12.10.25 Avyakt Bapdada Tamil Lanka Murli 17.03.2007 Om Shanti Madhuban
உங்களின் மேன்மையான மனோபாவத்தால், உங்களின் அதிர்வலைகளையும் சூழலையும் சக்திவாய்ந்தவை ஆக்குவதற்காக தீவிர முயற்சி செய்யுங்கள். ஆசீர்வாதங்களைக் கொடுத்து, ஆசீர்வாதங்களைப் பெறுங்கள்.
இன்று, அன்புக் கடலும் சக்திக் கடலுமான பாப்தாதா, தனது அன்பான, நீண்ட காலம் தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டுள்ள அதியன்பிற்குரிய குழந்தைகளைச் சந்திப்பதற்காக வந்துள்ளார். குழந்தைகளான நீங்கள் எல்லோரும் அன்பின் ஈர்ப்பினூடாக, வெகு தொலைவில் இருந்து ஒரு சந்திப்பைக் கொண்டாடுவதற்காக இங்கே வந்துள்ளீர்கள். நீங்கள் தனிப்பட்ட முறையில் பாபாவின் முன்னால் அமர்ந்திருந்தாலென்ன, அல்லது இந்தத் தேசத்திலோ அல்லது வெளிநாடுகளிலோ அமர்ந்திருந்தாலென்ன, நீங்கள் அன்பானதொரு சந்திப்பைக் கொண்டாடுகிறீர்கள். தனது அன்பான, முற்றிலும் ஒத்துழைக்கும் சகபாடிக் குழந்தைகளைக் காண்பதில் பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். பெரும்பாலான குழந்தைகளில் உங்களின் இதயங்களில் ஓர் எண்ணம் மட்டுமே இருப்பதை பாப்தாதா பார்க்கிறார்: நாங்கள் இப்போது மிக விரைவாகத் தந்தையை வெளிப்படுத்துவோம். தந்தை கூறுகிறார்: குழந்தைகளான உங்கள் எல்லோரிலும் உள்ள உற்சாகம் மிகவும் நல்லது. எவ்வாறாயினும், நீங்கள் எல்லாவற்றுக்கும் முதலில் உங்களைத் தந்தையை ஒத்த சம்பூரணமாகவும் முழுமையாகவும் வெளிப்படுத்தினால் மட்டுமே உங்களால் தந்தையை வெளிப்படுத்த முடியும். எனவே, குழந்தைகளான நீங்கள் தந்தையிடம் கேட்கிறீர்கள்: எப்போது நீங்கள் வெளிப்படுத்தப்படுவீர்கள்? தந்தையும் குழந்தைகளான உங்களிடம் கேட்கிறார்: நீங்கள் கூறுங்கள், எப்போது நீங்கள் உங்களைத் தந்தைக்குச் சமமானவராக வெளிப்படுத்துவீர்கள்? நீங்கள் சம்பூரணம் அடைவதற்காக ஒரு திகதியை நிச்சயம் செய்து விட்டீர்களா? வெளிநாட்டில் இருப்பவர்கள், சாதாரணமாக ஒரு வருடத்திற்கு முன்னரே திகதி நிச்சயம் செய்யப்படும் எனச் சொல்கிறார்கள். ஆகவே, நீங்கள் உங்களுக்குள் ஒரு மீட்டிங் வைத்துத் தந்தைக்குச் சமமானவர் ஆகுவதற்கான ஒரு திகதியை நிச்சயம் செய்தீர்களா?
