09.12.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்களுக்கு எல்லையற்ற சொத்தைக் கொடுப்பதற்காகத் தந்தை வந்து விட்டார். அத்தகைய இனிய பாபாவை அன்புடன் நினைவு செய்யுங்கள், அப்போது நீங்கள் தூய்மை ஆகுவீர்கள்.
கேள்வி:
விநாசவேளை அண்மித்து வரும்போது, காணப்படுகின்ற அறிகுறிகள் என்ன?பதில்:
விநாசவேளை அண்மித்து வரும்போது, அனைவரும் அறிந்து கொள்வார்கள்:
1. எங்கள் பாபா வந்து விட்டார். 2. புதிய உலகம் இப்போது ஸ்தாபிக்கப்பட்டு, பழைய உலகம் அழிக்கப்பட உள்ளது. பலரும் காட்சிகளைக் காண்பார்கள். 3. சந்நியாசிகளும், அரசர்களும் இந்த ஞானத்தைப் பெறுவார்கள். 4. எல்லையற்ற தந்தை வந்து விட்டார் என்றும், அவரால் மாத்திரமே சற்கதியை அருள முடியும் என்றும் மக்கள் கேள்விப்படும் போது, பலரும் வருவார்கள். 5) பலர் இச்செய்தியைப் பத்திரிகைகள் மூலம் பெறுவார்கள். 6. குழந்தைகளாகிய நீங்கள் தொடர்ந்தும் ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுவீர்கள். ஒரேயொரு தந்தையின் நினைவில் நீங்கள் அதீந்திரிய சுகத்தில் நிலைத்திருப்பீர்கள்.பாடல்:
இந்தப் பாவ உலகிலிருந்து அப்பால் எங்களை ஓய்வும், சௌகரியமும் இருக்கின்ற உலகிற்கு அழைத்துச் செல்லுங்கள்.ஓம் சாந்தி.
இதைக் கூறுபவர் யார்? யாருக்கு அவர் இதனைக் கூறுகிறார்? ஆன்மீகக் குழந்தைகளுக்கு. பாபா மீண்டும் மீண்டும் “ஆன்மீகம்” எனக் கூறுவது ஏன்? ஏனெனில் ஆத்மாக்களாகிய நீங்கள் இப்போது வீடு திரும்ப வேண்டும். பின்னர் நீங்கள் இவ்வுலகிற்குக் கீழிறங்கி வரும்போது, சந்தோஷம் நிலவும். கடந்த கல்பத்திலும் ஆத்மாக்களாகிய நீங்கள் அமைதி, சந்தோஷம் எனும் உங்கள் ஆஸ்தியைப் பெற்றீர்கள். அந்த ஆஸ்தி இப்போது மீண்டும் கிடைக்கின்றது. இது மீண்டும் இடம்பெறும் போதே, உலகச் சக்கரமும் மீண்டும் சுழல முடிகிறது. அனைத்துமே மீண்டும் இடம்பெறுகின்றது, அல்லவா? கடந்த காலத்தில் நிகழ்ந்தவை அனைத்தும் மீண்டும் நிகழும். உண்மையில், ஒரு நாடகம் கூட மீண்டும் இடம்பெறும், ஆனால் அதில் சில மாற்றங்கள் இருக்க முடியும்; தாம் பேச வேண்டிய வார்த்தைகளை அவர்கள் மறந்து விட்டால், ஏதாவது ஒன்றை உருவாக்கி அந்த வார்த்தைகளைப் பேச முடியும். எவ்வாறாயினும், இதுவோ மாற்றம் செய்ய முடியாத, ஒரு திரைப்படம் என அழைக்கப்படுகின்றது. இந்த நாடகம் அநாதியாக ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. ஆனால் அந்த நாடகத்தை ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது எனக் கூற முடியாது. இந்த நாடகத்தைப் புரிந்து கொள்வதன் மூலம் நீங்கள் அந்த நாடகத்தையும் புரிந்து கொள்ளலாம். தற்போது நீங்கள் பார்க்கும் நாடகங்கள் அனைத்தும் பொய்யானவை என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். கலியுகத்தில் நீங்கள் காணக்கூடிய எதுவும் சத்தியயுகத்தில் இருப்பதில்லை. சத்தியயுகத்தில் நிகழ்ந்தவை அனைத்தும் மீண்டும் சத்தியயுகத்தில் மாத்திரமே நிகழும். அந்த எல்லைக்கு உட்பட்ட