15.03.26    Avyakt Bapdada     Tamil Lanka Murli    24.03.2009     Om Shanti     Madhuban


பாப்தாதாவிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொண்ட பொக்கிஷங்களை உங்களுக்குள் பதித்து, அவற்றைப் பயன்படுத்தி, ஓர் அனுபவ அதிகாரி ஆகுங்கள்.


இன்று, பொக்கிஷங்கள் அனைத்தையும் சேகரித்து, நிறைந்தவராகி இருக்கும் குழந்தைகள் அனைவரையும் பாபா எல்லா இடங்களிலும் பார்க்கிறார். மேலும், ஒவ்வொரு குழந்தையும் எவ்வளவுக்கு பொக்கிஷங்கள் அனைத்தையும் சேகரித்துள்ளார்கள் என்பதையும் பாபா பார்க்கிறார். பாப்தாதாவிடம் இருந்து நீங்கள் அழியாத பல பொக்கிஷங்களைப் பெற்றுள்ளீர்கள். முதலாவதும் அனைத்திலும் அதிமேன்மையானதுமான பொக்கிஷம், இந்த ஞானச்செல்வம் என்ற பொக்கிஷமாகும். அதன் மூலமே நீங்கள் முக்தியையும் ஜீவன்முக்தியையும் பெறுகின்றீர்கள். குழந்தைகளான நீங்கள் அனைவரும் பழைய சரீரம், பழைய உலகம் என்பனவற்றில் இருந்து விடுதலையையும், ஜீவன்முக்தி ஸ்திதியையும், முக்தி தாமத்திற்குச் செல்லும் வழியையும் பெற்றுள்ளீர்கள். ஞானப்பொக்கிஷம் மாத்திரம் அல்லாது, அதனுடன் கூடவே யோகம் என்ற பொக்கிஷமும் இருக்கின்றது, அதன் மூலம் நீங்கள் அனைத்துச் சக்திகளையும் பெறுகின்றீர்கள். அவற்றுடன் தாரணை என்ற பொக்கிஷமும் இருக்கின்றது, அதன் மூலம் நீங்கள் அனைத்து நற்குணங்களையும் பெறுகின்றீர்கள். இப்பொக்கிஷங்களுடன், சேவை என்ற பொக்கிஷமும் இருக்கிறது. அதன் மூலம், நீங்கள் ஆசீர்வாதப் பொக்கிஷத்தையும் சந்தோஷப் பொக்கிஷத்தையும் பெற்றுக் கொள்கிறீர்கள். இவை அனைத்திலும் மிக மேன்மையான பொக்கிஷம் சங்கமயுக காலம் என்பதாகும். ஏனெனில் முழுச்சக்கரத்திலும் சங்கமயுகக் காலமே மிகப் பெறுமதி வாய்ந்த காலமாகும். சங்கமயுகக் காலத்தில், ஒவ்வொரு கணமும் ஒவ்வோர் எண்ணமும் மிகவும் பெறுமதி வாய்ந்ததாகும். ஏனெனில், சங்கமயுகத்தில் மாத்திரமே பாப்தாதாவினதும் குழந்தைகளான உங்களினதும் இனிமையான சந்திப்பு இடம்பெறுகின்றது. தந்தையாகிய கடவுளினதும் தெய்வக் குழந்தைகளினதும் சந்திப்பு வேறெந்த யுகத்திலும் இடம்பெறுவதில்லை. அது மட்டுமன்றி, இந்த சங்கமயுகக் காலத்திலேயே நீங்கள் பாப்தாதாவிடம் இருந்து அனைத்துப் பொக்கிஷங்களையும் பெறுகின்றீர்கள். சங்கமயுகத்தில் மாத்திரமே உங்களால் பொக்கிஷங்களைச் சேகரிக்கக் கூடியதாக உள்ளது. அவற்றை நீங்கள் சேமிப்பதற்கான கணக்கோ அல்லது அவற்றை வரவு வைப்பதற்கான வங்கியோ வேறெந்த யுகத்திலும் இருப்பதில்லை. ஒரேயொரு சங்கமயுகமே உள்ளது. அதி;ல் உங்களுக்கு வேண்டியளவை உங்களால் சேகரித்துக் கொள்ள முடியும். அத்துடன் ஒரு பிறவியிலேயே நீங்கள் பல பிறவிகளுக்குச் சேகரித்துக் கொள்ள முடியும் என்பதே சங்கமயுகக் காலத்தின் முக்கியத்துவம் ஆகும். இதனாலேயே இந்தச் சிறிய யுகம் அதிகளவு முக்கியத்துவம் பெறுகின்றது - இதிலேயே குழந்தைகளான நீங்கள் அனைவரும் பாப்தாதாவிடம் இருந்து பொக்கிஷங்களைப் பெறுகின்றீர்கள். கொடுக்கின்ற தந்தை ஒருவரே. அவர் அனைவருக்கும் சமமாகக் கொடுத்தாலும், நீங்கள் ஒவ்வொரு குழந்தையும் அவரவர் முயற்சிக்கேற்பவே இந்தப் பொக்கிஷங்களை சேமித்துக் கொள்கிறீர்கள். அருள்பவராகிய தந்தை ஒருவரே, அவர் அனைவருக்கும் ஒரே நேரத்தில் சமமாகக் கொடுக்கிறார். ஆனால், அவற்றைக் கிரகிக்கும் குழந்தைகளான உங்களில் அவர் எதனைக் கண்டார்? தந்தை அனைவருக்கும் சமமாகக் கொடுத்திருந்த போதிலும், அதனைக் கிரகித்துக் கொள்வதில், நீங்கள் ஒவ்வொருவரும் தத்தமது சொந்த முயற்சியையே செய்கிறீர்கள். ஏனெனில், பொக்கிஷங்களைக் கிரகிப்பதற்கு, முதலாவதாக, நீங்கள் உங்களுடைய சொந்த முயற்சியால் உங்களுடைய வெகுமதியை உருவாக்க முடியும். இரண்டாவது, நீங்கள் சதா திருப்தியாக இருந்து மற்றவர்களையும் திருப்திப்படுத்த வேண்டும். திருப்தியென்ற சிறப்பியல்பினால் நீங்கள் பொக்கிஷங்களைச் சேகரிக்க முடியும். மூன்றாவதாக, சேவை செய்வதன் மூலம். ஏனெனில் சேவை செய்வதன் மூலம் ஆத்மாக்களான நீங்கள் அனைவரும் சந்தோஷத்தை பெறுகிறீர்கள். அதனால் உங்களால் சந்தோஷப் பொக்கிஷத்தைச் சேகரிக்க முடியும். உங்களுடைய சொந்த முயற்சி, அனைவரையும் திருப்தியடையச் செய்யும் முயற்சி, மூன்றாவது சேவை செய்வதில் முயற்சி. இந்த மூன்று வழிகளிலும் உங்களால் பொக்கிஷங்களைச் சேகரிக்க முடியும். பொக்கிஷங்களைச் சேகரிப்பதற்கு, விசேடமாக மற்றவர்களுடன் தொடர்புகள், உறவுமுறைகள் என்பன ஏற்படும் போது கருவியாக இருக்கின்ற உணர்வும் பணிவும் பிறர்நலன் கருதும் நோக்கும் கொண்டவராக இருங்கள். அனைத்து ஆத்மாக்கள் மீதும் நல்வாழ்த்துக்களையும் தூய உணர்வுகளையும் கொண்டிருக்க வேண்டிய தேவை உள்ளது. நீங்கள் செய்யும் சேவையிலும், உங்களின் உறவுமுறைகளிலும், தொடர்புகளிலும் இவை அனைத்தையும் கொண்டிருந்தால், உங்களால் உங்களுடைய புண்ணியக் கணக்கிலும் ஆசீர்வாதக் கணக்கிலும் இலகுவாகச் சேகரிக்க முடியும்.

