14.02.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்களே அதிமேன்மையான, அதிபாக்கிசாலிகளான பிராமண குல அலங்காரங்கள். கடவுளே உங்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்.
கேள்வி:
உலகச் செய்திகளை தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு ஏன் சத்தியயுகத்தில் அன்றி சங்கமயுகத்தில் கூறுகின்றார்?பதில்:
சத்தியயுகமே ஆரம்பக் காலப்பகுதியாகும். அந்த நேரத்தில் அவர் எவ்வாறு முழு உலக செய்தியையும் அதாவது, உலக ஆரம்பம், மத்தி, இறுதியின் இந்த ஞானத்தை உங்களுக்குக் கூற முடியும்? சக்கரம் மீண்டும் மீண்டும் சுழலாது விட்டால் அவரால் சக்கரத்தின் செய்தியை எவ்வாறு கொடுக்க முடியும்? சங்கமயுகத்தில் மாத்திரமே குழந்தைகளாகிய உங்களுக்கு முழுச் செய்தியும் தந்தையால் கொடுக்கப்படுகின்றது. அத்துடன் நீங்களே இந்த ஞானம் என்ற மூன்றாவது கண்ணைப் பெறுபவர்கள்.ஓம் சாந்தி.
இன்று திரிமூர்த்தி சிவனின் பிறந்தநாளான மங்களகரமான நாள், ஆகையால் சகல பிராமணர்களின் பிறந்தநாளும், சங்கமயுகத்தின் பிறந்தநாளும் ஆகும். பலருக்கு பாபாவினால் இந்த இறை பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க முடியாதுள்ளது. பலர் சிவபாபாவையோ அல்லது நீங்கள் அவரிடமிருந்து என்ன பெறுகிறீர்கள் என்பதையோ அறியாமல் இருக்கின்றார்கள். இந்த வாழ்த்துக்களையிட்டு அவர்களால் எதனைப் புரிந்து கொள்ள முடியும்? புதிய குழந்தைகளால் எதனையுமே புரிந்து கொள்ள முடியாது. இது ஞான நடனமாகும். ஸ்ரீகிருஷ்ணர் நடனம் ஆடுவதுண்டு எனக் கூறப்படுகின்றது. இங்கே, குழந்தைகள் இராதையையும் கிருஷ்ணரையும் போன்று ஆடையணிந்து நடனம் ஆடுகிறார்கள். எவ்வாறாயினும் நடனம் என்ற கேள்வி இல்லை. சத்தியயுகத்தில், அவர் குழந்தைப் பருவத்தில் இளவரசர்களுடனும் இளவரசிகளுடனும் நடனம் ஆடுகிறார். இவர் பாப்தாதா என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். தாதா பாட்டனார் என்று அழைக்கப்படுகின்றார். இந்த தாதா பௌதீகத் தந்தை ஆவார். இது அற்புதமான விடயமாகும். அந்தத் தாதா ஆன்மீகமானவர், இவர், (பிரம்மாபாபா) பௌதீகமானவர். அவர்கள் பாப்தாதா என்று அழைக்கப்படுகிறார்கள். நீங்கள் தந்தையினூடாகப் பாட்டனாரின் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். ஆஸ்தி பாட்டனாரிடம் இருந்தே பெறப்படுகின்றது. ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்கள். நீங்கள் ஆஸ்தியை தந்தையிடம் இருந்து (சிவபாபா) பெறுகிறீர்கள். தந்தை கூறுகின்றார்: ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் சொந்த சரீரங்களையும் பௌதீகப் புலன்களையும் கொண்டிருக்கிறீர்கள். நான் அசரீரியானவர் என்று அழைக்கப்படுகிறேன். ஆகையால், எனக்கு நிச்சயமாக ஒரு சரீரம் தேவை, அப்பொழுதே என்னால் குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்து, மனிதர்களில் இருந்து தேவர்களாக மாறுவதற்கும் தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மை ஆகுவதற்குமான வழியை உங்களுக்குக் காட்ட முடியும். நான் அழுக்கான