14.06.26 Avyakt Bapdada Tamil Lanka Murli 24.10.2010 Om Shanti Madhuban
இப்போது காலத்தின் வேகத்திற்கேற்ப, உங்களின் சுபாவம் மற்றும் சம்ஸ்காரங்களின் மாற்றத்தில் தீவிரத்தை ஏற்படுத்துங்கள். உங்களின் மனதைப் பயன்படுத்தி, ஆத்மாக்களுக்கு வெவ்வேறு வகையான கதிர்களை வழங்குங்கள்.
இன்று, இறைவனின் இதய சிம்மாசனத்திலும் நெற்றியின் சிம்மாசனத்திலும் உலகின் எதிர்கால சிம்மாசனத்திலும் அமர்ந்திருக்கும் எங்கும் உள்ள குழந்தைகளைக் காண்பதில் பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். இறைவனின் இதய சிம்மாசனம், பிராமணர்களான உங்களுக்கு மட்டுமே உரியது. அனைவரிடமும் நெற்றியின் சிம்மாசனம் உள்ளது. ஆனால், பிராமண ஆத்மாக்கள் மட்டுமே இறைவனின் இதய சிம்மாசனத்தைக் கொண்டிருக்கிறார்கள். இந்த இறைவனின் இதய சிம்மாசனம் உங்களை உலகின் சிம்மாசனத்தை அடையச் செய்கிறது. எனவே, பிராமணர்களான நீங்கள் மட்டுமே மூன்று சிம்மாசனங்களுக்கும் உரிமையைப் பெற்றுள்ள ஆத்மாக்கள் ஆவீர்கள். இறைவனின் இந்த இதய சிம்மாசனம் மிகவும் மேன்மையானது. அதை வேறெந்த யுகத்திலும் பெற முடியாது. இறைவனின் சிம்மாசனமும் நினைவு செய்யப்படுகிறது. பக்தி மார்க்கத்தில், இறைவனின் இதய சிம்மாசனத்திற்கான உரிமையைக் கொண்டிருப்பவர்கள், மாலையின் மணிகளாக நினைவு செய்யப்படுவதுடன் பூஜிக்கப்படுவார்கள். அவர்கள் பலமில்லியன்களில் கைப்பிடி அளவினராக நினைவு செய்யப்படுகிறார்கள். மேன்மையான உணர்வுகளைக் கொண்ட மக்கள், ஒவ்வொரு மணியையும் இத்தகைய மேன்மையான பார்வையுடனேயே பார்க்கிறார்கள். எனவே, உங்கள் அனைவருக்கும் இந்த ஆன்மீக போதை இருக்கிறது, அல்லவா? உங்களைத் தவிர வேறு எவராலும் இந்த சிம்மாசனத்தை அனுபவம் செய்ய முடியாது என்ற ஆன்மீக போதை உங்களுக்கு இருக்கிறதா? எவ்வாறாயினும், பிராமணர்களான உங்களுக்கு இது உங்களின் பிறப்புரிமை ஆகும். உங்களின் இந்தச் சிம்மாசனம், உங்களின் கழுத்து மாலை ஆகும். இறைவனின் இதய சிம்மாசனத்திற்கான உரிமை உங்களுக்கு இருக்கிறது என்ற அந்தளவு போதை உங்களுக்கு இருக்கிறதா? உங்களின் விழிப்புணர்வில் சதா இந்த போதையையும் சந்தோஷத்தையும் நீங்கள் வைத்திருக்கிறீர்களா? நான் யார்? உங்களுக்கு இந்த நம்பிக்கையும் போதையும் உள்ளதா?
