11.02.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, அனைவருக்கும் இச்செய்தியைக் கொடுக்க வேண்டும் என்பதே தந்தையின் கட்டளை: இந்த அதிமேன்மையான சங்கமயுகத்தில் தூய்மை ஆகுங்கள், நீங்கள் சத்தியயுகத்து ஆஸ்தியைப் பெறுவீர்கள்.

கேள்வி:
நீங்கள் அனைவருக்கும் கூற வேண்டிய இலகுவான பேரம் யாது?

பதில்:
இந்த இறுதிப் பிறப்பில் தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றித் தூய்மை ஆகுவதனால் நீங்கள் 21 பிறவிகளுக்கு உலக இராச்சியத்தைப் பெறுவீர்கள். இது மிக இலகுவாகச் செய்யக் கூடியதொரு பேரம். அனைவருக்கும் இப்பேரத்தை எவ்வாறு பேசுவது எனக் கற்பியுங்கள். அவர்களுக்குக் கூறுங்கள்: இப்பொழுது சிவபாபாவை நினைவுசெய்து தூய்மை ஆகுவதனால், நீங்கள் தூய உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள்.

ஓம் சாந்தி.
நீங்கள் படங்களைக் காட்டி விளங்கப்படுத்துகின்ற, கண்காட்சிகளிலும் மேளாக்களிலும் (ஒன்றுகூடல்கள்) வருகின்ற மக்களிடம், அவர்கள் இப்போது தந்தையிடம் இருந்து தமது எல்லையற்ற ஆஸ்தியைப் பெற வேண்டும் என நீங்கள் கூற வேண்டும் என ஆன்மீகத் தந்தை கூறுகிறார் என்பதை ஆன்மீகக் குழந்தைகளான நீங்கள் அறிவீர்கள். எந்த ஆஸ்தியை? மனிதர்கள் எவ்வாறு தேவர்கள் ஆகுகிறார்கள் என்றும், அவர்கள், எவ்வாறு சுவர்க்க இராச்சியத்தை எல்லையற்ற தந்தையிடம் இருந்து அரைக் கல்பத்திற்குப் பெற முடியும் என்பதையும் நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். தந்தையே வியாபாரி, நீங்கள் இப்பேரத்தை அவருடன் செய்து கொள்ள வேண்டும். தேவர்கள் தூய்மையானவர்கள் என்பது மக்களுக்குத் தெரியும். பாரதத்தில் சத்தியயுகம் இருந்த பொழுது தேவர்கள் தூய்மையாக இருந்தார்கள். அவர்கள் சுவர்க்கம் செல்வதற்கு நிச்சயமாக எதனையாவது அடைந்திருக்க வேண்டும். வேறு எவருமன்றி, சுவர்க்கத்தை ஸ்தாபிக்கும் தந்தையாலேயே உங்களை எதனையும் பெறக் கூடியவர்களாக ஆக்க முடியும். தூய்மையாக்குபவரான தந்தை மாத்திரமே தூய்மை அற்றவர்களைத் தூய்மையாக்கி, அவர்களுக்குத் தூய உலக இராச்சியத்தைக் கொடுக்கிறார். அவர் உங்களுக்கு அவ்வளவு இலகுவான பேரத்தை அளிக்கிறார்! அவர் கூறுகிறார்: இதுவே உங்கள் இறுதிப் பிறவி. நான் இங்கு இருக்கும் பொழுதே தூய்மை ஆகுங்கள். உங்களைத் தூய்மை ஆக்குவதற்கே நான் வந்துள்ளேன். இந்த இறுதிப் பிறவியில் தூய்மை ஆகுவதற்கு முயற்சி செய்யுங்கள், நீங்கள் தூய உலகின் ஆஸ்தியைக் கோருவீர்கள். இப்பேரம் மிகவும் மலிவானது. இதுவே தந்தையின் கட்டளை என்பதைப் குழந்தைகள் விளங்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை பாபா கொண்டிருந்தார்: தூய்மை ஆகுங்கள்! இதுவே நீங்கள் தூய்மையாக வேண்டிய அதிமேன்மையான சங்கமயுகம். தேவர்களே அதிமேன்மையானவர்கள். இலக்ஷ்மியினதும் நாராயணனினதும் இராச்சியம் இருந்தது. தந்தையின் வழிகாட்டல்களின்படி