ஆடைகளைக் கழுவுகிறேன். அவர் நிச்சயமாக மகத்தான சலவைக்காரர். அவர் முழு உலகத்தின் சகல ஆத்மாக்களையும் சரீரங்களையும் கழுவுகிறார். ஆத்மாக்களாகிய நீங்கள் இந்த ஞானத்தினாலும் யோகத்தினாலும் கழுவப்படுகிறீர்கள். இன்று இங்கு வந்திருக்கின்ற குழந்தைகளாகிய நீங்கள், சிவபாபாவிற்கு வாழ்த்துக்களை தெரிவிக்கவே வந்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்திருக்கிறீர்கள். தந்தை கூறுகிறார்: நீங்கள் எந்தத் தந்தைக்கு வாழ்த்துக்களைக் கூற வந்திருக்கிறீர்களோ, அவரே உங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார், ஏனெனில் நீங்களே அதி மேன்மையான, அதி பாக்கியசாலிகளான, பிராமண அலங்காரங்கள் ஆவீர்கள். தேவர்கள் உங்கள் அளவிற்கு மேன்மையானவர்கள் அல்ல. பிராமணர்கள் தேவர்களைவிட உயர்வானவர்கள். அனைவரிலும் அதிமேலானவர் தந்தை ஆவார். அவர் பின்னர் பிரம்மாவின் சரீரத்தில் பிரவேசிக்கின்றார். அவரின் குழந்தைகளாகிய நீங்கள், அதிமேலான பிராமணர்கள் ஆவீர்கள். பிராமணர்கள் உச்சிக்குடுமிகள் ஆவார்கள். தேவர்கள் அவர்களுக்கு கீழேயே இருக்கிறார்கள். சிவபாபாவே அதி உச்சத்தில் இருக்கிறார். பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு, உங்களுடைய ஆஸ்தியான சுவர்க்கத்தை கொடுக்கவே உங்களை பிராமணர்களாக ஆக்கியுள்ளார். இலக்ஷ்மிக்கும் நாராயணனுக்கும் எத்தனை ஆலயங்களை கட்டி உள்ளார்கள் எனப் பாருங்கள்! அவர்கள் அவர்களை வணங்குகிறார்கள். தேவர்களும் மனிதர்களே என்பதை பாரதமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இலக்ஷ்மியும் நாராயணனும் ஒருவரில் இருந்து ஒருவர் வேறானவர்கள். இங்கே, ஒரே நபருக்கு இருவரது பெயரும் கொடுக்கப்படுகின்றது. ஒரு நபர் தன்னை இலக்ஷ்மிநாராயணன் என்று அழைத்துக் கொள்கிறார். அதாவது அவர் தன்னை நான்கு கரங்களின் ரூபமுடைய விஷ்ணுவென அழைக்கிறார். அவர்கள் தமக்கு இலக்ஷ்மிநாராயணன் அல்லது ராதாகிருஷ்ணர் என்ற பெயர்களை வைத்துக் கொள்கிறார்கள். அதாவது, அவர்கள் நான்கு கரங்கொண்ட ரூபம் உடையவர்கள் ஆகியுள்ளார்கள் என்பதே அதன் அர்த்தமாகும். சூட்சும உலகைச் சேர்ந்த அந்த விஷ்ணு இலக்கும் குறிக்கோளும் ஆவார். நீங்கள் அந்த விஷ்ணு உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் விஷ்ணு உலகின் அதிபதிகள் ஆவார்கள். விஷ்ணுவிற்கு நான்கு கரங்கள் உள்ளது: இரண்டு இலக்ஷ்மிக்கு உரியவை, இரண்டு நாராயணனுக்கு உரியவை. நீங்கள் விஷ்ணு உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள் எனக் கூறுகிறீர்கள். அச்சா. தந்தையின் புகழைக் கொண்ட பாடலைப் பாடுங்கள்! (கள்ளங்கபடமற்ற சிவன் எவ்வளவு இனிமையானவரும், அழகானவரும் ஆவார்) ஆரம்பம் முதல், இப்பொழுது வரை, முழு உலகிலும் ஒரேயொருவரை அன்றி, வேறு எவருக்கும் புகழ் இல்லை. அனைத்தும் வரிசைக்கிரமமாகவே உள்ளது. மகத்துவமானதும் உயர்வானதுமான புகழ் அதிமேலான பரமாத்மாவான பரமதந்தையுடையதே ஆகும். நீங்கள் அவருடைய குழந்தைகள். நீங்கள் கூறுகிறீர்கள்: நாங்கள் கடவுளின் குழந்தைகள். கடவுள் சுவர்க்கத்தைப் படைப்பவர், அவ்வாறாயின், நீங்கள் ஏன் இன்னமும் நரகத்தில் இருக்கிறீர்கள்? கடவுள் இங்கேயே பிறப்பு எடுக்கின்றார். கிறிஸ்தவர்கள் தாம் கிறிஸ்துவிற்கு உரியவர்கள் எனக் கூறுகிறார்கள். பாரதமக்கள் தாம் பரமாத்மாவான பரமதந்தை சிவனின் நேரடிக் குழந்தைகள் என்பதை மறந்து விட்டார்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களை தனக்கு உரியவர்கள் ஆக்கி, உங்கள் பாக்கிய இராச்சியத்தைக் கொடுக்கவே இங்கே வருகின்றார். இன்று, பாபா அனைத்தையும் மிகத்தெளிவாக விளங்கப்படுத்துகின்றார். ஏனெனில், பல புதிய குழந்தைகள் வந்திருக்கின்றார்கள். அவர்களுக்குப் புரிந்து கொள்வது கடினமாக இருந்தாலும், அவர்கள் எவ்வாறாயினும் சுவர்க்க வாசிகள் ஆகுவார்கள். சத்தியயுகத்தில், சூரிய வம்ச அரசர்களும், அரசிகளும், பணிப் பெண்களும் பணியாட்களும் அத்துடன் பிரஜைகளும் இருக்கிறார்கள். சிலர் ஏழைகளாகவும் பிறர் செல்வந்தர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்கும் பணிப்பெண்களும் வேலையாட்களும் இருக்கிறார்கள். முழு இராச்சியமும் இங்கேயே ஸ்தாபிக்கப்படுகின்றது. வேறு எவருக்கும் இது தெரியாது. ஆத்மாக்கள் அனைவரும் தமோபிரான் ஆவார்கள். எவருக்குமே இந்த ஞானம் என்ற மூன்றாவது கண் இல்லை. (ஒரு பாடல் இசைக்கப்பட்டது) நீங்கள் பாடலில் தந்தையின் புகழைக் கேட்டீர்கள். அவர் அனைவரதும் தந்தை ஆவார். கடவுள் தந்தை என்று அழைக்கப்படுகிறார், முடிவற்ற சந்தோஷத்தை கொடுக்கும் தந்தை. முடிவற்ற சந்தோஷம் நிலவிய பாரதம் இதுவே ஆகும். இது இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமாக இருந்தது. இலக்ஷ்மியும் நாராயணனும் தமது குழந்தைப் பருவத்தில் ராதையும் கிருஷ்ணருமாக இருந்தார்கள். அதன் பின்னர் அவர்களின் திருமணத்தின் போது இலக்ஷ்மி, நாராயணன் என்று பெயரிடப்பட்டார்கள். ஐயாயிரம் வருடங்களின் முன்னர், பாரதம் தேவர்களின் இராச்சியமாக இருந்தது. வேறு எவரது இராச்சியமும் இருக்கவில்லை. இலக்ஷ்மி நாராயணனுடையது மாத்திரமே இருந்தது. வேறு எந்தக் கண்டங்களும் இருக்கவில்லை. ஆகையால், தமது முன்னய பிறவியில் இலக்ஷ்மியும் நாராயணனும் எவ்வாறான செயல்களைச் செய்திருப்பார்கள் என்பதைப் பாரத மக்கள் நிச்சயமாக அறிந்திருக்க வேண்டும். பிர்லா எத்தகைய செயல்களைச் செய்ததால், அவர் மிகச் செல்வந்தர் ஆகினார் என மக்கள் வினவுகிறார்கள். அவர் நிச்சயமாக தனது முன்னைய பிறவியில் மிக அதிகளவு தான தர்மங்களைச் செய்திருப்பார் எனக் கூறப்படுகின்றது. சிலர் அதிகளவு செல்வத்தை வைத்திருக்கிறார்கள், ஆனால் பிறருக்கோ தேவையானளவு உணவுகூட இருப்பதில்லை. ஏனெனில், அவர்கள் அத்தகைய செயல்களைச் செய்திருக்கிறார்கள். அனைவருமே கர்மாவில் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். கீதையின் கடவுள், கர்மாவினதும் நடுநிலைக் கர்மாவினதும் பாவகரமான கர்மாவினதும் தத்துவத்தை விளங்கப்படுத்தி உள்ளார். நீங்கள் அவரின் புகழைச் செவிமடுத்திருக்கிறீர்கள். சிவ பகவான் ஒரே ஒருவரே ஆவார். மனிதர்களைக் கடவுள் என்று அழைக்க முடியாது. தந்தை