13.06.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, உலகம் முழுவதும் எரிந்து கொண்டிருக்கும் விகாரங்கள் என்ற நெருப்பை அணைத்து, அனைவரையும் குளிர்மை ஆக்குவதற்கே தந்தை வந்திருக்கிறார். இந்த ஞான மழை உங்களைக் குளிர்மை ஆக்குகின்றது.
கேள்வி:
முழு உலகையும் எரிக்கின்ற நெருப்பு எது?பதில்:
முழு உலகையும் காம விகாரம் என்ற நெருப்பே எரிக்கின்றது. காமம் என்ற நெருப்பில் எரிந்ததால், அனைவரும் அவலட்சணம் ஆகியுள்ளார்கள். தந்தை இந்த ஞான மழையினால் அவர்களைக் குளிர்மை ஆக்குகின்றார். மழை பெய்வதனால் பூமி குளிர்மை அடைவதைப் போன்றே இந்த ஞான மழையினால், நீங்கள் 21 பிறவிகளுக்குக் குளிர்மையானவர்கள் ஆகுகின்றீர்கள். அதன் பின்னர் எந்த நெருப்பும் எஞ்சியிருக்காது. பஞ்ச தத்துவங்களும் சதோபிரதான் ஆகுவதனால் வெப்பம் அனுபவம் செய்யப்படுவதில்லை.ஓம் சாந்தி.
ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் யாருடைய நினைவில் அமர்ந்திருக்கின்றீர்கள்? நீங்கள் நிச்சயமாக உங்கள் ஆன்மீகத் தந்தையின் நினைவில் அமர்ந்திருக்கின்றீர்கள். எங்கள் ஆன்மீகத் தந்தை வந்து, எங்களுக்குப் புத்துணர்ச்சி அளித்து, எங்களைக் குளிர்மையாக்க வேண்டும் என்பதற்காகவே ஆத்மாக்களான நாங்கள், எங்களுடைய பரமாத்மாவான பரமதந்தையின் நினைவில் அமர்ந்திருக்கின்றோம். ஏனெனில் நாங்கள் காமச்சிதையில் அமர்ந்ததால் பாரதம் எரிக்கப்பட்டு, ஏறத்தாழ அழிந்துவிடும் நிலையில் உள்ளது. மக்கள் பாடுகின்றார்கள்: வந்து நெருப்பை அணையுங்கள்! எதனால் உருவான நெருப்பு? காமச் சிதையினால் உருவாகிய நெருப்பாகும். நெருப்பு மிகவும் தீவிரமாக எரியும்பொழுது, அதில் மக்கள் மரணிக்கின்றார்கள். பாரதம் காமச்சிதை எனும் நெருப்பால் முற்றாக எரிந்துள்ளது. ஆகையாலேயே அவர்கள் தந்தையை நினைவுசெய்து, வந்து தம்மைக் குளிர்மை ஆக்குமாறு அவரை அழைக்கின்றார்கள். மழை பெய்யும்பொழுது குளிர்மையாக இருக்கின்றது; பூமியும் குளிர்மை அடைகின்றது. இது இந்த ஞான மழையாகும். ஒரேயொரு முறை மாத்திரமே அவர் வந்து உங்களை மிகவும் குளிர்மையானவர்கள் ஆக்குகின்றார். சத்திய யுகத்தில் எந்த வேண்டுதல்களும் இல்லாதளவிற்கு அவர் உங்களுக்கு அனைத்தையும் கொடுக்கின்றார். நீங்கள் இந்த விருப்பத்தை அரைக் கல்பமாகக் கொண்டிருந்தீர்கள்: ‘பாபா, வந்து எங்களைக் குளிர்மையானவர்கள் ஆக்குங்கள்! தூய்மையாக்குபவராகிய தந்தையே, வந்து எங்களைக் குளிர்மையானவர்கள் ஆக்குங்கள்! பாரதம், அதாவது முழு உலகமும் இந்த ஞான மழையினால் குளிர்மை அடைகின்றது. நீங்கள் சுவர்க்க