12.06.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய விவேகிக் குழந்தைகளே, நீங்கள் ஒவ்வொருவரும் ஓர் அழிவற்ற ஆத்மா என்பதை எப்பொழுதும் நினைவு செய்யுங்கள். நீங்கள் இப்பொழுது தந்தையுடன் முதலாம் மாடிக்குச் செல்ல வேண்டும்.

கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் நிச்சயமாகச் செய்ய வேண்டிய முயற்சி என்ன?

பதில்:
பாபா உங்களுக்குக் கொடுக்கின்ற இந்த ஞானம் அனைத்தையும் தொடர்ந்தும் உங்கள் இதயத்தில் வைத்திருங்கள். அதனை உங்களுக்குள் கடைந்து ஜீரணித்துக் கொள்ளுங்கள். இதனைச் செய்வதனால், நீங்கள் சக்தியைப் பெறுவீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் நிச்சயமாக இம்முயற்சியைச் செய்ய வேண்டும். இம்மறைமுகமான முயற்சியைச் செய்பவர்கள் சதா மலர்ச்சியாக இருக்கிறார்கள். யார் தங்களுக்குக் கற்பிப்பவர், எவரின் முன்னால் தாங்கள் அமர்ந்திருக்கிறார்கள் எனும் போதை அவர்களுக்கு உள்ளது.

ஓம் சாந்தி.
இதனைக் கூறியவர் யார்? அது இரண்டு தடவைகள் கூறப்பட்டுள்ளது: ஓம் சாந்தி, ஓம்சாந்தி. சிவபாபா அதனை ஒருமுறை கூறினார், பிரம்மபாபா அதனை ஒருமுறை கூறினார். பாப்பும், தாதாவும் இணைந்துள்ளதனால், அவர்கள் இருவரும் “ஓம்சாந்தி, ஓம் சாந்தி” எனக் கூற வேண்டும். யார் அதனை முதலில் கூறியவர்? யார் அதனை இரண்டாவதாகக் கூறியவர்? முதலில், சிவபாபா, “ஓம்சாந்தி, நான் அமைதிக் கடல்” எனக் கூறினார். அதன்பின்னர் அதனைக் கூறியவர் யார்? தாதாவின் ஆத்மாவே அதனைக் கூறினார். பாபா குழந்தைகளான உங்களுக்கு நினைவூட்டுகிறார்: ஓம் சாந்தி. நான் எப்பொழுதும் ஆத்ம உணர்வுடையவர். நான் ஒருபொழுதும் சரீர உணர்வுடையவர் ஆகுவதில்லை. ஒரேயொரு தந்தை மாத்திரமே சதா ஆத்ம உணர்வில் இருக்கிறார். பிரம்மா, விஷ்ணு, சங்கரர் இதனைக் கூற மாட்டார்கள். பிரம்மா, விஷ்ணு, சங்கரருக்குக் கூட சூட்சும ரூபங்கள் உள்ளன என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆகவே, தனக்கெனச் சொந்தமாகச் சரீரத்தைக் கொண்டிராத சிவபாபாவே “ஓம்சாந்தி” எனக் கூறுகிறார். தந்தை உங்களுக்கு மிகவும் தெளிவாக விளங்கப்படுத்திக் கூறுகிறார்: நான் ஒருமுறை மாத்திரமே வருகிறேன். நான் எப்பொழுதும் ஆத்ம உணர்வுடையவர். நான் மறுபிறவிச் சக்கரத்தினுள் பிரவேசிப்பதில்லை. இதனாலேயே எனது புகழ் தனித்துவமானது. நான் அசரீரியான பரமாத்மாவாகிய பரமதந்தை என அழைக்கப்படுகிறேன். பக்தி மார்க்கத்திலும் அவர்கள் சிவனை அசரீரியான பரமாத்மாவாகிய பரமதந்தை எனக் குறிப்பிடுகின்றனர். அசரீரியானவர் வழிபடப்படுகிறார். அவர் ஒருபொழுதும் ஒரு சரீரத்தினூடாகப் பிறப்பெடுப்பதில்லை. அதாவது, அவர் ஒருபொழுதும் சரீர உணர்வு உடையவர் ஆகுவதில்லை. நல்லது, அங்கிருந்து கீழிறங்கி பிரம்மா, விஷ்ணு, சங்கரர் வசிக்கின்ற சூட்சும உலகிற்கு வாருங்கள். சிவனின் பெயரும், ரூபமும் கண்களுக்குத் தென்படுவதில்லை. அவருடைய உருவங்கள் உருவாக்கப்படுகின்றன, ஆனால் அவர் அசரீரியானவர். அவர் ஒருபொழுதும் பௌதீகமானவர் ஆகுவதில்லை. அசரீரியானவரே