15.08.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, அனைவருக்கும் இந்தச் செய்தியைக் கொடுங்கள்: உங்கள் சரீரத்தையும், சரீரம் சார்ந்த சமயங்கள் அனைத்தையும் மறந்து, உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதினால், உங்கள் துன்பங்கள் அனைத்தும் அகற்றப்படும்.

கேள்வி:
எந்த விடயத்தில் குழந்தைகளாகிய நீங்கள் தந்தையைப் (பிரம்மாபாபா) பின்பற்ற வேண்டும்?

பதில்:
பிரம்மா தன்னிடம் இருந்த அனைத்தையும் கடவுளிடம் அர்ப்பணித்து ஒரு முழுமையான நம்பிக்கைப் பொறுப்பாளர் ஆகினாரோ, அதேபோன்று நீங்களும் ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளர்களாக வாழ வேண்டும். ஒருபோதும் பணத்தைத் தவறான முறையில் செலவழிக்கவோ அல்லது பாவாத்மாக்களுக்குக் கொடுக்கவோ வேண்டாம். உங்களிடம் உள்ள அனைத்தையும் கடவுளின் சேவைக்குப் பயன்படுத்துங்கள். முழுமையான நம்பிக்கைப் பொறுப்பாளிகளாக ஆகுங்கள். தந்தையின் ஸ்ரீமத்தைத் தொடர்ந்தும் பின்பற்றுங்கள். எந்தக் குழந்தைகள் ஸ்ரீமத்தை பின்பற்றுகின்றார்கள் என்றும், அதனை எந்தளவிற்குப் பின்பற்றுகிறார்கள் என்பதையும் தந்தை பார்க்கிறார்.

பாடல்:
அன்புக் கடல் நீங்களே, ஒரு துளிக்காக நாங்கள் ஏங்குகின்றோம்....

ஓம் சாந்தி.
குழந்தைகளான நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். நீங்கள் வினவுகின்றீர்கள்: பாபா, நாம் எங்கிருந்து வந்தோம்? நாங்கள் எப்போது வந்தோம்? எவ்வாறு வீடு திரும்பும் பாதையை நாங்கள் மறந்தோம்? இந்த நாடகத்தின் இரகசியங்களை எமது காதுகளில் கூறுங்கள். நாம் யார்? நாங்கள் எங்கிருந்து வந்தோம்? நாங்கள் எங்கு சென்றோம்? எமக்கு ஒரு துளி ஞானத்தையேனும் தாருங்கள். ஏனெனில் நீங்களே ஞானக்கடல். ஆத்மாக்களாகிய உங்களுடைய வசிப்பிடம் எது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். எவ்வாறு நாங்கள் எங்கள் தந்தையையும், சுவர்க்கத்தையும் மறந்தோம் என்பதையும், எவ்வாறு நாங்கள் சந்தோஷம் அற்றவர்களாக ஆகினோம் என்ற இரகசியங்களையும் எங்கள் காதுகளில் கூறுங்கள். தந்தையே ஞானக்கடலும் தூய்மைக்கடலும் ஆவார். அவர் அமைதி, சந்தோஷம், செழிப்பெனும் கடலும் ஆவார். இப்போது நீங்கள் இவை அனைத்தையும் எல்லையற்ற தந்தையிடம் இருந்து புரிந்து கொள்கிறீர்கள். ஆரம்பத்தில் நாங்கள் எங்கிருந்து வந்தோம்? நாங்கள் இந்தப் பாதையை மறந்து சந்தோஷம் அற்றவர்கள் ஆகும்படியாக இடையிலே என்ன நிகழ்ந்தது? நீங்கள் மீண்டும் ஒருமுறை தந்தையிடம் கூறுகிறீர்கள்: பாபா, எங்களுக்குப் பாதையைக் காட்டுங்கள்! எங்கள் சந்தோஷ தாமத்திற்கும், அமைதி தாமத்திற்கும் எவ்வாறு நாங்கள் திரும்ப முடியும்? தந்தை ஒருவரே இங்கு வந்து, ஆரம்பத்தில் நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள் என்பதையும், இடையில் என்ன நிகழ்ந்தது என்பதையும் விளங்கப்படுத்துகின்றார். பக்தி மார்க்கம் எவ்வாறு ஆரம்பமாகியது, இறுதியில் என்ன நிகழ்ந்தது, அத்துடன் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்கள் ஆகியவற்றை இப்போது நீங்கள் உங்கள் புத்தியில் கொண்டுள்ளீர்கள். இது ஒரு நாடகம். மனிதர்கள் நடிகர்கள் என்பதால் அவர்கள் இதனை நிச்சயமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் அசரீரியான