எங்கே இப்பொழுது வந்திருக்கின்றார்? மகாபாரதம் சற்று முன்னாலேயே உள்ளது என அவர் விளங்கப்படுத்தி உள்ளார். பாபா, அனைவரிலும் அதி இனிமையானவர், அனைவரும் துன்பத்தின் போதே அவரை நினைக்கிறார்கள் என்று விளங்கப்படுத்துகிறார். அனைவரும் தமது துன்பவேளையிலேயே கடவுளை நினைவு செய்கிறார்கள்..... அனைவரும் சிவபாபாவைத் துன்பத்தின் போதே நினைவு செய்கிறார்கள். சந்தோஷமாக இருக்கும் போது எவரும் அவரை நினைவு செய்வதில்லை. சுவர்க்கத்தில் துன்பம் இருக்கவில்லை. அங்கே, தந்தையிடம் பெற்றுக் கொண்ட ஆஸ்தி அவர்களிடம் இருந்தது. 5000 வருடங்களுக்கு முன்னர் சிவபாபா வந்த போது, அவர் பாரதத்தைச் சுவர்க்கமாக ஆக்கினார். இப்பொழுது அது நரகமாகும். தந்தை சுவர்க்கத்தை உருவாக்கவே வந்திருக்கின்றார். உலகில் உள்ள எவரும் இதனை அறியாதிருக்கிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் அனைவரும் குருடர்கள்! ஓ கடவுளே, குருடர்களின் ஊன்றுகோலே, வாருங்கள்! வந்து எங்களுக்குப் பார்வை தாருங்கள்! குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் மூன்றாவது கண்ணான இந்த ஞானத்தைப் பெற்றிருக்கிறீர்கள். ஆத்மாக்களாகிய நாங்கள் அமைதிதாமத்தில் வாழ்கிறோம். தந்தையும் அங்கேயே இருக்கிறார். ஆத்மாக்களாகிய நீங்களும் நானும் அங்கேயே வசிக்கிறோம். அவர் ஆத்மாவான இவரினூடாக கூறுகிறார்: ஆத்மாக்களாகிய உங்கள் அனைவரதும் தந்தையான நான், அங்கே வசிக்கிறேன். உங்கள் மறுபிறவிகளின் பாகங்களை நீங்கள் நடிக்கிறீர்கள், ஆனால் நான் நடிப்பதில்லை. நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகிறீர்கள். நான் அவ்வாறு ஆகுவதில்லை. நீங்கள் 84 பிறவிகள் எடுக்க வேண்டும். உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது: ஓ குழந்தைகளே, உங்களுக்கு உங்கள் சொந்தப் பிறவிகளை பற்றித் தெரியாது. மக்கள் 8.4 பிறவிகளை பற்றிப் பேசும் போது, அது பொய்யாகும். நானே தூய்மையாக்குகின்ற ஞானக்கடல் ஆவேன். அனைவரும் தூய்மை அற்றிருக்கின்ற போதே நான் வருகிறேன். அப்பொழுதே நான் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களை உங்களுக்குக் கூறி, உங்களைத் திரிகாலதரிசிகளாக ஆக்குகிறேன். பல மக்கள் வினவுகிறார்கள்: மனிதர்கள் எவ்வாறு முதன்முதலில் உருவாக்கப்பட்டார்கள்? கடவுள் உலகை எவ்வாறு படைத்தார்? சமயநூல்கள் ஒன்றில் பிரளயம் ஏற்படுகின்றது என்றும் பின்னர் அரசமரத்தின் இலையில் குழந்தை ஸ்ரீகிருஷ்ணர் கடலில் மிதந்தார் என்றும் காட்டி உள்ளார்கள். தந்தை கூறுகிறார்: அவ்வாறு எதுவும் இல்லை. இது எல்லையற்ற நாடகம் ஆகும். சத்திய, திரேதா யுகங்கள் பகலும், துவாபர, கலியுகங்கள் இரவும் ஆகும். குழந்தைகளாகிய நீங்கள் தந்தைக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கிறீர்கள். தந்தை கூறுகிறார்: உங்களுக்கும் வாழ்த்துக்கள். நீங்கள் 100 சதவீதம் அபாக்கியசாலிகளில் இருந்து 100 சதவீதம் பாக்கியசாலிகள் ஆகுகிறீர்கள், நீங்கள் பாரத மக்களாகிய அதே மக்களே, ஆனால் இதனை நீங்கள் அறிய மாட்டீர்கள். தந்தை