம் செல்வத்தை வேண்டுகிறார்கள். எவ்வாறாயினும், அவருடன் நிச்சயமாக நாராயணனும் இருப்பார். தீபாவளியின் பொழுது, மக்கள் அவரைப் பூஜிப்பதனால், சந்தோஷத்துக்கான அவர்களின் தற்காலிக விருப்பங்கள் பூர்த்தி செய்யப்படுகின்றன. ஆகவே, தாங்கள் இலக்ஷ்மியிடம் இருந்து செல்வத்தைப் பெறுகிறார்கள் என அவர்கள் நம்புகிறார்கள். உண்மையில், அது இலக்ஷ்மி, நாராயணன் இருவரின் இணைந்த ரூபத்தைக் குறிக்கிறது. இலக்ஷ்மி, மகா இலக்ஷ்மி இருவரும் வேறானவர்கள் அல்ல. ஆனால் மக்கள் அதனை அறியார்கள். பாபா மாத்திரமே இதனை உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். இந்நாட்களில், கடவுள் கூழாங்கற்களிலும் கற்களிலும் இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள். தந்தை கூறுகிறார்: அனைவருக்கும் கல்லுப் புத்தியே உள்ளது. சத்தியயுகத்தில் மாத்திரமே அவர்களுக்குத் தெய்வீகப் புத்திகள் உள்ளன. அது இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமாக இருந்தபொழுது, அவர்களிடம் வைரங்கள் பதிக்கப்பட்ட தங்க மாளிகைகள் இருந்தன. அது 5000 வருடங்களுக்குரிய ஒரு விடயம். அவர்கள் சமயநூல்களில் ஒவ்வொரு சக்கரத்தின் கால எல்லையானது நூறாயிரக்கணக்கான வருடங்கள் என எழுதியுள்ளார்கள். தந்தை கூறுகிறார்: நீங்கள் பக்தி மார்க்கத்தினூடாக ஏணியில் கீழிறங்கினீர்கள். நாடகத்துக்கேற்ப, நீங்கள் சீரழிவில் உள்ளபொழுது, நான் மாத்திரமே வந்து உலகைப் புதியதாக ஆக்குகிறேன். புதிய உலகின் அதிபதிகள் ஆகுவதற்கு இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் இராஜயோகத்தைக் கற்கிறீர்கள். இம்மகாபாரத யுத்தத்தினூடாகப் பழைய உலகம் அழிக்கப்படும் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. சத்தியயுகத்தில் தேவர்களின் இராச்சியம் இருந்தது. அது 5000 வருடங்களுக்கு முன்னர் இருந்தது. சூரிய, சந்திர வம்சத்து இராச்சியங்கள் 2500 வருடங்களுக்குத் தொடர்ந்தன. பின்னர் துவாபர யுகத்துடன் இராவண இராச்சியம் ஆரம்பித்தது. மக்கள் தொடர்ந்தும் தூய்மை அற்றவர்கள் ஆகுகிறார்கள், ஆனால், யார் தங்களைத் தூய்மை அற்றவர்கள் ஆக்குகிறார்கள் என்பதை அவர்கள் அறியார்கள். நாங்கள் தூய்மையாக இருந்தோம், ஆகவே நாங்கள் எவ்வாறு தூய்மையற்றவர்கள் ஆகினோம்? தந்தை வந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். இராவண இராச்சியம் ஆரம்பித்ததும் நீங்கள் தொடர்ந்தும் தூய்மை அற்றவர்கள் ஆகுகிறீர்கள். இராவணன் பிறப்பெடுத்து 2500 வருடங்கள் ஆகுகின்றன. சிவபாபா பிறப்பெடுத்து 5000 வருடங்கள் ஆகுகின்றன. ஒன்று இராம இராச்சியம் என்று அழைக்கப்படுகிறது, மற்றையது இராவண இராச்சியம் என அழைக்கப்படுகிறது. உண்மையில், நீங்கள் இராமர் எனக் கூறக்கூடாது. இந்நாட்களில், மக்கள் தங்களுக்கு ‘இராமச்சந்திரர்’ அல்லது ‘கிருஷ்ணச்சந்திரர்’ எனப் பெயரிடுகிறார்கள். 