அமைதி தாமத்தில் இருந்து இந்த “பேசும்” உலகிற்கு வருகின்றீர்கள் என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் அறிவீர்கள். அசரீரி, சூட்சும, சரீர உலகங்கள் உள்ளன. அசரீரி உலகிலிருந்து ஆத்மாக்கள் “பேசும்” உலகிற்கு வந்து தங்கள் பாகங்களை நடிப்பதற்கு சரீரங்களை எடுக்கின்றார்கள். ஆத்மாக்களின் வசிப்பிடம் அமைதி தாமமாகும். உலகில் உள்ள எவருக்கும் இந்த விடயங்கள் தெரியாது. ஞானக்கடலாகிய தந்தையே வந்து இதனை விளங்கப்படுத்துகிறார். அப்பால் இருக்கின்ற பரமதந்தை பரமாத்மாவே ஞானக்கடல் என்று அழைக்கப்படுகிறார் என அவர் இப்போது உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். மனிதர்களை இவ்வாறு அழைக்க முடியாது. எவருமே அறியாத ஒரேயொரு தந்தையைப் பற்றியே இந்தப் புகழ் பாடப்படுகிறது. இது இப்போது விநாசத்திற்குரிய காலமாகும். ஐரோப்பியர் விநாச காலத்தில் அன்பற்ற புத்தியினைக் கொண்டிருந்தார்கள் என நினைவு கூரப்படுகிறது. சதா என்னை மட்டுமே நினைவு செய்யுங்கள் எனக் கூறுவதன் மூலம் தந்தை உங்கள் புத்தியின் யோகத்தை அவருடன் இப்போது இணைத்துள்ளார். 'நான் ஒரு முஸ்லிம்! நான் ஒரு இந்து! நான் ஒரு பௌத்தன்!” இவை யாவும் சரீரத்திற்குரிய சமயங்கள் ஆகும். ஓர் ஆத்மா ஆத்மாவே ஆவார். தந்தை கூறுகிறார்: சரீரத்திற்குரிய அனைத்து சமயங்களையும் துறவுங்கள். உங்களை ஆத்மாக்களாகக் கருதி, உங்கள் தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள். அப்பொழுது நீங்கள் தூய்மை அற்றதிலிருந்து தூய்மை ஆகுவீர்கள். தந்தை கூறுகிறார்: இந்த சரீரங்களையும் மறவுங்கள். அனைவருக்கும் தந்தையின் செய்தியானது: உங்கள் சரீரம் உட்பட அனைத்து சரீர உறவுகளையும் மறவுங்கள். நான் ஓர் ஆத்மா. சகோதர்களாகிய எங்கள் அனைவரதும் தந்தை ஒருவரே. இந்த பிரம்மாவுமே கூறுகின்றார்: நான் ஓர் ஆத்மா, நாங்கள் அனைவரும் சகோதரர்கள். இந்த வேளையில் அனைத்துச் சகோதரர்களும் தூய்மை அற்றவர்களாகவும், சந்தோஷம் அற்றவர்களாகவும் உள்ளார்கள். அனைவரும் காமச் சிதையில் அமர்ந்து எரிந்து போயுள்ளார்கள். துவாபர யுகத்தின் ஆரம்பத்தில் இராவணனின் இராச்சியம் ஆரம்பிக்கும்போது நீங்கள் பாவப்பாதைக்குள் செல்கிறீர்கள். அப்போதே அனைத்துச் சமயங்களும் ஆரம்பம் ஆகுகின்றன. நீங்கள் அரைக்கல்பமாக தூய்மையாக இருந்து, பின் மற்றைய அரைக்கல்பத்திற்குத் தூய்மை அற்றவர்கள் ஆகுகின்றீர்கள். இருபத்தொரு பிறவிகள் பாரதத்திலேயே நினைவுகூரப்படுகிறது. ஒரு குமாரி 21 சந்ததிகளை உயர்த்துபவர். குமாரிகளுக்கு மரியாதை அளிக்கப்படுகிறது. நீங்கள் பாரதத்தை மட்டுமல்ல, முழு உலகையுமே உயர்த்துகின்றீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் சிவபாபாவின் குழந்தைகள், எனவே நீங்கள் அனைவரும் குமார்கள் என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் பிரஜாபிதாவின் குழந்தைகள் ஆகும்போதே சகோதர, சகோதரிகள் ஆகுகின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இந்த ஞானத்தைக் கொண்டிருக்கின்றீர்கள். ஆத்மாக்களாகிய நாங்கள் அனைவரும் சகோதரர்கள். அனைவரும் தந்தையை அழைக்கிறோம்: ஓ தூய்மையாக்குபவரே வாருங்கள்! இந்த இராவண இராச்சியத்தில் இருந்தும், துன்பத்தில் இருந்தும் எங்களை