13.08.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்கள் பாக்கியத்தை விழித்தெழச் செய்வதற்கு, பாபா வந்து விட்டார். தூய்மை ஆகுவதனால் மாத்திரமே உங்கள் பாக்கியம் விழித்தெழ முடியும்.
கேள்வி:
பாக்கியத்தை விழித்தெழச் செய்துள்ள குழந்தைகளின் அடையாளங்கள் எவை?பதில்:
1) அவர்கள் சந்தோஷ தேவர்கள் ஆகுகின்றார்கள். அவர்கள் எல்லையற்ற தந்தையிடம் இருந்து தங்கள் சந்தோஷ ஆஸ்தியைக் கோரி, அனைவரையும் சந்தோஷமானவர்கள் ஆக்குகின்றார்கள். அவர்களால் எவருக்கும் என்றுமே துன்பம் விளைவிக்க முடியாது. அவர்கள் வியாசரின் குழந்தைகளான, உண்மையான சந்தோஷத்தை அருளும் சுக்தேவ் ஆவார்கள். 2) அவர்கள் ஐந்து விகாரங்களையும் துறந்துள்ளதால் இராஜரிஷிகளான, உண்மையான இராஜயோகிகள் என்று அழைக்கப்படுகின்றார்கள். 3) அவர்களின் ஸ்திதி நிலையாகவும், உறுதியாகவும் உள்ளது. அவர்களால் என்றுமே எதனையிட்டும் அழ முடியாது; அவர்கள் பற்றை வென்றவர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள்.பாடல்:
எனது பாக்கியத்தை விழித்ழெச் செய்து நான் வந்துள்ளேன்.ஓம் சாந்தி.
இப்பாடலின் வரிகளைச் செவிமடுக்கும்பொழுது, இனிமையிலும் இனிமையான குழந்தைகளான உங்களுக்கு மெய்சிலிர்க்க வேண்டும். இது பொதுவானதொரு பாடல், ஆனால் வேறு எவருக்கும் அதன் அர்த்தம் தெரியாது. தந்தை மட்டுமே வந்து அப்பாடல்கள் அனைத்தினதும், சமயநூல்களினதும் அர்த்தத்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். கலியுகத்தில் அனைவரது பாக்கியமும் உறங்கிக் கொண்டிருக்கின்றது என்பதை இனிமையிலும் இனிமையான குழந்தைகளான நீங்களும் அறிவீர்கள். சத்தியயுகத்தில் அவர்களின் பாக்கியம் விழித்தெழச் செய்யப்பட்டுள்ளது. உறக்கத்திலுள்ள பாக்கியத்தை ஒரேயொரு தந்தையே விழித்தெழச் செய்து, வழிகாட்டல்களைக் கொடுத்து, உங்கள் பாக்கியத்தை உருவாக்குகின்றார். அவர் இங்கே அமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களது பாக்கியத்தை விழித்தெழச் செய்கின்றார். ஒரு குழந்தை பிறந்தவுடனேயே, அவரது பாக்கியமும் விழித்தெழுகின்றது. ஒரு குழந்தை பிறந்தவுடன், தான் ஒரு வாரிசு என்பதை அவர் அறிகின்றார். உண்மையில், இது ஓர் எல்லையற்ற விடயம் ஆகும். ஒவ்வொரு கல்பத்திலும் விழித்தெழுந்திருக்கும் உங்கள் பாக்கியம் பின்னர் உறங்கச் செல்கின்றது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் தூய்மையாகும் பொழுது, உங்கள் பாக்கியமும் விழித்தெழுகின்றது. ‘தூய இல்லற ஆச்சிரமம்’ என்று கூறப்பட்டுள்ளது. ‘ஆச்சிரமம்’ என்ற வார்த்தை தூய்மையான ஒன்றையே குறிக்கின்றது. தூய இல்லற ஆச்சிரமம் உள்ளது, அதற்கு மாறாக