நாடகங்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்தில் இடம்பெறும். பக்தி மார்க்கத்தில் காணப்படுகின்ற விடயங்கள் இந்த ஞான மார்க்கத்திலோ, அல்லது சத்திய யுகத்திலோ இடம்பெற மாட்டாது. எனவே நீங்கள் இப்போது எல்லையற்ற தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். நீங்கள் உங்களுடைய லௌகீகத் தந்தையரிடம் இருந்து ஓர் ஆஸ்தியையும், பரலோகத் தந்தையிடம் இருந்து மற்றைய ஆஸ்தியையும் பெறுகின்றீர்கள் என்பதைத் தந்தை விளங்கப்படுத்தி இருக்கின்றார், ஆனால் நீங்கள் அலௌகீகத் தந்தையிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுவதில்லை. இவரும் (பிரம்மா) அந்த ஒரேயொருவருடம் இருந்தே ஓர் ஆஸ்தியைப் பெறுகின்றார். இவர் மூலமே எல்லையற்ற தந்தை, புதிய உலகம் என்ற சொத்தை உங்களுக்கு வழங்குகின்றார். இவர் மூலமே உங்களை அவர் தத்தெடுப்பதால், இவரும் ஒரு தந்தையென அழைக்கப்படுகின்றார். பக்தி மார்க்கத்தில், அவர்கள் லௌகீகத் தந்தையையும், பரலோகத் தந்தையையும் நினைவு செய்கிறார்கள். இந்த அலௌகீகத் தந்தை நினைவு செய்யப்படுவதில்லை, ஏனெனில் இவரிடமிருந்து ஆஸ்தி எதுவும் பெறப்படுவதில்லை. ‘தந்தை’ என்ற சொல் சரியானது. பிரம்மாவும் படைப்பின் ஒருவரே. படைப்பவரிடம் இருந்து படைப்பு ஓர் ஆஸ்தியைப் பெறுகிறார். சிவபாபா உங்களைப் படைத்து விட்டார். அவர் பிரம்மாவையும் படைத்தார். எல்லையற்ற தந்தையாகிய அந்த ஒரேயொரு படைப்பவரிடம் இருந்தே ஆஸ்தி கிடைக்கின்றது. பிரம்மா எல்லையற்ற ஆஸ்தியைக் கொண்டுள்ளாரா? தந்தை இங்கே அமர்ந்திருந்து, இவரும் ஓர் ஆஸ்தியைப் பெறுகிறார் என இவர் மூலமே விளங்கப்படுத்துகிறார். இவர் தனது ஆஸ்தியைக் கோரி அதை உங்களுக்குக் கொடுக்கிறார் என்பதல்ல. தந்தை கூறுகின்றார்: நீங்கள் இவரையுமே நினைவு செய்யக்கூடாது. உங்கள் எல்லையற்ற தந்தையிடம் இருந்து இந்தச் சொத்தைப் பெறுகிறீர்கள். எல்லைக்கு உட்பட்ட உங்கள் தந்தையரிடம் இருந்து நீங்கள் எல்லைக்கு உட்பட்ட ஆஸ்தியையும், பரலோகத் தந்தையிடம் இருந்து எல்லையற்ற ஆஸ்தியையும் பெறுகிறீர்கள்; இவை இரண்டும் உங்களுக்கானவை. நீங்கள் சிவபாபாவிடம் இருந்து ஓர் ஆஸ்தியைக் கோருவது உங்கள் புத்தியில் இருக்கின்றது. ஆனால் பிரம்மாவிடம் இருந்து எந்த ஆஸ்தியைக் கோருவீர்கள்? சொத்து என்பது உங்கள் புத்திக்கு வருகிறது, இல்லையா? இந்த எல்லையற்ற இராச்சியத்தை அந்த ஒரேயொருவருடம் இருந்தே நீங்கள் பெறுகிறீர்கள். அவரே அதி மகத்துவமான பாபா. இவர் கூறுகிறார்: என்னை நினைவு செய்யாதீர்கள். நீங்கள் பெற்றுக் கொள்ளக்கூடிய, எந்தச் சொத்தும் என்னிடம் இல்லை. உங்களுக்குச் சொத்தை வழங்கக்கூடிய, அந்த ஒரேயொருவரையே நினைவு செய்யுங்கள். அவர் கூறுகிறார்: என்னை மாத்திரமே சதா நினைவு செய்யுங்கள்! ஒரு பௌதீகத் தந்தையின் சொத்தையிட்டு அதிக சண்டை ஏற்படுகின்றது. இங்கு சண்டையிடுவது என்ற கேள்விக்கே இடமில்லை. நீங்கள் தந்தையை நினைவு செய்யாவிடின், பின்னர் இயல்பாகவே எல்லையற்ற