விடுவியுங்கள். எங்கள் வழிகாட்டியாகி எங்களை வீட்டிற்குத் திரும்பவும் அழைத்துச் செல்லுங்கள்! எங்களின் துன்பத்தை நீக்கி, எங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுங்கள்! பாபா உண்மையாகவே வந்துள்ளார் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொண்டுள்ளீர்கள். அவர் எம்மை இந்தக் கலியுகத்து இராவண இராச்சியத்தில் இருந்து விடுதலையாக்கி, தன்னுடன் எம்மை அழைத்துச் செல்வார். அனைத்து ஆத்மாக்களும் தூய்மை அற்றவர்கள் என்பதையும், இதனாலேயே அவர்களது சரீரங்களும் தூய்மை அற்றுள்ளன என்பதையும் தந்தை அறிவார். அவர் ஆத்மாக்கள் அனைவரையும் தூய்மையாக்கி, மீண்டும் நிர்வாண உலகிற்கு அழைத்துச் செல்கின்றார். இறந்தகாலம், நிகழ்காலமாகி பின்பு எதிர்காலமாக மாறும். ஆரம்பம், மத்தி, இறுதியின் பின்னர் மீண்டும் ஆரம்பம் நிகழும். சத்தியயுகம் ஆரம்பமும், கலியுகம் இறுதியும் ஆகும், அதன் பின்னர் சத்தியயுகம் எதிர்காலம் ஆகுகின்றது. இது இலகுவானது, இல்லையா? நல்லது, மத்தியில் என்ன நிகழ்ந்தது? நீங்கள் எவ்வாறு வீழ்ந்தீர்கள்? நாங்கள் தூய தேவர்களாக இருந்தோம். எனவே நாங்கள் எவ்வாறு தூய்மையானவர்களாக இருந்து, தூய்மை அற்றவர்கள் ஆகினோம்? நீங்கள் இதனை இப்போது புரிந்து கொள்கின்றீர்கள். இராவண இராச்சியம் ஆரம்பம் ஆகும்போதே நீங்கள் தூய்மை அற்றவர்கள் ஆகுகின்றீர்கள் எனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். உங்களை மீண்டும் எதிர்காலத் தேவர்கள் ஆக்குவதற்கு நான் இப்போது வந்துள்ளேன். இதில் எந்தவிதக் கஷ்டமும் இல்லை. தந்தை கூறுகின்றார்: நான் உங்களை இந்த நச்சுக் கடலிற்கு அப்பால் அழைத்துச் செல்கின்றேன். நீங்கள் பாடுகின்றீர்கள்: எனது படகை அக்கரைக்கு எடுத்துச் செல்லுங்கள்! அனைவரும் ஒரேயொரு தந்தையையே அழைக்கின்றார்கள்: மூழ்கின்ற எனது படகை பாற்கடலுக்கு எடுத்துச் செல்லுங்கள். அவர் படகோட்டி எனவும், பூந்தோட்டத்தின் அதிபதி எனவும் அழைக்கப்படுகின்றார். நீங்கள் இப்போது இந்த முட்காட்டில் இருக்கின்றீர்கள். எங்களைப் பூந்தோட்டத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். தேவர்கள் மலர்களே. இப்போது அனைவரும் முட்களாக உள்ளார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்ந்தும் துன்பம் விளைவிக்கின்றார்கள். தேவர்கள் ஒருபோதும் ஒருவருக்கும் துன்பம் விளைவிப்பதில்லை. அங்கு சந்தோஷத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. மக்கள் இதனைப் பாடுகின்றார்கள். ஆனால் நீங்களோ அதனை நடைமுறையில் செவிமடுக்கின்றீர்கள். நீங்கள் வினவுகின்றீர்கள்: பாபா, நாம் எப்போது பாதையை மறந்தோம்? நாங்கள் எவ்வாறு இந்த உலகச் சக்கரத்தை மறந்தோம்? நீங்கள் இவற்றைச் சத்திய, திரேதா யுகங்களில் அறிந்திருக்க மாட்டீர்கள். ஏனெனில் நீங்கள் அங்கு சந்தோஷமாக இருப்பீர்கள். எனவே நீங்கள் எப்போது சந்தோஷம் அற்றவர்கள் ஆகினீர்கள்? இராவண இராச்சியம் ஆரம்பமாகியபோது, பாரத மக்கள் இராவணனின் கொடும்பாவியை அவன் அழியும்வரை தொடர்ந்தும் எரிக்கின்றார்கள். அதன்பின் சத்திய யுகத்தில் நீங்கள் அவனது கொடும்பாவியை ஒவ்வொரு வருடமும் எரிக்க மாட்டீர்கள். இதுவோ பக்தி மார்க்கம் ஆகும். இராவண