வழிபடப்படுகிறார். குழந்தைகளான உங்கள் புத்திகளில் இந்த ஞானம் அனைத்தும் உள்ளது. நீங்கள் பக்தி செய்துள்ளீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் படங்களைப் பார்த்துள்ளீர்கள். ஒரு சரீரம் உள்ளவர்களோ அல்லது ஒரு சரீரமற்றவரோ சத்திய, திரேதா யுகங்களில் வழிபடப்படுவதில்லை என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பரமாத்மாவாகிய பரமதந்தை சரீரமற்றவர் என்பது உங்கள் புத்திகளில் பிரவேசிக்கிறது. அவருக்குச் சூட்சும சரீரமும் இல்லை அல்லது பௌதீகச் சரீரம் இல்லை. துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவரும், தூய்மையாக்குபவரும் என்ற அவருடைய புகழ் பாடப்பட்டுள்ளது. நீங்கள் வேறு எவருடைய ரூபத்தையும் தூய்மையாக்குபவர் என குறிப்பிட மாட்டீர்கள். இவ்விடயங்கள் எம்மனிதருடைய புத்தியிலும் இருப்பதில்லை. பிரம்மா, விஷ்ணு, சங்கரர் சூட்சும உலகவாசிகள். முதலாம் மாடியும், பின்னர் இரண்டாம் மாடியும் உள்ளன. அசரீரி உலகமே அனைத்திலும் உயர்வானதும், அதுவே பரமாத்மாவாகிய பரமதந்தை வசிக்கின்ற மாடியும் ஆகும். சூட்சும சரீரங்களை உடையவர்கள் இரண்டாம் மாடியில் வசிக்கிறார்கள். பௌதீகச் சரீரதாரிகள் மூன்றாம் மாடியில் இருக்கிறார்கள். இதனையிட்டுக் குழப்பம் அடைவதற்கு எதுவுமேயில்லை. இவ்விடயங்களைப் பரமாத்மாவாகிய பரமதந்தையைத் தவிர எவராலும் விளங்கப்படுத்த முடியாது. மேலே ஆத்மாக்களின் உலகம் உள்ளது. அது அசரீரி உலகம் என அழைக்கப்படுகிறது. அதுவே அசரீரி உலகமாகிய, ஆத்மாக்களான எங்கள் அனைவரினதும் உலகமாகும். பின்னர் ஆத்மாக்களான நாங்கள் பௌதீக உலகினுள் வருகிறோம். அங்கு ஆத்மாக்கள் வசிக்கிறார்கள், இங்கோ சரீரமுடைய ஆத்மாக்கள் (உயிருள்ளவர்கள்) வாழ்கிறார்கள். இது உங்கள் புத்திகளில் இருக்க வேண்டும். நாங்கள் உண்மையிலேயே அசரீரியான பாபாவின் குழந்தைகள். நாங்களும் முதலில் அசரீரியான தந்தையுடன் வசித்தோம். ஆத்மாக்கள் அசரீரி உலகில் வசிக்கிறார்கள். இப்பொழுதும், பௌதீக ரூபத்தில் தங்கள் பாகங்களை நடிப்பதற்குத் தொடர்ந்தும் அவர்கள் கீழிறங்கி வருகிறார்கள். அதுவே அசரீரியான தந்தையின் உலகமாகும். நீங்கள் ஆத்மாக்கள் என்னும் போதை உங்களுக்கு இருக்க வேண்டும். அழிவற்ற விடயங்களின் போதை இருக்க வேண்டும். அழிகின்ற விடயங்களின் போதை இருக்கக்கூடாது. சரீரத்தின் போதை உள்ளவர்கள் சரீர உணர்வு உடையவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். யார் மேலானவர்கள்: சரீர உணர்வு உடையவர்களா அல்லது ஆத்ம உணர்வு உடையவர்களா? யார் விவேகிகள்? ஆத்ம உணர்வு உடையவர்களே விவேகிகள். ஆத்மாக்கள் அழிவற்றவர்களும், சரீரங்கள் அழியக்கூடியவையும் ஆகும். இந்த ஆத்மா கூறுகிறார்: நான் 84 பிறவிகளை எடுக்கிறேன். ஆத்மாக்களாகிய நாங்கள் பரந்தாமத்தில் தந்தையுடன் வசிக்கிறோம். நாங்கள் அங்கிருந்து எங்கள் பாகங்களை நடிப்பதற்கு இங்கு வருகிறோம் எனக் கூறுகிறோம். ஆத்மா கூறுகிறார்: ஓ பாபா! பௌதீக உலகில் பௌதீக