ஆஸ்தியை நீங்கள் பெற்றுக் கொள்ள மாட்டீர்கள். தந்தை கூறுகின்றார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். அவர் இந்த இரதத்திற்கும் கூறுகிறார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி என்னை நினைவு செய்தால், உலக இராச்சியத்தைப் பெறுவீர்கள். இதுவே நினைவு யாத்திரை எனப்படுகின்றது. உங்கள் சரீர உறவினர்கள் அனைவரையும் துறந்து, உங்களைச் சரீரமற்ற ஆத்மாவாகக் கருதுங்கள். இதற்கு முயற்சி தேவையாகும். கற்பதற்கும் சிறிது முயற்சி தேவைப்படுகின்றது. இந்த நினைவு யாத்திரையில் நிலைத்திருப்பதனால், நீங்கள் தூய்மை அற்றவர்களிலிருந்து தூய்மையானவர்கள் ஆகுகிறீர்கள். அம் மக்கள் பௌதீக யாத்திரை செல்கின்றனர். இங்கு இது ஆத்மாக்களின் யாத்திரையாகும். இது பரந்தாமத்திற்குச் செல்வதற்கான உங்கள் யாத்திரையாகும். இந்த முயற்சியைச் செய்யாமல், எவருமே பரந்தாமத்திற்கோ, ஜீவன்முக்தி தாமத்திற்கோ செல்ல முடியாது. மிக நன்றாக நினைவு யாத்திரையில் நிலைத்திருப்பவர்களே, அங்கு செல்ல முடியும். அவர்களே உயர்ந்த அந்தஸ்தைக் கோருவார்கள். அனைவரும் திரும்பிச் செல்வார்கள் எனினும், அவர்கள் தூய்மை அற்றிருப்பதால், தொடர்ந்தும் அழைக்கின்றனர். ஆத்மாக்கள் நினைவு செய்கின்றனர். ஆத்மாக்களே உண்டு, பருகின்றார்கள். ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுங்கள்! இதுவே இந் நேரத்தில் நீங்கள் செய்யவேண்டிய ஒரேயொரு முயற்சி ஆகும். முயற்சி செய்யாமல், உங்களால் எதனையும் பெற முடியாது. அது மிக இலகுவானது. எவ்வாறாயினும், மாயையிடம் இருந்தான எதிர்ப்பு இன்னமும் இருக்கின்றது. எவருக்கேனும் நல்ல பாக்கியம் இருக்குமானால், அவர் விரைவில் இதில் ஈடுபடுகின்றார். சிலர் பின்னரே வருவார்கள். இது அவர்களுடைய புத்தியில் நன்கு படிந்ததும், அவர்கள் கூறுகின்றார்கள்: நாங்கள் இப்போது இந்த ஆன்மீக யாத்திரையில் ஈடுபடப் போகின்றோம். அவர்கள் இதிலே தீவிரமாக ஈடுபட்டால், ஓட்டப் பந்தயத்தில் மிகவும் நன்கு ஓட முடியும். தங்கள் குடும்பத்துடன் வீட்டில் வாழுகின்ற போதும், தன்னை ஓர் ஆத்மாவாகக் கருதித் தூய்மையாக்குபவரான தந்தையை நினைவு செய்தல் சிறந்ததும், சரியான விடயமும் என்பது அவர்கள் புத்தியில் புகும். தந்தையின் கட்டளைகளைப் பின்பற்றினால், நீங்கள் தூய்மையானவர்கள் ஆகலாம். நிச்சயமாக நீங்கள் அவ்வாறு ஆகுவீர்கள். இது முயற்சி செய்கின்ற ஒரு விடயமாகும். இது மிகவும் இலகுவானது. பக்தி மார்க்கத்தில், பெருமளவு சிரமம் உண்டு. இங்கு நீங்கள் பாபாவிடம் திரும்பிச் செல்ல வேண்டும் என்பது உங்கள் புத்தியில் உள்ளது. பின்னர் நீங்கள் திரும்பிச் (சத்தியயுகத்திற்கு) சென்று, விஷ்ணுவின் மணிமாலையில் கோர்க்கப்படுவீர்கள். அனைத்து மணிமாலைகளைப் பற்றியும் சற்று சிந்தித்துப் பாருங்கள்! பிரம்மாவின் மணிமாலை, விஷ்ணுவின் மணிமாலை, உருத்திரரின் மணிமாலை ஆகியன உண்டு. புதிய உலகின் முதலாமவர் இவரே. ஏனையோர் பின்னரே