தூய்மையற்ற சமயமும் உள்ளது; அது ஓர் ஆச்சிரமம் என்று அழைக்கப்பட மாட்டாது. அனைவருமே இல்லறப் பாதையைப் பின்பற்றுகின்றார்கள். மிருகங்களும் அவ்வாறே உள்ளன. அனைவரும் குழந்தைகளை உருவாக்குகின்றார்கள். மிருகங்களும் இல்லறப் பாதையைக் கொண்டிருக்கின்றன என்று கூறப்படுகின்றது. சத்தியயுகத்தில் நீங்கள் தூய இல்லற ஆச்சிரமத்திற்குரிய தேவர்களாக இருந்தீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். ‘…சகல தெய்வீகக் குணங்களும் நிறைந்தவர்கள்…’ என்று அவர்களின் புகழ் பாடப்பட்டுள்ளது. நீங்களும் அவ்வாறு பாடினீர்கள். நீங்கள் மீண்டும் ஒருமுறை மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுகின்றீர்கள் என்பதை இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். தேவ தர்மம் உள்ளது. பிரம்மாவும், விஷ்ணுவும், சங்கரரும் தேவர்கள் என்றே அழைக்கப்படுகின்றனர். ‘பிரம்ம தேவருக்கு வந்தனங்கள், விஷ்ணு தேவருக்கு வந்தனங்கள்’. எவ்வாறாயினும் சிவனையிட்டு அவர்கள் ‘பரமாத்மா சிவனுக்கு வந்தனங்கள்!’ என்றே கூறுகின்றார்கள். அதில் ஒரு வேறுபாடு உள்ளது! சிவனையும், சங்கரனையும் ஒருவர் என்று அழைக்க முடியாது. நீங்கள் கல்லுப் புத்தியைக் கொண்டிருந்தீர்கள், இப்பொழுது நீங்கள் தெய்வீகப்புத்தி உடையவர்கள் ஆகுகின்றீர்கள். தேவர்கள் கல்லுப்புத்தி உடையவர்கள் என்று அழைக்கப்படுவதில்லை. நாடகத் திட்டப்படி அது மீண்டும் இராவண இராச்சியம் ஆகும்பொழுது, அவர்கள் ஏணியில் கீழிறங்க வேண்டும். அவர்கள் தெய்வீகப்புத்தி உடையவரில் இருந்து கல்லுப்புத்தி உடையவர்களாக மாற வேண்டும். ஒரேயொரு தந்தை மாத்திரமே உங்களை அதிபுத்திசாலி ஆக்குகின்றார். அவர் உங்கள் புத்தியைத் தெய்வீகமாக ஆக்குகின்றார். நீங்கள் தெய்வீகப் புத்தி உடையவர்கள் ஆகுவதற்கே இங்கே வருகின்றீர்கள். தெய்வீகப் பிரபுவிற்கு ஆலயங்களும் உள்ளன. அங்கே ஒன்றுகூடல்கள் இருக்கின்ற பொழுதிலும், தெய்வீகப் பிரபு யார் என்பதை எவரும் அறியார். உண்மையில், தந்தை மாத்திரமே உங்களைத் தெய்வீகமானவர்கள் ஆக்குகின்றார். அவர் விவேகிகளின் புத்தி ஆவார். இது குழந்தைகளாகிய உங்கள் புத்திகளுக்கான போஷாக்காகும். புத்தி அதிகளவு மாறுகின்றது. ‘தீயதைப் பார்க்காதே….’ என்று கூறப்பட்டுள்ளது. இது குரங்குகளைப் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. மனிதர்களே குரங்குகளைப் போலாகி உள்ளார்கள். வாலில்லாக் குரங்குகள் மனிதர்களுடன் ஒப்பிடப்படுகின்றன. இது ஒரு முட்காடு என்று அழைக்கப்படுகின்றது; அவர்கள் தொடர்ந்தும் ஒருவருக்கொருவர் துன்பத்தை விளைவிக்கின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது உங்கள் புத்திகளுக்கான போஷாக்கைப் பெறுகின்றீர்கள். எல்லையற்ற தந்தை உங்களுக்குப் போஷாக்கை அளிக்கின்றார். இது ஒரு கல்வியாகும். இது ஞானாமிர்தம் என்றும் அழைக்கப்படுகின்றது. இது தண்ணீர் போன்றவற்றிற்கான கேள்வி இல்லை. இக்காலத்தில், அவர்கள் பல பொருட்களை அமிர்தம் என்று அழைக்கின்றார்கள். கங்கை நீரையும் அவர்கள் அமிர்தம் என்றே கூறுகின்றார்கள். அவர்கள் தேவ விக்கிரகங்களின் கால்களை கழுவி, அந்த நீரையும் பருகுகின்றார்கள். அவர்கள் அந்த நீரை வைத்திருக்கின்றார்கள். அந்த நீரை அவர்கள் விசேடமான அமிர்தத் துளி எனக் கருதுகின்றனர். அந்த நீர்த் துளியைப் பருகுபவர்களிடம் அந்த நீர் தூய்மை அற்றவர்களைத் தூய்மையாக்கும் என அவர்கள் கூறுவதில்லை. அவர்கள் கங்கை நீரைத் தூய்மையாக்குபவர் என்று அழைக்கின்றார்கள். ஒருவர் மரணிக்கும் தறுவாயில் கங்கை நீர் அவரது உதடுகளில் இருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றார்கள். அர்ஜுனன் அம்பு எய்த பொழுது, அந்த அம்பு விழுந்த இடத்திலே கங்கை வெளிப்பட்டது என்று அவர்கள் காட்டுகின்றார்கள். பின்னர் ஒருவர் பருகுவதற்கு அவர் அமிர்தத்தைக் கொடுத்தார். குழந்தைகளாகிய நீங்கள் எந்த அம்பையும் எய்யவில்லை. அம்புகளும், வில்லுகளும் கொண்டு யுத்தம் புரியும் ஒரு கிராமம் உள்ளது. அவ்விடத்தின் தலைவரைக் கடவுளின் அவதாரம் என்று அவர்கள் கூறுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: அவர்கள் அனைவரும் பக்திமார்க்கத்தின் குருமார்கள். ஒரேயொரு உண்மையான சற்குருவே உள்ளார். சற்கதியை அருள்பவர் ஒரேயொருவர் மாத்திரமே, அவரே அனைவரையும் தன்னுடன் மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றார். தந்தையை அன்றி, வேறு எவராலும் உங்களை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடியாது. இது பிரம்ம தத்துவத்துடன் இரண்டறக் கலத்தல் என்ற கேள்வியும் கிடையாது. இந்த நாடகம் முற்கூட்டியே நிச்சயிக்கப்பட்டதும், தொடர்ந்தும் அநாதியான சக்கரத்தில் செல்வதும் ஆகும். இந்த உலக வரலாறும் புவியியலும் எவ்வாறு மீண்டும் மீண்டும் சுழல்கின்றன என்பதையும் நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். மனிதர்கள், அதாவது, ஆத்மாக்களுக்கு ‘ஓ தந்தையான கடவுளே!’ எனத் தாங்கள் அழைக்கின்ற, படைப்பவரான தங்கள் தந்தையைத் தெரியாது. ஓர் எல்லைக்கு உட்பட்ட தந்தை என்றுமே தந்தையான கடவுள் என்று அழைக்கப்பட மாட்டார். ‘தந்தையான கடவுளே’ என்ற வார்த்தைகளை அவர்கள் பெருமளவு மரியாதையுடன் கூறுகின்றார்கள். அவரே துன்பத்தை அகற்றி, சந்தோஷத்தை அருளும் தூய்மையாக்குபவர் என்று அவர்கள் கூறுகின்றார்கள். ஒருபுறம் அவர் துன்பத்தை அகற்றி, சந்தோஷத்தை அருள்பவர் என்று அவர்கள் கூறுகின்றார்கள். மறுபுறம் அவர்களுக்கு ஏதாவது துன்பம் ஏற்பட்டாலோ அல்லது அவர்களின் குழந்தை மரணித்து விட்டாலோ கடவுளே சந்தோஷத்தையும், துன்பத்தையும் கொடுப்பவர் என்று கூறுகின்றார்கள். கடவுள் என்ன செய்தார்? அவர் எங்கள் குழந்தையை எடுத்துக் கொண்டார்! பின்னர் அவர்கள் கடவுளை இழிவுபடுத்துகின்றார்கள். கடவுள் தங்களுக்கு ஒரு குழந்தையைக் கொடுத்ததாக அவர்கள் கூறுகின்றனர். எனவே, அக்குழந்தையை அவர் எடுத்துக் கொண்டால், நீங்கள் ஏன் அழுகின்றீர்கள்? அவர் கடவுளிடம் சென்று விட்டார்! சத்தியயுகத்தில் எவரும் அழுவதில்லை. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: அழ வேண்டிய அவசியம் இல்லை. அந்த ஆத்மா தனது கர்மக் கணக்குகளுக்கேற்ப தனது பாகத்தை நடிக்கச் செல்ல வேண்டியுள்ளது. இந்த ஞானம் எதுவும் இல்லாததால், மனிதர்கள் அதிகளவு அழுகின்றார்கள்! சிலருக்குப் பித்து பிடித்தும் விடுகின்றது. இங்கே, தந்தை விளங்கப்படுத்துகின்றார்: உங்கள் தாய் மரணித்தாலும், அல்வா உண்ணுங்கள்! உங்கள் தந்தை மரணித்தாலும், அல்வா உண்ணுங்கள்! பற்றை வென்றவர் ஆகுங்கள். என்னுடையவர் ஒரேயொரு எல்லையற்ற தந்தையே அன்றி, வேறெவரும் இல்லை. குழந்தைகளாகிய உங்களுக்கு அத்தகையதொரு ஸ்திதி இருக்க வேண்டும். பற்றை வென்ற அரசரைப் பற்றிய கதையை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். சத்தியயுகத்தில் துன்பம் அல்லது அகால மரணம் என்ற கேள்வியே இருக்க மாட்டாது. நீங்கள் மரணத்தை வெல்கின்றீர்கள் என்பதைக் குழந்தைகளான நீங்கள் அறிவீர்கள். தந்தையே மகாகாலன் எனவும் அழைக்கப்படுகின்றார். அவரே மரணங்களுக்கு எல்லாம் மரணம் ஆவார். நீங்கள் மரணத்தை வெல்ல வேண்டும். அதாவது, அங்கே என்றுமே எவரிடமும் மரணம் வர மாட்டாது. மரணம் ஆத்மாக்களிற்கோ சரீரங்களுக்கோ ஏற்பட முடியாது. ஓர் ஆத்மா தனது சரீரத்தை நீக்கி, இன்னொன்றை எடுக்கின்றார். அதுவே ‘மரணம் கொண்டு சென்றது’ என்று குறிப்பிடப்படுகின்றது. எவ்வாறாயினும், மரணம் என்ற அத்தகைய விடயமில்லை. மக்கள் தொடர்ந்தும் புகழ் பாடுகின்றார்கள். ஆனால், அவர்கள் எதனையும் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் புகழ் பாடுகின்றார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இந்த ஐந்து விகாரங்களும் உங்கள் புத்தியை முற்றாகப் பாழாக்கி விட்டன. இந்த நேரத்தில் எவருக்கும் தந்தையைத் தெரியாது. இதனாலேயே இது அநாதைகளின் உலகம் எனப்படுகின்றது; அவர்கள் தொடர்ந்தும் தமக்குள் சண்டை சச்சரவில் ஈடுபடுகின்றார்கள். இந்த முழு