தற்காலத்தில் ஒவ்வொரு பிரிவும் பல சந்திப்புக்கள் நடத்துவதை பாப்தாதா பார்க்கிறார். இரட்டை வெளிநாட்டவர்களின் மீட்டிங்கைப் பற்றியும் பாப்தாதா கேட்டார். அவர் அதை மிகவும் விரும்புகிறார். மீட்டிங்குகளின் சகல செய்திகளும் எப்போதும் பாப்தாதாவை வந்தடைந்த வண்ணமே உள்ளன. அதனால் பாப்தாதா கேட்கிறார்: இதற்காக நீங்கள் எந்தத் திகதியை நிச்சயம் செய்துள்ளீர்கள்? நாடகம் இந்தத் திகதியை நிச்சயம் செய்யுமா அல்லது நீங்கள் அதை நிச்சயம் செய்வீர்களா? யார் இதை நிச்சயம் செய்வார்கள்? ஆமாம், நீங்கள் நிச்சயமாக ஓர் இலட்சியத்தை வைத்திருக்க வேண்டும். உங்கள் எல்லோருக்கும் மிக நல்லதோர், எல்லாவற்றிலும் மிகச் சிறந்ததோர் இலட்சியம் உள்ளது. ஆனால் இப்போது, நீங்கள் வைத்திருந்த இலட்சியத்திற்கேற்ப, அந்த மேன்மையான இலட்சியத்திற்கான தகைமைகளையும் நீங்கள் உங்களுக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும். தற்சமயம், உங்களின் இலட்சியத்திற்கும் அதன் தகைமைகளுக்கும் இடையில் ஒரு வேறுபாடு காணப்படுகிறது. இலட்சியமும் அதன் தகைமைகளும் சமமானவை ஆகும்போது, அந்த இலட்சியம் நடைமுறைப்படுத்தப்படும். குழந்தைகள் எல்லோரும் அமிர்த வேளையில் ஒரு சந்திப்பைக் கொண்டாடி, ஓர் எண்ணத்தை ஏற்படுத்தும்போது, அதை அவர்கள் மிக நன்றாகச் செய்கிறார்கள். எங்கும் உள்ள ஒவ்வொரு குழந்தையின் இதயபூர்வமான உரையாடலையும் பாப்தாதா செவிமடுக்கிறார். நீங்கள் மிக அழகாக உரையாடுகிறீர்கள். நீங்கள் மிக நல்ல முயற்சியும் செய்கிறீர்கள். ஆனால், உங்களின் முயற்சிகளில், ஒரு விடயத்தில் நீங்கள் தீவிரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். ஆனால், தீவிர முயற்சி இருக்க வேண்டும். தீவிரத்தன்மைக்கான திடசங்கற்பம் இருக்க வேண்டும். இதைச் சேர்க்க வேண்டியுள்ளது.
காலத்திற்கேற்ப, குழந்தைகள் எல்லோருக்காகவும் பாப்தாதாவிற்கு ஒரு விருப்பம் உள்ளது. நீங்கள் வரிசைக்கிரமமாக இருந்தாலும், பாப்தாதா அதை அறிவார். நீங்கள் வரிசைக்கிரமமாக இருந்தாலும், சதா தீவிர முயற்சி இருக்க வேண்டும். இதற்கான பெரும் தேவை காணப்படுகிறது. காலம் நிறைவை நோக்கி விரைவாக நகர்ந்து கொண்டிருக்கிறது. எவ்வாறாயினும், இப்போது, குழந்தைகளான நீங்கள் நிச்சயமாகத் தந்தைக்குச் சமமானவர் ஆகவேண்டும். இதுவும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நீங்கள் அதில் தீவிரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும். நீங்களும் உங்களையே சோதித்துப் பார்க்க வேண்டும்: நான் எல்லா வேளையும் தீவிர முயற்சியாளராக இருக்கிறேனா? இது ஏனென்றால், உங்களின் முயற்சிகளில் பல பரீட்சைத்தாள்கள் வருகின்றன. அவை வரும். எவ்வாறாயினும், ஒரு தீவிர முயற்சியாளர் அந்தப் பரீட்சைகளில் சித்தி அடைவது என்பது, தீவிர முயற்சியாளர் அந்தப் பரீட்சையில் ஏற்கனவே சித்தி அடைந்து விட்டதைப் போல் உறுதியானது. அவர் சித்தி அடைய வேண்டும் என்பதல்ல, ஆனால் அவர் ஏற்கனவே சித்தி அடைந்து விட்டார். இது நிச்சயிக்கப்பட்டுள்ளது. நீங்கள் எல்லோரும் மிகுந்த ஆர்வத்துடன் சேவை செய்கிறீர்கள். எவ்வாறாயினும், முன்னரும் பாப்தாதா உங்களுக்குக் கூறியுள்ளார். அதாவது, காலத்திற்கேற்ப, நீங்கள் ஒரே வேளையில் மூன்று வகையான சேவைகளை, அதாவது, உங்களின் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் மூலம் செய்ய வேண்டும். ஓர் அனுபவத்தைக் கொடுப்பதற்கு உங்களின் மனதைப் பயன்படுத்துங்கள். உங்களின் வார்த்தைகளின் மூலம் ஞானப் பொக்கிஷத்தின் அறிமுகத்தைக் கொடுங்கள். சம்பூரணமான யோகி வாழ்க்கையின் நடைமுறை ரூபத்தின் அனுபவத்தைக் கொடுப்பதற்கு