பாபாவும், அந்த அசரீரி உலகில் அசரீரியான பாபாவும் இருக்கிறார்கள். இது மிகவும் இலகுவானதொன்று. பிரஜாபிதா பிரம்மா என்றே பிரம்மா அழைக்கப்படுகிறார்; அவர் இங்கு இருக்கிறார். அங்கு, ஆத்மாக்களாகிய நாங்கள் அனைவரும் ஒரு தந்தையின் குழந்தைகளான, சகோதரர்கள் ஆவோம். நாங்கள் தந்தை சிவனுடன் வசிக்கிறோம். பரமாத்மாவின் பெயர் சிவனும், ஆத்மாக்களின் பெயர் சாலிகிராம்களும் ஆகும். ஆத்மாக்களைப் படைப்பவர் இருக்க வேண்டும். எப்பொழுதும் தொடர்ந்தும் உங்கள் இதயத்தில் உங்களுடன் பேசுங்கள். நீங்கள் பெற்றுள்ள இந்த ஞானத்தை உங்கள் இதயத்தில் வைத்திருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். ஆத்மாவே சிந்திக்கிறார். எல்லாவற்றுக்கும் முதலில், நீங்கள் தந்தையுடன் வசிக்கின்ற ஓர் ஆத்மா என்னும் நம்பிக்கையைக் கொண்டிருங்கள். நாங்கள் அவருடைய குழந்தைகள் ஆதலால், நிச்சயமாக நாங்கள் ஓர் ஆஸ்தியைப் பெற வேண்டும். ஒரு வம்சாவழி விருட்சம் உருவாக்கப்படுவதைப் போன்றே, ஆத்மாக்களின் விருட்சத்துக்கு முன்னர், அங்கு நிச்சயமாக அதன் விதை இருக்க வேண்டும். சிரேஷ்ட தந்தையும், பின்னர் அவருடைய இரண்டு தொடக்கம் நான்கு வரையிலான குழந்தைகளும் இருக்கிறார்கள், பின்னர் அவர்களின் ஏனைய குழந்தைகள் இருக்கிறார்கள்; அவ்விருட்சம் தொடர்ந்தும் வளர்ந்து பெரிதாகுகிறது. அவ்வம்சாவழி விருட்சத்தின் திட்டம் உள்ளது. இவர் இன்னாரிடம் இருந்து தோன்றியுள்ளார். ஆத்மாக்கள் அனைவரும் அசரீரி உலகில் வசிக்கிறார்கள் என்பதைக் குழந்தைகளான நீங்கள் அறிவீர்கள். அந்தப் படமும் உள்ளது. தந்தையே அதிமேன்மையானவர். பாபா இச்சரீரத்தில் பிரவேசித்துள்ளார் என்பது குழந்தைகளான உங்கள் புத்திகளில் உள்ளது. ஆன்மீகத் தந்தை இவரில் பிரவேசித்து, ஆத்மாக்களுக்குக் கற்பிக்கிறார். அவர் உங்களுக்குச் சூட்சும உலகில் கற்பிப்பதில்லை. இந்த ஞானம் சத்தியயுகத்தில் எவருக்கும் இருப்பதில்லை. தந்தை மாத்திரமே வந்து, சங்கம யுகத்தில் உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கிறார். மனித உலக விருட்சத்தின் இந்த ஞானம் எவருக்கும் இல்லை. அவர்கள் சக்கரத்தின் கால எல்லையை மிகவும் நீண்டதாக எழுதியுள்ளார்கள். தந்தை இப்பொழுது உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது மீண்டும் ஒருமுறை வீடு திரும்பிச் செல்ல வேண்டும். அதுவே தந்தையும், சகோதரர்களாகிய குழந்தைகளும் வசிக்கின்ற, ஆத்மாக்களின் வீடாகும். நீங்கள் இங்கு வந்து, சரீரங்களை ஏற்றுக் கொள்ளும்பொழுது மாத்திரமே, சகோதர, சகோதரிகள் ஆகுகிறீர்கள். ஆத்மாக்களான நாங்கள் அனைவரும் சகோதரர்கள். நிச்சயமாகச் சகோதரர்களின் தந்தையும் இருப்பார். அவரே பரமாத்மாவாகிய பரமதந்தை. தங்கள் சரீரங்களில் இருக்கும் பொழுது, ஆத்மாக்கள் அனைவரும் அவரை நினைவு செய்கிறார்கள். சத்திய, திரேதா யுகங்களில் எவரும் அவரை நினைவு செய்வதில்லை. தூய்மையற்ற உலகில் அனைவரும் அவரை நினைவு செய்கிறார்கள், ஏனெனில் அனைவரும் இராவணனின் சிறையில் இருக்கிறார்கள். சீதை