12.07.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் உண்மையான வைஷ்ணவர்கள் ஆகவேண்டும். உண்மையான வைஷ்ணவர்கள் உணவில் முன்னெச்சரிக்கைகளைக் கடைப்பிடிப்பதுடன், தூய்மையாகவும் இருக்கின்றார்கள்.

கேள்வி:
எந்தப் பலவீனத்தை ஒரு நற்பண்பாக மாற்றுவதன் மூலம் உங்கள் படகு அக்கரைக்குச் செல்ல முடியும்?

பதில்:
பற்றே மிகப்பெரிய பலவீனமாகும். பற்றின் காரணமாகவே உறவினர்களின் நினைவு உங்களுக்குத் தொல்லை கொடுக்கின்றது. (குரங்கின் உதாரணம் உள்ளது) ஓர் உறவினர் மரணிக்கும் பொழுது, அவர்கள் தொடர்ந்தும் 12 மாதங்களுக்கு அவரை நினைவு செய்கின்றனர். தங்களது முகத்தை மூடிக்கொண்டு தொடர்ந்தும் தேம்பித்தேம்பி அழுகின்றனர். ஏனெனில் அவர்கள் சதா அவரை நினைவு செய்கிறார்கள். தந்தையின் நினைவினால் நீங்கள் தொந்தரவு செய்யப்படுவதால், அவ்வாறாக நீங்கள் அவரை இரவுபகலாக நினைவு செய்தால், உங்கள் படகு அக்கரைக்குச் செல்லும். உங்கள் லௌகீக உறவினரை நினைவு செய்வதைப் போன்று தந்தையை நினைவுசெய்தால், அது உங்களது மகா பாக்கியமாக இருக்கும்.

ஓம் சாந்தி.
தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குத் தினமும் விளங்கப்படுத்துகின்றார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதி, தந்தையின் நினைவில் அமர்ந்திருங்கள். இன்று, பாபா அதனுடன் இன்னொன்றையும் சேர்க்கின்றார்: அவரை வெறுமனே தந்தையாக மாத்திரம் கருதாதீர்கள். நீங்கள் அவரை வேறொருவராகவும் கருத வேண்டும். பரமாத்மா, பரமதந்தை, சிவன் என்பதே பிரதானமானது. அவர் தந்தையாகிய கடவுள் என்றும் அழைக்கப்படுகின்றார். அவரே ஞானக்கடலும் ஆவார். அவர் ஞானக்கடலாக உள்ளதால், ஆசிரியராகவும் இருந்து, இராஜயோகம் கற்பிக்கின்றார். இதை விளங்கப்படுத்தும் பொழுதே உண்மையான தந்தையே எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியும். தானே அனைவரதும் தந்தையும், அத்துடன் ஆசிரியரும், சற்கதியை அருள்பவரும் எனும் நடைமுறை விடயத்தை அவர் எங்களுக்குக் கூறுகின்றார். அத்துடன் அவர் ஞானம் நிறைந்தவர் எனவும் அழைக்கப்படுகின்றார். அவரே தந்தையும், ஆசிரியரும், தூய்மையாக்குபவரும், ஞானக்கடலும் ஆவார். அனைத்திற்கும் முதலில், தந்தையைப் புகழுங்கள். அவரே எங்களுக்குக் கற்பிக்கின்றார். நாங்கள் பிரம்மாகுமாரர்களும், குமாரிகளும் ஆவோம். பிரம்மாவும் சிவபாபாவின் ஒரு படைப்பே ஆவார். இப்பொழுது இது சங்கமயுகமாகும். இராஜயோகமே இலக்கும், இலட்சியமும் ஆகும். அவர் எங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார். எனவே, இதனால் அவர் எங்களுக்கு ஆசிரியர் என்பதும், இக்கல்வி புதிய உலகிற்கானது என்பதும் நிரூபிக்கப்படுகின்றது. நீங்கள் இங்கே அமர்ந்திருக்கும் பொழுது, மற்றவர்களுக்கு நீங்கள் விளங்கப்படுத்த வேண்டியவற்றை உறுதியாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் இந்த ஞானத்தை உங்களுக்குள் கிரகிக்க வேண்டும். சிலரால் மற்றவர்களை விடவும் அதிகமாகக் கிரகிக்க