10.09.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, தந்தை பூஜிப்பவர்களாகிய உங்களைப் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்குவதற்கே வந்துள்ளார். பூஜிப்பவர்களிலிருந்து பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாகவும், பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களில் இருந்து பூஜிப்பவர்களாகவும் மாறுகின்ற கதை முழுவதும் குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே தெரியும்.
கேள்வி:
உலக மக்கள் அசாத்தியம் என்று எண்ணுகின்ற எவ்விடயத்தை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் இலகுவாக ஏற்றுக் கொள்கிறீர்கள்?பதில்:
உலக மக்கள் இல்லறத்தில் வாழ்ந்தவாறு தூய்மையாக இருப்பது அசாத்தியம் என்று எண்ணுகின்றனர். ஆனால் நீங்களோ அதனை இலகுவாக ஏற்றுக் கொள்கிறீர்கள், ஏனெனில் அதன் மூலம் நீங்கள் சுவர்க்க இராச்சியத்தைப் பெறுவீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். ஆகவே இது மிகவும் மலிவானதொரு பேரமாகும்.பாடல்:
அதிகாலை வேளையில் இங்கு வந்துள்ளவர் யார்?ஓம் சாந்தி.
இருளும், விடியலும் - அவை உலகிற்கு முற்றிலும் வேறுபட்டவை. ஆனால் அது ஒரு பொதுவான விடயம். குழந்தைகளாகிய உங்களது காலைப்பொழுது அசாதாரணமானது. உலகிலுள்ள எவருக்கும் இருள் என்றால் என்னவென்றோ அல்லது விடியல் என்றால் என்னவென்றோ தெரியாது. உண்மையில் இருளும், விடியலும் சக்கரத்தின் அதிமங்களகரமான சங்கமயுகத்திலேயே இடம்பெறுகின்றன. அறியாமை இருள் இப்பொழுது அகற்றப்படுகிறது. மக்கள் பாடுகின்றனர்: ஞான சூரியன் உதிக்கும் பொழுது, அறியாமை இருள் மறைந்து விடுகிறது. அந்தச் சூரியன் ஒளியைக் கொடுக்கிறது. இதுவோ ஞான சூரியனைக் குறிக்கிறது. பக்தி இருள் என்று கூறப்படுகிறது, இந்த ஞானம் ஒளி என்று கூறப்படுகிறது. விடியல் இப்பொழுது வரவிருக்கிறது என்பதும், பக்தி எனும் இருள் முடிவிற்கு வருகிறது என்பதும் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். பக்தி என்பது அறியாமை எனக் கூறுப்படுகிறது, ஏனெனில் தாங்கள் வழிபடுபவர்களைப் பற்றிய ஞானம் எதுவுமே அவர்களில் எவருக்குமே இல்லை. அது நேரத்தை வீணாக்குவதாக ஆகுகின்றது. பொம்மைகளை வழிபடுவது தொடர்ந்தும் இடம்பெறுகின்றது. அரைக்கல்பமாக, பொம்மைகளை வழிபடுதல் தொடர்ந்துள்ளது. நீங்கள் வழிபடுபவரைப் பற்றிய முழு ஞானமும் இருக்க வேண்டும். தேவர்களின் குலம் பூஜிக்கத் தகுதிவாய்ந்தது. அவர்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாகி, பின்னர் பூஜிப்பவர்கள் ஆகுகின்றனர். பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களில் இருந்து பூஜிப்பவர்களாகவும், பின்னர் பூஜிப்பவர்களில் இருந்து பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாகவும் ஆகுகின்ற கதை நீண்டதும், சிக்கலானதும் ஆகும். பூஜிப்பவர்களாக இருப்பதினதும், பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக இருப்பதினதும் அர்த்தத்தைக் கூட மக்கள் புரிந்து கொள்வதில்லை. பரமாத்மாவாகிய பரமதந்தை இருள் முடிவிற்கு வருகின்ற சங்கமயுகத்திலேயே வருகின்றார். அவர் விடியலை ஏற்படுத்துவதற்காக வருகின்றார். எவ்வாறாயினும் சக்கரத்தின் சங்கமத்தில் என்பதற்குப் பதிலாக, அவர் ஒவ்வொரு யுகத்திலும் வருவதாக அவர்கள் எழுதியுள்ளனர். நான்கு யுகங்களும் முடிவிற்கு வரும்பொழுது, பழைய உலகம் முடிவடைந்து புதிய உலகம் ஆரம்பிக்கிறது. ஆகவே, இதுவே நன்மை பயக்கும் சங்கமயுகம் என்று அழைக்கப்படுகிறது. இந்நேரத்தில் அனைவரும் நரக வாசிகளாக உள்ளனர். ஒரு நபர் மரணித்ததும் அவர் சுவர்க்கத்திற்குச் சென்று விட்டதாக மக்கள் கூறுகின்றனர். ஆகவே அவர் நிச்சயமாக நரகத்திலேயே இருந்திருக்க வேண்டும். எவ்வாறாயினும், எவருமே தாங்கள் நரகத்தில் இருப்பதாக நம்புவதில்லை. இராவணன் அனைவரது புத்தியையும் முழுமையாகப் பூட்டியுள்ளான். அனைவரது புத்தியும் முழுமையாக மரணித்துள்ளது. தந்தை விளங்கப்படுத்துகிறார்: பாரத மக்களே மிகவும் எல்லையற்ற புத்தியைக் கொண்டிருந்தனர். அவர்களது புத்தி முற்றிலும் கல்லாக மாறும்பொழுதே, அவர்கள் துன்பத்தை அனுபவம் செய்கின்றனர். நாடகத் திட்டத்திற்கு ஏற்ப, அனைவரும் விவேகம் அற்றவர்களாக வேண்டும். மாயையே உங்களை விவேகம் அற்றவர்கள் ஆக்குகின்றாள். பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் விவேகமானவர்கள் எனக் கூறப்படுகிறார்கள், எனினும் பூஜிப்பவர்கள் விவேகம் அற்றவர்கள் எனக் கூறப்படுகின்றனர். அவர்கள் கூறுகின்றனர்: நான் சீரழிந்த பாவி. எவ்வாறாயினும், தாங்கள் எப்பொழுது விவேகமானவர்களாக இருந்தார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. இராவணனாகிய மாயையும் உங்கள் புத்தியை முற்றிலும் கல்லாக மாற்றுகின்றாள். நீங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்து, இப்பொழுது பூஜிப்பவர்களாகி விட்டீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது சந்தோஷத்தை அனுபவம் செய்கிறீர்கள். நீங்கள் பல நாட்களாக அமைதியை வேண்டியும், பிறப்பு, இறப்புச் சக்கரத்தில் இருந்து விடுவிக்கப்படுவதற்காகவும் கதறி அழுது வருகின்றீர்கள். எவ்வாறாயினும் மாயையின் சங்கிலியில் இருந்து எவ்வாறு விடுதலை ஆகுவது என்பது பற்றிய ஞானத்தை எவரது புத்தியும் கொண்டிருப்பதில்லை. நீங்கள் தொடர்ந்தும் ஏணியில் கீழிறங்கி வருகின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். சத்தியயுகத்தில் நீங்கள் மெதுவாகவே