அழைத்தார்: ஓ இராமா! தந்தை விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் நினைவு செய்வது திரேதா யுகத்தின் இராமர் அல்லர். மக்கள் இராமர் என நம்புகின்ற, பரமாத்மாவாகிய பரமதந்தையைத் தொடர்ந்தும் நினைவு செய்கிறார்கள். ஆத்மாக்களே அழைக்கிறார்கள். நீங்கள் அந்த சந்தோஷ தாமத்தில் இருப்பீர்கள் என்னும் காரணத்தினால், அரைக் கல்பத்துக்கு எவரையும் அழைக்க மாட்டீர்கள் என்பதை இப்பொழுது அறிவீர்கள். இந்நேரத்தில், தந்தை மாத்திரமே உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: வேறு எவரும் எதனையும் அறியார். ஒவ்வோர் ஆத்மாவும் பரமாத்மாவே எனவும், ஒவ்வோர் ஆத்மாவும் பரமாத்மாவுடன் இரண்டறக் கலக்கிறார் எனவும் அவர்கள் கூறுகிறார்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: ஆத்மாக்கள் அழிவற்றவர்கள். ஓர் ஆத்மாவைக் கூட அழிக்க முடியாது. தந்தை அழிவற்றவர் என்பதைப் போன்று, ஆத்மாக்களும் அழிவற்றவர்கள். இங்கு, ஆத்மாக்கள் தூய்மை அற்றவர்களாகவும், தமோபிரதானாகவும் ஆகுகிறார்கள். பின்னர் தந்தை ஆத்மாக்களைத் தூய்மையானவர்களாகவும், சதோபிரதானானவர்களாகவும் ஆக்குகிறார். முழு உலகமும் தமோபிரதானாக வேண்டும், பின்னர் அது சதோபிரதானாக வேண்டும். தூய்மையற்ற உலகைத் தூய்மை ஆக்குவதற்குத் தந்தை வரவேண்டும். அவர் தந்தையாகிய கடவுள் என்று அழைக்கப்படுகிறார். தந்தை அழிவற்றவரும், ஆத்மாக்களாகிய நாங்களும் அழிவற்றவர்களும் ஆவோம். இந்நாடகமும் அழிவற்றது. எவ்வாறு உலகின் வரலாறும், புவியியலும் மீண்டும் மீண்டும் நடைபெறுகின்றன என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். எங்கள் பாகங்கள் நான்கு யுகங்களிலும் தொடர்கின்றன. நாங்கள் சூரிய வம்சத்தவர்களாகவும், பின்னர் சந்திர வம்சத்தவர்களாகவும் ஆகுகிறோம். சந்திர வம்சம் இரண்டாம் தரமுடையதைப் போன்றது. பதினான்கு சுவர்க்கக் கலைகள் உள்ளவர்களைச் சூரிய வம்சம் என அழைக்க முடியாது. உண்மையில், அவர்களைத் தேவர்கள் எனவும் அழைக்கக்கூடாது. தேவர்கள் முழுமையாகவே விகாரம் அற்றவர்களும், பதினாறு சுவர்க்கக் கலைகள் நிறைந்தவர்களும் ஆவர். இராமர் பதினான்கு சுவர்க்கக் கலைகள் உடையவர் எனக் கூறப்படுகிறார். உங்கள் 84 பிறவிகளின் கணக்கு மாத்திரமே விளங்கப்படுத்தப்படுகிறது. புதியதொன்று பழையதாகும் பொழுது, அதில் பெருமளவு களிப்பு இருப்பதில்லை. முதலில், நீங்கள் முழுமையாகத் தூய்மையானவர்களாக இருக்கின்றீர்கள், பின்னர், சில வருடங்களின் பின்னர், நீங்கள் சில வருடங்கள் வயதானவர்கள் எனக் கூறப்படுகிறீர்கள். ஒரு கட்டடத்தின் உதாரணமும் கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்துக்கும் இதுவே பொருந்துகிறது. இவ்வுலகம் ஒரு பெரிய மேடையைப் போன்றது. ஆகாய தத்துவம் மிகவும் பெரியது; அதற்கு எல்லை இல்லை. அதன் முடிவு எங்கு உள்ளது என எவராலும் கூற முடியாது. நீங்கள் தொடர்ந்தும் முன்னேறினால், அதற்கு முடிவே இல்லை என்பதைக் கண்டுபிடிப்பீர்கள். பெரும் பிரம்ம