16.02.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, பிராணேஸ்வரராகிய தந்தை, குழந்தைகளாகிய உங்களுக்கு உயிர்த் தானத்தை அருள வந்துள்ளார். தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகுவதே உயிர்த்தானத்தைப் பெறுதல் என்பதன் அர்த்தமாகும்.
கேள்வி:
நீங்கள் நாடகத்தின் ஒவ்வோர் இரகசியத்தையும் அறிந்திருப்பதால், நாடகத்தின் எந்தக் காட்சி உங்களுக்குப் புதியது அல்ல?பதில்:
இந்நேரத்தில், உலகம் முழுவதிலும் குழப்பம் நிலவுவது உங்களுக்குப் புதிய விடயமல்ல. விநாச காலத்தில் அன்பற்ற புத்தியை உடையவர்கள், தமது சொந்தக் குலத்தையே அழிப்பதற்காகப் பொருட்களைத் தயாரிக்கிறார்கள். இந்த உலகம் மாற வேண்டும் என்பது உங்களுக்குப் புதிய விடயமல்ல. மகாபாரத யுத்தத்தின் பின்னரே எங்கள் புதிய உலகம் வரும்.பாடல்:
அதிகாலை நேரத்தில் இங்கே வந்தவர் யார்?.........ஓம் சாந்தி.
அதிகாலையில் வந்து, புல்லாங்குழல் வாசிப்பவர் யார்? உலகம் முழு இருளில் உள்ளது. நீங்கள் இப்பொழுது பிராணேஸ்வரரும், தூய்மையாக்குகின்ற தந்தையுமான, ஞானக்கடலின் புல்லாங்குழல் இசையைச் செவிமடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். அவரே உயிர்காக்கும் கடவுள். 'ஓ கடவுளே, என்னை இத்துன்பத்தில் இருந்து காப்பாற்றுங்கள்!" என மக்கள் கூறுகிறார்கள். அவர்கள் எல்லைக்கு உட்பட்ட உதவியைக் கேட்கிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது எல்லையற்ற உதவியைப் பெறுகிறீர்கள். ஏனெனில் அவரே எல்லையற்ற தந்தை. ஆத்மாக்கள் மறைமுகமானவர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். குழந்தைகளின் சரீரங்களே கண்ணுக்குத் தெரிகின்றன. தந்தை கொடுக்கும் ஸ்ரீமத் குழந்தைகளுக்கே ஆனதாகும். சகல சமயநூல்களினதும் இரத்தினமாக விளங்கும் கீதை, மிகவும் பிரபல்யமானது. அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணரின் பெயரை அதில் இட்டுவிட்டனர். கடவுளின் வாசகங்களே, மேன்மையான வழிகாட்டல்கள் (ஸ்ரீமத்) என்பதை நீங்கள் இப்பொழுது அறிகிறீர்கள். சீரழிந்தவர்களை மேன்மையானவர்கள் ஆக்க ஒரு தந்தையால் மாத்திரமே முடியும் என்பதையும் நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். அவர் சாதாரண மனிதர்களை நாராயணனாக மாற்றுகிறார். சத்திய நாராயணனின் கதையும் உள்ளது. அமரத்துவ கதை நினைவு கூரப்படுகிறது. உங்களை அமரத்துவ பூமிக்கு அதிபதிகள் ஆக்குவதும், உங்களைச் சாதாரண மனிதனில் இருந்து நாராயணன் ஆக்குவதும் ஒரே விடயமாகும். இது மரண பூமியாகும். பாரதம் அமரத்துவ பூமியாக இருந்தது என்பது எவருக்குமே தெரியாது. இங்கேயே அமரத்துவமான பாபா, பார்வதிகளான உங்களுக்கு இந்த ஞானத்தை உபதேசித்தார். ஒரேயொரு பார்வதியும், ஒரேயொரு திரௌபதியும் மாத்திரமே உள்ளார்கள் என்றில்லை. பல