14.05.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள் என்பதால், பழைய உலகத்துடன் உங்கள் தொடர்பைத் துண்டித்துக் கொள்ளுங்கள், ஏனெனில் அது இப்பொழுது அழியப் போகின்றது.
கேள்வி:
முழுச் சக்கரத்திலும், சங்கமயுகத்தின் எந்தச் சிறப்பியல்பு தனித்துவமானது?பதில்:
சங்கமயுகத்தின் சிறப்பியல்பு: நீங்கள் இங்கே கற்று, அதன் வெகுமதியை எதிர்காலத்தில் பெறுகிறீர்கள். கல்பம் முழுவதிலும், அடுத்த பிறவியில் வெகுமதியைப் பெற்றுத் தருகின்ற வகையானதொரு கல்வி இருக்க மாட்டாது. குழந்தைகளாகிய நீங்கள் அமரத்துவ உலகிற்காக இப்பொழுது இந்த மரண உலகில் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். வேறு எவரும் தங்களின் அடுத்த பிறவிக்காகக் கற்பதில்லை.பாடல்:
தொலைதூரவாசி அந்நியதேசத்திற்கு வந்துள்ளார்..…ஓம் சாந்தி.
தொலைதூரவாசி யார்? இதை எவரும் அறியமாட்டார்கள். அவர் அந்நிய தேசத்துக்கு வருவாராயின், அவருக்கெனச் சொந்தத் தேசம் இல்லையா? அவர் தன்னுடைய சொந்தத் தேசத்திற்கு வருவதில்லை. ஆனால் இந்த இராவண இராச்சியம் அந்நிய தேசமாகும். சிவபாபா தனது சொந்தத் தேசத்திற்கு வருவதில்லையா? நல்லது, இராவணனுக்கு அந்நிய தேசம் எது? அவனுடைய சொந்தத் தேசம் எது? சிவபாபாவின் சொந்தத் தேசம் எது? அவருக்கு அந்நிய தேசம் எது? தந்தை இந்த அந்நிய தேசத்துக்கு வருவதால், அவருடைய சொந்தத் தேசம் எது? அவர் தனது சொந்தத் தேசத்தை ஸ்தாபிப்பதற்கு வந்துள்ளார். அவர் தானாகவே தனது சொந்தத் தேசத்துக்கு வருகிறார். (ஓரிரு நபர்கள் தங்கள் அபிப்பிராயங்களைத் தெரிவித்தனர்.) நல்லது, நீங்கள் அனைவரும் இக்கருத்தைக் கடைய வேண்டும். இது மிகவும் நன்றாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டிய ஒரு விடயம். இராவணனுடைய அந்நிய தேசம் எதுவென்று கூறுவது மிகவும் இலகுவானது. இராவணன் ஒருபோதும் இராம இராச்சியத்திற்குள் பிரவேசிப்பதில்லை. ஆனால், இராவண இராச்சியத்திற்குத் தந்தை வரவேண்டும், ஏனெனில் அவர் அதை மாற்ற வேண்டும். இது சங்கமயுகம். அவர் சத்தியயுகத்திற்கோ அல்லது கலியுகத்திற்கோ வருவதில்லை. அவர் சங்கமயுகத்திலேயே வருகிறார். ஆகவே, இது இராம இராச்சியமும் அத்துடன் இராவண இராச்சியமும் ஆகும். இக்கரை இராமருக்குச் சொந்தம், அக்கரை இராவணனுக்குச் சொந்தம். இதுவே சங்கமம். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் இந்தப் பக்கத்திலும் இல்லாமல், அந்தப் பக்கத்திலும் இல்லாமல், சங்கமத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் உங்களைச் சங்கமயுகத்தில் இருப்பதாகவே கருத வேண்டும். எங்களுக்கு அந்தப் பக்கத்துடன் எந்தத் தொடர்புகளும் கிடையாது. உங்கள் புத்தி பழைய உலகத்துடன் கொண்டுள்ள சகல தொடர்பையும் துண்டித்துக் கொள்ள வேண்டும். நீங்கள் இங்கே இப்பழைய உலகில் வாழ வேண்டும், ஆனால் உங்கள் புத்தி இப்பழைய உலகம் அழியவுள்ளது என்பதைப் புரிந்து கொண்டிருக்கின்றது. ஆத்மா கூறுகிறார்: நான் இப்பொழுது சங்கமயுகத்தில் இருக்கிறேன். இப்பொழுது தந்தை வந்திருக்கின்றார். அவர் படகோட்டி எனவும் அழைக்கப்படுகிறார். நாங்கள் இப்பொழுது அக்கரைக்குச் சென்று கொண்டிருக்கிறோம். எவ்வாறு? யோகத்தின் மூலம். யோகத்துக்கான ஞானமும் அத்துடன் புரிந்துணர்விற்கான இந்த ஞானமும் உள்ளன. ‘உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள்’ என்றே யோகத்தையிட்டு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் ஞானமாகும். ஞானம் என்றால் விளக்கம் அளித்தல். உங்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுப்பதற்காகத் தந்தை வந்துள்ளார். அவர் கூறுகிறார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். ஆத்மாவே 84 பிறவிகளை எடுக்கிறார். பாபா இங்கே அமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விவரமாக விளங்கப்படுத்துகிறார். இந்த இராவண இராச்சியம் இப்பொழுது அழிக்கப்படவுள்ளது. இங்கே, கர்ம பந்தனங்கள் உள்ளன. அங்கே அவை கர்ம உறவுமுறைகள் ஆகும். பந்தனம் என்றால் துன்பம். உறவுமுறை என்றால் சந்தோஷம். இப்பொழுது உங்கள் கர்ம பந்தனங்கள் துண்டிக்கப்பட வேண்டும். இப்பொழுது உங்களுக்குப் பிராமண உறவுமுறைகளே உள்ளன என்பது உங்கள் புத்திகளில் உள்ளது. பின்னர், உங்கள் உறவுமுறைகள் தேவர்களுடன் இருக்கும். பிராமண உறவுமுறைகள் இந்த ஒரு பிறவியில் மாத்திரமே உள்ளது. அதன்பின்னர் எட்டு முதல் பன்னிரண்டு பிறவிகள் தேவர்களுடன் உறவுமுறைகளைக் கொண்டிருப்பீர்கள். உங்கள் புத்தியில் இந்த ஞானம் இருப்பதால், கலியுகத்தின் தீய கர்ம பந்தனங்களுக்கான விருப்பம் இன்மையை நீங்கள் கொண்டிருக்கின்றீர்கள். இனிமேல் நாங்கள் இவ்வுலகின் கர்ம பந்தனங்களுடன் வாழ விரும்பவில்லை. அவை அனைத்தும் அசுர கர்ம பந்தனங்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். நாங்கள் ஒரு மறைமுகமான யாத்திரையில் சென்று கொண்டிருக்கிறோம். தந்தை எங்களுக்கு இந்த யாத்திரையைக் கற்பித்துள்ளார். பின்னர் இந்தக் கர்ம பந்தனங்களில் இருந்து விடுபட்டவர்களாகி, கர்மாதீத் ஆகுவோம். இப்பொழுது இந்தக் கர்ம பந்தனங்கள் துண்டிக்கப்பட வேண்டும். நாங்கள் தந்தையை நினைவு செய்கிறோம். அதனால் எங்களால் தூய்மையாகி, சக்கரத்தைப் புரிந்து கொண்டு, பூகோள ஆட்சியாளர்கள் ஆகமுடியும். நாங்கள் இப்பொழுது கற்றுக் கொண்டிருக்கிறோம். ஆகவே, ஓர் இலக்கும் குறிக்கோளும் எங்கள் கல்வியின் வெகுமதியும் இருக்க வேண்டும். எல்லையற்ற தந்தையே உங்கள் ஆசிரியர் என்பதை நீங்கள் அறிவீர்கள். 