அதிபதிகள் ஆகுகிறீர்கள். ஒருவர் மரணிக்கும் பொழுது, அவர் சுவர்க்கத்திற்குச் சென்று விட்டதாக அவர்கள் கூறுகின்றார்கள். அவர்கள் அவ்வாறு கூறுவதனால், தங்கள் வாயால் இனிமையான வார்த்தைகளை மாத்திரமே வெளிப்படுத்துகின்றார்கள். சுவர்க்கம் இப்பொழுது ஸ்தாபிக்கப்படுவதை நீங்கள் அறிவீர்கள். பாபா இப்பொழுது வந்திருக்கின்றார். அவர் உங்கள் மீது இந்த ஞான மழையைப் பொழிகின்றார். இந்தக் குளிர்மையின் தாக்கம் 21 பிறவிகளுக்கு நீடிக்கின்றது. அங்கே, மழைக்கான விருப்பமோ அல்லது வேறு எந்த விருப்பங்களோ இருக்க மாட்டாது; அங்கே சதா வசந்த காலமே நிலவுகின்றது. அங்கே எந்த வகையான துன்பங்களும் இருக்க மாட்டாது. சூரியனும் சதோபிரதான் ஆகுகின்றது. அங்கு, அது என்றுமே அதிக வெப்பமாக இருக்க மாட்டாது. நீங்கள் முழு உலகிற்கும் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். நீங்கள் இப்பொழுது அடிமைகள். மக்கள் பாடுகின்றார்கள்: நான் உங்கள் அடிமை! நான் உங்கள் அடிமை! அவர்கள் தந்தையை நினைவு செய்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: நான் இப்பொழுது ஒரு சேவகராக உங்களுக்குச் சேவை செய்யவே வந்திருக்கின்றேன். நான் குழந்தைகளாகிய உங்களுக்கே சேவை செய்கின்றேன். நான் ஓர் அந்நிய, தூய்மையற்ற உலகில், ஒரு தூய்மையற்ற சரீரத்திற்குள் வருகின்றேன். தூய்மையற்ற உலகில் தூய்மையான ஒருவரேனும் இருக்க முடியாது. சத்தியயுகம் தூய்மையானது என்றும், கலியுகத்தில் மனிதர்கள் விகாரம் நிறைந்திருப்பதால், கலியுகம் தூய்மையற்றது என்றும் அழைக்கப்படுகின்றது. பாரத மக்கள் மாத்திரமே இந்த ஞானத்தைப் புரிந்து கொள்வார்கள். 84 பிறவிகளை எடுத்துள்ளவர்கள் மாத்திரமே இந்த ஞானத்தைச் செவிமடுப்பார்கள். சத்திய, திரேதா யுகங்களினுள் செல்லவுள்ளவர்கள் மாத்திரமே வந்து, தாங்கள் செய்யும் முயற்சிகளுக்கேற்ப வரிசைக்கிரமமாகப் பிராமணர்கள் ஆகுவார்கள். நீங்கள் இப்பொழுது பிராமண குலத்தில் இருக்கின்றீர்கள் என்றும், பின்னர் தேவ குலத்தினுள் செல்வீர்கள் என்றும் தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். தந்தை பிராமண குலத்தை, அதாவது, பிராமண தர்மத்தை ஸ்தாபிக்கவே வருகின்றார். பிரம்மாவே பிராமண தர்மத்தை ஸ்தாபிக்கின்றார். பரமாத்மா பரமதந்தை வந்து (பிரம்மா இல்லாது) சூத்திரர்களைப் பிராமணர்களாக மாற்றுகின்றார் என்று நீங்கள் கூறமாட்டீர்கள். இதுவே உங்களது குத்துக்கரணம் ஆகும். இது மிகவும் இலகுவானது. இவ்வுலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்கள் பல்வகை