இந்த இறுதிப் பிறவியில் தூய்மை ஆகினால் மாத்திரமே தேவ உலக இராச்சியத்தைத் தந்தையிடம் இருந்து ஓர் ஆஸ்தியாக நீங்கள் பெற முடியும். அத்துடன் அவர் யோக சக்தியினால் நீங்கள் எவ்வாறு தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகலாம் என்பதற்கான வழிகளையும் உங்களுக்குக் காட்டுகிறார். நன்மையைப் பெறுவதற்கு, குழந்தைகளாகிய நீங்கள் சிலவற்றைச் செலவு செய்யவே வேண்டும். எதையும் செலவழிக்காமல், ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்பட முடியாது. இலக்ஷ்மியினதும் நாராயணனினதும் இராச்சியம் இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகிறது. குழந்தைகளாகிய நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும். உங்களது எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் மூலம் எத்தவறான செயல்களையும் செய்யாதீர்கள். தேவர்கள் ஒருபொழுதும் தீய எண்ணங்களைக் கொண்டிருப்பதில்லை. அவர்கள் தமது உதடுகளினால் தீய வார்த்தைகளை ஒருபொழுதும் பேசுவதில்லை. அவர்கள் தெய்வீகக் குணங்கள் அனைத்தும் நிரம்பியவர்களும், முற்றிலும் விகாரம் அற்றவர்களும், அதியுயர்ந்த மரியாதைகளைப் பின்பற்றுகின்ற அதிமேன்மையானவர்களும் ஆவர். வாழ்ந்து, சென்றவர்களது புகழே பாடப்படுகிறது. குழந்தைகளாகிய உங்களை அந்தத் தேவர்கள் ஆக்குவதற்காகவே நான் இப்பொழுது வந்துள்ளேன். ஆதலால் உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் மூலம் எந்தத்தீய செயல்களையும் செய்யாதீர்கள். தேவர்கள் முற்றிலும் விகாரம் அற்றவர்கள். இம்மரண பூமியில் இதுவே உங்கள் இறுதிப் பிறவி என்பதால், உங்களால் இப்பொழுது இத்தெய்வீகக் குணங்களைக் கிரகிக்க முடியும். தூய்மையற்ற உலகம் மரண பூமி எனவும், தூய உலகம் அமரத்துவ பூமி எனவும் அழைக்கப்படுகிறது. இப்பொழுது மரண பூமியின் விநாசம் உங்கள் முன்னிலையில் உள்ளது. அமரத்துவ பூமி நிச்சயமாக ஸ்தாபிக்கப்பட வேண்டும். இதுவே பழைய, விகார உலகம் அழிக்கப்பட்டதாகச் சமயநூல்களில் சித்தரிக்கப்படுகின்ற, அதே மகாபாரத யுத்தம் ஆகும். எவ்வாறாயினும் எவரிடமும் இந்த ஞானம் இல்லை. தந்தை கூறுகிறார்: அனைவரும் அறியாமை எனும் உறக்கத்தில் உறங்குகிறார்கள். அவர்கள் ஐந்து விகாரங்களினால் போதை அடைந்துள்ளார்கள். தந்தை கூறுகிறார்: இப்பொழுது தூய்மை ஆகுங்கள்! நீங்கள் மாஸ்டர் இறைவர்கள் ஆகுவீர்கள், இல்லையா? இலக்ஷ்மியும் நாராயணனும், இறைவியும் இறைவனும் என அழைக்கப்படுகின்றனர். அதாவது, அவர்கள் தமது ஆஸ்தியைக் கடவுளிடம் இருந்து பெற்றார்கள். பாரதம் இப்பொழுது தூய்மை அற்றுள்ளது. ஒவ்வொருவரதும் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களும் அவ்வாறனவையே. எதுவுமே முதலில் புத்தியினுள்ளேயே புகுகிறது, பின்னர் அது வார்த்தைகளில் வெளிவருகின்றது. அவர்கள் பின்னர் அவற்றைச் செயற்படுத்தும் பொழுது, அச்செயல்கள் பாவச்செயல்கள் ஆகுகின்றன. தந்தை