13.05.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, சகல சரீரதாரிகளின் மீதுள்ள அன்பை நீக்கி, ஒரேயொரு சரீரமற்ற தந்தையை நினைவுசெய்யுங்கள். அப்போது உங்களுடைய உடல் உறுப்புக்கள் அனைத்தும் குளிர்மை அடையும்.

கேள்வி:
தேவ குலத்தைச் சார்ந்த ஆத்மாக்களின் அடையாளங்கள் என்ன?

பதில்:
1.தேவ குலத்தைச் சார்ந்த ஆத்மாக்களுக்கு இலகுவாகப் பழைய உலகின் மீது விருப்பமின்மை ஏற்படும். 2) அவர்களின் புத்தி எப்போதும் எல்லையற்றதாக இருக்கும். அவர்கள் சிவாலயத்திற்குச் செல்வதற்காகத் தூய மலர்கள் ஆகுவதற்கான முயற்சியை மேற்கொள்வார்கள். 3) அவர்கள் எந்தவித அசுரத்தனமான செயல்களையும் செய்ய மாட்டார்கள். 4) அவர்கள் அட்டவணை ஒன்றைப் பேணி, எந்தவிதமான அசுரச் செயல்களையும் செய்யாதிருப்பதைச் சோதிப்பார்கள். 5) அவர்கள் தந்தையிடம் உண்மையைக் கூறுவதுடன், எதனையும் மறைக்க மாட்டார்கள்.

பாடல்:
நாங்கள் அவரிடம் இருந்து பிரிந்திருக்கவும் மாட்டோம், எந்தவிதத் துன்பமும் எங்களுக்கு இருக்கவும் மாட்டாது.…

ஓம் சாந்தி.
இவை எல்லையற்ற விடயங்களாகும். எல்லைக்குட்பட்ட விடயங்கள் இப்போது முடிவடைந்து விட்டன. இந்த உலகில், பலர் நினைவு செய்யப்படுகிறார்கள். சரீரதாரிகள் பலரிடம் அன்புள்ளது. பரமாத்மாவான பரமதந்தை, சிவன் என அழைக்கப்படுகின்ற ஒரேயொரு சரீரமற்றவரே உள்ளார். உங்களுடைய புத்தியின் யோகம் இப்போது அவரிடம் மட்டுமே இணைக்கப்பட்டிருக்க வேண்டும். எந்தவொரு சரீரதாரியையும் நினைவு செய்யாதீர்கள். பிராமணப் பூசகர்கள் போன்றோருக்கு உணவூட்டுவது, கலியுக வழக்கங்களும் சம்பிரதாயமும் ஆகும். இங்கே உள்ள வழக்கங்களும் சம்பிரதாயங்களும் அங்கே உள்ளவற்றை விட முற்றிலும் வேறுபட்டவை. எந்தவொரு சரீரதாரியும் இப்போது நினைவு செய்யப்படக்கூடாது. நீங்கள் அந்த ஸ்திதியை அடையும் வரைக்கும், தொடர்ந்தும் முயற்சி செய்கிறீர்கள். தந்தை கூறுகிறார்: வாழ்ந்து மறைந்தவர்கள் அனைவரையும் அத்துடன் பழைய உலகில் இப்போது வாழ்பவர்களையும் இயன்ற அளவிற்கு மறந்திடுங்கள். நாள் முழுவதும், மற்றவர்களுக்கு எதனை விளங்கப்படுத்துவது எனக் கடைவதற்காக உங்களுடைய புத்தியை உபயோகியுங்கள். உலகின் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலத்தை வந்து புரிந்துகொள்ளும்படி அனைவருக்கும் கூறுங்கள். எவருக்கும் இது தெரியாது. கடந்தகாலம் என்றால் அது ஆரம்பித்த காலமாகும். அது சத்தியயுகத்துடன் ஆரம்பிக்கின்றது. நிகழ்காலம் என்றால் இப்போது இருப்பது. அது சத்தியயுகத்தில் இருந்து இன்றுவரை உள்ள காலமாகும். எதிர்காலம் என்பது நிகழவிருப்பது. உலகிலுள்ள எவருக்கும் இது தெரியாது. குழந்தைகளாகிய உங்களுக்கு இது