உங்களின் முகத்தையும் நடத்தையையும் பயன்படுத்துங்கள். நீங்கள் ஒரே வேளையில் மூன்று வகையான சேவைகளையும் செய்ய வேண்டும். வெவ்வேறாக அல்ல. சிறிதளவு நேரமே உள்ளது. இப்போதும் செய்வதற்கு அதிகளவு சேவை எஞ்சியுள்ளது. சேவை செய்வதற்கான இலகுவான வழிமுறை, உங்களின் மனோபாவத்தால் உங்களின் அதிர்வலைகளை உருவாக்குவதும் உங்களின் அதிர்வலைகளால் சூழலை உருவாக்குவதுமே என பாப்தாதா பார்த்துள்ளார். ஏனென்றால், உங்களின் மனோபாவமே எல்லாவற்றிலும் அதி சக்திவாய்ந்த வழிமுறை ஆகும். எப்படி விஞ்ஞானத்தின் ஏவுகணைகளால் மிக வேகமாகப் பறக்கக் கூடியதாக உள்ளதோ, அதேபோல், உங்களின் நல்லாசிகளினதும் தூய உணர்வுகளினதும் ஆன்மீக மனோபாவம், உங்களின் பார்வையையும் உங்களின் உலகையும் மாற்றும். ஓரிடத்தில் இருந்தவண்ணம், உங்களால் உங்களின் மனோபாவத்தால் சேவை செய்ய முடியும். நீங்கள் கேட்டவற்றை மறக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால், ஒரு சூழலில் நீங்கள் பெற்ற அனுபவத்தை உங்களால் மறக்க முடியாது. மதுவனத்தில் தந்தை பிரம்மா செயல்பட்ட பூமியின், அவர் யோகம் செய்து, தெய்வீகச் செயல்களைச் செய்த இடத்தின் சூழலை அனுபவம் செய்துள்ளீர்கள். இப்போதும் யாராவது அனுபவம் செய்யும் சூழலை மறக்க முடியாது. சூழலின் அனுபவம் உங்களின் இதயங்களில் பதிந்து விடுகின்றது. ஆம், வார்த்தைகளால் சேவை செய்யும் பல பெரிய நிகழ்ச்சிகளை நீங்கள் நடத்தி உள்ளீர்கள். ஆனால் நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் ஆன்மீக மனோபாவத்தாலும் அதிர்வலைகளாலும் ஒரு சூழலை உருவாக்க வேண்டும். எவ்வாறாயினும், உங்களின் இதயத்தில் அல்லது மனதில் தவறான மனோபாவத்தின் எந்தவிதமான அதிர்வலைகளும் இல்லாதபோதே, உங்களின் மனோபாவம் ஆன்மீகமாகவும் சக்திவாய்ந்ததாகவும் இருக்கும். உங்களின் மனதின் மனோபாவம் சதா சுத்தமாக இருக்க வேண்டும். யாராவதோர் ஆத்மாவைப் பற்றி உங்களுக்குள் ஏதாவது வீணான மனோபாவம் இருக்குமாயின், அல்லது, ஞானத்தின் அடிப்படையில் கூறுவதானால், உங்களுக்குள் எதிர்மறையான மனோபாவம் இருக்குமாயின், எதிர்மறை என்றால் குப்பை என்றே அர்த்தம். உங்களின் மனதில் குப்பை இருக்குமாயின், உங்களால் தூய மனோபாவத்துடன் சேவை செய்ய முடியாதிருக்கும். எனவே, எல்லாவற்றுக்கும் முதலில், உங்களையே சோதித்துப் பாருங்கள்: எனது மனதின் மனோபாவம் தூயதாகவும் ஆன்மீகமாகவும் உள்ளதா? எதிர்மறையான மனோபாவத்தை உங்களின் நல்லாசிகளாலும் தூய உணர்வுகளாலும் சாதகமான மனோபாவமாக மாற்றுங்கள். அது எதிர்மறையாக இருக்கும்போது, உங்களின் சொந்த மனதிலேயே நீங்கள் துன்பப்படுகிறீர்கள்தானே? உங்களுக்குள் வீணான எண்ணங்கள் ஏற்படுகின்றன, அல்லவா? அதனால், எல்லாவற்றுக்கும் முதலில், உங்களையே சோதித்துப் பாருங்கள்: எனது சொந்த மனதில் ஏதாவது முரண்பாடு உள்ளதா? ஆம், அது வரிசைக்கிரமமானதே. நல்லவர்களும் இருக்கிறார்கள், அத்துடன் பிரச்சனைகளை உருவாக்குபவர்களும் இருக்கிறார்கள். எவ்வாறாயினும், இவர் இப்படிப்பட்டவர் என்று புரிந்து கொள்வது நல்லதே. தவறைத் தவறு என்றும் சரியைச் சரி என்றும் கருதுங்கள். ஆனால், அதை உங்களின் இதயத்தில் வைத்திருக்காதீர்கள். இதைப் புரிந்து கொள்வது வேறு விடயம். ஞானம் நிறைந்தவராக இருப்பது நல்லதே. ஆம், அது தவறாக இருக்கும்போது அது தவறு என நீங்கள் சொல்வீர்கள். சில குழந்தைகள் சொல்வார்கள்: ‘பாபா, அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று உங்களுக்குத் தெரியாது. நீங்கள் அவர்களைப் பார்த்திருந்தால், உங்களுக்குத் தெரியும்.’ நீங்கள் சொல்வதை பாபா நம்புகிறார். நீங்கள் அவருக்குச் சொல்ல முன்னரே, அவர் எப்படிப்பட்டவர் என்பது அவருக்குத் தெரியும். ஆனால், இத்தகைய விடயங்களை உங்களின் இதயத்திலும் உங்களின் மனோபாவத்திலும் வைத்திருப்பதன் மூலம் நீங்கள் உங்களையே குழப்பத்திற்கு உள்ளாக்குகிறீர்கள். உங்களின் இதயத்திலும் மனதிலும் ஏதாவது தீங்கான விடயம் இருக்கும்போது, எங்கே தீயது இருக்கிறதோ, எங்கே வீணான எண்ணங்கள் உள்ளனவோ, அவர் எப்படி ஓர் உலக உபகாரி ஆகமுடியும்? உங்கள் எல்லோருடைய தொழிலும் என்ன? உங்களில் எவராவது நீங்கள் இலண்டனுக்கு மட்டும், டெல்லிக்கு மட்டும், உத்தரப்பிரதேசத்திற்கு மட்டும் உபகாரிகள் எனச் சொல்வீர்களா? அல்லது, நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ அந்த இடத்திற்கு மட்டும் எனச் சொல்வீர்களா? ஓகே, அந்தப் பிரதேசம் அல்ல, ஆனால் நீங்கள் இருக்கும் நிலையத்திற்கு மட்டும் உபகாரிகள் எனச் சொல்வீர்களா? நீங்கள் எல்லோருமே உங்களின் தொழில், உலக உபகாரி என்றே சொல்கிறீர்கள். நீங்கள் எல்லோரும் யார்? நீங்கள் உலக உபகாரிகளா? நீங்கள் அத்தகையவர்கள் என்றால், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! உலக உபகாரிகள்! உங்களின் மனதில் தீங்கான எதுவும் இல்லையல்லவா? நீங்கள் அதைப் புரிந்து கொள்ளக்கூடும். ஆனால் அது வேறு விடயம். எது சரி, எது பிழை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஆனால் அதை உங்களின் மனதில் வைத்திருக்காதீர்கள். இந்த மனோபாவத்தை உங்களின் மனதில் வைத்திருப்பதன் மூலம் உங்களின் பார்வையும் மாறும். உங்களின் உலகமும் மாறும்.
பாப்தாதா உங்களுக்குச் சில வீட்டுவேலைகள் தந்திருந்தார். அது என்ன? அது எல்லோராலும் - தாய்மார்கள், இளைஞர், வயதானவர்கள் - செய்யக்கூடிய மிக இலகுவான முயற்சியாகும். குழந்தைகள் எல்லோராலும் அதைச் செய்ய முடியும். அதைச் செய்வதற்கான வழிமுறை, ஒரேயொரு விடயத்தைச் செய்வதே ஆகும். நீங்கள் யாராவது ஒருவருடன் தொடர்பில் வரும்போது, ஆசீர்வாதங்களைக் கொடுத்து, ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். அவர் உங்களின் மீது தீங்கான எண்ணங்களைக் கொண்டிருந்தாலும், நீங்கள் என்ன பாடநெறியைக் கற்பிக்கிறீர்கள்? எதிர்மறையைச் சாதகமாக மாற்றுவதற்கான பாடநெறி. அந்த வேளையில், உங்களுக்கே இந்தப் பாடநெறியைக் கொடுங்கள். சவால் என்ன? இயற்கையைத் தமோகுணியில் இருந்து சதோகுணியாக மாற்றுவதே உங்களின் சவால் ஆகும். இதுவே உங்களின் சவால், அப்படித்தானே? நீங்கள் இயற்கையை சதோபிரதான் ஆக்க வேண்டும் என்ற சவாலை நீங்கள் எல்லோருமே செய்துள்ளீர்கள். நீங்கள் அப்படி ஆக்க வேண்டுமா? அப்படி என்றால், தலையை அசையுங்கள்! உங்களின் கைகளை அசையுங்கள்! மற்றவர்களைப் பார்த்து அவற்றை அசைக்காதீர்கள். ஆனால், உங்களின் இதயபூர்வமாக அவற்றை அசையுங்கள். இப்போது, காலத்திற்கேற்ப, உங்களின் மனோபாவத்தால் சூழலை உருவாக்குவதே உங்களின் தீவிர முயற்சி ஆகும். எனவே, உங்களின் மனோபாவத்தில் சிறிதளவு குப்பை இருந்தாலும் எப்படி உங்களின் மனோபாவத்தால் நீங்கள் சூழலை உருவாக்கப் போகின்றீர்கள்? உங்களின் அதிர்வலைகள் இயற்கையைச் சென்றடையும். வார்த்தைகளால் அங்கே சென்று அடைய முடியாது. உங்களின் அதிர்வலைகள் அங்கே சென்றடையும். உங்களின் அதிர்வலைகள் உங்களின் மனோபாவத்தால் உருவாக்கப்படுகின்றன. உங்களின் அதிர்வலைகளால் சூழல் உருவாக்கப்படுகின்றது. மதுவனத்திலும் எல்லோரும் ஒரே மாதிரியானவர்கள் கிடையாது. எவ்வாறாயினும், தந்தை பிரம்மாவின் மனோபாவத்தாலும் விசேடமாக அதியன்பிற்கு உரியவர்களின் மனோபாவத்தாலும் அவர்களின் தீவிர முயற்சிகளாலும் அந்தச் சூழல் உருவாக்கப்பட்டது.