வருகிறார்கள். அதாவது, அவர்கள் பின்னரே கோர்க்கப்படுகிறார்கள். அவர்கள் வினவுகிறார்கள்: உங்களுடைய அதியுயர்ந்த குலம் எது? நீங்கள் பதிலளிக்கலாம்: விஷ்ணு குலம்! ஆரம்பத்தில் நீங்கள் விஷ்ணு குலத்திற்கு உரியவராக இருந்தீர்கள். பின்னர் சத்திரிய குலத்திற்கு உரியவர்கள் ஆகினீர்கள். அதிலிருந்து வம்சாவளி விருட்சங்கள் தோன்றின, இந்த ஞானத்தில் இருந்து, வம்சாவளி விருட்சங்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடியும். முதலில் உருத்திரரின் மணிமாலை உருவாக்கப்படுகின்றது. இதுவே அதிமேலான வம்சாவளி விருட்சமாகும். இதுவே உங்கள் அதிமேலான குலம் என்பதை பாபா விளங்கப்படுத்தி இருக்கின்றார். முழு உலகமும் நிச்சயமாக இந்தச் செய்தியைப் பெறும் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். சிலர் கூறுகின்றார்கள்: கடவுள் நிச்சயமாக எங்கோ வந்திருக்கிறார், ஆனால் எங்கே என்பதை எங்களால் கூறமுடியாது. இறுதியில், அனைவருக்கும் அறிந்து கொள்வார்கள். அது பத்திரிகைகளில் தொடர்ந்தும் பிரசுரிக்கப்படும். தற்போது அவர்கள் சிறிதளவையே பிரசுரிக்கிறார்கள். எல்லோரும் ஒரே பத்திரிகையை வாசிப்பதில்லை. ஆம், அவர்களால் அவற்றை நூல்நிலையங்களில் வாசித்துக் கொள்ளலாம். சிலர் இரண்டு முதல் நான்கு வரை வெவ்வேறு பத்திரிகைகளை வாசிக்கின்றனர். சிலர் எந்தப் பத்திரிகைகளையும் வாசிப்பதில்லை. பாபா வந்து விட்டார் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். விநாசகாலம் நெருங்கி வரும்போது, புதிய உலகம் ஸ்தாபிக்கப்படுகின்றது என்பதையும், பழைய உலகம் அழிக்கப்பட இருக்கின்றது என்பதையும் அவர்கள் அறிவார்கள். பலர் காட்சிகளைப் பெறுவதும் சாத்தியமே. நீங்கள் இந்த ஞானத்தைச் சந்நியாசிகளுக்கும், அரசர்களுக்கும் கொடுக்க வேண்டும். இந்தச் செய்தியைப் பலர் பெறுவார்கள். எல்லையற்ற தந்தை வந்து விட்டார் என்பதையும், அவர் சற்கதி அருள்கிறார் என்பதையும் அவர்கள் செவிமடுக்கும்போது பலர் வருவார்கள். இந்த வேளையில் உங்களுக்கு விருப்பமான எதுவும் உத்தியோக பூர்வமாகப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படுவதில்லை. இதைப் பற்றி வினவுவதற்கு யாரோ ஒருவர் தோன்றுவார். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் சத்திய யுகத்தை ஸ்தாபிக்கின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். இதுவே உங்கள் புதிய இறை பணியகம். கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவ பணியகத்தில் அங்கத்தவர்கள் ஆகுவது போன்று, நீங்களும் இறை பணியகத்தில் அங்கத்தவர்கள் ஆகுகிறீர்கள். நீங்கள் கடவுளின் அங்கத்தவர்கள். இதனாலேயே நீங்கள் அதீந்திரிய சுகத்தைப் பற்றி அறிய வேண்டுமாயின், ஆத்ம உணர்வு உடையவர்களாகிய, கோப, கோபியரை வினவ வேண்டும் என நினைவுகூரப்படுகிறது. வேறு எவரையும் அன்றி, தந்தை ஒரேயொருவரையே நினைவு செய்யுங்கள். அந்த ஒரேயொரு தந்தையே இந்த இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார். அவரே