இதனை உங்களுக்குக் கூறவே வந்திருக்கின்றார். உங்களுக்கு உங்கள் சொந்த பிறவிகளைப் பற்றித் தெரியாது. நீங்கள் 84 பிறவிகளை எடுத்திருக்கிறீர்கள் என நான் வந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகிறேன். தந்தை சங்கமயுகத்தில் வந்து முழு உலகினதும் செய்தியை உங்களுக்குக் கூறுகிறார். அவர் அதனைச் சத்தியயுகத்தில் கூறுவதில்லை. ஆரம்பத்தில் இருந்து மத்தியினூடாக இறுதிவரை சுற்றி வராத உலகைப் பற்றிய செய்தியை எவ்வாறு அவரால் உங்களுக்குக் கூற முடியும்? நான் ஒவ்வொரு கல்பத்தினதும் இறுதியிலே, சங்கமயுகத்தில் வருகிறேன். சமயநூல்களில், அவர்கள் நான் ஒவ்வொரு யுகத்திலும் வருவதாக எழுதி உள்ளார்கள். கீதையில் கூறுப்பட்டுள்ளது: கிருஷ்ண பகவான் பேசுகிறார். ஏனைய சமயத்தவர்கள் ஸ்ரீகிருஷ்ணரை கடவுளாகக் கருதுவதில்லை. கடவுள் அசரீரியானவர், அவர் ஆத்மாக்கள் அனைவருக்கும் தந்தை ஆவார். நீங்கள் தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் சகோதரர்கள். கடவுள் சர்வவியாபி என்று அழைக்கப்படும் போது, அது தந்தைத்துவம் ஆகுகிறது. தந்தை ஓர் ஆஸ்தியை பெறுகிறாரா? குழந்தைகளே ஆஸ்தியைப் பெறுகிறார்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் குழந்தைகள். உங்களுக்கு நிச்சயமாகத் தந்தையின் ஆஸ்தி தேவையாகும். நீங்கள் எல்லைக்கு உட்பட்ட ஆஸ்தியினால் சந்தோஷம் அடைவதில்லை. ஆகையாலேயே நீங்கள் அழைக்கிறீர்கள்: உங்கள் கருணையினால் நாங்கள் அதிகளவு சந்தோஷத்தைப் பெற்றோம்! இப்பொழுது நீங்கள் இராவணனிடம் இருந்து துன்பத்தைப் பெற்றதால், நீங்கள் மீண்டும் அழைக்க ஆரம்பித்தீர்கள். ஒவ்வோர் ஆத்மாவும் அழைக்கிறார், ஏனெனில் அவர்கள் அனைவருமே சந்தோஷத்தை இழந்திருக்கிறார்கள். ஆகையாலேயே அவர்கள் அவரை நினைவு செய்து கூறுகிறார்கள்: பாபா, வந்து எங்களுக்கு சந்தோஷத்தைத் தாருங்கள்! இந்த ஞானத்தினூடாக நீங்கள் இப்பொழுது சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுகிறீர்கள். நீங்கள் சற்கதியைப் பெறுவதாலேயே நினைவு கூரப்பட்டுள்ளது: அனைவருக்கும் சற்கதியை அருள்பவர் ஒரேயொரு தந்தையே ஆவார். அனைவரும் இப்பொழுது சீரழிகின்ற நிலையிலேயே இருக்கிறார்கள். அதன் பின்னர் அனைவருமே சற்கதியைப் பெறுவார்கள். இலக்ஷ்மி நாராயணனது இராச்சியமாக இருந்த போது, நீங்கள் சுவர்க்கத்தில் இருந்தீர்கள். ஏனைய அனைவரும் முக்திதாமத்தில் இருந்தார்கள். நாங்கள் இப்பொழுது தந்தையுடன் இராஜயோகம் கற்கிறோம். தந்தை கூறுகிறார்: நான் உங்களுக்கு கல்பங்களின் சங்கமத்தின் போதே கற்பிக்கிறேன். நான் உங்களை மனிதர்களில் இருந்து தேவர்களாக மாற்றுகிறேன். நான் அனைத்து இரகசியங்களையும் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறேன். எப்பொழுது சிவராத்திரி என்பதும் சிவபாபா வந்த போது என்ன நடந்தது என்பதையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். மக்களுக்கு எதுவும் தெரியாது. ஆகையால், அவர்கள் கல்புத்தி உடையவர்களாக இருக்கிறார்கள். நீங்கள் இப்பொழுது தெய்வீகப் புத்தி