15.02.26 Avyakt Bapdada Tamil Lanka Murli 22.02.2009 Om Shanti Madhuban
வேகமாகச் சென்று, உங்களின் பிறப்பில் முதல் பிரிவில் வருகின்ற பரிசைக் கோருவதற்கு, உங்களின் மூச்சும் எண்ணங்களும் சக்திவாய்ந்தவையாக இருக்க வேண்டும். உங்களின் இதயம் பெரியதாகவும் உண்மையானதாகவும் இருக்க வேண்டும். அப்போது உங்களின் ஒவ்வொரு தேவையும் பூர்த்தியாகும்.
இன்று, ஸீரோ தந்தை தனது ஹீரோ குழந்தைகளைச் சந்திப்பதற்காக வந்துள்ளார். இந்தத் தினத்தில், நீங்கள் எல்லோரும் தந்தையின் பிறந்த நாளைக் கொண்டாட வந்துள்ளீர்கள். அத்துடன் நீங்களும் உங்களின் பிறந்தநாளைக் கொண்டாட வந்துள்ளீர்கள். பாப்தாதா எங்கும் உள்ள குழந்தைகளான உங்கள் எல்லோருக்கும், நீங்கள் தனிப்பட்ட முறையில் அவருக்கு முன்னால் அமர்ந்திருப்பவர்களுக்கும் அல்லது வெகு தொலைவில் இருந்தாலும் அவரின் இதயத்திற்கு நெருக்கமாக இருப்பவர்களுக்கும் சகல உறவுமுறைகளாலும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். அதில், குறிப்பாக மூன்று உறவுமுறைகளில் வாழ்த்துக்கள் உள்ளன: பாபா குறிப்பாகத் தந்தை, ஆசிரியர், சற்குருவாக எங்கும் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் பராமரிப்பு, கல்வி, ஆசீர்வாதங்களின் ரூபத்தில் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். குழந்தைகளான உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.
பக்தர்களும் இந்த விசேடமான பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்கள். ஆனால், இந்தப் பிறந்த நாள் தந்தையினதும் குழந்தைகளினதும் அழியாத அன்புப் பிறந்தநாள் என்பதைக் குழந்தைகளான நீங்கள் அறிவீர்கள். ஆரம்பத்தில் இருந்தே, தந்தையும் குழந்தைகளும் ஒன்றாகவே இருக்கிறார்கள். அத்துடன்கூடவே, உலக மாற்றம் என்ற பணியிலும் தந்தை குழந்தைகளுடன் இருக்கிறார். ஏனென்றால், தந்தைக்கும் குழந்தைகளுக்கும் இடையே அதிகளவு அன்பு உள்ளது. நீங்கள் இப்போதும் ஒன்றாக இருக்கிறீர்கள். நீங்கள் வீட்டுக்கும் ஒன்றாகவே திரும்பிச் செல்லப் போகின்றீர்கள். தந்தையால் குழந்தைகள் இல்லாமல் திரும்பிச் செல்ல முடியாது. குழந்தைகளாலும் தந்தை இல்லாமல் திரும்பிச் செல்ல முடியாது. ஏனென்றால், நீங்கள் உங்களின் இதயங்களில் உள்ள அன்பால் ஒன்றுசேர்ந்து இருக்கிறீர்கள். வீட்டுக்குச் சென்ற பின்னர், நீங்கள் உங்களின் இராச்சியத்திற்குச் செல்லும்போது, அங்கே தந்தை பிரம்மாவுடன் நீங்கள் ஆட்சி செய்வீர்கள். எனவே, உங்களின் பிறப்புகள் அனைத்திலும், இந்தப் பிறப்பே அதி அழகானதும் மிகவும் தனித்துவமானதும் ஆகும். கல்பம் முழுவதிலும் உள்ள 84 பிறவிகளிலும் வேறு எந்தப் பிறவியும் இந்தப் பிறவியைப் போன்ற அதே பெறுமதியைக் கொண்டிருக்க மாட்டாது. நீங்கள் சகவாசத்தையும் கொண்டிருக்கும் இத்தகைய அழகான பிறவியே வைரம் போன்று பெறுமதிமிக்க விசேடமான பிறப்பு ஆகும். எனவே, நீங்கள் அனைவரும் உங்களின் பிறந்த நாளையா அல்லது தந்தையின் பிறந்த நாளையா கொண்டாட வந்துள்ளீர்கள்? அல்லது, தந்தை, குழந்தைகளின் பிறந்தநாளைக் கொண்டாட வந்துள்ளாரா அல்லது குழந்தைகள், தந்தையின் பிறந்தநாளைக் கொண்டாட வந்துள்ளீர்களா? எங்கும், பக்தர்கள் சிவஜெயந்தியை அல்லது