இராச்சியம் இப்போது முடிவடையப் போகின்றது. பக்தி மார்க்கத்தில் ஒவ்வொரு வருடமும் அவர்கள் இராவணனின் கொடும்பாவியை எரிக்கின்றார்கள். ஆயினும் அவன் இறப்பதில்லை. இப்போது இராவணன் உங்கள் முன்னால் மரணித்தவன் போலுள்ளான். இராவண இராச்சியம் இப்போது முடிவடையப் போகின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஐந்து தீய ஆவிகளின் தலைகளும் வெட்டி எறியப்பட்டுள்ளன. நீங்கள் முதலில் காமவிகாரத்தின் தலையை வெட்டி எறிகின்றீர்கள். காமமே மிகக் கொடிய எதிரி ஆகும். தந்தை கூறுகின்றார்: இந்த ஐந்து தீய ஆவிகளை வெல்வதன் மூலம் நீங்கள் உலக இராச்சியத்தை வெற்றி கொள்வீர்கள். தாங்கள் தூய்மை அற்றவர்கள் என்று மக்களே கூறுகின்றனர். இதனாலேயே அவர்கள் அழைக்கின்றனர்: வந்து தூய்மை அற்றவர்களைத் தூய்மை ஆக்குங்கள்! ஆத்மாவே அழைக்கின்றார்: ஓ தூய்மையாக்குபவரே! ஓ பாபாவே, படகோட்டியே, கருணை நிறைந்த பாபாவே, வாருங்கள்! தந்தை கூறுகின்றார்: நான் ஒவ்வொரு கல்பத்திலும் வருகின்றேன். நான் எவ்வாறு வருகின்றேன் என்பதை எவரும் அறிய மாட்டார்கள். கடவுள் வந்து இராஜயோகத்தைக் கற்பித்தார் எனக் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், எவருக்குமே யார் கடவுள் என்பதோ அல்லது அவர் எப்போது வந்தார் என்பதோ தெரியாது. அவர்கள் கீதையைப் பொய்மையாக்கி உள்ளார்கள். அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரைத் துவாபர யுகத்தில் காட்டியுள்ளனர். துவாபர யுகத்தின் பின்னர் உலகம் மேலும் தூய்மை அற்றதாக ஆகுகின்றது. எனவே ஸ்ரீகிருஷ்ணர் துவாபர யுகத்தில் வந்து என்ன செய்தார்? மக்கள் எதையுமே புரிந்து கொள்வதில்லை! அவர்கள் முற்றிலும் அதர்மம் நிறைந்தவர்கள். சத்தியயுகத்தில் அவர்கள் தர்மம் பேணுபவர்களாக இருக்கிறார்கள். நீங்கள் இப்பொழுது அதர்மம் கொண்டவர்களில் இருந்து தர்மாத்மாக்களாக ஆகுகின்றீர்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் முற்றிலும் விகாரம் அற்றவர்களாகவும், பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாகவும் இருந்தீர்கள். நீங்கள் இப்போது விகாரமுள்ள பூஜிப்பவர்களாகி விட்டீர்கள். நீங்களே பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்து இப்போது பூஜிப்பவர்களாகி விட்டீர்கள். முதலில் நீங்கள் 21 பிறவிகளுக்குப் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்து, பின் பூஜிப்பவர்கள் ஆகினீர்கள். நீங்கள் சத்திய யுகத்தில் 8 பிறவிகளையும், திரேதா யுகத்தில் 12 பிறவிகளையும் எடுக்கின்றீர்கள். நீங்கள் எவ்வாறு தூய்மை அற்றவர்கள் ஆகினீர்கள், நீங்கள் எப்போது விழத் தொடங்கினீர்கள், எவ்வாறு இந்த உலகச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது எனத் தந்தை உங்களுக்குக் கூறுகின்றார். தந்தை இங்கு அமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு முழு உலகின் வரலாற்றையும் புவியியலையும் விளங்கப்படுத்துகிறார். அத்துடன் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியத்தையும் விளங்கப்படுத்துகின்றார். அனைவரும் ஒரே அளவிற்குப் புரிந்து கொள்வதில்லை. அனைவரும் வரிசைக்கிரமமாகவே புரிந்து கொள்கின்றனர். தந்தை கூறுகின்றார்: நான் வந்து