5000 வருடங்களின் முன்னரும் எல்லையற்ற தந்தை எங்களுக்குக் கற்பித்தார். இது நாடகத்தில் உள்ளது. அவர் ஒரு கல்பத்தின் முன்னர் கற்பித்தவர்களுக்கு மட்டுமே கற்பிப்பார். மேலும் பலர் தொடர்ந்தும் வருவார்கள், விரிவாக்கம் தொடர்ந்து இடம்பெறும். அனைவருமே சத்தியயுகத்துக்குச் செல்ல மாட்டார்கள். ஏனைய அனைவரும் வீடு திரும்புவார்கள். இந்தப் பக்கம் நரகமும் அந்தப் பக்கம் சுவர்க்கமும் உள்ளன. ஒரு லௌகீகக் கல்வியில், தாங்கள் இங்கே கற்று, அதன் வெகுமதியை இங்கே பெறுவார்கள் என்று அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். எவ்வாறாயினும், நாங்கள் சங்கமயுகத்தில் கற்றுக் கொண்டிருக்கிறோம், அதன் வெகுமதியைப் புதிய உலகில் பெறுவோம். இது புதியதொரு விடயம். உங்கள் அடுத்த பிறவியில் உங்கள் வெகுமதியை நீங்கள் பெறுவீர்கள் என்று உலகில் உள்ள வேறு எவரும் கூறுவதில்லை. இந்தச் சங்கமயுகத்தில் மட்டுமே, உங்கள் அடுத்த பிறவியில் வெகுமதியைப் பெறுவதற்காக இந்தப் பிறவியில் உங்களால் கற்க முடியும். தந்தையும் இச்சங்கமயுகத்தில் மட்டுமே வருகிறார். அதிமேன்மையான மனிதர்கள் ஆகுவதற்கு, நீங்கள் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். அமரத்துவ பூமியான, புதிய உலகிற்கு உங்களை அனுப்புவதற்கு உங்களுக்குக் கற்பிப்பதற்காக ஒருமுறை மட்டுமே ஞானக்கடலான கடவுள் வருகிறார்! இதுவோ மரண உலகமான கலியுகம். நாங்கள் சத்திய யுகத்துக்காகக் கற்கிறோம். நாங்கள் நரகவாசிகளில் இருந்து சுவர்க்கவாசிகளாக மாறுவதற்குக் கற்றுக் கொண்டிருக்கிறோம். இது அந்நிய தேசம், அந்தத் தேசம் எங்கள் தேசம். எங்களுடைய அந்தத் தேசத்துக்கு வருவதற்கான அவசியம் தந்தைக்கு இல்லை. அந்தத் தேசம் குழந்தைகளுக்கு மட்டுமே ஆகும். இராவணன் சத்தியயுகத்துக்குள் பிரவேசிப்பதில்லை. இராவணன் மறைந்து விடுகிறான். பின்னர், மீண்டும் துவாபர யுகத்திலேயே அவன் தோன்றுகிறான். ஆகவே, தந்தையும் மறைந்து விடுகிறார். சத்திய யுகத்திலுள்ள எவருக்கும் அவரைத் தெரியாது. எனவே அங்கே அவர்கள் ஏன் அவரை நினைவுசெய்ய வேண்டும்? சந்தோஷ வெகுமதி முடிவடைந்ததும் இராவண இராச்சியம் ஆரம்பம் ஆகுகிறது. அது அந்நியதேசம் என அழைக்கப்படுகிறது. நாங்கள் சங்கமயுகத்தில் இருக்கிறோம் என்பதை நாங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறோம். எங்களுக்குப் பாதையைக் காண்பிக்கும் தந்தையை நாங்கள் இப்பொழுது கண்டு விட்டோம். ஏனைய அனைவரும் தொடர்ந்தும் தடுமாறித் திரிகிறார்கள். ஒரு கல்பத்தின் முன்னரும் களைப்படைந்து இப்பாதையைத் தெரிவு செய்தவர்கள், தொடர்ந்தும் இங்கே வருவார்கள். வழிகாட்டிகளாகிய நீங்கள் அனைவருக்கும் இப்பாதையைக் காட்ட வேண்டும். இப்பாதையே ஆன்மீக யாத்திரை ஆகும். அது உங்களை நேரடியாகச் சந்தோஷ தாமத்துக்கு அழைத்துச் செல்கிறது. வழிகாட்டிகளாகிய நீங்கள், பாண்டவ சமுதாயத்துக்கு உரியவர்கள் ஆவீர்கள். இதனைப் பாண்டவ இராச்சியம் என அழைக்க முடியாது. பாண்டவர்களுக்கோ அல்லது