முடியும் என்பதை நீங்கள் அறிவீர்கள். இங்கும் ஞானத்தில் திறமைசாலிகளாக உள்ளவர்களின் பெயர்கள் போற்றப்படுகின்றன. அவர்களது அந்தஸ்தும் உயர்வாக ஆகுகின்றது. நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கைளை பாபா தொடர்ந்தும் உங்களுக்குக் காண்பிக்கின்றார். நீங்கள் முழுமையான வைஷ்ணவர்கள் ஆகுகின்றீர்கள். வைஷ்ணவர்கள் என்றால், சைவ உணவு உண்பவர்கள்; அவர்கள் மாமிசம் போன்றவற்றை உண்பதோ அல்லது மதுபானம் அருந்துவதோ இல்லை. ஆனால், அவர்கள் விகாரத்தில் ஈடுபடவே செய்கின்றார்கள். அந்த வகையில் ஒரு வைஷ்ணவர் ஆகுவதால் என்ன பயன்? அவர்கள் தங்களை வைஷ்ணவ குலத்துக்கு உரியவர்கள் என்று அழைக்கின்றனர். அவர்கள் வெங்காயம் மற்றும் ஏனைய தமோகுணி உணவுவகைகளை உண்பதில்லை என்பதே இதன் அர்த்தமாகும். தமோகுணி பொருட்கள் எவை என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். சிலர் மிக நல்லவர்கள். அவர்கள் சமயப் பற்றுடையவர்கள் அல்லது பக்தர்கள் எனப்படுகின்றனர். சந்நியாசிகள் தூய ஆத்மாக்கள் என்றும் தானதர்மங்கள் போன்றவற்றை செய்பவர்கள் புண்ணியாத்மாக்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். ஆத்மாக்களே தானங்கள் வழங்கி, புண்ணியம் செய்கின்றனர் என்பதையே இது நிரூபிக்கின்றது. இதனாலேயே கூறப்படுகின்றது: ஒரு தூய ஆத்மா, ஒரு புண்ணியாத்மா. ஓர் ஆத்மா செயல்களின் தாக்கத்திற்கு உட்படாதவர் அல்ல. நீங்கள் அத்தகைய மிகச்சிறந்த வார்த்தைகளை நினைவுசெய்ய வேண்டும். சாதுக்கள், மகாத்மாக்கள் என அழைக்கப்படுகின்றனர். மகா பரமாத்மா எனக் கூறப்படுவதில்லை. எனவே, கடவுள் சர்வவியாபகர் எனக் கூறுவது தவறாகும். அவர்கள் அனைவரும் ஆத்மாக்கள், ஒவ்வொரு மனிதனிலும் ஓர் ஆத்மா உள்ளார். கல்வி அறிவுடையவர்கள் மரங்களிலும் கூட ஆத்மா இருப்பதாக நிரூபிக்க முயற்சிக்கின்றனர். 8.4 மில்லியன் ஜீவராசிகள் ஒவ்வொன்றிலும் ஓர் ஆத்மா இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். அவர்கள் வினவுகிறார்கள்: அவற்றில் ஓர் ஆத்மா இல்லாவிட்டால், அவை அனைத்தாலும் எவ்வாறு வளர முடியும்? மனித ஆத்மா உணர்வற்ற ஒன்றாக மாற்றமடைய முடியாது. அத்தகைய விடயங்கள் சமயநூல்களில் எழுதப்பட்டுள்ளன: உதாரணமாக, ஒருவரை இந்திர சபையிலிருந்து வெளியேற்றி, அவர் கல்லாக ஆக்கப்பட்டார். தந்தை இப்பொழுது இங்கிருந்து விளங்கப்படுத்துகின்றார். அவர் குழந்தைகளுக்குக் கூறுகின்றார்: சரீர உறவினர்கள் அனைவரையும் துண்டித்து, உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். நீங்கள் இப்பொழுது உங்களின் 84ஆவது பிறவியைப் பூர்த்தி செய்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகவேண்டும். இந்தத் துன்ப தாமம் தூய்மையற்ற தாமமாகும். அமைதி தாமமும், சந்தோஷ தாமமும் தூய தாமங்கள். நீங்கள் இந்தளவிற்குப் புரிந்து கொள்கின்றீர்கள், இல்லையா? மக்கள், சந்தோஷதாமத்தில் வசித்த தேவர்களின் விக்கிரகங்களின் முன்னால் தலை வணங்குகின்றனர். அவர்கள் புதிய