உடைவர்கள் ஆகுகிறீர்கள். பாரதம் சத்தியயுகமாக இருந்த போது, அங்கிருந்த அனைவருமே தெய்வீகப் புத்தியைக் கொண்டிருந்தார்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் இறைவியும் இறைவனும் என்று அழைக்கப்பட்டார்கள். கடவுள் அவர்களுக்கு ஆஸ்தியைக் கொடுத்தார், அதனை அவர் இப்பொழுது கொடுக்கின்றார். அவர் மீண்டும் ஒருமுறை உங்களை இறைவர்களாகவும் இறைவிகளாகவும் ஆக்குகிறார். இது இப்பொழுது உங்களுடைய பல பிறவிகளில் இறுதிப்பிறவி ஆகும். தந்தை கூறுகின்றார், விநாசம் சற்று முன்னிலையில் உள்ளது. இதுவே இந்த உருத்திர ஞான யாகம் என்று அழைக்கப்படுகின்றது. அந்த யாகங்கள் அனைத்தும் சடப்பொருளாகும் (சடப்பொருட்களுக்கான பௌதீக யாகங்கள் ஆகும்) இது ஞான விடயம் ஆகும். இந்த யாகத்தில் தந்தை வந்து மனிதர்களைத் தேவர்களாக மாற்றுகிறார். அவர் வரும் போது நீங்கள் அவருக்கு வாழ்த்துக்களைக் கூறுகிறீர்கள். அதன் பின்னர் பாபா கூறுகிறார்: நான் தனியாக வருவதில்லை, எனக்கும் ஒரு சரீரம் தேவையாகும். நான் பிரம்மாவின் சரீரத்தில் பிரவேசிக்க வேண்டும். சூட்சும உலகம் முதலில் உருவாக்கப்பட வேண்டும். அதற்காகவே நான் அவருக்குள் பிரவேசித்தேன். அவர் தூய்மையற்றவர். அவர் 84 பிறவிகளை எடுத்ததால், தூய்மையற்றவர் ஆகினார். அனைவரும் அழைக்கிறார்கள். தந்தை கூறுகிறார்: நான் குழந்தைகளாகிய உங்களுக்கு மீண்டும் ஒருமுறை உங்கள் ஆஸ்தியைக் கொடுப்பதற்காக இப்பொழுது வந்திருக்கிறேன். தந்தை மாத்திரமே பாரதத்திற்கு சுவர்க்க ஆஸ்தியைக் கொடுக்கின்றார். தந்தையே சுவர்க்கத்தைப் படைப்பவர். ஆகையால், அவர் நிச்சயமாக சுவர்க்கம் என்ற பரிசை வழங்குகிறார். நீங்கள் இப்பொழுது சுவர்க்க அதிபதிகள் ஆகுகிறீர்கள். இது மனிதர்கள் எதிர்கால 21 பிறவிகளுக்கு தேவர்களாக மாறுவதற்கான அவர்களுடைய பாடசாலை ஆகும். நீங்கள் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுகிறீர்கள். நீங்கள் 21 சந்ததிகளுக்கான சந்தோஷத்தைப் பெறுகிறீர்கள். அங்கே அகால மரணம் நிகழ்வதில்லை. உங்கள் சரீரத்தின் ஆயுள் முடிவிற்கு வரும் போது, நீங்கள் உங்கள் சரீரத்தை நீக்கி, இன்னொன்றை எடுப்பதன் காட்சியைக் காண்பீர்கள். பாம்பின் உதாரணம் உள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் தந்தைக்கு வாழ்த்துக்களைக் கொடுக்கிறீர்கள், தந்தையும் பதிலுக்கு உங்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றார். அபாக்கியசாலிகளில் இருந்து நீங்கள் இப்பொழுது மிகவும் பாக்கியசாலிகள் ஆகுகிறீர்கள். நீங்கள் தூய்மையற்ற மனிதர்களில் இருந்து தூய தேவர்கள் மாறுகிறீர்கள். சக்கரம் தொடர்ந்தும் சுழல்கிறது. குழந்தைகளாகிய நீங்கள் இந்த ஞானத்தை விளங்கப்படுத்த வேண்டும். அதன் பின்னர் அது மறைந்து விடும். சத்தியயுகத்தில் இந்த ஞானத்திற்கான தேவை இருக்க மாட்டாது. நீங்கள் இப்பொழுது சீரழிந்த ஸ்திதியில் இருக்கிறீர்கள், ஆகையாலேயே நீங்கள் சற்கதியை இந்த ஞானத்தினூடாகப் பெறுகிறீர்கள். தந்தை மாத்திரமே வந்து சுவர்க்கத்தை ஸ்தாபிக்கிறார். இவரே அனைவருக்குமான ஒரேயொரு சற்குரு