சிவராத்திரியைக் கொண்டாடுகிறார்கள். அவர்கள் மிகுந்த அன்புடன் கொண்டாடுகிறார்கள். பக்தர்களைப் பார்க்கும்போது, பாப்தாதா அவர்களின் பக்திக்கான பலனை வழங்குகிறார். எவ்வாறாயினும், அவர்கள் கொண்டாடும் முறைக்கும் நீங்கள் கொண்டாடும் முறைக்கும் இடையில் ஒரு வேறுபாடு காணப்படுகிறது. அவர்கள் இரவில் கொண்டாடுகிறார்கள். ஆனால் நீங்களோ அமிர்த வேளையில் கொண்டாடுகிறீர்கள். அமிர்த வேளையே அதிமேன்மையான நேரம் ஆகும். அமிர்த வேளையிலேயே பாப்தாதா குழந்தைகள் அனைவரின் மடிகளையும் ஆசீர்வாதங்களால் நிரப்புகிறார். உங்கள் அனைவரின் மடிகளும் ஆசீர்வாதங்களால் நிரம்பி உள்ளன, அல்லவா? ஒவ்வொரு நாளும் நீங்கள் ஆசீர்வாதங்களை அருள்பவரான தந்தையிடம் இருந்து ஆசீர்வாதத்தைப் பெறுகிறீர்கள். குழந்தைகளான நீங்கள் ஒவ்வொருவரும் பாப்தாதாவிடம் இருந்து பல ஆசீர்வாதங்களைப் பெற்றுள்ளீர்கள். உங்களின் மடி அந்த ஆசீர்வாதங்களால் நிரம்பி உள்ளதல்லவா? எனவே, நீங்கள் அனைவரும் இங்கே மிகுந்த ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் வந்துள்ளீர்கள். பாப்தாதா குழந்தைகள் அனைவரையும் பார்க்கும்போது மிக, மிக மகிழ்ச்சி அடைந்து, தொடர்ந்து இந்தப் பாடலைப் பாடுகிறார்: ஆஹா குழந்தைகளே! ஆஹா! குழந்தைகள் கூறுகிறார்கள்: ஆஹா பாபா! ஆஹா! எனவே, தந்தை கூறுகிறார்: ஆஹா குழந்தைகளே! ஆஹா! தந்தையின் குழந்தைகள் ஆகியுள்ள அனைவருமே, கோடானுகோடி ஆத்மாக்களில் ஒரு கைப்பிடி அளவினர் ஆவார்கள். உலகில் மில்லியன் கணக்கான ஆத்மாக்கள் உள்ளனர். ஆனால் நீங்களோ அந்த ஆத்மாக்களில் கைப்பிடி அளவினரான குழந்தைகள் ஆவீர்கள். உங்களையே தந்தை தனது அதிர்ஷ்டமான, அன்பான குழந்தைகள் என்று அழைக்கிறார். ஒவ்வொரு கல்பத்திலும் நீங்கள் பலமில்லியன்களில் ஒரு கைப்பிடி அளவினரான குழந்தைகள் என்ற போதை உங்களுக்கு இருக்கிறதா? தற்சமயம் இத்தகைய மகத்தான பதவிகளில் எத்தனை ஆத்மாக்கள் இருந்தாலும், தந்தையை இனங்கண்டு, அவரின் பிறந்த நாளைக் கொண்டாடும் சகல இடங்களிலும் உள்ள குழந்தைகள், கோடானு கோடிப் பேரில் கைப்பிடி அளவினர் மட்டுமே ஆவார்கள். நீங்கள் பல மில்லியன்களில் கைப்பிடி அளவினர் என்ற சந்தோஷம் உங்களுக்கு இருக்கிறதா? அந்த போதை உங்களுக்கு இருக்கிறதா? உங்களின் கைகளை உயர்த்துங்கள்! உங்களிடம் அழியாத போதை இருக்கிறதல்லவா? இது சிலவேளைகளில் மட்டும் ஏற்படுகின்ற போதை அல்ல, அப்படித்தானே? இது எப்போதும் அங்கே உள்ளது, அது எப்போதும் இருக்கும். மாயை உங்களைப் பரீட்சிக்கிறாள், நீங்கள் அதை அனுபவம் செய்கிறீர்கள்தானே? மாயைக்கும் இறைவனின் குழந்தைகளின் மீது அதிகளவு அன்பு உள்ளது. ஆனால், மாயைக்கு இறைவனின் குழந்தைகளுடன் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை ஓர் உறவுமுறை உள்ளது என்பதைக் குழந்தைகளான நீங்களும் அறிவீர்கள். மாயையும் கடவுளின் குழந்தைகளும் ஒருவரோடு ஒருவர் ஒரு தொடர்பைக் கொண்டுள்ளார்கள். மாயையின் கடமை வருவது, ஆனால் குழந்தைகளான உங்களின் கடமை என்ன? தொலைவில் இருந்தே மாயையை விரட்டி அடிப்பது. அவள் வருவதற்கு அனுமதிக்காதீர்கள்! அல்லது, அவள் வருவதற்கு நீங்கள் அனுமதிக்கிறீர்களா? இல்லை. தொலைவில் இருந்தே அவளை விரட்டி விடுங்கள்! அவள் வருவதற்கு