உலகமும் பாபாவின் வீடாகும். இவ்வுலகில் உள்ள குழந்தைகள் அனைவரையும் தந்தை தூய்மை அற்றவரிலிருந்து தூய்மையானவர் ஆக்குகிறார். அரைக்கல்பத்திற்கு உண்மையிலேயே தூய உலகம் இருந்தது. ‘இராமரே அரசர் எனவும், மக்கள் இராமருக்கு உரியவர்களும்’ என்று பாடப்பட்டுள்ளது. அங்கே எவ்வாறு அதர்மம் நிலவ முடியும்? அங்கே சிங்கமும், ஆடும் ஒன்றாக நீர் அருந்துகின்றன என்று அவர்கள் கூறுகின்றார்கள். எனவே இராவணன் போன்றோர் எவ்வாறு அங்கு இருக்க முடியும்? அவர்கள் எதனையும் புரிந்து கொள்வதில்லை. அத்தகைய கதைகளைக் கேட்கும்பொழுது, வெளிநாட்டவர்கள் சிரிக்கின்றார்கள். தந்தை இங்கு வந்து உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். இவ்வுலகம் தூய்மையற்றது. அவர் தூண்டுதல்களின் மூலம் தூய்மை அற்றவர்களைத் தூய்மை ஆக்குவாரா? ‘ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்!’ என அவர்கள் அழைக்கின்றார்கள். ஆகையால் அவர் நிச்சயமாகப் பாரதத்திற்கு வந்துள்ளார். இப்பொழுதும் அவர் கூறுகின்றார்: ஞானக்கடலான நான், உங்களை எனக்குச் சமமாக மாஸ்டர் ஞானக்கடல்கள் ஆக்குவதற்கே வந்துள்ளேன். தந்தை மாத்திரமே உண்மையான வியாசர் என அழைக்கப்படுகின்றார். எனவே, அவர் வியாச தேவரும், நீங்கள் அவரது குழந்தைகளான, சுக்தேவர்களும் ஆவீர்கள். நீங்கள் இப்பொழுது சந்தோஷ தேவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் சிவாச்சாரியான, வியாசரிடம் இருந்து உங்கள் சந்தோஷ ஆஸ்தியைக் கோருகின்றீர்கள். நீங்களே வியாசரின் குழந்தைகள். எவ்வாறாயினும், அம்மக்கள் குழப்பம் அடையாதிருப்பதற்காக நீங்கள் சிவனின் குழந்தைகள் என அழைக்கப்படுகின்றீர்கள். அவரின் உண்மையான பெயர் சிவனாகும். ஓர் ஆத்மாவை அறிந்துகொள்ள முடியும்; பரமாத்மாவும் அறிந்து கொள்ளப்படக் கூடியவர். அவர் மாத்திரமே வந்து, தூய்மை அற்றவரில் இருந்து தூய்மையானவர்கள் ஆகுவதற்கான வழியை உங்களுக்குக் காட்டுகின்றார். அவர் கூறுகின்றார்: நான் ஆத்மாக்களாகிய உங்களின் தந்தையாவேன். அவர் பெருவிரல் உருவம் உடையவர் எனக் கூறப்பட்டுள்ளது. அத்தகைய பெரியதொரு வடிவத்தினால் அங்கே (நெற்றியின் நடுவில்) இருக்க முடியாது. ஆத்மா முற்றிலும் சூட்சுமமானவர். ஓர் ஆத்மாவைக் காண்பதற்கு வைத்தியர்களும் பெரும் பிரயத்தனம் செய்கின்றார்கள், ஆனால் அவர்களால் பார்க்க முடிவதில்லை. ஓர் ஆத்மாவைப் புரிந்துணர மட்டுமே முடியும். தந்தை வினவுகின்றார்: இப்பொழுது நீங்கள் ஓர் ஆத்மாவை உணர்ந்திருக்கின்றீர்களா? அத்தகைய சின்னஞ்சிறிய ஆத்மாக்கள் பதிவுநாடா ஒன்றில் பதிவுசெய்வதைப் போன்று தமக்குள் அழியாத பாகங்களைப் பதிவு செய்துள்ளார்கள். ஆரம்பத்தில் நீங்கள் சரீர