இன்று, பாபா உங்களின் தாதியை நினைவு செய்கிறார். நீங்கள் பார்த்த தாதிஜியின் சிறப்பியல்பு என்னவாக இருந்தது? அவர் எல்லாவற்றையும் எப்படிக் கட்டுப்படுத்தினார்? அவர் ஒருபோதும் எவரின் குறைபாட்டையும் மற்ற நபர் என்ன மனோபாவத்துடன் அவரிடம் வந்தாலும், தனது மனதில் வைத்திருக்கவில்லை. அவர் எல்லோருக்கும் உற்சாகத்தை வழங்கினார். உங்களின் தாய் ஜெகதாம்பா அந்தச் சூழலை உருவாக்கினார். எல்லாவற்றையும் அறிந்திருந்த போதும், அவர் எப்போதும் தனது மனோபாவத்தைத் தூயதாகவே வைத்திருந்தார். அதன் மூலம் உருவாக்கப்பட்ட சூழலை நீங்கள் எல்லோரும் அனுபவம் செய்கிறீர்கள். ‘தந்தையைப் பின்பற்றுங்கள்’ என்று இருந்தாலும், பாப்தாதா எப்போதும் கூறுகிறார்: ஒவ்வொருவரின் சிறப்பியல்பையும் அறிந்து, அந்தச் சிறப்பியல்பை உங்களுக்கு உரியதாக ஆக்கிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு குழந்தையிலும் குறித்துக் கொள்ளுங்கள்: ஒருவர் பாப்தாதாவின் குழந்தை ஆகியுள்ளார். ஒவ்வொரு குழந்தையும், அவர் மூன்றாம் இலக்கத்தில் இருந்தாலும் நாடகத்தின் சிறப்பியல்பும் பாப்தாதாவின் ஆசீர்வாதமும் என்னவென்றால், குழந்தைகள் எல்லோரிலும் ஒருவரிடம் 99 குறைகள் இருந்தாலும் அவரிடம் நிச்சயமாக ஒரு சிறப்பியல்பு இருக்கும். அந்தச் சிறப்பியல்பால், ‘எனது பாபா!’ எனச் சொல்வதற்கான உரிமை அவருக்கு உள்ளது. அவர் ஆதிக்கத்திற்கு உட்பட்டு இருக்கலாம். ஆனால் அவருக்குத் தந்தையிடம் துண்டிக்க முடியாத அன்பு இருக்கும். இதனாலேயே, இப்போது, காலம் நெருங்கி வருவதற்கேற்ப, தந்தையின் இடங்கள் எங்கெல்லாம் இருக்கின்றனவோ, அவை கிராமங்களிலோ, பெரிய பிராந்தியங்களிலோ இருந்தாலும் அல்லது நிலையங்களாகவோ இருந்தாலும் ஒவ்வோர் இடமும் ஒவ்வொரு சகபாடியும் மேன்மையான மனோபாவத்தின் சூழலைக் கொண்டிருப்பது அவசியமாகும். ஒரு விடயத்தை நினைவில் வைத்திருங்கள்: யாராவது உங்களுக்காக தீய எண்ணங்களைக் கொண்டிருந்தாலும், அவற்றை எடுத்துக் கொள்வது யார்? அவற்றைக் கொடுப்பவரும் அவற்றை எடுத்துக் கொள்பவரும் ஒரே நபரா அல்லது இரண்டு நபர்களா? யாராவது தீங்கான எதையும் உங்களுக்குக் கொடுத்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்? அதை உங்களுடனேயே வைத்துக் கொள்வீர்களா? அல்லது, அதைத் திருப்பிக் கொடுப்பீர்களா, அதை எறிந்து விடுவீர்களா அல்லது உங்களின் அலுமாரியில் பத்திரமாக வைத்திருப்பீர்களா? அல்லது, உங்களின் இதயத்தில் மறைத்து வைத்திருப்பீர்களா? உங்களின் இதயமே, பாப்தாதாவின் சிம்மாசனம் ஆகும். ஆகவே, இப்போது உங்களின் மனதில் ஒரு