தத்துவத்துக்கும் முடிவு இல்லை. அதன் முடிவைப் பார்ப்பதற்கு விஞ்ஞானிகள் அதிகளவு முயற்சி செய்கிறார்கள். ஆனால் அவர்களால் அங்கு செல்ல முடியாது; அவர்களால் அதன் முடிவை அடைய முடியாது. பிரம்ம தத்துவம் மிகவும் பெரியது, அது முடிவற்றது. ஆத்மாக்களாகிய நீங்கள் மிகவும் சிறிய இடத்தில் வாழ்கிறீர்கள். இங்கு, மக்கள் அத்தகைய பெரும் கட்டடங்கள் போன்றவற்றைக் கட்டுகிறார்கள். பூமியிலுள்ள இடம் மிகவும் பெரியது. பண்ணை நிலங்கள் போன்றவையும் இருக்க வேண்டும். அங்கு ஆத்மாக்களே வசிக்கிறார்கள். ஒரு சரீரமின்றி ஓர் ஆத்மாவால் எவ்வாறு உணவருந்த முடியும்? அங்கு, ஆத்மாக்கள் எதனையும் அனுபவம் செய்வதிலிருந்து அப்பால் இருக்கிறார்கள். அங்கு உண்பதற்கோ அல்லது அனுபவம் செய்வதற்கோ எதுவும் இல்லை. தந்தை விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளாகிய நீங்கள் ஒருமுறை மாத்திரமே இந்த ஞானத்தைப் பெறுகிறீர்கள். அது குழந்தைகளாகிய உங்களுக்கு ஒரு கல்பத்தின் பின்னரே கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போதை இருக்க வேண்டும். நாங்கள் தேவ தர்மத்துக்கு உரியவர்களாக இருந்தோம். நீங்கள் கூறுகிறீர்கள்: பாபா, இற்றைக்கு 5000 வருடங்களுக்கு முன்னர், நாங்கள் சூத்திரர்களில் இருந்து பிராமணர்களாக மாறுவதற்கு உங்களிடம் வந்தோம். நாங்கள் இப்பொழுது மீண்டும் ஒருமுறை உங்களிடம் வந்துவிட்டோம். அவர் அசரீரியானவர் ஆகையால், நீங்கள் தாதாவிடம் வந்து விட்டீர்கள் என நீங்கள் கூறுகிறீர்கள். தந்தை இவரில் பிரவேசித்துள்ளார். தந்தை கூறுகிறார்: உங்கள் பாகங்களை நடிப்பதற்கு அங்கங்களைப் பெறுவதைப் போன்றே, நானும் அங்கங்களின் ஆதாரத்தைப் பெறுகிறேன். வேறு எவ்வாறு நான் எனது பாகத்தை நடிக்க முடியும்? மக்கள் சிவனின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்கள், ஆனால் அவர் அசரீரியானவர். எவ்வாறு அவருக்கு ஒரு பிறந்தநாள் இருக்க முடியும்? ஒவ்வொரு மனிதரும் ஒரு சரீரத்தை நீக்கி விட்டு, இன்னுமொன்றைப் பெறுகிறார். தந்தை கூறுகிறார்: எவ்வாறு நான் வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்க முடியும்? உங்களை மனிதர்களிலிருந்து தேவர்களாக மாற்றுவதற்குத் தந்தை மாத்திரமே வந்து உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறார். நான் மாத்திரமே தூய்மையாக்குபவரும், ஞானக்கடலும் என்று அழைக்கப்படுகிறேன். நான் விருட்சத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியை அறிவேன். பாபா இவரில் பிரவேசித்து, உங்களுக்கு இந்த ஞானம் அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார் எனக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். பிரம்மா, விஷ்ணு, சங்கரரின் பாகங்களும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். தந்தையே தூய்மையாக்குபவர் என்பதை நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்கள். ஒவ்வொருவரினதும் புகழும் வேறானதும், ஒவ்வொருவருடைய