தெரியும் என்பதனாலேயே, பதாதைகள் போன்றவற்றை நீங்கள் செய்கிறீர்கள். இது பெரியதொரு எல்லையற்ற நாடகம். அவர்கள் பல எல்லைக்கு உட்பட்ட பொய்யான நாடகங்களை உருவாக்குகிறார்கள். நாடகத்தின் கதாசிரியர், காட்சிகளையும் காட்சி அமைப்புக்களையும் உருவாக்கும் நபரில் இருந்து வேறுபட்டவராக இருப்பார். இந்த இரகசியங்கள் அனைத்தும் இப்போது உங்களுடைய புத்தியில் உள்ளன. நீங்கள் இப்போது பார்க்கின்ற எதுவும் நிலைத்து இருக்காது. அவை அனைத்தும் அழியப் போகின்றன. எனவே, நீங்கள் சத்தியயுகம் எவ்வாறிருக்கும் எனக் காட்டுவதற்காக, மிக அழகான காட்சிகளையும் காட்சி அமைப்புக்களையும் உருவாக்க வேண்டும். அஜ்மீரில், அவர்கள் தங்கத் துவாரகை நகரத்தின் மாதிரியுருவை உருவாக்கி உள்ளார்கள். எனவே, நீங்கள் அதிலுள்ள காட்சிகளையும், காட்சி அமைப்புக்களையும் பிரதி செய்து புதிய உலகம் எவ்வாறிருக்கும் எனக் காட்ட முடியும். இந்தப் பழைய உலகம் தீக்கு இரையாக்கப்படப் போகிறது. உங்களிடம் இந்த உலகத்தின் வரைபடமும் தோன்றப் போகும் புதிய உலகத்தின் வரைபடமும் உள்ளன. நீங்கள் இத்தகைய விடயங்களைப் பற்றிச் சிந்தித்து, நல்ல படங்களை உருவாக்க வேண்டும். இந்த வேளையில் மனிதர்கள் முற்றிலும் கல்லுப்புத்தியைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். எந்தளவிற்கு நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்தினாலும் அது அவர்களின் புத்திகளில் தங்குவதில்லை. நீங்கள் மிக நல்ல காட்சிகளையும், காட்சி அமைப்புக்களையும் உருவாக்கும் நாடகத்துறையினரின் உதவியைப் பெற்று, சத்தியயுகத்தின் மிக நல்ல காட்சிகளைக் காட்டவேண்டும். அவர்களால் உங்களுக்கு மிக நல்ல யோசனைகளை வழங்க முடியும். அதனைச் செய்வதற்கான பல வழிமுறைகளை அவர்களால் உங்களுக்குக் காட்ட முடியும். உண்மையில், சத்தியயுகத்தில் ஒரேயொரு தர்மமே இருந்தது என்பதை மக்கள் வந்து புரிந்துகொள்ளுமாறு, மிகவும் நல்லதொன்றை உருவாக்குமாறு நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்தி அவர்களிடம் கேட்க வேண்டும். நீங்கள் எவ்வளவற்றைக் கிரகிக்கிறீர்கள் என்பதில் குழந்தைகளாகிய நீங்கள் வரிசைக்கிரமமாக இருக்கிறீர்கள். சரீர உணர்வுடைய புத்தியானது அழுக்கான புத்தி எனப்படுகிறது. ஆத்ம உணர்வுடைய புத்தியானது மலரைப் போன்றது எனப்படுகிறது. நீங்கள் இப்போது மலர்கள் ஆகுகிறீர்கள். சரீர உணர்வு உடையவர்களாக இருந்தபோது, நீங்கள் முட்களாக இருந்தீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இந்தப் பழைய உலகின் மீது விருப்பமின்மையைக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எல்லையற்ற புத்தியையும் எல்லையற்ற விருப்பமின்மையையும் கொண்டிருக்கிறீர்கள். நாம் இந்த