11.07.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, எல்லாவற்றுக்கும் முதலில், அனைவருக்கும் தந்தையின் உண்மையான அறிமுகத்தைக் கொடுத்து, கீதையின் கடவுள் யார் என்பதை நிரூபியுங்கள். பின்னர் உங்கள் பெயர் போற்றப்படும்.

கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் சக்கரத்தின் நான்கு யுகங்களையும் சுற்றி வந்துள்ளீர்கள். பக்தி மார்க்கத்தில் தொடர்ந்துள்ள சம்பிரதாயம் என்ன?

பதில்:
நீங்கள் சக்கரத்தின் நான்கு யுகங்களுக்கு ஊடாகவும் சுற்றி வந்துள்ளதால், அவர்கள் சமயநூல்கள், சிலைகள் போன்ற அனைத்தையும் ஒரு இரதத்தில் வைத்து நான்கு திசைகளையும் சுற்றி வருகிறார்கள். பின்னர் அவர்கள் வீடு திரும்பி, அவற்றை உறங்கச் செய்கிறார்கள். நீங்கள் பிராமணர்கள், தேவர்கள், சத்திரியர்கள் போன்றோர்களாக ஆகுகிறீர்கள். நீங்கள் இச்சக்கரத்தைச் சுற்றி வரும் ஞாபகார்த்தமாகவே, அவர்கள் சமயநூல்களை எடுத்துக் கொண்டு சுற்றி வரும் சம்பிரதாயத்தை ஆரம்பித்தார்கள்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கே அமர்ந்திருந்து ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். நீங்கள் எவருக்காவது விளங்கப்படுத்தும் பொழுதெல்லாம், எல்லாவற்றுக்கும் முதலில், ஒரேயொரு தந்தையே இருக்கிறார் என்பதைத் தெளிவாக்குங்கள். ஒரு தந்தையா அல்லது பல தந்தையரா இருக்கிறார்கள் எனக் கேட்கத் தேவையில்லை. நீங்கள் கேட்டால், அவர்கள் பல தந்தையர்களைக் குறிப்பிடக்கூடும். நீங்கள் கூற வேண்டும்: படைப்பவராகிய தந்தையும், தந்தையாகிய கடவுளும் ஒரேயொருவரே. அவரே ஆத்மாக்கள் அனைவரதும் தந்தை ஆவார். அவர் ஒரு புள்ளி என்பதை நீங்கள் உடனடியாகக் கூறக்கூடாது. அதனால் அவர்கள் குழப்பம் அடைந்து விடுவார்கள். எல்லாவற்றுக்கும் முதலில், லௌகீக, பரலோகத் தந்தையர்கள் இருவர் இருக்கிறார்கள் என்பதை மிகவும் தெளிவாக விளங்கப்படுத்துங்கள். அனைவருக்கும் ஒரு பௌதீகத் தந்தை இருப்பதுடன், அனைவரும் மற்றவரை “குதா” அல்லது “கடவுள்” என அழைக்கிறார்கள். உண்மையில், அவர் அதே, ஒரேயொருவரே ஆவார். அனைவரும் அவரையே நினைவு செய்கிறார்கள். எல்லாவற்றுக்கும் முதலில், சுவர்க்கத்தைப் படைப்பவர் தந்தையே என்னும் உறுதியான நம்பிக்கை அவர்களுக்கு இருக்குமாறு செய்யுங்கள். அவர் உங்களை உலக அதிபதிகள் ஆக்குவதற்காகவே இங்கே வருகிறார். இது சிவஜெயந்தி என அழைக்கப்படுகிறது. சுவர்க்கத்தைப் படைப்பவர், பாரதத்தில் மாத்திரமே தேவர்களின் இராச்சியமுள்ள சுவர்க்கத்தைப் படைக்கின்றார் என்பதை நீங்களும் அறிவீர்கள். ஆகவே, எல்லாவற்றுக்கும் முதலில், தந்தையின் அறிமுகம் கொடுக்கப்பட வேண்டும். அவருடைய