நீங்கள் அனுமதித்தால், அவள் வருகின்ற பழக்கத்தை விருத்தி செய்து கொள்வாள். அவள் வருவதற்கு நீங்கள் அனுமதிக்கிறீர்கள் என்பதை அவள் உணர்வதால் அவள் வருகிறாள். எவ்வாறாயினும், சில குழந்தைகள் மாயை வருவதை அனுமதிப்பது மட்டுமல்ல, ஆனால் அவளுக்கு விருந்துபசாரமும் செய்கிறார்கள், அவளுக்குத் தேநீர் அல்லது கோப்பி கொடுப்பதையும் தந்தை பார்க்கிறார். நீங்கள் அவளுக்கு என்ன விருந்துபசாரம் செய்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் மாயையின் ஆதிக்கத்தின் கீழ் வந்து, ‘மிகவும் தாமதம் ஆகிவிட்டது’ என்ற பலகை இன்னமும் போடப்படவில்லை, இன்னமும் நேரம் உள்ளது என்று நினைக்கிறீர்கள். நீங்கள் முயற்சி செய்கிறீர்கள், உங்களின் இலக்கைச் சென்று அடைவீர்கள் என்று நினைக்கிறீர்கள். எனவே, மாயையும் நீங்கள் அவளை வருவதற்கு அனுமதிக்கிறீர்கள் என்று உணர்கிறாள். இரண்டாவதாக, நீங்கள் அவளுக்கு உங்களின் சகவாசத்தையும் வழங்குகிறீர்கள். நீங்கள் அவளுக்கு விருந்துபசாரம் செய்கிறீர்கள். சில குழந்தைகளால் மாயையை இனங்காண முடிகிறது. சில குழந்தைகள் மாயையை இனங்காணும் தவறைச் செய்து, அது மாயையின் வழிகாட்டல்களா அல்லது தந்தையின் வழிகாட்டல்களா என எண்ணுகிறார்கள். அவளை இனங்காண முடியாமையால், அவர்கள் மாயையின் ஆதிக்கத்தின் கீழ் வருகிறார்கள். பாப்தாதா தனது அதிர்ஷ்டகரமான, மகாவீர், வெற்றியாளர் குழந்தைகளுக்குக் கூறுகிறார்: அவள் வருவதற்கு அனுமதிக்காதீர்கள்! இப்போது, மாயை வருவதற்கு அனுமதித்துப் பின்னர் அவளை விரட்டி அடிப்பதற்காக உங்களின் நேரத்தைச் செலவழிக்காதீர்கள். ஏனென்றால், சிறிது நேரமே எஞ்சியுள்ளது. உலகை மாற்றுபவர்களாகவும் உலகச் சேவையாளர்களாகவும் ஆகுகின்ற பணியைச் செய்வதற்கும் தந்தையின் அறிமுகத்தை உலகிலுள்ள ஆத்மாக்களுக்கு வழங்குவதற்கும் அவர்களுக்கு அவர்களின் முக்திக்கான ஆஸ்தியை வழங்குவதற்கும் செய்த சத்தியம் இன்னமும் பூர்த்தியாகவில்லை. அந்தப் பணியைப் பூர்த்தி செய்வதற்கு உங்களின் நேரத்தைப் பயன்படுத்துங்கள். மாயையை விரட்டுவதில் நீங்கள் உங்களின் நேரத்தைப் பயன்படுத்தினால், உலகை மாற்றுபவர்கள் ஆகுகின்ற உங்களின் சத்தியத்தை நீங்கள் எப்படி நிறைவேற்றுவீர்கள்? நீங்கள் தந்தையின் சகபாடிகள், அப்படித்தானே? நீங்கள் பிறப்பில் இருந்தே அவருக்குச் சத்தியம் செய்துள்ளீர்கள்: நாங்கள் இப்போது உங்களுடனேயே இருப்போம், ஒன்றாகவே உங்களுடன் வீட்டுக்குத் திரும்பிச் செல்வோம். ஆகவே, நீங்கள் தந்தையிடம் இருந்து பெற்ற சக்திகளின் அடிப்படையில் தொலைவில் இருந்தே மாயையை விரட்டி விடுங்கள். அதற்காக உங்களின் நேரத்தை வீணாக்காதீர்கள். பாருங்கள், நீங்கள் 70 வருடங்களாக முயற்சி செய்து வருகிறீர்கள். மாயை வந்து, அவளை விரட்டி விடுவதற்கான நேரம் இதுவல்ல. ஏனென்றால், நீங்கள் அவளை அறிவீர்கள். நீங்கள் ஞானம் நிறைந்தவர்கள், அல்லவா? உங்களிடம் நாடகம் முழுவதன் ஞானமும் உள்ளது. ஆகவே, ஞானம் நிறைந்த குழந்தைகளே, உங்களின் நேரத்தை நீங்கள் எதற்காகப் பயன்படுத்த வேண்டும்? நீங்கள் இரண்டு பொக்கிஷங்களை அதிகளவில் சேமிக்க வேண்டும். எந்த இரண்டு பொக்கிஷங்கள்? ஒன்று, எண்ணங்களின் பொக்கிஷம், மற்றையது, காலம் என்ற பொக்கிஷம். இரண்டு