ரூபத்திலிருந்து உச்சிக்குடுமிகளான பிராமணர்களையும் சிவபாபாவின் உருவத்தையும் அகற்றி உள்ளார்கள். அவர்கள் தேவர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்களையும், பின்னர் சூத்திரர்களில் இருந்து தேவர்கள் ஆகுவது பற்றியும் பேசுகின்றார்கள். எனவே, பிராமணர்கள் எங்கே சென்றனர்? பிராமணர்கள் பாடுகின்றார்கள்: தேவர்களாகவுள்ள பிராமணர்களுக்கு வந்தனங்கள். எனவே, அந்நேரத்தில் பிரஜாபிரதா பிரம்மாவின் படைப்பு எங்கே சென்றது? பிரஜாபிதா பிரம்மா என்ற பெயர் மிகவும் பிரபல்யமானது. அவர்கள் விக்கிரகங்களில் பல்வேறு தவறுகளைச் செய்துள்ளார்கள். பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகளின் பெயரோ அல்லது குறிப்போ இல்லை. ஓர் ஆசிரியர் ஒரு பாடசாலையில் கற்பிக்கின்றார். இருப்பினும், அது ஒரு வருமானத்திற்கான மூலாதாரம் ஆகும். ஓர் இலக்கும் குறிக்கோளும் நிச்சயமாகத் தேவைப்படுகின்றன. கற்பதனால் மாத்திரமே ஓர் அந்தஸ்தைப் பெற முடியும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். கடவுள் தூய்மையற்ற உலகிற்குள் பிரவேசித்து, தூய்மை அற்றவர்களுக்குக் கற்பிக்கின்றார். தந்தை கூறுகின்றார்: நான் குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பித்து, உங்களைத் தூய்மை ஆக்குகின்றேன். இக்கல்வியின் மூலம் கிடைக்கின்ற வருமானம் எவ்வளவு மகத்தானது எனப் பாருங்கள்! நீங்கள் அரைக் கல்பத்திற்கான பாக்கியத்தை உருவாக்குகிறீர்கள். பாரதத்தில் ‘21 சந்ததியினர்’ என்பது நினைவுகூரப்பட்டுள்ளது. நீங்கள் இப்பொழுது எல்லையற்ற தந்தையிடம் இருந்து உங்கள் 21 பிறவிகளுக்கான எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். லௌகீகத் தந்தை தற்காலிகமான சந்தோஷத்திற்கான ஆஸ்தியை மாத்திரமே கொடுக்கின்றார். சந்ததி சந்ததியாக எவ்விதமான துன்பத்தையும் அனுபவம் செய்யாத அளவிற்கு அத்தகையதோர் ஆஸ்தியை நீங்கள் இந்தத் தந்தையிடமிருந்து பெறுகின்றீர்கள். பாரதத்தில் எல்லையற்ற சந்தோஷம் இருந்தது. வேறு எவரினதும் புத்தியில் இந்த ஞானம் இல்லை. இந்த ஞானத்தைக் கொடுக்கின்ற தந்தைக்கும், அதனை அவர் எவருக்குக் கொடுக்கின்றாரோ, அவர்களுக்கும் மாத்திரமே இது தெரியும்; வேறு எவருக்கும் இது தெரியாது. அவரது புகழ் கிராந்திலும் (சீக்கிய சமயநூல்) பாடப்பட்டுள்ளது: ‘அசரீரியான ஒரேயொருவர்’. அவர் அசரீரியானவரும், ஆணவமற்றவரும் ஆவார். நீங்கள் இந்நேரத்தில் மாத்திரமே இதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்கின்றீர்கள். அவர் ஆணவமற்றவர் என்று அவர்கள் பாடுகின்றார்கள். அத்தகைய மகத்தான அதிகாரத்தைக் கொண்டிருந்தும், அவருக்கு எவ்விதமான ஆணவமும் இல்லை. இங்கே, மக்கள் சிறிய பதவியில் இருந்தாலும், அதனால் அதிகளவு போதை உடையவர்களாக இருக்கின்றார்கள். அது ‘நான் இன்ன இன்னார்!’ எனும் தற்காலிக அந்தஸ்தின் போதையாகும். நீங்கள் இப்பொழுது இந்த ஆன்மீகக் கல்வியால் போதை அடைந்து இருக்கின்றீர்கள். நீங்கள் ஆத்ம உணர்வு உடையவர்களாகி விட்டீர்கள் என்பதை ஆத்மாக்களான நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். அப்பொழுதே உங்களால் தந்தையை நினைவுசெய்ய முடியும். தந்தையுடனான உங்கள் யோகம் துண்டிக்கப்படும் பொழுது, நீங்கள் மாயையினால் சுடப்பட்டு, வாடி விடுகின்றீர்கள். நீங்கள் தொடர்ந்தும் நினைவில் நிலைத்திருந்தால், உங்கள் சந்தோஷப் பாதரசம் தொடர்ந்தும் உயர்வடையும். ஒருவர் முக்கிய பரீட்சை ஒன்றில் சித்தியெய்தும் பொழுது, பெரும் சந்தோஷத்தை அடைகின்றார். அதனை விட உயர்வான கல்வி இல்லை என அவர் உணர்கின்றார். இதனை விடவும் உயர்வான கல்வி எதுவும் இல்லை என்பது உங்களுக்கும் தெரியும். இலக்ஷ்மியும், நாராயணனும் நிச்சயமாக அத்தகையதொரு கல்வியைக் கடந்த காலத்தில் கற்றிருக்க வேண்டும். அவர்கள் இராஜயோகத்தைக் கற்றதாலேயே, சக்கரவர்த்தினியும், சக்கரவர்த்தியும் ஆகினார்கள். இராஜயோகம் மிகவும் பிரபல்யமானது. பரமாத்மாவான பரமதந்தை வந்து, உங்களுக்குச் சுவர்க்கத்திற்காக இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார். மக்கள் கூறுகின்றார்கள்: அவர்கள் (இலக்ஷ்மியும் நாராயணனும்) தங்கள் கடந்த காலத்தில் அத்தகைய செயல்களைச் செய்ததாலேயே, இவ்வாறாக ஆகினார்கள். இப்பிறவியில் நீங்கள் எதிர்கால 21 பிறவிகளுக்கு ஆட்சிசெய்யும் வகையில், அத்தகைய செயல்களைச் செய்வதற்குக் கற்கின்றீர்கள் என்பதையும், நீங்கள் சுவர்க்கத்தில் இருப்பீர்கள் என்பதையும் அறிவீர்கள். அரசரும் அரசியும் எவ்வாறோ, அவ்வாறே பிரஜைகளும் இருக்கின்றார்கள். அது ஓர் இராச்சியம். தந்தை ஓர் இராச்சியத்தை ஸ்தாபிப்பதற்கே வந்துள்ளார். பின்னர் நீங்கள் அங்கு சென்று, 21 பிறவிகளுக்கு அதனைப் பராமரிப்பீர்கள். நீங்கள் 63 பிறவிகளாகத் துன்பத்தை அனுபவம் செய்தீர்கள். அவை யாவும் முடிவடையும். பாரதம் சுவர்க்கம் என்று அழைக்கப்படுகின்றது; இப்பொழுது அது நரகமாகும். உலகம் அதிகளவு மாற்றம் அடைந்துள்ளது! அந்த இராச்சியம் எங்கே சென்றது? இராவண இராச்சியம் ஆரம்பமாகிய பொழுது, நீங்கள் தூய்மை அற்றவர்கள் ஆகினீர்கள். தந்தை கூறுகின்றார்: உங்களது 84 பிறவிச் சக்கரத்தைப் பற்றி