கீதையின் கடவுள். இந்தச் செய்தியும், தந்தையின் அழைப்பிதழும் அனைவருக்கும் கொடுக்கப்பட வேண்டும். ஏனைய அனைத்தும் இந்த ஞானத்தின் அலங்காரங்களே. படங்கள் யாவும் இந்த ஞானத்தின் அலங்காரங்களே, பக்தியினது அல்ல. மக்களுக்கு விளங்கப்படுத்துவதற்காகத் தந்தை அவற்றைச் செய்வித்திருக்கிறார். இந்தப் படங்கள் எல்லாம் மறைந்து விடும். இந்த ஞானம் மாத்திரமே ஆத்மாக்களில் எஞ்சி இருக்கும். தந்தையிடம் இந்த ஞானம் உண்டு, அது நாடகத்திலும் பதியப்பட்டுள்ளது. நீங்கள் பக்தி மார்க்கத்தைக் கடந்து, இந்த ஞான மார்க்கத்திற்குள் வந்து விட்டீர்கள். உங்களுக்குள் இருக்கும் பாகங்களை நடிப்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள் நாங்கள் மீண்டும் ஒருமுறை தந்தையுடன் இராஜயோகத்தைக் கற்க வேண்டும் எனப் பதியப்பட்டுள்ளது. தந்தை மாத்திரமே எங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுப்பதற்கு வர வேண்டியிருந்தது. அது ஆத்மாக்களாகிய எங்களில் பதியப்பட்டுள்ளது. நீங்கள் அங்கு செல்லும்போது, புதிய உலகின் பாகம் மீண்டும் இடம்பெறும். ஆரம்பம் முதற்கொண்டு ஆத்மாவின் முழுப் பதிவையும் நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். பின்னர் இவை அனைத்தும் முடிவுக்கு வரும். பக்தி மார்க்கத்தின் பாகமும் முடிவு பெறும். அதன்பின்னர் சத்தியயுகத்தில் நீங்கள் செய்தவற்றை மீண்டும் செய்வீர்கள். என்ன நிகழவிருக்கின்றது என்பதைத் தந்தை உங்களுக்குக் கூறுவதில்லை. நடந்து முடிந்தவை மீண்டும் நிகழும். சத்தியயுகம் புதிய உலகம் என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். அங்குள்ள அனைத்துமே நிச்சயமாக புதியதாகவும், சதோபிரதானாகவும் இருக்கும். அனைத்தும் மிகவும் மலிவானதாகவும் இருக்கும். கடந்த கல்பத்தில் எது நிகழ்ந்ததோ, அது மீண்டும் நிகழும். இலக்ஷ்மியும் நாராயணனும் எந்தளவு சந்தோஷமாக இருந்தார்கள் என உங்களால் காண முடிகிறது. அவர்களிடம் பெருமளவு வைரங்களும், இரத்தினங்களும், செல்வம் போன்றவையும் இருந்தன. உங்களிடம் செல்வம் இருக்கும்போது, உங்களுக்குச் சந்தோஷமும் இருக்கும். அதை இங்கு இருப்பவற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஆனால் அங்கோ, ஒப்பிடுவது இல்லை. இங்குள்ள அனைத்தும் அங்கே மறக்கப்பட்டு விடும். இவை தந்தை மாத்திரமே குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகின்ற புதிய விடயங்கள். முதலில் அனைத்துச் செயற்பாடுகளும் நிறுத்தத்திற்கு வருகின்ற, ஆத்ம லோகத்திற்கு ஆத்மாக்கள் செல்ல வேண்டும். கர்மக் கணக்குகள் அனைத்தும் தீர்க்கப்படுகின்றன. பதிவு முடிவுக்கு வருகிறது. இந்தப் பதிவு மிகவும் நீண்டது. அவர்கள் கூறுகிறார்கள்: அவ்வாறெனில், ஆத்மாக்களும் அந்தளவுக்கு அளவில் பெரியதாகவே இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லை. சின்னஞ்சிறிய ஆத்மாவில் 84 பிறவிகளின் பாகம் பதியப்பட்டுள்ளது. ஆத்மாக்கள் அழிவற்றவர்கள். இதனை