மூன்று சிம்மாசனங்களுக்கான உரிமையைக் கொண்டுள்ள குழந்தைகளைக் காண்பதில் பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார்: ஆஹா சகல உரிமைகளையும் கொண்டுள்ள எனது மேன்மையான குழந்தைகளே! ஆஹா! குழந்தைகள் கூறுகிறார்கள்: ஆஹா பாபா! ஆஹா! எனவே, தந்தை கூறுகிறார்: ஆஹா குழந்தைகளே, ஆஹா! தந்தையே இத்தகைய குழந்தைகளின் புகழைப் பாடுகிறார். எனவே, நீங்கள் யார் என்ற போதை உங்களுக்கு இருக்கிறதா? உங்களுக்கு நம்பிக்கை இருக்கும் அளவிற்கு உங்களுக்குள் அந்த போதை இருக்கும். அந்த நம்பிக்கையின் போதை உங்களின் முகத்திலும் உங்களின் செயல்பாடுகளிலும் புலப்படும். நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் நிச்சயமாக அந்த போதையைக் கொண்டிருப்பார்கள். பாப்தாதாவும் இப்போது குழந்தைகளான உங்கள் ஒவ்வொருவரின் முகம் மற்றும் செயல்பாடுகளின் ஊடாக இந்த அனுபவத்தை மற்றவர்களுக்குக் கொடுக்க விரும்புகிறார். மக்கள் உங்களின் வார்த்தைகளில் இருந்து இதை அனுபவம் செய்ய ஆரம்பித்துள்ளார்கள். இதை அனுபவம் செய்யும் அவர்களின் பணி இப்போது பூர்த்தி செய்ய ஆரம்பித்துள்ளது. முன்னர், நீங்கள் சொல்வதை மக்கள் கேட்பதுண்டு. அத்துடன் அவர்கள் அதைப் பற்றிச் சிந்தித்தார்கள். இப்போது பிராமண ஆத்மாக்களான உங்களின் ஸ்திதியின் விளைவை அவர்கள் அனுபவம் செய்ய ஆரம்பித்துள்ளார்கள். எனவே, நீங்கள் ஒவ்வொருவரும் உங்களையே சோதித்துப் பாருங்கள்: நாள் முழுவதும், நான் எவ்வளவு நேரம் இறைவனின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தேன்? உலக இராச்சியத்தை அடைவதற்கான அடிப்படை, இந்த இதய சிம்மாசனமே ஆகும். இந்த இதய சிம்மாசனத்தின் அடிப்படையில், எவ்வளவு நேரம் உங்களுக்கு இதய சிம்மாசனத்தின் உரிமை இருக்கிறதோ, அந்தளவு நேரத்திற்கு நீங்கள் எதிர்கால அரச குடும்பத்தில் ஓர் உரிமையைப் பெற்றுக் கொள்வீர்கள். எனவே, சோதித்துப் பாருங்கள்: நீங்கள் பிராமணர் ஆகிய நேரத்தில் இருந்து, எவ்வளவு காலத்திற்கு இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தீர்கள்? அதன் அடிப்படையில், நீங்கள் வரிசைக்கிரமமாக சிம்மாசனத்தில் அமர்வீர்கள். ஆனால், நீங்கள் சதா அரச குடும்பத்தில் இருப்பதற்கான உரிமையைப் பெற்றிருப்பீர்கள். நீங்கள் இதை எப்போதாவது சோதித்துப் பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் இதய சிம்மாசனத்தில் இருந்து கீழே இறங்குவது இல்லையல்லவா? உங்களின் சொந்தக் கணக்கைச் சோதித்துப் பாருங்கள். ஏனென்றால், இதன் அடிப்படையிலேயே நீங்கள் சதா அரச குடும்பத்திற்குள் செல்வீர்கள். சிலவேளைகளில் நீங்கள் சிம்மாசனத்தை விட்டு நீங்கி உங்களின் பாதங்களை சேற்றுக்குள் வைக்கிறீர்களா என்பதைச் சோதித்துப் பாருங்கள். 63 பிறவிகளாக, உங்களின் பாதங்களை சரீர உணர்வெனும் சேற்றுக்குள் வைக்கும் சம்ஸ்காரத்தை நீங்கள் கொண்டிருந்தீர்கள். ஒன்று, சரீர உணர்வு. மற்றையது, சரீர அகங்காரம். சரீர அகங்காரம் என்ற சேறு ஆழமாக இருந்தாலும் சரீர உணர்வும் சேறே ஆகும். ஒருவர் இறக்கும்போது சரீரம் எரிக்கப்படுகிறது. எனவே மக்கள் கூறுகிறார்கள்: சாம்பல் சாம்பலுடன் கலந்தது, மண் மண்ணோடு கலந்தது... எனவே, உங்களின் பாதங்கள் சேற்றுக்குள் செல்லவில்லையே என்பதைச் சோதித்துப் பாருங்கள். சரீர உணர்வு உடையவர் ஆகுவது என்றால் உங்களின் பாதங்களை சேற்றுக்குள் பதித்தல் என்று அர்த்தம்.
