16.05.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்களுடைய அன்பு ஒரேயொரு தந்தைக்கு உரியதாகும், நீங்கள் அவரிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுவதனால், நீங்கள் “எனது பாபா” என்று அன்புடன் அவருக்குக் கூறுகின்றீர்கள்.

கேள்வி:
மனிதர்களால் பேசப்படும் வார்த்தைகளை ஏன் தந்தையினால் பேசப்படும் வார்த்தைகளுடன் ஒப்பிட முடியாது?

பதில்:
தந்தை பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் ஒரு மேன்மையான வாசகம் என்பதால் ஆகும். இந்த மேன்மையான வாசகங்களைக் கேட்பவர்கள் மகத்தானவர்கள் ஆகுகின்றார்கள்; அவர்கள் அதிமேன்மையான மனிதர்கள் ஆகுகின்றார்கள். தந்தையின் மேன்மையான வாசகங்கள் உங்களை அழகிய மலர்கள் ஆக்குகின்றன. மனிதர்களால் பேசப்படும் வார்த்தைகள் மேன்மையான வாசகங்கள் அல்ல. உண்மையில், அவற்றின் காரணமாகவே நீங்கள் கீழிறங்கி வருகின்றீர்கள்.

பாடல்:
உலகமே மாறினாலும், நாங்கள் நிலையாக இருப்போம்.

ஓம் சாந்தி.
பாடலின் முதல் வரியில் அர்த்தம் உள்ளது, ஆனால் பாடலின் மிகுதி வரிகள் பயனற்றவை. அது எவ்வாறு கீதையிலுள்ள “கடவுள் பேசுகின்றார்”, “மன்மனாபவ”, “மத்தியாஜிபவ” என்ற வார்த்தைகள் சரியாக உள்ளனவோ, அதைப் போன்றுள்ளது. அது ஒரு மூடை மாவில் உள்ள ஒரு துளி உப்பு என்று அழைக்கப்படுகின்றது. கடவுள் யார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் நன்றாக அறிவீர்கள். சிவபாபா கடவுள் என்று அழைக்கப்படுகின்றார். சிவபாபா வந்து சிவாலயத்தை உருவாக்குகின்றார். அவர் எங்கே வருகின்றார்? இந்த விலைமாதர் விடுதியினுள் வருகிறார். அவரே வந்து ‘ஓ என்னுடைய இனிமையிலும் இனிமையான, அன்பிற்கினிய, நீண்டகாலம் தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்டுள்ள, ஆன்மீகக் குழந்தைகளே’ என்று கூறுகின்றார். ஆத்மாக்களாகிய நீங்களே அவர் கூறுவதைச் செவிமடுப்பவர்கள். நீங்கள் அழிவற்றவர்கள் என்பதையும் உங்கள் சரீரங்கள் அழியக்கூடியவை என்பதையும் ஆத்மாக்களாகிய நீங்கள் அறிவீர்கள். பரமாத்மாவாகிய பரமதந்தையால் பேசப்படுகின்ற இந்த மேன்மையான வாசகங்களை ஆத்மாக்களாகிய நாங்கள் இப்பொழுது செவிமடுக்கின்றோம். பரமாத்மாவாகிய பரமதந்தை மாத்திரமே எங்களை மேன்மையான மனிதர்கள் ஆக்குகின்ற, மேன்மையான வாசகங்களைப் பேசுகின்றார். மகாத்மாக்கள், குருமார்கள் போன்றோர்களில் எவரும் மேன்மையான வாசகங்களைப் பேசுவதில்லை. அவர்கள் “சிவோஹம்” என்று கூறும்பொழுது, அதுவும் ஓர் உண்மையான வாசகம் அல்ல. இப்பொழுது நீங்கள் தந்தையிடம் இருந்து மேன்மையான வாசகங்களைச் செவிமடுத்து, அழகிய மலர்கள் ஆகுகின்றீர்கள். முட்களுக்கும் மலர்களுக்கும் இடையில் அதிகளவு வித்தியாசம் உள்ளது. உங்களுடன் பேசுபவர் ஒரு மனிதர் அல்லர் என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். சிவபாபா இவரில் பிரசன்னமாகி உள்ளார். அந்த ஒரேயொருவரும் ஓர் ஆத்மா, ஆனால் அவர் பரமாத்மா என்று அழைக்கப்படுகின்றார். இப்பொழுது தூய்மையற்ற ஆத்மாக்கள் அழைக்கின்றார்கள்: ‘ஓ பரமாத்மாவே, வாருங்கள்! வந்து எங்களைத் தூய்மை ஆக்குங்கள்.’ அவரே எங்களை அதியுயர்வானவர்கள் (பரம்) ஆக்குகின்ற, ஒரேயொரு பரமதந்தை ஆவார். நீங்கள் தேவர்கள் என்று அழைக்கப்படுகின்ற, அனைவரிலும் அதிமேன்மையான மனிதர்கள் ஆகுகின்றீர்கள். “பரம தந்தை” என்னும் வார்த்தை மிகவும் இனிமையானது. அவர்கள் அவரைச் சர்வவியாபி என்று குறிப்பிடும் பொழுது, இனிமை இருப்பதில்லை. உங்களிற் சிலரே உள்ளாரப் பெருமளவு அன்புடன் தந்தையின் நினைவைக் கொண்டிருக்கின்றீர்கள். பௌதீகக் கணவர்களும் மனைவியர்களும் ஒருவரை ஒருவர் பௌதீகமாக நினைவு செய்கின்றார்கள். இங்கே, ஆத்மாக்களாகிய நீங்கள் பெருமளவு அன்புடன் பரமாத்மாவை நினைவுசெய்ய வேண்டும். பக்தி மார்க்கத்தில், அந்தளவு அன்புடன் அவர்கள் அவரை வழிபட முடியாது. அந்த அன்பு இருப்பதில்லை. அவர்கள் அவரை அறியாதபொழுது, எப்படி அவரின்மீது அன்பு செலுத்த முடியும்? இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அவரின்மீது மிகுந்த அன்பு வைத்திருக்கின்றீர்கள். “எனது பாபா” என்று ஆத்மாக்களாகிய நீங்கள் கூறுகின்றீர்கள். ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்கள். பாபா எங்களுக்குத் தன்னுடைய அறிமுகத்தைக் கொடுத்துள்ளார் என்று ஒவ்வொரு சகோதரரும் கூறுகின்றார். எவ்வாறாயினும், அது அன்பு என்று அழைக்கப்பட மாட்டாது. நீங்கள் எவரிடம் இருந்தாவது எதையாவது பெறுகையில், அவர் மீது அன்பு செலுத்துவீர்கள். குழந்தைகள் தங்கள் லௌகீகத் தந்தையை நேசிக்கிறார்கள், ஏனெனில் அவர்கள் அவரிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுகின்றார்கள். ஆஸ்தி எவ்வளவு பெரிதாக உள்ளதோ, அந்தளவுக்கு அதிக அன்பை அவரின் பிள்ளைகள் கொண்டிருப்பார்கள். அவர்களின் தந்தைக்கு எந்தச் சொத்தும் இல்லாமல், அவர்களின் பாட்டனாருக்குச் சொத்து இருக்குமாயின், அப்பொழுது தந்தை மீது அந்தளவு அன்பு இருக்க மாட்டாது. பாட்டனார் மீதான அன்பே அதிகமாக இருக்கும். ஏனெனில் தாங்கள் அவரிடமிருந்து ஏதாவது பணத்தைப் பெறுவோம் என அவர்கள் நம்புகின்றார்கள். இப்பொழுது, இந்த ஒரேயொருவர் எல்லையற்ற தந்தை. இப்பொழுது தந்தை உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இது பெரும் சந்தோஷத்துக்கான ஒரு விடயம்: கடவுள் என்னுடைய தந்தை. படைப்பவராகிய தந்தையை எவரும் அறிய மாட்டார்கள். அவரை அறியாத காரணத்தினால், அவர்கள் தங்களையே தந்தை என்று அழைக்கின்றார்கள். இது, யார் உங்களின் அப்பா என்று நீங்கள் ஒரு சிறுகுழந்தையைக் கேட்கும்போது, இறுதியில் அவர் “நான்தான்” என்று சொல்வதைப் போன்றதாகும். அந்த ஒரேயொருவரே நிச்சயமாகத் தந்தையர்கள் அனைவரினதும் தந்தை என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நாங்கள் இப்பொழுது கண்டடைந்துள்ள எல்லையற்ற தந்தைக்கெனச் சொந்தமாக ஒரு தந்தை கிடையாது. அவரே அதிமேன்மையான தந்தை. ஆகவே, குழந்தைகளாகிய உங்களுக்கு உள்ளே பெரும் சந்தோஷம் இருக்க வேண்டும். அந்த யாத்திரைகளுக்கு மக்கள் செல்லும் பொழுது, அந்தளவு சந்தோஷம் இருப்பதில்லை. ஏனெனில் அங்கே