5000 வருடங்களுக்கு முன்னர் பாரதம் ‘தங்கச் சிட்டுக்குருவி’யாக இருந்தது. அது சத்தியயுக உலகம் என அழைக்கப்பட்டது. அது வைகுந்தமாக இருந்தது, ஆனால் அது எங்கே இருந்தது என்பதை அவர்களுக்குத் தெரியாது. ஆத்மா என்றால் என்ன, பரமாத்மா என்றால் என்ன அல்லது உலகம் என்றால் என்ன என்பதும் அவர்களுக்குத் தெரியாது. இதனாலேயே அவர்கள் ஒரு சீரழிந்த புத்தி உடையவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். ரிஷிகளும், முனிவர்களும் கூட படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியை அறிய மாட்டார்கள். இதனாலேயே அவர்கள் கூறுகிறார்கள்: நேற்றி, நேற்றி (இதுவுமல்ல, அதுவுமல்ல); அவர்கள் தந்தையையோ அல்லது ஆஸ்தியையோ அறியார்கள். அவர்கள் நீங்கள் தந்தையிடம் இருந்து பெறுகின்ற உலக இராச்சியம் என்னும் ஆஸ்தியைக் கூட அறியார்கள். நீங்கள் இப்பொழுது முழு உலகினதும் ஆரம்பம், மத்தி, இறுதியை அறிவீர்கள். ஆகவே, நீங்கள் இரட்டை ஆஸ்திகர்கள் ஆவீர்கள். எவ்வாறு அல்லது எங்கேயிருந்து தங்களால் அமைதியைப் பெற முடியும் என்பது மக்களுக்குத் தெரியாது. அவர்கள் சந்நியாசிகளிடம் சென்று அமைதியை வேண்டுகிறார்கள். இப்பொழுது, இங்கே நாங்கள் எவ்வாறு அமைதியைக் கொண்டிருக்க முடியும்? செயல்கள் செய்யப்படவே வேண்டும். அமைதி தாமத்தில் மாத்திரமே அமைதியைக் காண முடியும். ஒரு குடும்பத்தில் ஒரு நபர் அமைதியற்றவராக இருந்தால், அவர் முழுக் குடும்பத்தையும் அமைதியற்றதாக்கி விடுவார். நீங்கள் இனிய வீட்டிலேயே அமைதியைக் காண முடியும். பின்னர் எங்களைத் தந்தை இங்கு கீழே புதிய உலகிற்கு எங்கள் பாகங்களை நடிப்பதற்காக அனுப்புகிறார். தந்தை உங்களை ஆழ்நரகத்துக்கு அனுப்ப மாட்டார். நீங்கள் அமைதி தாமத்திலிருந்து சந்தோஷ தாமத்துக்குச் செல்கிறீர்கள். இது கடவுளின் கல்விக்கூடம் (பாடசாலை) என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இது ஒரு சத்சங்கம் போன்றதல்ல. இங்கு, கடவுள் தனது குழந்தைகளுடன் பேசுகிறார். அசரீரியான சிவபாபா ஒரு சரீரத்தில் பிரவேசித்து, குழந்தைகளாகிய உங்களுடன் பேசுகிறார். சரீரத்திலேயே ஆத்மா உள்ளார். ஓர் ஆத்மா பௌதீக அங்கங்களைப் பெறும்பொழுது, அவரால் பேசவும், செவிமடுக்கவும் இயலும். இப்பொழுது தந்தை இங்கே அமர்ந்திருந்து ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கல்வி புகட்டுகிறார். மக்கள் பரமாத்மாவை அழைக்கிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, ஓ சற்கதியை அருள்பவரே, விடுதலையளிப்பவரே, வழிகாட்டியே! ஆனால் எவ்வாறு அவர் எங்களை விடுதலையாக்கி, எங்கள் வழிகாட்டி ஆகுகிறார் அல்லது அவர் எங்களை எங்கே அழைத்துச் செல்கிறார் என்பது அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் தொடர்ந்தும் கதறியழுகிறார்கள். இப்பொழுது தந்தையாகிய கடவுளே, வந்து, குழந்தைகளாகிய உங்களுக்கு வழியைக் காட்டுகிறார். அவரே உங்களை அமைதி தாமத்துக்கு அழைத்துச் செல்கிறார். பின்னர் நீங்கள் நீங்களாகவே