பாப்தாதா மேன்மையான ஆத்மாக்களான உங்களுக்கு மூன்று சிம்மாசனங்களை வழங்கி உள்ளார். ஏனென்றால், நீங்கள் விசேடமாக அன்பிற்கு உரியவர்கள். நீங்கள் நீண்ட காலம் தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டவர்கள், அத்துடன் நீங்கள் அதியன்பிற்கு உரியவர்கள். விசேடமாக அதியன்பிற்குரிய குழந்தைகள் எப்போதும் ஊஞ்சலில் அல்லது மடியில் அமர்ந்திருப்பார்கள். அவர்கள் தமது பாதங்களை சேற்றில் பதிப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. எனவே, மூன்று சிம்மாசனங்களுக்கும் உரிமை உடையவர்களுக்கு பாப்தாதா பல்வேறுபட்ட ஊஞ்சல்களை வழங்கி உள்ளார். சிலவேளைகளில் அமைதி ஊஞ்சலில் ஆடுங்கள், சிலவேளைகளில் சந்தோஷ ஊஞ்சலில் ஆடுங்கள், சிலவேளைகளில் அன்பெனும் ஊஞ்சலில் ஆடுங்கள். உங்களின் பாதங்களை (புத்தியின்) சிம்மாசனத்திலும் ஊஞ்சல்களிலும் வைத்திருங்கள். சில குழந்தைகள் கேட்கிறார்கள்: நாங்கள் எதிர்காலத்தில் எங்கே செல்வோம்? நாங்கள் என்ன ஆகுவோம்? தந்தை கூறுகிறார்: நீங்கள் வந்த நேரத்தில் இருந்து, அந்தக் குறிப்பிட்ட காலப்பகுதியில் உங்களின் பாதங்கள் ஊஞ்சல்களில் இருந்தனவா அல்லது சிம்மாசனத்தில் இருந்தனவா எனச் சோதித்துப் பாருங்கள். அந்த அளவிற்கு, நீங்கள் எதிர்காலத்தில் ஓர் அரச குடும்பத்தில் இருப்பீர்கள். நீங்கள் அரச பிரஜைகளில் ஒருவராக இருக்க மாட்டீர்கள். நீங்கள் அரச குடும்பத்தில் ஒருவராக இருப்பீர்கள். எனவே, நீங்கள் ஒவ்வொருவரும் இதை உங்களுக்காகக் கணக்கிட்டுப் பார்க்க முடியும். மற்றவர்களைப் பார்க்காதீர்கள். உங்களின் சொந்தக் கணக்கைக் கணக்கிட்டுப் பாருங்கள். உங்கள் ஒவ்வொருவருக்கும் என்ன வேண்டும்? அரச குடும்பத்தில் அல்லது வம்சத்தில் இருத்தல். எனவே, இப்போது உங்களிடம் இருக்கும் நேரத்தில் - ஏனென்றால் நிறைவு சடுதியாக இடம்பெறப் போகின்றது - நிறைவு இடம்பெறும் வரைக்கும் இப்பொழுதில் இருந்தே உங்களைச் சோதித்துப் பாருங்கள். எந்தளவிற்கு அதிகமாக நீங்கள் தந்தையின் மடியில், சிம்மாசனத்தில், ஊஞ்சல்களில் இருக்கிறீர்களோ, அந்தளவு நேரத்திற்கு நீங்கள் அரச குடும்பத்தில் உங்களின் பாக்கியத்தைக் கோரிக் கொள்வீர்கள்.
பாப்தாதா ஒவ்வொரு குழந்தைக்கும் அது சூரிய வம்சமோ அல்லது சந்திர வம்சமோ, இரண்டு யுகங்களிலும் முழுமையாக 21 பிறவிகளுக்கும் அரச குடும்பத்தில் இருப்பதற்கான உரிமையை வழங்குகிறார். எவ்வாறாயினும், தனது உரிமையைக் கோருவது ஒவ்வொரு குழந்தையைப் பொறுத்த விடயம் ஆகும். உங்களுக்கு தந்தை பிரம்மாவின் மீது அன்பு உள்ளது. தந்தை பிரம்மாவிற்கும் குழந்தைகளான உங்களின் மீது அன்பு உள்ளது. தந்தை பிரம்மா குழந்தைகளான உங்களைத் தன்னுடன் ஓர் அரச குடும்பத்தில் இருப்பதைக் காண விரும்புகிறார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் தந்தை பிரம்மாவுடன் அரச குடும்பத்தில் வாழுவீர்களா அல்லது நீங்கள் குறுகியதொரு காலத்திற்கு மட்டுமே அங்கே இருப்பீர்களா? நீங்கள் தொலைவில் செல்ல விரும்பவில்லை, அல்லவா? இதற்கான அடிப்படை, சங்கமயுகமே என்று உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. பாப்தாதா குழந்தைகளான உங்களின் மீது அதிகளவு அன்பு வைத்துள்ளார். தற்சமயம், நீங்கள் அவருடன் இருந்து, அவருடனேயே திரும்பிச் செல்வீர்கள் எனக் கூறுவதைப் போன்றதாகும். தற்சமயம், தந்தை பிரம்மாவும் பிராமணர்களும் ஒன்றாக இருக்கிறார்கள். அவர் அவ்யக்த ரூபத்தில் இருந்தாலும் அவர் உங்களுடனேயே இருக்கிறார்.