கௌரவர்களுக்கோ ஓர் இராச்சியம் இல்லை. எவருக்குமே ஒரு கிரீடம் இல்லை. பக்தி மார்க்கத்தில், இருசாராருக்குமே ஒரு கிரீடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு கிரீடம் கொடுக்கப்பட்டாலும் கூட, கௌரவர்களுக்கு ஒளிக்கிரீடத்தைக் கொடுக்க முடியாது. பாண்டவர்களுக்குக் கூட ஒளிக்கிரீடம் கொடுக்கப்பட முடியாது, ஏனெனில் அவர்கள் இன்னமும் முயற்சியாளர்களே. அவர்கள் முன்னேறுகையில் வீழ்கிறார்கள். ஆகவே, அது யாருக்குக் கொடுக்கப்பட முடியும்? இந்தச் சின்னம் விஷ்ணுவிற்கே காட்டப்பட்டுள்ளது. ஏனெனில் அவர் தூய்மையானவர் ஆவார். சத்தியயுகத்தில் அனைவரும் முற்றிலும் தூய்மையானவர்களும் விகாரம் அற்றவர்களும் ஆவார்கள். அவர்களிடம் தூய்மையாகிய, ஒளிக்கிரீடம் உள்ளது. இவ்வேளையில், எவரும் தூய்மையானவர் இல்லை. தாங்கள் தூய்மையானவர்கள் எனவும் ஆனால் இந்த உலகம் தூய்மையற்றது எனவும் சந்நியாசிகள் கோருகிறார்கள். அவர்கள் இன்னமும் இந்த விகார உலகிலேயே பிறக்க வேண்டியுள்ளது. இது இராவணனின் தூய்மையற்ற தேசம் ஆகும். அந்தப் புதிய உலகம், சத்தியயுகமாகிய, தூய இராச்சியம் என்று அழைக்கப்படுகிறது. பூந்தோட்ட அதிபதியான தந்தை இப்பொழுது குழந்தைகளாகிய உங்களை முட்களிலிருந்து மலர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார். அவரே தூய்மையாக்குபவரும் படகோட்டியும் அத்துடன் பூந்தோட்ட அதிபதியும் ஆவார். பூந்தோட்ட அதிபதி, இந்த முட்காட்டுக்குள் வந்துள்ளார். உங்களுக்கு ஒரு தளபதி மட்டுமே உள்ளார். சங்கரரை யாதவர்களின் முதற்பெரும் தளபதி என அழைக்க முடியுமா? உண்மையில், சங்கரர் விநாசத்தைத் தூண்டுவதில்லை. சரியான நேரத்தில் யுத்தம் ஆரம்பிக்கிறது. சங்கரரரின் தூண்டுதல் மூலமே ஏவுகணைகள் போன்றன உருவாக்கப்பட்டன என்று கூறப்பட்டுள்ளது. மக்கள் அமர்ந்திருந்து அத்தகைய கதைகளை உருவாக்கினார்கள். பழைய உலகம் நிச்சயமாக அழிக்கப்பட வேண்டும். ஒரு கட்டடம் பழையதாகும் பொழுது, அது இடிந்து வீழ்ந்து மக்கள் மரணிக்கிறார்கள். இப்பழைய உலகமும் அழிக்கப்பட வேண்டும். அனைவரும் புதையுண்டு இறப்பார்கள். சிலர் நீரில் மூழ்குவார்கள். சிலர் அதிர்ச்சியினால் மரணிப்பார்கள். நச்சு வாயுக் குண்டுகளும் பலரையும் கொல்லும். விநாசம் இடம்பெற வேண்டும் என்பது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது. நாங்கள் இப்பொழுது இக்கரையைக் கடந்து, அக்கரைக்குச் சென்று கொண்டிருக்கிறோம். கலியுகம் முடிவடைந்து, சத்தியயுக ஸ்தாபனை ஆரம்பிக்கப்பட வேண்டும். பின்னர் அரைக்கல்பத்துக்கு அங்கே யுத்தம் இருக்காது. உங்களை முயற்சி செய்யத் தூண்டுவதற்குத் தந்தை இப்பொழுது வந்துள்ளார். இதுவே உங்கள் இறுதிச் சந்தர்ப்பம். நீங்கள் மேலும் தாமதித்தால், திடீர் மரணம் ஏற்படலாம். மரணம் உங்கள் முன்னிலையிலேயே உள்ளது. எங்காவது