ஆவார். பக்திமார்க்கத்தின் பௌதீகக் கிரியைகளினூடாக எவராலும் சற்கதியைப் பெற முடியாது. அனைவரும் ஏணியில் கீழே இறங்க வேண்டும். பாரதம் முதலில் சதோபிரதானாக இருந்தது. அதன் பின்னர் நீங்கள் 84 பிறவிகளை எடுக்க வேண்டும், இப்பொழுது நீங்கள் ஏற வேண்டும். நீங்கள் முக்திதாமமான உங்கள் வீட்டிற்கு திரும்பிச் செல்ல வேண்டும். நாடகம் இப்பொழுது முடிவடைய உள்ளது. இந்தப் பழைய உலகம் அழிவடைய உள்ளது. பாரதம் அழிவற்ற தேசம் என்று அழைக்கப்படுகின்றது. தந்தையின் பிறப்பிடம் என்றுமே அழிவடைவதில்லை. நீங்கள் அமைதி தாமத்திற்குச் சென்று அதன் பின்னர் இங்கே மீண்டும் வந்து ஆட்சி செய்வீர்கள். பாரதத்தில் மாத்திரமே தூய்மையானவர்களும் தூய்மை அற்றவர்களும் உள்ளார்கள். நீங்கள் 84 பிறவிகளை எடுக்கின்ற போது, நீங்கள் தூய்மை அற்றவர்கள் ஆகினீர்கள். நீங்கள் யோகிகளில் இருந்து, போகிகள் (இந்திரிய சுகங்களில் ஈடுபடுபவர்கள்) ஆகினீர்கள். இது ஆழ்நரகம் ஆகும். இது பெருந்துன்பத்திற்கான நேரமாகும். இன்னமும் அதிகளவு துன்பம் வரவுள்ளது. காரணம் இல்லாது இரத்தம் சிந்த நேரிடும். மக்கள் வெறுமனே அமர்ந்திருக்கின்ற போது அவர்கள் மீது குண்டுகள் வீசப்படும். அவர்கள் செய்த குற்றம் என்ன? அனைவரும் காரணம் இல்லாது அழிக்கப்படுவார்கள். சில குழந்தைகள் விநாசத்திற்கான காட்சிகளைக் கண்டார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது உலகச் சக்கரத்தைப் பற்றிய இந்த ஞானத்தைக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் ஒவ்வொருவரிடமும் இந்த ஞானம் என்ற வாள் உள்ளது. நீங்கள் பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்களான பிராமணர்கள். பிரஜாபிதாவும் பாபா ஆவார். அவரே முன்னைய கல்பத்திலும் வாய்வழித் தோன்றல்களைப் படைத்தார். தந்தை கூறுகிறார்: நான் ஒவ்வொரு கல்பத்திலும் வருகிறேன். நான் இவருக்குள் பிரவேசித்து வாய்வழித் தோன்றல்களாகிய உங்களைப் படைக்கிறேன். நான் பிரம்மாவினூடாக சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றேன். எதிர்காலத்திலேயே நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்வீர்கள். இந்தத் தீய உலகம் முதலில் அழிக்கப்பட வேண்டும். எல்லையற்ற தந்தை இந்த உலகை புதியதாக ஆக்கவே வருகின்றார். தந்தை கூறுகிறார்: நான் சுவர்க்கத்தை எனது உள்ளங்கையில் குழந்தைகளாகிய உங்களுக்காகக் கொண்டு வந்திருக்கின்றேன். நான் உங்களுக்கு எந்தச் சிரமமும் கொடுப்பதில்லை, நீங்கள் அனைவருமே திரௌபதிகள் ஆவீர்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் தேவர்களையும் விட அதி மேன்மையான பிராமணர்கள் என்ற ஆன்மீக போதையைப் பேணுங்கள். இந்த ஞானத்தினாலும் யோகத்தினாலும் ஆத்மாவை சுத்தப்படுத்துங்கள்.2. சிவனின் அவதாரத்திற்கான வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவியுங்கள். அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுத்து, தூய்மை அற்றவர்களைத் தூய்மையானவர்கள் ஆக்குங்கள். அனைவரையும் எதிரியான இராவணனிடம் இருந்து விடுவியுங்கள்.