மாயை உங்களின் மீது அதிகளவு அன்பு வைத்திருப்பதனால் குழந்தைகளான உங்களை விட்டு வைப்பதில்லை என்பதை பாப்தாதா பார்த்தார். தற்காலத்தில், மாயை இரண்டு குறிப்பிட்ட வழிகளில் தனது வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறாள். அவள் இரண்டு வடிவங்களில் வருகிறாள்: ஒன்று, வீணான எண்ணங்கள். மற்றையது, சிலவேளைகளில், சிலவற்றில் இந்த அலை காணப்படுகிறது - நீங்கள் நினைக்கின்றீர்கள்: நான் என்ன செய்தேனோ அல்லது நினைத்தேனோ அதுவே சரி. நான் எதிலும் சளைத்தவன் அல்ல. இந்த அலை பரவுகிறது. ‘நான் மட்டுமே சரி’ என்று நீங்கள் நினைக்கிறீர்கள். எவ்வாறாயினும், உங்களுடன் தொடர்பில் இருப்பவர்களும் கருவிகளாக இருப்பவர்களும் உங்களின் எண்ணங்களை ஏற்றுக் கொள்கிறார்களா? நீங்கள் மற்றவர்களுடனும் அவற்றைச் சரிபார்க்க வேண்டும். இந்த வீணான எண்ணங்கள் உங்களின் நேரத்தையும் வீணாக்குகின்றன. இதனாலேயே, ஒவ்வொரு நாள் முரளியிலும் கடைந்து சேவை செய்கின்ற நாளாந்த வீட்டுவேலையை பாபா உங்களுக்குக் கொடுக்கிறார். நீங்கள் அதைக் கடைந்தால், அதைக் கடைவதன் மூலம் நீங்கள் அதில் திளைத்திருப்பீர்கள். அப்போது இந்த நாளாந்த வீட்டுவேலை என்றால் உங்களின் மனதை மும்முரமாக வைத்திருத்தல் என்று அர்த்தம். இதனாலேயே, நாளாந்த வீட்டுவேலையாக அதைச் செவிமடுத்து, அதைக் கடைந்து, அதில் மூழ்கி இருக்க வேண்டும் என்பதை வழங்குகிறார். இது பாடசாலை மாணவர்களுக்கு அவர்களின் புத்திகள் அவற்றில் மும்முரமாக இருப்பதற்காக அதிகளவு வீட்டுவேலை வழங்குவதைப் போன்றதாகும். ஒவ்வொரு நாள் முரளியிலும் நான்கு பாடங்களிலும் வீட்டுவேலை உள்ளது. உங்களின் மனதிற்கு, உங்களின் வார்த்தைகளுக்கு, உங்களின் செயல்களில் கவனம் செலுத்துவதற்கு, வீட்டுவேலையும் அத்துடன் தெய்வீகத் தன்மையை நோக்கிய ஒரு சமிக்கையும் வழங்கப்படுகிறது. நீங்கள் உங்களின் வீட்டுவேலையில் மும்முரமாக இருந்தால், வீணான எண்ணங்கள் வருவதற்கான வாய்ப்பு இருக்க மாட்டாது. நீங்கள் தொடர்ந்து இந்த வழிமுறையைப் பயன்படுத்தினால், வீணான எண்ணங்கள் தானாகவே விடை பெற்றுச் சென்றுவிடும். ஏனென்றால், நீங்கள் அனைவரும் நினைவு யாத்திரையில் வரிசைக்கிரமமான கவனத்தைச் செலுத்துவதையும் அத்துடன் வார்த்தைகளால் செய்யும் சேவையில் நீங்கள் கவனம் செலுத்துவதையும் பாப்தாதா பார்த்துள்ளார். எவ்வாறாயினும், நீங்கள் இப்போது உங்களின் சொந்த சம்ஸ்காரங்களையும் மற்றவர்களின் சம்ஸ்காரங்களையும் மாற்ற வேண்டும். இராஜரீகமான முறையில் இது உங்களின் சுபாவம், இது உங்களின் நோக்கம் அல்ல, ஆனால் உங்களின் சுபாவம் அப்படி இருந்தது என்ற இந்த சுபாவமும் சம்ஸ்காரங்களும், இந்த தாரணை என்ற பாடம் இப்போது இராஜரீகமான வடிவத்தில் வெளிப்படும். எனவே இப்போது, பாப்தாதா உங்களுக்கு இந்த சமிக்கையை வழங்குகிறார்: உங்களின் தாரணையில் என்ன குறைகிறதோ, இப்போது அதில் விசேடமான கவனம் செலுத்துங்கள்.