பாப்தாதா அனைவருடைய அட்டவணைகளையும் பார்த்தார்: அவர் எதனைக் கண்டார்? அவர் எங்குமுள்ள குழந்தைகளான நீங்கள் அனைவரும் வரிசைக்கிரமமாக இருப்பதைப் பார்த்தார். தந்தை ஒருவரே, அவர் உங்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் கொடுக்கிறார். ஆனால், இவற்றைச் சேகரிப்பதில் அவர் இரண்டு வகையான குழந்தைகளைப் பார்த்தார். முதலாவது, பொக்கிஷங்களைச் சேகரித்து, விரைவாகவே அவற்றைப் பயன்படுத்துபவர்கள். அவர்கள் அவற்றைச் சேகரித்தாலும், அவற்றைப் பயன்படுத்தி முடித்து விடுகிறார்கள். இரண்டாவது, அவற்றைப் பயன்படுத்துபவர்கள், அத்துடன் சேகரிப்பவர்கள். அவர்கள் தங்கள் சேகரிப்பில் கவனம் செலுத்துவதன் மூலம், அவற்றை அதிகரிக்கின்றார்கள். பொக்கிஷங்களை அதிகரிக்கும் வழிமுறை என்ன? வருகின்ற பாதகமான சூழ்நிலை எதுவாயினும், அதில் காலத்திற்கேற்ப நீங்கள் பெற்ற பொக்கிஷங்களைப் பயன்படுத்துவதே பொக்கிஷங்களை அதிகரிப்பதற்கான வழிமுறையாகும். இந்தப் பொக்கிஷங்களைப் பயன்படுத்தி, தங்களுடைய ஸ்திதியின் மூலம் சூழ்நிலையை மாற்றுபவர்களால் பொக்கிஷங்களைச் சேகரிக்க முடியும். இந்தப் பொக்கிஷங்களைப் பயன்படுத்தாதவர்கள், அவற்றைச் சேகரிப்பதில்லை. எனவே, நீங்கள் ஒவ்வொருவரும் உங்களையே கேட்க வேண்டும்: இந்தப் பொக்கிஷங்களைச் சரியான நேரத்தில், எனக்காகவும் மற்றவர்களுக்காகவும் நான் பயன்படுத்துகின்றேனா? அவற்றை எவ்வளவுக்கு நீங்கள் பயன்படுத்துகிறீர்களோ, அவ்வளவிற்கு அவை அதிகரிக்கும், ஏனெனில் அவற்றைப் பயன்படுத்துவதால் தொடர்ந்து நீங்கள் அனுபவசாலிகள் ஆகுகின்றீர்கள். எனவே, நீங்கள் தொடர்ந்து அனுபவத்தின் அதிகாரத்தை அதிகரிக்க வேண்டும். அதனால், உங்களையே சோதித்துக் கேளுங்கள்: இந்தப் பொக்கிஷங்கள் அனைத்தையும் நான் சேகரித்து விட்டேனா? நான் இந்தப் பொக்கிஷங்களை அதிகரிப்பதற்கான வழிமுறையைச் சரியான நேரத்தில் பயன்படுத்துகின்றேனா? என்னுடைய அனுபவத்தின் அதிகாரம் அதிகரிக்கின்றதா? அனைத்து அதிகாரத்திலும், அனுபவத்தின் அதிகாரமே அதிகளவு நினைவு கூரப்படுகிறது. அதனால், நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய கணக்கை அதிகரிக்க வேண்டும். நீங்கள் உங்களையே சோதிக்க வேண்டும். ஏனெனில், இதுவே சோதிப்பதற்கான காலமாகும். நீங்கள் பொக்கிஷங்களை அதிகரிக்கக் கூடியவர்களாக இன்னும் இருக்கின்றீர்கள். உங்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கின்றது, பின்னர் இந்த வாய்ப்பு முடிந்து விடும். பின்னர் நீங்கள் விரும்பினாலும் அவற்றை அதிகரிக்க முடியாமல் இருக்கும்.