குழந்தைகள் இதனைச் செவிமடுக்கிறார்கள். சிவபாபா அனைத்தையும் பிரம்மா மூலம் உங்களுக்கு உபதேசிக்கிறார். தந்தை கூறுகிறார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்கு நான் பிரம்மாவின் மூலமாக விளங்கப்படுத்துகிறேன். குழந்தைகளாகிய நீங்கள் நிச்சயமாகவே ஆன்மீக உணர்வு உடையவர்களாக வேண்டும் எனத் தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். தந்தையால் மாத்திரமே உங்களை இவ்வாறு ஆக்க முடியும். உலகிலுள்ள மனிதர் எவருக்குமே ஆத்மாவைப் பற்றிய ஞானம் இல்லை. அவர்களிடம் ஆத்மாவைப் பற்றிய இந்த ஞானமே இல்லாதபோது, எவ்வாறு அவர்கள் பரமாத்மாவைப் பற்றிய ஞானம் எதனையும் கொண்டிருக்க முடியும்? அவர்கள் கூறுகிறார்கள்: ஆத்மாவாகிய நானே, பரமாத்மா ஆவேன். முழு உலகமும் அத்தகைய பெரியதொரு தவறில் அகப்பட்டுள்ளது! அவர்கள் முற்றிலும் கல்லுப் புத்தியை உடையவர்களாக இருக்கிறார்கள். வெளிநாட்டினரின் புத்திகளும் கல்லைப் போன்றே உள்ளன. தாங்கள் தயாரிக்கும் குண்டுகள், தங்களையும் அழித்து, உலகத்தையும் அழித்து விடும் என்பது அவர்களது புத்திகளில் புகுவதில்லை. இந்நேரத்தில் அவர்களது புத்திகளால் எந்தவிதப் பயனும் இல்லை. அவர்கள் தங்களது சொந்த அழிவிற்காகவே இந்த ஆயத்தங்கள் அனைத்தையும் செய்து கொண்டு இருக்கிறார்கள். இது குழந்தைகளாகிய உங்களுக்கு ஒரு புதிய விடயம் அல்ல. நாடகத்திற்கு ஏற்ப இதுவே அவர்களின் பாகம் என்பதை நீங்கள் அறிகிறீர்கள்! அவர்கள் நாடகம் என்னும் பந்தனத்தில் கட்டுண்டு இருக்கிறார்கள். கல்லுப் புத்திகள் இல்லாவிட்டால் அவர்கள் இப்படிப்பட்ட ஒரு காரியத்தைச் செய்வார்களா? அவர்கள் தமது சொந்தக் குலம் முழுவதையும் அழிக்கிறார்கள் என்பது ஆச்சரியமான விடயம். அவர்கள் செய்யும் விடயங்கள், ஆச்சரியமான விடயங்களே. எல்லோரும் கூடி அமர்ந்திருக்கும் போது, இன்று எல்லாமே சரியாகத் தான் இருக்கிறது. ஆனால், நாளை, இராணுவம் குழப்பம் அடைந்தால், ஜனாதிபதியையுமே கொன்று விடுவார்கள். அத்தகைய சம்பவங்கள் தொடர்ந்தும் இடம் பெறுகின்றன. அவர்கள் சக்தி வாய்ந்தவர்களாக இருப்பதால் எவரையும் சகித்துக் கொள்வதில்லை. இன்றைய உலகில் எவ்வளவோ கொந்தளிப்புக்கள் இடம்பெறுகின்றன. கல்லுப்புத்திகளைக் கொண்ட பலர் உள்ளனர். விநாச காலத்தில், தந்தை மீது அன்பற்ற புத்தியைக் கொண்டுள்ள பலர் இருக்கிறார்கள் என்பதைக் குழந்தைகளான நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் அழிவை நோக்கி இட்டுச் செல்லப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. இப்பொழுது இவ்வுலகம் மாற வேண்டும். மகா பாரத யுத்தம் இடம் பெற்றது என்பது உங்களுக்குத் தெரியும். தந்தை உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்தார். சமயநூல்களில் அவர்கள் முற்று முழுதாக விநாசம் அடைந்ததாகக் காட்டி