இயற்கையின் அற்புதம் என்றே கூறமுடியும். இதைப் போல வியக்கத்தக்க விடயம் வேறெதுவும் இல்லை. பாபாவைப் பற்றி அவர் சத்திய, திரேதா யுகங்களில் ஓய்வில் இருப்பதாகக் கூறப்படுகின்றது, ஆனால் நீங்கள் சகலகலா வல்லுநரின் பாகங்களை நடிக்கிறீர்கள். உங்களுக்கே மிக நீண்ட பாகம் உள்ளது. ஆகவே தந்தை உங்களுக்கு ஒரு மேன்மையான ஆஸ்தியைக் கொடுக்கிறார். அவர் கூறுகிறார்: நீங்கள் 84 பிறவிகளை எடுக்கின்றீர்கள். எனது பாகம் வேறு எவராலும் நடிக்க முடியாதது. இது ஓர் அற்புதமான விடயம். தந்தை இங்கே அமர்ந்திருந்து, எவ்வாறு ஆத்மாக்களுக்கு விளங்கப்படுத்துகிறார் என்பதும் ஓர் அற்புதமே. ஆத்மாக்கள் ஆணும் அல்ல, பெண்ணும் அல்ல, ஓர் ஆத்மா சரீரத்தை ஏற்கும் போதே அவனோ அல்லது அவளோ ஆண் என்றும் பெண் என்றும் அழைக்கப்படுகிறார். ஆத்மாக்கள் அனைவரும் குழந்தைகள் என்பதால், அவர்கள் சகோதரர்களே. உங்கள் ஆஸ்தியைக் கோருவதற்கு, நீங்கள் நிச்சயமாகச் சகோதரர்களாக இருக்க வேண்டும். ஓர் ஆத்மா தந்தையின் ஒரு மகனே. நீங்கள் தந்தையிடம் இருந்து ஆஸ்தியைக் கோருகின்றதால், நிச்சயமாக நீங்கள் ஆண்கள் என்றே அழைக்கப்படுகின்றீர்கள். தந்தையிடம் இருந்து ஆஸ்தியைக் கோருகின்ற உரிமை ஆத்மாக்கள் அனைவருக்கும் உண்டு. அதற்கு நீங்கள் தந்தையை நினைவு செய்யவேண்டும். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். நாங்கள் அனைவரும் சகோதரர்களே. ஓர் ஆத்மா ஆத்மாவே. ஆத்மாக்கள் ஒருபொழுதும் மாற்றம் அடைவதில்லை. ஆனால் அவர்கள் சிலசமயம் ஆணின் சரீரத்தையும், சிலசமயம் பெண் சரீரத்தையும் பெறுவார்கள். இவை புரிந்து கொள்ளப்பட வேண்டிய, சுவாரஸ்யமான விடயங்கள். வேறு எவரும் இவ்விடயங்களை உங்களுக்குக் கூறமுடியாது. மற்றவர்கள் இதனைத் தந்தையிடம் இருந்து அல்லது உங்களிடம் இருந்து மாத்திரமே செவிமடுக்கலாம். தந்தை குழந்தைகளாகிய உங்களுடனேயே உரையாடுகிறார். ஆரம்ப நாட்களில், அவர் ஒவ்வொருவரையும் சந்தித்து, உரையாடுவதுண்டு. படிப்படியாக அவர் எவருடனும் உரையாட முடியாத நேரமும் வரும். “மகன் தந்தையைக் காட்டுகிறார்” என்று கூறப்படுகின்றது. குழந்தைகளாகிய நீங்கள் ஏனையோருக்குக் கற்பிக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் பலருக்கும் சேவை செய்து, அவர்களை இங்கே அழைத்து வருகிறீர்கள். நீங்கள் பலரை உங்களைப் போன்று ஆக்கி இங்கே அழைத்து வருகிறீர்கள் என்பதை பாபா புரிந்து கொள்கிறார். இவர் ஒரு பேரரசன் ஆகுவார், இவர் ஒரு சிற்றரசன் ஆகுவார். நீங்கள் ஓர் ஆன்மீகச் சேனை. நீங்கள் அனைவரையும் இராவணனின் சங்கிலியில் இருந்து விடுவித்து, உங்கள் பணியகத்திற்கு அழைத்து வருகின்றீர்கள். நீங்கள் செய்யும் சேவைக்கேற்ப நீங்கள் பெறுகின்ற பலன் இருக்கும். பெரும் பக்தி செய்தவர்கள் திறமையானவர்களாகித் தமது ஆஸ்தியைக் கோருகிறார்கள். இது ஒரு கல்வியாகும். நீங்கள் நன்றாகக் கற்காது விட்டால், நீங்கள் சித்தியடைய மாட்டீர்கள். இக்கல்வி மிகவும் இலகுவானது. இதனைப் புரிந்து