உணர்வில் இருந்தீர்கள், இப்பொழுது நீங்கள் ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகியுள்ளீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் எவ்வாறு 84 பிறவிகளை எடுக்கின்றீர்கள் என்பதை அறிவீர்கள். அதற்கு முடிவே இல்லை. எப்பொழுது இந்த நாடகம் ஆரம்பமாகியது என்று சிலர் வினவுகின்றார்கள். எவ்வாறாயினும், அது அநாதியானது. அது என்றுமே அழிவதில்லை. அது முற்கூட்டியே நிச்சயிக்கப்பட்ட, அழியாத உலக நாடகம் என்று அழைக்கப்படுகின்றது. உங்களுக்கு இப்பொழுது உலகைத் தெரியும். கல்வியறிவற்ற குழந்தைகளுக்குக் கல்வி புகட்டப்படுவதைப் போன்று, தந்தையும் குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார். ஆத்மாக்களே சரீரங்களினூடாகக் கற்கின்றார்கள். இது கல்லுப் புத்திக்கான உணவாகும். உங்களின் புத்தியே புரிந்துணர்வைப் பெறுகின்றது. பாபா குழந்தைகளாகிய உங்களுக்காகப் படங்களைச் செய்துள்ளார். அவை மிகவும் இலகுவானவை. திரிமூர்த்தியும் உள்ளனர்: பிரம்மா, விஷ்ணு, சங்கரர். ஏன் பிரம்மா திரிமூர்த்தி என்று குறிப்பிடப்படுகின்றார்? அவர்கள் “தேவ தேவ மகாதேவா” எனக் கூறுகின்றார்கள். அவர்கள் ஒருவர் மேலே ஒருவரை வைக்கின்றார்கள், ஆனால் அவற்றின் அர்த்தத்தை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அது எவ்வாறு பிரம்மாவாக இருக்க முடியும்? ஏனெனில் பிரம்மா மக்களின் தந்தை (பிரஜாபிதா) என்றும் அழைக்கப்படுகின்றார். அவர் எவ்வாறு சூட்சும உலகிலுள்ள தேவராக இருக்க முடியும்? மக்களின் தந்தையான பிரம்மா, இங்கேயே இருக்க வேண்டும். இவ்விடயங்கள் சமயநூல்களில் குறிப்பிடப்படவில்லை. தந்தை கூறுகின்றார்: நான் இச்சரீரத்தில் பிரவேசித்து, இவரினூடாக உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றேன். நான் இவரை எனது இரதமாக ஆக்குகின்றேன். நான் இவரின் பல பிறவிகளின் இறுதியில் வருகின்றேன். இவரும் ஐந்து விகாரங்களையும் துறக்கின்றார். துறவறம் மேற்கொள்வோர் யோகிகள், ரிஷிகள் என்று அழைக்கப்படுகின்றார்கள். நீங்கள் இப்பொழுது இராஜரிஷிகள். நீங்கள் ஒரு சத்தியம் செய்கின்றீர்கள். அந்தச் சந்நியாசிகள் தமது வீடுகளையும், குடும்பங்களையும் துறந்து சென்று விடுகின்றார்கள். இங்கே, கணவனும் மனைவியும் ஒன்றாக வாழ்கின்றார்கள். நீங்கள் என்றுமே விகாரத்தில் ஈடுபட மாட்டீர்கள் எனக் கூறுகின்றீர்கள். பிரதானமான விடயம் விகாரமாகும். சிவபாபாவே படைப்பவர் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் புதிய படைப்பைப் படைக்கின்றார். அவரே விதையானவரும், சத்தியமும், உயிருள்ளவரும், பேரானந்தக்கடலும், ஞானக்கடலும் ஆவார். தந்தைக்கு