உள்ளார்கள். எவ்வாறாயினும், முற்று முழுதான விநாசம் ஏற்படுவதில்லை. அவ்வாறாயின் பிரளயம் ஏற்படும். மனிதர்கள் எவரும் இல்லமல், பஞ்ச பூதங்கள் மாத்திரமே நிலைத்திருப்பது என்பது சாத்தியம் இல்லை. பிரளயம் ஏற்பட்டால், மனிதர்கள் எங்கிருந்து வருவார்கள்? ஸ்ரீகிருஷ்ணர் தனது பெருவிரலை வாயில் சூப்பியபடி, ஓர் அரசமர இலையில் சமுத்திரத்தில் மிதந்து வந்ததாக அவர்கள் காட்டுகின்றார்கள். ஒரு கைக்குழந்தையால் அவ்வாறு வரமுடியுமா? அவர்கள் சமயநூல்களில் அத்தகைய கதைகளை எழுதி உள்ளார்கள், கேட்கவே வேண்டாம்! வித்வான்கள், பீஷ்மர் போன்றவர்களும், குமாரிகளாகிய உங்களின் இந்த ஞான அம்பினால் வீழ்த்தப்படுகிறார்கள். நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும் போது அவர்களும் வருவார்கள். நீங்கள் சேவையில் எவ்வளவிற்குத் சக்திவாய்ந்தவர்கள் ஆகி எவ்வளவிற்குத் தந்தையின் அறிமுகத்தைத் தொடர்ந்தும் அனைவருக்கும் கொடுக்கிறீர்களோ, அவ்வளவிற்கு நீங்கள் மற்றவர்களில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவீர்கள். ஆம், தடைகளும் இருக்கவே செய்யும். அசுர சமுதாயத்தால் இந்த யாகத்திற்குப் பல தடைகள் உருவாக்கப்பட்டதாக நினைவு கூரப்படுகிறது. கல்லுப்புத்திகளைக் கொண்ட அப்பாவி மக்கள் இதனைப் பற்றி எதையுமே விளங்கிக் கொள்வதில்லை. உங்கள் ஞானம் தனித்துவம் வாய்ந்தது என அவர்கள் கூறுகிறார்கள். இவை புதிய உலகத்திற்கான புதிய விடயங்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். தந்தை கூறுகிறார்: வேறு எவராலும் இந்த இராஜயோகத்தை உங்களுக்குக் கற்பிக்க முடியாது. தந்தை மாத்திரமே உங்களுக்கு ஞானத்தையும், யோகத்தையும் கற்பிக்கிறார். தந்தை மாத்திரமே சற்கதியை அருள்பவர் ஆவார். அவர் மாத்திரமே தூய்மையாக்குபவர். அதனால், நிச்சயமாக அவர் தூய்மை அற்றவர்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுப்பார். நீங்கள் தெய்வீகப் புத்தியை உடையவர்கள் ஆகுகின்றீர்கள் என்பதையும், பின்னர் தெய்வீகப் பிரபுக்கள் ஆகுகின்றீர்கள் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். மனிதர்கள் எத்தனையோ ஆலயங்களைக் கட்டியுள்ளார்கள். எவ்வாறாயினும் அவர்கள் (தேவர்கள்) யார் என்பதையோ, அவர்கள் எப்பணியைச் செய்தார்கள் என்பதையோ, மக்கள் புரிந்து கொள்வதில்லை. தெய்வீகப் பிரபுவிற்கும் ஓர் ஆலயம் உள்ளது. ஆயினும், பாரதம் தெய்வீக பூமியாக இருந்தது என்பது எவருக்குமே தெரியாது. வைரங்களும், இரத்தினங்களும் பதிக்கப்பட்ட தங்க மாளிகைகள் அங்கே இருந்தன. இது நேற்றைய விடயமே. சத்திய யுகத்தின் கால எல்லையே நூறாயிரக் கணக்கான வருடங்கள் என, அந்த மக்கள் கூறுகிறார்கள். ஆனால் தந்தையோ முழு நாடகமுமே 5000 வருடங்கள் மாத்திரமே எனக் கூறுகிறார். இதனாலேயே, 'இன்றைய பாரதம் எப்படி உள்ளது, நேற்றைய பாரதம் எப்படி