கூறுகிறார்: அங்கே பாவச்செயல்கள் இல்லை. இங்கேயே பாவச்செயல்கள் இருக்கின்றன, ஏனெனில் இது இராவணனது இராச்சியம் ஆகும். தந்தை கூறுகிறார்: உங்கள் வாழ்க்கையின் மிகுதிக் காலத்திற்குத் தூய்மையாக இருங்கள். நீங்கள் தூய்மையாக இருப்பதாகச் சத்தியம் செய்வதுடன், உங்களது பல பிறவிகளின் பாவம் அழிக்கப்படும் வகையில், உங்களது புத்தியின் யோகத்தை என்னுடன் இணைக்கவும் வேண்டும். அப்பொழுதே நீங்கள் 21 பிறவிகளுக்குச் சுவர்க்க அதிபதிகள் ஆகுவீர்கள். தந்தையே இதனை அளிக்கிறார். இந்த ஆஸ்தியையே தந்தை இவர் மூலம் உங்களுக்குத் தருகிறார் என்பதை அவர் விளங்கப்படுத்துகிறார். அவர் சிவபாபா ஆவார், இவர் தாதா ஆவார். இதனாலேயே நாங்கள் எப்பொழுதும் பாப்தாதா என்று அழைக்கப்படுகிறோம்: சிவபாபாவும், பிரம்ம தாதாவும். தந்தை அத்தகைய ஒரு பேரத்தை உங்களுக்கு வழங்குகிறார்! மரண பூமியின் விநாசம் உங்கள் முன்னிலையில் இருக்கிறது. அமரத்துவ பூமி ஸ்தாபிக்கப்படுகிறது. பாரத மக்கள் நன்மை அடையும் வகையில், விழாக்களும், கண்காட்சிகளும் ஒழுங்கு செய்யப்படுகின்றன. தந்தை வந்து, பாரதத்தில் இராம இராச்சியத்தை (கடவுள்) உருவாக்குகிறார். இராம (கடவுள்) இராச்சியத்தில் நிச்சயமாகத் தூய மக்கள் மாத்திரமே இருப்பார்கள். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, காமமே கொடிய எதிரி. இந்த ஐந்து விகாரங்களுமே மாயை என்று அழைக்கப்படுகின்றன. அவற்றை வெல்வதால் நீங்கள் உலகை வென்றவர்கள் ஆகுவீர்கள். தேவர்களே உலகை வென்றவர்கள். வேறெவருமே உலகை வென்றவர்களாக முடியாது. கிறிஸ்தவர்கள் ஒன்று சேர்ந்தார்கள் ஆயின், அவர்களால் முழு உலக இராச்சியத்தையும் பெற முடியும் எனத் தந்தை விளங்கப்படுத்துகிறார். எவ்வாறாயினும், அது நியதியல்ல. அக்குண்டுகள் பழைய உலகை அழிப்பதற்கே ஆகும். ஒவ்வொரு கல்பத்திலும் உலகம் புதியதில் இருந்து பழையதாகி, பின்னர் பழையதில் இருந்து புதியது ஆகுகின்றது. புதிய உலகில் இராம இராச்சியம் என அழைக்கப்படுகின்ற, கடவுளின் இராச்சியமே இருந்தது. கடவுள் யார் என்று அறியாததால், அவர்கள் தொடர்ந்தும் இராமரது பெயரை உச்சரிக்கிறார்கள். குழந்தைகளான நீங்கள் இவ்விடயங்களைக் கிரகிக்க வேண்டும். உண்மையில் சதோபிரதானாக இருந்த நாங்கள் 84 பிறவிகளில் தமோபிரதானாக வேண்டி இருந்தது. நாங்கள் இப்பொழுது நிச்சயமாக மீண்டும் சதோபிரதான் ஆகவேண்டும். சிவபாபா உங்களுக்கு வழிகாட்டல்களைத் தந்துள்ளார், அவற்றைப் பின்பற்றுவதால் தூய உலகில் 21 பிறவிகளுக்கு நீங்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள். இப்பொழுது நீங்கள் முயற்சி செய்தாலென்ன, செய்யாது விட்டால் என்ன, நீங்கள் நினைவில் இருந்து பாதையைக் காட்டினால் என்ன, காட்டாது விட்டாலென்ன, அது உங்களைப் பொறுத்தது. குழந்தைகளாகிய