கீழிறங்குகிறீர்கள்; அதற்குக் காலம் எடுக்கிறது. சந்தோஷ ஏணியிலிருந்து கீழே இறங்குவதற்குக் காலம் எடுக்கிறது. நீங்கள் துன்ப ஏணியில் மிக விரைவாகக் கீழிறங்குகிறீர்கள். சத்திய, திரேதா யுகங்களில் நீங்கள் 21 பிறவிகளையும், துவாபர, கலியுகங்களில் நீங்கள் 63 பிறவிகளையும் எடுக்கிறீர்கள்; உங்களின் ஆயுட்காலம் குறுகியதாக ஆகுகின்றது. உங்களுடைய ஏறும் ஸ்திதியானது ஒரு நொடிப் பொழுதே எடுக்கின்றது என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். ஜனக மன்னன் ஒரு விநாடியில் ஜீவன்முக்தியைப் பெற்றார் என நினைவுகூரப்படுகிறது. எவ்வாறாயினும் “ஜீவன்முக்தி” எனும் அர்த்தத்தை மக்கள் புரிந்து கொள்வதில்லை. ஒரு ஜனக மன்னன் மாத்திரமா அல்லது முழு உலகமுமா ஜீவன்முக்தியைப் பெற்றது? உங்கள் புத்திகளின் பூட்டுக்கள் இப்பொழுது திறக்கப்பட்டுள்ளன. ஒருவர் மந்தமான புத்தியைக் கொண்டிருக்கையில், ஏனையோர் கூறுகின்றார்கள்: கடவுள் அவருக்கு நல்ல புத்தியைக் கொடுப்பாராக! சத்தியயுகத்தில் இவ்வாறான விடயங்கள் இருக்க மாட்டாது. பரமாத்மாவிடம் இருந்து நீண்டகாலமாகப் பிரிந்திருந்த ஆத்மாக்களின் கணக்கும் உள்ளது. தந்தை பரந்தாமத்தில் இருக்கின்ற பொழுது, அங்கு அவருடன் முக்தி தாமத்திலிருந்து, பின்னர் இறுதியில் இங்கு கீழிறங்கி வருகின்ற ஆத்மாக்களே, அவருடன் நீண்டகாலமாக இருக்கின்றனர். நாங்கள் அங்கு குறுகிய காலத்திற்கு மாத்திரமே இருக்கிறோம். நாங்களே தந்தையிடம் இருந்து முதலில் பிரிந்து சென்றவர்கள். இதனாலேயே பாடப்பட்டுள்ளது: ஆத்மாக்கள் பரமாத்மாவிடம் இருந்து நீண்டகாலம் பிரிந்திருந்தார்கள். தந்தையிடம் இருந்து நீண்டகாலம் பிரிந்திருந்தவர்கள் இப்பொழுது தந்தையுடன் ஒரு சந்திப்பைக் கொண்டிருக்கின்றனர். தன்னுடன் நீண்டகாலமாக இருந்தவர்களைத் தந்தை சந்திப்பதில்லை. தந்தை கூறுகிறார்: நான் குறிப்பாக, குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கவே வருகின்றேன். நான் குழந்தைகளாகிய உங்களுடன் இருக்கும்பொழுது, அனைவரும் நன்மை அடைகின்றனர். இது இப்பொழுது அனைவருக்கும் கணக்குத் தீர்ப்பதற்கான நேரமாகும். இப்பொழுது நீங்கள் அனைவரும் உங்கள் கணக்குகளைத் தீர்த்து, வீடு திரும்பி, பின்னர் உங்கள் இராச்சியப் பாக்கியத்தை அடைவீர்கள். இவ் விடயங்கள் எவரது புத்தியிலும் இல்லை. மக்கள் பாடுகின்றனர்: ஓ தந்தையாகிய கடவுளே, விடுதலையாக்குபவரே, வழிகாட்டியே! அவர் எங்களைத் துன்பத்தில் இருந்து விடுதலையாக்கி, எங்களை அமைதி தாமத்திற்கு அழைத்துச் செல்வதற்கான வழிகாட்டி ஆகுகின்றார். அவர் எங்களைச் சந்தோஷ தாமத்திற்கு அழைத்துச் செல்வதற்கு, எங்களின் வழிகாட்டியாக ஆகுவதில்லை. அவர் ஆத்மாக்களை அமைதிதாமத்திற்கு அழைத்துச் செல்கிறார். ஆத்மாக்களின் வசிப்பிடமே