16.06.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது உண்மையான இராஜயோகிகள். நீங்கள் இராஜரிஷிகள் என்றும் அழைக்கப்படுகின்றீர்கள். இராஜரிஷி என்றால் தூய்மையானவர்கள் என்று அர்த்தம்.

கேள்வி:
குழந்தைகளாகிய உங்களால் எப்போது இராவணனின் புதைமணலில் இருந்து மக்களை விடுவிக்க முடியும்?

பதில்:
நீங்கள் அந்தப் புதைமணலில் இருந்து வெளியில் வரும்போதே ஆகும். புதை மணலில் இருந்து வெளியில் வந்தவர்களின் அடையாளமானது, அவர்கள் ஆசைகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டிருப்பதாகும். அவர்கள் ஒரு தந்தையைத் தவிர வேறு எவரையும் நினைவு செய்யமாட்டார்கள். நல்ல ஆடைகளுக்கோ அல்லது நல்ல உணவிற்கோ எந்தப் பேராசையும் இருக்கக்கூடாது. நீங்கள் முற்றாக எளிமையாக இருக்கின்றீர்கள். நீங்கள் உங்களின் சரீரத்தையும்கூட மறந்து விட்டீர்கள். “எதுவுமே எனக்கு சொந்தம் இல்லை. நான் ஓர் ஆத்மா.” இவ்வாறான ஆத்ம உணர்வுள்ள குழந்தைளாலேயே இராவணனின் புதைமணலில் இருந்து மக்களை விடுவிக்கமுடியும்.

பாடல்:
நீங்களே அன்புக்கடல். நாங்கள் ஒரு துளிக்காக ஏங்குகின்றோம்.

ஓம் சாந்தி.
சில நேரங்களில் பாடல்கள் இசைக்கப்படும் போது, குழந்தைகளிடம் அதன் அர்த்தம் கேட்கப்பட்டது. இப்பொழுது என்னிடம் கூறுங்கள்: எப்பொழுதில் இருந்து இந்தப் பாதையை மறந்தீர்கள்? (சிலர் துவாபரயுகத்தில் இருந்து என்றும், சிலர் சத்திய யுகத்திலிருந்து என்றும் கூறினார்கள்) துவாபரயுகத்தில் இருந்து பாதையை மறந்தாகக் கூறியது பிழையானது. நீங்கள் சத்தியயுகத்தில் இருந்தே பாதையை மறந்தீர்கள். இப்பொழுது உங்களுக்குப் பாதையைக் காட்டக்கூடிய ஒருவரை நீங்கள் கண்டு கொண்டீர்கள். சத்தியயுகத்தில் உங்களுக்கு பாதையைக் காட்டக்கூடிய ஒருவரை நீங்கள் அறியமாட்டீர்கள். அங்கேயுள்ள எவரும் தந்தையை அறியமாட்டார்கள், அதாவது, அவர்கள் அவரை மறந்து விட்டனர். மறப்பதும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. எனவே அவர் இப்பொழுது உங்களுக்குப் பாதையைக் காட்ட வந்துள்ளார். கடவுளே எங்களுக்குப் பாதையைக் காட்டுங்கள் என்று அவர்கள் கூறுகின்றனர். சத்தியயுகத்தில் இருந்தே நாங்கள் தந்தையை மறந்து விட்டோம். உங்களுடைய புத்திகளைப் பயன்படுத்துவதற்காகவே பாபா இந்தக் கேள்விகளை உங்களிடம் கேட்கின்றார். இந்த ஞானம் தனித்துவமானது. தந்தை மட்டுமே ஞானக்கடல் ஆவார். தந்தை உங்களுக்கு நேரடியாகவே கூறுகின்றார்: நானே ஞானக்கடலும், சந்தோஷக்கடலும் ஆவேன். தூய்மையாக்குபவர் உண்மையில் ஒரேயொரு தந்தையே என்பதை நீங்களும் அறிவீர்கள். பக்திமார்க்கத்தில் உள்ளவர்களும் இதை நம்புகின்றனர். அமைதி