விபச்சார விடுதியின் மீது அதிகளவு விருப்பமின்மையைக் கொண்டிருக்கிறோம். நாம் சிவாலயத்திற்குச் செல்வதற்காக இப்போது மலர்கள் ஆகுகிறோம். இவ்வாறு ஆகும்போது, உங்களில் ஒருவர் தவறாக நடந்து கொண்டால் அவரிற்குள் தீய ஆவி பிரவேசித்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். வீட்டிலுள்ள ஆண், அன்னம் ஆகும்போது, அவரின் மனைவி எதனையும் புரிந்து கொள்ளாவிடின், அங்கு சிரமம் ஏற்படும். அவர் பெருமளவில் சகித்துக் கொள்ள நேரிடும். அப்போது அது அவளின் பாக்கியத்தில் இல்லை எனப் புரிந்துகொள்ளப்படும். அனைவரும் தேவ குலத்தைச் சார்ந்தவர்கள் ஆகமாட்டார்கள். இங்கே உரிமை உடையவர்களே இங்கு வருவார்கள். பாபாவிற்குப் பல தீய நடத்தைகளைப் பற்றிய அறிக்கைகள் வருகின்றன. ‘இன்னார் இந்த அசுரப் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்’. இதனாலேயே, பாபா தினமும் உங்களுக்குக் கூறுகிறார்: உங்களுடைய அட்டவணையைத் தினமும் பார்த்து, நீங்கள் எந்தவித அசுர செயல்களையும் செய்யவில்லையே எனச் சோதித்துப் பாருங்கள். பாபா கூறுகிறார்: உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் செய்த தவறுகள் அனைத்தையும் பாபாவிற்குக் கூறுங்கள். உங்களில் சிலர் மிகப் பெரிய தவற்றினைச் செய்யும்போது, தமது கௌரவம் இழக்கப்பட்டு விடுமோ என்று எண்ணி அவர்கள் அதனைச் சத்திரசிகிக்சை நிபுணரிடம் கூறுவதற்கு அதிகளவு வெட்கப்படுகின்றார்கள். உண்மையை ஒப்புக் கொள்ளாததால் மேலும் இழப்பு ஏற்படுகிறது. சத்தியம் அனைத்தும் அழிந்து விடும் வகையில், மாயை உங்களைப் பலமாக அறைகிறாள். மாயை மிகவும் சக்திவாய்ந்தவள். உங்களால் ஐந்து விகாரங்களையும் வெற்றிகொள்ள முடியாவிடின், தந்தையால் என்ன செய்ய முடியும்? தந்தை கூறுகிறார்: நான் கருணைநிறைந்தவன். அத்துடன் மரணங்களுக்கு எல்லாம் மரணமான மகாகாலனும் ஆவேன். நீங்கள் தூய்மை ஆக்குபவராகிய என்னை வந்து உங்களைத் தூய்மையாக்கும்படி அழைத்தீர்கள். இந்த இரு பெயர்களும் எனக்குரியவை. நான் இப்போது இரு பாகங்களையும் நடிக்கிறேன் - கருணை நிறைந்த ஒரேயொருவர், மகாகாலன். நான் முட்களை மலர்களாக மாற்றுகிறேன். அதனால், உங்களுடைய புத்தி அந்தச் சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். அமர்நாத் தந்தை (அமரத்துவப் பிரபு) கூறுகிறார்: நீங்கள் அனைவரும் பார்வதிகள். சதா என்னை மட்டும் நினைவுசெய்யுங்கள். அதன் மூலம் நீங்கள் அமரத்துவ பூமிக்குச் செல்வதுடன் உங்களுடைய பாவங்களும் அழிக்கப்படும். அந்த யாத்திரைகளில் செல்வதனால் உங்களுடைய பாவங்கள் அழிக்கப்பட மாட்டாது. அந்த யாத்திரைகள் அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கு