ஓர் இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றேன். நீங்கள் இப்போது அனைத்துத் தெய்வீகக் குணங்களும் நிரம்பியவர்கள் ஆகவேண்டும். அதுவரை உங்களால் சத்திய யுகத்திற்குச் செல்லமுடியாது. இங்கேயே நீங்கள் இவ்வாறு ஆகி, பின்னர் எதிர்காலத்தில் இராச்சியத்தை ஆளுவீர்கள். அதற்கு முன்பு அனைத்தும் அழிக்கப்பட வேண்டும். நீங்கள் நிச்சயமாக விநாசத்தைக் காண்பீர்கள். உங்கள் பாகங்களை நீங்கள் நடைமுறை ரீதியாக நடிப்பீர்கள். எதிர்காலத்தில் என்ன நிகழப் போகின்றது என்பது உங்களுக்குத் தெரியாது. சென்ற கல்பத்தில் எது நிகழ்ந்ததோ அது மீண்டும் நிகழும். ஸ்தாபனையும், விநாசமும் இடம்பெறும் என்று முழுமையாக உங்களுக்கு விளக்கப்பட்டுள்ளது. எவ்வாறு விநாசம் நடைபெறும்? அது நிகழும்போது நீங்கள் அதனைக் காண்பீர்கள். தெய்வீகக் காட்சி மூலம் நீங்கள் விநாசத்தைக் கண்டுள்ளீர்கள். நீங்கள் முன்னேறும்போது அதனை நடைமுறை ரூபத்தில் காண்பீர்கள். நீங்கள் ஸ்தாபனையின் காட்சிகளையும் தெய்வீக காட்சி மூலம் கண்டுள்ளீர்கள். நீங்கள் அதனை நடைமுறை ரீதியில் காண்பீர்கள். “திரான்ஸ்” போன்றவற்றில் சிக்கிக் கொள்வது நல்லதல்ல. நீங்கள் சுவர்க்கத்திற்குச் சென்று அங்கு நடனம் ஆடுகின்றீர்கள். அதனால் உங்களுக்கு இந்த ஞானமும், யோகமும் கிடைக்க மாட்டாது. “திரான்ஸ்” போன்றவற்றில் செல்வதற்கு அவசியமில்லை. அதன்போது பிரசாதம் படைக்கப்படுகின்றது. பிராமணர்களாகிய நீங்கள் அங்கு செல்கின்றீர்கள். பிராமணர்களாகிய உங்களுக்கும், தேவர்களுக்கும் இடையில் ஒரு சந்திப்பு இடம்பெறுகின்றது. இங்கு நீங்கள் உங்கள் பிறந்த வீட்டில் அமர்ந்துள்ளீர்கள். விஷ்ணு தேசத்திற்குச் செல்வதற்கு நீங்கள் தகுதி ஆக்கப்படுகின்றீர்கள். ஒரு பெண்ணின் நிச்சயதார்த்தத்தின் போது, புகுந்த வீட்டில் அவள் எவ்வாறு வாழ வேண்டும் என்றும், அனைவருடனும் அதிகளவு அன்புடன் எவ்வாறு பழகவேண்டும் என்றும், எவருடனும் சண்டை சச்சரவு செய்யக் கூடாது என்றும் அவளுக்கு விளக்கப்படுகின்றது. இங்கும் அதே போன்றுதான். தந்தை கூறுகின்றார்: நீங்கள் இங்கு அனைத்து தெய்வீகக் குணங்களும் நிறைந்தவர்கள் ஆகவேண்டும். சத்தியயுகத்தில் சண்டைகளோ, யுத்தங்களோ இல்லை. நீங்கள் இப்போது விஷ்ணு தாமமாகிய உங்கள் புகுந்த வீட்டிற்குச் செல்கின்றீர்கள். அங்கு மகா வைஷ்ணவர்கள் உள்ளனர். இப்போது இந்த பூமியில் அவர்களைப் போன்ற வைஷ்ணவர்கள் இல்லை. வைஷ்ணவர்கள், தேவர்கள் விகாரங்களில் ஈடுபடல் ஆகாது. விகாரம் வன்முறை ஆகும். அஹிம்சையே தேவர்களின் மிக உயர்ந்த தர்மம் எனக் கூறப்படுகின்றது. நீங்கள் இப்போது உங்கள் பிறந்த வீட்டில் அமர்ந்திருக்கின்றீர்கள் என்பதையும், நீங்கள் விஷ்ணு தாமத்திற்குச் செல்லவேண்டும் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். அங்கு அதிகளவு சந்தோஷம் இருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். தமது திருமணத்திற்கு முன்பு மணப்பெண்கள் கிழிந்த ஆடைகளை அணிவார்கள். அது எளிமையாக வாழ்வது எனப்படும். இப்போது உங்களிடம் என்ன உள்ளது? ஒன்றுமே இல்லை! இவை அனைத்தும் கூழாங்கற்களும், கற்களுமே. இங்கு நீங்கள் எந்த