நீங்கள் கண்காட்சிகளில் பலருக்கும் பாதையைக் காட்டுகிறீர்கள். நீங்கள் உங்களுக்கும் நன்மையைச் செய்ய வேண்டும். இந்தப் பேரம் மிகவும் மலிவானது. இந்த இறுதிப் பிறவியில் தூய்மையாக இருப்பதாலும், சிவபாபாவின் நினைவில் இருப்பதாலும் நீங்கள் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகுவீர்கள். இந்தப் பேரம் மிகவும் மலிவானது! உங்களது முழு வாழ்வுமே மாற்றம் அடைகின்றது. நீங்கள் இவ்வாறு சிந்திக்க வேண்டும். சில குழந்தைகள் ராக்கி கட்டச் சென்ற பொழுது, ‘உலகம் தமோபிரதானாக இருக்கும் இந்த நேரத்தில் தூய்மையாக இருப்பது சாத்தியம் இல்லை’ என ஒருவர் கூறிய செய்தியை பாபா பெற்றார். அந்தப் அப்பாவி அநாதரவானவர்கள், இது இப்பொழுது சங்கமயுகம் என்பதைக் கூட அறியாமல் உள்ளார்கள். தந்தை மாத்திரமே உங்களைத் தூய்மை ஆக்குகிறார். பரமாத்மா, பரமதந்தையே உங்களது உதவியாளர் ஆவார். இங்கே கொடுக்கப்படும் தூண்டுதல் எவ்வளவு பாரியது என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. நீங்கள் தூய்மை ஆகுவதால் தூய உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள். தந்தை கூறுகிறார்: ஐந்து விகாரங்களாகிய மாயையை வெல்வதனால் நீங்கள் உலகை வென்றவர்கள் ஆகுவீர்கள். எனவே நீங்கள் ஏன் தூய்மையாகக் கூடாது? இது ஒரு முதற்தரமான பேரம் ஆகும். தந்தை கூறுகிறார்: காமமே கொடிய எதிரி. இதனை வெல்வதால் நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். மாயையை வெல்பவர்கள், உலகை வெல்பவர்கள் ஆகுகின்றார்கள். இது யோக சக்தியினால் மாயையை வெல்லும் விடயம் ஆகும். பரமாத்மா பரமதந்தை மாத்திரமே வந்து, ஆத்மாக்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: என்னை நினைவு செய்யுங்கள், உங்கள் கலப்படம் அகற்றப்படும். அப்பொழுது நீங்கள் சதோபிரதான் உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள். தந்தை உங்களுக்குச் சங்கமயுகத்தில் உங்கள் ஆஸ்தியை உங்களுக்குக் கொடுக்கிறார். இலக்ஷ்மியும் நாராயணனும் அதிமேன்மையானவர்களாக இருந்தார்கள். அவர்கள் மாத்திரமே அதியுயர்ந்த கோட்பாடுகளைப் பின்பற்றுகின்ற அதிமேன்மையானவர்கள் எனவும், தேவ தர்மத்துக்கு உரியவர்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர். உங்களுக்கு அனைத்தும் மிக நன்றாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் சில வேளைகளில் இக் கருத்துக்கள் மறக்கப்படுகின்றன. பின்னர், நீங்கள் சொற்பொழிவு ஆற்றியதும், குறிப்பிட்ட கருத்துக்களை நீங்கள் விளங்கப்படுத்தவில்லை என்பது உங்களுக்கு ஞாபகம் வருகிறது. நீங்கள் விளங்கப்படுத்தக்கூடிய பல கருத்துக்கள் உள்ளன. இது அவ்வாறு நடைபெறுகிறது. சட்டநிபுணர்களும் சிலவேளைகளில் கருத்துக்களை மறக்கின்றார்கள். பின்னர் ஒரு கருத்து ஞாபகம் வரும்பொழுது அவர்கள் தங்களுடைய வழக்கை மீண்டும் ஆரம்பிக்கிறார்கள். வைத்தியர்களும் அவ்வாறே. ஒரு