11.10.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நிரந்தர அமைதிக்கும் சந்தோஷத்துக்குமான பாதையை அனைவருக்கும் காண்பிப்பதே, உங்கள் கடமையாகும். அமைதி நிறைந்தவராக இருந்து, அனைவருக்கும் அமைதியின் வெகுமதியை கொடுங்கள்.

கேள்வி:
எந்த ஆழமான இரகசியத்தைப் புரிந்து கொள்வதற்கு நீங்கள் ஓர் எல்லையற்ற புத்தியைக் கொண்டிருப்பது அவசியமாகும்?

பதில்:
நாடகத்தின் காட்சிகள், அவற்றுக்குரிய நேரத்தில் நடிக்கப்படும். நாடகத்துக்கு மிகச்சரியான ஆயுட்காலம் உள்ளது. தந்தையும் அவருக்குரிய மிகச்சரியான நேரத்தில் வருகிறார். இதில் ஒரு விநாடி வித்தியாசம்கூட இருக்க முடியாது. மிகச்சரியாக 5000 வருடங்களுக்குப் பின்னர் தந்தை வந்து இவரில் பிரவேசிக்கிறார். இந்த ஆழமான இரகசியத்தைப் புரிந்து கொள்வதற்கு, உங்களுக்கு ஓர் எல்லையற்ற புத்தி தேவை.

பாடல்:
முழு உலகுமே மாறினாலும், நாங்கள் ஒருபொழுதும் மாறமாட்டோம்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கே அமர்ந்திருந்து ஆன்மீகக் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகிறார். அவர் குழந்தைகளாகிய உங்களுக்கு அமைதி தாமத்துக்கும், சந்தோஷ தாமத்துக்குமான பாதையைக் காட்டுகிறார். இந்நேரத்தில், உலகில் மனிதர்கள் அனைவரும் அமைதியை வேண்டுகிறார்கள். அனைவரும் தனிப்பட்ட அமைதியையும், உலகில் அமைதியையும் வேண்டுகிறார்கள். அனைவரும் கூறுகிறார்கள்: “எனக்கு மன அமைதி தேவை”. ஆனால் அவர்கள் அதை எங்கே அடைய முடியும்? அமைதிக்கடலாகிய தந்தையிடம் இருந்தே உங்கள் ஆஸ்தியைப் பெறமுடியும். நாங்கள் தனிப்பட்ட முறையிலும், மொத்தமாகவும் அதைப் பெற்றுக் கொள்கிறோம், அதாவது, அனைவரும் அதனைப் பெற முடியும். தங்கள் சந்தோஷ ஆஸ்தியைத் தாங்கள் கோருவதற்கு, தாங்கள் முயற்சி செய்கிறார்கள் எனக் கற்கின்ற குழந்தைகளால் புரிந்துகொள்ள முடிவதுடன், அவர்கள் ஏனையோருக்குப் பாதையையும் காட்டுகிறார்கள். அவர்கள் தங்களுடைய ஆஸ்தியைக் கோருவதற்காக வந்தாலும், வராவிட்டாலும் நிச்சயமாக உலகில் அமைதி நிலவும். குழந்தைகள் அனைவருக்கும் அமைதியைக் கொடுப்பதே, குழந்தைகளாகிய உங்களின் கடமையாகும். இருவர் அல்லது நால்வர் மாத்திரம் இந்த ஆஸ்தியைப் பெற்றார்கள் எனில், அதில் என்ன நன்மை இருக்கும் என நீங்கள் சிந்திக்கக் கூடாது. சிலர் பாதையைக் காட்டுகிறார்கள், ஆனால் அவர்களுக்கு நம்பிக்கை இல்லாத காரணத்தினால், தங்களைப் போன்று ஏனையோரை ஆக்குவதற்கு அவர்களால் இயலாதுள்ளது. புத்தியில் நம்பிக்கை உடையவர்கள், தாங்கள் பாபாவிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெறுகிறோம் என்பதைப் புரிந்து கொள்கிறார்கள். இத்தகைய ஆசீர்வாதங்கள் கொடுக்கப்படுகின்றன: நீங்கள் நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பீர்களாக! நீங்கள் செல்வந்தர் ஆகுவீர்களாக! வெறுமனே அதனைக் கூறுவதால், உங்களால் ஆசீர்வாதங்களைப் பெறமுடியாது. அவர்கள் ஆசீர்வாதங்களைக் கேட்டபின், அவர்களுக்கு விளங்கப்படுத்தப்படுகிறது: உங்களுக்கு அமைதி