14.08.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே ஒவ்வொரு நாளும் உங்களை வினவுங்கள்: இந்த ஆத்மாவாகிய நான் எந்தளவிற்குத் தூய்மையாகி உள்ளேன்? நீங்கள் எந்தளவிற்கு தூய்மை ஆகுகின்றீர்களோ அந்தளவிற்கு நீங்கள் சந்தோஷத்தை உணருவதுடன் சேவை செய்வதற்கான உற்சாகத்தையும் கொண்டிருப்பீர்கள்.

கேள்வி:
வைரத்தைப் போன்று மேன்மையானவர்கள் ஆகுவதற்கு நீங்கள் எந்த முயற்சியைச் செய்தாக வேண்டும்?

பதில்:
ஆத்ம உணர்வுடையவர் ஆகுங்கள்! உங்கள் சரீரத்தின் மீது சிறிதளவேனும் பற்று இருக்கக் கூடாது. கவலைகள் அனைத்தில் இருந்தும் அப்பாற்பட்டு இருப்பதுடன் ஒரேயொரு பாபாவின் நினைவில் மாத்திரம் நிலைத்திருங்கள். இந்த மேன்மையான முயற்சி உங்களை வைரம் போன்று ஆக்குகின்றது. சரீர உணர்வு இருக்குமானால் உங்களின் ஸ்திதி பலவீனமாக உள்ளது என்பதையும் நீங்கள் பாபாவிடம் இருந்து விலகியுள்ளீர்கள் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் சரீரத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இந்தச் சரீரத்தில் இருந்தவாறே நீங்கள் உங்களது கர்மாதீத ஸ்திதியை அடைய வேண்டும்.

பாடல்:
உங்களது இதயக் கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பாருங்கள்!

ஓம் சாந்தி.
தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: யோக சக்தி மூலம் தங்களது பாவங்களை அழிப்பவர்களின் சந்தோஷப் பாதரசம் அதிகரிக்கிறது. குழந்தைகளாகிய உங்களால் உங்களது சொந்த ஸ்திதியை அறிய முடியும். உங்கள் ஸ்திதி நன்றாக இருக்கும் போது சேவை செய்வதில் நீங்கள் அதிகளவு ஆர்வத்தைக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் தூய்மையாகும் அளவிற்கு ஏனையவர்களையும் தூய்மையாக்கி யோகி ஆகுவதற்கான அதிகளவு உற்சாகத்தையும் நீங்கள் கொண்டிருப்பீர்கள். ஏனெனில் நீங்கள் இராஜ யோகிகளும் இராஜ ரிஷிகளும் ஆவீர்கள். ஹத்த யோகி ரிஷிகள் பஞ்சதத்துவங்களைக் கடவுள் எனக் கருதுகின்றனர். இராஜ யோகி ரிஷிகள் கடவுளை தங்கள் தந்தையாகக் கருதுகின்றனர். பஞ்சதத்துவங்களை நினைவு செய்வதன் மூலம் அவர்களது பாவங்கள் அழிக்கப்பட மாட்டாது. பஞ்ச தத்துவங்களுடன் யோகம் செய்வதன் மூலம் அவர்கள் சக்தியைப் பெற மாட்டார்கள். எந்த சமயத்தைச் சார்ந்த எவருமே யோகத்தைப் பற்றி அறிய மாட்டார்கள். இதனாலேயே அவர்கள் எவராலும் உண்மையான யோகிகளாகி வீடு திரும்ப முடியாது. இப்பொழுது குழந்தைகளாகிய உங்களால் உங்கள் ஸ்திதியை அறிய முடிகிறது. ஆத்மாக்களாகிய நீங்கள் எந்தளவிற்குத் தந்தையை நினைவு செய்கின்றீர்களோ அந்தளவிற்கு சந்தோஷம் இருக்கும். நீங்கள் உங்களைச் சோதித்துப் பார்க்க வேண்டும். குழந்தைகளால் ஏனையோரது ஸ்திதியையும் தமது சொந்த ஸ்திதியையும் அறிந்து கொள்ள முடியும். சரீர உணர்வு அற்றவர்களாக நீங்கள் இருக்கின்றீர்களா என உங்களை நீங்கள் முதலில் சோதித்துப் பார்க்க வேண்டும். சரீர உணர்வு இருக்குமாயின் நீங்கள் பலவீனமானவர்களாகவும் தந்தையிடம் இருந்து மிகவும் தொலைவிலும் நீங்கள் இருக்கின்றீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தந்தை