விடயத்தை உறுதியாக நினைவு செய்யுங்கள். வார்த்தைகளில் மட்டும் அல்ல, ஆனால் உங்களின் மனதில் நினையுங்கள்: நான் ஆசீர்வாதங்களைக் கொடுத்து, ஆசீர்வாதங்களைப் பெற வேண்டும். உங்களின் மனதில் எதிர்மறையான எதையும் வைத்திருக்காதீர்கள். ஓகே, நீங்கள் எதையாவது ஒரு காதில் கேட்டால், அதை மற்றைய காதால் விட்டு விடுவது உங்களின் கடமை ஆகும். அல்லது, இது வேறு யாருடைய கடமையா? அப்போது மட்டுமே உங்களால் உலகிலும் ஆத்மாக்களிலும் ஒரு சூழலை உருவாக்குகின்ற சேவையை உங்களின் மனோபாவத்தால் ஒரு துரித கதியில் செய்யக் கூடியதாக இருக்கும். நீங்கள் உலக மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறீர்கள்தானே? எனவே, நீங்கள் எதை நினைவு செய்வீர்கள்? அதை உங்களின் மனதால் நினைவு செய்யுங்கள். ஆசீர்வாதங்கள் என்ற வார்த்தையை நினைவு செய்யுங்கள், அவ்வளவுதான். ஏனென்றால், உங்களின் உயிரற்ற விக்கிரகங்கள் என்ன செய்கின்றன? அவை ஆசீர்வாதங்களையே வழங்குகின்றன, அல்லவா? மக்கள் ஆலயங்களுக்குச் செல்லும்போது, அவர்கள் எதை வேண்டுகிறார்கள்? அவர்கள் ஆசிகளையே வேண்டுகிறார்கள். அவர்கள் ஆசீர்வாதங்களைப் பெறுவதனாலேயே அவற்றை வேண்டுகிறார்கள். உங்களின் கடைசிப் பிறவியிலும் உங்களின் உயிரற்ற விக்கிரகங்கள் ஆசீர்வாதங்களை வழங்குகின்றன. அந்த மனோபாவத்துடன் அவை எல்லோருடைய ஆசைகளையும் பூர்த்தி செய்கின்றன. நீங்கள் மீண்டும் மீண்டும் இந்த முறையில் ஆசீர்வாதங்களை வழங்குபவர்கள் ஆகியதாலேயே உங்களின் உயிரற்ற விக்கிரகங்கள் இன்றும் ஆசீர்வாதங்களை வழங்குகின்றன. ஓகே, ஓர் ஆத்மா எதனுடைய ஆதிக்கத்திற்கும் உட்பட்டிருக்கும்போது, மன்னிப்புக் கடலின் குழந்தையான நீங்கள், சிறிதளவு அவரை மன்னித்தால், அது நல்லது, அப்படித்தானே? எனவே, நீங்கள் எல்லோரும் மாஸ்ரர் மன்னிப்புக் கடல்களா? நீங்கள் அத்தகையவர்களா? அல்லது, இல்லையா? நீங்கள் அத்தகையவர்கள், அப்படித்தானே? ‘நான் முதலில்’ எனக் கூறுங்கள். இதில் ‘ஓ அர்ச்சுனா’ ஆகுங்கள். உங்களுக்கு முன்னால் வருகின்ற எவரும் சிறிதளவு அன்பையும் ஒத்துழைப்பையும் எடுத்துக் கொள்வதுடன் மன்னிப்பு, தைரியம், ஒத்துழைப்பு, ஊக்கம் மற்றும் உற்சாகத்தையும் அனுபவம் செய்யக்கூடியதான சூழலை உருவாக்குங்கள். இது சாத்தியமா? சாத்தியமா? முதல் வரிசையில் அமர்ந்திருப்பவர்களே, இது சாத்தியமா? உங்களின் கைகளை உயர்த்துங்கள்! முதலில், நீங்கள் அதைச் செய்ய வேண்டும். நீங்கள் அதைச் செய்யவே வேண்டும். முதல் வரிசையில் இருக்கும் ஆசிரியர்களே, நீங்கள் எல்லோரும் இதைச் செய்வீர்களா? அச்சா.