வேண்டுமானால், இவ்விதமாக முயற்சி செய்யுங்கள். முயற்சி செய்வதால், உங்களால் எதையும் பெற முடியும். பக்தி மார்க்கத்தில் அவர்கள் பல்வேறு ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள். தங்கள் தாய், தந்தை, ஆசிரியர், குரு போன்ற அனைவரிடம் இருந்தும் அமைதி நிறைந்தவராகவும், சந்தோஷமாகவும் இருப்பதற்காக அவர்கள் ஆசீர்வாதங்களை வேண்டுகிறார்கள். எவ்வாறாயினும், அவர்களால் அவ்வாறு இருக்க இயலாதுள்ளது. ஏனெனில் பல்வேறு மனிதர்கள் உள்ளார்கள். ஆகவே, அவர்களால் எவ்வாறு சந்தோஷத்தையும், அமைதியையும் பெற முடியும்? அவர்கள் பாடவும் செய்கிறார்கள்: ஓ அமைதியை அருள்பவரே. அது புத்தியில் பிரவேசிக்கிறது: ஓ பரமாத்மாவாகிய பரமதந்தையே, எங்களுக்கு அமைதி என்ற வெகுமதியை கொடுங்கள். உண்மையில், இது நீங்கள் பெற்று, பிறருக்கு கொடுக்கின்ற ஒன்றாகும்,

கூறப்பட்டுள்ளது: இதுவே உங்கள் பரிசாகிய வெகுமதியாகும். தந்தை கூறுகிறார்: ஒருவர் எவ்வளவுதான் செல்வம், கட்டடங்கள், ஆடைகள் போன்றவற்றைத் தானமாகக் கொடுப்பினும், அந்தத் தானங்களும், புண்ணியமும் தற்காலிகமானவையாகும். மனிதர்கள் மனிதர்களுக்குக் கொடுக்கிறார்கள். செல்வந்தர்கள் ஏழைகளுக்குக் கொடுக்கிறார்கள்: செல்வந்தர்கள் செல்வந்தர்களுக்கும் கொடுக்கிறார்கள். எவ்வாறாயினும், இங்கு உங்களுக்கு நிரந்தர அமைதியும், சந்தோஷமும் உள்ளன. இங்கு ஒரு பிறவிக்குக்கூட சந்தோஷத்தையோ அல்லது அமைதியையோ எவராலும் கொடுக்க முடியாது. ஏனெனில் தமக்காகவேனும் எவரிடமும் அது இல்லை. ஒரேயொரு தந்தை மாத்திரமே இதைக் கொடுக்கிறார். அவரே சந்தோஷக்கடலும், அமைதிக்கடலும், தூய்மைக்கடலும் ஆவார். அதிமேன்மையான தந்தையின் புகழ் மாத்திரமே பாடப்படுகிறது. அவரிடமிருந்து மாத்திரமே அமைதியைப் பெறமுடியும் என அவர்கள் நம்புகிறார்கள். அது பக்தி மார்க்கம். ஆதலால் அவர்கள் அந்த சாதுக்கள், புனிதர்களிடம் செல்கிறார்கள். ஆகவே, அவர்கள் தொடர்ந்தும் ஒரு வட்டத்துக்குள் சுற்றிச் செல்கிறார்கள். அம்முயற்சிகள் அனைத்தும் தற்காலிகமானவை. குழந்தைகளாகிய நீங்கள் அவை அனைத்தையும் செய்வதை நிறுத்தி உள்ளீர்கள். நீங்கள் எழுதவும் செய்கிறீர்கள்: நீங்கள் எல்லையற்ற தந்தையிடம் இருந்து 100 சதவீதம் சந்தோஷம், அமைதி, தூய்மை என்னும் ஆஸ்தியைக் கோரமுடியும். இப்பொழுது இங்கு 100சதவீதம் தூய்மையின்மை, துன்பம், அமைதியின்மையே உள்ளது. ஆனால், மனிதர்கள் இதைப் புரிந்து கொள்வதில்லை. ரிஷிகள், முனிவர்கள் போன்றோர் தூய்மையானவர்கள் என அவர்கள் கூறுகிறார்கள். இருப்பினும், படைப்பு நஞ்சின் மூலமே இடம்பெறுகிறது. இதுவே பிரதான விடயமாகும். இராவண இராச்சியத்தில் தூய்மை இருக்க முடியாது. ஒரு தந்தை மாத்திரமே தூய்மைக்கடலும், சந்தோஷக்கடலும், அமைதிக்கடலும் ஆவார். நாங்கள் 21 பிறவிகளுக்கு எங்கள் ஆஸ்தியைப் பெறுகிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அது அரைக்கல்பமாக, 2500 வருடங்களுக்குச் சிவபாபாவிடம் இருந்து பெறப்படுகிறது என்பதே