நீங்கள் அறிய மாட்டீர்கள். அது இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு மீண்டும் மீண்டும் விளங்கப்படுத்தப்படுகின்றது. நீங்கள் 84 பிறவிச் சக்கரத்தைச் சுற்றி வந்திருக்கின்றீர்கள். இப்பொழுது இது உங்களின் இறுதிப் பிறவி. நீங்கள் இப்பொழுது உங்கள் ஆஸ்தியை மீண்டும் ஒருமுறை பெற வேண்டும். நீங்கள் சாதாரணமாக முக்தி தாமத்திற்குச் சென்று அமர்ந்து விடக்கூடாது; நீங்கள் சகலதுறைப் பாகங்களைக் கொண்டவர்கள். சத்திய யுக ஆரம்பத்தில் இருந்து துவாபர அல்லது கலியுகம் வரைக்கும் முக்தி தாமத்திலேயே தங்கிவிடுகின்ற பலர் உள்ளனர். இங்கே வருவதை விட முக்தி தாமமே சிறந்ததென அவர்கள் கூற மாட்டார்கள். இது ஒரு நுளம்புக் கூட்டத்தைப் போன்றது; அவர்கள் வந்தவுடன் திரும்புகின்றவர்கள். மனிதர்களின் புகழ் உள்ளது. அந்த ஆலயங்கள் யாருக்காகக் கட்டப்பட்டன? ஆரம்பத்தில் இருந்தே தங்கள் பாகங்களை நடித்தவர்களுக்கே ஞாபகார்த்தங்கள் கட்டப்படுகின்றன. இறுதி நேரத்தில் வருகின்ற எவருக்கேனும் ஞாபகார்த்தம் இருக்க முடியுமா? முற்றாகவே இருக்க முடியாது. உங்கள் ஞாபகார்த்தம் மிகவும் மகத்துவமானது! நீங்களே அதிகபட்ச பாகங்களை நடிக்கின்றீர்கள். நீங்கள் உங்களுடைய வெகுமதியின் காலத்தை முடித்து, பக்தி மார்க்கத்தில் செல்லும் பொழுது, அவர்கள் உங்களினதும், சிவபாபாவினதும் நினைவாக ஆலயங்களைக் கட்ட ஆரம்பிக்கின்றார்கள். பின்னரே ஏனைய சமயங்கள் வருகின்றன அதன் பின்னர் அவர்களின் சமயங்கள் ஸ்தாபிக்கப்படுகின்றன. உங்களது சொந்த மற்றும் ஏனைய சமயத்தவர்கள் அனைவரினதும் வரலாற்றையும் புவியியலையும் நீங்கள் அறிவீர்கள். இதுவே 84 பிறவிகளின் ஏணியாகும். நீங்கள் முதலில் எவ்வாறு சுவர்க்கத்திற்குச் சென்று, பின்னர் கீழே இறங்குகின்றீர்கள் என்பது உங்கள் புத்திகளில் உள்ளது. ஒவ்வொரு பிறவியிலும் நீங்கள் வெவ்வேறு பெயர்களையும், ரூபங்களையும் கொண்ட நண்பர்களையும் உறவினர்களையும் கொண்டிருக்கின்றீர்கள். இந்தப் பாகங்கள் அனைத்தும் முற்கூட்டியே நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளன. இது ஒரேமாதிரியாக மீண்டும் மீண்டும் சுழல்கின்ற, ஓர் எல்லையற்ற நாடகமாகும். நீங்கள் 84 பிறவிகளை எடுத்த தேவர்களாக இருந்தீர்கள் என்பதையும், அதன்பின்னர் சூத்திரர்கள் ஆகினீர்கள் என்பதையும் அறிவீர்கள். நாங்கள் இப்பொழுது மீண்டும் ஒருமுறை தேவர்கள் ஆகுகின்றோம். ஒவ்வோர் ஆத்மாவும் பரமாத்மாவே என மக்கள் கூறுகின்றார்கள். உண்மையில், இதுவே ‘ஹம்சோ’ (தேவர்கள் சக்கரத்தைச் சுற்றி