நீங்கள் பொக்கிஷங்களை எடுத்து, அவற்றைச் சந்தோஷமாக உங்களுக்குள் உள்வாங்கவும் முயற்சி செய்கிறீர்கள் என்பதை பாப்தாதா பார்த்தார். ஆனால் நீங்கள் பொக்கிஷங்களைப் பெறுவதற்கு, உங்களால் முரளியின் மூலம் மட்டுமே பொக்கிஷங்களைப் பெற முடியும். இரண்டு வகையான குழந்தைகள் இருக்கின்றார்கள். ஒன்று வெறுமனே செவிமடுப்பவர்கள், மற்றையது, அதைத் தங்களுக்குள் உள்வாங்கிக் கொள்பவர்கள். சில குழந்தைகள் அவற்றைச் செவிமடுப்பதிலேயே அதிகளவு சந்தோஷம் அடைகிறார்கள். அதைச் செவிமடுப்பதற்கும், அதை உங்களுக்குள் உள்வாங்குவதற்கும் இடையில் அதிகளவு வித்தியாசம் இருக்கின்றது. அதைத் தங்களுக்குள் உள்வாங்கிக் கொள்பவர்கள், தொடர்ந்து அனுபவம் உள்ளவர்கள் ஆகுகின்றார்கள். ஏனெனில் தங்களுக்குள் உள்வாங்கிக் கொண்டதை அவர்கள் சரியான நேரத்தில் பயன்படுத்துகிறார்கள். அதனால் பொக்கிஷங்கள் தொடர்ந்தும் அதிகரிக்கின்றன. வெறுமனே அதைச் செவிமடுப்பவர்கள், அதைப்பற்றிப் பேசுகிறார்கள், பாபா கூறியது மிகவும் நல்லது என்றும் கூறி, பிறருக்கு அதை மிக நன்றாகக் கூறுகிறார்கள். எவ்வாறாயினும், அதைத் தங்களுக்குள் உள்வாங்கிக் கொள்ளாததால், அவர்களால் அதைச் சரியான நேரத்தில் பயன்படுத்த முடியாமல் போகிறது. எனவே நீங்கள் அனைவரும் சோதிக்க வேண்டும்: நான் அதை என்னுள் உள்வாங்கி இருக்கிறேனா? சிறிதளவு குறைந்தாலும், உங்களுக்குள் நிரம்பி இருக்காத போது, அங்கே தளம்பல் இருக்கும். ஆனால், அவற்றைத் தன்னுள் உள்வாங்கிக் கொள்பவர், நிறைவாக இருப்பதால், அங்கே எவ்விதத் தளம்பலும் இருக்காது. இதனாலேயே பாப்தாதா இன்று அனைவருடைய பொக்கிஷங்களையும் சோதித்தார். இரண்டு வகையான குழந்தைகள் இருக்கின்றார்கள் என உங்களுக்குக் கூறப்பட்டது. ‘நான் யார்?’ என்று உங்களுக்குள் சோதித்துப் பாருங்கள். பொக்கிஷங்களை அதிகரிப்பது என்றால், அவற்றைச் சரியான நேரத்தில் பயன்படுத்துதல் என்று அர்த்தம். நீங்கள் எவ்வளவுக்கு தொடர்ந்தும் பொக்கிஷங்களைப் பயன்படுத்துகின்றீர்களோ, அவ்வளவுக்கு அவை அதிகரிக்கும். ஏனெனில், எந்தப் பொக்கிஷங்கள் இருந்தாலும், பொக்கிஷங்களின் அதிபதியே பொக்கிஷங்களைப் பயன்படுத்துகிறாரே தவிர, பொக்கிஷங்கள் தம்மைத்தாமே பயன்படுத்திக் கொள்வதில்லை. தந்தை உங்கள் அனைவருக்கும் பொக்கிஷங்கள் அனைத்தையும் ஆஸ்தியாகக் கொடுத்துள்ளார். நீங்கள் ஒவ்வொருவரும் தந்தையின் பொக்கிஷங்களை உங்களுக்கு உரியதாக்க ஆக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் எந்தளவுக்கு நீங்கள் பொக்கிஷங்கள் நிறைந்து வழிகின்ற நிலையில் இருக்கின்றீர்களோ, அந்தளவுக்கு ஆட்ட, அசைக்கப்பட முடியாதவர்களாக இருப்பீர்கள்.