நகைகளையும் ஒருபோதும் அணியத் தேவையில்லை! எப்படியாயினும் நீங்கள் குடும்பத்துடன் வசிப்பதால் திருமணங்கள் போன்றவற்றில் கலந்துகொள்ள வேண்டியுள்ளது என்று உங்களில் சிலர் கூறுகின்றீர்கள். எனவே நீங்கள் நகைகள் போன்றவற்றை அணியலாம். இதனைச் செய்வதற்கு உங்களுக்குத் தடை இல்லை. இல்லாவிடின் நீங்கள் நகைகள் அணியாத விதவைகள் என்று அவர்கள் கூறுவார்கள். அதனால் பெயரும் இகழப்படும். இதனாலேயே பாபா கூறுகின்றார்: பாபாவின் பெயரை இகழாதீர்கள்! நீங்கள் எதனையும் அணியலாம். ஆனால் உங்களை ஒரு ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள். நீங்கள் எங்கு வேண்டுமோ அங்கெல்லாம் செல்லலாம். ஆனால் இந்த மந்திரத்தை நினைவு செய்யுங்கள். நீங்கள் நினைவில் இருக்கின்றீர்களா என்று உங்களையே சோதித்துப் பாருங்கள். நாங்கள் எங்கு சென்றாலும் நாம் பாபாவின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்பவே செல்கிறோம். நீங்கள் அவர்களிற்கான பொறுப்பினை நிறைவேற்ற வேண்டும். ஆனால் உங்கள் கரங்கள் வேலை செய்யும்போது, உங்கள் இதயத்தை மிக அன்புக்குரியவரின் நினைவில் இருக்க அனுமதித்தால் நீங்கள் உறுதிமிக்கவர்கள் எனப் புரிந்து கொள்ளப்படும். நீங்கள் நகைகள் அணிந்து திருமணங்கள் போன்றவற்றிற்குச் செல்லலாம். அத்துடன் ஒன்றாகவும் வாழலாம். ஆயினும் ஒரு மகாவீரர் (தைரியமுள்ள வீரர்;) ஆகுங்கள். ஒரு விலைமாதினையோ அல்லது ஒரு பாம்பையோ சந்நியாசிகளிடம் அவர்களின் குருமார் அனுப்பி வைத்து, அவர்கள் பரீட்சிக்கப்படுவதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. தைரியத்துடன் சித்தி அடைபவர்கள் மகாவீரர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். நீங்கள் தந்தையின் நினைவில் இருந்தால் உங்கள் பௌதீகப் புலன்கள் எதுவும் விஷமத்தனம் விளைவிக்காது. நீங்கள் தந்தையை மறக்கும்போது உங்கள் பௌதீகப் புலன்கள் விஷமத்தனம் விளைவிக்கின்றது. நீங்கள் உலகின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். இது சிறியதொரு விடயமா? சந்நியாசிகள் இந்த விடயங்களை ஒருபோதும் விளங்கிக் கொள்வதில்லை! இவற்றில் சில விடயங்கள் சமயநூல்களில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவர்கள் முழுமையாக அவற்றைப் பொய்யானவை ஆக்கிவிட்டார்கள். கடவுள் பேசுகின்றார்: நான் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கின்றேன். நீங்கள் வாழும்வரைக்கும் தொடர்ந்து இந்த ஞான அமிர்தத்தைப் பருகுவதுடன், அதனைச் செவிமடுங்கள். இராச்சியம் ஸ்தாபிக்கப்படும். குழந்தைகளாகிய உங்களுக்கு இந்தக் கற்பித்தல்கள் மீண்டும் மீண்டும் கொடுக்கப்படுகின்றது. ஒரு தந்தையை நினைவு செய்வதுடன், தெய்வீகப் பண்புகளைக் கற்றுக் கொள்ளுங்கள்! எந்தப் பாவம் நிறைந்த செயல்களையும் செய்யவேண்டாம். அது அசுரர்களின் செயலாகும். நீங்கள் இப்போது தேவர்கள் ஆகுகின்றீர்கள். எனவே தெய்வீகக் குணங்களைக் கிரகியுங்கள். மிகப்பெரிய முள் காமமே. அந்தப் பழக்கம் உங்களுக்குள் பதிந்திருப்பதனால் நீங்கள் மீண்டும் மீண்டும் வீழ்கின்றீர்கள். மாயை உங்களை அறைந்து விழச் செய்கின்றாள். இதனாலேயே நினைவுகூரப்படுகிறது: இந்த ஞானத்தைக் கேட்டு வியப்படைந்து, மற்றவர்களுக்கும் கொடுத்தவர்கள்....... நீங்கள் இப்போது ஒரேயொரு