குறிப்பிட்ட நோய்க்கு ஒரு குறிப்பிட்ட மருந்து நல்லதா என அவர்கள் சிந்திக்கிறார்கள். இங்கேயும் உங்களிடம் பல கருத்துக்கள் உள்ளன. பாபா கூறுகிறார்: இன்று நான் உங்களுக்கு மிக ஆழமான கருத்துக்களை விளங்கப்படுத்துகிறேன். எவ்வாறாயினும் இதனைப் புரிந்து கொள்ள வேண்டிய அனைவருமே தூய்மை அற்றவர்கள். அவர்கள் கூறுகிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே! பின்னர் நீங்கள் அவர்களுக்கு எதையாவது கூறும்பொழுது, அவர்கள் குழப்பம் அடைகிறார்கள். அவர்கள் கடவுள் முன்னிலையில் உண்மையைப் பேசுகிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! வந்து எங்களைத் தூய்மை ஆக்குங்கள்! அவர்கள் கடவுளை மறந்து பொய் கூறுகிறார்கள். இதனாலேயே பாம்பும் இறக்க வேண்டும், தடியும் முறியாமல் இருக்க வேண்டும் என்பதைப் போன்ற வகையில், நீங்கள் அவர்களுக்குச் சாதுரியமாக விளங்கப்படுத்த வேண்டும். தந்தை கூறுகிறார்: ஓர் எலியிடம் இருந்தும் நற்குணத்தைத் தேர்ந்தெடுங்கள். இரத்தம் பாயத் தொடங்கினாலும் நீங்கள் அதனை அறவே உணராத வகையில், ஓர் எலியானது அத்தகைய திறமையான முறையில் உங்களைக் கடிக்கிறது. குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் இக்கருத்துக்கள் அனைத்தும் இருக்க வேண்டும். யோகத்தில் நிலைத்து இருப்பவர்கள் சரியான நேரத்தில் உதவியைப் பெறுகிறார்கள். இந்த ஞானத்தைப் பெறுபவர்கள், இந்த ஞானத்தைக் கொடுப்பவர்களை விடவும் தந்தையினால் அதிகளவு நேசிக்கப்படுவது சாத்தியம் ஆகுகின்றது. பின்னர் தந்தையே அமர்ந்திருந்து அவர்களுக்கு விளங்கப்படுத்துகிறார். தூய்மையாகுவது நல்லது என்று அவர்கள் உணரக்கூடிய வகையில் அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். இந்த ஒரு பிறவியில் தூய்மையாக இருப்பதால் நீங்கள் 21 பிறவிகளுக்குத் தூய உலகிற்கு அதிபதிகள் ஆகுவீர்கள். கடவுள் பேசுகிறார்: இந்த இறுதிப் பிறப்பில் தூய்மை ஆகுங்கள். அப்பொழுது நாடகத் திட்டத்தின்படி உங்களால்; 21 பிறவிகளுக்கு ஆஸ்தியைப் பெற முடியும் எனும் உத்தரவாதத்தை நான் உங்களுக்குக் கொடுக்கின்றேன். ஒவ்வொரு கல்பத்திலும் இந்த ஆஸ்தியை நீங்கள் பெறுகிறீர்கள். சேவை செய்வதில் ஆர்வம் உடையவர்கள் தாங்கள் சென்று விளங்கப்படுத்த வேண்டும் என்று உணர்வார்கள். நீங்கள் இதனைச் செய்வதற்கு, சகல இடங்களுக்கும் ஓடிச் செல்ல வேண்டும். தந்தையே ஞானக்கடல். அவர் தொடர்ந்தும் இந்த ஞானத்தை அதிகளவில் பொழிந்து கொண்டே இருக்கிறார். தூய ஆத்மாக்களினால் இதனைக் கிரகிக்க முடியும். அவர்களது பெயர்கள் போற்றப்படுகின்றன. கண்காட்சிகளிலும், மேளாக்களிலும் எவ்விதமான சேவையை ஒருவர் செய்கிறார் என்பதை நீங்கள் கூற முடியும். சிலர் எவ்வாறு விளங்கப்படுத்துகிறார்கள் என்பதை, ஆசிரியர்கள் சென்று பார்வையிட வேண்டும். பொதுவாக இலக்ஷ்மி