அசரீரி உலகமாகும். எவ்வாறாயினும் எவராலும் அங்கு திரும்பிச் செல்ல முடியாது, ஏனெனில் அனைவரும் தூய்மை அற்றிருக்கின்றனர். இதனாலேயே அவர்கள் தூய்மையாக்குபவராகிய தந்தையை அழைக்கிறார்கள். குறிப்பாக, பாரத மக்கள் முற்றிலும் தலைகீழானவர்கள் ஆகும்பொழுதே, அவர்கள் எல்லையற்ற தந்தையைப் பூனைகளிலும், நாய்களிலும், கற்களிலும், கூழாங்கற்களிலும் இடுகின்றார்கள்! அது ஓர் அற்புதமே! அவர்கள் தங்களை விடவும் இழிவானவராக என்னை ஆக்கிவிட்டார்கள். இந்நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. இது எவருடைய தவறும் அல்ல, ஏனெனில் அனைவரும் நாடகத்தினால் கட்டுப்படுத்தப்படுகிறார்களே அன்றி, கடவுளால் அல்ல. நாடகம் கடவுளை விடவும் அதிக சக்திவாய்ந்தது. தந்தை கூறுகிறார்: நானும் நாடகத்திற்கு ஏற்ப எனக்குரிய நேரத்தில் வருகிறேன். நான் ஒருமுறையே வருகிறேன். மக்கள் பக்தி மார்க்கத்திலே பெருமளவு தடுமாறித் திரிகிறார்கள். நீங்கள் தந்தையைக் கண்டு விட்டீர்கள். நீங்கள் தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியை விரல் சொடுக்குப் போடும் நேரத்தில் பெற வேண்டும். நீங்கள் உங்கள் ஆஸ்தியைப் பெற்றதும், தடுமாறித் திரிய வேண்டிய தேவையே இருக்காது. கடவுளே கூறுகிறார்: நான் வந்து உங்களுக்கு வேதங்களினதும், சமயநூல்களினதும் சாராம்சத்தைக் கூறுகிறேன். ஆரம்பத்திலே சத்திய பூமி இருந்தது, பின்னர் அது எவ்வாறு பொய்யான பூமி ஆகியது என்பது எவருக்குமே தெரியாது. பாரத மக்களுக்குக் கீதையைப் பேசியவர் யார் என்பது கூடத் தெரியாது. பாரதத்திலேயே ஆதி சனாதன தேவிதேவதா தர்மம் இருந்தது. சதோபிரதானான, பூஜிக்கத் தகுதிவாய்ந்த, தேவ தர்மத்தைச் சேர்ந்தவர்கள், தேவதர்மம் மறைந்து விடும் வகையில், தமோபிரதானான பூஜிப்பவர்கள் ஆகுகிறார்கள். பின்னர், தந்தை மீண்டும் வந்து, அதே தர்மத்தை ஸ்தாபிக்கிறார். அவர்களின் உருவங்களும், சமயநூல்களும் இருக்கின்றன. பாரத மக்களுக்கு ஒரேயொரு அதிமேன்மையான சமயநூலான கீதையே இருக்கின்றது. அவர்கள் அனைவரும் தங்களது சொந்தத் தர்மத்தை மறந்து விட்டார்கள். இதனாலேயே அவர்கள் தமது பெயர்களை மாற்றி, தம்மை இந்துக்கள் என்று அழைக்க ஆரம்பித்தார்;கள். நாடகத்திலே இது நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆத்மாக்கள் மறுபிறவிச் சக்கரத்தினுள் பிரவேசித்து, அவர்களுக்குள் மாசு கலப்பதால், தமோபிரதான் ஆகுகிறார்கள். அப்பொழுது, நீங்கள் நிஜத் தங்கத்தாலான ஆபரணங்களாக இருந்தீர்கள் எனவும், இப்பொழுது போலியானவர்கள் ஆகிவிட்டீர்கள் எனவும் அறிவீர்கள். ஒரு சரீரமே ஆபரணம் என்று அழைக்கப்படுகின்றது. நீங்கள் சரீரங்கள் மூலம் உங்கள் பாகங்களை நடிக்கிறீர்கள். நாங்கள் 84 பிறவிகளுக்கான அத்தகைய நீண்ட