உங்களுக்குக் கட்டளை இடுகின்றார்: குழந்தைகளே நீங்கள் இப்பொழுது வைரங்கள் போன்று ஆகவேண்டும். தந்தை உங்களை ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆக்குகின்றார். தந்தை எந்த சரீர உணர்வையும் கொண்டிருப்பதில்லை. குழந்தைகளே சரீர உணர்வு உடையவர்கள் ஆகுகின்றனர். தந்தையின் நினைவைக் கொண்டிருப்பதனால் நீங்கள் ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுகின்றீர்கள். தொடர்ந்தும் உங்களைச் சோதியுங்கள்: எவ்வளவு நேரம் நான் நினைவு யாத்திரையில் இருக்கிறேன்? நீங்கள் எந்தளவிற்கு பாபாவின் நினைவில் இருக்கிறீர்களோ அந்தளவிற்கு உங்களது சந்தோஷப் பாதரசம் உயர்வதுடன் உங்களையும் நீங்கள் அதிகளவில் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்கிக் கொள்கின்றீர்கள். எந்தக் குழந்தைகளாவது கர்மாதீத நிலையை அடைந்திருக்கலாம் என்று எண்ணாதீர்கள். இல்லை. ஓட்டப்பந்தயம் இன்னமும் இடம்பெறுகின்றது. ஓட்டப்பந்தயம் முடிவடைந்ததும் இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும். பின்னர் விநாசம் ஆரம்பமாகும். நீங்கள் உங்கள் கர்மாதீத நிலையை அடையும் வரை ஒத்திகைகள் இடம்பெற்றுக் கொண்டே இருக்கும். எவரைப்பற்றியும் தவறாக எம்மால் பேச முடியாது. இறுதியில் அனைவரது பெறுபேறுகளும் தெரிய வரும். இன்னமும் சொற்ப காலமே எஞ்சியுள்ளது. இந்த தாதாவும் கூறுகின்றார்: இனிய குழந்தைகளே இப்பொழுது குறுகிய காலமே எஞ்சியுள்ளது. இந்நேரத்தில் எவராலும் தமது கர்மாதீத நிலையை அடைய முடியாது. எத்தகைய நோய் போன்றனவும் கர்ம வேதனை என்றே அழைக்கப்படுகிறது. எவராலும் அந்த வேதனையைப் பற்றி அறிந்து கொள்ள முடியாது. அந்த வலி உள்ளார்ந்தமானது. எவருமே தொடர்ச்சியான ஸ்திரமான ஸ்திதியை இன்னமும் உருவாக்கவில்லை. இதனை எந்தளவிற்கு அடைய முயற்சிக்கின்றீர்களோ அந்தளவிற்குப் பாவகரமான எண்ணங்களும் புயல்களும் வரும். குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு சந்தோஷத்தை அனுபவம் செய்ய வேண்டும்! உலக அதிபதி ஆகுவது என்பது சிறிய விடயமா? செல்வந்தர்கள் அதிகளவு சந்தோஷமாக இருப்பார்கள். ஏனெனில் அவர்களிடம் பெரிய மாளிகைகள் போன்ற வீடுகளும் அனைத்து சௌகரியங்களும் உள்ளன. நீங்கள் இப்பொழுது எல்லையற்ற சந்தோஷத்தை தந்தையிடம் இருந்து பெறுகின்றீர்கள். பாபாவிடம் இருந்து உங்கள் இராச்சியத்தை நீங்கள் கோரிக் கொள்கின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்கள் தங்கள் செல்வத்தை அனுபவிப்பது போன்று அதிகளவு சந்தோஷத்தை அமைதியுடன் அனுபவம் செய்வதில்லை. சந்நியாசிகள் தங்கள் குடும்பத்தையும் வீட்டையும் துறந்து காட்டிற்குச் சென்று வாழ்கின்றனர். அவர்கள் ஒருபோதும் பணத்தை ஏற்றுக் கொள்வதில்லை. சப்பாத்திகளை மாத்திரமே ஏற்கின்றனர். அவர்கள் இப்பொழுது அதிக செல்வந்தர்கள் ஆகியுள்ளனர்! அனைவரும் பணத்தைப் பற்றியே அதிகம் கவலைப்படுகின்றனர். உண்மையில் அரசர் ஒருவர் தனது மக்கள் மீது அக்கறை செலுத்துவதனாலேயே யுத்தத்திற்கான அனைத்துப் பொருட்களையும் அவர் வைத்திருக்கிறார். சத்திய யுகத்தில் யுத்தம் என்ற கேள்விக்கே இடமில்லை. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது உங்களது சொந்த இராச்சியத்திற்குச் செல்ல உள்ளீர்கள் என்ற சந்தோஷத்தைக் கொண்டிருக்கிறீர்கள். பயம் என்ற கேள்விக்கே அங்கு இடமில்லை. வரி போன்றவற்றின் கேள்விக்கும் அங்கு இடமில்லை. இங்கேயே சரீரத்தைப் பற்றிய அக்கறை உள்ளது. நினைவு கூரப்பட்டுள்ளது: பிரபுவாகிய ஸ்வாமி உங்களைக் கவலைகளுக்கு அப்பால் எடுத்துச் சென்றார். கவலைகள் அனைத்திற்கும் அப்பால் செல்வதற்காக இப்பொழுது நீங்கள் எவ்வளவு முயற்சியைச் செய்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். பின்னர் 21 பிறவிகளுக்கு எந்தக் கவலையும் இருப்பதில்லை. பாபாவை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் ஸ்திரமாக இருப்பீர்கள். உங்களை அடிப்படையாகக் கொண்டதே இராமாயணக் கதை ஆகும். நீங்களே மகாவீரர்கள் ஆகுபவர்கள். ஆத்மா கூறுகின்றார்: இராவணனால் எங்களை அசைக்க முடியாது. இறுதியில் அதுவே உங்கள் ஸ்திதியாக இருக்கும். தற்பொழுது எவரும் தளம்பல் அடையலாம். கவலைகளும் இருக்கும். உலக யுத்தம் ஆரம்பிக்கும் போது நேரம் இப்பொழுது வந்து விட்டது என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். தந்தையை நினைவு செய்ய எந்தளவிற்கு முயற்சி செய்கின்றீர்களோ அந்தளவிற்கு நீங்கள் நன்மை அடைவீர்கள். இதுவே முயற்சி செய்வதற்கான நேரம் ஆகும். பின்னர் விநாசத்தின் குழப்பங்கள் பல இருக்கும். இப்பொழுது உங்கள் சரீரம் மீதே பற்று இருக்கிறது. பாபா தானே கூறுகிறார்: உங்கள் சரீரத்தைப் பராமரியுங்கள்! இது உங்கள் இறுதிச் சரீரமாகும். அத்துடன் இந்தச் சரீரத்தின் மூலமே நீங்கள் உங்கள் கர்மாதீத நிலையை அடைவதற்கான முயற்சியையும் செய்ய வேண்டும். நீங்கள் வாழும் வரை தந்தையைத் தொடர்ந்தும் நினைவு செய்தே ஆக வேண்டும். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே நீங்கள் நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பீர்களாக! எந்தளவிற்கு நீண்ட காலம் வாழுகின்றீர்களோ அந்தவிற்கு நீங்கள் அதிகமாக தந்தையை நினைவு செய்வதுடன் அதி மேன்மையான ஆஸ்தியையும் நீங்கள் கோரிக் கொள்வீர்கள். நீங்கள் இப்பொழுது தொடர்ந்தும் வருமானத்தைச் சம்பாதிக்கிறீர்கள். உங்கள் சரீரத்தை ஆரோக்கியமானதாகவும் நோயற்றதாகவும் வைத்திருங்கள். இதனையிட்டு கவனயீனமாக இருக்க வேண்டாம். உங்களது உணவையும் பானத்தையும் இட்டு முன்னெச்சரிக்கையாக இருந்தீர்களே ஆனால் எதுவும் இடம்பெற மாட்டாது. உங்கள் நடத்தையை தொடர்ச்சியானது ஆக்கும்போது (அனைத்திலும் ஒழுங்குமுறை) உங்கள் சரீரம் ஆரோக்கியமானதாக இருக்கும். அது விலைமதிப்பற்ற சரீரமாகும். அந்தச் சரீரத்துடன் முயற்சி செய்தே நீங்கள் தேவர்கள் ஆகுகின்றீர்கள். ஆகவே இந்த நேரத்தையிட்டே மகத்துவம் இருக்கிறது. நீங்கள் இந்த சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். தந்தையையும் ஆஸ்தியையும் அதிகமாக