நாராயணனின் படத்தையும், ஏணியின் படத்தையும் விளங்கப்படுத்துவது மிகவும் நல்லது. யோக சக்தி மூலம் நீங்கள் இலக்ஷ்மியையும், நாராயணனையும் போல் ஆகுகின்றீர்கள். இலக்ஷ்மியும் நாராயணனுமே ஆதிதேவியும், ஆதிதேவரும் ஆவார்கள். இலக்ஷ்மி, நாராயணன் இருவருமே நான்கு கரங்களுடைய உருவத்தில் உள்ளடங்கி உள்ளனர்; இரு கரங்கள் இலக்ஷ்மிக்கு உரியவை, இரு கரங்கள் நாராயணனுக்கு உரியவை. இதைக் கூடப் பாரத மக்கள் புரிந்து கொள்வதில்லை. மகா இலக்ஷ்மிக்கு நான்கு கரங்கள் உள்ளன. அவர் (மகா இலக்ஷ்மி) ஒரு தம்பதியையே பிரதிநிதித்துவம் செய்கின்றார் என்பதே இதன் அர்த்தம். விஷ்ணுவும் நான்கு கரங்களை உடையவர். கண்காட்சிகளில் ஒவ்வொரு நாளும் விளங்கப்படுத்தப்படுகிறது. இரதமும் காட்டப்பட்டுள்ளது. அர்ச்சுனன் இரதத்தில் இருந்தார் என்றும், ஸ்ரீகிருஷ்ணரே இரத ஓட்டியாக இருந்தார் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். அவை அனைத்துமே கட்டுக் கதைகள். இவை இப்பொழுது இந்த ஞானத்தின் விடயங்கள். அவர்கள் ஞான அமிர்தக் கலசத்தை இலக்ஷ்மியின் தலையிலேயே காட்டுகிறார்கள். உண்மையில் பின்னர் இலக்ஷ்மி ஆகுகின்ற, உலக மாதாவிடமே (ஜெகதாம்பா) ஞான அமிர்தக் கலசம் வைக்கப்பட்டுள்ளது. இதுவும் விளங்கப்படுத்தப்பட வேண்டும். சத்திய யுகத்தவர்கள் ஒரு தர்மத்தைச் சேர்ந்தவர்கள், ஓர் அபிப்பிராயத்தையுமே உடையவர்கள்; தேவர்களிடம் ஓர் அபிப்பிராயமே உள்ளது. வேறு எவருமன்றி, தேவர்களே “ஸ்ரீ” (மேன்மையானவர்கள்) என அழைக்கப்பட வேண்டும். மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய முறையில் ஒரு சில வார்த்தைகளே இருக்க வேண்டும் என பாபா சிந்தித்தார். இந்த இறுதிப் பிறவியில் ஐந்து விகாரங்களையும் வெல்வதனால் நீங்கள் இராம இராச்சியத்தை ஆட்சிபுரிபவர்கள் ஆகுவீர்கள். இது ஒரு மலிவான பேரம். தந்தை வந்து அழியாத இந்த ஞான இரத்தினங்களைத் தானம் செய்கிறார். தந்தையே ஞானக்கடல், அவர் மாத்திரமே உங்களுக்கு இந்த ஞான இரத்தினங்களைக் கொடுக்கிறார். இந்திர சபையில் தேவதைகள் (புக்ராஜ், சபாஜ் முதலானோர்) இருந்தனர்; அவர்கள் அனைவருமே உதவியாளர்கள். பலவகையான இரத்தினங்கள் உண்டு. இதனாலேயே அவர்கள் நவ இரத்தினங்களைக் காட்டுகிறார்கள். நன்றாகக் கற்பவர்கள் அதற்கேற்ப அந்தஸ்தைப் பெறுவார்கள் என்பது உண்மை; அனைவருமே வரிசைக்கிரமமானவர்கள். இதுவே முயற்சி செய்யும் வேளையாகும். நீங்கள் தந்தையின் மாலையின் மணிகள் ஆகுகின்றீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிகிறது. எந்தளவு அதிகமாக சிவபாபாவை நினைவு செய்கிறீர்களோ, அந்தளவு அதிகமாக நீங்கள் நினைவு யாத்திரையில் முன்னேறிச் செல்வதுடன், உங்களது பாவங்களும் மிக விரைவில் அழிக்கப்படும். இக்கல்வி சிக்கலானது அல்ல. நீங்கள் தூய்மையாக மாத்திரம் இருக்க வேண்டும். நீங்கள் தெய்வீகக் குணங்களையும் கிரகிக்க