இருந்தது?" எனக் கூறப்படுகிறது. நூறாயிரம் வருடங்களுக்கான எதனைப் பற்றியும் எவருமே ஞாபகத்தில் வைத்திருக்க முடியாமல் இருக்கும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அனைத்தையும் ஞாபகத்திற்குக் கொண்டு வந்துள்ளீர்கள். ஐயாயிரம் வருடங்களிற்கு ஒருமுறை பாபா வந்து அனைத்தையும் நினைவூட்டுகிறார் என்பதை நீங்கள் அறிகிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் சுவர்க்க அதிபதிகளாக இருந்தீர்கள். இது 5000 வருடங்களுக்குரிய விடயம். இலக்ஷ்மி, நாராயணனுடைய இராச்சியம் எப்பொழுது இருந்தது எனவும், அவர்கள் எத்தனை வருடங்களிற்கு முன்னர் வாழ்ந்தனர் எனவும் நீங்கள் எவரிடமாவது வினவ முடியும். அது நூறாயிரக் கணக்கான வருடங்களுக்கு முன்பு இருந்தது என அவர்கள் பதில் அளிப்பார்கள். இது ஐயாயிரம் வருடங்களுக்குரிய ஒரு விடயம் என நீங்கள் விளங்கப்படுத்தலாம். 'கிறிஸ்துவிற்கு எத்தனையோ வருடங்களுக்கு முன்னர் வைகுண்டம் இருந்தது" என அவர்கள் கூறுகிறார்கள். தந்தை பாரதத்தில் மட்டுமே வருகிறார். குழந்தைகளாகிய உங்களுக்கு மட்டுமே இது கூறப்படுகிறது. மக்கள் அவரது பிறந்தநாளைக் கொண்டாடுவதால், நிச்சயமாக அவர் வந்து எதனையாவது செய்திருக்க வேண்டும். அவரே தூய்மையாக்குபவர். ஆதலால் அவர் நிச்சயமாகவே அனைவரையும் தூய்மை ஆக்குவதற்காகவே வந்திருக்க வேண்டும். அவரே ஞானக்கடல். அதனால், அவர் நிச்சயமாக இந்த ஞானத்தைக் கொடுப்பார், இல்லையா? நீங்கள் யோகத்தில் அமரும் பொழுது, உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள். இதுவே ஞானம், இல்லையா? அம்மக்கள் சப்பணமிட்டு, அமர்ந்து ஹத்தயோகம் செய்கிறார்கள். அவர்கள் செய்கின்ற பல்வேறு விதமான விடயங்கள் அனைத்தையும் பாருங்கள்! தாய்மார்களான உங்களால் அதனைச் செய்ய முடியாது! உங்களால் அவர்கள் அமருவதைப் போல அமரவேனும் முடியாது! தந்தை கூறுகிறார்: இனிமையான குழந்தைகளே, நீங்கள் அவை எதையும் செய்யத் தேவையில்லை. மாணவர்கள் பாடசாலையில் கட்டுப்பாட்டுடன் அமர்கிறார்கள். தந்தை உங்களுக்கு அதைக்கூடச் செய்யும்படி கூறுவதில்லை. நீங்கள் உங்கள் விருப்பப்படி அமரலாம். அமர்ந்திருக்கும் பொழுது களைப்பாக இருந்தால், படுங்கள். பாபா உங்களுக்கு எதைச் செய்வதற்கும் தடை விதிப்பதில்லை. இவ்விடயங்கள் புரிந்து கொள்வதற்கு மிக இலகுவான விடயங்கள் ஆகும். நீங்கள் எவ்வளவு சுகவீனமுற்று இருந்தாலும் கூட, சிரமம் என்ற கேள்விக்கே இடமில்லை. சொல்ல முடியாது, நீங்கள் இதனைச் செவிமடுத்துக் கொண்டு, சிவபாபாவின் நினைவில் இருக்கும் பொழுது, உங்கள் சரீரத்தைத் துறக்கக்கூடும். 