15.05.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, தந்தையைப் போன்று உங்கள் சுபாவத்தையும் இலகுவானது ஆக்கிக் கொள்ளுங்கள். உங்களுக்கு எந்த அகங்காரமும் இருக்கக்கூடாது. உங்கள் புத்தி ஞானத்தினால் நிறைந்திருக்கட்டும், எந்த அகங்காரமும் இல்லாதிருக்கட்டும்.

கேள்வி:
சில குழந்தைகள் சேவை செய்யும்பொழுது, எவ்வாறு சிறு குழந்தைகளையும் விட குழந்தைத்தனம் நிறைந்தவர்களாக உள்ளார்கள்?

பதில்:
சில குழந்தைகள் தொடர்ந்தும் சேவை செய்து, பிறருக்கு ஞானத்தைக் கூறுகின்றார்கள், ஆனால் அவர்கள் தந்தையை நினைவுசெய்வதில்லை. அவர்கள் கூறுகின்றார்கள்: பாபா, நான் உங்களை நினைவுசெய்ய மறந்து விடுகின்றேன். எனவே பாபா அவர்களை, சிறு குழந்தைகளையும் விட குழந்தைத்தனம் நிறைந்தவர்கள் என்று அழைக்கின்றார், ஏனெனில், பொதுவாகக் குழந்தைகள் தங்கள் தந்தையை மறப்பதில்லை. உங்களை இளவரசர்களாகவும் இளவரசிகளாகவும் ஆக்குகின்ற தந்தையை நீங்கள் ஏன் மறந்து விடுகின்றீர்கள்? நீங்கள் அவரை மறந்தால், உங்களால் எப்படி உங்கள் ஆஸ்தியைப் பெற முடியும்? உங்கள் கரங்கள் வேலை செய்யும் பொழுது, தந்தையைத் தொடர்ந்தும் நினைவுசெய்யுங்கள்.

ஓம் சாந்தி.
இக் கல்வியின் இலக்கும் குறிக்கோளும் குழந்தைகளாகிய உங்கள் முன்னிலையில் உள்ளன. தந்தை ஒரு சாதாரண சரீரத்தில் உள்ளார் எனவும் அதுவும் அது ஒரு வயோதிப சரீரம் எனவும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அங்கு, அவர்கள் வயோதிபர் ஆகும்பொழுதிலும் சந்தோஷமாகவே இருக்கின்றார்கள். ஏனெனில் தாங்கள் மீண்டும் குழந்தைகளாகப் பிறப்போம் என்பதை அவர்கள் அறிவார்கள். இவருக்கும் இது தெரியும். அத்துடன், இவர் தான் என்னவாக ஆகுவேன் என்பதை அறிந்த சந்தோஷத்தில் உள்ளார். செயற்பாடுகள் ஒரு குழந்தையைப் போன்றதாகி, ஒரு குழந்தையைப் போன்று இலகுவானதாக உள்ளன. அகங்காரம் போன்ற எதுவும் இல்லை. புத்தியில் ஞானம் நிறைந்துள்ளது. இவரது (பிரம்மா பாபா) புத்தி எவ்வாறு உள்ளதோ, அவ்வாறே உங்களுடைய புத்தியும் இருக்க வேண்டும். பாபா எங்களுக்குக் கற்பிப்பதற்காக வந்துள்ளார், நாங்கள் இவ்வாறு ஆகுவோம். எனவே, நீங்கள் சரீரங்களை நீக்கிப் பின்னர் அவ்வாறு ஆகுகின்ற சந்தோஷமும் குழந்தைகளாகிய உங்களுக்குள் இருக்க வேண்டும். நாங்கள் இராஜயோகம் கற்கின்றோம். நீங்கள் ஓர் இளம் குழந்தையாகவோ அல்லது ஒரு வயோதிப நபராகவோ இருந்தாலென்ன, நீங்கள் அனைவரும் உங்கள் சரீரங்களை நீக்குவீர்கள். கல்வி அனைவருக்கும் ஒன்றே ஆகும். இவர் கூறுகின்றார்: நானும் இராஜயோகம் கற்கின்றேன். பின்னர் நான் சென்று ஓர் இளவரசர் ஆகுவேன். நீங்களும் இளவரசர்களாகவும் இளவரசிகளாகவும் ஆகுவீர்கள் எனக் கூறுகின்றீர்கள். நீங்கள் இளவரசர்களாகவும் இளவரசிகளாகவும் ஆகுவதற்காகவே கற்கின்றீர்கள். பின்னர் உங்கள் இறுதி எண்ணங்கள் உங்கள் இலக்கிற்கு உங்களை இட்டுச் செல்லும். நீங்கள் பிச்சைக்காரர்களில் இருந்து இளவரசர்கள் ஆகுவீர்கள் என்ற நம்பிக்கை