அதன் அர்த்தமாகும். இதற்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. அரைக்கல்பத்துக்கு சந்தோஷ தாமமும், மற்றைய அரைக்கல்பத்துக்கு துன்ப தாமமும் உள்ளது. உலகத்துக்கு இரு பாகங்கள் உள்ளன. ஒன்று புதியதும், மற்றையது பழையதும் ஆகும். எவ்வாறாயினும், அது எப்பொழுது புதியதாகும் எனவும், எப்பொழுது பழையதாகும் எனவும் எவரும் அறிய மாட்டார்கள். விருட்சத்தின் வயதை எவராலும் மிகச்சரியாகக் கூறமுடியாது. இப்பொழுது நீங்கள் இவ்விருட்சத்தைப் பற்றித் தந்தையிடம் இருந்து கற்றுள்ளீர்கள். இவ்விருட்சத்தின் வயது 5000 வருடங்கள் ஆகும். நீங்கள் மாத்திரமே அதன் மிகச்சரியான வயதை அறிவீர்கள். ஏனைய விருட்சங்களின் வயதை எவரும் அறிய மாட்டார்கள். அவர்களால் அதை மதிப்பிட மாத்திரமே முடியும். புயல்கள் வருகின்றன, விருட்சங்கள் வீழ்கின்றன, அவற்றின் வாழ்க்கை முடிவடைகிறது. மனிதர்களும் திடீரென மரணிக்கிறார்கள். இந்த எல்லையற்ற விருட்சத்தின் வயது மிகச்சரியாக 5000 வருடங்கள் ஆகும். இதை விடவும் ஒரு நாள் அதிகமாகவோ அல்லது ஒரு நாள் குறைவாகவோ இருக்க முடியாது. இவ்விருட்சம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதில் மாற்றம் இருக்க முடியாது. நாடகத்தில் வரும் காட்சிகள், அவை வரவேண்டிய நேரத்தில் வரும். நாடகம் திரும்பத் திரும்ப ஒரேவிதமாகவே இடம்பெற வேண்டும். அதன் வயதும் மிகச்சரியானதாகும். புதிய உலகை ஸ்தாபிப்பதற்குத் தந்தை வரவேண்டும். அவரும் மிகச்சரியான நேரத்திலேயே வருகிறார். இதில் ஒரு விநாடி வித்தியாசம்கூட இருக்க முடியாது. இப்பொழுது உங்கள் புத்திகள் எல்லையற்றவை. மிகச்சரியாக 5000 வருடங்களின் பின்னர் தந்தை வந்து இச்சரீரத்தில் பிரவேசிக்கிறார் என்பதை நீங்கள் மாத்திரமே புரிந்து கொள்கிறீர்கள். இதனாலேயே “சிவராத்திரி” என்பது கூறப்பட்டுள்ளது. கிருஷ்ணரையிட்டு, அவர்கள் “ஜனமாஷ்டமி” எனக் கூறுகிறார்கள், அவர்கள் “சிவனின் பிறந்த தினம்” எனக் கூறுவதில்லை. அவர்கள் “சிவனின் இராத்திரி” என்றே கூறுகிறார்கள். இது ஏனெனில் பிறப்பு இருப்பின், இறப்பும் இருக்கும். மனிதர்களுக்காக “பிறந்த தினம்” எனக் கூறப்பட்டுள்ளது. சிவனுக்கு, எப்பொழுதும் “சிவராத்திரி” என்றே கூறப்பட்டுள்ளது. உலகில் உள்ள எவரும் இவ்விடயங்களைப் பற்றி எதையும் அறியார். அவர்கள் ஏன் அதைச் சிவராத்திரி என அழைக்கிறார்கள் எனவும், அவர்கள் ஏன் அதை ஜனமாஷ்டமி என அழைப்பதில்லை எனவும் நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அவருடைய பிறந்ததினம் தெய்வீகமானதும், தனித்துவமானதும் ஆகும். இதைப் போன்றதொரு பிறப்பு வேறு எவருக்கும் இருக்க முடியாது. எவ்வாறு சிவபாபா வருகிறார், அல்லது அவர் எப்பொழுது வருகிறார் என்பது எவருக்கும் தெரியாது. சிவராத்திரியின் அர்த்தத்தை நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். இதுவே எல்லையற்ற இரவாகும். பக்தியின் இரவு முடிவடையும் பொழுது, பகல் வருகிறது. பிரம்மாவின் இரவும், பிரம்மாவின் பகலும் பிராமணர்களுக்கானதே ஆகும். அது பிரம்மாவைப் பற்றிய