வருதல்) என்பதன் அர்த்தமாகும். அதன்பின்னர் ஒவ்வோர் ஆத்மாவும் பரமாத்மாவே எனவும், ஒவ்வோர் ஆத்மாவிலும் பரமாத்மா உள்ளார் எனவும் அவர்கள் கூறுகின்றார்கள். இரவிற்கும் பகலிற்கும் இடையான வேறுபாடு உள்ளது. இவ்விடயங்கள் அனைத்தையும் நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது பாண்டவர்கள் ஆகியுள்ளீர்கள். கௌரவர்களும் பாண்டவர்களும் சகோதரர்கள் ஆவார்கள். இப்பொழுது நீங்கள் தந்தையை இனங்கண்டுள்ளீர்கள். ஆகையால் நீங்கள் கௌரவர்களில் இருந்து பாண்டவர்கள் ஆகியுள்ளீர்கள். தந்தை உங்களைத் துன்பத்திலிருந்து விடுவித்து, உங்களது வழிகாட்டியாகி, உங்களை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றார். எவருக்கும் வீட்டைத் தெரியாது. ஆத்மாக்கள் பிரம்ம தத்துவத்தில் இரண்டறக் கலந்து விடுகின்றனர் என்று அவர்கள் கூறுகின்றார்கள். அவ்வாறாயின் அது வீடாக இருக்க முடியாது. ஒருவர் ஒரு வீட்டிலேயே வாழ்கின்றார். அது அசரீரி உலகம் என்று அழைக்கப்படுகின்றது. அசரீரியான ஆத்மாக்களாகிய நாங்கள் எவ்வாறு அசரீரி உலகில் புள்ளிகளைப் போல் வாழ்கின்றோம் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். அங்கே அசரீரியான விருட்சமும் உள்ளது. இந்த நாடகம் முற்கூட்டியே நிச்சயிக்கப்பட்டது. விதையும், விருட்சமும் அறியப்பட வேண்டும். இது பல்வேறு சமயங்களின் விருட்சம் என்று அழைக்கப்படுகின்றது. இதுவே மனித உலகம்; தந்தையே அதன் விதை ஆவார். பல்வேறு வகைகள் உள்ளன! ஒவ்வொரு சமயத்தினரதும் முகச்சாயல்கள் வெவ்வேறானவை. இங்கும், இரு வேறு முகங்கள் ஒரேமாதிரியாக இருக்க முடியாது. இதுவும் நாடகத்தில் முற்கூட்டியே நிச்சயிக்கப்பட்டது. விருட்சத்தின் கால எல்லை 5000 வருடங்கள். தந்தை மாத்திரமே இதனை விளங்கப்படுத்துகின்றார். மனிதர்கள் தமது பாகங்களை இங்கே நடிக்க வருகின்ற நடிகர்கள் ஆவார்கள். இது ஒரு மேடை ஆகும். இதற்குச் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் போன்றன ஒளியூட்டிகள். அவை தேவர்கள் அல்ல் அவை ஒளியைக் கொடுப்பவை. எவ்வாறாயினும் அவை உங்களுக்குச் சேவை செய்கின்றன, ஆகையாலேயே அவை தேவர்கள் என அழைக்கப்படுகின்றன. உண்மையில், தேவர்கள் எந்தச் சேவையும் செய்வதில்லை. குழந்தைகளாகிய நீங்களே சேவை செய்கின்றீர்கள். தந்தையே ஒரு கீழ்ப்படிவான சேவகர் ஆவார். குழந்தைகள் துன்பத்தை அனுபவம் செய்யும்பொழுது, தந்தை கருணை கொள்கின்றார். உங்களுக்கு விளங்கப்படுத்துவதற்குத் தந்தை வர வேண்டும்: குழந்தைகளாகிய நீங்கள் மீண்டும் ஒருமுறை தேவ அந்தஸ்தைப் பெற உங்களுக்கு உதவுவதற்காகவே