உரியவை. செலவுகள் அனைத்தும் எவ்வாறு செய்யப்படுகின்றன எனக் குழந்தைகளாகிய உங்களிடம் பலர் கேட்கின்றனர். எவ்வாறாயினும், நீங்கள் என்ன பதிலை வழங்கினீர்கள் என்ற செய்தி எதனையும் பாபாவிடம் எவரும் வழங்கவில்லை. பிரம்மாவின் குழந்தைகளான பிராமணர்களான நாங்கள் பலர் இருக்கிறோம். எனவே, நாம் சகல செலவுகளையும் ஏற்றுக் கொள்வோம், அப்படியல்லவா? நாம் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம், எமக்காக இராச்சியத்தையும் ஸ்தாபிக்கிறோம். நாம் பின்னர் சென்று அங்கே ஆட்சிசெய்வோம். நாம் இராஜயோகத்தைக் கற்பதுடன், செலவுகளுக்கான பணத்தையும் வழங்குவோம். சிவபாபா அழியாத இந்த ஞான இரத்தினங்களைத் தானம் செய்கிறார். அதனூடாக நாம் அரசர்க்கெல்லாம் அரசர் ஆகுகிறோம். கற்கின்ற குழந்தைகளாகிய நீங்கள் செலவுகளுக்கான பணத்தைக் கொடுக்கிறீர்கள். நீங்கள் உங்களுடைய செலவுகளுக்கான பணத்தை கொடுக்கிறீர்களே அன்றி, எதற்காகவும் யாசிப்பதோ அல்லது தானம் கேட்பதோ கிடையாது என விளங்கப்படுத்துங்கள். எவ்வாறாயினும், இந்தக் கேள்வி தம்மிடம் கேட்கப்பட்டதாக மட்டுமே குழந்தைகள் எழுதுகிறார்கள். இதனாலேயே, பாபா கூறியுள்ளார்: நாள் முழுவதும் நீங்கள் எவ்வளவு சேவை செய்துள்ளீர்கள் என்பதை மாலையில் உங்களுடைய அட்டவணையில் பாருங்கள். இவை அனைத்தும் தொடர்ந்தும் செய்யப்பட வேண்டும். இங்கே வருபவர்களில் பலர் பிரஜைகள் ஆகுவார்கள். உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றுக் கொள்பவர்கள் மிகச் சிலரே ஆவர். மிகச் சில அரசர்களும் மிகச்சில செல்வந்தர்களும் இருப்பார்கள். ஏழைகள் பலர் உள்ளனர். இங்கே அவ்வாறு உள்ளது. தேவர்களின் உலகிலும் அவ்வாறே இருக்கும். இராச்சியம் ஒன்று ஸ்தாபிக்கப்படுகிறது. அதில் வரிசைக்கிரமமாக அனைவரும் தேவைப்படுகின்றனர். தந்தை வந்து உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிப்பதுடன், ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தையும் ஸ்தாபிக்கிறார். தேவ தர்மத்தின் இராச்சியம் இருந்தது. ஆனால் அது இப்போது இல்லை. தந்தை கூறுகிறார்: நான் மீண்டும் அதனை ஸ்தாபிக்கிறேன். எனவே, மக்களுக்கு அதனை விளங்கப்படுத்துவதற்கு உங்களுக்குப் படங்கள் தேவை. நீங்கள் பாபாவின் முரளியைச் செவிமடுக்கும் போது, நீங்கள் அதனைச் செய்வீர்கள். நாளாந்தம், நீங்கள் திருத்தங்களைப் பெற்றுக் கொள்கிறீர்கள். உங்களுடைய சொந்த ஸ்திதியைச் சோதித்து அது எந்தளவிற்குத் திருத்தப்பட்டுள்ளது எனப் பாருங்கள். தந்தை வந்து உங்களை அழுக்கில் இருந்து நீக்குகிறார். மற்றவர்களை எந்தளவிற்கு அழுக்கில் இருந்து நீக்குகின்ற சேவையைச் செய்கிறீர்களோ, அந்தளவிற்கு