ஒரு நாடகம் மாத்திரமல்ல. இப்பொழுது பகல் ஆரம்பமாகப் போகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். கற்ற பின்னர் நீங்கள் உங்களுடைய வீட்டை அடைவீர்கள். பின்னர் நீங்கள் பகலுக்குள் வருவீர்கள். கூறப்பட்டுள்ளது: அரைக்கல்பத்துக்குப் பகலும், மற்றைய அரைக்கல்பத்துக்கு இரவும் உள்ளது. எவ்வாறாயினும், இது எவருடைய புத்தியிலும் பிரவேசிப்பதில்லை. கலியுகத்தின் 40,000 வருடங்கள் இன்னமும் எஞ்சியுள்ளன எனவும், சத்தியயுகம் 100,000 வருடங்களைக் கொண்டது எனவும் அம்மக்கள் கூறுகிறார்கள். அவ்வாறாயின், அரைக்கு அரை என்னும் ஒரு கணக்கீடு இருக்க முடியாது. சக்கரத்தின் ஆயுட்காலத்தை எவரும் அறியார். முழு உலகினதும் ஆரம்பம், மத்தி, இறுதியை நீங்கள் அறிவீர்கள். 5000 வருடங்களின் பின்னர், உலகம் மற்றுமொரு சக்கரத்தினூடாகச் செல்கிறது. இருப்பினும், அது அதே உலகம் ஆகும். அதில் தங்கள் பாகங்களை நடிப்பதன் மூலம் மனிதர்கள் களைப்படைந்து விட்டார்கள்: இது என்ன வருவதும், போவதும்? அது வருவதும் போவதுமான 8.4 மில்லியன் பிறவிகளைப் பற்றியது எனின், என்ன நடக்கும் என்பதை யார் அறிவார்? அறியாமை காரணமாக அவர்கள் சக்கரத்தின் ஆயுட்காலத்தை நீடித்து விட்டார்கள். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் தனிப்பட்ட முறையில் தந்தையுடன் கற்கிறீர்கள். அவருக்கு முன்னால் நடைமுறைரீதியில் நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள் என்பதை நீங்கள் உள்ளுர உணர்கிறீர்கள். நிச்சயமாக, மேன்மையான சங்கமயுகம் வரவேண்டும். அது எப்பொழுது வருகிறது அல்லது எவ்வாறு வருகிறது என்பதைக் குழந்தைகளாகிய உங்களைத் தவிர எவரும் அறியார்; ஆகவே குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு சந்தோஷத்தில் திளைத்திருக்க வேண்டும். கல்பம் கல்பமாக நீங்களே தந்தையிடமிருந்து இராச்சியத்தைக் கோருபவர்கள் ஆவீர்கள். வேறு வார்த்தைகளில் சொல்வதெனில், நீங்கள் மாயையை வெற்றி கொள்கிறீர்கள். பின்னர், தோற்கடிக்கப்படுகிறீர்கள். இதுவே எல்லையற்ற தோல்வியும் வெற்றியும் ஆகும். அந்த அரசர்கள் அதிகளவு தோல்வியையும் வெற்றியையும் அனுபவம் செய்கிறார்கள். பல யுத்தங்கள் உள்ளன. அவர்கள் ஒரு சிறு யுத்தத்தை வென்றாலே, அவர்கள் கூறமுடியும்: இப்பொழுது நாங்கள் வென்றுவிட்டோம். அவர்கள் எதனை வெல்கிறார்கள்? ஒரு சிறு நிலத்துண்டையே அவர்கள் வெல்கிறார்கள். அவர்கள் ஒரு பெரிய யுத்தத்தில் தோற்கும் பொழுது, கொடியை இறக்குகிறார்கள். முதலில், ஓர் அரசர் மாத்திரம் இருக்கிறார். பின்னர் விரிவாக்கம் உள்ளது. முதலில், இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் இருக்கிறது. பின்னர், ஏனைய அரசர்கள் வர ஆரம்பிக்கின்றார்கள். எவ்வாறு முதலில் ஒரு பாப்பரசர் இருந்தார், பின்னர், எவ்வாறு வரிசைக்கிரமமாக ஏனைய பாப்பரசர்கள் வந்தார்கள் என அவர்கள் காண்பிப்பதைப் போன்று அது உள்ளது. எவருக்கேனும் எப்பொழுது மரணம் ஏற்படும் என்பது நிச்சயம் இல்லை. பாபா எங்களை