உலகமான பாரதத்தில் தூய ஆத்மாக்களாக இருந்தார்கள் என்பதையே இது நிரூபிக்கின்றது. அவர்கள் உயர்ந்த அந்தஸ்தைக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது மக்கள் பாடுகின்றனர்: நான் நற்பண்புகள் அற்றவன்; என்னிடம் நற்பண்புகள் இல்லை. உண்மையில் அது அவ்வாறேயாகும்! அவர்களிடம் நற்பண்புகள் எதுவும் கிடையாது! மனிதர்களிடம் அதிகளவு பற்று உள்ளது; அவர்கள் மரணித்தவர்களை சதா நினைவு செய்கின்றனர். அவர்கள் புத்தியில் உள்ளது: “இவர் எனது குழந்தையாக இருந்தார்.” ஒரு பெண்ணின் கணவன் அல்லது குழந்தை மரணித்து விட்டால், அவள் தொடர்ந்தும் அவரையே நினைவு செய்கின்றாள். ஒரு விதவை ஏறக்குறைய 12 மாதங்களுக்கு அவரை மிக நன்றாக நினைவு செய்வாள். அவள் எப்பொழுதும் தனது முகத்தை மூடியவண்ணம், தொடர்ந்தும் அழுது கொண்டே இருப்பாள். அதேபோன்று நீங்களும் உங்கள் முகத்தை மூடி, இரவுபகலாகத் தந்தையை நினைவுசெய்தால், உங்கள் படகு அக்கரைக்குச் செல்லும். தந்தை கூறுகின்றார்: நீங்கள் தொடர்ந்தும் உங்கள் கணவனை நினைவு செய்வதைப் போன்றே அவ்வாறாகவே, என்னை நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இதைச் செய்வதற்குப் பல்வேறு வழிகளைத் தந்தை உங்களுக்குக் காண்பிக்கின்றார். தொடர்ந்தும் உங்கள் கணக்குகளைச் சோதியுங்கள்: இன்று, இந்தளவு செலவும், இந்தளவு இலாபமும் ஏற்பட்டன. அவர்கள் தினமும் தங்களிடமுள்ள மீதியைக் கணக்கிடுகின்றனர். சிலர் அதை ஒவ்வொரு மாதமும் கணக்கிடுகின்றனர். இங்கு அதைச் செய்வது மிக அவசியமாகும். தந்தை மீண்டும் மீண்டும் இதை உங்களுக்குக் கூறுகின்றார். அவர் கூறுகின்றார்: குழந்தைகளாகிய நீங்கள் நூறு மடங்கு, ஆயிரம் மடங்கு, மில்லியன் மடங்கு, பில்லியன் மடங்கு, பலமில்லியன் மடங்குகள் பாக்கியசாலிகள். தங்களைப் பாக்கியசாலிகளாகக் கருதுகின்ற குழந்தைகள் நிச்சயமாகத் தந்தையை மிக நன்றாக நினைவு செய்வார்கள். அவர்கள் ரோஜாக்கள் ஆகுவார்கள். இது இரத்தினச் சுருக்கமாக விளங்கப்படுத்தப்பட வேண்டும். நீங்கள் நறுமணம் வீசும் மலர்கள் ஆகவேண்டும். நினைவே பிரதான விடயம். சந்நியாசிகள் “யோகம்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர். “என்னை நினைவுசெய்யுங்கள்!” என உங்களது லௌகீகத் தந்தை கூறமாட்டார். நீங்கள் அவரை நினைவு செய்கின்றீர்களா என்று கூட அவர் கேட்க மாட்டார். ஒரு தந்தை தனது குழந்தைகளையும், குழந்தைகள் தமது தந்தையையும் எப்பொழுதும் நினைவு செய்கின்றனர்; அதுவே நியதி. மாயை உங்களை மறக்கச் செய்வதால், உங்களிடம் இது கேட்கப்பட வேண்டியுள்ளது. நீங்கள் இங்கு வரும்பொழுது, நீங்கள் தந்தையிடமே வருகின்றீர்கள் என்பதைப் புரிந்து கொள்கின்றீர்கள். எனவே, தந்தையின் நினைவு இருக்க வேண்டும். இதனாலேயே பாபா இப்படங்களை உருவாக்கி வைத்திருந்தார். நீங்களும் இப்படங்களை வைத்திருக்க வேண்டும். முதலில், தந்தையின் புகழுடன் ஆரம்பியுங்கள்: இது எங்களின் பாபா. உண்மையில், அவரே அனைவரதும் தந்தை. அவரே