பாகங்களைப் பெற்றுள்ளோம். நீங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்த தேவர்கள், சத்திரியர்கள் போன்றவர்களாகி, பின்னர் பூஜிப்பவர்கள் ஆகுகிறீர்கள். நானும் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவராக இருந்து, பின்னர் பூஜிப்பவர் ஆகினால், உங்களை யார் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்குவார்? நான் என்றென்றும் தூய்மையான, ஞானக்கடலும், தூய்மையாக்குபவரும் ஆவேன். நீங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்து, பின்னர் பூஜிப்பவர்களாகி, பின்னர் பகலிற்குச் சென்று, அதன்பின்னர் இரவிற்குச் செல்கிறீர்கள். எவ்வாறாயினும், அம்மக்களுக்கு இது தெரியாது. தந்தை விளங்கப்படுத்துகிறார்: உலகம் தொடர்ந்தும் போலியாக ஆகுகிறது, எனவே அவர்கள் போலியான கதைகளை உருவாக்குகிறார்கள். வியாசர் கூட அற்புதங்கள் செய்தார். வியாசர் கடவுள் அல்ல.கடவுள் வந்து, பிரம்மாவின் மூலம் வேதங்கள், சமயநூல்களின் சாராம்சத்தை விளங்கப்படுத்தினார். பின்னர் அவர்கள் பிரம்மாவைச் சமயநூல்களுடன் சித்தரித்திருக்கிறார்கள். எனவே, கடவுள் எங்கே இருந்தார்? பிரம்மா விஷ்ணுவின் தொப்பூள்க் கொடியிலிருந்து வெளிப்பட்டார் என்றோ அல்லது விஷ்ணு சமயநூல்களின் சாராம்சத்தைக் கொடுத்தார் என்றோ இல்லை. இல்லை; கடவுளே பிரம்மா மூலம் விளங்கப்படுத்தினார். திரிமூர்த்திகளுக்கு மேலே சிவபாபா இருக்கிறார். அவர் பிரம்மா மூலம் சாராம்சத்தைப் பேசுகிறார். பின்னர் அவர் எவரின் மூலம் பேசுகிறாரோ, அவரே பின்னர் பராமரிப்பை மேற்கொள்வார். நீங்களே பிரம்மாகுமாரர்களும், குமாரிகளும் ஆவீர்கள். பிராமண குலமே அதி மேன்மையானது. இப்பொழுது நீங்கள் கடவுளின் குழந்தைகள். நீங்கள் கடவுளால் உருவாக்கப்பட்ட யாகத்தைப் பராமரிக்கிறீர்கள். பழைய உலகம் முழுவதும் இந்த ஞான யாகத்தினுள் அர்ப்பணிக்கப்பட உள்ளது. இதுவே சுய இராச்சிய உரிமையைப் பெறுவதற்காக, குதிரை அர்ப்பணிக்கப்படுகின்ற உருத்திரரின் அழியாத ஞானயாகம் என்று அழைக்கப்படுகிறது. உங்களை உங்கள் இராச்சியத்தைப் பெறச் செய்வதற்காக, தந்தை யாகத்தை உருவாக்கி இருக்கிறார். மக்கள் யாகத்தை வளர்க்கும் பொழுது, சிவனினதும், சாலிகிராம்களினதும் உருவங்களைக் களிமண்ணினால் செய்கிறார்கள். அவர்கள் அவற்றை உருவாக்கி, பராமரித்து, பின்னர் அவற்றை அழித்து விடுகிறார்கள். தேவர்களின் சிலைகளிற்கும் அவர்கள் அதையே செய்கிறார்கள். சிறு குழந்தைகள் பொம்மைகளோடு விளையாடுவதைப் போல, இதை அவர்கள் செய்கிறார்கள். தந்தையே ஸ்தாபனையையும் பராமரிப்பையும் விநாசத்தையும் மேற்கொள்கிறார் எனக் கூறப்படுகிறது. எவ்வாறாயினும், முதலாவதாக ஸ்தாபனையே இடம்பெறுகின்றது. இப்பொழுது நீங்கள் அமரத்துவ உலகிற்குச் செல்வதற்காக, மரண