நினைவு செய்யும் அளவிற்கு நாராயணன் ஆகுகின்ற போதை இருக்கும். தந்தையை நினைவு செய்வதன் மூலம் மாத்திரமே உங்களால் உயர்ந்த அந்தஸ்தைக் கோரிக் கொள்ள முடியும். எந்தளவு சந்தோஷத்தையும் போதையையும் நீங்கள் பேணுகிறீர்கள் என சோதித்துப் பாருங்கள். ஏழைகள் அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். செல்வந்தர்கள் தமது செல்வத்தையிட்டுக் கவலைப்படுகிறார்கள். குமாரிகள் தங்களுக்கு இடையில் எந்தக் கவலையையும் கொண்டிருப்பதில்லை. ஆம் எவரதும் நண்பர்கள் அல்லது உறவினர்கள் ஏழைகளாக இருப்பின் அவர்களைப் பராமரிக்க வேண்டும். தொடர்ந்து அனைவரையும் விழித்தெழச் செய்யுங்கள். அவர்கள் விழித்தெழா விட்டால் தொடர்ந்தும் எத்தனை நாட்கள் அவர்களுக்கு உதவி செய்யப் போகிறீர்கள்? பாபா கூறுகிறார்: நீங்கள் முதலில் சேவையாளராகி உங்கள் மனைவியையும் ஆன்மீக சேவையில் ஈடுபட அனுமதியுங்கள். நீங்கள் பாபாவின் உதவியாளர்கள். அனைவருக்கும் உதவி தேவைப்படுகிறது. தந்தையால் தனித்து என்ன செய்யமுடியும்? அவரால் தனித்து எத்தனை பேருக்கு மந்திரத்தைக் கொடுக்க முடியும்? நான் உங்களுக்கு மந்திரத்தைக் கொடுக்கிறேன், பின்னர் நீங்கள் அதை அனைவருக்கும் கொடுக்க வேண்டும். தொடர்ந்தும் நாற்றை நாட்டுங்கள். அவர் தொடர்ந்தும் குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகிறார்: முடிந்தளவு தொடர்ந்தும் உதவியாளராகி மந்திரத்தைக் கொடுங்கள். மக்களுக்குக் கூறுங்கள்: தந்தை வந்திருக்கிறார் என்ற செய்தி அனைவருக்கும் கொடுக்கப்பட்டிருப்பதாக உங்கள் சமய நூல்களில் கூறப்பட்டுள்ளது. ஆகவே உங்கள் ஆஸ்தியைக் கோரிக் கொள்வதற்காக அவரை நினைவு செய்யுங்கள். சரீரதாரிகளை நினைவு செய்யாதீர்கள்! உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி தந்தையை நினைவு செய்வீர்களாயின் உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு நீங்கள் உங்கள் ஆஸ்தியைக் கோரிக் கொள்வீர்கள். பலர் கீதையை செவிமடுப்பதுடன் உபதேசமும் செய்கின்றனர். அதிலுள்ள பிரபல்யமான வார்த்தை ‘மன்மனாபவ’. தந்தையை நினைவு செய்தால்இ நீங்கள் முக்தி அடைவீர்கள். சந்நியாசிகளும் இதை விரும்புகின்றனர். ‘மத்தியாஜிபவ’ என்றால் ஜீவன் முக்தியாகும். குழந்தைகளாகிய நீங்கள் தந்தைக்குச் சொந்தமானவர்கள் ஆகியதும் அவர் கூறுகின்றார்: குழந்தைகளே ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மை அற்றவர்கள் ஆகியுள்ளீர்கள். தூய்மை அற்றவர்களாக இருக்கும் போது உங்களால் வீடு திரும்ப முடியாது. இது புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். பாரத மக்களாகிய நீங்கள் சதோப்பிரதானாக இருந்தீர்கள். நீங்கள் தமோப்பிரதான் ஆகியுள்ளீர்கள், இப்பொழுது மீண்டும் நீங்கள் சதோப்பிரதான் ஆக வேண்டும். ஆகவே தந்தை கூறுகிறார்: முயற்சி செய்யுங்கள், நீங்கள் மேன்மையான அந்தஸ்தைப் பெற்றுக் கொள்வீர்கள். பிறவி பிறவியாக நீங்கள் பக்தி செய்துள்ளீர்கள். முதலில் கலப்படமற்ற பக்தியே இருந்தது என்பது உங்களுக்குத் தெரியும். பக்தி