தாமமும், சந்தோஷதாமமும் தூய்மையான உலகங்கள் ஆகும். அரைக் கல்பத்திற்கு சந்தோஷதாமமும், அரைக் கல்பத்திற்கு துன்பதாமமும் இருக்கின்றது. குழந்தைகளாகிய நீங்களும் இதை மிக நன்றாக அறிவீர்கள். தந்தை அன்புக்கடல் ஆவார். இதனாலேயே அனைவரும் தந்தையாகிய அவரை அழைக்கின்றார்கள். ஆயினும் அவர் யார், எவ்வாறு வருகின்றார் என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள். உண்மையில் இது தேவர்களின் இராச்சியமாக இருந்தது என்பது 5000 வருடங்களுக்கு முன்னரான விடயமாகும். சத்தியயுகத்தில் சற்கதி இருக்கின்றது. ஆனால் எவ்வாறு சீரழிவு இடம்பெற்றது என யாரால் எனக்குக் கூறமுடியும்? தந்தை மாத்திரமே வந்து, துபாவரயுகத்தில் இருந்து நீங்கள் சீரழிவில் இருப்பதாகவும், இதனாலேயே நீங்கள் அழைக்கின்றீர்கள் என்றும் கூறுகின்றார். இது புதிய விடயமல்ல என்று நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். தந்தை ஒவ்வொரு கல்பத்திலும் வருகின்றார். அசரீரியான தந்தை இப்பொழுது ஆத்மாக்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். எவருமே தனது சொந்த ஆத்மா பற்றி அறியமாட்டார்கள். எவ்வாறு அவரது முழுப்பாகமும் ஆத்மாவில் பதியப்பட்டுள்ளது என எவராலுமே உங்களுக்குக் கூறமுடியாது. அவர்கள் பல தடவைகள் அவ்வாறாகி அந்தப்பாகத்தை நடித்ததாக ஒருபோதும் கூறமாட்டார்கள். அவர்கள் இந்த நாடகம் பற்றியும் அறிய மாட்டார்கள். அவர்கள் நூறாயிரக்கணக்கான வருடங்கள் பற்றிப் பேசிய போதிலும், அதுவும் நாடகமே ஆகும். குறைந்தபட்சம் இந்த நாடகம் மறுபடியும் இடம்பெறும் என்று அவர்கள் கூறுகின்றார்கள். தந்தையே குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த ஞானத்தை நேரடியாகக் கொடுக்கின்றார். அவர் இந்த வாயின் மூலமாக உங்களுடன் பேசுகின்றார். சிவபாபா உங்களை தனக்குச் சொந்தமாக்கி உள்ளார் என்றும் அவர் பிரம்மாவின் மூலம் உங்களை பிராமணர்கள் ஆக்கியுள்ளார் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இவர் சிவபாபாவின் குழந்தையும், அத்துடன் அவரது மனைவியும் ஆவார். பாருங்கள், எத்தனை குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றார்கள்! இவர் ஓர் ஆணாக இருந்ததால், குழந்தைகளைப் பாராமரிப்பதற்கு உதவி செய்வதற்காக சரஸ்வதி ஓர் உதவியாளராக ஆக்கப்பட்டார். இந்த விடயங்கள் சமயநூல்களில் குறிப்பிடப்படவில்லை. இது நடைமுறை விடயம். தந்தையே இராஜயோகம் கற்பிக்கின்றார். இராஜயோகம் கற்பிக்கப்பட்டவர்கள் அரசர்கள் ஆகி 84 பிறவிகள் எடுத்தார்கள். பல மக்கள் பைபிள், குரான், வேதங்கள், சமயநூல்கள் என்பவற்றைக் கற்கின்றார்கள். ஆனால் அவர்கள் எதையுமே புரிந்து