அமரத்துவமானவர்கள் ஆக்குகிறார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அவர் எங்களை அமரத்துவ தாமத்தின் அதிபதிகள் ஆக்குகிறார். அதிகளவு சந்தோஷம் இருக்க வேண்டும். இது மரண தாமமும், அது அமரத்துவ உலகமும் ஆகும். புதியவர்கள் எவரும் இவ்விடயங்களைப் புரிந்து கொள்ள முடியாது. பழையவர்கள் மகிழ்ச்சி அடைவதைப் போன்று, அவர்கள் மகிழ்ச்சி அடைவதில்லை. நாளுக்கு நாள், வளர்ச்சி உள்ளது. நம்பிக்கை உறுதி ஆகுகிறது. பெருமளவுக்குச் சகிப்புத்தன்மை இருக்க வேண்டும். இது அசுர உலகமாகும். துன்பத்தை விளைவிப்பதற்கு அவர்களுக்கு நேரம் எடுப்பதில்லை. ஆத்மாக்களாகிய நீங்கள் கூறுகிறீர்கள்: இப்பொழுது நாங்கள் பாபாவின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுகிறோம். நாங்கள் சங்கமயுகத்தில் இருக்கிறோம், ஏனைய அனைவரும் கலியுகத்தில் இருக்கிறார்கள். நாங்கள் அதிமேன்மையானவர்கள் ஆகுகிறோம். இக்கல்வியின் மூலம் நாங்கள் அதியுயர்ந்த மனிதர்கள் ஆகுகிறோம். கற்பதனால் மாத்திரமே ஒருவர் தலைமை நீதிபதி ஆகுகிறார். தந்தை உங்களுக்குக் கற்பிக்கிறார். நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப, இக்கல்வியின் மூலம் நீங்கள் ஓர் அந்தஸ்தைக் கோருகிறீர்கள். ஒருவர் தான் கற்பதற்கேற்பவே ஒரு தரத்தைப் பெறுகிறார். இதில் இராச்சியத்தைக் கோருவதற்கான ஒரு தரம் உள்ளது. அக்கல்வியில், ஓர் இராச்சியத்துக்கான ஒரு தரம் இல்லை. நீங்கள் அரசர்களுக்கெல்லாம் அரசர் ஆகுகிறீர்கள் என்பதை அறிவீர்கள். ஆகவே, அந்தளவிற்கு உங்களுக்கு உள்ளுர சந்தோஷம் இருக்க வேண்டும். நாங்கள் மிகவும் மேன்மையானவர்களாகவும், இரட்டைக் கிரீடம் உடையவர்களாகவும் ஆகுகிறோம். தந்தையாகிய கடவுளே எங்களுக்குக் கற்பிக்கிறார். எவ்வாறு அசரீரியான தந்தை வந்து கற்பிக்கிறார் என்பதை எவரும் புரிந்துகொள்ள முடியாது. மனிதர்கள் அழைக்கிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வந்து எங்களைத் தூய்மை ஆக்குங்கள்! இருப்பினும், அவர்கள் தூய்மை ஆகுவதில்லை. தந்தை கூறுகிறார்: காமமே கொடிய எதிரியாகும். ஒருபுறம், “ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்!” என நீங்கள் அழைக்கிறீர்கள். இப்பொழுது நான் வந்துவிட்டேன். நான் கூறுகிறேன்: குழந்தைகளே, தூய்மையற்றவர்கள் ஆகுவதை நிறுத்துங்கள். ஆகவே, நீங்கள் ஏன் தூய்மை அற்றவர்களாக ஆகுவதை நிறுத்தக்கூடாது? தந்தை உங்களைத் தூய்மை ஆக்குவதாகவும், நீங்கள் தொடர்ந்தும் தூய்மை அற்றவர்கள் ஆகுவதாகவும் இருக்கக்கூடாது. பலர் இவ்வாறு தூய்மை அற்றவர்கள் ஆகுகிறார்கள். சிலர் உண்மையைக் கூறுகிறார்கள்: பாபா, நான் இத்தவறைச் செய்தேன். பாபா கூறுகிறார்: நீங்கள் எப்பாவச் செயலையாவது செய்திருப்பின், உடனடியாக பாபாவிடம் கூறுங்கள். சிலர் உண்மையைக் கூறுகிறார்கள், சிலர் பொய்களைக் கூறுகிறார்கள். எவ்வாறாயினும், கேட்பவர் யார்? உங்கள் ஒவ்வொருவரினுள்ளும் என்ன நடக்கிறது என்பதை நான் இங்கே அமர்ந்திருந்து கண்டுபிடிக்கப் போவதில்லை. அது