சந்தோஷ தாமத்துக்குச் செல்வீர்கள். தந்தை ஒருமுறை மாத்திரமே வந்து அனைவரினதும் வழிகாட்டி ஆகுகிறார். புதிய உலகில் தந்தை உங்களுக்கு வழிகாட்டுவதில்லை. இந்நேரத்தில், மனிதர்கள் அனைவரும் தூய்மை அற்றவர்கள் என்பதால், எவ்வாறு தாங்கள் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல முடியும் என்பது அவர்களுக்குத் தெரியாது. அவர்களால் பறக்க முடியாதுள்ளது. அவர்கள் அங்கு செல்வதற்காக அதிகளவு பக்தி செய்கிறார்கள். ஆனால் தாங்கள் தூய்மையற்றவர்கள் என்பதால், தாங்கள் அங்கு செல்ல முடியாது என்பது அவர்களுக்குத் தெரியாது. தூய்மையாக்குபவராகிய தந்தை வந்து, எங்களைத் தூய்மை ஆக்கும்பொழுது மாத்திரமே நாங்கள் அங்கு செல்ல முடியும். இப்பொழுது தந்தை உங்களுக்குத் தூய்மை ஆகுவதற்கான வழிகளைக் காண்பிக்கிறார். அனைவரும் தூய்மை அற்றவர்களாகவும், தூய்மையானவர்களாகவும் ஆகவேண்டும். நிச்சயமாக அனைவரும் சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகளினூடாகச் செல்ல வேண்டும். இப்பொழுது பல மனிதர்கள் உள்ளார்கள். சத்தியயுகத்தில் தேவர்களின் இராச்சியம் இருக்கும்பொழுது, அங்கு புதிய உலக விருட்சத்தில் 900,000 பேர் உள்ளார்கள். முதலில், ஒரு சில இலைகளே உள்ளன, பின்னர் விருட்சம் தொடர்ந்தும் வளர்கிறது. முதலில், ஒரு தர்மத்துக்கு உரியவர்கள் மாத்திரமே இருக்கிறார்கள். நீங்கள் இப்பொழுது உங்களை நரகவாசிகளாகக் கருதுவதில்லை. ஏனைய அனைவரும் நரகவாசிகள், ஆனால் அவர்கள் தங்களை அவ்வாறு கருதுவதில்லை. இந்நேரத்தில், அனைவருடைய முகமும் மனிதர்களைப் போன்று உள்ளது, ஆனால் அவர்களின் நடத்தையோ குரங்குகளைப் போன்றுள்ளது. பேரரசர்கள் கூட இலக்ஷ்மி நாராயணனின் சிலைகளின் பாதங்களில் வீழ்ந்து வணங்குகிறார்கள். எவ்வாறாயினும், அவர்கள் தூய்மையாக்குபவர்கள் அல்ல. அதாவது, அவர்கள் கருணைமிக்கவர்கள் அல்ல. வேதனைப்படும் ஒருவருக்கே கருணை காட்டப்படுகிறது. ஒரு தந்தை மாத்திரமே கருணை மிக்கவர் ஆவார். தந்தை மாத்திரமே வந்து கல்லுப்புத்தி உடையவர்களைத் தெய்வீகப் புத்தி உடையவர்களாக ஆக்குகிறார். இப்பொழுது நீங்கள் தேவர்கள் ஆகுகிறீர்கள். இது சாதாரண ஆணிலிருந்து நாராயணனாக மாறுவதற்கான கல்விக்கூடம் ஆகும். இது இராஜயோகம். கீதையின் இராஜயோகத்தைக் கற்பித்தவர் யார் என்பதை ரிஷிகளுக்கும், முனிவர்களுக்கும் தெரியாது. அவர்கள் முழுமையாகவே கீதையைப் பொய்யாக்கி விட்டார்கள். ஸ்ரீகிருஷ்ணரே இராஜயோகத்தைக் கற்பித்ததாக அவர்கள் எண்ணுகிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: கடவுள் ஸ்ரீகிருஷ்ணர் பேசுகிறார்: மன்மனாபவ! எவ்வாறாயினும், ஸ்ரீகிருஷ்ணர் கடவுள் அல்ல. அவர் சங்கமயுகத்தில் இராஜயோகத்தைக் கற்று, இராச்சியத்தை அடைகின்ற, சத்தியயுகத்து இளவரசர் ஆவார். பின்னர் மக்கள் அவரைக் கடவுளாக்கி விட்டார்கள். பலரும் கீதையைச் செவிமடுக்கிறார்கள். ஆனால் கீதையின் கடவுள் சிவனே, ஸ்ரீகிருஷ்ணர் அல்ல என்பது அவர்களில் ஒருவருக்கும் தெரியாது. அனைவரும் ஒருவரே என அவர்கள் கூறுகிறார்கள். அத்தகைய மனிதர்களுடன் நீங்கள் பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டும். 