பொக்கிஷங்களும் மகத்தானவை. உங்கள் அனைவருக்கும் இது தெரியும். ஏனென்றால், நீங்கள் ஞானம் நிறைந்த தந்தையின் ஞானம் நிறைந்த குழந்தைகள் ஆவீர்கள். நீங்கள் மாஸ்ரர் ஞானம் நிறைந்தவர்கள், அல்லவா? நீங்கள் நிரம்பி உள்ளீர்களா? உங்களில் சிலர் ஞானியாக இருக்கிறீர்கள், ஆனால் ஞானம் நிறைந்தவர்கள் இல்லை. நீங்கள் யார்? நீங்கள் ஞானம் நிறைந்தவர்களா? உங்களின் கைகளை உயர்த்துங்கள்! நீங்கள் ஞானம் நிறைந்தவர்களா அல்லது ஞானியா? நீங்கள் அனைவரும் ஞானம் நிறைந்தவர்களா? நீங்கள் உங்களின் கைகளை உயர்த்துகிறீர்கள். நல்லது! ஆஹா! உங்களிடம் முழுமையான ஞானம் உள்ளது. மாயையைத் துரத்துவதற்கான ஞானம் உங்களிடம் உள்ளதா? பின்னால் அமர்ந்திருப்பவர்களிடம் இது உள்ளதா? அச்சா. நீங்கள் எல்லோரும் உங்களின் கொடிகளை அசைக்கிறீர்கள். தாய்மார்களான உங்களிடம் அது உள்ளதா? தாய்மார்களான நீங்கள் ஞானம் நிறைந்தவர்களா? இரட்டை வெளிநாட்டவர்கள்? இரட்டை வெளிநாட்டவர்களும் தமது கொடிகளை அசைக்கிறார்கள். அச்சா. இந்தக் காட்சி எத்தனை அழகானது எனப் பாருங்கள். கொடிகளும் மிகவும் நன்றாக உள்ளன. எனவே, ஞானம் நிறைந்தவராக இருப்பது என்றால், தொலைவில் இருந்தே மாயையை விரட்டி விடுதல் என்று அர்த்தம். எனவே, நீங்கள் அத்தகையவர்களா? சங்கமயுகத்தின் இந்த வேளையில் மட்டுமே நீங்கள் உங்களின் பொக்கிஷங்களைச் சேமிப்பதற்கான வங்கி இருக்கும் என்று பாப்தாதா ஏற்கனவே உங்களுக்குக் கூறியுள்ளார். பின்னர், கல்பம் முழுவதும், உங்களால் சேமிக்கக்கூடிய அந்த வங்கி உங்களிடம் இருக்காது. இந்த வேளையில் நீங்கள் எவற்றை எல்லாம் சேமித்து இருக்கிறீர்களோ, அது தொடர்ந்து பயனுள்ளதாக இருக்கும். எவ்வாறாயினும், சேமிக்கக்கூடிய அந்த வங்கி இப்போது சங்கமயுகத்தில் மட்டுமே திறந்திருக்கும். ஆகவே, நீங்கள் மக்களுக்கு என்ன சொல்கிறீர்கள்? இந்த செய்தியை நீங்கள் அனைவருக்கும் கொடுக்கிறீர்கள்: ‘இப்பொழுது இல்லையேல், எப்போதும் இல்லை!’ எனவே, நீங்கள் அனைவரும் இதை நினைவு செய்கிறீர்களா? இப்பொழுது இல்லையேல், எப்போதும் இல்லை. நீங்கள் எப்போதும் இதை நினைவு செய்கிறீர்களா? சங்கமயுகத்தில் உள்ள பிறவி, அனைத்திலும் மிகக்குறுகியது. ஆனால், அதுவே விலைமதிப்பற்ற பிறவி ஆகும். இந்தப் பிறவியின் மதிப்பு, கல்பம் முழுவதும் தொடர்கிறது. எனவே, நீங்கள் எவ்வளவைச் சேமித்துள்ளீர்கள் என்பதைச் சோதித்தீர்கள்தானே? நீங்கள் விரும்பிய அளவைச் சேமிக்கிறீர்களா? இப்போது நடப்பதற்கான நேரம் முடிந்து விட்டது என்று பாப்தாதா ஏற்கனவே உங்களுக்குக் கூறியுள்ளார். இது இப்போது பறப்பதற்கான நேரம் ஆகும். முயற்சி செய்வதற்கான நேரம் முடிந்துவிட்டது, இது இப்போது தீவிர முயற்சி செய்வதற்கான நேரம். இதுவும் குறுகிய காலமே ஆகும். இதனாலேயே, பாப்தாதா இரட்டை வெளிநாட்டவர்களான உங்களுக்கு, ‘இரட்டைத் தீவிர முயற்சியாளர்கள்’ என்ற பட்டத்தை வழங்கி உள்ளார். கூறுங்கள், நீங்கள் இரட்டைத் தீவிர முயற்சியாளர்களா? உங்களின் கைகளை உயர்த்துங்கள்! இரட்டைத் தீவிர முயற்சியாளர்களே, இது உறுதியா? அச்சா. பிறந்தநாள் வாழ்த்துக்களுடன் கூடவே, பாப்தாதா உங்களைப் பாராட்டுகிறார். கோடானுகோடி மடங்கு பாராட்டுக்கள், பாராட்டுக்கள், பாராட்டுக்கள்!