'நீங்கள் சரீரத்தை விடும் பொழுது, வாயில் கங்கை நீரைக் கொண்டிருப்பதுடன், கங்கை நதிக்கரையிலேயே உயிர்துறக்க வேண்டும்" என நினைவு கூரப்படுகிறது. அவை அனைத்தும் பக்தி மார்க்க விடயங்கள். உண்மையில் அது இந்த ஞான அமிர்தத்தையே குறிக்கிறது. உண்மையிலேயே நீங்கள் அவ்விதமாகவே உங்கள் சரீரத்தைத் துறப்பீர்கள் என்பதைப் புரிந்து கொள்கிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் பரந்தாமத்தில் இருந்து வந்தீர்கள். நீங்கள் என்னை விட்டுச் சென்றீர்கள். தந்தை கூறுகிறார்: நான் குழந்தைகளாகிய உங்களை என்னுடன் திருப்பி அழைத்துச் செல்வேன். குழந்தைகளாகிய உங்களை வீட்டுக்குத் திருப்பி அழைத்துச் செல்வதற்காகவே நான் வந்துள்ளேன். நீங்கள் உங்கள் வீட்டைப் பற்றியோ, அல்லது நீங்கள் ஓர் ஆத்மா என்பதைப் பற்றியோ அறியாதவராக இருக்கிறீர்கள். மாயை உங்கள் இறக்கைகளை முற்றாக வெட்டி எறிந்து விட்டாள். ஆத்மாக்களாகிய நீங்கள் தமோபிரதான் ஆகிவிட்டதால் உங்களால் பறக்க முடியாது. நீங்கள் சதோபிரதான் ஆகும் வரை எவ்வாறு உங்களால் சாந்தி தாமத்திற்குச் செல்ல முடியும்? நாடகத் திட்டப்படி அனைவரும் தமோபிரதான் ஆகவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். இந்நேரத்தில் முழு விருட்சமுமே தமோபிரதான் ஆகி, முற்றிலும் உக்கிய நிலையை அடைந்து விட்டது. குழந்தைகளாகிய உங்களுக்கு ஆத்மாக்கள் அனைவரும் தமோபிரதானாக உள்ளனர் என்பது தெரியும். புதிய உலகத்தில் அனைவருமே சதோபிரதானாக உள்ளனர். இங்குள்ள எவருமே சதோபிரதான் ஸ்திதியைக் கொண்டிருக்க முடியாது. ஓர் ஆத்மா தூய்மையாகிய பின்னர், அவரால் இங்கு மேலும் இருக்க முடியாது. அவர் ஓடிச் சென்றுவிடுவார். முக்தி அடைந்து, சாந்தி தாமத்திற்குச் செல்வதற்காகவே, அனைவரும் பக்தி செய்கிறார்கள். எவ்வாறாயினும், இப்பொழுது எவரும் திரும்பிச் செல்வது என்பது நியதியாக இல்லை. தந்தை இங்கே அமர்ந்திருந்து, இந்த இரகசியங்கள் அனைத்தையும், நீங்கள் கிரகிப்பதற்காக விளங்கப்படுத்துகிறார். எவ்வாறாயினும், தந்தையை நினைவு செய்து ஒரு சுயதரிசன சக்கரதாரி ஆகுவதே பிரதான விடயம் ஆகும். நீங்கள் விதையை நினைக்கும் பொழுது, முழு விருட்சமுமே உங்கள் புத்தியில் புகுகின்றது. விருட்சம் சிறியதாகவே ஆரம்பிக்கிறது. பின்னர் அது தொடர்ந்து வளர்ந்து பெரியதாகுகிறது. எண்ணற்ற சமயங்கள் உள்ளன. நீங்கள் அனைத்தையும் ஒரு விநாடியில் புரிந்து கொள்கிறீர்கள். உலகிலுள்ள எவருக்குமே மனித உலக விருட்சத்தின் விதை ஒரு தந்தையே என்பது தெரியாது. தந்தை ஒருபோதுமே சர்வவியாபியாக இருக்க முடியாது. இதுவே மிகப் பெரிய தவறு. ஒருபோதும் மனிதர் எவருமே கடவுள் என அழைக்கப்பட முடியாது என நீங்கள் விளங்கப்படுத்துகிறீர்கள். தந்தை அனைத்தையும் குழந்தைகளாகிய உங்களுக்கு மிக இலகுவாக விளங்கப்படுத்துகிறார். அப்படி இருந்தும், தங்கள் பாக்கியத்தில் அதனைக் கொண்டிருப்பவர்களும், இந்த உறுதியான நம்பிக்கையை வைத்திருப்பவர்களுமே