ஒவ்வொரு குழந்தையும் எவ்வித குறைவும் இன்றி, நிறைவாக இருப்பதையே பாப்தாதா விரும்புகின்றார். ஏனெனில் தந்தையின் மூலம் அழியாத கணக்கைச் சேகரிக்கின்ற வாய்ப்பு உங்களுக்கு இப்பொழுது மாத்திரமே இருக்கின்றது. இதனாலேயே கூறப்படுகின்றது: ‘இப்பொழுது இல்லையேல், எப்பொழுதும் இல்லை!’ இது சங்கமயுகக் காலத்தின் புகழாகும். எதிர்காலத்தில் நீங்கள் சேகரித்தவற்றின் பலனைப் பெறுவீர்கள். ஆனால் அதைப் சேகரிப்பதற்கான காலம் இதுவே ஆகும். எனவே நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் கணக்கைச் சோதிக்க வேண்டும். எவ்வளவுக்கு ஒருவரின் பொக்கிஷக் களஞ்சியம் நிறைவாக உள்ளதோ, அது உங்களின் கண்களின் மூலமும், செயல்கள் மூலமும், முகத்தின் மூலமும் தென்படும். உங்களின் முகமும் செயல்களும் மலர்ந்த ரோஜாவைப் போன்று இருக்க வேண்டும். பாப்தாதா உங்களின் செயல்களின் மூலமும் முகத்தின் மூலமும், நீங்கள் எவ்வளவு முகமலர்ச்சியோடும் சந்தோஷமாகவும் இருக்கிறீர்கள் என்பதைத் தொடர்ந்தும் பார்க்கிறார். உங்களின் கண்களில் ஆன்மீகத்தையும், உங்களின் முகத்தில் புன்னகையையும், உங்களின் செயல்களில் சகல நற்குணங்களையும் அனைவரும் அனுபவம் செய்கிறார்கள். எனவே நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைச் சோதிக்க வேண்டும்.