சில குழந்தைகள் பாப்தாதா கொடுத்த, ‘ஓகே ஆக இருத்தல்’ என்ற வீட்டுவேலைக்குக் கவனம் செலுத்தி இருப்பதை பாப்தாதா கண்டார். ஒரு சிலர் மட்டுமே 100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்கள். பலர் 50 மதிப்பெண்களையே பெற்றுள்ளனர். எவ்வாறாயினும், பாப்தாதாவின் விருப்பம் என்னவென்றால்..... அவருக்கு என்ன வேண்டும் என்று பாபா உங்களுக்குச் சொல்லட்டுமா? பாப்தாதாவிற்கு பாபாவின் நம்பிக்கைத் தீபங்களான இருக்கும் ஒவ்வொருவரிலும் பாப்தாதாவின் நம்பிக்கைகளை நிறைவேற்றும் மகாவீர் குழந்தைகள் ஒவ்வொருவரிலும் நம்பிக்கை உள்ளது. எனவே, காலத்திற்கேற்ப, இப்பொழுதில் இருந்தே தீவிர முயற்சி என்ற அட்டவணையில் நீண்ட காலத்திற்கு நீங்கள் இதைச் சேமிக்காவிட்டால், பாப்தாதா அவ்வப்போது மூன்று கூற்றுகளை நினைவூட்டுவார்: சடுதியாக, என்றும் தயார், நீண்ட காலத்திற்கு உங்களின் கணக்கில் சேமித்தல். பாப்தாதா உங்களின் இராச்சியத்தில் இதை விரும்புகிறார்......, உங்களின் இராச்சியம் இப்போது வரப் போகின்றது என நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்கள். தற்சமயம், தந்தை வந்துவிட்டார் என்ற செய்தியை நீங்கள் வழங்குகிறீர்கள். அதேபோல், உங்களின் தெய்வீக இராச்சியம், அமைதியும் சந்தோஷமும் உள்ள இராச்சியம் வரப் போகின்றது என்ற நல்ல செய்திகளையும் நீங்கள் கொடுக்கிறீர்கள். நீங்கள் அனைவருக்கும் இந்தச் செய்தியை வழங்கும்போது, தமது கணக்கில் நீண்ட காலத்திற்குத் தீவிர முயற்சிகளைச் சேமிப்பவர்கள் மட்டுமே, முதல் பிறவியில் இருந்து 21 ஆம் பிறவி வரை இராச்சியத்திற்கான முழுமையான பாக்கியத்தின் உரிமையைப் பெறுவார்கள். ‘நீண்ட காலம்’ என்ற இந்தக் கணக்கை உங்களின் விழிப்புணர்வில் வைத்திருங்கள். ஏனென்றால், புதிய வீட்டில் மகிழ்ச்சி இருக்கும். நீங்கள் இரண்டு, மூன்று பிறப்புக்களின் பின்னால் வந்தால், கட்டடம் இரண்டு, மூன்று மாதங்கள் பழையதாக இருந்தால், நீங்கள் என்ன சொல்வீர்கள்? அதைப் புதியது என்றா அல்லது மூன்று மாதங்கள் பழையது என்றா? பாப்தாதா தனது விசேடமான அதியன்பிற்குரிய குழந்தைகள், அதி அற்புதமான குழந்தைகள், தந்தையின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் குழந்தைகள், முதல் பிறவியில் தந்தை பிரம்மாவின் சகபாடிகள் ஆகவேண்டும் என்று விரும்புகிறார். நீங்கள் இதை விரும்புகிறீர்களா? உங்களுக்கு இது பிடித்திருக்கிறதா? உங்களுக்கு இது பிடித்திருக்கிறதா? அச்சா. எனவே, நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும், அல்லவா? நீங்கள் அதை விரும்புகிறீர்கள், தந்தையும் அதை விரும்புகிறார். எனவே, நீங்கள் என்ன செய்ய வேண்டும்? இப்போது, கடந்தது கடந்ததாகி விடட்டும். பாப்தாதா அதற்காக உங்களை மன்னிப்பார். அது கடந்து சென்று விட்டது. இப்பொழுதில் இருந்து, தந்தையின் பிறந்த நாள் பரிசாக நீங்கள் அவருக்கு எதைக் கொடுப்பீர்கள்? நீங்கள் ஒரு பரிசைக் கொடுப்பீர்கள்தானே? நீங்கள் தந்தையின் பிறந்த நாளைக் கொண்டாடவே வந்துள்ளீர்கள். எனவே, அவருக்கு என்ன பரிசை வழங்குவீர்கள்? இப்போதும், இந்தக் கடைசிப் பகுதியிலும் உங்களால் வேகமாகச் செல்ல முடியும் என்பதே பாபா ஒவ்வொரு குழந்தையின் மீதும் வைத்திருக்கும் நம்பிக்கை ஆகும். முதல் தடவை வந்திருப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! அச்சா.