இப்பொழுது மிகவும் கலப்படமாகி உள்ளது! அவர்கள் சரீரத்தையுமே வழிபடுகின்றர்கள், அதாவது பஞ்ச தத்தவங்களை வழிபடுகின்றனர். தேவர்கள் தூய்மையாகவேனும் உள்ளனர். எவ்வாறாயினும் இந்நேரத்தில் அனைத்தும் தமோப்பிரதான் ஆகும். ஆகவே வழிபாடும் தொடர்ந்தும் தமோபிரதான் ஆகுகின்றது. நீங்கள் இப்பொழுது தந்தையை நினைவு செய்ய வேண்டும். நீங்கள் பக்திமார்க்கத்து வார்த்தைகளைப் பேசக் கூடாது. “ஓ ராமா” (ஓ கடவுளே) எனக் கூறுவதும் பக்தியின் வெளிப்பாடே ஆகும். நீங்கள் இவ்வாறு அழைக்கக்கூடாது. இங்கு எதைப்பற்றியும் கூறவேண்டிய அவசியமில்லை. நீங்கள் “ஓம் சாந்தி” என்றும் மீண்டும் மீண்டும் கூறக் கூடாது. ஆத்மாவாகிய நான் ஒரு அமைதி சொரூபம் என்பதே சாந்தி என்பதன் அர்த்தமாகும். எவ்வாறாயினும் ஆத்மாக்கள் அத்தகையவர்களே! அதைக் கூற வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் “ஓம் சாந்தி” என ஏனையவர்களுக்குக் கூறினால் அவர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் “ஓம்” என்ற வார்த்தையின் புகழை அதிகளவு பாடுகின்றனர். நீங்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டிருப்பதால் “ஓம்சாந்தி” எனத் தொடர்ந்து கூறுவது பயனற்றதாகும். ஆம் நீங்கள் ஒருவரை ஒருவர் வினவலாம்: நீங்கள் சிவபாபாவின் நினைவிலா இருக்கிறீர்கள்? நானும் புதல்வியிடம் வினவுவதுண்டு: நீங்கள் யாரை அலங்காரம் செய்கிறீர்கள்? அவள் பதிலளிப்பாள்: சிவபாபாவின் இரதத்தை. ஹுசைனின் இரதம் இருப்பது போல் இது சிவபாபாவின் இரதம் ஆகும். அவர்கள் குதிரையை அலங்காரம் செய்கின்றனர். அவர்கள் குதிரையின் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. சமயத்தை ஸ்தாபிக்க வருகின்ற சமய ஸ்தாபகர்களின் ஆத்மாக்கள் தூய்மையானவை. பழைய தூய்மையற்ற ஆத்மாக்களால் சமயத்தை ஸ்தாபிக்க முடியாது. நீங்கள் சமயத்தை ஸ்தாபிக்கவில்லை. சிவபாபா அதனை உங்கள் மூலம் செய்வதுடன் உங்களையும் தூய்மை ஆக்குகின்றார். பக்தி மார்க்கத்தில் அம்மக்கள் அதிகளவு பக்தி செய்கின்றனர். இங்கு நீங்கள் அலங்காரங்களை விரும்புவதில்லை. தந்தை மிகவும் ஆணவம் அற்றவர்! அவர் தானே கூறுகிறார்: நான் இவரது பல பிறவிகளின் இறுதிப்பிறவியில் வருகின்றேன். முதலில் சத்தியயுகத்தில் ஸ்ரீநாராயணன் இருப்பார். ஸ்ரீ இலக்ஷ்மிக்கு முன்னரே ஸ்ரீ நாராயணன் வருகின்றார். அவர் வயது கூடியவர். இதனாலேயே ஸ்ரீகிருஷ்ணரின் பெயர் புகழப்படுகிறது. மக்கள் ஸ்ரீநாராயணனைவிட ஸ்ரீகிருஷ்ணரையே அதிகளவில் புகழ்கின்றனர். அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் பிறந்த தினத்தையும் கொண்டாடுகின்றனர். அவர்கள் ஸ்ரீநாராயணனது பிறந்த தினத்தைக் கொண்டாடுவதில்லை. ஸ்ரீகிருஷ்ணரே ஸ்ரீநாராயணன் ஆகுகின்றார் என்பது எவருக்கும் தெரியாது. குழந்தைப்பருவப் பெயர் தொடர்கிறது. இன்னார் பிறந்தார்கள், எனவே அவர்கள் அவரின் பிறந்த தினத்தைக் கொண்டாடுகின்றனர். இதனாலேயே அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் பிறந்த தினத்தையும் கொண்டாடுகின்றனர். எவருக்கும் ஸ்ரீநாராயணனது