ஓர் இடத்தில் அமர்ந்திருக்கும்போதே, மக்கள் திடீரென்று இறக்கிறார்கள். நீங்கள் மரணிக்கும் முன்னர், நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் வீடு திரும்ப வேண்டும். ஆகவே, தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, உங்கள் வீட்டை நினைவு செய்யுங்கள். உங்கள் இறுதி எண்ணங்கள் உங்களை உங்கள் இலக்குக்கு இட்டுச் செல்லும். இதன் மூலம் நீங்கள் வீடு திரும்புவீர்கள். எவ்வாறாயினும், உங்கள் வீட்டை நினைவுசெய்தால், உங்கள் பாவங்கள் அழிக்கப்பட மாட்டாது. தந்தையை நினைவு செய்வதனால், உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, நீங்கள் வீடு திரும்புவீர்கள். ஆகவே, தொடர்ந்தும் தந்தையை நினைவுசெய்யுங்கள். உங்கள் அட்டவணையை வைத்திருப்பதால், நாள் முழுவதும் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை அறிய முடியும். பொதுவாக, 5 அல்லது 6 வயதிலிருந்து ஒருவர் வாழ்வில் செய்துள்ள அனைத்தையும் ஒருவரால் நினைவுசெய்ய முடியும். நீங்கள் அதை எப்போதும் எழுதிக் கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை. நீங்கள் பூந்தோட்டத்தில் அமர்ந்திருந்த பொழுது, தந்தையை நினைவுசெய்தீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்கள் கடையில் வாடிக்கையாளர்கள் இல்லாத பொழுது, உங்களால் அமர்ந்திருந்து தந்தையை நினைவுசெய்ய முடியும். உங்களுக்குள்ளே இதனை நீங்கள் குறித்துக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். நீங்கள் அவை அனைத்தையும் எழுதிக் கொள்ள வேண்டுமாயின், உங்களுடன் ஒரு தினக் குறிப்பேட்டை (டயரி) வைத்துக் கொள்ள வேண்டும். பிரதான விடயம்: நாங்கள் எவ்வாறு தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகுவது? நாங்கள் எவ்வாறு தூய உலகின் அதிபதிகள் ஆகுவது? நாங்கள் எவ்வாறு தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மை ஆகுவது? தந்தை வந்து இந்த ஞானத்தைக் கொடுக்கிறார். தந்தை மட்டுமே ஞானக்கடல். நீங்கள் இப்பொழுது கூறுகிறீர்கள்: பாபா, நான் உங்களுக்கு உரியவன். நான் எப்பொழுதும் உங்களுக்கே உரியவராக இருக்கின்றேன். உங்களை மறந்ததால், நான் சரீர உணர்வுடையவர் ஆகினேன். நீங்கள் இப்பொழுது சகல விடயங்களையும் எங்களுக்குக் கூறியுள்ளதால், நான் இப்பொழுது மீண்டும் ஒருமுறை ஆத்ம உணர்வுடையவர் ஆகிக் கொண்டிருக்கிறேன். சத்தியயுகத்தில், நாங்கள் ஆத்ம உணர்வு உடையவர்களாக இருந்தோம். நாங்கள் ஒவ்வொருவரும் பெரும் சந்தோஷத்தில் எங்கள் சரீரத்தை நீக்கி, எங்கள் அடுத்த சரீரத்தை எடுப்போம். குழந்தைகளாகிய நீங்கள் இவை அனைத்தையும் கிரகித்தால், உங்களால் ஏனையோருக்கு விளங்கப்படுத்தும் தகுதியைப் பெற முடியும். அதனால், பலர் நன்மை அடைவார்கள். நாடகத்துக்கு