நான் வருகின்றேன். அனைத்துக்கும் மேலேறும், கீழிறங்கும் ஸ்திதிகள் உள்ளன. பழைய உலகம் தமோபிரதான் என்றும், புதிய உலகம் சதோபிரதான் என்றும் அழைக்கப்படுகின்றன. அனைத்தும் புதியதில் இருந்து பழையதாக ஆகுகின்றது. ஆத்மா கூறுகின்றார்: இச்சரீரமும் தூய்மையற்றும், தமோபிரதானாகவும் உள்ளது. சத்தியயுகத்தில் ஆத்மாக்கள், அவர்களின் சரீரங்கள் இரண்டுமே சதோபிரதானாக இருந்தன. அவை உங்களுக்குத் தொல்லை கொடுக்கவில்லை (உங்களுக்குத் தலைவலியாக இருக்கவில்லை). ஆத்மா இப்பொழுது இந்த ஞானத்தைப் பெற்றுள்ளார். ஆத்மாவே 84 பிறவிகளை எடுப்பதை நினைவுகூருகின்றார். எல்லையற்ற தந்தை இந்த இரகசியத்தை விளங்கப்படுத்துகின்றார். அவர்கள் துன்பத்தில் உள்ளபொழுதே, தந்தையை அழைக்கின்றார்கள்: ஓ துன்பத்தை அகற்றுபவரே, சந்தோஷத்தை அருள்பவரே, கருணை கொள்ளுங்கள்! பாரதமே அனைத்திலும் அதிகளவு சந்தோஷம் நிறைந்ததாக இருந்தது. பாரதத்தைப் போன்று தூய்மையானதொரு தேசம் இருக்க முடியாது. தந்தை இப்பொழுது குழந்தைகளாகிய உங்களது புத்திகளை இந்த அழியாத ஞான இரத்தினங்களால் நிரப்புகின்றார். அத்தகையதொரு தந்தையை நீங்கள் எப்பொழுதாவது கண்டிருக்கின்றீர்களா? அவர் கூறுகின்றார்: குழந்தைகளே, நான் குழந்தைகளாகிய உங்களுக்குப் பரிசாக வைகுந்தத்தையே கொண்டு வந்துள்ளேன். நீங்கள் சுவர்க்க வாசிகளாக இருந்தீர்கள், இப்பொழுது தூய்மையற்ற, நரகவாசிகள் ஆகியுள்ளீர்கள். விகாரத்தில் ஈடுபடாதவர்களே தூய்மையானவர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். சத்தியயுகத்தில் அவர்கள் முற்றிலும் விகாரம் அற்றவர்களாக இருக்கிறார்கள். இந்நேரத்தில், அவர்கள் முற்றிலும் விகாரம் உடையவர்கள். தந்தை கூறுகின்றார்: நீங்களும் முற்றிலும் விகாரம் அற்றவர்களாகவே இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் முற்றிலும் விகாரம் உடையவர்கள் ஆகியுள்ளீர்கள். தந்தையை நினைவு செய்வதனால், முற்றிலும் விகாரமற்ற தேவர்களின் அந்தஸ்தை நீங்கள் கோர வேண்டும். “மன்மனாபவ!” எனும் இவ் வார்த்தை எவ்வளவு நன்றாக உள்ளதெனப் பாருங்கள். உங்கள் தந்தையான, என்னை நினைவுசெய்தால், நீங்கள் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகுவீர்கள். நானே சர்வசக்திவான், என்னை நினைவு செய்யுங்கள்! நினைவே யோகத்தீ என்று அழைக்கப்படுகின்றது, இதிலேயே உங்கள் பாவங்கள் எரிக்கப்படுகின்றன. அதன்பின்னர் நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. இந்த ஆன்மீகக் கல்வியின் போதையைப் பேணுங்கள். தந்தையைப் போல் ஆணவம் அற்றவர்கள் ஆகுங்கள். உங்கள் பதவி