பெயர் சிவன் ஆகும். “கடவுள் பேசுகிறார்” எனக் கீதை கூறுகிறது. எல்லாவற்றுக்கும் முதலில், அவர்களுக்கு இதை உறுதியாக்கி, அவர்களை இதை எழுதச் செய்யுங்கள். “கடவுள் பேசுகிறார்” எனக் கீதை கூறுகிறது: “நான் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறேன், அதாவது, நான் உங்களைச் சாதாரண மனிதனிலிருந்து நாராயணனாக மாற்றுகிறேன்”. யாரால் உங்களை இவ்வாறு ஆக்க முடியும்? இது நிச்சயமாக விளங்கப்படுத்தப்பட வேண்டும். நீங்கள் கடவுள் யார் எனவும் விளங்கப்படுத்த வேண்டும். சத்தியயுகத்தில் முதல் இலக்கத்தவர்களாக உள்ள இலக்ஷ்மியும் நாராயணனும் நிச்சயமாக 84 பிறவிகளை எடுத்து இருப்பார்கள். ஏனைய சமயத்தவர்கள் பின்னரே வருகிறார்கள். அவர்களால் அத்தனை பிறவிகளை எடுக்க முடியாது. முதலில் வருபவர்கள் மாத்திரம் 84 பிறவிகளை எடுக்கிறார்கள். சத்தியயுகத்தில், அவர்கள் இதில் எதையும் கற்பதில்லை. அவர்கள் நிச்சயமாகச் சங்கமயுகத்திலேயே, அனைத்தையும் கற்றிருக்க வேண்டும். ஆகவே, எல்லாவற்றுக்கும் முதலில், நீங்கள் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். ஆத்மாக்களைப் பார்க்க முடியாது, ஆனால் புரிந்துகொள்ள முடியும். அவ்வாறே பரமாத்மாவையும் பார்க்க முடியாது. எவ்வாறாயினும், அவரே ஆத்மாக்களாகிய எங்களின் தந்தை என்பதைப் புத்தியால் புரிந்துகொள்ள முடியும். அவர் பரமாத்மா என்று அழைக்கப்படுகிறார். அவர் என்றென்றும் தூய்மையானவர் ஆவார். அவர் வந்து, தூய்மையற்ற உலகத்தைத் தூய்மையாக்க வேண்டும். ஆகவே, நீங்கள் முதலில், ஒரு தந்தை மாத்திரம் இருக்கிறார் என்பதை விளங்கப்படுத்தி நிரூபிக்கும் பொழுது, கீதையின் கடவுள் ஸ்ரீகிருஷ்ணர் அல்ல என்பதையும் நிரூபிக்க முடியும். ஒரேயொரு தந்தை மாத்திரமே சத்தியம் என அழைக்கப்படுகிறார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் விளங்கப்படுத்தி, நிரூபிக்க வேண்டும். பௌதீகச் சடங்குகள், யாத்திரைகள் செல்வது ஆகிய ஏனைய விடயங்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்துச் சமயநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த ஞான மார்க்கத்தில் அவ்விடயங்கள் குறிப்பிடப்படுவதில்லை. இங்கு சமயநூல்கள் கிடையாது. தந்தை வந்து இந்த இரகசியங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். எல்லாவற்றுக்கும் முதலில், கடவுள் பௌதீகமானவர் அன்றி, அசரீரியானவர் என்னும் உண்மையை நிரூபிப்பதால், குழந்தைகளாகிய நீங்கள் வெற்றி அடைவீர்கள். பரமாத்மாவாகிய, பரமதந்தையான கடவுள் சிவன் பேசுகிறார். கடவுள் ஞானக்கடலும், அனைவருடைய தந்தையும் ஆவார். ஸ்ரீ கிருஷ்ணர் அனைவருடைய தந்தையாக இருக்க