ஒவ்வொரு குழந்தையும் ஏனைய ஆத்மாக்கள் அனைவரையும் அத்தகைய பொக்கிஷங்களால் நிறைந்தவர்கள் ஆக்குவார்கள் என்று பாப்தாதா குழந்தைகள் உங்கள் அனைவரின் மீதும் தூய நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றார். இன்று, உலகிலுள்ள ஆத்மாக்கள் ஏதாவது ஆன்மீக சக்தியைப் பெற வேண்டுமென்று விரும்புகின்றார்கள். பிராமண ஆத்மாக்களான நீங்கள் மாத்திரமே, ஆன்மீக சக்தியை அருள்பவர்கள் ஆவீர்கள். ஏனெனில் ஆத்மாக்களாகிய நீங்களே அதிபுனிதமான, அதிமேன்மையான, செல்வச் செழிப்புமிக்க ஆத்மாக்கள் ஆவீர்கள். ஆத்மாக்கள் அனைவரிலும் நீங்களே அதிபுனிதமானவர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் பூஜிக்கப்படுவதைப் போன்று, வேறெந்த ஆத்மாக்களும் விதிமுறைப்படி பூஜிக்கப்படுவதில்லை. இப்பொழுது இந்த இறுதிப் பிறவியிலும், ஆத்மாக்களாகிய நீங்கள் பூஜிக்கப்படுகின்றீர்கள். ஸ்தாபகத் தந்தையர் எவருமோ அல்லது கருவிகளாக இருக்கின்ற மகாத்மாக்களோ கூட, உங்களைப் போன்று பூஜிக்கப்படுவதில்;லை. அவர்களுடைய ஞாபகார்த்தங்கள் உருவாக்கப்பட்டாலும், உங்களைப் போன்று விதிமுறைப்படி அவர்கள் பூஜிக்கப்படுவதில்லை. உங்களுடைய பொக்கிஷங்கள் - நீங்களே உலகில் செல்வச் செழிப்பு மிக்கவர்கள். பிராமண ஆத்மாக்களாகிய உங்களின் பொக்கிஷங்கள் 21 பிறவிகளுக்குத் தொடரும் என்பதற்கான உத்தரவாதம் உள்ளது. ஏனெனில் நீங்கள் பாபாவின் ஆஸ்தியைத் தந்தையிடம் இருந்து பெற்றுள்ளீர்கள். எனவே, தந்தை அழிக்க முடியாதவராக இருப்பதைப் போல், தந்தையிடம் இருந்து நீங்கள் பெறுகின்ற பொக்கிஷங்களும் அழியாதவை. இதனாலேயே நீங்கள் உலகிலேயே செல்வச் செழிப்பு மிக்கவர்களும், உலகிலேயே அதிபுனிதமானவர்களும் ஆவீர்கள்.

உங்களை அத்தகைய விசேட சேவையாளர்களாக நீங்கள் அனைவரும் கருதுகின்றீர்கள், இல்லையா? உலகத்தில் உள்ள ஆத்மாக்களுக்கு இன்றைய காலத்திற்கேற்ப என்ன தேவை என்பது உங்களுக்குத் தெரியுமா? உலகிற்கு இன்று சந்தோஷமும், சக்தியும், அன்பும் தேவைப்படுகின்றன. அவர்களுக்கு ஆன்மீக அன்பு தேவைப்படுவதால், பிராமண ஆத்மாக்களாகிய நீங்கள் காலத்திற்கேற்ப அருள்பவர்களாக வேண்டும். உங்கள் மனதை அவர்களுக்குச் சக்திகளை வழங்கப் பயன்படுத்துங்கள். உங்களின் வார்த்தைகளை அவர்களுக்கு இந்த ஞானத்தை வழங்கப் பயன்படுத்துங்கள். உங்கள் செயல்களின் மூலம் அவர்களுக்கு நற்குணங்களைத் தானம் செய்யுங்கள். இறுதியில், தந்தை பிரம்மா குழந்தைகள் அனைவருக்கும் மூன்று வார்த்தைகளைப் பரிசாகக் கொடுத்தார். உங்களுக்கு இந்த மூன்று வார்த்தைகளும் நினைவில் இருக்கின்றது, இல்லையா? இந்த மூன்று வார்த்தைகளையும் நீங்கள் சேவைக்குப் பயன்படுத்தினால், உங்களால் பல ஆத்மாக்களைத் திருப்திப்படுத்த முடியும். அந்த மூன்று வார்த்தைகளாவன: அசரீரீயாக இருத்தல், அகங்காரம் அற்றிருத்தல், விகாரம் அற்றிருத்தல். உங்களுடைய மனதில் அசரீரியாக இருங்கள். உங்களுடைய வார்த்தைகளில் அகங்காரம் அற்றவர்களாகவும், உங்கள் செயல்களில் விகாரம் அற்றவர்களாகவும் இருங்கள். இந்த மூன்று வார்த்தைகளையும் நீங்கள் செய்யும் சேவையில் பயன்படுத்துங்கள். ஆத்மாக்களாகிய உங்களின் சக்தியால் உலகத்தவர்கள் இப்போது இதயத்தில் சிறிதளவு ஆனந்தத்தையும் சிறிதளவு சந்தோஷத்தையும் பெற வேண்டும். அனைவரும் மனவிரக்தி உடையவர்களாக இருக்க, நீங்களோ, உலகின் நம்பிக்கை நட்சத்திரங்களாக இருக்கின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் தந்தையின் நம்பிக்கை நட்சத்திரங்களாக இருப்பதை பாப்தாதா பார்க்கின்றார். நீங்கள் வெறுமனே நம்பிக்கை வைத்திருக்கும் நட்சத்திரங்கள் அல்ல, ஆனால் நீங்கள் நம்பிக்கைகளை எல்லாம் பூர்த்தி செய்கின்ற நம்பிக்கை நட்சத்திரங்கள் ஆவீர்கள்.