உயர்ந்ததோர் அந்தஸ்தை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் ஒருவரோடு ஒருவர் முற்றிலும் பாலும் சீனியும் போன்று வாழ வேண்டும். நீங்கள் சத்தியயுகத்தில் இருப்பதை விட அதி மேன்மையானவர்களாகத் தந்தை உங்களை ஆக்குகிறார். தந்தையாகிய கடவுள் உங்களுக்குக் கற்பிக்கிறார். எனவே, மாணவர்களாகிய நீங்கள் அவருடைய கற்பித்தல்களின் அற்புதங்களைக் காட்ட வேண்டும். அப்பொழுது மட்டுமே தந்தை தன்னை உங்களிடம் அர்ப்பணிப்பார். நீங்கள் இப்போது பாரதத்தைச் சுவர்க்கமாக மாற்றுகின்ற சேவையை மட்டுமே செய்கிறீர்கள் என்பது உங்களுடைய இதயத்தில் பிரவேசிக்க வேண்டும். ஆமாம், நீங்கள் உங்களுடைய தொழில் போன்றவற்றைத் தொடர்ந்தும் செய்ய வேண்டும். எவ்வாறாயினும், உங்களுடைய சொந்த முன்னேற்றத்தைப் பற்றி முதலில் சிந்தியுங்கள். இது மிகவும் இலகுவானது. மனிதர்களால் எதனையும் செய்ய முடியும். வீட்டில் உங்களுடைய குடும்பத்துடன் வசிக்கும்போது, நீங்கள் இராஜ அந்தஸ்தைக் கோர வேண்டும். எனவே, தினமும் உங்கள் அட்டவணையை எழுதுங்கள். நாள் முழுவதும் உங்கள் இலாபமும் நஷ்டமும் எவ்வாறிருந்தன எனச் சோதித்துப் பாருங்கள். நீங்கள் உங்களுடைய அட்டவணையை எழுதாது விட்டால், உங்களை நீங்கள் மாற்றிக் கொள்வது கடினமாக இருக்கும். நீங்கள் தந்தை கூறுவதையேனும் செவிமடுப்பதில்லை. நீங்கள் யாருக்காவது துன்பம் கொடுத்துள்ளீர்களா எனத் தினமும் சோதித்துப் பாருங்கள். நீங்கள் கோருகின்ற அந்தஸ்து மிகவும் உயர்ந்தது. அத்துடன் வருமானமும் அதிகளவானது. இல்லாவிடின், நீங்கள் அழ வேண்டியிருக்கும். இது ஓர் ஓட்டப் பந்தயம். சிலர் நூறாயிரக்கணக்கான ரூபாய்களைச் சம்பாதிக்கிறார்கள். ஆனால் ஏனையோரோ ஏழ்மையானவர்கள் ஆகுகிறார்கள். இது உங்கள் இறை ஓட்டப்பந்தயமாகும். நீங்கள் பௌதீகமாக ஓடவேண்டியது இல்லை. உங்களுடைய புத்தியால் அதியன்பிற்குரிய பாபாவை நினைவுசெய்யுங்கள். நீங்கள் ஏதாவது தவறு செய்திருந்தால், உடனடியாக அதனைப் பற்றி பாபாவிற்குக் கூறுங்கள். ‘பாபா, நான் இந்தத் தவறைச் செய்துள்ளேன். எனது பௌதீக அங்கங்களினூடாக நான் இந்தத் தவறைச் செய்துள்ளேன்.’ தந்தை கூறுகிறார்: சரி, பிழை எதுவென்று பிரித்துப் பார்ப்பதற்குரிய புத்தி உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, தவறான எதனையும் செய்யாதீர்கள். உண்மையில், நீங்கள் ஏதாவது தவறு செய்திருந்தால், நீங்கள் வருந்துவதுடன், தந்தையிடம் மன்னிப்புக் கேளுங்கள். நீங்கள் கூறுவதைக் கேட்பதற்காகவே அவர் இங்கே அமர்ந்திருக்கிறார். நீங்கள் எத்தகைய தவறான செயல்களைச் செய்தாலும், உடனடியாக பாபாவிற்குக் கூறுங்கள் அல்லது அதனைப் பற்றி பாபாவிற்கு எழுதுங்கள். ‘பாபா, நான் இந்தத் தவறான