சாத்தியமல்ல. நான் ஆலோசனை கொடுப்பதற்கு மாத்திரமே வருகிறேன். நீங்கள் தூய்மை ஆகாது விட்டால், அது உங்களுக்கே இழப்பை ஏற்படுத்துகிறது. தூய்மையாக முயற்சி செய்த பின்னர் தூய்மை அற்றவர்கள் ஆகினால், நீங்கள் சம்பாதித்துள்ள வருமானம் அழிக்கப்படும். நீங்கள் தூய்மை அற்றுவிட்டீர்கள் என நீங்கள் வெட்கப்படுவீர்கள். அச்சமயத்தில், ஏனையோரைத் தூய்மை ஆகுமாறு எவ்வாறு உங்களால் கூறமுடியும்? நீங்கள் எந்தளவுக்குக் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் இருந்தீர்கள் என உங்கள் மனச்சாட்சி உங்களை உள்ளுர உறுத்தும். இங்கு, நீங்கள் தந்தைக்கு ஒரு நேரடிச் சத்தியம் செய்கிறீர்கள். பாபா எங்களைச் சந்தோஷ தாமத்தினதும், அமைதி தாமத்தினதும் அதிபதிகள் ஆக்குகிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் உங்கள் முன் பிரசன்னமாக இருக்கிறார். நாங்கள் அவரின் முன்னிலையில் தனிப்பட்ட முறையில் அமர்ந்திருக்கிறோம். இவரிடம் முன்னர் இந்த ஞானம் இருக்கவுமில்லை, அவர் அதை ஒரு குருவிடமிருந்து பெறவுமில்லை. அவருக்கு ஒரு குரு இருந்திருப்பின், அந்த குரு ஒருவருக்கு மாத்திரமே இந்த ஞானத்தைக் கொடுத்திருப்பாரா? குருமார்களின் பல சிஷ்யர்கள் உள்ளார்கள், ஒருவர் மாத்திரம் இருக்க மாட்டார். இவ்விடயங்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஒரேயொரு சற்குரு மாத்திரமே இருக்கிறார், அவரே எங்களுக்குப் பாதையைக் காட்டுகிறார். பின்னர் நாங்கள் அதை ஏனையோருக்குக் காண்பிக்கிறோம். தந்தையை நினைவு செய்யுமாறு நீங்கள் அனைவரிடமும் கூறுகிறீர்கள், அவ்வளவுதான்! அதிமேலான தந்தையை நினைவு செய்வதால், நீங்கள் ஒரு மேன்மையான அந்தஸ்தைக் கோருவீர்கள். நீங்கள், அரசர்க்கு எல்லாம் அரசர்கள் ஆகுகிறீர்கள். உங்களிடம் கணக்கிட முடியாத செல்வம் இருக்கும். நீங்கள் உங்கள் புத்தியை நிரப்புகிறீர்கள். பாபா, எங்கள் புத்தியை அதிகளவுக்கு நிரப்புகிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். குபேரனிடம் பெருமளவு செல்வம் இருந்தது எனக் கூறப்பட்டுள்ளது. உண்மையில், நீங்கள் ஒவ்வொருவரும் குபேரர்கள் ஆவீர்கள். நீங்கள் சுவர்க்கம் என்ற ரூபத்தில் பொக்கிஷங்களைப் பெறுகிறீர்கள். நண்பனாகிய, கடவுளின் கதை உள்ளது. அவர் முதலில் சந்திப்பவர்களுக்கு எல்லாம் ஒருநாள் இராச்சியத்தை கொடுப்பது வழக்கம். இவ்விடயங்கள் அனைத்தும் உதாரணங்களாகும். அல்லா என்றால் தந்தை ஆவார். அவரே முதல் தர்மத்தைப் படைப்பவர் ஆவார். உங்களுக்குக் காட்சிகள் கிடைத்திருந்தன. நீங்கள் உண்மையில் யோகசக்தி மூலம் உலக இராச்சியத்தைக் கோருகிறீர்கள் என்பதை அறிவீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இந்த அசுர உலகில் நீங்கள் மிக மிகச் சகிப்புத்தன்மை உடையவர் ஆகவேண்டும். ஒருவர் உங்களை அவதூறு செய்தாலோ அல்லது உங்களைச் சந்தோஷம் அற்றவர் ஆக்கினாலோ, நீங்கள் அதைச் சகித்துக் கொள்ள வேண்டும். ஒருபொழுதும் தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதை நிறுத்தி விடாதீர்கள்.