63 பிறவிகளாக அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரைக் கடவுளாகக் நம்பியுள்ளார்கள். துவாபரயுகத்தில் இருந்தே சமயநூல்கள் உருவாக்கப்பட்டுள்ளன, கீதையே முதலில் எழுதப்பட்டிருக்க வேண்டும். அச்சமயநூல்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்துக்கு உரியவை. இந்த ஞான மார்க்கத்தின் சமயநூல் ஒன்று கூட கிடையாது. கீதையே முதல் இலக்கத்துக்கு உரியது. பின்னரே வேதங்களும், உபநிடதங்களும் உருவாக்கப்பட்டன. அவை இரண்டும் கீதையின் குழந்தைகள் ஆகும். அவற்றைக் கற்கும்பொழுது, நீங்கள் தொடர்ந்தும் கீழிறங்கி வந்தீர்கள். இப்பொழுது உங்கள் 84 பிறவிகளும் முடிவுக்கு வருகின்றன, இப்பொழுது நீங்கள் முதல் இலக்கப் பிறவிக்குள் செல்ல வேண்டும். சத்தியயுகத்து இலக்ஷ்மி நாராயணன் ஆகுவதற்கே, நீங்கள் இப்பொழுது இங்கே மீண்டும் ஒருமுறை கற்கிறீர்கள். அனைவருமே இலக்ஷ்மி நாராயணன் ஆகுவார்கள் என்பதல்ல. ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்பட்டு வருகிறது, ஆனால் அதனை ஸ்தாபிப்பவர் யார்? இது எவருடைய புத்தியிலும் பிரவேசிப்பதில்லை. கலியுகத்தில் உண்பதற்குக்கூடப் போதுமானளவு உணவு இல்லாத, பல மனிதர்கள் உள்ளார்கள், ஆனால் சத்தியயுகத்திலோ இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் மாத்திரமே உள்ளது. இங்கு எத்தனை சமயங்கள் உள்ளன எனப் பாருங்கள்! மகாபாரத யுத்தம் உங்கள் முன்னிலையில் உள்ளது. அப்படியிருந்தும், மக்களின் கண்கள் திறப்பதில்லை. முன்னைய கல்பத்திலும் இம்மகாபாரத யுத்தம் நடைபெற்றது. அதன் பின்னர் என்ன நடைபெற்றது என்பது எவருக்கும் தெரியாது. பிராமணர்களாகிய நீங்கள் மாத்திரமே இவ்விடயங்கள் அனைத்தையும் அறிவீர்கள். தந்தை உங்களைப் பிரம்மாவினூடாகத் தத்தெடுத்துள்ளார். கடவுள் உங்களுக்குக் கற்பித்து, உங்களை இலக்ஷ்மி நாராயணனாக ஆக்குவதனால், நீங்கள் நன்றாகக் கற்க வேண்டும். தந்தையையும், புதிய உலகையும் நினைவு செய்யுங்கள், நீங்கள் புதிய உலகத்துக்குச் செல்வீர்கள். பின்னர், நீங்கள் நன்றாகக் கற்று, ஏனையோருக்கும் கற்பித்தால், நீங்கள் செய்யும் ஆன்மீகச் சேவைக்கேற்ப, உங்களால் அரசர்களும் அரசிகளும் ஆகமுடியும். நீங்கள் ஆன்மீக சமூக சேவையாளர்கள், ஆனால் உலகின் ஏனையோரோ பௌதீக சமூக சேவையாளர்கள் ஆவார்கள். தினமும் தந்தை ஆத்மாக்களாகிய உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கிறார். அவர் ஆத்மாக்களாகிய உங்களுக்குச் சேவை செய்கிறார். இது ஆன்மீகத் தந்தை மாத்திரமே உங்களுக்குக் கற்பிக்கின்ற, ஆத்மாக்களுக்கான சேவை என அழைக்கப்படுகிறது. இதுவே மனிதர்கள் தேவர்களாக ஆக்கப்படுகின்ற கல்விக்கூடம் ஆகும். நாங்கள் நிச்சயமாக அவ்வாறு