குழந்தைகளின் அன்பு தொடர்ந்து பாப்தாதாவை வந்தடைகின்றது. அனைத்திலும் மிக இலகுவான முயற்சி எது? பல்வேறுபட்ட முயற்சிகள் இருந்தாலும், இலகுவான முயற்சி அன்பே ஆகும். அன்பில், வருந்தி உழைப்பதும் அன்பின் வடிவமாகவே மாறி விடுகின்றது. எனவே, தந்தையில் அன்பாக இருப்பதன் அர்த்தம், இலகுவான முயற்சியைச் செய்தல் என்று அர்த்தம். அன்பைப் பொறுத்த வரையில், நீங்கள் அனைவரும் உங்களை சதா அன்புடன் இருப்பதாகக் கருதுகின்றீர்களா? சிலவேளைகளில் மாத்திரம் அன்பு செலுத்துவதல்ல, ஆனால் எப்பொழுதும் அன்பானவர்களா? வெறுமனே மூழ்கி எழுபவராக அல்ல, ஆனால் மூழ்கியிருப்பவராக இருத்தல். சதா அன்புக் கடலில் மூழ்கியிருப்பதாக நினைப்பவர்கள், இவ்வாறே எப்போதும் இருப்பதாக தங்களைக் கருதுபவர்கள், உங்கள் கரங்களை உயர்த்துங்கள்! ‘சதா’ என்ற வார்த்தையின் கீழ்க் கோடிடுங்கள்! உங்களின் கரங்களை உயர்த்துங்கள்! எப்பொழுதுமா? எப்பொழுதுமா? நீங்கள் உங்களின் கரங்களை மிக நன்றாக உயர்த்தினீர்கள். கரங்களைப் பார்க்கையில் பாப்தாதா பூரிப்படைகின்றார். ஏனெனில் நீங்கள் துணிவைப் பேணுகின்றீர்கள். அது சற்றே குறைந்து போனாலும், உங்கள் கரங்களை உயர்த்தினீர்கள் என்பதை நினைவு செய்வீர்கள். ஏனென்றால், பாப்தாதா ஒவ்வொரு குழந்தையின் மீதும் ஆழமான அன்பைக் கொண்டிருக்கின்றார். ஏன்? ஏனெனில், ஒவ்வோர் ஆத்மாவும் எத்தனையோ பல தடவைகள் இவ்வாறு அன்பானவர்களாகி இருக்கிறார்கள் என்பதையும், நீங்கள் இப்பொழுது அன்பானவர்களாக இருக்கிறீர்கள் என்பதையும், அதே ஆத்மாக்களாகிய நீங்களே ஒவ்வொரு சக்கரத்திலும் அன்பு செலுத்துவீர்கள் என்பதையும் பாப்தாதா அறிவார். ஆத்மாக்களாகிய நீங்களே ஒவ்வொரு சக்கரத்திலும் இந்த உரிமையைப் பெறுகின்றீர்கள் என்ற போதையும் சந்தோஷமும் உங்களுக்கு இருக்கிறதா?

அத்தகைய உரிமையைக் கொண்டிருக்கும் ஆத்மாக்களான உங்களைப் பார்க்கையில், பாப்தாதா தன்னுடைய இதயத்திலிருந்து ஆசீர்வாதங்களைக் கொடுக்கின்றார்: சதா களைப்பற்றவர்களாக இருந்து, தொடர்ந்து பறந்து செல்லுங்கள்! பாதகமான சூழ்நிலைகள் ஏதேனும் ஏற்பட்டால், உங்களுடைய ஆதி ஸ்திதியை தளம்பல் அடையச் செய்யாதீர்கள். உங்களுடைய ஆதி ஸ்திதிக்கு முன்னால், பாதகமான சூழ்நிலைகளால் எதுவும் செய்ய முடியாது. நல்லது. முதல் தடவையாக வந்துள்ளவர்கள், கரங்களை உயர்த்துங்கள்! பலர் வந்துள்ளார்கள். ஒவ்வொரு குழந்தையையும் பார்க்கையில், பாப்தாதா உங்களை இட்டுப் பெருமைப்படுகிறார்: ஆஹா எனது குழந்தைகளே! ஆஹா! நீங்கள் தானாகவே இதயபூர்வமாக இந்தப் பாடலைப் பாடுகிறீர்கள்: ஆஹா பாபா! ஆஹா! எனது பாபா, ஆஹா! அதே போல், தந்தை குழந்தைகளான உங்களுக்காகவும் அதே பாடலைப் பாடுகிறார்: ஆஹா, என்னுடைய ஒவ்வொரு குழந்தையுமே! ஆஹா! குழந்தைகளான உங்களை ஒரு கல்பத்திற்குப் பின்னரே தந்தை கண்டு கொண்டார். உலகின் முன்னால் நீங்கள் ஒவ்வொருவரும் மேன்மையானவர்கள். எனவே, ‘ஆஹா குழந்தைகளே! ஆஹா!’ என்ற பாடல்களைத் தந்தையும் பாடுகின்றார். நீங்கள் ஆஹா, ஆஹா, இல்லையா? நீங்கள் ‘ஆஹா ஆஹா குழந்தைகள்’, இல்லையா? ஆஹா, ஆஹா குழந்தைகளே, உங்கள் கைகளை உயர்த்துங்கள்!