2. தந்தை உங்களுக்குத் தூய்மை ஆகுவதற்குரிய ஒரு நேரடிக் கட்டளையைக் கொடுத்துள்ளார். ஆகவே, என்றுமே தூய்மை அற்றவர் ஆகாதீர்கள். நீங்கள் ஒரு பாவத்தைச் செய்தால், அதை மறைக்காதீர்கள்.

ஆசீர்வாதம்:
ஒரேயொருவருக்குச் சொந்தமாகவும் சிக்கனமாகவும் இருக்கும் பாடத்தைக் கற்றுக் கொள்வதன் மூலம் எந்தவொரு குழப்பத்திலும் ஆட்ட, அசைக்க முடியாதவர் ஆகுவீர்களாக.

இந்தக் காலத்திற்கேற்ப, எங்கும் அமைதியின்மை மற்றும் குழப்பத்தின் சூழல் அதிகரித்து வருகிறது. இத்தகைய வேளையில், ஆட்ட, அசைக்க முடியாதவர் ஆகுவதற்கு, உங்களின் புத்தியின் இணைப்பைத் தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு, உங்களுக்கு நேரத்திற்கேற்ப தொடுகை மற்றும் பிடித்துக் கொள்ளும் சக்திகள் தேவை. இவற்றை அதிகரிப்பதற்கு, நீங்கள் ஒரேயொருவருக்குச் சொந்தமாகவும் சிக்கனமாகவும் இருக்க வேண்டும். ஒரேயொருவருக்குச் சொந்தமானவர்கள், சிக்கனமாக இருப்பார்கள். அவர்களுக்குத் தெளிவான இணைப்பு இருப்பதுடன் அவர்களால் பாப்தாதாவின் வழிகாட்டல்களை இலகுவாகப் பிடித்துக் கொள்ளக்கூடியதாகவும் இருக்கும். எந்தவொரு குழப்பத்தின் மத்தியிலும் அவர்கள் ஆட்ட, அசைக்க முடியாதவர்களாக இருப்பார்கள்.

சுலோகம்:
எந்தவொரு புற ஆசைகளை அல்லது சூட்சுமமான ஆசைகளைத் துறவுங்கள். உங்களால் எந்தவொரு சூழ்நிலைக்கும் முகங்கொடுக்க முடியும்.

அவ்யக்த சமிக்ஞை: யோக சக்திகளுடன் உங்கள் மனதால் உங்களுடனும் மற்றவர்களுடனும் பரிசோதனை செய்யுங்கள்.

இப்போது, உங்களின் மனதின் தரத்தை அதிகரியுங்கள். தரம்வாய்ந்த ஆத்மாக்கள் உங்களுக்கு நெருக்கமாக வருவார்கள். இதன் மூலம் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் இரட்டிப்புச் சேவை இடம்பெறும். உங்களுக்காக நீங்கள் வேறாக எதையும் செய்ய வேண்டியதில்லை. வெகுமதியைப் பெற்றுள்ள ஸ்திதியை நீங்கள் அனுபவம் செய்வீர்கள். தற்சமயத்திற்கான மேன்மையான வெகுமதி என்னவென்றால், சகல பேறுகளாலும் சதா நிரம்பியிருப்பதுடன் மற்றவர்களையும் நிறைந்திருக்கச் செய்வதே ஆகும்.