முடியாது. அவர் எவருக்கும் கூறுவதில்லை: சரீர சமயங்கள் அனைத்தையும் துறந்து என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள்! இது அத்தகையதோர், இலகுவான விடயமாகும். எவ்வாறாயினும், பல்வேறு சமயநூல்களைக் வாசித்திருப்பதால், மனிதர்கள் தங்களின் பக்தியில் மிகவும் உறுதியாகி விட்டார்கள். இந்நாட்களில், அவர்கள் சமயநூல்கள் போன்றவற்றை ஒரு இரதத்தில் வைத்து, அவற்றை நகரத்தைச் சுற்றி எடுத்துச் செல்கிறார்கள். அவர்கள் தம்மிடம் உள்ள சிலைகளையும், கிரந்தம் போன்றவற்றையும் எடுத்துக் கொண்டு, சுற்றி வருகிறார்கள். பின்னர் அவர்கள் வீட்டுக்குத் திரும்பி வந்து அவற்றை மீண்டும் உறங்கச் செய்கிறார்கள். நீங்கள் சக்கரத்தைச் சுற்றி வந்து, தேவர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் போன்றோர் ஆகுகிறீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் சக்கரத்தைச் சுற்றிவருவதன் ஞாபகார்த்தமாகவே, அவர்கள் சமயநூல்களை எடுத்துக் கொண்டு சுற்றி வருகிறார்கள். பின்னர் அவற்றைத் திரும்பவும் வீட்டுக்குக் கொண்டு வந்து, ஒரு புறத்தில் வைத்து விடுகிறார்கள். அவர்கள் சமயநூல்களை எடுத்துக் கொண்டு சுற்றிச் செல்வதற்காக ஒரு நிச்சயிக்;கப்பட்ட நாளையும் வைத்திருக்கிறார்கள். ஆகவே, கீதையின் வாசகங்கள் ஸ்ரீ கிருஷ்ணரால் அன்றி, கடவுள் சிவனாலேயே பேசப்பட்டன என்பதை நீங்கள் முதலில் நிரூபிக்க வேண்டும். சிவன் மாத்திரம் மறுபிறவிக்கு அப்பாற்பட்டவர் ஆவார். அவர் நிச்சயமாக வருகிறார். ஆனால், அவருடைய பிறவி தெய்வீகமானதாகும். அவர் இங்கு வந்து பகீரதனில் (பாக்கியசாலி இரதம்) பிரவேசிக்கிறார். அவர் வந்து தூய்மை அற்றவர்களைத் தூய்மையாக்குகிறார். படைப்பவரினதும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியினதும் இரகசியங்களைக் கொடுப்பதற்கு அவர் இங்கு வருகிறார். வேறு எவரிடமும் இந்த ஞானம் இல்லை. தந்தையே, அவருடைய சொந்த அறிமுகத்தைக் கொடுப்பதற்காக வர வேண்டும். பிரதான விடயம் தந்தையின் அறிமுகமே ஆகும். அவரே கீதையின் கடவுள் என நீங்கள் நிரூபித்தால், உங்கள் பெயர் போற்றப்படும். ஆகவே, படங்களைக் கொண்டிருக்கும் அத்தகைய துண்டுப் பிரசுரங்களை உருவாக்கி, அந்தத் துண்டுப் பிரசுரங்களை ஓர் ஆகாய விமானத்தில் இருந்து கீழே போட வேண்டும். தந்தை தொடர்ந்தும் பிரதான விடயங்களை விளங்கப்படுத்துகிறார். இந்த ஒரு பிரதான விடயத்தில் வெற்றி அடைந்தால், உங்களால் அனைத்திலும் வெற்றியடைய முடியும். இதில் உங்கள் பெயர் பெருமளவுக்குப் போற்றப்படும். இதைப் பற்றி எவரும் உங்களுடன் விவாதிக்க மாட்டார்கள். இது மிகவும் தெளிவான ஒரு விடயமாகும். தந்தை கூறுகிறார்: நான் எவ்வாறு சர்வவியாபியாக இருக்க முடியும்? நான் வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கிறேன். மக்கள் அழைக்கிறார்கள்: வந்து எங்களைத் தூய்மை ஆக்குங்கள்! எங்களுக்குப் படைப்பவரினதும், படைப்பினதும் ஞானத்தைக் கொடுங்கள். தந்தையின் புகழ், ஸ்ரீகிருஷ்ணரின் புகழிலிருந்து வேறுபட்டதாகும். சிவபாபா வந்து ஸ்ரீகிருஷ்ணராக அல்லது நாராயணனாக ஆகுகிறார் அல்லது அவர் 84 பிறவிகளை எடுக்கிறார் என்பதல்ல. இல்லை. இவ்விடயங்கள் அனைத்தையும் எவ்வாறு விளங்கப்படுத்துவது என்பதைப் பற்றிச் சிந்திப்பது என்பதில் உங்கள் புத்தி மும்முரமாக ஈடுபட்டிருக்க வேண்டும். கீதையே பிரதான விடயமாகும். “கடவுள் பேசுகிறார்” என அது கூறுகிறது. ஆகவே, நிச்சயமாகக் கடவுளுக்கு ஒரு வாய் தேவை. எவ்வாறாயினும், கடவுள் அசரீரியானவர். எவ்வாறு ஓர் ஆத்மாவால் வாயின்றிப் பேச முடியும்? இதனாலேயே அவர் கூறுகிறார்: நான் ஒரு சாதாரண சரீரத்தின் ஆதாரத்தைப் பெறுகிறேன். முதலில் இலக்ஷ்மியும் நாராயணனுமாக ஆகுபவர்களே, 84 பிறவிகளை எடுப்பவர்கள் ஆவர். பின்னர், அவர் சக்கரத்தின் முடிவில் வரும்பொழுது, நான் அவரின் சரீரத்தில் பிரவேசிக்கிறேன். நான் ஸ்ரீகிருஷ்ணரின் பல பிறவிகளின் இறுதியில் வருகிறேன். எவ்வாறு, நீங்கள் இதை ஏனையோருக்கு விளங்கப்படுத்த முடியும் என்னும் அக்கறையுடன் இந்த ஞானக்கடலைக் கடையுங்கள். இந்த ஒரு விடயத்தின் மூலம் உங்கள் புகழ் போற்றப்பட்டு, அனைவரும் படைப்பவராகிய, தந்தையை, அறிந்து கொள்வார்கள். பின்னர், பலர் உங்களிடம் வருவார்கள். வந்து, சொற்பொழிவுகள் ஆற்றுமாறு அவர்கள் உங்களை அழைப்பார்கள். இதனாலேயே, முதலில், அல்பாவை நிரூபித்து, விளங்கப்படுத்த வேண்டும். நீங்கள் தந்தையிடம் இருந்து உங்கள் சுவர்க்க ஆஸ்தியைக் கோருகிறீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பாபா, பாரதத்தில் ஒவ்வொரு 5000 வருடங்களும் வந்து, இந்தப் பாக்கியசாலி இரதத்தில் பிரவேசிக்கிறார். கடவுள் வந்து அமர்கின்ற இவர் அதிபாக்கியசாலி ஆவார். இது ஒரு சிறிய விடயமல்ல. அவரின் பல பிறவிகளின் இறுதியில் இவரின் சரீரத்தில் அவர் வந்து பிரவேசிக்கிறார் என்பதைக் குழந்தைகளாகிய உங்களுக்குக் கடவுள் இவரில் அமர்ந்திருந்து விளங்கப்படுத்துகிறார். ஸ்ரீ கிருஷ்ணரில் இருந்த ஆத்மாவே, இந்தத் தற்போதைய இரதத்தில் உள்ள ஆத்மா ஆவார். இவர் ஸ்ரீகிருஷ்ணர் இல்லை. ஆனால் அவருடைய பல பிறவிகளின் இறுதிச் சரீரமாகும். முகச்சாயல்களும், தொழிலும் ஒவ்வொரு பிறவியிலும் மாற்றம் அடைகின்றன. நான் யாருடைய பல பிறவிகளின் இறுதிப் பிறவியில் வந்து பிரவேசிக்கின்றேனோ, அவரே