கொள்வதில்லை. நீங்கள் பஞ்சதத்துவங்களுடன் யோகம் செய்யும் யோகிகளல்ல, நீங்கள் தந்தையுடனேயே யோகம் செய்கின்றீர்கள். அதாவது, நீங்கள் தந்தையை நினைவு செய்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது இராஜயோகிகள். நீங்கள் இராஜரிஷிகள், அதாவது யோகிராஜ் (மகாயோகியின் பட்டம்) ஆவீர்கள். தூய்மையானவர்களே யோகிகள் என்று அழைக்கப்படுகின்றனர். நீங்கள் சுவர்க்க இராச்சியத்தைக் கோருவதற்காகவே யோகிகள் ஆகியுள்ளீர்கள். முதலில் தந்தை கூறுகின்றார்: தூய்மை ஆகுங்கள். அத்தகைய ஆத்மாவே யோகி எனப்படுகின்றார். நீங்கள் அனைவரும் இராஜயோகிகள். இது பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்களாகிய பிராமணர்களாகிய உங்களையே குறிக்கின்றது. உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் மாணவர்கள். மாணவர்கள் எப்போதாவது தமது ஆசிரியரை மறப்பார்களா? சிவபாபா உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆயினும், அதற்குப் பதிலாக, மாயை உங்களை மறக்கச் செய்கின்றாள். உங்களுக்குக் கற்பிக்கின்ற ஆசிரியரை நீங்கள் மறக்கின்றீர்கள். கடவுள் உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்று புரிந்து கொள்ளும் போதே அந்த போதை இருக்க முடியும். ஐ.சி.எஸ் பரீட்சைக்குக் கற்கும் மாணவர்கள் அதிகளவு போதையைக் கொண்டிருப்பார்கள்! நீங்கள் 21 பிறவிகளுக்கான இராஜயோகக் கல்வியைக் கற்கின்றீர்கள். நீங்கள் பின்னரும் கற்கவேண்டும் (சத்தியயுகத்தில்). நீங்கள் இளவரசருக்கான கல்வியுடன் மொழி போன்றவற்றையும் கற்பீர்கள். நீங்கள் இந்தப் பாதையைச் சத்தியயுக ஆரம்பத்தில் இருந்தே மறக்கின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். பின்னர் நீங்கள் ஒவ்வொரு பிறவியிலும் ஒரு படி கீழே இறங்குகின்றீர்கள். நீங்கள் இப்பொழுது எவ்வாறு ஏறுகின்றீர்கள் என்றும், எவ்வாறு இறங்குகின்றீர்கள் என்றும் அனைத்தையும் நினைவு செய்கின்றீர்கள். இந்த ஏணியை மிக நன்றாக நினைவு செய்யுங்கள். நாங்கள் 84 பிறவிகளை முடித்து விட்டோம். நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும், எனவே சந்தோஷம் உள்ளது. இது ஓர் எல்லையற்ற நாடகமாகும். ஆத்மா மிகவும் சிறியவர் ஆவார். ஆத்மா அவரது பாகங்களை நடிப்பதிலிருந்து களைப்படைந்து கூறுகின்றார்: பாபா, எனக்குப் பாதையைக் காட்டுங்கள், அதனால் நான் ஓய்வு எடுத்து அமைதி, சந்தோஷத்தைப் பெற முடியும். நீங்கள் சந்தோஷ தாமத்தில் உள்ளபோது உங்களுக்கு அமைதியும் சந்தோஷமும் இரண்டும் இருக்கும். அங்கு குழப்பங்கள் எதுவும் இருக்காது. ஆத்மா அமைதியாக இருப்பார். அமைதிக்கு இரு இடங்கள் உள்ளன: சாந்திதாமம், சந்தோஷதாமம். துன்ப