செயலைச் செய்தேன்’. பின்னர், அரைவாசி மன்னிக்கப்படும். நான் (பாபா) உங்கள் மீது கருணை கொள்வேன் என்பதல்ல. ஒரு சதமளவேனும் மன்னிப்போ அல்லது கருணையோ காட்டப்பட மாட்டாது. நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைச் சீர்திருத்திக் கொள்ள வேண்டும். தந்தையின் நினைவின் மூலம், உங்களுடைய பாவங்கள் அழிகின்றன. யோக சக்தியால் கடந்த காலத்திற்கு உரியது அனைத்தும் துண்டிக்கப்பட வேண்டும். தந்தைக்குரியவர் ஆகியபின்னர், அவரை இகழச் செய்யும் வகையில் நடக்காதீர்கள். சற்குருவை இகழ்பவர்களால் உயர்ந்த அந்தஸ்தைக் கோர முடியாது. நீங்கள் அதியுயர்ந்த அந்தஸ்தைப் பெறுகிறீர்கள். வேறு எவரும் ஏனைய குருமார்களிடம் இருந்து இராஜரீகமான அந்தஸ்தைப் பெற முடியாது. இங்கு, நீங்கள் இலக்கையும் குறிக்கோளையும் கொண்டிருக்கிறீர்கள். பக்தி மார்க்கத்தில் எந்தவிதமான இலக்கோ அல்லது குறிக்கோளே கிடையாது. அவ்வாறு இருந்தாலும், அது தற்காலிகமான காலத்திற்கு மட்டுமே ஆகும். 21 பிறவிகளுக்குரிய சந்தோஷத்திற்கும் ஒரு சில சதங்கள் பெறுமதியான சந்தோஷத்திற்கும் இடையில் பெரியதொரு வேறுபாடு உள்ளது. செல்வம் சந்தோஷத்தைக் கொண்டுவரும் என்பதல்ல. அது அதிகளவு துன்பத்தையும் கொண்டு வரும். ஓகே, உதாரணமாக, யாராவது ஒருவர் வைத்தியசாலையைக் கட்டும்போது, அவர் தனது அடுத்த பிறவியில் அதிகளவு நோய்வாய்ப்பட மாட்டார். அவரால் நன்கு கற்க முடியும் என்றோ அல்லது அவர் அதிகளவு செல்வத்தைப் பெற்றுக் கொள்வார் என்பதோ அல்ல. அதற்கு ஏற்பவே அனைத்தையும் அவர் செய்ய வேண்டும். யாராவது ஒருவர் தர்மசாலையைக் கட்டும்போது, அவர் தனது அடுத்த பிறவியில் மாளிகையைப் பெற்றுக் கொள்கிறார். அவர் ஆரோக்கியமாக இருப்பார் என்பதல்ல. இல்லை. தந்தை பல விடயங்களை விளங்கப்படுத்துகிறார். உங்களில் சிலர் அனைத்தையும் மிக நன்றாகப் புரிந்துகொண்டு மற்றவர்களுக்கும் விளங்கப்படுத்துகிறீர்கள். உங்களில் சிலர் எதனையும் புரிந்து கொள்வதில்லை. எனவே, தினமும் உங்களுடைய அட்டவணையை எழுதுங்கள். இன்று நான் என்ன பாவம் செய்தேன்? இன்று நான் இந்த விடயத்தில் தோற்றேன். இத்தகைய செயல்களைச் செய்ய வேண்டாம் எனப் பின்னர் பாபா அறிவுரை கூறுவார். நீங்கள் இப்போது சுவர்க்கத்திற்குச் செல்கிறீர்கள் என அறிவீர்கள். குழந்தைகளாகிய உங்களுடைய சந்தோஷப் பாதரசம் அந்தளவிற்கு உயர்வதில்லை. பாபா அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டுள்ளார்! நான் ஒரு வயதானவன். நான் இந்த சரீரத்தை விடுத்து இளவரசர் ஆகப் போகிறேன். நீங்களும் கற்கிறீர்கள். எனவே, உங்களுடைய சந்தோஷம் என்ற பாதரசம் உயர வேண்டும். எவ்வாறாயினும், நீங்கள் தந்தையையேனும் நினைவு