பேறுகள் கிடையாது. அவர்கள் ஒரு தரிசனத்தைப் பெறுவதற்காக அங்கே செல்கின்றார்கள். ஒன்றும் இல்லாததற்காக, அவர்கள் அதிகளவு தடுமாறுகின்றார்கள். அவர்களின் நெற்றிகளும் தேய்கின்றன, அத்துடன் தமது பணம் முழுவதையும் செலவழிக்கின்றார்கள். அவர்கள் பெருமளவு பணத்தைச் செலவழித்திருந்தாலும் எதையும் அடைவதில்லை. பக்தி மார்க்கத்தில் ஒரு வருமானத்தைச் சம்பாதித்திருந்தால், பாரத மக்கள் மிகவும் செல்வந்தர்களாகி இருப்பார்கள். அவர்கள் ஆலயங்கள் போன்றவற்றைக் கட்டுவதற்குப் பில்லியன் கணக்கான ரூபாய்களைச் செலவழிக்கிறார்கள். சோமநாதருக்காக ஓர் ஆலயம் மாத்திரம் இருக்கவில்லை; ஒவ்வோர் அரசரிடமும் ஓர் ஆலயம் இருந்தது. உங்களுக்கு அதிகளவு செல்வம் கொடுக்கப்பட்டது. ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னர் நீங்கள் உலக அதிபதிகள் ஆக்கப்பட்டிருந்தீர்கள். தந்தை மாத்திரமே இதைக் கூறுகின்றார். இற்றைக்கு 5000 வருடங்களின் முன்னர், நான் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்து, உங்களை அவர்கள் போன்று ஆகும்படி செய்தேன். நீங்கள் இப்பொழுது என்னவாக ஆகியுள்ளீர்கள் என்று பாருங்கள்! இது உங்கள் புத்தியில் பிரவேசிக்க வேண்டும். நாங்கள் மிகவும் மேன்மையானவர்களாக இருந்தோம்! 84 பிறவிகளை எடுத்த பின்னர், இப்பொழுது நாங்கள் தரையில் வீழ்ந்து விட்டோம்; நாங்கள் சிப்பிகளைப் போன்று பெறுமதி அற்றவர்கள் ஆகியுள்ளோம். எங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்ற பாபாவிடம் இப்பொழுது நாங்கள் செல்கின்றோம். இது மாத்திரமே ஆத்மாக்கள் தந்தையைச் சந்திக்கின்ற ஒரேயொரு யாத்திரை. ஆகவே, உங்களுக்கு உள்ளே அந்த அன்பு இருக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் இங்கே வரும்பொழுது, நீங்கள் யாரிடமிருந்து மீண்டும் ஒருமுறை உலக இராச்சியத்தைப் பெறவுள்ளீர்களோ, அந்தத் தந்தையிடம் செல்கின்றீர்கள் என்னும் விழிப்புணர்வை உங்கள் புத்தி கொண்டிருக்க வேண்டும். அந்தத் தந்தை எங்களுக்குக் கற்பித்தல்களைக் கொடுக்கின்றார்: குழந்தைகளே, தெய்வீகக் குணங்களைக் கிரகியுங்கள்! தூய்மை ஆக்குபவராகிய, சர்வசக்திவான் தந்தையாகிய என்னை நினைவுசெய்யுங்கள்! ஒவ்வொரு கல்பத்திலும் நான் வந்து உங்களுக்குக் கூறுகின்றேன்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் எல்லையற்ற தந்தையிடம் செல்கின்றீர்கள் என்பது உங்கள் இதயத்தில் பிரவேசிக்கட்டும். தந்தை கூறுகின்றார்: நான் மறைமுகமானவர். ஆத்மா கூறுகின்றார்: நான் மறைமுகமானவன். நீங்கள் சிவபாபாவிடமும் பிரம்ம தாதாவிடமும் செல்கின்றீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள்; அவர்கள் இணைந்துள்ளார்கள். எங்களை உலக அதிபதிகள் ஆக்குபவரைச் சந்திக்க நாங்கள் செல்கின்றோம். எல்லையற்ற உள்ளார்ந்த சந்தோஷம் இருக்கட்டும். நீங்கள் உங்கள் வீட்டை விட்டு, இங்கே உங்கள் மதுவனத்துக்கு வரும்பொழுது, உங்களுக்குள் சந்தோஷம் பொங்க வேண்டும். எங்களுக்குக் கற்பிப்பதற்குத் தந்தை வந்திருப்பதுடன், தெய்வீகக் குணங்களைக் கிரகிப்பதற்கான