தந்தைக்குச் சொந்தமானவர்கள். நீங்கள் கூறுகிறீர்கள்: நாம் வைத்திருக்கின்ற அனைத்தும் எமக்குக் கடவுளால் கொடுக்கப்பட்டவை. எனவே நீங்கள் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள். இவை அனைத்தும் அவருடையவை. நாம் அவரது ஸ்ரீமத்தினைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் எவ்வாறு அனைத்தையும் அவருக்கு அர்ப்பணித்துள்ளீர்கள் என்பதையும், அவரது வழிகாட்டல்களை நீங்கள் பின்பற்றுகின்றீர்களா என்பதையும் தந்தை பார்க்கின்றார். பணத்தைத் தவறான வழியில் செலவழிக்கவில்லை என்பதையோ, அல்லது பாவாத்மாக்களுக்குக் கொடுக்கவில்லை என்பதையோ நன்றாகச் சோதித்துப் பாருங்கள். ஆரம்பத்தில் இந்த பிரம்மாவும் ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராக இருந்து இதனைச் செய்து காட்டினார். அவர் அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணித்து ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளர் ஆகினார். அவர் எதையும் எவருக்கும் கொடுக்கவில்லை. அது கடவுளின் பெயரில் கொடுக்கப்பட்டது. எனவே அது கடவுளின் பணிக்கே பயன்படுத்தப்பட வேண்டும். சரீரத்தின் வாழ்வாதாரத்தையும் கருதவேண்டி உள்ளது. தான் வைத்திருந்த அனைத்தையும் அவர் சேவைக்காக உபயோகப்படுத்தினார். அவரைப் பார்த்து மற்றவர்களும் அதனையே செய்தார்கள். எனவே “பத்தி” ஆரம்பிக்கப்பட்டது. “பத்தி” ஆரம்பிக்கப்படவில்லை எனின் எவ்வாறு பல குழந்தைகள் சேவையில் புத்திசாலிகள் ஆகியிருக்க முடியும்? அவர்கள் அனைத்தையும் பாகிஸ்தானில் கற்று, பின் இங்கு வந்து மேலும் கற்றார்கள். எவ்வாறு மற்றவர்களுக்கு விளங்கப்படுத்தவது என அவர்கள் கற்றபின் அவர்கள் சேவைக்குச் சென்றார்கள். இப்போது எவ்வளவு கண்காட்சிகள் போன்றவற்றை எவ்வாறு நீங்கள் தொடர்ந்து செய்கின்றீர்கள் எனப் பாருங்கள். நீங்கள் பிரபல்யமானவர்களையும் அழைக்கின்றீர்கள். இந்த ஞான யாகத்திற்குப் பல வகையான தடைகள் ஏற்படும். தடைகளையிட்டு பயப்பட வேண்டாம். பல அப்பாவிகள் தாக்கப்படுகின்றார்கள்! தந்தை கூறுகின்றார்: சக்திமிக்க யோகத்தில் நிலைத்திருந்து அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். சிலர் தந்தையாகிய கடவுளின் குழந்தைகளாக ஆகி, பின் அவரை மறந்து மாயைக்குச் சொந்தம் ஆகுகின்றார்கள். இது வெற்றி தோல்விக்கான மல்யுத்தம் ஆகும். இது குத்துச்சண்டை போன்றது. மாயை உங்களைக் குத்தும்போது நீங்கள் விழுகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: மாயையினால் ஒருபோதும் தோல்வி அடையாதீர்கள். நீங்கள் தூய்மையாக இருந்தால் நீங்கள் உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள். இந்த வருமானம் மிகவும் உயர்ந்தது! நீங்கள் முழு முயற்சியை மேற்கொள்ளாவிடின் நீங்கள் பணிப்பெண்களாகவும், வேலையாட்களாகவும் ஆகுவீர்கள். முழு இராச்சியமும் இங்கேயே ஸ்தாபிக்கப்படுகிறது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் உயிர் வாழும்வரை இந்த ஞான அமிர்தத்தைத் தொடர்ந்தும் பருகுங்கள். ஒரு மகாவீரராகிக் குத்துச் சண்டையில் மாயையை வெற்றி கொள்ளுங்கள். அனைவருக்குமான உங்களுக்குள்ள பொறுப்புகளை நிறைவேற்றும் போதிலும், ஒரேயொரு தந்தையை மாத்திரமே உங்கள் இதயத்தில் வைத்திருங்கள்.