ஏற்பவும் நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்பவும் வரிசைக்கிரமமாகச் சேவை செய்பவர்களாகிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை பாபா அறிவார். நல்லது, பிறருக்கு உங்களால் விருட்சத்தை விளங்கப்படுத்த முடியாது விட்டாலும், ‘உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள்’ என்று அவர்களிடம் கூறுவது இலகுவானது. இது மிகவும் இலகுவானது. தந்தை மாத்திரமே கூறுகிறார்: என்னை நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழியும்! பிராமணர்களாகிய உங்களைத் தவிர வேறு எந்த மனிதர்களாலும் இதைக் கூற முடியாது. ஆத்மாக்கள் என்றால் என்ன என்பதையோ அல்லது பரமாத்மா என்றால் என்ன என்பதையோ வேறு எவரும் அறிய மாட்டார்கள். நீங்கள் வெறுமனே ஒருவருக்கு அவ்வாறு கூறினால், அம்பினால் இலக்கைத் தாக்க முடியாது. ஒருவர் கடவுளின் ரூபத்தை அறிந்து கொள்ள வேண்டும். இந்த ஆத்மாக்கள் அனைவரும் நாடக நடிகர்கள். ஒவ்வோர் ஆத்மாவும் தன்னுடைய சரீரத்தினூடாக நடிக்கிறார். ஆத்மாக்கள் சரீரத்தை நீக்கி, தங்களின் அடுத்த சரீரத்தை எடுத்துத் தொடர்ந்தும் தங்கள் பாகத்தை நடிக்கிறார்கள். அந்த நடிகர்கள் தங்கள் ஆடைகளை மாற்றித் தங்களின் வேறுபட்ட பாகங்களை நடிக்கிறார்கள். நீங்கள் உங்கள் சரீரங்களை மாற்றுகிறீர்கள். அங்கே, தற்காலிகமாக அவர்கள் ஓர் ஆணின் அல்லது ஒரு பெண்ணின் ஆடையை அணிகிறார்கள். இங்கே, ஓர் ஆத்மா ஓர் ஆணின் ஆடையைப் பெறும்பொழுது, அந்த வாழ்க்கைக் காலம் முழுவதும் அவர் ஓர் ஆணின் சரீரத்தில் இருக்கிறார். அந்த நாடகங்கள் எல்லைக்கு உட்பட்டவை, ஆனால் இந்த நாடகமோ எல்லையற்றது. தந்தை கூறுகின்ற முதன்மையானதும் பிரதானமானதுமான விடயம்: என்னை நினைவு செய்யுங்கள்! ‘யோகம்’ என்ற வார்த்தையையேனும் பயன்படுத்த வேண்டாம், ஏனெனில் மக்கள் பல்வேறு வகையான யோகங்களைக் கற்கிறார்கள். அவை அனைத்தும் பக்தி மார்க்கத்துக்கு உரியவை. தந்தை கூறுகிறார்: இப்பொழுது என்னையும், உங்கள் வீட்டையும் நினைவு செய்யுங்கள், நீங்கள் வீடு திரும்புவீர்கள். சிவபாபா இவருக்குள் பிரவேசித்து உங்களுக்குக் கற்பிக்கின்றார். தந்தையை நினைவு செய்வதால், ஆத்மாக்களான நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். பின்னர் தூய ஆத்மாக்களான நீங்கள் வீட்டுக்குப் பறந்து செல்வீர்கள். நீங்கள் அதிகளவுக்கு யோகத்தைக் கொண்டிருந்து, அதிகளவு சேவை செய்யும்போது, அந்தளவிற்கு உயர்ந்த அந்தஸ்தைக் கோருகிறீர்கள். நினைவு செய்வதிலேயே பல தடைகள் வருகின்றன. நீங்கள் தூய்மை ஆகாது விட்டால், தர்மராஜ்புரியில், தண்டனையை அனுபவம் செய்ய நேரிடும். உங்கள் கௌரவம் இழக்கப்பட்டு, உங்கள் அந்தஸ்தும் அழிக்கப்படும். இறுதியில், நீங்கள் அனைத்தின் காட்சிகளையும் காண்பீர்கள். எவ்வாறாயினும், உங்களால் அந்த நேரத்தில் எதையும் செய்ய முடியாது. உங்களுக்கு