நிச்சயமாகத் தந்தையிடம் இருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுகிறார்கள். அவர்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால், அவர்கள் ஒருபோதுமே எதையும் விளங்கிக் கொள்வதில்லை. அது அவர்களுடைய பாக்கியத்தில் இல்லாவிட்டால், அவர்கள் என்ன முயற்சியைச் செய்வார்கள்? அது அவர்களின் பாக்கியத்தில் இல்லாவிட்டால், அவர்களால் எதையும் புரிந்து கொள்ள முடியாதவர்களைப் போல இருப்பார்கள். தந்தை எல்லையற்ற ஆஸ்தியைத் தங்களுக்குத் தருவதற்காக வந்துள்ளார் என்ற நம்பிக்கையையேனும் அவர்கள் கொண்டிருப்பதில்லை. மருத்துவக் கல்லூரிக்கு ஒரு புதிய மாணவர் சென்று உட்கார்ந்தால், எதனைப் புரிந்து கொள்வார்? எதையுமே புரிந்து கொள்ள மாட்டார்! அவ்வாறே அவர்களும் இங்கே வந்து, அமர்ந்திருக்கிறார்கள். இந்த அழிவற்ற ஞானம் ஒருபோதுமே அழிவதில்லை. ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகிறது எனத் தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். ஆகவே, வேலைக்காரர்கள், பணிப்பெண்கள், பிரஜைகளின் வேலைக்காரர்கள் ஆகிய அனைவருமே தேவைப்படுகிறார்கள். அதனால், அவர்கள் அவ்விதமாக வருகிறார்கள். சிலரால் அனைத்தையும் மிக நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் தங்களுடைய அபிப்பிராயங்களையும் எழுதுகிறார்கள். அவர்கள் மேலும் முன்னேற முயற்சிக்கிறார்கள். எவ்வாறாயினும், அந்நேரத்தில் அது சிரமமாக இருக்கும். ஏனெனில், அந்நேரத்தில் பெரும் குழப்பங்கள் நிகழும். நாளுக்கு நாள், புயல்கள் தொடர்ந்து அதிகரிக்கின்றன. எத்தனையோ நிலையங்கள் உள்ளன. அவர்கள் அனைத்தையும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். பிரம்மாவின் மூலமாக ஸ்தாபனை நிகழ்ந்ததாக எழுதப்பட்டுள்ளது. விநாசமும் சற்று முன்பாகவே உள்ளது. விநாசம் நிகழ்ந்தே ஆகவேண்டும். அரசாங்கம் சனத்தொகையைக் குறைக்கும்படி கேட்கிறது. ஆனால் அதையிட்டு எவராலேனும் என்ன செய்ய முடியும்? விருட்சம் தொடர்ந்து வளர வேண்டும். தந்தை இங்கே இருக்கும் வரை, எல்லாச் சமயங்களைச் சேர்ந்த ஆத்மாக்களும் இங்கு இருக்கவே வேண்டும். வீடு திரும்பும் நேரம் வரும் பொழுது, ஆத்மாக்கள் இங்கு வருவது நின்றுவிடும். இப்பொழுது அனைவரும் இங்கே வரவேண்டும். எவ்வாறாயினும், இவ்விடயங்களை எவருமே புரிந்து கொள்வதில்லை. இது இப்பொழுது இராவண இராச்சியம் எனவும், தான் இராம இராச்சியத்தை விரும்புவதாகவும், பாபுஜி கூறுவது வழக்கம். 'இன்னார் சுவர்க்கவாசி ஆகிவிட்டார்" என அவர்கள் கூறுகிறார்கள். அதன் அர்த்தம் இது நரகம் என்பதே ஆகும். அவர் நிச்சயமாகவே ஒரு நரகவாசியாகவே இருந்தார், அதனால் அவர் சுவர்க்கவாசி ஆகியது நல்லதே என்பதைக் கூட மக்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை. பாபா கூறுகிறார்: மனிதர்கள் மனித முகத்தையும், குரங்கின் குணத்தையும் கொண்டுள்ளார்கள். 