2. தடைகளை இட்டுப் பயப்படாதீர்கள். நீங்கள் வைத்திருக்கும் அனைத்தையும் சேவைக்காகத் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துங்கள். அனைத்தையும் கடவுளிடம் அர்ப்பணித்துவிட்டு ஒரு நம்பிக்கை பொறுப்பாளராக வாழுங்கள். எதையும் தவறான செயல்களிற்காக உபயோகிக்காதீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் முழுமை ரூபத்தை வரவழைப்பதன் மூலம் ஒரு அதிர்ஷ்ட நட்சத்திரம் ஆகி, வருவதும் போவதும் என்ற சக்கரத்தில் இருந்து விடுபடுவீர்களாக.

இப்போது, உங்களின் முழுமை ஸ்திதியையும் முழுமை ரூபத்தையும் முன்னால் வரவழையுங்கள். அந்த ரூபம் எப்போதும் உங்களின் விழிப்புணர்வில் இருக்கும். அப்போது நீங்கள் சிலவேளைகளில் உயர்ந்த ஸ்திதியையும் சிலவேளைகளில் தாழ்ந்த ஸ்திதியையும் கொண்டிருக்கும் சக்கரத்தில் இருந்து (வருவதும் போவதுமான சக்கரம்) விடுபடுவீர்கள். நீங்கள் சிலவேளைகளில் நினைவும் சிலவேளைகளில் மறப்பதும் என்ற சக்கரத்திற்குள் மீண்டும் மீண்டும் வரும்போது, அது சுழலும். மக்கள் பிறப்பு, இறப்பு என்ற சக்கரத்தில் இருந்து விடுபட விரும்புகிறார்கள். ஆனால் நீங்களோ, வீணான விடயங்களில் இருந்து விடுபட்டு, ஒரு பிரகாசிக்கும் அதிர்ஷ்ட நட்சத்திரம் ஆகுகிறீர்கள்.

சுலோகம்:
எந்தவொரு தடையின் ஆதிக்கத்திற்கும் உட்படுவது என்றால், வைரத்தில் மாசு ஒன்றை ஏற்படுத்துதல் என்று அர்த்தம்.

அவ்யக்த சமிக்ஞை: தூய்மையற்றதன் விதையை முடித்து, முற்றிலும் சுத்தமானவராக (தூய்மையானவராக) ஆகுங்கள்.

உங்களின் ஆதி ரூபம் தூய தேவரைப் போன்று இருப்பதைப் போன்று, இந்த இறுதிப் பிறவியும் தூய பிராமண வாழ்க்கையே ஆகும். இந்த விழிப்புணர்வில் அடிப்படையில் தூய வாழ்க்கை வாழ்வதை முற்றிலும் இலகுவாக அனுபவம் செய்யுங்கள். தூய்மையாக இருங்கள், யோகியாக இருங்கள். இந்த மகா மந்திரமே சகல பேறுகளுக்கும் சாவி ஆகும். தூய்மை இல்லாவிட்டால், யோகி வாழ்க்கையும் இல்லை. அப்போது, சகல உரிமைகளைக் கொண்டிருந்தாலும் உங்களால் உங்களின் உரிமைகளை அனுபவம் செய்ய முடியாதிருக்கும். இந்த மகாமந்திரமே சகல பொக்கிஷங்களையும் அனுபவம் செய்வதற்கான சாவி ஆகும்.