போன்றவற்றை இட்டு ஆணவம் எதனையும் கொண்டிருக்காதீர்கள்.2. இந்த ஞான இரத்தினங்களால் உங்கள் புத்திகளை நிரப்புங்கள். முற்றிலும் விகாரமற்றவர் ஆகி, தேவ அந்தஸ்தை அடையுங்கள். என்றுமே வாடிப் போய் விடாதீர்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களை பௌதீகமாகவும் சூட்சுமமாகவும் இரண்டு வழிகளிலும் மும்முரமாக வைத்திருந்து, ஒரு வெற்றிநிறைந்த, மாயையை வென்றவர் ஆகுவீர்களாக.உங்களை ஒரு சேவையாளராகக் கருதி, ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் சேவை செய்வதில் உங்களை மும்முரமாக ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். அப்போது மாயை ஒரு வாய்ப்பை எடுத்துக் கொள்ள மாட்டாள். நீங்கள் உங்களின் மனதிற்கும், உங்களின் புத்திக்கும், உங்களின் பௌதீக செயல்களுக்கும் ஓய்வு கொடுக்கும் போதே மாயை அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறாள். எவ்வாறாயினும் பௌதீகமாகவும் சூட்சுமமாகவும் இரண்டு வழிகளிலும் சேவை செய்வதன் மூலம் உங்களைச் சந்தோஷமாக மும்முரமாக வைத்திருங்கள். ஏனென்றால், உங்களின் சந்தோஷத்தால் மாயை உங்களை எதிர்ப்பதற்கான தைரியத்தைக் கொண்டிருக்க மாட்டாள். எனவே, உங்களின் சொந்த ஆசிரியராகி, உங்களின் புத்தியை மும்முரமாக வைத்திருப்பதற்கு ஒரு நாளாந்த நிகழ்ச்சியை உருவாக்குங்கள். அப்போது நீங்கள் ஒரு வெற்றி நிறைந்த, மாயையை வென்றவர்கள் ஆகுவீர்கள்.
சுலோகம்:
நம்பிக்கையுடனும் போதையுடனும் கூறுங்கள்: பாபா என்னுடன் இருக்கிறார்! அப்போது மாயையால் உங்களை நெருங்கி வரமுடியாது.அவ்யக்த சமிக்கை: சதா முகமலர்ச்சியுடன் இருப்பதற்கு, இலகு சுபாவத்தைக் கொண்டவராகவும் சகித்துக் கொள்பவராகவும் ஆகுங்கள்.
பாப்தாதா குழந்தைகளான உங்கள் அனைவரின் செயல்பாடுகளிலும், முகங்களிலும், வார்த்தைகளிலும் மற்றும் செயல்களிலும் எளிமையையும் இலேசானதன்மையையும் இனிமையையுமே காண விரும்புகிறார். பலவந்தத்தாலோ அல்லது களைப்படைவதாலோ உங்கள் வார்த்தைகளில் சிறிதளவேனும் இனிமை இல்லாது உங்களின் முகம் இனிமையற்று, கடுமையாக இருந்தால், தெய்வீகக்குணங்கள் அனைத்தும் நிறைந்தவர் என உங்களைக் கூற முடியாது. சூழ்நிலைகள் எத்தகையதாக இருந்தாலும் உங்களின் தெய்வீகக் குணங்கள் எதுவோ அவையே வெளிப்பட வேண்டும். பாப்தாதாவைப் போன்றே, அதே தெய்வீகக்குணங்களும் பணியும் வார்த்தைகளும் எண்ணங்களும் உங்களினூடாக அனுபவம் செய்யப்பட வேண்டும். அனைவரின் உதடுகளில் இருந்தும் வெளிப்பட வேண்டும்: இவர் பாப்தாதாவைப் போன்றே இருக்கிறார்.