பாப்தாதா உங்களுக்கு முன்னரும் கூறியுள்ளார், தாரணையில் நீங்கள் இந்தப் பிரதானமான தாரணையில் கவனம் செலுத்த வேண்டும்: ஏதாவது நடந்தால், உங்களால் ஒரு விநாடியில் முற்றுப்புள்ளி வைக்க முடிகிறதா என்று சோதித்துப் பாருங்கள். அல்லது, நீங்கள் ஒரு முற்றுப்புள்ளி வைக்க விரும்பிய போதும் அதற்குப் பதிலாக ஒரு கேள்விக்குறி போடப்படுகிறதா? அது முற்றுப்புள்ளி அல்ல. ஏனென்றால் முற்றுப்புள்ளியில் அரைவாசி போடப்பட்டு, அது வேறொரு நிறுத்தற்குறி ஆகுகிறது. நீங்கள் மேற்கொண்டு முன்னேறும்போது, ஒரு விநாடியில் நீங்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய அத்தகைய சூழ்நிலைகள் வரும். அந்த வேளையில், கேள்விக்குறியை அல்லது வியப்புக்குறியைச் சரியாக்குவதற்கு அந்தளவு நேரம் உங்களுக்குக் கிடைக்காது. ஒரு விநாடியில் முற்றுப்புள்ளி வைப்பதற்கான தேவை இருக்கும். இந்தப் பயிற்சியானது அந்த வேளைக்கு முன்னதாக நீண்ட காலத்திற்குத் தேவைப்படும். அப்போது மட்டுமே உங்களால் அந்த வேளையில் வெற்றி நிறைந்தவர் ஆகமுடியும். குழப்பமான வேளையில், சம்ஸ்காரங்களினதும் சுபாவத்தினதும் பரீட்சையை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும். அந்த வேளைக்காக, இதை இப்பொழுதில் இருந்தே பயிற்சி செய்யுங்கள். ஏனென்றால், அப்போது மட்டுமே நீங்கள் மேற்கொண்டு முன்னேறும்போது நீண்ட காலத்திற்கான பயிற்சி உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
பாப்தாதா அமிர்தவேளையில் சுற்றுலா செல்லும்போது, ஒவ்வொரு குழந்தையும் செய்யும் முயற்சியைச் சோதிக்கின்றார். நான்கு பாடங்களிலும் உங்களின் முயற்சி தீவிரமாக உள்ளதா அல்லது சாதாரணமாக உள்ளதா? எனவே, பாபா எதைக் காண்கிறார்? இப்போது இந்த வேளையின் வேகத்திற்கேற்ப, எல்லா வேளையும் உங்களின் முயற்சிகளில் தீவிரத்தன்மையைப் போட வேண்டிய தேவை உள்ளது. காலம் துரித கதியில் நெருங்கி வருகின்றது என்ற சமிக்கையை பாப்தாதா உங்களுக்கு வழங்குகிறார். அதற்கேற்ப, இப்போது துரித கதியில் உங்களின் குறிப்பிட்ட சுபாவம் மற்றும் சம்ஸ்காரங்களில் மாற்றத்தை ஏற்படுத்துங்கள்.
இப்போது குழந்தைகளான நீங்கள் அனைவரும் சமமாக ஆகுவதைக் காணவே பாப்தாதா விரும்புகிறார். உங்களின் இலட்சியமும் நிச்சயமாகத் தநதைக்குச் சமமானவர் ஆகவேண்டும் என்பதே ஆகும். இதற்கு, தந்தை பிரம்மாவைப் பின்பற்றுவதே இலகுவான வழிமுறை ஆகும். அவருடன் சரிபார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் எதைச் செய்தாலும் அனைத்திற்கும் முதலில், அவருடன் சரிபார்த்துக் கொள்ளுங்கள், உங்களை அவருடன் ஒப்பிட்டுப் பாருங்கள். இவை பிரம்மா பாபாவின் செயல்களா, வார்த்தைகளா அல்லது எண்ணங்களா? ‘முதலில் சிந்தித்துப் பின்னர் செயல்படுங்கள்’ என்று கூறப்படுகிறது. அனைத்திற்கும் முதலில், உங்களின் மனதில் அதை சீர்தூக்கிப் பார்த்துவிட்டுப் பின்னர் பேசுங்கள். எனவே, பாப்தாதா இப்போது எதை விரும்புகிறார் என்பதை நீங்கள் கேட்டீர்களா? நீங்களும் இதையே விரும்புகிறீர்கள். உங்களின் இதயபூர்வமான உரையாடல்களில் பாப்தாதா பல மிக இனிமையான விடயங்களைக் கேட்கிறார். நீங்கள் மிகுந்த உற்சாகத்துடன் மிக நல்ல விடயங்களைக் கூறுகிறீர்கள்: ‘நாங்கள் இதைச் செய்து காட்டுவோம், நாங்கள் இதைச் செய்வோம், இது நடக்கவே வேண்டும்!’ உங்களிடம் அதிகளவு உற்சாகம் நிறைந்த எண்ணங்கள் காணப்படுகின்றன. ஆனால், அவற்றைப் பயிற்சியில் போடும் வேளையில், சிலது மட்டுமே நடைமுறை வடிவில் போடப்படுகின்றன! இல்லாவிட்டால், சேவைக்காக நீங்கள் செய்த வெவ்வேறு திட்டங்கள் அனைத்தையும் பாப்தாதா விரும்புகிறார். எங்கும் மிக நல்ல நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. நீங்கள் வார்த்தைகளாலும் வெவ்வேறு வழிமுறைகள் அனைத்தாலும் எதைச் செய்தாலும் அவற்றில் நீங்கள் வெற்றி பெறுகிறீர்கள். பாப்தாதாவும் மகிழ்ச்சி அடைகிறார். இப்போது, நீங்கள் சேர்க்க வேண்டிய ஒரேயொரு விடயம், உங்களின் மனதால் ஆத்மாக்கள் பலருக்கும் சந்தோஷக் கதிர்கள், அமைதிக்கதிர்கள், சுகக் கதிர்கள், அன்புக்கதிர்களை வழங்குவதே ஆகும். இந்தச் சேவையை ஒரே வேளையில் செய்யுங்கள். உங்களின் சொந்த சம்ஸ்காரங்களை மாற்றுவதற்கும் மற்றவர்களும் தமது சம்ஸ்காரங்களை மாற்றுவதற்கு உதவுவதிலும் உங்களில் பலர் அதிகளவு நேரத்தைச் செலவிடுகிறீர்கள். இப்போது உங்களின் மனங்களால் சேவை செய்வதன் மூலம் ஆத்மாக்களுக்கு வெவ்வேறு கதிர்களை வழங்குவதில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் மேற்கொண்டு முன்னேறும்போது, இதற்கான தேவை அதிகளவில் காணப்படும். தொடர்ந்து இதில் கவனம் செலுத்துங்கள். இந்தச் சேவையைச் செய்கிறீர்கள் என்று நினைக்கும் குழந்தைகள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! அச்சா. ஏற்கனவே இதைச் செய்பவர்களுக்குப் பாராட்டுக்கள். இதைச் செய்யாதவர்கள், இதைச் செய்ய வேண்டும். ஏனென்றால், நீங்கள் மேற்கொண்டு முன்னேறும்போது, சூழ்நிலைகள் எத்தகையதாக இருக்கும் என்றால், பேசுபவர்களும் அவற்றைக் கேட்பவர்களும் ஒன்றாகச் சேர்வது கடினமானதாக இருக்கும். ஆகவே, இப்பொழுதில் இருந்தே எந்தளவிற்கு முடியுமோ, அந்தளவிற்கு இரண்டு வகையான சேவைகளையும் செய்யும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்களின் மனம் மும்முரமாக இருக்குமாயின், அதற்கு மன்மனாபவ ஆகுவது இலகுவாக இருக்கும். உங்களின் மனம் மும்முரமாக இருக்கும்போது, உங்களின் சம்ஸ்காரங்கள் மற்றும் சுபாவத்தை இலகுவாக மாற்றுவதற்கான உதவியை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்.
இன்று, இது குறிப்பாக இரட்டை வெளிநாட்டவர்களின் சந்திக்கும் நாள் ஆகும். பாப்தாதா களிப்படைகிறார்: ‘ஆஹா இரட்டை வெளிநாட்டவர்களே! ஆஹா!’ இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகளான நீங்கள் சென்ற கல்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, உலகின் வெவ்வேறு மூலைகளிலும் மறைந்து உள்ளவர்களுக்குக் கருவிகளாகவும் உலக சேவைக்குக் கருவிகளாகவும் இருப்பதை இட்டு பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். நீங்கள் இன்னமும் சென்று அடையாத பிரதேசங்கள், கிராமங்கள், நகரங்களுக்குச் செல்வதற்கான திட்டங்களை நீங்கள் அனைவரும் செய்கிறீர்கள் என்பதை பாப்தாதா கேள்விப்பட்டார். அதற்காகப் பாராட்டுக்கள்! பாராட்டுக்கள்! இல்லாவிட்டால், நிறைவு ஏற்பட்டு சூழ்நிலைகள் மாறும்போது, பாரதத்திலோ அல்லது வெளிநாடுகளிலோ உள்ள நீங்கள் அனைவரும் பல, பல, பல முறைப்பாடுகளைப் பெறுவீர்கள்: ‘எமது தந்தை வந்தார், நீங்கள் எங்களுக்குச் சொல்லவே இல்லை! குறைந்தபட்சம், நீங்கள் எங்களுக்கு அந்த செய்தியையாவது கொடுத்திருக்கலாமே!’ நீங்கள் பல முறைப்பாடுகளைப் பெறுவீர்கள். இதனாலேயே, நீங்கள் இப்போது அதைச் செய்கிறீர்கள். எந்தவொரு மூலைமுடுக்கும் விடுபடக் கூடாது என்பதை உறுதிப்படுத்துவதற்கு நீங்கள் மேலும் முயற்சி செய்ய வேண்டும். இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகளும் இந்தத் தேசத்திலுள்ள குழந்தைகளும் இருவருமே செய்யும் முயற்சிகளைப் பார்த்து பாப்தாதா களிப்படைகிறார். அவர் மிக்க, மிக்க மகிழ்ச்சி அடைகிறார். ஏன்? ஏன் அவர் மகிழ்ச்சி அடைகிறார்? நீங்கள் இப்போது இந்தத் தேசத்திலும் வெளிநாடுகளிலும் திட்டங்களைச் செய்கிறீர்கள். அதனால் பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். எந்த வழிமுறையிலாவது இந்தச் செய்தி அனைவரையும் சென்று அடைய வேண்டும். உண்மையில், இந்த விஞ்ஞானம் இந்த வேளையில் உங்கள் அனைவருக்கும் மிகவும் உதவியாக உள்ளது. நாளுக்கு