'தூய்மையாக்குபவரான சீதையின் இராமரே" (பதீத பாவன சீதாராம்) என அவர்கள் தொடர்ந்து பாடுகிறார்கள். நாங்கள் அனைவரும் தூய்மை அற்றவர்கள். தந்தை மாத்திரமே அனைவரையும் தூய்மை ஆக்குகிறார். அனைவரும் பக்தி மார்க்கத்துச் சீதைகளாக இருக்கின்றனர். தந்தையே இராமர் ஆவார். நீங்கள் இதனை மக்களுக்கு நேரடியாகக் கூறும்பொழுது, அவர்கள் அதனை ஏற்றுக் கொள்வதில்லை. அவர்கள் இராமரை அழைக்கிறார்கள். தந்தை குழந்தைகளான உங்கள் ஒவ்வொருவருக்கும், மூன்றாவது ஞானக்கண்ணை இப்பொழுது கொடுத்துள்ளார். நீங்கள் இப்பொழுது வேறு உலகத்தைச் சேர்ந்தவர்கள் போலத் தோன்றுகிறது. அவர்கள் பழைய உலகில் எதைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள்? நீங்கள் இப்பொழுது இதனைப் புரிந்து கொள்கிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது விவேகம் அற்றவர்களில் இருந்து விவேகமானவர்கள் ஆகிவிட்டீர்கள். இராவணனே உங்களை மிகவும் விவேகம் அற்றவர்கள் ஆக்கினான்! தந்தை விளங்கப்படுத்துகிறார்: இந்நேரத்தில் மனிதர்கள் அனைவரும் தமோபிரதான் ஆகிவிட்டார்கள். இதனாலேயே தந்தை வந்து, உங்கள் அனைவரையும் சதோபிரதான் ஆக்குகிறார். தந்தை கூறுகிறார்: குழந்தைகளாகிய நீங்கள் தொடர்ந்தும் சேவையை முன்னெடுத்துச் செல்கின்ற போதிலும், 'தந்தையை நினையுங்கள்" எனும் ஒரு விடயத்தை ஞாபகத்தில் வைத்திருங்கள். தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகும் வழியை வேறு எவராலும் உங்களுக்குக் காண்பிக்க முடியாது. அனைவரினதும் ஆன்மீக சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவரே! ஆத்மாக்கள் தமோபிரதான் ஆகிவிட்டதாலேயே அவர் வந்து ஆத்மாக்களாகிய உங்களுக்கு ஊசி போடுகிறார். தந்தையே அநாதியான சத்திரசிகிச்சை நிபுணர் எனப்படுகிறார். ஆத்மாக்கள் இப்பொழுது சதோபிரதானில் இருந்து தமோபிரதான் ஆகிவிட்டதால், அவர்களுக்கு ஓர் ஊசிமருந்து தேவைப்படுகிறது. தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, நீங்கள் ஆத்மாக்கள் என்ற நம்பிக்கையை வைத்திருந்து, உங்கள் தந்தையை நினைவு செய்யுங்கள். உங்களது புத்தியின் யோகத்தை இனிய வீட்டுடன் இணையுங்கள். நாங்கள் எங்கள் இனிய மௌன வீட்டிற்குச் செல்ல வேண்டும். அசரீரியான உலகமே இனிய வீடு எனப்படுகிறது. நல்லது.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. இந்த உலகம் ஏற்கனவே அழிந்துவிட்டது. ஆகவே, உங்களை அதிலிருந்து வேறுபட்டவராகக் கருதுங்கள். மரத்தின் வளர்ச்சியுடன் வருகின்ற தடைகளையும் புயல்களையும் பார்த்துப் பயப்படாதீர்கள். ஆனால் அவற்றை வெற்றி கொள்ளுங்கள்.2. ஆத்மாவை சதோபிரதான் ஆக்குவதற்கு, உங்களுக்கே இந்த ஞானம் மற்றும் யோகம் என்ற ஊசிமருந்தை ஏற்றுங்கள். உங்களின் புத்தியின் யோகத்தை இனிய வீட்டுடன் இணைத்துக் கொள்ளுங்கள்.