கடைசியாக வந்திருக்கும் குழந்தைகளான உங்கள் எல்லோருக்கும், முதல் தடவையாக இங்கே வந்திருப்பவர்களுக்கு பாப்தாதா பலமில்லியன் மடங்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். பாபா உங்களுக்கு ஒரு பாக்கியத்தைப் பற்றிக் கூறுகிறார். உங்களின் பாக்கியத்தை உருவாக்குவதற்கான எல்லை இன்னமும் உள்ளது. ஏனென்றால், ‘மிகவும் தாமதமாகி விட்டது’ என்ற பலகை இன்னமும் போடப்படவில்லை. கடைசியாக வருகின்ற எவராவது, வேகமான முயற்சி செய்தால், அவரால் கடைசியாக வந்து வேகமாகச் சென்று, வேகமாகச் செல்வதனால் முதலில் வந்து, முதல் பிரிவிற்குள் செல்ல முடியும். முதல் இலக்கம் இல்லை. ஏனென்றால், அது ஏற்கனவே தெரிந்துள்ளது. ஆனால், அவரால் முதல் பிரிவில் வரமுடியும். உங்களுக்கு இது பிடித்திருக்கிறதா? இங்கே வந்திருக்கும் புதிய குழந்தைகளான உங்களுக்கு இது பிடித்திருக்கிறதா? உங்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. பாப்தாதா உங்களுக்கு ஓர் ஆசனத்தை வழங்குவார். ஆனால், நீங்கள் அதற்காக எதையாவது செய்ய வேண்டும். ஒவ்வொரு மூச்சிலும் ஒவ்வோர் எண்ணத்திலும் கவனம் செலுத்துங்கள். ஒவ்வொரு மூச்சும் ஒவ்வோர் எண்ணமும் சக்திவாய்ந்தவையாக இருக்க வேண்டும். அது வீணாகிப் போகக்கூடாது. ஏனென்றால், முதல் தடவை வந்திருக்கும் மற்றும் பல தடவை வந்திருக்கும் உங்கள் அனைவரின் பட்டமும் என்ன? நீங்கள் சக்திசாலிக் குழந்தைகள். பலவீனமான குழந்தைகள் அல்ல. பாப்தாதா வழங்குகின்ற அன்பும் நினைவும் என்ன? ஒவ்வொரு நாளும் அன்பும் நினைவும் என்னவென்றால், அதியன்பிற்குரிய, நீண்ட காலம் பிரிந்திருந்து இப்போது கண்டெடுக்கப்பட்ட இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் குழந்தைகள் என்பதே ஆகும். இதனாலேயே, பாப்தாதா உங்களுக்கு இந்தப் பொன்னான வாய்ப்பை வழங்குகிறார். எவ்வாறாயினும், அதை எடுக்க விரும்புபவர்களால் அதை எடுத்துக் கொள்ள முடியும். தந்தை வழங்குவார், அவர் அதை வழங்குவதற்குக் கட்டுப்பட்டுள்ளார். தீவிர முயற்சியாளர்கள் யாராவது இருக்கிறீர்களா? உங்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. ‘மிகவும் தாமதாகி விட்டது’ என்ற பலகை ஒரு தடவை போடப்பட்டதும், அனைத்தும் முடிந்துவிடும். எவ்வாறாயினும், நீங்கள் பாப்தாதாவிற்கு அவரின் பிறந்த நாள் பரிசாக எதைக் கொடுப்பீர்கள்? நீங்கள் இந்தப் பிறந்த நாளைக் கொண்டாடவே வந்துள்ளீர்கள், அல்லவா? பாப்தாதா குழந்தைகளான உங்கள் அனைவருக்கும் உங்களின் பிறந்த நாளுக்கு விசேடமான பரிசை வழங்கி உள்ளார். அவ்வளவுதான். நீங்கள் இன்றில் இருந்து இறுதிவரை 90 சதவீதம் தீவிர முயற்சி செய்தால், பாப்தாதா அதை 10 சதவீதம் அதிகரிப்பார். நீங்கள் அதை ஏற்றுக் கொள்வீர்களா? வீணான எதுவும் இப்போது முடிக்கப்பட வேண்டும். சத்தியயுகத்தின் தேவதேவியர் வந்தால், நீங்கள் இங்கே பேசுகின்ற மொழியை அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். நீங்கள் ‘முயற்சி’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினால், ‘முயற்சி என்றால் என்ன?’ என்று அவர்கள் கேட்பார்கள். ஏனென்றால், அவர்களே வெகுமதியை அனுபவம் செய்பவர்கள். அதேபோல், தீவிர முயற்சியாளர்கள் உங்களின் கனவுகள், எண்ணங்கள், நடைமுறை செயல்களில் வீணானவை அனைத்தையும் முற்றிலும் முடிக்க வேண்டியது அவசியம். உங்களுக்கு இந்தத் தைரியம் உள்ளதா? பாபா உங்களுக்கு 10 சதவீதம் மேலதிக மதிப்பெண்களை வழங்குவார். நீங்கள் இதை ஏற்றுக் கொள்கிறீர்களா? உங்களின் கைகளை உயர்த்துங்கள்! எத்தனை சதவீதம் இது உங்களுக்கு உறுதியாக உள்ளது? 100 சதவீதம்? இல்லை. 