ஆசீர்வாதம்:
வர்ணமயமான சகல விரிவாக்கங்களில் இருந்தும் விலகி, ஓர் இலகுயோகியாகக் கடினமான விடயங்களை இலகுவானதாக ஆக்குவீர்களாக.நீங்கள் சகல புறச்சூழல்களையும் பார்க்க ஆரம்பிக்கும் போது, தந்தையைப் பார்ப்பதற்குப் பதிலாக, பல கேள்விகள் எழுகின்றன. அதன் பின்னர் நீங்கள் இலகுவான ஒரு விடயத்தையும் கடினமான ஒன்றாக அனுபவம் செய்வீர்கள். ஏனெனில், சூழ்நிலைகள் மரமாகும், தந்தை விதை ஆவார். மரமான விரிவாக்கத்தை தமது கைகளால் பிடித்துக் கொண்டிருப்பவர்கள், தந்தையை புறந்தள்ளுகிறார்கள். அதன் பின்னர் விரிவாக்கம் ஒரு பொறி ஆகுகிறது, அதில் அவர்கள் சிக்கிக் கொள்கிறார்கள். சூழ்நிலைகளின் விரிவாக்கத்தில் உங்களைக் கவர்வதற்கு பல வர்ணமயமான விடயங்கள் உள்ளன. ஆகையால் விதையான தந்தையின் நினைவைக் கொண்டிருந்து, ஒரு முற்றுப் புள்ளியை இட்டு, அனைத்தில் இருந்தும் விலகி இருந்தால் நீங்கள் ஓர் இலகுயோகி ஆகுவீர்கள்.
சுலோகம்:
நான் மற்றும் எனது என்ற மாசை முடிப்பது என்றால், நிஜத்தங்கம் ஆகுவதாகும்.அவ்யக்த சமிக்ஞை: ஒற்றுமை மற்றும் நம்பிக்கை என்ற சிறப்பியல்புடன், வெற்றி நிறைந்தவர் ஆகுங்கள்.
இப்பொழுது, அனைவரும் ஒன்றிணை வேண்டும். ஒற்றுமையாக இருந்து சேவை என்ற பணியை மிகவும் கோலாகலமாக முன்னேடுத்துச் செல்லுங்கள். ஒவ்வொரு பிராமணரின் ஒத்துழைப்புடனும், நல்லாசிகள், தூய உணர்வுகளுடனும் சேவையைக் கோலாகலமானதாக ஆக்குங்கள். ஒருவரால் வார்த்தைகளினால் பேச முடியாது போனால், அவர் தனது மனதின், மனோபாவத்தினால் சந்தோஷமான ஒரு சூழலை உருவாக்க முடியும். தனது சந்தோஷ ஸ்திதியினால் அவரால் சந்தோஷமானதோர் உலகை உருவாக்க முடியும். உங்களால் எங்கும் செல்ல முடியாமல் இருந்தால், உங்கள் ஆரோக்கியம் நன்றாக இல்லாத போதும் நீங்கள் வீட்டில் இருந்தவாறு சேவை செய்யலாம். நிச்சயமாகச் சேவையில் ஒத்துழையுங்கள். அப்பொழுதே அனைவரின் ஒத்துழைப்புடனும் உங்களால் சந்தோஷ உலகை உருவாக்க முடியும்.