அதிகளவு விளங்கப்படுத்திய போதிலும், நீங்கள் நினைவு செய்யாததால், உங்கள் பாவங்கள் இன்னமும் எஞ்சியுள்ளன என்பதை நீங்கள் காட்சிகளாகக் காண்பீர்கள். ஆகவே, அவற்றுக்கான தண்டனையும் இருக்க வேண்டும். அது கற்பதற்குரிய நேரமாக இருக்க மாட்டாது. நீங்கள் செய்தவற்றுக்காக வருந்த நேரிடும். நீங்கள் தேவையற்று நேரத்தை வீணாக்கினீர்கள். தண்டனையை அனுபவம் செய்ய நேரிடும்! அந்த நேரத்தில் எதையும் செய்ய முடியாது. நீங்கள் தோல்வி அடைந்து விட்டால், அது தோல்விதான். அந்த நேரத்தில் மீண்டும் கற்பதற்கான கேள்வியே கிடையாது. ஏனைய கல்விகளில், ஒருவர் சித்தி அடையாது விட்டால், மீண்டும் கற்பதற்கான வாய்ப்பு இருக்கும். ஆனால், இங்கே, உங்கள் கல்வி முடிவடைந்து விடும். நீங்கள் இறுதியில் வருந்தத் தேவையில்லாத வகையில், தந்தை உங்களுக்கு ஆலோசனை கூறுகிறார்: குழந்தைகளே, மிகவும் நன்றாகப் படியுங்கள். உங்கள் நேரத்தை வம்புபேசுவதில் வீணாக்காதீர்கள், இல்லாவிட்டால் பெரும் வருந்துகை இருக்கும். மாயை உங்களைப் பல பிழையான செயல்களைச் செய்ய வைக்கிறாள். நீங்கள் ஒருபொழுதும் எதையும் திருடியிராது விட்டாலும் மாயை உங்களை அதைச் செய்யத் தூண்டுகின்றாள். மாயை உங்களை ஏமாற்றி விட்டாள் என்பதை நீங்கள் பின்னர் உணர்;ந்து கொள்வீர்கள். முதலில், எதையாவது ஒன்றை எடுக்கும் எண்ணம் இதயத்தில் தோன்றும். எது சரி அல்லது எது பிழை என்பவற்றின் புரிந்துணர்வு உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒன்றை எடுத்தால், அது பிழை. அதனை நீங்கள் எடுக்காது விட்டால், அது சரி. ஆகவே, நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? தூய்மையாக இருப்பது சிறந்தது. தீய சகவாசத்தின் ஆதிக்கத்துக்கு உட்பட்டுப் பின்தங்க வேண்டாம். நாங்கள் சகோதரிகளும் சகோதரர்களும் ஆவோம். ஆகவே, நாங்கள் ஏன் ஒருவரின் பெயரிலும் ரூபத்திலும் சிக்கிக் கொள்ள வேண்டும்? சரீர உணர்வுடையவர்கள் ஆக வேண்டாம். எவ்வாறாயினும், மாயை மிகவும் சக்திவாய்ந்தவள். நீங்கள் பிழையான விடயங்களைச் செய்வதற்குரிய எண்ணங்களை அவள் உங்களுக்குள் ஏற்படுத்துகின்றாள். தந்தை கூறுகிறார்: நீங்கள் பிழையான எதையும் செய்யக்கூடாது. ஒரு போராட்டம் இடம்பெறும்போது, நீங்கள் விழுந்து விடுவதால், பின்னர் சரியான புரிந்துணர்வு முற்றிலும் இல்லாது போகின்றது! நாங்கள் அனைத்து விடயங்களையும் சரியாகவே செய்ய வேண்டும். குருடர்களுக்கு ஒரு கைத்தடி ஆகுங்கள். இதுவே அனைத்திலும் சிறந்த கடமை ஆகும். உங்கள் வாழ்வாதாரத்துக்கான அனைத்தையும் செய்வதற்கும் உங்களுக்கு நேரம் உள்ளது. நீங்கள் இரவில் உறங்கவும் வேண்டும். ஆத்மாக்கள் களைப்படையும் பொழுது, அவர்கள் உறங்கச் செல்கிறார்கள். சரீரமும் உறங்கச் செல்கிறது. ஆகவே உங்கள் வாழ்வாதாரத்துக்கும் ஓய்வுக்கும் உங்களுக்கு நேரம் உள்ளது. ஆகவே