செய்வதில்லை. தந்தை அனைத்தையும் உங்களுக்கு மிக இலகுவாக விளங்கப்படுத்துகிறார். ஆங்கிலம் போன்றவற்றைக் கற்பதற்கு நீங்கள் பெருமளவு முயற்சி செய்ய வேண்டியுள்ளது. அதனைக் கற்பதில் பெரும் சிரமம் உள்ளது. இது மிகவும் இலகுவானது. நீங்கள் இந்த ஆன்மீகக் கல்வியின் மூலம் சாந்தமாகவும் அமைதியானவராகவும் ஆகுகிறீர்கள். இங்கு, தொடர்ந்தும் தந்தையை நினைவுசெய்தால், உங்களுடைய அங்கங்கள் சாந்தம் அடையும். உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சரீரம் உள்ளதல்லவா? சிவபாபாவிற்கு சரீரம் கிடையாது. ஸ்ரீ கிருஷ்ணரிற்கே பௌதீகப் புலனங்கங்கள் உள்ளன. அவருடைய புலனங்கங்கள் சாந்தமாகவே இருக்கும். அதனாலேயே அவருடைய பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறு நீங்கள் அவருடைய சகவாசத்தைக் கொண்டிருக்க முடியும்? அவர் சத்தியயுகத்திலேயே இருப்பார். அவருடைய புலனங்கங்களைச் சாந்தம் ஆக்கியது யார்? நீங்கள் இப்போது இதனைப் புரிந்துகொள்கிறீர்கள். எனவே, குழந்தைகளே, நீங்கள் இவை அனைத்தையும் கிரகிக்க வேண்டும். நீங்கள் ஒருபோதும் சண்டை சச்சரவுகளில் ஈடுபடக்கூடாது. சத்தியத்தையே பேசுங்கள்! பொய் பேசும்போது, அனைத்தும் முடிவடைந்து விடுகிறது. குழந்தைகளாகிய உங்களுக்குத் தந்தை அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். அனைவருக்கும் அனுப்பக்கூடிய வகையில் மிக நல்ல பதாதைகளை உருவாக்குங்கள். அவை எவ்வளவு சிறந்தவை என்பதை மக்கள் காணும்போது, மேலும் வந்து பார்க்கவேண்டும் என உணர்வார்கள். விளங்கப்படுத்துபவர்கள் மிகக் திறமைசாலிகளாக ஆகவேண்டும். எவ்வாறு சேவை செய்வது என்பதை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். மற்றவர்களைத் தம்மைப் போன்று ஆக்கக்கூடிய மிக நல்ல ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். மற்றவர்களைத் தம்மைப் போன்று நிர்வாகிகள் ஆக்கக்கூடியவர்கள் நல்ல ஆசிரியர்கள் என அழைக்கப்படுகின்றனர். அவர்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெற்றுக் கொள்வார்கள். நீங்கள் குழந்தைப் புத்தியைக் கொண்டிருக்கக்கூடாது. இல்லாவிடின், யாராவது உங்களைத் தூக்கிக் கொண்டு சென்று விடுவார்கள். இது இராவணனின் சமுதாயம். நிலையத்தைப் பராமரிக்கக்கூடிய ஆசிரியர்களை ஆயத்தப்படுத்துங்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையின் கற்பித்தல்களின் அற்புதத்தை அவருக்குக் காட்டுங்கள். பாரதத்தைச் சுவர்க்கமாக ஆக்குகின்ற வியாபாரத்தில் ஈடுபட்டிருங்கள். முதலில் உங்களுடைய சொந்த முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். பாலும் சீனியும் போன்று ஒன்றாக வாழுங்கள்.