அனைவருக்கும் சற்கதியை அருள்பவரும், ஞானக்கடலும், ஞானம் நிறைந்தவரும் ஆவார். பாபா எங்களுக்கு உலகச் சக்கரத்தின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய ஞானத்தைக் கொடுக்கின்றார். அதன் மூலம் நாங்கள் திரிகாலதரிசிகள் ஆகுகின்றோம். இவ்வுலகிலுள்ள எந்த மனிதருமே திரிகாலதரிசியாக இருக்க முடியாது. தந்தை கூறுகின்றார்: இலக்ஷ்மியும், நாராயணனும் கூட திரிகாலதரிசியாக இருக்க மாட்டார்கள். திரிகாலதரிசியாக இருப்பதால் அவர்களுக்கு என்ன பயன்? நீங்கள் இவ்வாறு ஆகி, மற்றவர்களையும் அவ்வாறு ஆக்குகின்றீர்கள். இலக்ஷ்மியும், நாராயணனும் இந்த ஞானத்தைக் கொண்டிருந்தால், அது தொன்றுதொட்டு தொடர்ந்திருக்கும். எவ்வாறாயினும், இடையில் விநாசம் இடம்பெறுகின்றது. எனவே, அது தொன்றுதொட்டு தொடர முடியாது. எனவே, குழந்தைகளாகிய நீங்கள் இக்கல்வியை மிக நன்றாக நினைவுசெய்ய வேண்டும். உங்கள் அதிமேலான கல்வி சங்கமயுகத்திலேயே இடம்பெறுகின்றது. நீங்கள் நினைவு செய்யாது, சரீர உணர்விற்கு வரும்பொழுது, மாயை உங்களை அறைகின்றாள். நீங்கள் 16 சுவர்க்கக் கலைகளும் நிறைந்தவர்கள் ஆகியுள்ளபொழுது, விநாசத்திற்கான ஆயத்தங்களும் பூர்த்தியாகி இருக்கும். அவர்கள் விநாசத்திற்கான ஆயத்தங்களைச் செய்கின்றார்கள், நீங்களோ உங்களது அழிவற்ற அந்தஸ்தைக் கோருவதற்கான ஆயத்தங்களைச் செய்கின்றீர்கள். கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் யுத்தம் இடம்பெறவில்லை; கௌரவர்களுக்கும், யாதவர்களுக்கும் இடையிலேயே யுத்தம் இடம்பெற்றது. நாடகத்தின்படி பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது. அது நீங்கள் பிறவியெடுத்த பின்னரே ஆரம்பித்தது. இப்பொழுது தந்தை வந்துவிட்டார், அனைத்தும் நடைமுறையில் நிகழ்ந்தாக வேண்டும். எங்கும் இரத்த ஆறு பாயும், பின்னர் நெய்யாறு இருக்கும் என இந்த நேரத்தையிட்டே கூறப்படுகின்றது. இப்பொழுதும் பாருங்கள்! அவர்கள் தொடர்ந்தும் அதிகளவில் சண்டை இடுகின்றார்கள். “எங்களுக்கு இந்தக் குறிப்பிட்ட நகரத்தைக் கொடுங்கள், இல்லாவிட்டால் நாங்கள் யுத்தத்தை ஆரம்பிப்போம்.” “இதைக் கடந்து செல்ல வேண்டாம். இது எங்கள் பாதை.” அவர்களால் என்ன செய்ய முடியும்? நீராவிக் கப்பல்களால் எவ்வாறு கடந்து செல்ல முடியும்? பின்னர் அவர்கள் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்கின்றார்கள். அவர்கள் நிச்சயமாக மற்றவர்களிடம் ஆலோசனையைக் கேட்க வேண்டியுள்ளது. உதவி பெறுவதற்காக அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கைகள் யாவும் முடிவடைந்து விட்டன. இங்கு உள்நாட்டு யுத்தம் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தந்தை இப்பொழுது கூறுகின்றார்: இனிய குழந்தைகளே, மிக மிக விவேகமானவர்கள் ஆகுங்கள். நீங்கள் இங்கிருந்து உங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்லும் பொழுது, மறந்துவிடக்கூடாது. நீங்கள் ஒரு வருமானத்தைச் சேர்ப்பதற்காகவே இங்கே வருகின்றீர்கள். நீங்கள் சிறு