உங்கள் புத்தியில் உள்ளது. இந்தப் பிச்சைக்காரர்களின் உலகம் முடிவடையப் போகின்றது. குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டும். பாபா குழந்தைகளாகிய உங்களைத் தனக்குச் சமமானவர்கள் ஆக்குகின்றார். சிவபாபா கூறுகின்றார்: நான் ஓர் இளவரசராக அல்லது இளவரசியாக ஆகப் போவதில்லை. இந்த பாபா கூறுகின்றார்: நான் அவ்வாறு ஆக விரும்புகின்றேன். நான் இந்தக் கல்வியை அவ்வாறு ஆகுவதற்காகவே கற்கின்றேன். இது இராஜயோகம். குழந்தைகளாகிய நீங்களும் இளவரசர்களாகவும்; இளவரசிகளாகவும் ஆகுவீர்கள் என்று கூறுகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: இது முற்றிலும் சரியானது. உங்கள் வாயில் ரோஜா இருக்கட்டும் (இது நடைமுறையில் இடம்பெறட்டும்). இது இளவரசர்கள், இளவரசிகள் ஆகுவதற்கான பரீட்சை. இந்த ஞானம் மிகவும் இலகுவானது. தந்தையையும் எதிர்கால ஆஸ்தியையும் நினைவுசெய்யுங்கள். இந்த நினைவிற்கே முயற்சி தேவை. இந்த நினைவில் நிலைத்திருப்பதன் மூலம், உங்கள் இறுதி எண்ணங்கள் உங்கள் இலக்கிற்கு உங்களை இட்டுச் செல்லும். சந்நியாசிகள் கொடுக்கின்ற ஓர் உதாரணமும் உள்ளது. ஒருவருக்கு ‘நான் ஓர் எருமை, நான் ஓர் எருமை’ என்று மீண்டும் மீண்டும் கூறுமாறு கூறப்பட்டது. பின்னர் அவர் தான் உண்மையிலேயே அவ்வாறு ஆகியதாக நம்பினார். அந்த விடயங்கள் அனைத்தும் பயனற்றவை. இங்கே இது ஒரு தர்மம் பற்றிய கேள்வியாகும். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: இந்த ஞானம் மிகவும் இலகுவானது, ஆனால் நினைவுசெய்வதற்கு முயற்சி தேவை. பாபா அடிக்கடி கூறுகின்றார்: நீங்கள் ஒரு பேபி. அப்பொழுது குழந்தைகள் முறையிட்டு கேட்கின்றார்கள்: நான் உண்மையிலேயே ஒரு பேபியா? பாபா கூறுகின்றார்: ஆம், நீங்கள் ஒரு பேபியே. நீங்கள் நல்லமுறையில் இந்த ஞானத்தைக் கொண்டிருப்பதுடன், கண்காட்சிகளில் இரவுபகலாக மிகச்சிறப்பாகச் சேவையைச் செய்த பொழுதிலும் நான் உங்களை ஒரு பேபி என்றே கூறுவேன். தந்தை கூறுகின்றார்: இந்த பிரம்மாவும் ஒரு பேபியே. இந்த பாபா கூறுகின்றார்: நீங்கள் என்னை விட மகத்தானவர்கள். இவருக்குப் பல பொறுப்புக்கள் உள்ளன. பல பொறுப்புக்கள் உடையவர்களுக்குச் சிந்திப்பதற்குப் பல விடயங்கள் உள்ளன. பாபா அதிகளவு செய்திகளைப் பெறுகின்றார். அதனாலேயே அவர் அதிகாலை விழித்தெழுந்து நினைவில் நிலைத்திருப்பதற்கு முயற்சி செய்கின்றார். அந்த ஒரேயொருவரிடம் இருந்தே ஆஸ்தி பெறப்பட முடியும். ஆகவே தந்தையை நினைவுசெய்யுங்கள். நான் தினமும் குழந்தைகள் அனைவருக்கும் விளங்கப்படுத்துகின்றேன்: இனிய குழந்தைகளே, நீங்கள் நினைவு யாத்திரையில் மிகவும் பலவீனமாக இருக்கின்றீர்கள். நீங்கள் ஞானத்தில் சிறந்தவர்களாக இருக்கலாம், ஆனால் நீங்கள் எவ்வளவு நேரத்துக்கு பாபாவின் நினைவில் நிலைத்திருக்கின்றீர்கள் என்று நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் இதயத்திடம் கேட்க வேண்டும். ஓகே, பகலில் நீங்கள் உங்கள் வேலையில் மும்முரமாக இருக்கலாம், ஆனால் உண்மையில் நீங்கள் உங்களுடைய வேலையைச் செய்யும் பொழுதும் நினைவில் நிலைத்திருக்க