ஆசீர்வாதம்:
‘நீங்கள் முதலில்’ என்ற பாடத்தைக் கற்றுக் கொள்வதன் மூலம் நீங்கள் அதிபுத்திசாலியான கிரீடாதாரி ஆகுவீர்களாக.பாப்தாதா தன்னை உங்களின் கீழ்ப்படிவான சேவகர் என்று அழைக்கிறார். உங்களின் சேவகர் எனத் தன்னை அழைப்பதன் மூலம், அவர் இயல்பாகவே கிரீடாதாரி ஆகுகிறார். அதேபோல், குழந்தைகளான நீங்களும் பணிவானவர்கள் ஆகி, மற்றவர்களுக்கு ஒரு மேன்மையான ஆசனத்தை வழங்க வேண்டும். நீங்கள் அந்த நபரை அந்த ஆசனத்தில் இருத்தும்போது, அவர் எழுந்திருந்து உங்களை அதில் அமரச் செய்வார். நீங்கள் அதில் அமர முயற்சி செய்தால், உங்களை அப்படிச் செய்ய அவர் அனுமதிக்காமல் போகக்கூடும். ஆகவே, மற்றவர்களை அதில் அமரச் செய்வது என்றால், உங்களையே அதில் இருத்திக் கொள்வதாகும். எனவே, ‘நீங்கள் முதலில்’ என்ற பாடத்தை உறுதி ஆக்கிக் கொள்ளுங்கள். அப்போது உங்களின் சம்ஸ்காரங்கள் அவர்களின் சம்ஸ்காரங்களுடன் ஒத்திசைவதுடன் உங்களுக்கும் கிரீடம் சூட்டப்படும். இதுவே அதிபுத்திசாலி ஆகுவதற்கான வழிமுறை ஆகும். இதில் எந்தவிதமான முயற்சியும் கிடையாது. அத்துடன் மகத்தான பேறும் இருக்கும்.
சுலோகம்:
ஏகாந்தத்தில் இருக்கும் அகநோக்குடைய, மேன்மையான ஆத்மாக்களே அவ்யக்த ஸ்திதியை அனுபவம் செய்பவர்கள் ஆவார்கள்.அவ்யக்த சமிக்ஞை: ஒற்றுமை மற்றும் நம்பிக்கை என்ற சிறப்பியல்புடன், வெற்றி நிறைந்தவர் ஆகுங்கள்.
இதுவரை, வெவ்வேறு மலர்களான நீங்கள், உங்களின் அழகைத் தனிப்பட்ட முறையில் காட்டுகிறீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் உங்களின் நறுமணத்தை ஒரு பூங்கொத்தின் வடிவத்தில் பரப்பும்போது, உங்களின் சக்தி சேனை வெளிப்படுத்தப்படும்போது, அப்போது இந்த ஒன்றுகூடலின் சக்தியானது, இறைவனின் வெளிப்படுத்தலுக்குக் கருவி ஆகிவிடும். இப்போது, நீங்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்டவராக இருப்பதனால், நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. ஆனால் உங்களின் ஒன்றுகூடல் ஒரு வழிகாட்டலின் கீழ் ஒன்றுபடும்போது, குறைந்தளவு முயற்சியும் மகத்தான வெற்றியும் ஏற்படும்.