பூமியில் கற்கிறீர்கள். இதுவே மரண பூமியில் உங்களுடைய இறுதிப் பிறவி ஆகும். தந்தை அமரத்துவ உலகை ஸ்தாபிப்பதற்காக வருகின்றார். ஒரேயொரு பார்வதிக்கு மாத்திரம் கதையைக் கூறுவதால் என்ன நிகழும்? அவர்கள் சங்கரரை அமரத்துவப் பிரபு என்று அழைப்பதுடன், அவரோடு பார்வதியையும் காட்டுகிறார்கள். சங்கரரும், பார்வதியும் சூட்சும உலகில் காட்டப்படுவதால், அவர்கள் எவ்வாறு சரீர ரூபங்களில் இருக்க முடியும்? ஜெகதாம்பாளும் ஜெகத்பிதாவும், இலக்ஷ்மியும் நாராயணனும் ஆகுகிறார்கள் என இப்பொழுது உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. இலக்ஷ்மியும், நாராயணனும் 84 பிறவிகளின் பின்னர் ஜெகதாம்பாளும், ஜெகத்பிதாவும் ஆகுகிறார்கள். உண்மையில், ஜெகதாம்பாள் முயற்சி செய்பவரும், இலக்ஷ்மி தூய்மையின் வெகுமதியும் ஆகும். யாருடைய புகழ் மகத்தானது? ஜெகதாம்பாளிற்கு எத்தனை ஒன்றுகூடல்கள் இடம்பெறுகின்றன என்பதைப் பாருங்கள்! கல்கத்தாவின் காளியும் மிகவும் பிரபல்யமானவர். அவர்கள் ஏன் கல்கத்தாவில் உள்ள காளி மாதாவுடன், காளி பிதாவை (தந்தை – ஆண் வடிவம்) உருவாக்கவில்லை? உண்மையில் ஆதிதேவியாகிய, ஜெகதாம்பாவே இந்த ஞானச் சிதையிலே அமர்ந்து, அவலட்சணமானவரில் இருந்து அழகானவர் ஆகுகிறார். முதலாவதாக அவர் ஞான தேவியாகி, பின்னரே இளவரசி ஆகுகிறார். இங்கே நீங்கள் கடவுளிடம் இருந்து இந்த ஞானத்தைப் பெற்று, இளவரசர்களாகவும், இளவரசிகளாகவும் ஆகுவதற்கே வந்துள்ளீர்கள். இலக்ஷ்மி, நாராயணனிற்கு அவர்களுடைய இராச்சியத்தைக் கொடுத்தவர் யார்? கடவுளே ஆவார். தந்தை மாத்திரமே உங்களுக்கு அமரத்துவக் கதையையும், சத்திய நாராயணனின் கதையையும் கூறுகின்றார், பின்னர் நீங்கள் ஒரு விநாடியில் சாதாரண ஆணிலிருந்து நாராயணன் ஆகுகின்றீர்கள். குழந்தைகளாகிய உங்களுடைய புத்தி இப்பொழுது திறந்துள்ளதுடன், காமமே கொடிய எதிரி என்பதையும் நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இல்லறத்தில் வாழ்ந்து, தூய்மையாக இருப்பது அசாத்தியம் என அவர்கள் கூறுகிறார்கள். தந்தையே சுவர்க்கத்தைப் படைப்பவர் என்பது விளங்கப்படுத்தப்படுகிறது. எனவே, அவர் நிச்சயமாகத் தனது குழந்தைகளுக்குச் சுவர்க்க இராச்சியத்தைக் கொடுப்பார். சுவர்க்கத்தின் இராச்சியத்தைப் பெறுவதற்கு, நீங்கள் நிச்சயமாக ஒரு பிறவியிலே தூய்மையாக இருப்பது அவசியமாகும். இது ஓர் மலிவான பேரம் ஆகும். வியாபாரிகளால் இதை மிக நன்றாகப் பெற்றுக் கொள்ள முடியும், ஏனெனில் அவர்களும் தானம் செய்கிறார்கள்; அவர்கள் தர்மத்திற்காகப் பணம் ஒதுக்குகிறார்கள். தந்தை கூறுகிறார்: அரிதாகவே எவரும் இந்தப் பேரத்தைப் பேசுகின்றார்கள். இது அத்தகையதோர் இலகுவான வியாபாரம்! பேரம் பேசிய பின்னர் தந்தையை விட்டு