ஆகுவோம். நீங்கள் கற்றுத் தயாராகும் பொழுது, விநாசம் ஆரம்பமாகி, நீங்கள் வீட்டுக்குத் திரும்பிச் செல்வீர்கள். கூறப்பட்டுள்ளது: இராமர் சென்றபொழுது, இராவணனும் சென்றான். மிகச்சிலர் மாத்திரமே எஞ்சியிருப்பார்கள், பரிமாற்றம் நடைபெறுகிறது. பின்னர் நீங்கள் கீழே சுவர்க்கத்துக்கு வருவீர்கள். உங்களுக்காகவே புதிய உலகம் ஸ்தாபிக்கப்படுவதனால், சுவர்க்கவாசிகள் ஆகுவதற்காக நீங்கள் கற்கிறீர்கள். இது நரகம். இப்பொழுது நீங்கள் சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் பிராமணர்கள் ஆகாதுவிட்டால், உங்களால் உங்கள் ஆஸ்தியைக் கோர இயலாதிருக்கும். சரீரதாரிகளை நினைவுசெய்யாத, ஆனால் தந்தையை மாத்திரமே நினைவு செய்கின்ற பிராமணர்கள் மாத்திரமே ஆஸ்தியைப் பெறுகிறார்கள். எவ்வாறாயினும், நீங்கள் சிறிதளவு இந்த ஞானத்தைச் செவிமடுத்திருப்பினும், பிரஜைகளில் ஒருவர் ஆகுவீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஆன்மீக சமூக சேவையாளராகி, கற்று, ஏனையோருக்கும் கற்பியுங்கள். தந்தையை நினைவு செய்வதுடன், வரப் போகின்ற புதிய உலகையும் நினைவு செய்யுங்கள்.

2. தந்தையைப் போன்று கருணைமிக்கவராகி, அனைவருடைய புத்தியையும் தெய்வீகமானதாக ஆக்குகின்ற சேவையைச் செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
அசரீரியானவர் சரீரதாரி ஆகுகிறார் என்ற மந்திரத்தின் விழிப்புணர்வுடன் சேவை செய்யும் உங்களின் பாகத்தை நடிக்கும் ஓர் ஆன்மீக சேவையாளர் ஆகுவீர்களாக.

எவ்வாறு அசரீரியான தந்தை பௌதீக ரூபத்தில் வந்து சேவை செய்யும் தனது பாகத்தை நடிக்கிறாரோ, அதேபோல், குழந்தைகளான நீங்களும் இந்த மந்திரம் என்ற ஆயுதத்தை உங்களின் விழிப்புணர்வில் வைத்திருந்து சேவை செய்யும் உங்களின் பாகங்களை நடிக்க வேண்டும். உங்களின் பௌதீக சரீரங்கள், இந்த பௌதீக உலகம் என்ற மேடையில் உள்ளன. இந்த மேடையே ஆதாரமாக உள்ளது, நடிகர்கள் அதிபதிகளாக இருக்கும் ஆதார மூர்த்திகள். இந்த விழிப்புணர்வைக் கொண்டிருக்கும்போது, பற்றற்றவராகி, உங்களின் பாகத்தை நடியுங்கள். விவேகத்தைக் கொண்டிருப்பதுடன் கூடவே, நீங்கள் சாரம் நிறைந்தவராகவும் ஆன்மீக சேவையாளராகவும் ஆகுவீர்கள்.

சுலோகம்:
ஒவ்வொரு விளையாட்டையும் ஒரு பற்றற்ற பார்வையாளராக அவதானிப்பவரே, உண்மையான சாட்சி ஆவார்.

அவ்யக்த சமிக்ஞை: தந்தை பிரம்மாவைப் போல், சம்பூரணமான, முழுமையான ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.

அன்பு மற்றும் சக்திக்கான சந்திப்பு நிகழும்போது, உங்களின் ஸ்திதியானது மிகவும் அன்பாகவும் தனித்துவமாகவும் ஆகுகின்றது. நீங்கள் விரும்பும் ஒருவரைப் போல் ஆகுவதே, உங்களின் அன்பின் அத்தாட்சியாகும். எவ்வாறாயினும், அன்பைக் கொண்டிருப்பதால் மட்டும் நீங்கள் சம்பூரணம் ஆகமாட்டீர்கள். ஆனால் உங்களிடம் அன்புடன் சக்தியும் இருக்குமாயின், நீங்கள் சம்பூரணம் ஆகுவதுடன் மற்றவர்களையும் சம்பூரணம் ஆக்குவீர்கள்.