101 சதவீதம். ஏனென்றால், குழந்தைகளும் அவர்களின் சகவாசமும் இல்லாமல் பாப்தாதா அதை விரும்புவதில்லை. எனது பாபா என நீங்கள் கூறியிருப்பதனால், பாபாவும் எனது குழந்தை எனக் கூறியுள்ளார் என்பதனால், நீங்கள் தந்தைக்குச் சமமானவர் ஆகவேண்டும் என்பதைத் தந்தை நம்புகிறார். இப்போது, திடசங்கற்பமான எண்ணத்திற்கான தேவை உள்ளது. நீங்கள் ஒரு புத்தகத்தை அச்சிட்டுள்ளீர்கள், அல்லவா? திடசங்கற்பமான எண்ணங்களே, வெற்றிக்கான திறவுகோல். உங்களின் எண்ணங்கள் பொதுவானவை ஆகுவதற்கு அனுமதிக்காதீர்கள். நீங்கள் யார்? ஜனாதிபதி சாதாரணமான முறையில் நடந்தால் அதைப் பார்க்க நன்றாகவா இருக்கும்? எனவே, நீங்கள் யார்? நீங்கள் மூன்று சிம்மாசன வாசிகள். அனைத்திலும் மிகப்பெரிய சிம்மாசனம், பாப்தாதாவின் இதய சிம்மாசனம் ஆகும். எனவே, இதய சிம்மாசனத்தைக் கொண்டிருப்பவர்கள், குறைந்தபட்சம் முதல் பிறவியில் சகபாடிகள் ஆகுவார்கள். சிம்மாசனத்தில் ஒருவர் மட்டுமே அமர்ந்திருந்தாலும், குறைந்தபட்சம் உங்களால் இராச்சியத்தின் அரச குடும்பத்தில் ஒருவர் ஆகும் உரிமையைப் பெற்றுக் கொள்ள முடியும். எனவே, சகவாசத்தை நிறைவேற்றுபவர்கள், நீங்கள் குறைந்தபட்சம் வீட்டுக்கு ஒன்றாகத் திரும்பிச் செல்வீர்கள். எப்படியும் பாப்தாதா உங்களை அழைத்துச் செல்வார். அவர் உங்களை எங்கேயாவது ஓர் இடத்தினூடாகவோ அல்லது நேரடியாகவோ எடுத்துச் சென்றாலும், அவர் நிச்சயமாக உங்களை திரும்பவும் அழைத்துச் செல்வார். அப்போது, நீங்கள் வீட்டிலேயே இருந்து விடுவீர்களா? தந்தை பிரம்மா செல்வதாகவும் நீங்கள் அங்கேயே தங்கி இருப்பதாகவும் இருந்தால், அது நன்றாகவா இருக்கும்? நீங்கள் இராஜயோகிகள், அப்படித்தானே? நீங்கள் உங்களுக்கே என்ன பட்டத்தைக் கொடுக்கிறீர்கள்? நீங்கள் மற்றவர்களுக்கு எதைக் கற்பிக்கிறீர்கள்? இராஜயோகாவா அல்லது பிரஜா யோகாவா (பிரஜைகள் ஆகுவதற்கான யோகம்)? இராஜ பிரஜைகள் இருந்தாலும், நீங்கள் பிரஜா யோகிகள் அல்ல. நீங்கள் இராஜ யோகிகள். எனவே, தந்தை உங்கள் அனைவருக்கும் வழங்கிய பரிசை நீங்கள் அனைவரும் நினைவு செய்வீர்களா? எப்போது வரை? இறுதிவரை. நீங்கள் அதிகளவு முயற்சி செய்வதை பாப்தாதா பார்த்துள்ளார். குழந்தைகள் மிகக் கடினமாக உழைப்பதை பாப்தாதா பார்க்கும்போது, குழந்தைகள் அதிகம் சிரமப்படுவதை அவர் விரும்புவதில்லை. ஆகவே, அன்பிலே திளைத்திருங்கள், அப்போது முயற்சிகள் முடிந்துவிடும். ‘எனது பாபா’ என நீங்கள் சொல்லும்போது, ஏனைய ‘எனது’ என்பவை முடிந்துவிடும். ‘எனது பாபா’ என நீங்கள் சொல்லும்போது, ஏனைய அனைத்திற்குமான ‘எனது’ என்பது முடிந்து விடுகிறதல்லவா? ஒரு பொம்மைக்குள் பல பொம்மைகள் இருக்கும் ஒரு பொம்மையை நீங்கள் கொண்டு வருகிறீர்கள் (ரஷ்யன் பொம்மை). ஒன்றுக்குள் 10 இலிருந்து 12 வரையான பொம்மைகள் இருக்கும். நீங்கள் அந்தப் பொம்மையைக் காட்டுகிறீர்கள். எனவே, நீங்களே ‘எனது பாபா, எனது பாபா’ எனச் சொல்பவர்கள், அப்படித்தானே? அவர் ‘எனது பாபா’, அப்படித்தானே? அவர் மகாராத்திகளின் பாபா இல்லை. எனது பாபா. அவர் ‘எனது பாபா’ ஆக இருப்பதனால், ‘எனது’ என்ற எல்லைக்கு உட்பட்ட அனைத்தையும் ‘உங்களுடையது’ என்பதற்குள் அடக்கிவிடுங்கள். ‘எனது’ என்பதற்குப் பதிலாக, ‘உங்களுடையது’ எனச் சொல்லுங்கள். அதிகளவு வேறுபாடு ஏற்படும். எனது (மேரா) என்பதற்கும் உங்களுடையது (தேரா) என்பதற்கும் இடையில் எவ்வளவு வேறுபாடு உள்ளது? மே என்ற எழுத்தும் தே என்ற எழுத்துமே. ஒரேயொரு எழுத்தின் வேறுபாடே உள்ளது. எனவே, ‘எனது பாபா’ என்பது உறுதியாக உள்ளதல்லவா? இது உறுதியாக உள்ளதா? எத்தனை சதவீதம்? 100 சதவீதமா அல்லது 101 சதவீதமா? 101 சதவீதத்திற்கு ஒரு விரலைக் காட்டுங்கள். 101 சதவீதம் எனச் சொல்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! பாப்தாதா அதைப் பார்க்கிறார். தொலைக்காட்சியிலும் அது காட்டப்படுகிறது. அச்சா.