கொள்வதும், விளங்கப்படுத்துவதும் இலகுவானதே. சிரமம் என்ற கேள்விக்கே இடமில்லை. எவ்வாறாயினும் ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுவதால், பலதரப்பட்டவர்களும் தேவைப்படுகின்றனர். இவ்விடயத்தில் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவதற்கு, நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். இந்த மரண உலகிலிருந்து நீங்கள் அமரத்துவ உலகிற்கு இடமாற்றம் செய்யப்பட வேண்டும். நீங்கள் எந்தளவிற்கு அதிகமாகக் கற்கின்றீர்களோ, அந்தளவிற்கு அமரத்துவ உலகில் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள். தந்தையே அனைவரிலும் அழகானவர். ஆகவே, நீங்கள் அவர் மீது அன்பு செலுத்த வேண்டும். அவரே அன்புக்கடல். நீங்கள் அனைவரும் ஒரேவிதமான அன்பைக் கொண்டிருக்க முடியாது. சிலர் அவரை நினைவு செய்கிறார்கள், சிலர் அவரை நினைவு செய்வதே இல்லை! சிலர் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவதில் போதை அடைகின்றனர். இது பெருமளவில் தூண்டுகின்ற, ஒரு விடயமாகும். இது ஒரு பல்கலைக்கழகம் என நீங்கள் எவருக்கும் கூறலாம். இது ஆன்மீகக் கல்வி. இத்தகைய படங்கள் வேறெந்தப் பாடசாலைகளிலும் காட்டப்படுவதில்லை. மக்கள் பார்த்த மாத்திரத்திலேயே புரிந்து கொள்ளக்கூடியவாறு நாளுக்கு நாள் இன்னும் பல படங்கள் தொடர்ந்தும் உருவாகும். ஏணிப்படம் மிகவும் நல்லது. எவ்வாறாயினும், தேவ குலத்திற்கு உரியவர் இல்லை என்றால், அவரால் எதையுமே புரிந்து கொள்ள முடியாது. இக்குலத்திற்கு உரியவர்களே அம்பினால் தாக்கப்படுவார்கள். எங்கள் தேவ தர்மத்தின் இலைகளாக இருப்பவர்கள் வருவார்கள். அவர்கள் பெரும் ஆர்வத்துடன் செவிமடுப்பதை நீங்கள் உணர்வீர்கள். சிலர் வெறுமனே வந்து சென்று விடுவார்கள். நாளுக்கு நாள், குழந்தைகளாகிய உங்களுக்கு பாபா புதிய விடயங்களை விளங்கப்படுத்துகின்றார். சேவை செய்வதில் நீங்கள் மிக்க ஆர்வம் கொண்டிருக்க வேண்டும். சேவை செய்வதில் மும்முரமாக இருப்பவர்கள், இதய சிம்மாசனத்தில் அமர்வதுடன், அந்தச் சிம்மாசனத்திலும் வீற்றிருப்பார்கள். நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும்போது, அனைத்துக் காட்சிகளையும் பெறுவீர்கள். நீங்கள் அந்தச் சந்தோஷத்தில் நிலைத்திருப்பீர்கள். உலகில் பல விரக்திக் கூக்குரல்கள் கேட்கும். இரத்த ஆறுகளும் ஓடும். சேவை புரியும் தைரியசாலிகள் ஒருபோதும் பட்டினியால் மரணிக்க மாட்டார்கள். எவ்வாறாயினும், இங்கு நீங்கள் எளிமையாக வாழ வேண்டும். நீங்கள் அங்கே சந்தோஷத்தைப் பெறுவீர்கள். ஒரு குமாரியை எளிமையாக வாழச் செய்கின்றனர், பின்னர் அவள் புகுந்த வீட்டிற்குச் சென்றதும் தான் விரும்பியது எல்லாவற்றையும் அவளால் அணிந்து கொள்ள முடியும். நீங்களும் புகுந்த வீட்டிற்குச் செல்கின்றீர்கள் என்பதால், அந்தப் போதையுடன் இருங்கள்! அதுவே சந்தோஷ தாமமாகும். அச்சா.இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத்தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. மாலையில் கோர்க்கப்படுவதற்கு ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுவதுடன், மிகவும் தீவிரமாக நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள். தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றித் தூய்மை ஆகுங்கள்.2. தந்தையின் செய்தியைப் பிறருக்குக் கொடுப்பதன் மூலம், அவர்களை உங்களுக்குச் சமமானவர் ஆக்குகின்ற சேவையைச் செய்யுங்கள். நீங்கள் இங்கே மிகவும் எளிமையாக வாழ வேண்டும். விரக்திக் கூக்குரல்கள் நிறைந்த இறுதிக் காட்சிகளைக் காண்பதற்கு, நீங்கள் மகாவீர்கள் (தைரியமான போராளிகள்) ஆகவேண்டும்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உண்மையான நம்பிக்கைப் பொறுப்பாளராகி, பந்தனம் எனும் கூண்டை முடித்து விடுவதனால், ஜீவன்முக்தி ஸ்திதியை அனுபவம் செய்வீர்களாக.சரீர பந்தனம் அல்லது உறவினர்களின் பந்தனம் எதுவும் ஒரு கூண்டு ஆகும். ஒரு பற்றினால் அன்றி, பெயரளவில் உங்கள் குடும்பப் பொறுப்புக்களைப் பூர்த்தி செய்யும்பொழுது, பந்தனத்தில் இருந்து விடுபட்டவர்கள் என்று கூறப்படுவீர்கள். நம்பிக்கைப் பொறுப்பாளர்களாக முன்னேறுபவர்களே பந்தனத்திலிருந்து விடுபட்டவர்கள். “என்னுடையது” என்ற உணர்வு ஏதும் இருப்பின், ஒரு கூண்டில் இருப்பதைப் போன்றது. ஒரு கூண்டுக்கிளிகள் போல் இருப்பதில் இருந்து, நீங்கள் இப்போது தேவதைகளாகி விட்டீர்கள். ஆகவே, உங்கள் மனதில் கூட பந்தனம் இல்லாத வகையில், சிறிது பந்தனம் கூட இல்லாதிருக்கட்டும், “நான் என்ன செய்ய முடியும்? நான் எவ்வாறு இதனைச் செய்ய முடியும்? நான் விரும்பினேன், ஆனால் அது நடைபெறுவதில்லை.” இந்த எண்ணங்கள் அனைத்தும் உங்கள் மனதின் பந்தனங்கள். நீங்கள் மரணித்து வாழும்போது, உங்கள் பந்தனங்கள் அனைத்தும் முடிவடைந்து, விடுவதுடன், நீங்கள் ஜீவன்முக்தி ஸ்திதியைத் தொடர்ந்தும் அனுபவம் செய்ய வேண்டும்.
சுலோகம்:
உங்கள் எண்ணங்களைச் சேமிக்கும்போது, உங்கள் நேரமும், வார்த்தைகளும் இயல்பாகவே சேமிக்கப்படும்.அவ்யக்த சமிக்ஞை: இப்பொழுது முழுமையாகவும் கர்மாதீத்தாகவும் ஆகுகின்ற ஆழமான அக்கறையைக் கொண்டிருங்கள்.
கர்மாதீதம் என்றால், பற்றற்றிருப்பதும் கர்ம பந்தனம் எதனாலும் சிறிதேனும் பாதிக்கப்படாமல் இருப்பதுமாகும். இதில் உங்கள் அனுபவத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள். செயல்கள் எதுவும் உங்களைப் பாதிக்கக் கூடாது. எனவே, நீங்கள் செய்திருக்கின்ற பணியின் பெறுபேறுகளினாலும் நீங்கள் பாதிக்கப்படுவதை அனுமதிக்காதீர்கள். சம்பூரணமான பற்றின்மையைத் தொடர்ந்தும் அனுபவம் செய்யுங்கள். வேறு எவரோ அதனைச் செய்வதற்கு உங்களைத் தூண்டுவதையும், நீங்கள் அதனைச் செய்வதையும் போன்று இருக்க வேண்டும். ஏதாவது ஒன்றைச் செய்வதற்கு நீங்கள் கருவியாகும்போது கூட பற்றின்மையை அனுபவம் செய்யுங்கள். எது நடைபெற்றிருந்தாலும், அதற்கு ஒரு முற்றுப்புள்ளி இட்டுப் பற்றற்றவர் ஆகுங்கள்.