நீங்கள் ‘ஆஹா ஆஹா குழந்தைகள்!’ என்பதை எப்பொழுதும் நினைவு செய்யுங்கள். முயற்சியாளர்களாக இருந்தாலும், நீங்கள் ஆஹா ஆஹா குழந்தைகளே. நீங்கள் தந்தையுடன் வீடு திரும்புகின்ற, பாபாவின் ஆஹா ஆஹா குழந்தைகள் ஆவீர்கள். நீங்கள் பின்னால் விடுபட்டு விட மாட்டீர்கள், இல்லையா? ஒவ்வொரு குழந்தையையும் தன்னுடைய அன்பு என்ற மடியில் வைத்து அழைத்துச் செல்வேன் எனத் தந்தை கூறுகிறார். எனவே, நீங்கள் தயாரா? நீங்கள் தயாரா? செல்லும் வழியில் எங்கேனும் நீங்கள் நின்று விட மாட்டீர்கள், இல்லையா? நீங்கள் தந்தையுடன் வீடு திரும்புவீர்கள், ஏனெனில் நீங்கள் இதைச் சத்தியம் செய்துள்ளீர்கள். நீங்கள் உங்களுடைய சத்தியத்தை நிறைவேற்றுபவர்கள், இல்லையா?

எனவே, பாப்தாதா இப்பொழுது உங்களுடைய தேவதை ரூபத்தை நீங்கள் வெளிக்கொண்டு வர வேண்டும் என்று விரும்புகிறார். நடமாடும் போதும், நடக்கும் போதும் உங்களுடைய தேவதை ஆடையின் அனுபவத்தைக் கொடுங்கள். பாப்தாதா ஓர் அப்பியாசத்தைப் பற்றி உங்களுக்கு கூறியுள்ளார், இல்லையா? நீங்கள் உங்கள் ஆடைகளை மாற்றுகின்ற பழக்கத்தைக் கொண்டிருக்கின்றீர்கள், அல்லவா? உங்களுடைய சரீரத்தின் ஆடையை மாற்றுவதைப் போல, ஆத்மாவின் வடிவம் தேவதை ஆகும். இதை மீண்டும் மீண்டும் அனுபவம் செய்யுங்கள். தேவதை ஆடையை நீங்கள் விரும்புகிறீர்கள், அல்லவா? தந்தை பிரம்மா தேவதை ரூபத்தில், சூட்சும வதனத்தில் அமர்ந்திருப்பதைப் போல், நீங்கள் அனைவரும் தந்தையைப் போல், நடமாடும் போதெல்லாம் தேவதை ரூபத்தை அனுபவம் செய்யுங்கள். ஏனெனில், நீங்கள் தேவதை ரூபத்தைக் கொண்டிருக்கும் போதே, தேவர் ஆகுவீர்கள். தந்தையின் மூன்று ரூபங்களை நீங்கள் நினைவு செய்கின்றீர்கள், அல்லவா? தந்தை, ஆசிரியர், சற்குரு. அது போலவே, உங்களுடைய இந்த மூன்று ரூபங்களையும் நினைவு செய்யுங்கள் - பிராமணர்களில் இருந்து தேவதைகள், தேவதைகளில் இருந்து தேவர்கள். இந்த மூன்று ரூபங்களும் உறுதியாக இருக்கின்றனதானே? சிலவேளைகளில், உங்களுடைய பிராமண ஆடையை அணிந்து கொள்ளுங்கள், சிலவேளைகளில் தேவதை ஆடையையும், சிலவேளைகளில் தேவரின் ஆடையையும் அணிந்து கொள்ளுங்கள். இந்த மூன்று ரூபங்களிலும் உங்களால் இயல்பாகவே திரிகாலதரிசி என்ற ஆசனத்தில் அமர்ந்திருந்து, அனைத்துப் பணியையும் ஒரு பற்றற்ற பார்வையாளராகத் தொடர்ந்தும் செய்ய முடியும். அனைவரும் தனியாக இல்லாமல், சதா தந்தையுடன் இருப்பதையே பாப்தாதா விரும்புகின்றார். நீங்கள் தந்தையுடன் இருந்தால் மாத்திரமே உங்களால் அவருடன் திரும்பிச் செல்ல முடியும். நீங்கள் சிலவேளைகளில் மாத்திரம் தந்தையுடன் இருந்தால், பின்னர் எவ்வாறு உங்களால் அவருடன் திரும்பிச் செல்ல இயலும்? நீங்கள் யார் மீதாவது அன்பு கொண்டிருக்கும்போது, நீங்கள் அன்பு செலுத்துபவரை உங்களால் மறக்க முடியாது. இதைத் தொடர்ந்தும் நாள் முழுவதும் பயிற்சி செய்யுங்கள்: ஒரு கணம், பிராமணர், ஒரு கணம், தேவதை, ஒரு கணம், தேவர். நல்லது.