முடியும். “உங்கள் கரங்கள் வேலையைச் செய்யட்டும், இதயம் நினைவில் நிலைத்திருக்க வேண்டும்” என்ற ஒரு கூற்று உள்ளது. உங்கள் புத்தி அங்கே இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே அதன் அர்த்தம். இது பக்தி மார்க்கத்தில் அவர்கள் வழிபாடு செய்வதற்கு அமர்ந்திருக்கும் பொழுது, அவர்களுடைய வேலை போன்றவற்றினால் அவர்கள் புத்தியின் கவனம் சிதறுவதைப் போன்றதாகும். அல்லது, பெண் ஒருவரின் கணவன் வெளிநாட்டில் இருந்தால், அப் பெண்ணின் புத்தி, அங்கேயே செல்லும். ஏனென்றால், அவளுக்கு அங்கே அதிகளவு தொடர்பு உள்ளது. ஆகவே, நீங்கள் மிக நன்றாகச் சேவை செய்தாலும் உங்களிடம் பேபி புத்திகளே உள்ளன என்று பாபா இன்னமும் கூறுகின்றார். பல குழந்தைகள் எழுதுகின்றார்கள்: நான் பாபாவை நினைவு செய்ய மறந்து விடுகின்றேன். ஓ! ஒரு பேபிகூடத் தனது தந்தையை மறக்காது. நீங்கள் பேபிகளையும் விட அதிகளவு குழந்தைத்தனத்துடன் இருக்கின்றீர்கள். உங்களை இளவரசர்களாகவும் இளவரசிகளாகவும் ஆக்குகின்ற தந்தையே, உங்களின் தந்தையும் ஆசிரியரும் குருவும் ஆவார். இருப்பினும், நீங்கள் அவரை மறந்து விடுகின்றீர்கள்! தங்கள் முழுமையான அட்டவணைகளை அனுப்புகின்ற குழந்தைகளுக்கு மாத்திரமே பாபா அறிவுரை கூறுகின்றார். நீங்கள் எவ்வாறு அவரை நினைவுசெய்கின்றீர்கள், எப்பொழுது அவரை நினைவு செய்கின்றீர்கள் என்று நீங்கள் தந்தைக்கு எழுத வேண்டும். அப்பொழுதே தந்தையால் உங்களுக்கு அறிவுரை கூற முடியும். நீங்கள் எவ்வகையான சேவையைச் (தொழில்) செய்கின்றீர்கள் என்பதற்கேற்ப, நினைவுசெய்வதற்கு உங்களுக்கு எவ்வளவு மேலதிக நேரம் கிடைக்கின்றது என பாபாவினால் புரிந்துகொள்ள முடியும். அரசாங்கத் தொழில் புரிபவர்களுக்குப் பெருமளவு நேரம் கிடைக்கின்றது. வேலைப் பழு சிறிது குறையும் பொழுது, உங்களால் தொடர்ந்தும் தந்தையை நினைவு செய்ய முடியும். நடந்தும் உலாவியும் திரியும்பொழுது, தந்தையின் நினைவு இருக்கட்டும். பாபா உங்களுக்கு நேரம் கொடுக்கின்றார். ஓகே, இரவு 9.00 மணிக்கு உறங்கச் செல்லுங்கள், பின்னர் அதிகாலை 2.00 மணி அல்லது 3.00 மணிக்கு விழித்தெழுந்து, பாபாவை நினைவுசெய்யுங்கள். வந்து இங்கே அமருங்கள். அமர்ந்திருந்து நினைவுசெய்வதை மாத்திரம் நீங்கள் பழக்கப்படுத்திக் கொள்வதை பாபா விரும்பவில்லை. ஏனென்றால், நீங்கள் நடந்தும் உலாவியும் திரியும் பொழுதும் உங்களால் நினைவுசெய்ய முடியும். இங்கே குழந்தைகளாகிய உங்களுக்கு அதிகளவு நேரம் உள்ளது. முன்னர், நீங்கள் மலைகளுக்குச் சென்று ஏகாந்தத்தில் அமர்வதுண்டு. நீங்கள் நிச்சயமாகத் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். வேறு எப்படி உங்கள் பாவங்கள் அழிக்கப்படும்? உங்களால் தந்தையை நினைவுசெய்ய முடியாது விட்டால், நீங்கள் சிறுகுழந்தைகளை விட, அதிகளவு குழந்தைத்தனம் மிக்கவர்கள். நினைவு செய்வதிலேயே அனைத்தும் தங்கியுள்ளது. தூய்மையாக்குபவரான தந்தையை நினைவு செய்வதிலேயே முயற்சி தங்கியுள்ளது. இந்த ஞானம் மிக இலகுவானது. ஒரு கல்பத்திற்கு