பிறந்த தினத்தைப் பற்றித் தெரியாது. முதலில் சிவனது பிறந்த தினமும் பின்னர் ஸ்ரீகிருஷ்ணரது பிறந்த தினமும் அதன் பின் ராமரது பிறந்த தினம் போன்றவையும் உள்ளன. சிவனுடன் கீதையின் பிறப்பும் இருக்கிறது. சிவபாபா இவரின் பல பிறவிகளின் இறுதியிலேயே வருகின்றார். அவர் முதிர்ந்த அனுபவம் வாய்ந்த சரீரத்தில் மாத்திரமே பிரவேசிக்கின்றார். அனைத்தும் மிகத் தெளிவாக விளங்கப்படுத்தப்பட்ட போதிலும் எதுவுமே எவரது புத்தியிலும் பதிவதில்லை. தந்தை கூறுகிறார்: இந்த ஞானம் மறைந்து விடுகிறது. நான் வந்து இந்த ஞானத்தை உங்களுக்கு கொடுக்கும் போது மாத்திரமே உங்களால் அதனைக் கூறமுடிகிறது. எதிர்காலத்தில் மிகச்சரியாக இவ்வாறு (தேவர்கள்) நீங்கள் ஆகுவீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது தெரியும். பாபா இரண்டு, மூன்று வகையான காட்சிகளைக் கண்டார். ‘நான் இவ்வாறு ஆகுவேன். அதாவது நான் கிரீடம் அணிந்தவன் ஆகுவேன். நான் தலைப்பாகை அணிந்தவன் ஆகுவேன்’. அவர் இரண்டு முதல் நான்கு பிறவிகளுக்கு உரிய இராச்சியங்களின் காட்சிகளைக் கண்டார். உங்களால் இப்பொழுது இவ்விடயங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. உலகிலுள்ள வேறு எவராலும் இவ்விடயங்களைப் புரிந்து கொள்ள முடியாது. ஆம், அவர்கள் தாம் சிறந்த செயல்களைப் புரிந்தால் சிறந்த பிறவியைப் பெற முடியும் என்பதை விளங்கிக் கொள்கின்றனர். நீங்கள் எதிர்காலத்தில் சாதாரண மனிதரிலிருந்து நாராயணன் ஆகுவதற்கான முயற்சியை இப்பொழுது செய்கின்றீர்கள். நீங்கள் இந்த அந்தஸ்தைக் கோரிக் கொள்வீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். தங்கள் கர்மாதீத நிலையை அடைவதற்கு தொடர்ந்தும் முயற்சி செய்பவர்கள், அதிகளவு சந்தாஷத்தை அனுபவம் செய்வார்கள். நீங்கள் கூறுகிறீர்கள்: பாபா நாங்கள் பாபாவையும் மம்மாவையும் மாத்திரமே பின்பற்றுவோம். அப்பொழுதே எங்களால் சிம்மாசனத்தில் அமர முடியும். நீங்கள் எவ்வளவு சேவை செய்கிறீர்கள் எனவும் எவ்வளவு சந்தோஷத்தைப் பேணுகிறீர்கள் என்பதுவும் உங்களுக்குப் புரிந்திருக்க வேண்டும். நீங்கள் சந்தோஷமாக இருக்கும் போது உங்களால் ஏனையோரையும் சந்தோஷமானவர்கள் ஆக்க முடியும். உங்களுக்குள் ஏதும் தீயவை இருந்தால் உங்களது மனச்சாட்சி தொடர்ந்தும் உறுத்தும். சிலர் பாபாவிடம் வந்து தமக்குள் அதிகளவு கோபம் உள்ளது எனக் கூறுகின்றனர். “எனக்குள் இந்தத் தீய ஆவி உள்ளது”. இது கவனம் செலுத்த வேண்டிய விடயமாகும். நீங்கள் எந்தத் தீய ஆவியும் இருப்பதற்கு அனுமதிக்கக் கூடாது. ஏன் நீங்கள் கோபமடைய வேண்டும்? அன்புடன் விளங்கப்படுத்துங்கள். பாபா எவருடனும் கோபப்படுவதில்லை. சிவபாபாவின் புகழ் உள்ளது. பலர் பயனற்ற பொய்யான புகழைப் பாடுகின்றனர். ‘நான் என்ன செய்வது?’ எனக்கு கூறப்பட்டது: வந்து தூய்மை அற்றவர்களைத் தூய்மையாக்குங்கள்! அதாவது ஒரு வைத்தியரிடம் வந்து ஒருவரது நோயை அகற்றுமாறு கூறப்படுவது போல் என்னிடமும் கூறப்பட்டுள்ளது. அவர் மருந்தையோ அல்லது ஊசியையோ கொடுக்கிறார். ஏனெனில் அது அவரது பணியாகும். அது பெரிய விடயமல்ல. அவர்கள் சேவை செய்வதற்காக கற்கின்றனர். அவர்களால் அதிகளவு கற்க முடிந்தால் அதிகளவில் சம்பாதிக்கவும் முடியும். தந்தைக்கு வருமானத்தை சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் உங்களை வருமானம் சம்பாதிப்பதற்காக தூண்டுகிறார். பாபா கூறுகிறார்: நீங்கள் என்னை அநாதியான சத்திரசிகிச்சை நிபுணர் எனவும் அழைக்கிறீர்கள். நீங்கள் எனக்கு அதி சிறந்த புகழை வழங்கி உள்ளீர்கள். தூய்மையாக்குபவரால் அவர்கள் கூறுவது போல் சத்திரசிகிச்சை நிபுணராக முடியாது. இது எனக்குக் கொடுக்கப்பட்ட புகழ் மாத்திரமே ஆகும். தந்தை கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும்! அவ்வளவுதான்! இதை உங்களுக்கு விளங்கப்படுத்துவதே எனது பாகம்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். எந்தளவிற்கு அதிகமாக என்னை நினைவு செய்கிறீர்களோ, அந்தளவிற்கு உயர்ந்த அந்தஸ்தை நீங்கள் கோரிக் கொள்வீர்கள். இதுவே இராஜயோக ஞானம் ஆகும். கீதையை கற்றவர்களுக்கு இதை விளங்கப்படுத்துவது இலகுவாக இருக்கும். நீங்கள் பூஜிக்கத்தகுதி வாய்ந்த அரசர்களுக்கெல்லாம் அரசர்கள் ஆகுகின்றீர்கள். பின்னர் நீங்கள் பூஜிப்பவர்கள் ஆகுவீர்கள். நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் உலகைத் தூய்மை ஆக்குகின்றீர்கள். அந்தஸ்து மிக உயர்ந்தது! நீங்கள் அனைவரும் கலியுக மலையை உயர்த்துவதற்காக உங்கள் விரல்களைக் கொடுக்கின்றீர்கள். உண்மையில் ஒரு மலை இருக்கின்றது என்பதல்ல. புதிய உலகம் வர இருக்கிறது, எனவே நீங்கள் நிச்சயமாக இராஜயோகத்தைக் கற்க வேண்டும் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். தந்தை வந்து உங்களுக்கு இதைக் கற்பிக்கின்றார். சதோபிரதான் ஆகுங்கள்! முன்னைய கல்பத்திலே புரிந்து கொண்டவர்களுக்கு நீங்கள் விளங்கப்படுத்தும் போது அவர்கள் அதை விரும்புவதுடன் கூறுவார்கள்: ‘நீங்கள் சொல்வது சரியே’. உண்மையில் தந்தை கூறுகிறார்: மன்மனாபவ! இது ஒரு சமஸ்கிருத வார்த்தை ஆகும். தந்தை ஹிந்தியில் பேசுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள்! நீங்கள் மேன்மையான தர்மத்திற்கு உரியவர்கள் என்றும் உங்களது செயல்களும் மேன்மையானதாகவே இருந்தன என்பதையும் நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். இதனாலேயே புகழ் உள்ளது: 16 கலைகளும் நிறைந்தவர்கள். நீங்கள் இப்பொழுது மீண்டும் அவ்வாறு ஆக வேண்டும். நீங்கள் எந்தளவிற்கு சதோபிரதானாகவும் தூய்மையாகவும் ஆகியிருக்கிறீர்கள் எனச் சோதித்துப் பாருங்கள். நரக வாசிகளை சுவர்க்க வாசிகள் ஆக்குவதற்கு நீங்கள் எந்தளவு சேவை செய்கின்றீர்கள்? அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய் தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையைப் போன்று ஆணவமற்றவர் ஆகுங்கள். உங்கள் சரீரத்தைக் கவனிக்கும் அதேவேளை சிவபாபாவின் நினைவில் இருங்கள். இந்த ஆன்மீகச் சேவையில் தந்தையின் உதவியாளர் ஆகுங்கள்.