எங்கும் சதா பொக்கிஷங்களால் நிறைந்திருக்கின்ற குழந்தைகள் அனைவருக்கும், தங்களுடைய செயல்களாலும், தங்களுடைய முகத்தாலும் சதா சேவை செய்கின்றவர்களுக்கும், ஏனெனில் உலகை மாற்றுபவர்கள் ஆகுவீர்கள் என நீங்கள் அனைவரும் சத்தியம் செய்துள்ளீர்கள். எனவே சேவாதாரிகள் நடமாடும் போதும் நடந்து திரிகின்ற போதும் சேவையில் ஈடுபட்டிருப்பார்கள். தந்தையின் பொக்கிஷங்களால் அனைவரையும் நிரப்புகின்ற அத்தகைய உலக சேவாதாரிகளுக்கும், உலகை மாற்றுபவர்களுக்கும், எங்கும் இருக்கின்ற பாப்தாதாவின் குழந்தைகளுக்கும், பாப்தாதாவின் இதயத்தில் இருந்து அன்பும் நினைவுகளும், ஆசீர்வாதங்களும், நமஸ்தேயும் உரித்தாகட்டும். நல்லது.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஒவ்வொரு செயலையும் ஒரு மாஸ்ரர் திரிகாலதரிசியாக இருந்த வண்ணம் செய்து, எந்தவொரு கர்ம பந்தனத்தில் இருந்தும் விடுபடுவீர்களாக.

நீங்கள் என்ன எண்ணங்களை உருவாக்கினாலும் என்ன வார்த்தைகளைப் பேசினாலும் அல்லது என்ன செயல்களைச் செய்தாலும், அவற்றை ஒரு மாஸ்ரர் திரிகாலதரிசியாகச் செய்தால், எந்தவொரு செயலும் வீணாகிப் போகாது அல்லது அர்த்தம் அற்றதாக ஆகாது. திரிகாலதரிசி என்றால், பற்றற்ற பார்வையாளர் என்ற ஸ்திதியில் ஸ்திரமாக இருத்தல், ஆழமான கர்ம தத்துவத்தை அறிந்து கொள்ளுதல், பின்னர் உங்களின் பௌதீக அங்கங்களைச் செயற்பட வைத்தல் என்று அர்த்தம். அப்போது, நீங்கள் எந்தவொரு கர்ம பந்தனத்தாலும் ஒருபோதும் கட்டுப்பட மாட்டீர்கள். ஒவ்வொரு செயலைச் செய்யும்போதும், நீங்கள் கர்ம பந்தனத்தில் இருந்து விடுபட்டு இருப்பீர்கள். அத்துடன் தொடர்ந்து கர்மாதீத் ஸ்திதியை அனுபவம் செய்வீர்கள்.

சுலோகம்:
எல்லைக்கு உட்பட்ட ஆசைகளை அறியாதவர்களாக இருப்பவர்களே, அனைவரிலும் மிகுந்த செல்வந்தர்கள் ஆவார்கள்.

அவ்யக்த சமிக்கை: உங்களின் நம்பிக்கையின் அத்திவாரத்தைப் பலமானது ஆக்கி, சதா பயமற்றவராகவும் கவலையற்றவராகவும் ஆகுங்கள்.

ஒரு காவலர், தன்னால் எதிரிகளைத் துரத்த முடியும் அல்லது தனது ஆயுதங்களால் எதிரியைத் தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் தனது ஆயுதங்களைப் பிடித்த வண்ணம் காவல் செய்வாராயின், அந்தப் பயமற்ற தன்மையுடன் அவர் தொடர்ந்து நடப்பார். நீங்களும் சகல சக்திகள் என்ற ஆயதத்தை சதா உங்களுடன் வைத்திருக்கிறீர்கள். நீங்கள் அவற்றை அழைக்க வேண்டும். அதாவது, அதன் அதிபதியாகி அதற்குக் கட்டளை இடவேண்டும். அப்போது வெற்றிக்கு எப்போதும் உத்தரவாதம் உள்ளது.