முன்னர் வந்தவர்கள் மாத்திரமே வந்து, இந்த ஞானத்தை மீண்டும் புரிந்துகொள்வார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் தொடர்ந்தும் வழிகாட்டல்களைப் பெறுகின்றீர்கள். எவ்வாறு தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகுவது என்ற ஒரேயொரு முயற்சியையே நீங்கள் செய்ய வேண்டும். இதைச் செய்வதற்குத் தந்தையின் நினைவைக் கொண்டிருப்பதைத் தவிர, வேறு வழியில்லை. உங்களால் பாபாவிடம் கூற முடியும்: பாபா, எனது வியாபாரம் காரணமாக அல்லது இத்தொழில் காரணமாக, என்னால் உங்களை நினைவுசெய்ய முடியவில்லை. பாபா உடனடியாகவே உங்களுக்குப் அறிவுரை சொல்வார்: அதனைச் செய்யாதீர்கள், இதனைச் செய்யுங்கள். உங்களுடைய அனைத்தும் நினைவிலேயே தங்கியுள்ளது. பல நல்ல குழந்தைகள் இந்த ஞானத்தை மிக நன்றாகக் கொடுக்கின்றார்கள், அவர்கள் எல்லோரையும் சந்தோஷப்படுத்துகின்றார்கள். ஆனால் அவர்கள் யோகம் செய்வதில்லை. தாங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டிருந்த பொழுதும் அவர்கள் மறந்து விடுகின்றார்கள். இதற்கு முயற்சி தேவை. நீங்கள் இந்தப் பழக்கத்தைக் கிரகித்து விட்டால், பின்னர் நீங்கள் விமானத்தில் அல்லது புகையிரதத்தில் அமர்ந்திருக்கும் பொழுதும் நினைவுசெய்ய வேண்டும் என்ற அக்கறை உள்ளார்ந்தமாக உங்களுக்குள் இருக்கும். நீங்கள் பாபாவால் எதிர்கால இளவரசர்களாகவும் இளவரசிகளாகவும் ஆக்கப்படுகின்றீர்கள் என்ற சந்தோஷம் உங்களுக்குள் இருக்கும். அதிகாலையில் விழித்தெழுந்து தந்தையின் நினைவில் அமர்ந்திருங்கள். அப்பொழுது, நீங்கள் களைப்படைந்தால், உங்களால் படுத்திருந்தவாறு தந்தையை நினைவுசெய்ய முடியும். தந்தை உங்களுக்குப் பல வழிகளைக் காட்டுகின்றார். உங்களால் நடந்தும் உலாவியும் திரியும்பொழுது பாபாவை நினைவுசெய்ய முடியாவிட்டால், பாபா கூறுவார்: நல்லது, குறைந்தபட்சம் சிறிதளவையேனும் உங்களால் சேமிக்கக்கூடிய வகையில், இரவு நேரத்தில் விசேடமாக நினைவு செய்வதற்காக அமருங்கள். எவ்வாறாயினும், தியானம் செய்வதற்காக எங்கேனும் நீங்கள் பலவந்தமாக அமர்ந்தால் அது ஹத்தயோகம் போன்றதாகி விடுகின்றது. உங்கள் பாதை இலகுவானது. நீங்கள் உணவு உண்ணும் பொழுதும் தந்தையை நினைவுசெய்யுங்கள். நாங்கள் பாபாவினால் உலக அதிபதிகள் ஆக்கப்படுகின்றோம். உங்களுடன் தொடர்ந்தும் பேசுங்கள்: நான் இந்தக் கல்வியின் மூலம், அவ்வாறு ஆகுகின்றேன். உங்கள் கல்வியில் முழுக் கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு மிகக் குறைந்தளவு பாடங்களே உள்ளன. பாபா மிகச்சிறிதளவே விளங்கப்படுத்துகின்றார். உங்களுக்கு எதுவும் புரியாது விட்டால்,அப்பொழுது பாபாவிடம் கேளுங்கள். உங்களை ஆத்மாக்கள் எனக் கருதுங்கள். இந்தச் சரீரங்கள் பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்டுள்ளன. உங்களைச் சரீரம் என்று கருதுவது, பஞ்சபூதங்களால் ஆனதோர் ஆவி என்று உங்களைக் கருதுவது என்றே அர்த்தம். இது அசுர உலகம்,அது தெய்வீக உலகம். இங்கே, அனைவரும் சரீர உணர்வு உடையவர்கள். எவருக்குமே தான் ஓர் ஆத்மா என்பது தெரியாது. எப்பொழுதும் சரியும் பிழையும் உள்ளன. உங்களை அழிவற்ற ஆத்மா என்று கருதுவதே சரியான புரிந்துணர்வாகும். உங்களை அழியக்கூடிய சரீரம் என்று கருதுவது பிழையான புரிந்துணர்வாகும். பெருமளவு சரீர அகங்காரம் உள்ளது. தந்தை இப்பொழுது கூறுகின்றார்: உங்கள் சரீரத்தை மறந்துவிடுங்கள்! ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுங்கள்! இதைச் செய்வதிலேயே முயற்சி உள்ளது. நீங்கள் 84 பிறவிகள் எடுத்துள்ளீர்கள். நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். நீங்கள் 84 பிறவிகளை எடுப்பதால் உங்களுக்கு அது மிகவும் இலகுவாகவே உள்ளது. சூரிய வம்சத்துக்குரிய தேவர்கள் 84 பிறவிகளை எடுக்கின்றார்கள் என்பதை நீங்கள் சரியாக எழுத வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் தொடர்ந்தும் கற்கின்றீர்கள், திருத்தங்களும் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. ஒரு லௌகீகக் கல்வியிலும் அது வரிசைக்கிரமமானது. நீங்கள் குறைவாகக் கற்றால், சிறிது சம்பளத்தையே பெறுவீர்கள். ஒரு சாதாரண மனிதனிலிருந்து நாராயணன் ஆகுவதற்கான உண்மையான அமரத்துவக் கதையைச் செவிமடுப்பதற்கு இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் பாபாவிடம் வந்துள்ளீர்கள். இம்மரண பூமி இப்பொழுது அழிக்கப்பட உள்ளது. இப்பொழுது நாங்கள் அமரத்துவ தாமத்துக்குச் செல்ல வேண்டும். எவ்வாறு தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகுவது, தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மையானவர்கள் ஆகுவது என்பதைப் பற்றியே குழந்தைகளாகிய நீங்கள் அக்கறை கொள்ள வேண்டும். தூய்மை ஆக்குபவராகிய தந்தை குழந்தைகள் அனைவருக்கும் ஒரே வழிமுறையையே காட்டுகின்றார். அவர் கூறுகின்றார்: தந்தையை நினைவுசெய்து, உங்கள் அட்டவணையை எழுதுங்கள், நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள். உங்களுக்கு இப்பொழுது இந்த ஞானம் உள்ளது, ஆனால் உலகமோ காரிருளில் உள்ளது. நீங்கள் இப்பொழுது ஞானோதயத்தைப் பெறுகின்றீர்கள். நீங்கள் திரிநேத்ரியும் திரிகாலதரிசியும் ஆகுகின்றீர்கள். இந்த ஞானம் எங்கும் பெறப்பட முடியும் எனவும் இது புதிதல்ல எனவும் கூறுகின்ற பலர் உள்ளார்கள். ஓ! ஆனால் வேறு எவரும் இந்த ஞானத்தைப் பெறுவதில்லை; அத்துடன், அவர்கள் எங்காவது இந்த ஞானத்தைப் பெற்றாலும் கூட, அவர்களால் அதன் மூலம் எதையுமே செய்ய முடியாதுள்ளது. ஒரு சாதாரண மனிதனிலிருந்து நாராயணனாக மாறுவதற்கான முயற்சியை வேறு எவராவது செய்கின்றார்களா? முற்றிலும் இல்லை! அதிகாலைப் பொழுது மிகவும் சிறந்தது என்று குழந்தைகளாகிய உங்களுக்குத் தந்தை கூறுகிறார். அனைத்தும் அமைதி நிறைந்தும் சூழல் மிகவும் சிறந்ததாகவும் இருப்பதால், நீங்கள் பெருமளவு சந்தோஷத்தைப் பெறுகின்றீர்கள். இரவு 10 மணியிலிருந்து நள்ளிரவு வரை மிகவும் சீர்கெட்ட சூழல் உள்ளது. இதனாலேயே காலைப்பொழுது மிகவும் சிறந்தது. நேரத்துடன் உறங்கிப் பின்னர் அதிகாலை 2.00 மணி அல்லது 3.00 மணிக்கு