பாப்தாதாவின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் எங்கும் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் எங்கும் உள்ள தீவிர முயற்சியாளர்களுக்கும் பாப்தாதா வழங்கிய பரிசை ஏற்றுக் கொண்டு, தமது எண்ணங்களினூடாக பாப்தாதாவிற்கு ஒரு பரிசை வழங்கிய எங்கும் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் சதா தமது எண்ணங்களைத் திடசங்கற்பம் ஆக்குகின்ற திடசங்கற்பமான முயற்சியாளர்களுக்கும் சத்தியத்தைச் செய்து, வெளிப்படுத்தலை ஏற்படுத்துகின்ற குழந்தைகள் அனைவருக்கும் பாப்தாதாவின் இதயபூர்வமாக அதிகளவு அன்பும் பரிவும் உரித்தாகுக. தயவு செய்து இதயபூர்வமான அன்பையும் நினைவுகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள். குழந்தைகளான உங்கள் அனைவருக்கும் மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்!
ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு விருந்தாளியாக இருக்கும் மனோபாவத்தைக் கொண்டிருப்பதன் மூலம் உங்களின் இல்லறத்தையும் உங்களின் ஸ்திதியையும் மேன்மையானவை ஆக்கி, சதா மேலே இருப்பீர்களாக.தங்களை விருந்தாளிகளாகக் கருதிய வண்ணம் செயல்படுபவர்கள், தமது சரீரங்கள் என்ற வீடுகளில் இருந்து பற்றற்று இருப்பார்கள். ஒரு விருந்தாளிக்கு அவருக்கென்று சொந்தமாக எதுவும் இருக்காது. அவர் அனைத்தையும் பயன்படுத்துவார், ஆனால் சொந்தம் என்ற உணர்வு இருக்காது. வசதிகள் அனைத்தையும் பயன்படுத்தும் போது, எந்தளவிற்கு அவர் அவற்றில் இருந்து பற்றற்று இருக்கிறாரோ, அந்தளவிற்கு அவர் தந்தையின் மீது அன்பானவராக இருப்பார். அவர் இலகுவாக சரீரம், சரீர உறவுகள், சகல உடமைகள் அனைத்தில் இருந்தும் அப்பாற்பட்டு இருப்பார். எந்தளவிற்கு ஓர் இல்லறத்தவருக்கு விருந்தாளியாக இருக்கும் மனோபாவம் உள்ளதோ, அந்தளவிற்கு அவர் மேன்மை ஆகுவதுடன் அவரின் ஸ்திதியும் உயர்வானதாக இருக்கும்.
சுலோகம்:
உங்களின் சுபாவத்தைத் தூயதாகவும் சுத்தமாகவும் ஆக்குங்கள், உங்களின் ஒவ்வோர் அடியிலும் வெற்றி அமிழ்ந்திருக்கும்.அவ்யக்த சமிக்கை: ஒற்றுமை மற்றும் நம்பிக்கை என்ற சிறப்பியல்பால், வெற்றி நிறைந்தவர் ஆகுங்கள்.
நாங்கள் அனைவரும் ஒன்றாக (ஒற்றுமையாக) இருக்கும் நிஜத்தை, உலகிற்கு நீங்கள் இப்போது காட்ட வேண்டும். நாங்கள் ஒரேயொருவருக்குச் சொந்தமானவர்கள், எங்களிடம் நிலையான, ஸ்திரமான ஸ்திதி உள்ளது. நாங்கள் ஒரேயொருவரின் மீது அன்பு வைத்துள்ளோம், ஒரேயொருவரின் பெயரை வெளிப்படுத்துகிறோம். இப்போது, இந்த அழகான, தனித்துவமான பொன்னான ஸ்திதி என்ற கொடியை ஏற்றுங்கள். நீங்கள் ஜூனியரோ அல்லது சீனியரோ, நோயுற்றவரோ அல்லது ஆரோக்கியமானவரோ, ஒரு மகாராத்தியோ அல்லது குதிரைப்படை வீரரோ, யாராக இருந்தாலும் நீங்கள் அனைவரும் ஒற்றுமையாகவும் ஒத்துழைப்பாகவும் இருக்க வேண்டும். அப்போது நீங்கள் இலகுவாக வெற்றி சொரூபம் ஆகுவீர்கள்.