கடமையும் வேறானதும் ஆகும். ஜனாதிபதிகள், பிரதம மந்திரி போன்றவர்கள் உள்ளார்கள். ஆத்மா கூறுகிறார்: இது எனது சரீரம். நான் ஒரு பிரதம மந்திரி. ஒரு சரீரத்தில் ஆத்மா இல்லாவிட்டால், அவரால் பேச முடியாது. சிவபாபா அசரீரியானவர். அவரும் பேசுவதற்காகப் பௌதீக அங்கங்களின் ஆதாரத்தைப் பெற வேண்டும். இதனாலேயே வாயிலிருந்து கங்கை வெளிப்பட்டதாகக் காட்டப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், சிவன் ஒரு புள்ளியே! எவ்வாறு அவருக்கு ஒரு வாய் இருக்க முடியும்? ஆகவே, அவர் வந்து இவரில் அமர்ந்திருந்து, இவரிலிருந்து ஞான கங்கையை வெளிப்படுமாறு செய்கிறார். அனைவரும் தந்தையை நினைவு செய்கிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! எங்களை இத்துன்பத்தில் இருந்து விடுவியுங்கள்! அவரே சத்திரசிகிச்சை நிபுணர்கள் அனைவரிலும் மகத்தானவர். அவரிடம் மாத்திரமே தூய்மையற்றதைத் தூய்மை ஆக்குவதற்கான ஞானம் உள்ளது. தூய்மை அற்றவர்கள் அனைவரையும் தூய்மை ஆக்குவதற்கு ஒரேயொரு சத்திரசிகிச்சை நிபுணரே உள்ளார். சத்திய யுகத்தில் அனைவரும் நோய்களிலிருந்து விடுபட்டுள்ளார்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் சத்திய யுகத்தின் அதிபதிகளாக இருந்தார்கள். அவர்கள் நோயிலிருந்து விடுபட்டிருக்கக்கூடிய அத்தகைய செயல்களை அவர்களுக்குக் கற்பித்தவர் யார்? எவ்வாறு மேன்மையான செயல்களைப் புரிவது எனத் தந்தை மாத்திரமே வந்து உங்களுக்குக் கற்பிக்கிறார். இங்கு, மக்கள் தொடர்ந்தும் தங்கள் செயல்களுக்காக வருந்துகிறார்கள். உங்கள் செயல்கள் அத்தகையவை என நீங்கள் சத்தியயுகத்தில் கூற மாட்டீர்கள். அங்கு துன்பமோ அல்லது நோயோ இல்லை. இங்கு, அவர்கள் தொடர்ந்தும் ஒருவருக்கொருவர் துன்பத்தை மாத்திரமே விளைவிக்கிறார்கள். அவ்விடயம் அவர்களின் கர்ம வேதனை எனக் கூறும்படியாகச் சத்திய, திரேதா யுகங்களில் துன்பம் எனும் கேள்வியே இருக்காது. செயல், நடுநிலைச் செயல், பாவச்செயலின் அர்த்தத்தை எவரும் புரிந்து கொள்வதில்லை. அனைத்தும் முதலில் சதோபிரதானாக உள்ளது என்பதையும், பின்னர் அது சதோ, ரஜோ, தமோவாக ஆகுகிறது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். சத்தியயுகத்தில் ஐந்து தத்துவங்களும் சதோபிரதானாக உள்ளன. எங்கள் சரீரங்கள் கூட சதோபிரதான் பஞ்ச தத்துவங்களினால் ஆக்கப்பட்டுள்ளன, பின்னர், ஆத்மாக்கள் இரு கலைகளினால் குறைவடையும் பொழுது, சரீரங்களும் அதற்கேற்ப ஆக்கப்படுகின்றன. உலகமும் இரு கலைகளினால் குறைவடைகிறது. தந்தை மாத்திரமே இங்கே அமர்ந்திருந்து இவ்விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். வேறு எவராலும் அவற்றை விளங்கப்படுத்த முடியாது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் ஒருபொழுதும் உங்கள் செயல்களுக்காக வருந்தத் தேவை இல்லாதவாறு, அதாவது, உங்கள் செயல்களுக்காகத் தண்டனையை அனுபவிக்கத் தேவையில்லாத வகையில் அத்தகைய மேன்மையான செயல்களை இப்பொழுதில் இருந்தே தந்தையின் ஸ்ரீமத்துக்கேற்ப, செய்யுங்கள்.