குழந்தைகளை இங்கே அழைத்து வரும்பொழுது, அவர்களுக்குக் கட்டுப்பட்டுள்ளீர்கள். நீங்கள் இங்கே ஞானக்கடலின் கரைக்கு வந்துள்ளீர்கள். எனவே, எந்தளவிற்கு அதிகமாகச் சம்பாதிக்கின்றீர்களோ, அந்தளவிற்கு நன்றாக இருக்கும். நீங்கள் இதில் ஈடுபட்டிருக்க வேண்டும். நீங்கள் அழிவற்ற இந்த ஞான இரத்தினங்களால் உங்கள் புத்தியை நிரப்புவதற்காகவே இங்கு வருகின்றீர்கள். மக்கள் பாடுகின்றனர்: ஓ கள்ளங்கபடமற்ற பிரபுவே, எங்கள் புத்தியை நிரப்புங்கள்! பக்தர்கள் சங்கரரின் உருவத்திற்கு முன்னால் சென்று கூறுகின்றனர்: எங்கள் புத்தியை நிரப்புங்கள்! அவர்கள் சிவனையும், சங்கரரையும் ஒருவராகவே கருதுகின்றனர். அவர்கள் கூறுகின்றனர்: மகா தேவரான சிவ சங்கர். எனவே, மகா தேவர் மகத்தானவராகவே கருதப்பட வேண்டும். இது போன்ற சிறிய விடயங்கள் மிகத்தெளிவாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும். நீங்கள் பிராமணர்கள், இப்பொழுது இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள் எனக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்படுகின்றது. மனிதர்கள் கற்பதன் மூலம் தங்களைச் சீர்திருத்துகின்றனர். அவர்களது செயற்பாடுகளும், நடத்தையும் மிகவும் சிறந்தவை ஆகுகின்றன. நீங்கள் இப்பொழுது கற்கின்றீர்கள். அதிகம் கற்று, மற்றவர்களுக்கும் கற்பிப்பவர்கள் மிகச் சிறந்த பண்புகளையும் கொண்டிருக்கின்றனர். மம்மாவும், பாபாவும் அதி சிறந்த பண்புகளைக் கொண்டுள்ளனர் என நீங்கள் கூறுவீர்கள். இவரே சிரேஷ்ட தாய் ஆவார். பாபா இவரில் பிரவேசித்து, குழந்தைகளாகிய உங்களை உருவாக்குகின்றார். தாயும், தந்தையும் இணைந்துள்ளனர். இவை அத்தகைய மறைமுகமான விடயங்கள்! நீங்கள் கற்பதைப் போன்றே மம்மாவும் கற்றார். பின்னர் அவர் தத்தெடுக்கப்பட்டார். நாடகத்தின்படி, அவர் மிகவும் விவேகியாக இருந்ததால், சரஸ்வதி எனப் பெயரிடப்பட்டார். பிரம்ம புத்திராவே மிக நீண்ட நதியாகும். பிரம்மபுத்திரா நதியும், கடலும் சந்திக்கும் இடம் உள்ளது. இவர் மிகப்பெரிய நதி ஆவார்; எனவே இவர் தாயும் ஆவார். இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவில் ஈடேற்றப்படுகின்றீர்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களை மாத்திரமே பார்க்கின்றார். அவர் வேறெவரையும் நினைவுசெய்ய வேண்டியதில்லை! இவரின் ஆத்மாவும் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். தந்தை (பிரம்மா) கூறுகின்றார்: நாங்கள் இருவரும் குழந்தைகளைப் பார்க்கின்றோம். இந்த ஆத்மாவான நான் அனைத்தையும் பற்றற்ற பார்வையாளராகப் பார்க்க வேண்டியதில்லை. நான் தந்தையின் சகவாசத்திலேயே இருப்பதனால், நானும் அனைத்தையும் அவ்வாறாகவே பார்க்கின்றேன். நான் தந்தையுடனேயே இருக்கின்றேன். நான் அவரது குழந்தை. அதனால், அனைத்தையும் அவருடன் சேர்ந்தே பார்க்கின்றேன். நான் உலக அதிபதியாகி, அனைத்தையும் நானே செய்வது போன்று, எங்கும் சுற்றுலா செல்கின்றேன். நான் திருஷ்டி