பின்னர் ஸ்ரீகிருஷ்ணர் ஆகுகிறார். நான் சங்கமயுகத்தில் வருகிறேன். நீங்களும் தந்தைக்கு உரியவராகி அவரிடமிருந்து ஓர் ஆஸ்தியைக் கோருகிறீர்கள். தந்தை உங்களுக்குக் கற்பித்து, பின்னர் உங்களைத் திரும்பவும் அவருடன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். இதில் சிரமம் இல்லை. தந்தை கூறுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள்! ஆகவே, இதை எவ்வாறு எழுதுவது என்பதைப் பற்றி மிகவும் கவனமாகச் சிந்தியுங்கள். இந்தப் பிரதான தவறின் காரணமாக, பாரதம், நீதியற்றதாகவும் அதர்மம் மிக்கதாகவும் வளமற்றதாகவும் ஆகிவிட்டது. உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிப்பதற்குத் தந்தை மீண்டும் வருகிறார். அவர் பாரதத்தைத் தர்மம் மிக்கதாகவும், செழிப்பாகவும் ஆக்குகிறார். அவர் முழு உலகையும் தர்மம் நிறைந்ததாக ஆக்குகிறார். அந்நேரத்தில், நீங்கள் மாத்திரம் முழு உலகினதும் அதிபதிகளாக இருக்கிறீர்கள். கூறப்பட்டுள்ளது: நீங்கள் நீண்ட ஆயுளுடனும், செழிப்பாகவும் இருக்க வாழ்த்துகிறேன். பாபா உங்களுக்கு “நீங்கள் என்றென்றும் வாழ்வீர்களாக!” என ஆசீர்வதிப்பதில்லை. சாதுக்கள் போன்றோரே கூறுகிறார்கள்: நீங்கள் அமரத்துவமாக இருப்பீர்களாக! அமரத்துவ பூமியில் நிச்சயமாக அமரத்துவமானவர்கள் இருப்பார்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். மரண பூமியில் எப்படி அமரத்துவமானவர்கள் இருக்க முடியும்? குழந்தைகளாகிய நீங்கள் சந்திப்புக்களை நடாத்தும் பொழுது, நீங்கள் தந்தையிடம் ஆலோசனை கேட்கிறீர்கள். நீங்கள் அனைவரும் உங்கள் சொந்த அபிப்பிராயங்களை எழுதி அனுப்ப வேண்டும் என, பாபா உங்களுக்கு முன்னதாகவே ஆலோசனை கூறுகிறார். பின்னர் நீங்கள் அனைவரும் ஒன்றுகூட முடியும். அந்த ஆலோசனை முரளியில் போடப்பட்டு அனைவரையும் அடைய முடியும். 2000 தொடக்கம் 3000 வரையிலான ரூபாய்கள் அதன் மூலம் சேமிக்கப்படும். இரண்டு அல்லது மூன்று நிலையங்களை அந்தத் தொகையால் திறக்கப்பட முடியும். படங்கள் போன்ற அனைத்தையும் உங்களுடன் எடுத்துக் கொண்டு நீங்கள் கிராமம் கிராமமாகச் செல்ல வேண்டும். சூட்சும லோகத்து விடயங்களில், குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு ஆர்வத்தைக் கொண்டிருக்கக் கூடாது. பிரம்மா, விஷ்ணு, சங்கரரின் படங்கள் இருப்பதால், அவர்களைப் பற்றிச் சிறிதளவு விளங்கப்படுத்தப்பட வேண்டும். அவர்கள் இடைநடுவில், சிறிய பாகங்களைக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் சென்று அவர்களைச் சந்திக்கிறீர்கள், அங்கு வேறு எதுவும் இல்லை. இதனாலேயே, அவ்விடயங்களில் அதிகளவு ஆர்வம் இருக்கக் கூடாது. இங்கு