பாபா பல்வேறு இடங்களில் இருந்து குழந்தைகளின் ஈமெயில்களையும் கடிதங்களையும் பெற்றுள்ளார். கடிதங்கள் எழுதாவிட்டாலும் எண்ணத்தை மட்டும் கொண்டிருந்தவர்களும் இருக்கிறார்கள். எண்ணத்தை மட்டும் கொண்டிருப்பவர்களின் அன்பும் நினைவுகளும்கூட பாப்தாதாவை வந்தடைந்தன. அவர்கள் மிக இனிமையான கடிதங்களை எழுதுகிறார்கள். தாங்கள் ஊக்கத்திலும் உற்சாகத்திலும் பறந்து கொண்டிருப்பதாக அவர்கள் கடிதங்களை எழுதுகிறார்கள். எப்படியாயினும் அது நல்லதே. கடிதங்களை எழுதுவதன் மூலம் அவர்கள் அதைச் செய்ய வேண்டும் என்று கட்டுப்படுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் அந்தச் சத்தியத்தைச் செய்கிறார்கள். எனவே, எங்கே இருந்து நீங்கள் எல்லோரும் பார்க்கிறீர்களோ அல்லது கேட்டுக் கொண்டிருக்கிறீர்களோ, உங்கள் எல்லோருக்கும் பாப்தாதா தனிப்பட்ட முறையில் அவருக்கு முன்னால் அமர்ந்திருப்பவர்களுக்கு வழங்குவதற்கு முன்னர், அன்பையும் நினைவுகளையும் வழங்குகிறார். வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு நேரங்கள் உள்ளன என்பதை பாப்தாதா அறிவார். ஆனால் அப்படி இருந்தும் எல்லோரும் நினைவில் அமர்ந்திருந்து, அதிகளவு உற்சாகத்துடன் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அச்சா.
உங்கள் எல்லோருக்கும் தீவிர முயற்சி செய்து முதலாம் இலக்கத்தவர் ஆகுவதற்கான எண்ணம் உள்ளதா? உங்களின் கைகளை உயர்த்துங்கள்! இப்போது, ஆசிரியர்கள் தமது கைகளை உயர்த்துகிறார்கள். முதல் வரிசை எப்படியும் இப்படித்தான் உள்ளது. இது நல்லது. நாள் முழுவதும் அவ்வப்போது, உங்களுக்கு ஐந்து நிமிடங்கள் கிடைக்கும்போது, உங்களின் மனதின் அப்பியாசத்தைச் செய்யுங்கள் என்ற வழிகாட்டலை பாப்தாதாவும் வழங்கி உள்ளார். ஏனென்றால், தற்காலத்தில், உலகமும் அப்பியாசத்தில் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். எனவே, ஐந்து நிமிடங்களுக்கு உங்களின் மனதின் அப்பியாசத்தைச் செய்யுங்கள். அதைப் பரந்தாமத்தில் இருந்து சூட்சும வதனத்திற்குக் கொண்டு வாருங்கள். உங்களின் தேவதை ரூபத்தை நினைவு செய்யுங்கள், பின்னர் உங்களின் பூஜிக்கத்தகுதி வாய்ந்த ரூபத்தை நினைவு செய்யுங்கள். பின்னர் உங்களின் பிராமண ரூபத்தையும் அதன்பின்னர் உங்களின் தேவ ரூபத்தையும் நினைவு செய்யுங்கள். அவை எத்தனை? ஐந்து. எனவே, ஐந்து நிமிடங்களில், இந்த ஐந்து ரூபங்களுடன் அப்பியாசம் செய்யுங்கள். நீங்கள் இதை நாள் முழுவதும் நடக்கும்போதும் அசையும் போதும் செய்ய முடியும். இதற்காக உங்களுக்கு ஏதாவது மைதானமோ அல்லது களமோ வேண்டியதில்லை. நீங்கள் ஓட வேண்டியதில்லை. உங்களுக்கு ஒரு கதிரை தேவையில்லை. உங்களுக்கு ஓர் ஆசனம் வேண்டியதில்லை. ஓர் இயந்திரமும் தேவையில்லை. எப்படி உங்களின் சரீரங்களுக்கு பௌதீக அப்பியாசம் தேவையோ, உங்களால் அதைச் செய்ய முடியும். அதைச் செய்வதற்கு உங்களுக்கு எந்தவிதத் தடையும் கிடையாது. ஆனால் அத்துடன் இந்த அப்பியாசத்தையும் உங்களின் மனங்களுக்கான இந்தப் பயிற்சியையும் செய்யுங்கள். இது உங்களின் மனங்களை சதா சந்தோஷமாகவும் ஊக்கம், உற்சாகம் நிறைந்ததாகவும் வைத்திருப்பதுடன் பறக்கும் ஸ்திதியின் அனுபவத்தையும் உங்களுக்கு வழங்கும். எனவே, நீங்கள் எல்லோரும் இப்பொழுதே இந்தப் பயிற்சியை ஆரம்பியுங்கள். பரந்தாமத்தில் இருந்து ஒரு தேவர் ஆகுதல். (பாப்தாதா அப்பியாசத்தைச் செய்வித்தார்.) அச்சா.