வேண்டும். உங்கள் வாயில் இருந்து ஒருபொழுதும் கற்கள் வெளிவரக்கூடாது. கற்களை எறிபவர்கள் கல்லுப்புத்தியை உடையவர்கள் ஆகுவார்கள். எவரினது வாயினால் இரத்தினங்கள் வெளிவருகின்றனவோ, அவர்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவார்கள். இது மிகவும் இலகுவானது. தூய்மையாக்குபவரும், அனைவருக்கும் முக்தியையும் ஜீவன்முக்தியையும் அருள்பவருமான பரமாத்மா பரமதந்தை சிவன் பேசுகிறார் என மாணவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள்: ஓ பாரத மக்களே! ஆன்மீகக் குழந்தைகளே! இம் மரண பூமியாகிய இராவண இராச்சியத்தில், கலியுகத்தில் உங்களது புத்தியை பரமாத்மா பரமதந்தையுடனான இணைக்கின்ற, யோக யாத்திரையின் சக்தி மூலம் நீங்கள் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகுவீர்கள். 5000 ஆண்டுகளுக்கு முன்னர் பெற்றதைப் போலவே, தூய்மை, சந்தோஷம், அமைதி, செழுமை நிறைந்த தேவ சுய இராச்சிய அந்தஸ்தை நீங்கள் மீண்டும் ஒருமுறை சதோபிரதான் சத்தியயுகத்தில் அடையக் கூடியதாக இருக்கும். எவ்வாறாயினும், உண்மையான பெரும் விநாசத்தின் முன்னர் தந்தை எங்களுக்குக் கற்பித்து, எங்களது ஆஸ்தியை எங்களுக்குத் தருகிறார். எவ்வளவு அதிகம் கற்கிறீர்களோ நீங்கள் அவ்வளவு உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகிறீர்கள். அவர் எங்களைத் திரும்பவும் தன்னுடன் அழைத்துச் செல்வார். எனவே இப் பழைய சரீரங்களை அல்லது இப்பழைய உலகம் பற்றிய கரிசனை எங்களுக்கு இருக்கக்கூடாது. இது இப்பொழுது இப்பழைய உலகை விட்டுச் செல்வதற்கான காலமாகும். அத்தகைய விடயங்களை உங்கள் புத்தி கடைந்தால், அது மிகவும் நல்லது. முயற்சி செய்வதால் நீங்கள் முன்னேறுவதுடன், நீங்கள் மூச்சுத் திணறாத காலமும் வரும். உலகம் அழியவுள்ளதை உங்களால் காண முடியும். எனவே நாங்கள் எங்களது புத்தியை யோகத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும். சேவை செய்வதால், நீங்கள் உதவியைப் பெறுகின்றீர்கள். நீங்கள் எவ்வளவு அதிகமாக மற்றவர்களுக்குச் சந்தோஷத்திற்கான பாதையைக் காட்டுகிறீர்களோ, அந்தளவிற்கு அதிகமாகச் சந்தோஷத்தை அனுபவம் செய்வீர்கள். நீங்கள் தொடர்ந்தும் முயற்சி செய்வீர்கள். உங்கள் பாக்கியத்தை உங்களால் காண முடியும். எவ்வாறு முயற்சி செய்ய வேண்டும் என்பதைத் தந்தை உங்களுக்குக் கற்பிக்கிறார். சிலர் அதில் மும்முரமாக இருக்கின்றார்கள், ஆனால் பிறர் மும்முரமாக இல்லை. கோடீஸ்வரர்களும் பல்கோடீஸ்வரர்களும் அழிக்கப்படுவார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவதற்கு, சதா ஞான இரத்தினங்கள் மாத்திரமே உங்கள் வாயிலிருந்து வெளிவர அனுமதியுங்கள். நீங்கள் அதியுயர்ந்த கோட்பாடுகளைப் பின்பற்றும் அதிமேன்மையானவர் ஆகும் வகையில் அத்தகைய செயல்களையே உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் மூலம் செய்யுங்கள்.