விலகிச் செல்கின்ற சிலரும் இருக்கிறார்கள். தந்தையைத் தவிர, வேறு எவராலும் இந்த ஞானத்தை விளங்கப்படுத்த முடியாது. ஒரேயொரு தந்தையே ஞானக்கடல். அவர் மாத்திரமே உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். தூய்மையானவராகவும், பூஜிக்கத் தகுதிவாய்ந்தவராகவும் இருந்தவர், இறுதியில் பூஜிப்பவர் ஆகிவிட்டார். இவரின் 84 பிறவிகளின் இறுதியில், நான் இவருடைய சரீரத்தினுள் பிரவேசிக்கின்றேன். பிரஜாபிதா இங்கேயே இருக்க வேண்டும். இப்பொழுது நீங்கள் முயற்சி செய்து, தேவதைகள் ஆகுகிறீர்கள். பக்தி மார்க்கம் எனும் இரவின் பின்னர், இப்பொழுது இந்த ஞானம் உள்ளது, அதாவது பகல் உள்ளது. இதற்கென ஒரு நேரமோ, திகதியோ நிச்சயிக்கப்படவில்லை. சிவபாபா எப்பொழுது வருகிறார் என்பது எவருக்குமே தெரியாது. மக்கள் கிருஷ்ணரின் பிறந்தநாளைப் பெரும் ஆடம்பரத்துடன் கொண்டாடுகிறார்கள். எவருக்குமே சிவனின் மிகச்சரியான பிறந்தநாளைத் தெரியாது. அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. இந்த நன்மை பயக்கும் யுகத்தில் ஒரேயொரு தந்தையிடம் இருந்து சத்திய நாராயணனின் கதையையும், அமரத்துவக் கதையையும் செவிமடுங்கள். நீங்கள் செவிமடுத்துள்ள ஏனைய அனைத்தையும் மறந்து விடுங்கள்.2. உங்கள் சத்தியயுக இராச்சியத்தைக் கோருவதற்கு, இந்த ஒரு பிறவியில் தூய்மையாக இருங்கள். ஒரு தேவதை ஆகுவதற்கு முயற்சி செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் முற்றிலும் நம்பத்தகுந்தவராகி, உங்களின் ஒவ்வோர் எண்ணம், கணம், வார்த்தை மற்றும் செயலால் இறை சேவையைச் செய்வீர்களாக.அனைத்தையும் மிக நன்றாகக் கவனித்துக் கொள்ளும் ஒருவர் முற்றிலும் நம்பத்தகுந்தவர் என்று அழைக்கப்படுகிறார். அவர் எதையும் வீணாகிப் போக அனுமதிக்க மாட்டார். நீங்கள் பிறப்பு எடுத்த கணத்தில் இருந்து, உங்களின் ஒவ்வோர் எண்ணம், ஒவ்வொரு கணம் மற்றும் ஒவ்வொரு செயலும் இறை சேவைக்காகவே இருக்க வேண்டும். உங்களின் எண்ணங்கள் அல்லது நேரம் இறை சேவையை விட வேறு எதற்காகவேனும் பயன்படுத்தப்படுமாயின், வீணான வார்த்தைகள் பேசப்பட்டால், அல்லது உங்களின் சரீரத்தால் வீணான செயல்கள் செய்யப்படுமாயின், உங்களை முற்றிலும் நம்பத்தகுந்தவர் என்று சொல்ல முடியாது. ‘ஒரு விநாடி அல்லது ஒரு சதம்தான் வீணாக்கப்பட்டது, அது என்ன பெரிய விடயம்?’ என்று நீங்கள் சொல்வதாக இருக்கக்கூடாது. இல்லை, முற்றிலும் நம்பத்தகுந்தவர் என்றால், அனைத்தையும் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துவதே ஆகும்.
சுலோகம்:
ஸ்ரீமத்தை மிகச்சரியாகப் புரிந்து கொண்டு, அதை ஒவ்வோர் அடியிலும் பின்பற்றுவதிலேயே வெற்றி அடங்கியுள்ளது.அவ்யக்த சமிக்ஞை: இப்போது உங்களின் அருள்கின்ற ரூபத்தை வெளிப்படுத்துங்கள்.