வழியையும் அவர் எங்களுக்குக் காட்டுகின்றார். நீங்கள் உங்கள் வீடுகளை விட்டு வரும்பொழுது, உங்களுக்குள் இந்தச் சந்தோஷம் இருக்க வேண்டும். ஓர் இளம்பெண் தன்னுடைய எதிர்காலக் கணவனைச் சந்திக்கச் செல்லும்பொழுது, நகைகள் போன்றவற்றை அணிந்து கொள்வாள். அத்துடன் அவளின் முகமும் மலர்ந்திருக்கும். அவளுடைய முகம் துன்பத்தைப் பெறுவதற்காக மலர்கின்றது. உங்கள் முகங்கள் சதா சந்தோஷத்தைப் பெறுவதற்காக மலர்கின்றன. ஆகவே, அத்தகையதொரு தந்தையைச் சந்திப்பதற்கு வருவதில் அதிகளவு சந்தோஷம் இருக்க வேண்டும். நாங்கள் இப்பொழுது எல்லையற்ற தந்தையைக் கண்டடைந்து விட்டோம். நாங்கள் சத்தியயுகத்துக்குச் செல்லும்பொழுது, எங்கள் கலைகள் குறைவடையும். பிராமணர்களாகிய நீங்கள் இப்பொழுது கடவுளின் குழந்தைகள். கடவுள் இங்கே அமர்ந்திருந்து உங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர் எங்கள் தந்தையும் அத்துடன் எங்கள் ஆசிரியரும் ஆவார். அவர் எங்களுக்குக் கற்பித்து, எங்களைத் தூய்மையாக்கிப் பின்னர் எங்களைத் திரும்பவும் தன்னுடன் வீட்டுக்கு அழைத்துச் செல்வார். ஆத்மாக்களாகிய நாங்கள் இப்பொழுது இந்த இராவணனின் அழுக்கான இராச்சியத்தில் இருந்து விடுவிக்கப்படுகின்றோம். உங்களுக்குள் பெருமளவு சந்தோஷம் இருக்க வேண்டும். தந்தை உங்களை உலக அதிபதிகள் ஆக்குவதால், நீங்கள் மிக நன்றாகக் கற்க வேண்டும். மாணவர்கள் நன்கு கற்கும்பொழுது, சிறந்த மதிப்பெண்களுடன் சித்தி அடைகின்றார்கள். குழந்தைகள் கூறுகின்றார்கள்: ‘பாபா, நான் ஸ்ரீ நாராயணன் ஆகுவேன்.’ இதுவே சத்திய நாராயணன் ஆகுகின்ற உண்மைக் கதை. இதுவே சாதாரண மனிதனிலிருந்து நாராயணனாக மாறுவதற்கான கதையாகும். பிறவிபிறவியாக நீங்கள் அந்தப் பொய்யான கதைகளையே கேட்டு வருகின்றீர்கள். ஒருமுறை மாத்திரமே இந்த நேரத்தில், நீங்கள் தந்தையிடம் இருந்து உண்மைக் கதையைக் கேட்கின்றீர்கள். அது பின்னர் பக்தி மார்க்கத்தில் தொடர்கின்றது. சிவபாபா இரவில் பிறப்பெடுத்தார் என்று கூறப்பட்டுள்ளது, ஆகவே அவர்கள் அவருடைய பிறந்தநாளை வருடாவருடம் கொண்டாடுகின்றார்கள். எவ்வாறாயினும், அவர் எப்பொழுது வந்தார், அவர் வந்தபோது என்ன செய்தார் என்பதை எவரும் அறியார். அச்சா. அவர்கள் கிருஷ்ணரின் பிறந்தநாளையும் கொண்டாடுகின்றார்கள். அவர் எப்பொழுது வந்தார், அவர் எவ்வாறு வந்தார், அவர் என்ன செய்தார் என்பதையும் எவரும் அறிய மாட்டார்கள். அவர் கம்சனின் தேசத்தில் வந்தார் என்று அவர்கள் கூறுகின்றார்கள். அவர் எவ்வாறு ஒரு தூய்மையற்ற தேசத்தில் பிறப்பெடுக்க முடியும்? நீங்கள் எல்லையற்ற தந்தையிடம் செல்கின்றீர்கள் என்று குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டும். எவ்வாறு இன்ன இன்னார் தங்கள் மீது (ஞான) அம்பை எய்து தங்களுக்கு பாபா வந்துள்ளார் என்று கூறினார்கள் என்று சிலர் தங்களுடைய அனுபவத்தைக் கூறுகின்றார்கள். அந்த நாளிலிருந்து அவர்கள் தந்தையை மாத்திரமே தொடர்ந்தும் நினைவு செய்துள்ளார்கள். இந்த யாத்திரையே நீங்கள் தந்தையர்கள் அனைவரிலும் மகத்துவமானவரிடம் செல்வதற்கு