ஆத்மாக்கள் வரவழைக்கப்பட்டு, அனைத்தும் காண்பிக்கப்படுகின்றன. சிலர் வந்து அழுகிறார்கள். சிலர் அன்புடன் சந்திக்கிறார்கள், சிலர் துன்பக் கண்ணீரைச் சிந்துகிறார்கள். அவை அனைத்தும் நாடகத்தின் பாகம் ஆகும். அது சம்பாஷணை என அழைக்கப்படுகிறது. மக்கள், ஒருவரின் ஆத்மாவை ஒரு பிராமணக் குருக்களின் சரீரத்தில் வரவழைத்து, அவரை அந்த ஆடைகள் போன்றவற்றை அணியுமாறு செய்கிறார்கள். எவ்வாறாயினும், சரீரம் அழிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அந்த ஆடைகளை யார் அணிவார்கள்? உங்களிடம் அந்தச் சம்பிரதாயங்கள் இல்லை. அழுகை போன்றவற்றுக்கான கேள்வியே இல்லை. இல்லாவிட்டால், நீங்கள் எவ்வாறு அனைவரிலும் உயர்ந்தவர்களாக ஆக முடியும்? நீங்கள் தூய்மையாக வேண்டியுள்ள பொழுதே, நிச்சயமாக, இந்த இடைநடுவிலுள்ள சங்கமயுகம் இருக்கிறது. நீங்கள் இந்த ஒரு விடயத்தை நிரூபிக்கும்பொழுது, நீங்கள் கூறுவது முற்றிலும் சரியே என அவர்கள் கூறுவார்கள். கடவுளால் ஒருபொழுதும் பொய் கூற முடியாது. அப்பொழுது, பலரும் பெருமளவு அன்பு செலுத்துவார்கள். பலர் வருவார்கள். குழந்தைகளாகிய நீங்கள் தொடர்ந்தும் சரியான நேரத்தில் கருத்துக்கள் அனைத்தையும் பெறுகிறீர்கள். இறுதியில் என்ன நடக்கும் என்பதை நீங்கள் பார்ப்பீர்கள். யுத்தம் நடக்கும், குண்டுகள் போடப்படும். முதலில், மறுபுறத்தில் மரணங்கள் நிகழும். இங்கு, இரத்த ஆறுகள் பாயும். பின்னர் பால் ஆறுகளும், வெண்ணெய் ஆறுகளும் ஓடும். புகை, முதலில் வெளிநாடுகளிலேயே வெளிப்படும். அங்கே அதிகளவு பயம் நிலவும். பல பாரிய குண்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் அவர்கள் எதை இடுகிறார்கள் எனப் பாருங்கள். நகரங்கள் முழுமையாக அழிக்கப்பட்டு விடும். சுவர்க்க இராச்சியத்தை உருவாக்கியவர் யார் என நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். தந்தையாகிய சுவர்க்கக் கடவுள், நிச்சயமாகச் சங்கமயுகத்திலேயே வருகிறார். இது இப்பொழுது சங்கமயுகம் என்பதை நீங்கள் அறிவீர்கள். தந்தையின் நினைவே பிரதான விடயம் என்பது உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நினைவின் மூலம் உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு விடும். கடவுள் வந்தபொழுது, அவர் கூறினார்: என்னை மாத்திரம் நினைவுசெய்தால், நீங்கள் சதோபிரதானாகி, முக்தி தாமத்துக்குச் செல்வீர்கள். பின்னர் ஆரம்பத்திலிருந்து சக்கரம் மீண்டும் இடம்பெறும். தேவ தர்மமும், பின்னர் இஸ்லாமியமும், பௌத்தமும் இருக்கும். மாணவர்களாகிய நீங்கள் புத்தியில் இந்த முழு ஞானத்தையும் வைத்திருக்க வேண்டும். அத்தகைய பெரும் வருமானத்தை நீங்கள் சம்பாதிக்கிறீர்கள் என நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். அமரத்துவமான பாபா உங்களுக்கு அமரத்துவக் கதையைக் கூறுகிறார். உங்களுக்குப் பல பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பிரதான தர்மமாகிய தேவ தர்மம் முதலில் இருக்கிறது. பின்னர், விருட்சம் தொடர்ந்தும் வளர்வதால், சனத்தொகை படிப்படியாக வளர்கிறது. பின்னர் எண்ணற்ற சமயங்களும், பல அபிப்பிராயங்களும் தோன்றுகின்றன. ஒரு ஸ்ரீமத் மூலம், இந்த ஒரு தர்மம் ஸ்தாபிக்கப்படுகிறது. இரண்டு என்ற கேள்விக்கே இடமில்லை. ஆன்மீகத் தந்தை இங்கே அமர்ந்திருந்து உங்களுக்கு இந்த ஆன்மீக ஞானத்தை விளங்கப்படுத்துகிறார். குழந்தைகளாகிய நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். தந்தை உங்களுக்குக் கற்பிக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் அனுபவத்திலிருந்து பேசுகிறீர்கள். ஆகவே, கடவுள் உங்களுக்குக் கற்பிக்கிறார் என்பதை அறிந்து கொண்ட தூய பெருமையை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். உங்களுக்கு வேறு என்ன வேண்டும்? நீங்கள் உலக அதிபதிகளாகி வருகிறீர்கள், அப்படி இருந்தும் ஏன் அந்தச் சந்தோஷம் இருப்பதில்லை? அல்லது, உங்கள் நம்பிக்கையில் உங்களுக்குச் சந்தேகம் ஏற்படுகிறதா? தந்தையைப் பற்றி எந்தச் சந்தேகமும் இருக்கக் கூடாது. மாயை சந்தேகங்களைக் கொண்டு வந்து உங்களை அவரை மறக்கச் செய்கிறாள். கண்கள் மூலம் மாயை உங்களைப் பெருமளவுக்கு ஏமாற்றுகிறாள் என பாபா விளங்கப்படுத்தி உள்ளார். நீங்கள் சுவையான எதையாவது பார்க்கும் பொழுது, அதை உண்ணும் ஆசை உங்களுக்கு ஏற்படுகிறது. உங்கள் கண்கள் எதையாவது பார்க்கும் பொழுது, கோபம் வெளிப்பட்டு, நீங்கள் எவரையாவது அடிக்க விரும்புகிறீர்கள். நீங்கள் அந்த நபரைப் பார்க்காது விட்டால், நீங்கள் அவரை அடிக்க மாட்டீர்கள். உங்கள் கண்கள் மூலம் நீங்கள் எதையாவது பார்க்கும் பொழுதே, அங்கு பேராசையுடன் பற்றும் ஏற்படுகின்றன. கண்களே உங்களை ஏமாற்றும் பிரதான புலன்கள். நீங்கள் அவற்றின் மீது முழுக் கவனத்தையும் வைத்திருக்க வேண்டும். ஆத்மாக்களாகிய நீங்கள் இந்த ஞானத்தைப் பெறும்பொழுது, உங்கள் குற்ற நடத்தைகள் அனைத்தும் நிறுத்தப்படுகின்றன. உங்கள் கண்களை நீங்கள் அகற்ற வேண்டும் என்பதல்ல. நீங்கள் உங்கள் குற்றப் பார்வையைக் குற்றம் அற்றதாக்க வேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. கடவுள் உங்களுக்குக் கற்பிக்கிறார் என்னும் சந்தோஷத்தையும், போதையையும் எப்பொழுதும் பேணுங்கள். எதைப் பற்றியும் எச்சந்தேகத்தையும் கொள்வதற்கு உங்கள் புத்தியை ஒருபொழுதும் அனுமதிக்காதீர்கள். தூய பெருமையைப் பேணுங்கள்.