2. இந்த இறுதிப் பிறவியில் தூய்மை ஆகுவதற்கான சத்தியத்தைச் செய்யுங்கள். தூய்மை ஆகுவதற்கான வழியை அனைவருக்கும் கூறுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் என்றும் தயாராகி, எந்தவொரு சூழ்நிலைக்குரிய பரீட்சையையும் முழு மதிப்பெண்களுடன் சித்தி அடைந்து, அதனால் என்றும் சந்தோஷமாக ஆகுவீர்களாக.

என்றும் தயாராக இருப்பவர்களின் நடைமுறை ரூபம், என்றும் சந்தோஷமாக இருப்பதே ஆகும். எந்தவொரு சூழ்நிலையின் ஊடாகவும், இயற்கை அனர்த்தங்களின் ஊடாகவும் அல்லது அவர்களின் சரீரங்களின் கர்ம வேதனையின் ஊடாகவும் எந்தவிதமான பரீட்சைகளும் வரலாம். இந்தப் பரீட்சைகளை முழு மதிப்பெண்களுடன் சித்தி அடைபவர்களே, என்றும் தயாராக இருப்பவர்கள் எனப்படுகிறார்கள். எப்படிக் காலம் யாருக்காகவும் காத்திருப்பது இல்லையோ, அதேபோல், எந்தவிதத் தடையும் உங்களை நிறுத்த அனுமதிக்காதீர்கள். மாயையின் எந்தவொரு சூட்சுமமான அல்லது பௌதீகமான தடைகளையும் ஒரு விநாடியில் முடித்து விடுங்கள். அப்போது உங்களால் எப்போதும் சந்தோஷமாக இருக்க முடியும்.

சுலோகம்:
உங்களின் சக்திகள் அனைத்தையும் சரியான வேளையில் பயன்படுத்துவது என்றால், ஒரு மாஸ்ரர் சர்வசக்திவானாக இருத்தல் என்று அர்த்தம்.

அவ்யக்த சமிக்ஞை: ஒற்றுமை மற்றும் நம்பிக்கை என்ற சிறப்பியல்புடன், வெற்றி நிறைந்தவர் ஆகுங்கள்.

ஒற்றுமைக்கு இரண்டு அடிப்படைகள் உள்ளன. 1) நம்பிக்கை 2) அன்பு. ஒருவர் மற்றவர் மீதுள்ள நம்பிக்கை குறைவதற்கு அனுமதிக்காதீர்கள். ஒருவர் ஒன்றைக் கூறும்போது, மற்றவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்: இதுவே ஒற்றுமை என்ற இழையால் கட்டுவதற்கான வழிமுறை ஆகும். உங்களின் இதயங்களில் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பு, உங்களை நெருக்கமாகக் கொண்டு வரும். எப்படி அனைவருக்கும் தந்தையின் மீது அன்பு உள்ளதோ, அதேபோல், குடும்பத்திலும் அனைவரின் மீதும் உண்மையான அன்பு இருக்க வேண்டும். இதற்கு, உங்களின் சுய மரியாதையைப் பேணுவதுடன் அனைவருக்கும் மரியாதை வழங்குங்கள்.