2. உங்களுக்குள் எவ்விதமான தீய ஆவிகளும் இருப்பதற்கு அனுமதிக்காதீர்கள். ஒருபோதும் எவருடனும் கோபப்படாதீர்கள். அனைவருடனும் மிகவும் அன்புடன் பழகுங்கள். தாயையும் தந்தையையும் பின்பற்றி சிம்மாசனத்தைக் கோரிக் கொள்ளுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஸ்வர்த் (ஸ்வ – சுயம், ரத் - இரதம்) என்ற வார்த்தையின் அர்த்தத்தை அறிந்திருப்பதன் மூலம் இலகு முயற்சியாளராகி எப்போதும் நிலையான மற்றும் ஸ்திரமான ஸ்திதியில் இருப்பீர்களாக.

தற்காலத்தில் ஒருவர் மீது ஒருவர் மக்கள் கொண்டிருக்கும் பற்றானது அன்பினால் அன்றி சுயநலத்தாலேயே உள்ளது. சுயநலத்தாலேயே பற்று ஏற்படுகிறது. அந்தப் பற்றின் காரணத்தால் அவர்களால் பற்றற்று இருக்க முடியாமல் போகிறது. ஆகவே உங்களை ஸ்வர்த் என்ற வார்த்தையின் அர்த்தத்தில் ஸ்திரமாக்கிக் கொள்ளுங்கள். அதாவது அனைத்திற்கும் முதலில் உங்களின் இரதத்தைப் பலிகொடுங்கள். ஸ்வர்த் (ஸ்வ – அர்த் - சுயத்திற்கு, ஸ்வர்த் - சுயநலம் என்ற அர்த்தமும் உள்ளது) போகும்போது நீங்கள் பற்றற்றவர் ஆகுவீர்கள். இந்த ஒரு வார்த்தையின் அர்த்தத்தை அறிந்து கொள்வதன் மூலம் நீங்கள் சதா ஒரேயொருவருக்குச் சொந்தமாக ஆகுவதுடன் நிலையாகவும் ஸ்திரமாகவும் ஆகுவீர்கள். இது இலகு முயற்சி ஆகும்.

சுலோகம்:
நீங்கள் உங்களின் தேவதை ரூபத்தில் இருக்கும்போது எந்தவொரு தடையும் உங்களின் மீது பாதிப்பை ஏற்படுத்தாது.

அவ்யக்த சமிக்ஞை: தூய்மையற்றதன் விதையை முடித்து முற்றிலும் சுத்தமானவராக (தூய்மையானவராக) ஆகுங்கள்.

சம்பூரணமான தூய்மையே பிராமணர்களான உங்களின் அலங்காரம் ஆகும். சதா அலங்கரிக்கப்பட்ட ரூபம் ஆகுங்கள். அதாவது, உங்களின் தூய ரூபத்தில் ஸ்திரமாக இருந்து இந்த எல்லையற்ற மேடையில் உங்களின் கதாநாயக பாகத்தை நடியுங்கள். சதா பிரம்மச்சாரியாக (பிரம்மச்சரியம்/ தூய்மை) இருங்கள். அதனால் எந்த வகையான தூய்மை இன்மையும் உங்களின் எண்ணங்களிலேனும் உங்களின் மனோபாவத்தைக் குழப்ப மாட்டாது. உங்களின் மனோபாவத்தில் ஏற்படும் எந்தவொரு குழப்பம் அல்லது விஷமத்தனம் உங்களின் பதிவேட்டில் ஒரு கறுப்புப் புள்ளியை ஏற்படுத்தி விடும். ஆகவே உங்களின் மனோபாவத்தில்கூட சதா பிரம்மச்சாரியாக இருங்கள்.