விழித்தெழுங்கள். சௌகரியமாக அமர்ந்திருந்து பாபாவுடன் பேசுங்கள். உலக வரலாற்றையும் புவியியலையும் நினைவுசெய்யுங்கள். சிவபாபா கூறுகின்றார்: நான் படைப்பவரினதும் படைப்பினதும் ஞானத்தைக் கொண்டிருக்கின்றேன். நான் ஆசிரியராகி, உங்களுக்குக் கற்பிக்கின்றேன். ஆத்மாக்களாகிய நீங்கள் தொடர்ந்தும் தந்தையை நினைவு செய்கின்றீர்கள். பாரதத்தின் புராதன யோகம் மிகவும் பிரபல்யமானது. அந்த யோகம் யாருடன் செய்யப்படுகின்றது என்பதையும் நீங்கள் எழுத வேண்டும். அது பரமாத்மாவுடனான ஆத்மாக்களின் யோகம்; வேறு வார்த்தைகளில் கூறினால், அது நினைவுசெய்தல் ஆகும். நீங்கள் முழுமையான 84 பிறவிகளையும் எடுக்கின்ற, சகலதுறை வல்லுனர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பிராமண குலத்துக்கு உரியவர்கள் மாத்திரமே இங்கு வருவார்கள். நாங்கள் பிராமணர்கள், நாங்கள் இப்பொழுது தேவர்களாகப் போகின்றோம். சரஸ்வதியும் இவரின் புதல்வி. நான் வயோதிபர், ஆனால் நான் இப்பொழுது இச்சரீரத்தை நீக்கி ஓர் அரசருக்குப் பிறக்க வேண்டும் என்று மிகவும் சந்தோஷமாக இருக்கின்றேன். நான் இப்பொழுது கற்றுக் கொண்டிருக்கிறேன், பின்னர் என் வாயில் தங்கக் கரண்டி இருக்கும். இதுவே உங்கள் அனைவரினதும் இலக்கும் குறிக்கோளும் ஆகும். ஏன் சந்தோஷம் இருப்பதில்லை? மக்கள் என்ன கூறினாலும் பரவாயில்லை, நீங்கள் ஏன் உங்கள் சந்தோஷத்தை இழக்க வேண்டும்? நீங்கள் தந்தையை நினைவு செய்யாது விட்டால், எவ்வாறு உங்களால் ஒரு சாதாரண மனிதனிலிருந்து நாராயணனாக முடியும்? நீங்கள் மேன்மையானவர்கள் ஆகவேண்டும், இல்லையா? உங்களால் அத்தகைய முயற்சியைச் செய்ய முடியும் என்று காட்டுங்கள். நீங்கள் ஏன் குழப்பம் அடைகின்றீர்கள்? அனைவருமே அரசராக மாட்டார்கள் என்று நீங்கள் ஏன் மனந்தளர்ந்து போகின்றீர்கள்? அனைவருமே ஓர் அரசராகப் போவதில்லை என்று எண்ணிய கணமே நீங்கள் சித்தி அடைவதில்லை. ஒரு கல்லூரியில் சட்டநிபுணர்கள் அல்லது பொறியியலாளர்கள் ஆகுவதற்குக் கற்கும் பொழுது, அனைவரும் சட்டநிபுணர்கள் ஆகமாட்டார்கள் என அவர்கள் கூறுவதில்லை. அவர்கள் கற்காது விட்டால், சித்தி அடைவதில்லை. முழு மாலையும் 16,108 ஆல் ஆனது. யார் முதலில் வருவார்கள்? அது உங்கள் முயற்சிகளில் தங்கியிருக்கின்றது. நீங்கள் ஒவ்வொருவரும் அடுத்தவரை விட அதிக முயற்சி செய்கின்றீர்கள். நீங்கள் உங்கள் பழைய சரீரங்களை நீக்கி வீடு திரும்பவுள்ளீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் இப்பொழுது உள்ளது. நீங்கள் இந்தளவையேனும் நினைவு செய்தால், உங்கள் முயற்சிகள் தீவிரம் அடையும். ஒரேயொரு தந்தையே அனைவருக்கும் முக்தியையும் ஜீவன்முக்தியையும் அளிப்பவர் என்பது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். இன்று உலகில் பல மில்லியன் கணக்கான மக்கள் இருக்கின்றார்கள். பின்னர் அங்கு உங்களில் 900,000 பேர் மாத்திரமே இருப்பீர்கள். இது ஓர் அண்ணளவான கணக்கீடு ஆகும். சத்திய யுகத்தில் மேலும் எத்தனை பேர் இருக்க முடியும்? ஏனெனில் ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுவதால், பிரஜைகளும் இருக்க வேண்டும். புத்தி கூறுகின்றது: சத்தியயுகத்தில், விருட்சம் மிகவும் சிறியதாக இருக்கின்றது; அது அழகானது. அதன் பெயரே, வைகுந்தமாகிய, சுவர்க்கம் ஆகும். முழுச் சக்கரமும் குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் தொடர்ந்தும் சுழல்கின்றது. நீங்கள் தொடர்ந்தும் அதைச் சதா காலமும் சுழற்றி வந்தால், அது மிகவும் நல்லது. இது ஒரு பழைய சப்பாத்து ஆதலால், வருகின்ற இந்த இருமலும் கர்ம வேதனை ஆகும். நான் இங்கே புதிய ஒன்றைப் பெறப் போவதில்லை. சிவபாபா கூறுகின்றார்: நான் மறுபிறவி எடுப்பதுமில்லை, ஒரு கருப்பையினுள் பிரவேசிப்பதும் இல்லை. நான் ஒரு சாதாரண, பழைய சரீரத்தினுள் பிரவேசிக்கின்றேன். இப்பொழுது நீங்கள் உங்கள் ஓய்வுபெறும் ஸ்திதியில் இருக்கின்றீர்கள், நீங்கள் சப்தத்துக்கு அப்பால், அமைதி தாமத்துக்குச் செல்ல வேண்டும். பகல் முடிவடைந்து இரவாக மாறுவதையும் இரவு முடிவடைந்து பகலாக மாறுவதையும் போன்று, இந்தப் பழைய உலகமும் நிச்சயமாக அழிக்கப்படவுள்ளது. சங்கமயுகம் முடிவடையும் பொழுது, நிச்சயமாகச் சத்தியயுகம் வரும். குழந்தைகளாகிய நீங்கள் நினைவு யாத்திரையில் பெருமளவு கவனம் செலுத்த வேண்டும். தற்சமயம் இதுவே பெருமளவு பின்தங்கியுள்ளது. இதனாலேயே பாபா உங்களை பேபிகள் என்று அழைக்கின்றார். நீங்கள் உங்களுடைய குழந்தைத்தனமான சுபாவத்தைக் காட்டுகின்றீர்கள். உங்களால் பாபாவை நினைவுசெய்ய முடியாமல் இருக்கிறதெனக் கூறும்பொழுது, உங்களை ஒரு பேபி என்றே அழைக்க முடியும், அப்படித்தானே? நீங்கள் தந்தையை மறக்கின்ற அத்தகைய சிறு குழந்தைகளா? அவரே இனிமையிலும் இனிமையான தந்தையும் ஆசிரியரும் குருவும் ஆவார். அரைக் கல்பமாக அவர் உங்களின் அதியன்பிற்கினியவராக இருந்த பொழுதிலும் நீங்கள் அவரை மறந்து விடுகின்றீர்கள்! அரைக்கல்பமாக, நீங்கள் துன்பத்தில் இருக்கும்பொழுது, ‘ஓ கடவுளே!’ என்று கூறி அவரை நினைவுசெய்து வந்தீர்கள். ஆத்மா அதைச் சரீரத்தினூடாகக் கூறுகின்றார். இப்பொழுது நான் வந்துள்ளதால், என்னை மிகவும் நன்றாக நினைவுசெய்யுங்கள். ஏனைய பலருக்கும் பாதையைக் காட்டுங்கள். நீங்கள் மேலும் முன்னேறுகையில், பெருமளவுக்கு விரிவாக்கம் இருக்கும். சமயங்களும் விரிவாக்கம் அடைகின்றன. அரபிந்த கோஸின் உதாரணம் உள்ளது. இன்று, அவருக்குப் பல நிலையங்கள் உள்ளன. அவை அனைத்தும் பக்தி மார்க்கத்துக்கு உரியவை என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். இப்பொழுது நீங்கள் இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். இந்த ஞானம் எவ்வாறு அதிமேன்மையான மனிதர்கள் ஆகுவது என்பதற்கு உரியது. நீங்கள் மனிதர்களில் இருந்து தேவர்களாக மாறுகின்றீர்கள். தந்தை வந்து அழுக்கான, தூய்மையற்ற ஆடைகள் அனைத்தையும் சுத்தப்படுத்துகின்றார். இந்தப்புகழ் அவருக்கு மாத்திரம் உரியது. நினைவுசெய்தலே பிரதான விடயம். இந்த ஞானம் மிகவும் இலகுவானது. ஏனையோருக்கு முரளியை வாசியுங்கள். தொடர்ந்தும் தந்தையை