நீங்கள் செய்யும் புண்ணியச் செயலுக்குப் பதிலாகப் புகழ்ச்சியைப் பெற வேண்டும் என்ற ஆசையை ஒருபோதும் கொண்டிராதீர்கள். இந்த எல்லைக்கு உட்பட்ட புகழ்ச்சியை ஏற்றுக் கொள்வதெனில், நிரந்தரமான பேறு உங்களுக்குக் கிடைக்காமல் செய்வதாகும். ஆகவே, கொடுப்பதைப் பொறுத்தவரை, எப்போதும் கடலைப் போல் நிரம்பியவராக இருங்கள். உங்களின் ஒவ்வொரு வார்த்தையும் மற்றவர்களை சந்தோஷமான ஆன்மீக ஆனந்தம் நிறைந்த வாழ்க்கையையும் தந்தையின் அன்பையும் அதீந்திரிய சுகத்தையும் அனுபவம் பெறச் செய்ய வேண்டும். உங்களின் ஒவ்வொரு செயலும் ஆத்மாக்கள் அனைவரும் ஒத்துழைப்பைப் பெறச் செய்வதாக இருக்க வேண்டும்.
மாதேஷ்வரியின் பெறுமதி மிக்க வாசகங்கள்.
இராஜரிஷிகள் சத்தியயுகத்துக்கு உரியவர்கள்.
இராஜரிஷிகள் துவாபர யுகத்தில் இருந்ததாக மக்கள் கூறுகிறார்கள். அவர்கள் திரிகாலதரிசிகள் என்பதனால் அவர்கள் அமர்ந்திருந்து, வேதங்கள், புராணங்களை உருவாக்கியதாகவும் கூறுகின்றார்கள். உண்மையில், இராஜரிஷிகள் சத்தியயுகத்திலேயே இருந்தார்கள் என்று எங்களால் இப்பொழுது கூற முடியும். ஏனெனில் அங்கு அவர்கள் முற்றிலும் விகாரங்களை வெற்றிகொண்டவர்களாக இருந்தார்கள். அதாவது, அவர்கள் தாமரை போன்ற வாழ்வை வாழ்ந்ததுடன், ஜீவன்முக்தி ஸ்திதி மூலம் இராச்சியத்தை ஆட்சிசெய்தார்கள். கடவுளை அடைவதற்காக, துவாபர யுகத்திலிருந்து தவம் செய்துள்ள ரிஷிகள், அந்நேரத்திலேயே வேதங்களையும் இதிகாசங்களையும் உருவாக்கினார்கள். சத்தியயுகத்தில் வேதங்கள், புராணங்களுக்கான தேவையும் இருக்கவில்லை, அவர்களைத் திரிகாலதரிசிகள் என்று எங்களால் கூறவும் முடியாது. பிரம்மா, விஷ்ணு, சங்கரரைக் கூட நாங்கள் திரிகாலதரிசிகள் என்று அழைக்க முடியாதபோது, துவாபர யுகத்தின் ரஜோகுணி காலப்பகுதிக்குரிய ரிஷிகளையும் முனிவர்களையும் எவ்வாறு திரிகாலதரிசிகள் என்று அழைக்க முடியும்? திரிகாலதரிசி என்றால், ஒரேயொரு கடவுளான சிவனே திரிமூர்த்தி எனவும், திரிநேத்ரி எனவும் அழைக்கப்படுகின்றார் என்று அர்த்தம். அவர் சக்கரத்தின் இறுதியில் தானாகவே இங்கு வந்து, படைப்பு முழுவதற்கும் ஒரு முடிவை ஏற்படுத்துகிறார். சத்தியயுகத்தில் நாங்கள் வெகுமதியை அனுபவம் செய்வோம். அங்கு, பிரம்மாவின் குலத்தைச் சேர்ந்த பிராமணர்களாகிய நாங்கள் மாஸ்டர் திரிநேத்ரிகளாகவும், திரிகாலதரிசிகளாகவும் ஆகுகின்றோம் என்பதை அறிந்திருக்க மாட்டோம். கல்பம் முழுவதிலும் வேறு எவராலும் இந்த ஞானத்தைப் பெறவும் முடியாது; தேவர்களையோ அல்லது மனிதர்களையோ திரிகாலதரிசிகள் என்று அழைக்கவும் முடியாது. அச்சா.