மிகுதி நேரத்தில் என்னுடைய சேவையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். ஒரு நினைவு அட்டவணையை வைத்திருங்கள். நீங்கள் அதை எழுதுகிறீர்கள். ஆனால் பின்னர், நீங்கள் முன்னேறுகையில், நீங்கள் தோல்வி அடைகிறீர்கள். நீங்கள் தந்தையை நினைவுசெய்யாத பொழுதும் சேவை செய்யாத பொழுதும் நீங்கள் செய்யும் அனைத்தும் தவறாக உள்ளன. அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் நேரத்தை வம்பளப்பதில் வீணாக்க வேண்டாம். மாயை உங்களைப் பிழையான செயல்களைச் செய்யத் தூண்டாதிருப்பதில் கவனம் செலுத்துங்கள். தீய சகவாசத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுப் பின்னடைய வேண்டாம். சரீர உணர்வு உடையவர்களாகி, எவருடைய பெயரிலும் ரூபத்திலும் சிக்காதீர்கள்.2. வீட்டை நினைவு செய்வதுடன், தந்தையையும் நினைவு செய்யுங்கள். உங்கள் நினைவு அட்டவணைக்கான ஒரு தினக் குறிப்பேட்டை வைத்திருங்கள். நீங்கள் நாள் முழுவதும் என்ன செய்தீர்கள் என்பதையும் நீங்கள் எவ்வளவு நேரம் தந்தையை நினைவு செய்தீர்கள் என்பதையும் எழுதிக் கொள்ளுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உண்மையான அன்பானவராகவும் ஒத்துழைப்பவராகவும் ஆகி, பயனற்ற இராவணைனை எரிப்பதற்கு உங்களின் பணிவெனும் கவசத்தை சதா அணிந்திருப்பீர்களாக.உங்களின் ஒன்றுகூடலில் பலவீனத்தைப் பார்ப்பதற்கு ஒருவர் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் சம்ஸ்காரங்களின் அல்லது சுபாவத்தின் சிறிதளவு முரண்பாடேனும் புலப்பட அனுமதிக்காதீர்கள். யாராவது உங்களை ஏசினாலோ அல்லது அவமதித்தால்கூட, ஒரு சாது போல் ஆகிவிடுங்கள். யாராவது ஏதாவது தவறு செய்தாலும் நீங்கள் சரியாக இருக்க வேண்டும். யாராவது முரண்பாடுகளை ஏற்படுத்தினாலும் அவருக்கு அன்பெனும் நீரை வழங்குங்கள். ‘இது ஏன்? இது ஏன் இப்படி உள்ளது?’ என்ற கேள்விகள் எனும் எண்ணெயை அந்த எரியும் நெருப்பில் ஊற்றாதீர்கள். சதா பணிவெனும் கவசத்தை அணிந்து கொள்ளுங்கள். எங்கே பணிவு இருக்கிறதோ, அங்கே நிச்சயமாக அன்பும் ஒத்துழைப்பும் இருக்கும்.
சுலோகம்:
‘எனது’ என்ற உணர்வின் எல்லைக்குட்பட்ட உணர்வுகள் அனைத்தையும் ‘எனது பாபா’ என்பதற்குள் அமிழ்த்தி விடுங்கள்.அவ்யக்த சமிக்கை: ஆன்மீக இராஜரீகம் மற்றும் தூய்மையின் ஆளுமையைக் கடைப்பிடியுங்கள்.
சம்பூரணமான தூய்மையே ஆன்மீக இராஜரீகத்தின் அத்திவாரம். எனவே, எல்லோரும் உங்களின் உருவம் மற்றும் நடத்தையினூடாக ஆன்மீக இராஜரீகத்தின் போதையையும் பிரகாசத்தையும் அனுபவம் செய்கிறார்களா என உங்களையே கேளுங்கள். இந்த ஞானத்தின் கண்ணாடியில் உங்களையே பாருங்கள். உங்களின் முகத்திலும் நடத்தையிலும் ஆன்மீக இராஜரீகம் புலப்படுகிறதா அல்லது உங்களின் செயல்பாடுகளும் முகமும் சாதாரணமானவையாகத் தென்படுகிறதா எனப் பாருங்கள்.