மாத்திரமே தான் எவ்வாறு இந்த ஸ்தாபனையையும், பராமரிப்பையும், விநாசத்தையும் மேற்கொள்கின்றார் என்பது தெரியும். மனிதர்கள் இவ்விடயங்களைப் புரிந்து கொள்வதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் இவ்விடயங்கள் அனைத்தையும் இப்பொழுது அறிந்து கொள்வதால், உங்களால் அனைவருக்கும் விளங்கப்படுத்த முடிகின்றது. அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. ஒவ்வோர் ஆத்மாவும் தனது சொந்தக் கர்மக் கணக்கைக் கொண்டிருக்கின்றார். ஆகவே, ஓர் ஆத்மா தனது சரீரத்தை நீக்கும்பொழுது, நீங்கள் அழக்கூடாது. முற்றிலும் பற்றை வென்றவர் ஆகுங்கள். நீங்கள் ஒரேயொரு எல்லையற்ற தந்தைக்கு மாத்திரம் உரியவர் அன்றி, வேறு எவருக்குமல்ல என்பது உங்கள் புத்தியில் இருக்க வேண்டும்.2. உங்கள் புத்தியைப் பாழாக்குகின்ற ஐந்து விகாரங்களையும் துறந்திடுங்கள். ஒரு சந்தோஷ தேவராகி, அனைவரையும் சந்தோஷப்படுத்துங்கள். என்றுமே எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஒழுக்கக் கோட்பாடுகளின் கோட்டுக்குள் இருப்பதற்கு சதா கவனம் எடுப்பதன் மூலம் அதியுயர்ந்த ஒழுக்கக் கோட்பாடுகளைப் பின்பற்றும் அதியுயர்ந்தவர் ஆகுவீர்களாக.தங்களை இராமரின் உண்மையான சீதைகளாகக் கருதுவதன் மூலம் சதா ஒழுக்கக் கோட்பாடுகளின் கோட்டுக்குள் இருக்கும் குழந்தைகள், அதாவது, இந்தக் கவனத்தைச் செய்பவர்கள், இயல்பாகவே கவனமாகவும் மலர்ச்சியாகவும் இருப்பார்கள். காலையில் இருந்து இரவுவரை, உங்களுக்குப் பின்பற்றுவதற்காகக் கொடுக்கப்பட்ட இந்த ஒழுக்கக் கோட்பாடுகளின் தெளிவான ஞானத்தை உங்களின் புத்தியில் வைத்திருங்கள். உங்களை உண்மையான சீதையாகக் கருதி, ஒழுக்கக் கோட்பாடுகளின் கோட்டிற்குள் இருங்கள். அப்போது நீங்கள் ஒழுக்கக் கோட்பாடுகளைப் பின்பற்றும் அதியுயர்ந்தவர் என்று அழைக்கப்படுவீர்கள்.
சுலோகம்:
சேவையின் தீவிர நிலைகளுக்குள் செல்லாதீர்கள். சேவைக்கும் உங்களின் முயற்சிக்கும் இடையில் ஒரு சமநிலையைப் பேணுங்கள்.அவ்யக்த சமிக்ஞை: தூய்மையற்றதன் விதையை முடித்து, முற்றிலும் சுத்தமானவராக (தூய்மையானவராக) ஆகுங்கள்.
சம்பூரணமான தூய்மை என்றால், உங்களின் எண்ணங்களிலேனும் எந்த விகாரமும் இல்லாமல் இருத்தல் என்று அர்த்தம். இந்த ஞானம், இந்த நற்குணங்கள், சகல சக்திகளை அடைவதில், எப்போதும் சம்பூரணமாகவும் முழுமையாகவும் இருப்பதுடன் சகல பேறுகளையும் கொண்டிருக்கும் ஒளிக்கிரீடம் சதா தெளிவாகப் புலப்பட வேண்டும். சதா உங்களை ஒளியாகவும் உங்களின் ஆத்ம உணர்வு ரூபத்திலும் அனுபவம் செய்யுங்கள். அனைத்தையும் செய்யும்போது உங்களை ஒளியாக அனுபவம் செய்யுங்கள்.