உரியதாகும். பாபா உயிர்வாழ்வதுடன், அவர் தனது குழந்தைகளைச் சந்திக்கவும் வருகின்றார். அந்த யாத்திரைகள் பௌதீகமானவை. இங்கே, தந்தை உயிர்வாழ்கின்றார். ஆத்மாக்களாகிய நாங்கள் எங்கள் சரீரங்களினூடாகப் பேசுவதைப் போன்று, பரமாத்மாவாகிய தந்தையும் ஒரு சரீரத்தினூடாகப் பேச வேண்டி உள்ளது. இக்கல்வியானது உங்கள் எதிர்கால 21 பிறவிகளுக்கான வாழ்வாதாரத்திற்கு உரியது. ஏனைய கல்விகள் இந்த ஒரு பிறவிக்கு மாத்திரமே உரியவை. ஆகவே, நீங்கள் எந்தக் கல்வியைக் கற்க வேண்டும்? நீங்கள் என்ன தொழிலைச் செய்ய வேண்டும்? தந்தை கூறுகின்றார்: இரண்டையும் செய்யுங்கள்! நீங்கள் உங்கள் வீட்டையும் குடும்பத்தையும் துறந்து சந்நியாசிகள் செய்வதைப் போன்று, காடுகளில் வாழ்வதற்குச் செல்லக்கூடாது. இப்பாதை இல்லறப் பாதை. இந்தக்கல்வி இரு சாராருக்கும் உரியது. அனைவருமே கற்பார்கள் என்பதல்ல. சிலர் மிக நன்றாகக் கற்பார்கள், சிலர் சிறிது குறைவாகக் கற்பார்;கள். அம்பானது சிலரை உடனடியாகவே தைக்கும், ஏனையோர் பித்துப் பிடித்ததைப் போன்று தொடர்ந்தும் பேசுவார்கள். சிலர் கூறுகின்றார்கள்: ஆம், நான் புரிந்துகொள்ள முயற்சிப்பேன். ஏனையோர் கூறுகின்றார்கள்: நான் இவ்விடயங்களை எங்காவது ஏகாந்தத்தில் அமர்ந்திருந்து புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் இதனை விட்டுச் சென்று, பின்னர் வருவதே இல்லை. எவரையாவது இந்த ஞான அம்புகள் தைத்தால், அவர் அனைத்தையும் புரிந்துகொள்வதற்கு உடனடியாகவே வருவார். சிலர் தங்களுக்கு நேரம் இல்லை என்று கூறுகின்றார்கள். அவர்களை அம்பு தைக்கவில்லை என்பதை உங்களால் அதிலிருந்து புரிந்துகொள்ள முடியும். பாபாவை அம்பு தைத்தபொழுது, எவ்வாறு பாபா உடனடியாக அனைத்தையும் விட்டு நீங்கினார் என்று பாருங்கள்!தான் ஓர் இராச்சியத்தைப் பெறப் போவதாக அவர் நம்பினார். ஆகவே, “அவற்றோடு ஒப்பிடும்போது இவை எல்லாம் என்ன? நான் தந்தையிடம் இருந்து இராச்சியத்தைக் கோர விரும்புகின்றேன்” என அவர் எண்ணினார். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது உங்கள் வியாபாரம் போன்றவற்றைச் செய்யுங்கள், ஆனால் ஒரு வாரத்துக்கு வந்து இவை அனைத்தையும் மிகவும் நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் குடும்பத்தில் கவனம் செலுத்துவதுடன், உங்கள் படைப்பையும் பராமரிக்க வேண்டும். அவர்களோ (சந்நியாசிகள்) தங்கள் குடும்பத்தை உருவாக்கிய பின்னர் வீட்டை விட்டு ஓடிவிடுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் உங்கள் படைப்பை உருவாக்கினீர்கள். ஆகவே, அவர்களை மிகவும் நன்றாகப் பராமரியுங்கள். உங்கள் மனைவியும் பிள்ளைகளும் நீங்கள் கூறுவதைச் செவிமடுத்தால், அவர்கள் கீழ்ப்படிவானவர்களும் தகுதி வாய்ந்தவர்களும் ஆவார்கள். அவர்கள் கேட்காவிட்டால், கீழ்ப்படிவற்றவர்களும் தகுதியற்றவர்களும் ஆவார்கள். யார் தகுதிவாய்ந்தவர் எனவும், யார் தகுதியற்றவர் எனவும் உங்களால் கூற முடியும். தந்தை கூறுகின்றார்: நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றினால், மேன்மையானவர்கள் ஆகுகின்றீர்கள். இல்லாவிட்டால், உங்களால் ஓர் ஆஸ்தியைப் பெற முடியாது. தூய்மையாகி, ஒரு தகுதிவாய்ந்த குழந்தையாகி, தந்தையின் பெயரைப் புகழடையச் செய்யுங்கள். ஒருமுறை அவர்களை அம்பானது தைத்ததும் அவர்கள் கூறுவார்கள்: ‘இதுதான்! நான் இப்பொழுது ஓர் உண்மையான வருமானத்தைச் சம்பாதிப்பேன்.’ உங்களைச் சிவாலயத்துக்கு அழைத்துச் செல்லவே தந்தை வந்துள்ளார். நீங்களும் சிவாலயத்துக்குச் செல்லத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகவேண்டும். இதற்கு முயற்சி தேவை. அவர்களுக்குக் கூறுங்கள்: ‘இப்பொழுது சிவபாபாவை நினைவுசெய்யுங்கள். மரணம் முன்னால் உள்ளது’. அவர்களும் நன்மை பெற வேண்டும். அவர்களுக்குக் கூறுங்கள்: ‘இப்பொழுது தந்தையை நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும்’. உங்கள் குடும்பம், உங்கள் புகுந்த வீடு இரண்டையும் ஈடேற்றுவது புதல்விகளாகிய உங்களின் கடமையாகும். உங்களை அவர்கள் அங்கே அழைப்பதனால், அவர்களுக்கு நன்மையளிப்பது உங்கள் கடமை. கருணை நிறைந்தவர்கள் ஆகுங்கள். தூய்மையற்ற, தமோபிரதான் மனிதர்களுக்குச் சதோபிரதான் ஆகுகின்ற வழியைக் காட்டுங்கள். அனைத்தும் நிச்சயமாகப் புதியதிலிருந்து பழையதாக ஆகுகின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். நரகத்தில், ஆத்மாக்கள் அனைவரும் தூய்மை அற்றவர்கள். ஆகவே, தூய்மை ஆக்கப்படுவதற்காக, அவர்கள் கங்கையில் நீராடுவதற்குச் செல்கின்றார்கள். எவ்வாறாயினும், அனைத்துக்கும் முதலில், அவர்கள் தூய்மை அற்றவர்கள் என்றும் அதனால் அவர்கள் தூய்மையாக வேண்டும் என்பதையும் அவர்கள் புரிந்துகொள்ளும்படி செய்ய வேண்டும். தந்தை ஆத்மாக்களுக்குக் கூறுகின்றார்: என்னை நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். எனது செய்தியைச் சாதுக்கள், புனிதர்கள் அனைவருக்கும் கொடுங்கள்: ‘தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள்!’. இந்த யோகத் தீயினூடாக அல்லது நினைவு யாத்திரையினூடாக ஆத்மாக்களில் இருந்து கலப்படமானது தொடர்ந்தும் அகற்றப்படும். பின்னர் நீங்கள் தூய்மை ஆக்கப்பட்டு என்னுடன் திரும்பி வருவீர்கள். நான் உங்கள் அனைவரையும் திரும்பவும் வீட்டுக்கு என்னுடன் அழைத்துச் செல்வேன். ஒரு தேளானது மென்மையான ஏதாவது கிடைக்கும் வரையில் தொடர்ந்தும் நகர்ந்து செல்கின்றது. பின்னர், அது அங்கே கொட்டும். ஒரு கல்லைக் கொட்டுவதால், அது எதனை அடையப் போகிறது? உங்களாலும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க முடியும். தனது பக்தர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்பதைத் தந்தை உங்களுக்குக் கூறியுள்ளார். அவர்கள் சிவாலயங்களிலும் கிருஷ்ணரின் ஆலயங்களிலும் இலக்ஷ்மி நாராயணனின் ஆலயங்களிலும் இருக்கின்றார்கள். என்னைப் பக்தர்கள் தொடர்ந்தும் வழிபடுகின்றார்கள். அவர்களும் என்னுடைய குழந்தைகளே. அவர்களும் என்னிடமிருந்து இராச்சியத்தைப் பெற்றார்கள். ஆனால் அவர்கள் இப்பொழுது பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களில் இருந்து பூஜிப்பவர்கள் ஆகிவிட்டார்கள். அவர்கள் தேவர்களின் பக்தர்களும் ஆவார்கள். சிவனின் கலப்படமற்ற வழிபாடே, முதற்தரமான வழிபாடு. படிப்படியாக விழும்பொழுது, அவர்கள் பஞ்சதத்துவங்களை வழிபட ஆரம்பித்தார்;கள். இவரே ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தையான, சிவபாபா என்று சிவனை வழிபடுபவர்களுக்கு விளங்கப்படுத்துவது இலகுவானது. அவர் எங்களுக்கு எங்களுடைய சுவர்க்க ஆஸ்தியைக் கொடுக்கிறார். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது என்னை நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நான் உங்களுக்கு இந்தச் செய்தியைக் கொடுக்கிறேன். தந்தை கூறுகின்றார்: நான் ஞானக்கடலாகிய, தூய்மையாக்குபவர். நான் உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றேன். நான் உங்களைத் தூய்மை ஆக்குவதற்காக, உங்களுக்கு யோகத்தையும் கற்பிக்கின்றேன். பிரம்மாவின் சரீரத்தினூடாக நான் உங்களுக்கு இந்தச் செய்தியைக் கொடுக்கிறேன்: என்னை நினைவுசெய்யுங்கள்! உங்கள் 84 பிறவிகளை நினைவுசெய்யுங்கள். நீங்கள் பக்தர்களை ஆலயங்களிலும் கும்பமேளாக்களிலும் கண்டுபிடிப்பீர்கள். கங்கையா அல்லது பரமாத்மாவா தூய்மையாக்குபவர் என்பதை நீங்கள் அங்கே விளங்கப்படுத்த முடியும். ஆகவே, நீங்கள் யாரிடம் செல்கின்றீர்கள் எனும் சந்தோஷத்தைக் குழந்தைகளாகிய நீங்கள் கொண்டிருக்க வேண்டும். அவர் மிகவும் சாதாரணமானவர்! அவர் என்ன ஆடம்பரத்தை வெளிப்படுத்த வேண்டும்? சிவபாபா ஒரு மகத்துவமானவராகக் காணப்படுவதற்கு அவர் என்ன செய்ய வேண்டும்? அவரால் சந்நியாசிகளைப் போல் காவித் துணிகளை அணிய முடியாது. தந்தை கூறுகின்றார்: நான் ஒரு சாதாரண சரீரத்தை எடுக்கின்றேன். என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு ஆலோசனை சொல்லுங்கள்! இந்த இரதத்தை நான் எப்படி அலங்கரிக்க வேண்டும்? அவர்கள் ஹுசேனின் குதிரையை ஓட்டும்பொழுது, அதை மிக அழகாக அலங்கரிக்கின்றார்கள். இங்கு, அவர்கள் சிவபாபாவின் இரதத்தை ஒரு காளைமாடு போன்று சித்தரித்துள்ளார்கள். ஒரு காளைமாட்டின் நெற்றியில் சிவனின் கோள வடிவத்தையும் அவர்கள் இடுகின்றார்கள். சிவபாபா எப்படி ஒரு காளைமாட்டில் பிரவேசிக்க முடியும்? அவர்கள் ஏன் ஆலயங்களில் ஒரு காளைமாட்டைக் காட்டி உள்ளார்கள்? அதுவே சங்கரரின் இரதம் என்று அவர்கள் கூறுகின்றார்கள். சங்கரருக்குச் சூட்சும லோகத்தில் ஓர் இரதம் இருக்குமா? அவை அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கு உரியவை. அத்துடன் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களுக்குள் சத்தியம் செய்யுங்கள்: 1) இப்பொழுது நீங்கள் ஓர் உண்மையான வருமானத்தைச் சம்பாதிப்பீர்கள். 2) நீங்கள் உங்களைச் சிவாலயத்துக்குச் செல்லத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்குவீர்கள். 3) நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால், ஒரு தகுதிவாய்ந்த குழந்தையாகி, தந்தையின் பெயரைப் புகழடையச் செய்வீர்கள்.