கொடுக்கின்றேன். சரீரம் உட்பட அனைத்துமே மறக்கப்பட வேண்டும். இது, குழந்தையும் தந்தையும் ஒன்றாகி விடுவதைப் போன்றுள்ளது. எனவே, தந்தை விளங்கப்படுத்துகின்றார்: பெருமளவு முயற்சி செய்யுங்கள். உண்மையில், மம்மாவும் பாபாவுமே பெருமளவு சேவை செய்கின்றனர். இல்லறங்களிலும், தாய்மார்களும் தந்தைமார்களுமே பெருமளவு சேவை செய்கின்றனர். சேவை செய்பவர்கள் நிச்சயமாக உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவார்கள். எனவே, நீங்கள் அவர்களைப் பின்பற்ற வேண்டும். தந்தை தன்னை இகழ்பவர்களையும் ஈடேற்றுவதைப் போன்று, நீங்களும் அவ்வாறாகவே தந்தையைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவுசெய்யுங்கள், வேறு எவர் கூறுவதையும் செவிமடுக்காதீர்கள். எவராவது எதையாவது கூறினால், கேட்டும் கேட்காதிருங்கள்! தொடர்ந்தும் புன்னகையுங்கள், அப்பொழுது அவர் இயல்பாகவே சாந்தமாகி விடுவார். எவராவது உங்களுடன் கோபப்பட்டால், அவர்மீது மலர்களைத் தூவுங்கள் என பாபா உங்களுக்குக் கூறியுள்ளார். அவரிடம் கூறுங்கள்: நீங்கள் என்னை இகழ்கின்றீர்கள், நான் உங்களை ஈடேற்றுகின்றேன். தந்தையே கூறுகின்றார்: முழு உலகிலும் உள்ள மனிதர்கள் என்னை இகழ்கின்றார்கள். நான் சர்வவியாபகர் எனக் கூறுவதனால், அவர்கள் பெருமளவு அவமரியாதையை எனக்கு ஏற்படுத்தி விட்டார்கள். எவ்வாறாயினும், நான் அனைவரையும் ஈடேற்றுகின்றேன். குழந்தைகளாகிய நீங்களும் அனைவரையும் ஈடேற்ற வேண்டியவர்கள். நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள் எனவும், எவ்வாறு ஆகப்போகின்றீர்கள் எனவும் சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள். நீங்கள் முன்னர் ஒருபொழுதும் இதைப் பற்றிச் சிந்தித்ததோ, கனவு கண்டதோ இல்லை! பலர் வீட்டில் அமர்ந்திருக்கும் பொழுதே காட்சிகளைக் கண்டார்கள். எவ்வாறாயினும், காட்சிகள் மூலமாக எதுவும் நிகழ்வதில்லை. விருட்சம் தொடர்ந்தும் படிப்படியாக வளரும். புதிய தெய்வீக விருட்சத்தின் மரக்கன்று நாட்டப்படுகின்றது. உங்கள் தெய்வீக மலர்களின் தோட்டம் இப்பொழுது உருவாக்கப்படுகின்றது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். சத்தியயுகத்தில், தேவர்கள் மாத்திரமே இருப்பார்கள். அக்காலம் மீண்டும் வரப்போகின்றது; சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது. நீங்களே 84 பிறவிகளை எடுப்பவர்கள். ஏனைய ஆத்மாக்கள் எங்கிருந்து வருவார்கள்? நாடகத்திலுள்ள ஆத்மாக்கள் எவருமே தங்கள் பாகங்களில் இருந்து விடுவிக்கப்பட முடியாது. இச்சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது. ஆத்மாக்கள் ஒருபொழுதும் சிறிதாகுவதில்லை. அவர்கள் பெரிதாகவோ, சிறிதாகவோ ஆகுவதில்லை. தந்தை இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவர் கூறுகின்றார்: குழந்தைகளே, சந்தோஷத்தை அருள்பவர் ஆகுங்கள். ஒரு தாய் தனது குழந்தைகளைத் தங்கள் மத்தியில் சண்டை செய்யாதீர்கள் என்று கூறுவார். எல்லையற்ற தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகின்றார்: நினைவு யாத்திரை மிக இலகுவானது. நீங்கள் பிறவிபிறவியாக அந்த யாத்திரைகளைச் செய்தீர்கள். அப்படியிருந்தும், ஆத்மாக்களாகிய நீங்கள் தொடர்ந்தும் ஏணியில் கீழிறங்கி, பாவிகள் ஆகினீர்கள். தந்தை கூறுகின்றார்: இது ஓர் ஆன்மீக யாத்திரை. நீங்கள் இந்த மரண பூமிக்குத் திரும்ப வேண்டியதில்லை. மக்கள் யாத்திரைகள் சென்று விட்டுத் திரும்புகின்றார்கள். எனினும், அவர்கள் அங்கு சென்று வந்த பின்னரும், முன்னர் இருந்தது போன்றே அதன் பின்னரும் இருக்கின்றனர். நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்லப் போகின்றீர்கள் என்பதை அறிவீர்கள். சுவர்க்கம் முன்னர் இருந்தது, அது மீண்டும் இருக்கும். இச்சக்கரம் சுழல வேண்டும். ஒரேயொரு உலகமே உள்ளது; நட்சத்திரம் போன்ற எதிலும் வேறு எந்த உலகமும் இல்லை. மேலே என்ன இருக்கின்றது என்பதைப் பார்க்கச் செல்வதற்காக மக்கள் பெரும்பாடு பாடுகிறார்கள். அவர்கள் அவ்வாறு பெரும்பாடு படும்போதே, அவர்களுக்கு மரணம் ஏற்படுவதும் உண்டு. அவை அனைத்தும் விஞ்ஞானமாகும். அவர்கள் ஒரு தடவை அங்கு சென்றடைந்து விட்டால் என்ன நிகழும்? மரணம் முன்னால் நிற்கின்றது. ஒருபுறம், அவர்கள் மேலே சென்று ஆராய்ச்சி செய்கின்றனர். மறுபுறம், அவர்கள் தொடர்ந்தும் மரணத்திற்காகக் குண்டுகளை உற்பத்தி செய்கின்றனர். மனிதர்களின் புத்தி எவ்வாறுள்ளது எனப் பாருங்கள்! யாரோ ஒருவர் தங்களை அவை அனைத்தையும் செய்யத் தூண்டுகின்றார் என்பதை அவர்கள் புரிந்து கொள்கின்றனர். உலக யுத்தம் நிச்சயமாக இடம்பெறும் என அவர்களே கூறுகின்றனர். இது, அதே மகாபாரத யுத்தமாகும். குழந்தைகளாகிய நீங்கள் எந்தளவிற்கு அதிகமாக முயற்சி செய்கின்றீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக மற்றவர்களுக்கு நன்மை செய்வீர்கள். நீங்கள் எவ்வாறாயினும் குதாவாகிய, கடவுளின் குழந்தைகள் ஆவீர்கள். கடவுள் உங்களைத் தனது குழந்தைகள் ஆக்கியுள்ளார். எனவே, நீங்கள் தேவ, தேவியர் ஆகுகின்றீர்கள். இலக்ஷ்மியும், நாராயணனும் தேவி, தேவர் என அழைக்கப்படுகின்றனர். மக்கள் கிருஷ்ணரைக் கடவுள் என நம்புகின்றனர். இராதையை அந்தளவிற்கு அவர்கள் நம்புவதில்லை. இராதைக்கு அன்றி, சரஸ்வதிக்கே புகழ் உள்ளது. இலக்ஷ்மியின் மீது கலசம் ஒன்று காட்டப்பட்டுள்ளது. அவர்கள் அந்தத் தவறையும் செய்து விட்டார்கள். அவர்கள் சரஸ்வதிக்குப் பல பெயர்களைக் கொடுத்துள்ளார்கள். நீங்களே அவர்கள் ஆவீர்கள். நீங்கள் தேவிகளாகப் பூஜிக்கப்படுவதுடன், ஆத்மாக்களாகவும் பூஜிக்கப்படுகின்றீர்கள். தந்தை தொடர்ந்தும் குழந்தைகளாகிய உங்களுக்கு அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தை, தன்னை இகழ்பவர்களையும் ஈடேற்றுகின்றார். எனவே, தந்தையைப் பின்பற்றுங்கள்! எவராவது எதையாவது கூறினால், கேட்டும் கேட்காதிருங்கள். தொடர்ந்தும் புன்னகைத்தவாறு இருங்கள். ஒரேயொரு தந்தை கூறுவதை மாத்திரம் செவிமடுங்கள்.