2. நீங்கள் ஏதாவது தவறு செய்திருந்தால், தந்தையிடம் மன்னிப்புக் கேட்டு உங்களைச் சீர்திருத்திக் கொள்ளுங்கள். இதில் தந்தை கருணை காட்டுவதில்லை. தந்தையை நினைவு செய்வதன் மூலம் உங்களுடைய பாவங்களை அழியுங்கள். பாபாவிற்கு அவமரியாதையை ஏற்படுத்தும் எந்த முறையிலும் நடக்காதீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு தாமரை போல் பற்றற்றவர் ஆகி, ஞானம் நிறைந்தவராக இருக்கும் சிறப்பியல்புடன் எந்தவிதமான சம்ஸ்காரங்களின் முரண்பாடுகளில் இருந்தும் உங்களைப் பாதுகாத்துக் கொள்வீர்களாக.

இறுதிவரை, சிலரிடம் ஒரு பணிப்பெண்ணின் சம்ஸ்காரங்களே இருக்கும். ஏனையோரிடம் ஓர் அரசனின் சம்ஸ்காரங்கள் இருக்கும். அவர்களின் சம்ஸ்காரங்கள் மாறுவதற்காகக் காத்திருக்காதீர்கள். அவை உங்களைப் பாதிக்கவும் அனுமதிக்காதீர்கள். ஏனென்றால், முதலில், ஒவ்வொருவரின் சம்ஸ்காரங்களும் வெவ்வேறானவை. இரண்டாவதாக, அவை மாயையின் வடிவத்தில் வருகின்றன. ஆகவே, ஒழுங்குமுறைக் கோட்பாடு என்ற கோட்டிற்குள் இருந்தவண்ணம் எந்தவொரு தீர்மானத்தையும் எடுங்கள். வெவ்வேறு சம்ஸ்காரங்களைக் கொண்டிருக்கும்போது, எந்தவிதமான முரண்பாடும் இருக்கக்கூடாது. இதற்கு, ஞானம் நிறைந்தவராகவும் தாமரையைப் போல் பற்றற்றவராகவும் ஆகுங்கள்.

சுலோகம்:
பிடிவாதம் பிடிப்பவராக இருந்து கடினமாக உழைப்பதை விட, களிப்புடன் முயற்சி செய்யுங்கள்.

அவ்யக்த சமிக்கை: ஆன்மீக இராஜரீகம் மற்றும் தூய்மையின் ஆளுமையைக் கடைப்பிடியுங்கள்.

தூய்மையே அமைதி மற்றும் சந்தோஷத்தின் தாய். எங்கே தூய்மை உள்ளதோ, அங்கே துன்பமோ அல்லது அமைதியின்மையோ இருக்க முடியாது. எனவே, நீங்கள் சதா சௌகரியமாக ஒரு சந்தோஷப் படுக்கையில் இருக்கிறீர்களா, அதாவது, நீங்கள் சதா அமைதியின் சொரூபமாக அதன் மீது ஓய்வு எடுக்கிறீர்களா எனச் சோதித்துப் பாருங்கள். ‘ஏன்? என்ன?’ அல்லது ‘எப்படி?’ என்ற அகக் குழப்பம் ஏதாவது உள்ளதா? அல்லது, நீங்கள் இந்தக் குழப்பத்திற்கு அப்பாற்பட்டு, சந்தோஷ சொரூபம் என்ற ஸ்திதியில் இருக்கிறீர்களா?