2. அழிகின்ற விடயங்களின் போதை எதையும் கொண்டிருக்காதீர்கள். உங்கள் சரீரமும் அழியக்கூடியது; அதன் போதையையும் கொண்டிருக்காதீர்கள். விவேகிகள் ஆகுங்கள்!

ஆசீர்வாதம்:
இந்தப் பழைய உலகை உங்களுக்கு வெளிநாடாகக் கருதுவதன் மூலம் உங்களின் சொந்த பூமிக்கு உரியவராகி, அப்பாற்பட்டு இருப்பீர்களாக.

சில மக்கள் வெளிநாட்டைச் சேர்ந்த எதையும் தொட மாட்டார்கள். ஏனென்றால், தமது சொந்த நாட்டில் உள்ளவற்றை மட்டுமே தாம் பயன்படுத்த வேண்டும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அதேபோல், இந்தப் பழைய உலகம் உங்களுக்கு ஒரு வெளிநாடே ஆகும். அதனால் நீங்கள் அதற்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும். அதாவது, இந்தப் பழைய உலகிற்கு உரியவையான சுபாவம், சம்ஸ்காரங்கள் இவற்றினால் சிறிதளவேனும் கவரப்படாதீர்கள் என்பதே அதன் அர்த்தம். உங்களின் சொந்த பூமியின் மீது அன்பு வைத்திருங்கள். அதாவது, ஆத்மாவான நீங்கள் என்று வரும்போது உங்களைப் பரந்தாமவாசியாகக் கருதுங்கள். உங்களின் தெய்வீகக் குடும்பம் என்று வரும்போது உங்களை மதுவனவாசியாகக் கருதுங்கள். இந்தப் போதையைப் பேணுங்கள்.

சுலோகம்:
ஜமேலாவில் (குழப்பம்) அகப்பட்டுக் கொள்வதற்குப் பதிலாக, சதா ஒரு சந்திப்பின் மேலாவில் இருங்கள்.

அவ்யக்த சமிக்கை: சதா முகமலர்ச்சியுடன் இருப்பதற்கு, இலகு சுபாவத்தைக் கொண்டவராகவும் சகித்துக் கொள்பவராகவும் ஆகுங்கள்.

ஒரு புனித அன்னத்தின் சிறப்பியல்புகள், இலகு சுபாவத்தைக் கொண்டவராகவும் எளிமையான வார்த்தைகளைப் பயன்படுத்துபவராகவும் எளிமையான மனோபாவத்தையும் எளிமையான (தூய) பார்வையையும் கொண்டிருப்பதாகும். தூய இதயங்களைக் கொண்டிருப்பவர்களை பாப்தாதா அதிகளவில் நேசிக்கிறார், அத்துடன் அவர்களுக்கு நெருக்கமாகவும் இருக்கிறார். சுத்தமான இதயங்களைக் கொண்டிருப்பவர்கள், எப்போதும் பாப்தாதாவின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பார்கள். அத்துடன் அவர்களின் மேன்மையான எண்ணங்கள் நிறைவேற்றப்படுவதனால், அவர்கள் இலகுவாகவும் எளிமையாகவும் தெளிவாகவும் இருப்பார்கள். அவர்களின் மனோபாவம், பார்வை, வார்த்தைகள், உறவுமுறைகள், தொடர்புகளில் அவர்கள் சமமாக இருப்பார்கள்.