நாள், மேலும் மேலும் புதிய வசதிகள் தொடர்ந்து வெளிப்படுகின்றன. எனவே, தடைகளில் இருந்து விடுபட்டு, தொடர்ந்து அவற்றைப் பயன்படுத்துங்கள். எங்கே நீங்கள் சேவையை அதிகரிப்பதற்காக மீட்டிங் வைத்தாலும் பாப்தாதா அவற்றைப் பற்றி அறிவதுடன், குழந்தைகளின் புத்திகள் இப்போது சேவை செய்வதற்காக வழிமுறைகளைப் பயன்படுத்துவதில் சகல துறைகளிலும் செயல்படுவதை இட்டும் களிப்படைகிறார். நீங்கள் என்ன திட்டங்களைச் செய்தாலும் பாப்தாதா அவற்றைப் பற்றி அறிகிறார், ஏனென்றால் அவர் எங்கும் சுற்றுலா செல்கிறார். நீங்கள் எங்கே மீட்டிங் வைத்தாலும் டெல்லியிலோ, இந்தத் தேசத்திலோ வேறு எந்த நகரத்திலோ அல்லது வெளிநாடுகளிலோ எங்கே நீங்கள் மீட்டிங் வைத்தாலும் பாப்தாதா அனைத்தையும் பற்றி அறிந்து கொள்கிறார். பாப்தாதாவிடம் இன்னமும் அவரின் வசதிகள் அனைத்தும் உள்ளன. வெவ்வேறு வெளிநாடுகளில் இருந்து இதற்காக வந்திருக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் பாப்தாதா எதை வழங்குகிறார்? அவர் அதிக, அதிக அன்பை வழங்குகிறார். இப்போது, நீங்கள் அதில் சிறிது அதிக தீவிரத்தன்மையை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும். தொடர்ந்து புதிய விடயங்களுடன் திட்டங்களை நடைமுறைப்படுத்துங்கள். உங்களின் யக்யம் ஸ்தாபனை செய்யப்படுவதற்கு ஒரு சில வருடங்களுக்கு முன்னர் எப்படி சகல கண்டுபிடிப்புகளும் வெளிப்பட்டன எனப் பாருங்கள். உங்களின் சேவையில் விஞ்ஞானமும் உங்களுக்கு உதவி செய்கிறது. அதிகளவு நன்மையைப் பெற்றுக் கொள்ளுங்கள். அது உங்களுக்காகவே வெளிப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் எத்தனை புதிய கண்டுபிடிப்புகள் தோன்றுகின்றன எனப் பாருங்கள். இந்த நாடகம் உங்களுக்கு உதவி செய்கிறது. வசதிகளும் உங்களுக்குத் தமது ஒத்துழைப்பை வழங்குகின்றன. அச்சா.
நீங்கள் அனைவரும் எப்போதும் சந்தோஷமாக இருக்கிறீர்களா? நீங்கள் சதா சந்தோஷமாக இருக்கிறீர்களா? சதா சந்தோஷமாக இருப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! சதா சந்தோஷமா? ஏதாவது சூழ்நிலை வந்தாலும் நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா? சூழ்நிலைகள் வரும். எனவே, அப்போதும் நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா? நீங்கள் அவ்வாறு இருக்கிறீர்களா? அப்படியாயின் உங்களின் கைகளை உயரே உயர்த்துங்கள்! நீங்கள் இதை வரவேற்கிறீர்கள், அல்லவா? நீங்கள் பயப்படுவதில்லை, நீங்கள் அவற்றை வரவேற்கிறீர்கள். அவை உங்களை அனுபவசாலிகள் ஆக்குகின்றன. இந்தத் தடைகள் உங்களின் அனுபவ அதிகாரத்தை அதிகரிக்கின்றன. ‘மாயை வந்துவிட்டாள், மாயை வந்துவிட்டாள்!’ எனக் கூறாதீர்கள். அது ஒரு பரீட்சைத்தாள் மட்டுமே. இது மாயை, இது மாயை எனக் கூறுவதன் மூலம், நீங்கள் மாயையை முன்னே வரச் செய்கிறீர்கள். இது ஒரு பரீட்சைத்தாள் மட்டுமே. உங்களுக்கு இப்போது மாயையைப் பற்றித் தெரியும். நீங்கள் அவளைப் பல வருடங்களாக அறிவீர்கள். மாயை என்றால் என்ன? அதனால் மாயையை இட்டுப் பயப்படாதீர்கள். அதை ஒரு பரீட்சைத்தாளாகக் கருதி, அந்தப் பரீட்சையை சந்தோஷமாகச் செய்யுங்கள். உங்களின் அனுபவம் என்ற வகுப்பில் முன்னேறுங்கள். இந்த வகுப்பில் நீங்கள் முன்னேற வேண்டும். ‘நான் என்ன செய்வது? எப்படி நான் இதைச் செய்வது? என்ன? ஏன்?’ என்று குழப்பம் அடையக் கூடாது. இந்தக் கேள்விகளை நினைப்பது பிராமணர்களின் கடமை அல்ல. நீங்கள் திரிகாலதரிசிகள். ஆதனால் உங்களால் ‘என்ன? ஏன்? எப்படி?’ போன்ற கேள்விகளைக் கொண்டிருக்க முடியாது. பரீட்சை வந்தது, உங்களின் அனுபவம் என்ற வகுப்பில் நீங்கள் முன்னேறிச் சென்றீர்கள். நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்கள். நீங்கள் அனுபவசாலிகள் ஆகியுள்ளீர்கள், தொடர்ந்தும் அப்படியே ஆகுவீர்கள். அச்சா.