2. சூட்சும உலகத்து விடயங்களில் அதிகளவு ஆர்வத்தைக் கொண்டிருக்காதீர்கள். ஆத்மாவைச் சதோபிரதான் ஆக்குவதற்கு முழு முயற்சி செய்யுங்கள். அனைவருக்கும் தந்தையின் உண்மையான அறிமுகத்தை எவ்வாறு கொடுப்பது என உங்கள் மத்தியில் கலந்துரையாடுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் முயற்சியின் வேகத்தைத் தீவிரமாகவும் உங்களின் தடைகளைச் சக்திவாய்ந்தவையாகவும் வைத்திருப்பதன் மூலம் மிகச்சரியான யோகியாகி திறமைச் சித்தி எய்துவீர்களாக.

தற்சமயத்திற்கேற்ப, உங்களின் முயற்சியின் வேகம், தீவிரமாகவும் உங்களின் தடைகள் சக்திவாய்ந்தவையாகவும் இருக்க வேண்டும். அப்போது மட்டுமே இறுதியில் உங்களால் திறமைச் சித்தி அடைய முடியும். ஏனென்றால், அந்த நேரத்தின் சூழ்நிலைகள் உங்களின் புத்தியில் பல எண்ணங்களைத் தோற்றுவிக்கும். அந்த வேளையில், சகல எண்ணங்களுக்கும் அப்பால் சென்று, ஒரே எண்ணத்தில் ஸ்திரமாக இருக்கும் பயிற்சி உங்களிடம் இருக்க வேண்டும். உங்களின் மனம் விரிவாக்கத்தில் சிதறி இருக்குமாயின், நீங்கள் நிறுத்தும் பயிற்சியைக் கொண்டிருப்பது அவசியம். நீங்கள் ‘நில்’ என்று சொன்னதும், அது நிற்க வேண்டும். நீங்கள் விரும்பும்போது, விரும்பியவாறு ஒரே எண்ணத்தில் உங்களின் புத்தியை ஸ்திரமாக்குங்கள் - இதுவே மிகச்சரியான யோகம் ஆகும்.

சுலோகம்:
நீங்கள் கீழ்ப்படிவான சேவகர்கள். அதனால் நீங்கள் அக்கறையற்றவராக இருக்க முடியாது. ஒரு சேவகர் என்றால் எப்போதும் சேவையில் பிரசன்னமாக இருப்பவர் என்று அர்த்தம்.

அவ்யக்த சமிக்கை: எண்ணங்களின் சக்தியைச் சேமித்து மேன்மையான சேவைக்கு கருவியாகுங்கள்.

உங்களுக்கு ஓர் ஊசிமருந்தை ஏற்றுவதன் மூலம் உங்களின் இரத்தத்திற்கு சக்தி ஏற்ற முடியும். அதேபோல், உங்களின் மேன்மையான எண்ணங்கள் ஊசிமருந்தைப் போல் செயல்படும். உங்களின் எண்ணங்களால் ஆத்மாக்கள் தமது எண்ணங்களில் சக்தியைப் பெறுகின்ற அந்த வகையான சேவையே இப்போது தேவைப்படுகிறது. உங்களின் சொந்தப் பாதுகாப்பிற்காகவும் பயமற்ற தன்மையை விருத்தி செய்யவும் தூய, மேன்மையான எண்ணங்களின் சக்தியைச் சேமியுங்கள். அப்போது மட்டுமே முடிவு அழகாக இருக்கும். அப்போது உங்களால் எல்லையற்ற பணியில் ஒத்துழைப்பவராகி, எல்லையற்ற உலக இராச்சியத்திற்கான உரிமையைப் பெற முடியும்.