உங்களின் மனோபாவத்தின் மூலம் ஆன்மீகமான, சக்திவாய்ந்த சூழலை உருவாக்கும் எங்கும் உள்ள தீவிர முயற்சியாளர் குழந்தைகள் எல்லோருக்கும் தமது இடம் மற்றும் ஸ்திதியால் சக்திவாய்ந்த அதிர்வலைகளின் அனுபவத்தை எப்போதும் வழங்குபவர்களுக்கும் திடசங்கற்பமான எண்ணங்களைக் கொண்டுள்ள மேன்மையான ஆத்மாக்களுக்கும் எப்போதும் ஆசீர்வாதங்களைக் கொடுத்து ஆசீர்வாதங்களைப் பெறுகின்ற கருணைநிறைந்த ஆத்மாக்களுக்கும் தங்களைப் பறக்கின்ற ஸ்திதியில் சதா அனுபவம் செய்கின்ற இலேசான மற்றும் ஒளியான ஆத்மாக்களுக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்தேயும்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் பரந்த, எல்லையற்ற புத்தியால் ஒன்றுகூடலின் சக்தியை அதிகரித்து, வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.ஓன்றுகூடலின் சக்தியை அதிகரிப்பதே, இந்த பிராமண வாழ்க்கையின் உங்களின் முதலாவது மேன்மையான பணி ஆகும். இதற்கு, பெரும்பாலானோர் எதையாவது சரி பார்க்கும்போது, அப்போது நீங்கள் பெரும்பாலானோருடன் இருப்பதே ஒன்றுகூடலின் சக்தியை அதிகரிப்பதாகும். இதற்கு, ‘எனது அபிப்பிராயம் மிகவும் நல்லது’ என்ற எண்ணத்துடன் உங்களின் பெருமையைப் பற்றி நினைக்காதீர்கள். அது எவ்வளவுதான் நல்லதாக இருந்தாலும் அது ஒன்றுகூடலின் ஒற்றுமையை உடைக்குமாக இருந்தால், அந்த நல்லதும் சாதாரணமானது ஆகிவிடும். அந்த வேளையில், நீங்கள் உங்களின் அபிப்பிராயத்தைத் துறக்க வேண்டியிருந்தாலும் அந்தத் துறவறத்தில் பாக்கியம் உள்ளது. இவ்வாறு செய்வதன் மூலமே நீங்கள் வெற்றி சொரூபம் ஆகி, மற்றவர்களுடன் நெருக்கமான உறவுமுறைகளைப் பேணுவீர்கள்.
சுலோகம்:
முழுமையான வெற்றி பெறுவதற்கு, உங்களின் மனதின் ஒருமுகப்படுத்தலை அதிகரியுங்கள்.அவ்யக்த சமிக்கை: உங்களின் மனதால் யோக சக்திகளுடன் உங்களிலும் மற்றவர்களிலும் பரிசோதனை செய்யுங்கள்.
இப்போதுள்ள நேரத்திற்கேற்ப, ஒரே வேளையில் உங்களின் மனதாலும் வார்த்தைகளாலும் சேவை செய்யுங்கள். எவ்வாறாயினும், உங்களின் வார்த்தைகளால் சேவை செய்வது இலகுவானது. ஆனால் உங்களின் மனதினால் சேவை செய்வது கவனம் செலுத்தும் ஒரு விடயமாகும். அதனால், உங்களின் மனதில் எல்லோருக்காகவும் சதா நல்லாசிகளும் தூய எண்ணங்களுக்குமான எண்ணங்களைக் கொண்டிருங்கள். உங்களின் வார்த்தைகளில் இனிமையின் புதுமையும் திருப்தியும் இலகுத்தன்மையும் இருக்க வேண்டும். நீங்கள் செய்யும் சேவையில் உங்களால் இலகுவாகத் தொடர்ந்து வெற்றி பெறுவீர்கள்.