நினைவு செய்யுங்கள். தந்தையை நினைவுசெய்யும் பொழுது, ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையாகித் தொடர்ந்தும் பெற்ரோலால் நிரப்பப்படுவீர்கள். அதன்பின்னர் ஆத்மாக்களாகிய நீங்கள் ஓடுவீர்கள். அவர்களைச் சிவபாபாவின் திருமண ஊர்வலத்தில் ஒருவர் என்றோ அல்லது அவருடைய குழந்தைகள் என்றோ நீங்கள் அழைக்க முடியும். தந்தை கூறுகின்றார்: உங்களைக் காமச் சிதையிலிருந்து அகற்றி உங்களை யோகச் சிதையில் அமர்த்துவதற்கு நான் இப்பொழுது வந்துள்ளேன். நீங்கள் யோகத்தின் மூலம் ஆரோக்கியத்தையும் இந்த ஞானத்தின் மூலம் செல்வத்தையும் பெறுகின்றீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் இலக்கையும் குறிக்கோளையும் உங்கள் முன்னிலையில் வைத்திருந்து சந்தோஷமாக இருங்கள். ஒருபொழுதும் மனந்தளராதீர்கள். அனைவருமே அரசராகப் போவதில்லை என்று ஒருபொழுதும் எண்ண வேண்டாம். ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவதற்கு முயற்சி செய்யுங்கள்.

2. அதி அன்பிற்கினிய தந்தையை மிகுந்த அன்புடன் நினைவுசெய்யுங்கள். இதில் ஒரு பேபி ஆகாதீர்கள். நினைவுசெய்வதற்கு அதிகாலை வேளை மிகவும் சிறந்த நேரம். சௌகரியமாக மௌனத்தில் அமர்ந்து பாபாவை நினைவுசெய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் யக்யத்திற்குச் சேவை செய்வதில் சகலதுறை சேவையாளராகி சகல பேறுகளின் பிரசாதத்தைப் பெறுவீர்களாக.

சங்கமயுகத்தில் சகல துறைச் சேவைகளைச் செய்வதற்கான வாய்பைப் பெறுவதும் நாடகத்தில் ஓர் உயர்த்தியைப் பெற்றுக் கொள்வதே ஆகும். யக்யத்தில் அன்புடன் சகல துறைச் சேவைகளைச் செய்பவர்கள், இயல்பாகவே சகல பேறுகளின் பிரசாதத்தைப் பெறுகிறார்கள். அவர்கள் தடைகளில் இருந்து விடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் எந்தச் சேவையைச் செய்தாலும் அந்தச் சேவைக்கு ஆயிரம் மடங்கு பலனைப் பெறுகிறார்கள். சூட்சுமமான மற்றும் பௌதீகமான ‘லங்கார்’ (தொடர்ச்சியாக அன்னதானம் செய்தல்) எல்லா வேளைக்கும் தொடர வேண்டும். எவரையும் திருப்திப்படுத்துவதே எல்லாவற்றிலும் மிகப் பெரிய சேவையாகும். விருந்தோம்பல் செய்வதே, எல்லாவற்றிலும் மிகப்பெரிய பாக்கியம் ஆகும்.

சுலோகம்:
உங்களின் சுய மரியாதையில் ஸ்திரமாக இருங்கள். இயல்பாகவே சகல வகையான அகம்பாவங்களும் முடிந்துவிடும்.

அவ்யக்த சமிக்கை: ஆன்மீக இராஜரீகம் மற்றும் தூய்மையின் ஆளுமையைக் கடைப்பிடியுங்கள்.

உலகில் உள்ள அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், ஒருபோதும் தமது புத்திகளை அல்லது நேரத்தை அற்ப விடயங்களில் அல்லது சூழ்நிலைகளுக்குப் பயன்படுத்த மாட்டார்கள். அவர்கள் பார்த்தும் பார்க்காமல் இருப்பார்கள், கேட்டும் கேட்காதிருப்பார்கள். அதேபோல், ஆன்மீக இராஜ ஆத்மாக்களான நீங்கள் உங்களின் புத்திகளை அல்லது நேரத்தை இராஜரீகம் அல்லாத ஆத்மாக்களின் அற்ப விடயங்களுக்காகப் பயன்படுத்தக் கூடாது. ஆன்மீக இராஜரீக ஆத்மாக்கள் ஒருபோதும் வீணான அல்லது சாதாரணமான வார்த்தைகளைப் பேசக்கூடாது.