2. சந்தோஷத்தை அருள்பவர்களாகி, அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுங்கள். உங்கள் மத்தியில் சண்டை சச்சரவுகளில் ஈடுபடாதீர்கள். விவேகியாகி, உங்கள் புத்தியை அழிவற்ற இந்த ஞான இரத்தினங்களால் நிரப்புங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் கடலின் அடிக்குச் சென்று அனுபவ இரத்தினங்களைப் பெறுவதன் மூலம் சதா சக்திசாலி ஆத்மா ஆகுவீர்களாக.

சக்திசாலி ஆத்மா ஆகுவதற்கு, ஒவ்வொரு சிறப்பியல்பு, ஒவ்வொரு சக்தி, இந்த ஞானத்தின் ஒவ்வொரு பிரதானமான கருத்து என்பனவற்றை யோகத்தில் பயிற்சி செய்யுங்கள். எல்லாவற்றையும் பயிற்சி செய்து, அன்பிலே மூழ்கியிருக்கும் ஆத்மாவின் முன்னால் எந்த வகையான தடையும் நிற்க முடியாது. அதனால் உங்களின் பயிற்சி என்ற பரிசோதனைக்கூடத்தில் அமர்ந்திருங்கள். இதுவரை, நீங்கள் இந்த ஞானக்கடல், நற்குணங்களின் கடல், சக்திகளின் கடலின் மேற்பரப்பிலேயே மிதந்து கொண்டிருக்கிறீர்கள். இப்போது, கடலின் அடிமட்டத்திற்குச் செல்லுங்கள். நீங்கள் பல வகையான தனித்துவமான அனுபவ இரத்தினங்களைப் பெறுவதுடன் சக்திசாலி ஆத்மாவாகவும் ஆகுவீர்கள்.

சுலோகம்:
தூய்மையின்மை விகாரம் என்ற தீய ஆவிகளை வரவழைக்கும். அதனால் உங்களின் எண்ணங்களையும் தூயதாக்குங்கள்.

அவ்யக்த சமிக்கை: எண்ணங்களின் சக்தியை சேமித்து மேன்மையான சேவைக்கு கருவியாகுங்கள்.

பிரம்மா குறிப்பாகக் குழந்தைகளான உங்களை மேன்மையான எண்ணங்களால் வரவழைத்தார். அதாவது, அவர் படைப்பை உருவாக்கினார். எண்ணங்களின் ஊடான இந்தப் படைப்பு சிறிய விடயம் அல்ல. மேன்மையான சக்திவாய்ந்த எண்ணங்கள், வெவ்வேறு மதங்கள் என்ற திரைகளுக்குப் பின்னால் இருந்த ஆத்மாக்களைத் தூண்டி, நெருக்கமாகக் கொண்டு வந்தன. அதேபோல், குழந்தைகளான உங்களிடமும் மேன்மையான, சக்திவாய்ந்த எண்ணங்கள் இருக்க வேண்டும். உங்களின் எண்ணங்களின் சக்தியை அதிகளவில் பயன்படுத்தாதீர்கள். அதை வீணாக்காதீர்கள். மேன்மையான எண்ணங்களைக் கொண்டிருப்பதன் மூலம் உங்களின் பேறுகளும் மேன்மை அடையும்.