பாப்தாதாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த கடிதங்கள், தொலைபேசி அழைப்புக்கள், அன்பும் நினைவிற்குமான செய்திகள் அனைத்தும் - உங்களின் மனங்களில் உங்களுக்குள் இருந்த அன்பும் நினைவுகளும் சேவைச் செய்திகள் அல்லது முயற்சிகளின் செய்திகள் எதுவாக இருந்தாலும் - பாப்தாதா குழந்தைகளான உங்கள் அனைவரையும் தனது கண்களிலும் தனது மனதிலும் இருத்தி, உங்களுக்கு சந்தோஷம், அமைதி, சுகக் கதிர்களை வழங்குகிறார். உங்களில் சிலர் இவற்றை பாபாவிற்கு அனுப்பி வைக்காமல் இருந்தாலும் உங்களின் இதயங்களில் இந்த எண்ணத்தைக் கொண்டிருந்தாலும் அந்த எண்ணமும் தந்தையை வந்து அடைந்துள்ளன.
எங்கும் உள்ள தைரியத்தைப் பேணி தந்தையின் உதவியைப் பெற்றுக் கொள்ளும் குழந்தைகளான உங்கள் அனைவருக்கும் பாப்தாதா இனிமையிலும் இனிமையான குழந்தைகளான உங்களுக்கு அன்பையும் நினைவுகளையும் வழங்குகிறார். இந்த வருடம், உங்களுக்காகவும் நிலையத்திற்காகவும் உலகிலுள்ள ஆத்மாக்களுக்காகவும் ஏதாவதொரு திட்டத்தைச் செய்யுங்கள். அதன் மூலம் ஆத்மாக்கள் அனைவரும் சக்தியையும் சேவையின் பலனையும் பெற வேண்டும். எங்கும் உள்ள குழந்தைகளான கொள்ளுங்கள். ஓம் சாந்தி.
ஆசீர்வாதம்:
நீங்கள் எளிமையாகவும் ஒரு மாதிரியாகவும் ஆகி, உங்களின் எளிமையின் மூலம் உங்களின் மகத்துவத்தை வெளிப்படுத்துவீர்களாக.ஏதாவது ஒன்று எளிமையாகவும் சுத்தமாகவும் இருக்கும்போது அது நிச்சயமாக உங்களைக் கவரும். அதேபோல், உங்களின் மனதிலுள்ள எண்ணங்கள், உங்களின் உறவுமுறைகள், உங்களின் தொடர்புகள், உங்களின் வாழ்கின்ற வழிமுறை என்பவற்றைப் பொறுத்தவரை, நீங்கள் எளிமையாகவும் சுத்தமாகவும் இருந்தால், நீங்கள் ஒரு மாதிரியாகி, தானாகவே மற்றவர்களை உங்களை நோக்கிக் கவருவீர்கள். எளிமை என்றால் சாதாரணத்தன்மை என்று அர்த்தம். மகத்துவம், சாதாரணத்தன்மையின் ஊடாக வெளிப்படுத்தப்படுகிறது. சாதாரணம் இல்லாமல், அதாவது, எளிமையாக இல்லாமல் இருப்பவர்கள் ஒரு பிரச்சனை ஆகுகிறார்கள்.
சுலோகம்:
உங்களின் இதயபூர்வமாக ‘எனது பாபா’ என்று நீங்கள் கூறும்போது, மாயையால் மூடப்பட்ட உங்களின் கண்கள், உங்களை மயக்கம் அடையச் செய்த கண்கள் திறந்து கொள்ளும்.அவ்யக்த சமிக்கை: சதா முகமலர்ச்சியுடன் இருப்பதற்கு, இலகு சுபாவத்தைக் கொண்டவராகவும் சகித்துக் கொள்பவராகவும் ஆகுங்கள்.
ஒரு நிமிடம், சத்தத்திற்குள் வாருங்கள். அடுத்த நிமிடம், சத்தத்திற்கு அப்பால் செல்லுங்கள். எந்தளவிற்கு இந்தப் பயிற்சி எளிமையாகவும் இலேசாகவும் ஆகுகிறதோ, அந்தளவிற்கு நீங்கள் முழுமைக்கு நெருக்கமாகத் தோற்றம் அளிப்பீர்கள். முழுமை ஸ்திதியின் அடையாளம், உங்களின் முயற்சிகள் இலகுவாகவும் எளிமையாகவும் இருப்பதாகும். நினைவு யாத்திரையும் சேவையும் இரண்டும் இலகுவான முயற்சிகளில் அடங்கியுள்ளன. நீங்கள் எளிமையையும் இலகுவான தன்மையையும் இரண்டையும் அனுபவம் செய்யும்போது, நீங்கள் உங்களின் முழுமை ஸ்திதியை அடையப் போகின்றீர்கள் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.