மாதேஷ்வரிஜியின் பெறுமதிமிக்க வாசகங்கள்
அநாதியான ஒளித் தத்துவம் மௌன விடுதியும், பௌதீக உலகம் விளையாட்டு மைதானமும் ஆகும்.
ஆத்மாக்களின் வசிப்பிடம் அநாதியான மகா ஒளித் தத்துவம் ஆகும், அவர்கள் அங்கே தங்கள் சரீரங்கள் மூலம் பாகம் எதனையும் நடிப்பதிலிருந்து விடுபட்டுள்ளார்கள். அதாவது, ஆத்மாக்கள் மௌன விடுதி எனவும் அழைக்கப்படுகின்ற, சந்தோஷத்திற்கும் துன்பத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு நிலையில் இருக்கின்றார்கள். தங்கள் சரீரங்கள் மூலம் ஆத்மாக்கள் தங்கள் பாகங்களை நடிக்கின்ற இடமே விளையாட்டு மைதானம், அதாவது, இந்த பௌதீக உலகம் ஆகும். எனவே, இரு பிரதான உலகங்கள் உள்ளன: ஒன்று அசரீரி உலகமும், மற்றையது பௌதீக உலகமும் ஆகும். உலக மக்கள் கூற வேண்டும் என்பதற்காகவே கூறுகின்றார்கள்: கடவுளே படைப்பவரும் பராமரிப்பவரும் அழிப்பவரும் எங்களைப் பராமரிப்பவரும் எங்களைக் கொல்பவரும் எங்களை எரிப்பவரும் ஆவார். எனவே அவரே எங்களுக்குச் சந்தோஷத்தையும், துன்பத்தையும் கொடுப்பவர் என அவர்கள் கூறுகின்றனர். ஒருவர் துன்பத்தைப் பெறும்பொழுது, அவர் “ஓ கடவுளே, உங்கள் உணவு இனிமையானது” (கடவுளால் வழங்கப்படும் அனைத்தும் இனிமையானது) என்று கூறுகின்றார். ஆனால் அது மிகச்சரியான ஞானமல்ல, ஏனெனில் அது கடவுளின் கடமையல்ல. கடவுள் துன்பத்தை அகற்றுபவரே அன்றி துன்பத்தை அருள்பவர் அல்ல. பிறப்பெடுப்பது, மரணிப்பது, சந்தோஷத்தையும், துன்பத்தையும் அனுபவம் செய்வது அனைத்தும் மனிதர்களின் சம்ஸ்காரங்களில் உள்ளன. எங்கள் பெற்றோரே எங்களுக்குப் பௌதீகப் பிறப்பைக் கொடுப்பவர்கள். மக்கள் தங்களின் கர்ம பந்தனத்திற்கேற்ப தந்தை, மகன் எனும் உறவுமுறைக்குள் மக்கள் வருகின்றார்கள். அதேபோன்று, பரமாத்மா ஆத்மாக்களின் தந்தை ஆவார். அவர் எவ்வாறு தனது எல்லையற்ற படைப்பைப் படைத்து, பராமரிக்கின்றார்? அவரே பிரம்மா, விஷ்ணு, சங்கரர் எனும் தனது மூன்று ரூபங்களையும் படைப்பவர், இந்தத் தேவதை ரூபங்களின் மூலம் அவர் தெய்வீக உலகின் படைப்பையும், அசுர உலகின் விநாசத்தையும், பின்னர் தெய்வீக உலகின் பராமரிப்பையும் இடம்பெறுமாறு செய்கின்றார். கடவுளின் இம் மூன்று செயல்களும் எல்லையற்றவை. ஆனால் ஒவ்வொருவரின் கர்மாவிற்கேற்பவே இன்பமும் துன்பமும், பிறப்பும் இறப்பும் நடைபெறுகின்றன. கடவுளே சந்தோஷத்தை அருள்பவர், அவர் தனது குழந்தைகளுக்கு எந்தத் துன்பத்தையும் விளைவிப்பதில்லை. அச்சா.