2. கருணை நிறைந்தவர்களாகித் தமோபிரதான் மனிதர்களைச் சதோபிரதான் ஆக்குங்கள். எல்லோருக்கும் நன்மை செய்யுங்கள். மரணம் வர முன்னர் எல்லோருக்கும் தந்தையை நினைவூட்டுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் மனித ஆத்மாக்கள் எல்லோருக்கும் முக்காலங்களின் காட்சிகளை அருளும் ஒரு தெய்வீகக் கண்ணாடி ஆகுவீர்களாக.

மனித ஆத்மாக்கள் எல்லோரும் தமது முக்காலங்களின் காட்சியைக் காணத்தக்க தெய்வீகக் கண்ணாடிகளாகக் குழந்தைகளான நீங்கள் இப்போது ஆகவேண்டும். அவர்கள் எப்படி இருந்தார்கள், எப்படி இருக்கிறார்கள், எதிர்காலத்தில் எப்படி ஆகப் போகிறார்கள் என்பதை அவர்களால் தெளிவாகப் பார்க்கக்கூடியதாக இருக்க வேண்டும். பல பிறவிகளாகத் தமக்கு இருந்த தாகமும் ஆசைகளும் நிறைவேறப் போகின்றன, தாம் முக்தி அடைகின்ற அல்லது சுவர்க்கத்திற்குப் போகின்ற தமது ஆசை நிறைவேறப் போகின்றது என்பதை அவர்கள் பார்க்கும்போதும் அனுபவம் செய்யும்போதும் தந்தையிடம் இருந்து தமது ஆஸ்தியைப் பெறுவதற்காக இலகுவாகக் கவரப்பட்டு இங்கே வருவார்கள்.

சுலோகம்:
ஒரே பலம், ஒரே நம்பிக்கை என்ற பாடம் சதா உறுதியாக இருக்க வேண்டும். அப்போது உங்களால் கஷ்டக் கடலின் மத்தியில் இருந்து அப்பால் இலகுவாகச் செல்ல முடியும்.

அவ்யக்த சமிக்கை: ஆன்மீக இராஜரீகம் மற்றும் தூய்மையின் ஆளுமையைக் கடைப்பிடியுங்கள்.

நீங்கள் உங்களின் தூய்மை என்ற இராஜரீகத்துடன் இருக்கும்போது வாரிசு தரமுள்ள ஆத்மாக்கள் வெளிப்படுத்தப்படுவார்கள். உங்களின் பார்வை எல்லைக்கு உட்பட்ட எதனாலும் ஒருபோதும் கவரப்படக்கூடாது. ஒரு வாரிசு என்பவர் உரிமை உடையவர். உரிமையைக் கொண்டிருக்கும் ஸ்திதியை சதா கொண்டிருப்பவர்கள் ஒருபோதும் மாயையில் தங்கியிருப்பதில்லை. சகல உரிமைகளையும் கொண்டிருக்கும் தூய போதையைக் கொண்டிருப்பதன் மூலம் இங்கே சகல உரிமைகளையும் கொண்டிருக்கும் ஸ்திதியைக் கொண்டிருப்பீர்கள், அத்துடன் அங்கேயும் சகல உரிமைகளையும் கொண்டிருப்பீர்கள்.