உலகில் அமைதியின்மையே உள்ளது. இது ஒரு கல்வி ஆகும். பாபா உங்களை அமைதி உலகின் ஊடாகச் சந்தோஷ உலகிற்கு அழைத்துச் செல்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களுக்குக் கூறவேண்டிய தேவையில்லை. நீங்கள் இங்கே உங்களுடைய பாகங்களை நடிக்க வந்தீர்கள் எனவும் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும் எனவும் அறிவீர்கள். உங்களிடம் இந்த சந்தோஷம் உள்ளது. அமைதியின் சந்தோஷம் இல்லை. எங்கள் பாகங்களை நடிப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சியும் சந்தோஷமும் உள்ளன. தந்தையை நினைவு செய்வதனால் மாத்திரமே எங்கள் பாவங்கள் அழிக்கப்படும் என்பதை நாங்கள் அறிவோம். சிலர் மன அமைதியைக் கேட்கின்றார்கள். இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவது தவறாகும், இல்லை. நாங்கள் தந்தையை நினைவு செய்கின்றோம், அதனால் எங்கள் பாவங்களை அழிக்க முடியும். மனம் அமைதியாக இருக்க முடியாது. எவருமே செயல்கள் செய்யாமல் இருக்க முடியாது. அந்தப் புரிந்துணர்வு இருக்கின்றது. நீங்கள் தூய்மை, அமைதி, சந்தோஷம் எனும் ஆஸ்தியைத் தந்தையிடம் இருந்து பெறுகின்றீர்கள், எனவே அந்த சந்தோஷம் இருக்கவேண்டும். இது துன்ப உலகம் ஆகும். இங்கே சந்தோஷம் இருக்க முடியாது. மக்கள் அமைதிதாமத்தையும், சந்தோஷதாமத்தையும் மறந்து விட்டார்கள். அதிகளவு பணத்தை வைத்திருப்பவர்கள் தாங்கள் சந்தோஷமாக இருப்பதாக நம்புகின்றனர். சந்நியாசிகள் அவர்களுடைய வீட்டை விட்டுக் காட்டுக்குச் செல்கின்றனர். அங்கே எந்தக் குழப்பங்கள் போன்றவையும் இருக்க மாட்டாது. எனவே அவர்கள் அமைதி நிறைந்தவர்கள் ஆகின்றனர். ஆயினும், அது தற்காலிக காலத்திற்கு மாத்திரமே ஆகும். நீங்கள் ஆத்மாவின் ஆதிதர்மத்தில் உங்களை ஸ்திரமாக்கும்போது நீங்கள் அமைதியில் நிலைத்து இருக்கின்றீர்கள். இங்கே நீங்கள் தொடர்புகளைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் ஒரு பாகத்தை நடிக்க வேண்டும். நீங்கள் இங்கே செயல்கள் செய்வதற்கே வந்துள்ளீர்கள். ஓர் ஆத்மா நிச்சயமாக செயல்களைச் செய்யவே வேண்டும். எல்லையற்ற தந்தையே இந்த விளக்கத்தைக் கொடுக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். அசரீரியான கடவுள் பேசுகின்றார்: நீங்கள் ஆத்மாக்கள் என்பதையும் உங்களுடைய தந்தை பரமாத்மா என்பதையும் இப்பொழுது அறிவீர்கள். பரமாத்மா என்றால் கடவுள் என்பதாகும். ஆத்மாக்கள் அவரை அழைக்கின்றார்கள். தந்தையே அனைவருக்கும் சற்கதி அருள்பவர் ஆவார். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, இப்பொழுது ஆத்ம உணர்வு உடையவர் ஆகுங்கள்! இதற்கு முயற்சி தேவையாகும். அரைக்கல்பமாக உங்களில் கலக்கப்பட்ட கலப்படம் இந்த நினைவின் மூலமே அகற்றப்பட முடியும். நீங்கள் நிஜத்தங்கம் ஆகவேண்டும். நிஜத்தங்கத்தில் கலப்படம் கலக்கப்பட்டுப் பின்னரே அந்தத் தங்கத்தில் இருந்து ஆபரணங்கள் செய்யப்படுகின்றன. ஆரம்பத்தில் நீங்கள் நிஜத்தங்கமாக இருந்தீர்கள். பின்னர் உங்களில் கலப்படம் கலக்கப்பட்டது. உங்களுடைய பாகங்களை நடித்துவிட்டீர்கள் என்பது இப்போது உங்களது புத்தியில் உள்ளது. நாங்கள் இப்பொழுது எங்களின் பெற்றோரின் வீட்டுக்குச் செல்கின்றோம். நீங்கள் வெளிநாட்டில் இருந்து பெற்றோரின் வீட்டிற்குத் திரும்பும்போது சந்தோஷம் இருக்கின்றது. நீங்களும் சந்தோஷத்தைக் கொண்டிருக்கின்றீர்கள். ஏனெனில் பாபா உங்களுக்குச் சுவர்க்கத்தைக் கொண்டு வந்துள்ளார் என்பதை அறிவீர்கள். எல்லையற்ற தந்தையிடம் இருந்தான பரிசானது எல்லையற்ற இராச்சியம் ஆகும், அதாவது சத்கதி ஆகும். சந்நியாசிகள் முக்தியையே விரும்புகின்றனர். ஒருவர் மரணிக்கும்போது அவர் சுவர்க்கவாசியாகி விட்டார் எனக் கூறப்படுகின்றது. சந்நியாசிகள் ஒளி, ஒளியுடன் கலந்துவிட்டது, அனைவருமே ஒளியுடன் இரண்டறக் கலந்து விடுவார்கள் எனக் கூறுகின்றார்கள். ஆயினும், அது ஆத்மாக்களாகிய நாங்கள் வசிக்கும் வசிப்பிடமாகும். அனைவரும் இரண்டறக் கலந்து விடக்கூடிய ஒளியோ அல்லது தீயோ இல்லை. பிரம்மம் என்றால் ஆத்மாக்கள் அனைவரும் வசிக்கின்ற மகா தத்துவமாகும். தந்தையும் அங்கேயே வசிக்கின்றார். அவரும் ஒரு புள்ளி ஆவார். எவராவது ஒரு புள்ளியைக் காட்சியாகக் கண்டிருந்தால் அவரால் எதையும் புரிந்து கொள்ள முடியாது. பல குழந்தைகள் கூறுகின்றார்கள்: பாபா, நினைவில் நிலைத்து இருப்பதில் கஷ்டமாக உள்ளது. எவ்வாறு நாங்கள் ஒரு புள்ளியை நினைவு செய்யமுடியும்? நாங்கள் அரைக்கல்பமாக பெரிய சிவலிங்கத்தை நினைவு செய்து கொண்டிருந்தோம். தந்தையும் விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் ஒரு புள்ளியைப் பூஜிக்க முடியாது. எவ்வாறு ஒரு புள்ளிக்கு ஆலயத்தை கட்டுவீர்கள்? ஒரு புள்ளியைப் பார்க்கவும் முடியாது. இதனாலேயே அவர்கள் பெரிய சிவலிங்கத்தை உருவாக்கினார்கள். ஆயினும் ஆத்மாக்களைக் குறிக்கின்ற பல சிறிய சாலிகிராம்களையும் உருவாக்கி உள்ளார்கள். அவை முட்டை வடிவாக உருவாக்கப்பட்டுள்ளன. கடவுள் ஒரு புள்ளி என முன்னரே ஏன் கூறவில்லை எனச் சிலர் கேட்கின்றனர். தந்தை கூறுகின்றார்: அந்த நேரத்தில் உங்களுக்குக் கூறுவது பாகத்தில் இருக்கவில்லை. நீங்கள் ஏன் ஆரம்பத்தில் ஐ.சி.எஸ் பரீட்சைக்குக் கற்கவில்லை? கல்வி பற்றிய சட்டங்களும் இருக்கின்றன. எவராவது அப்படியான கேள்விகளைக் கேட்டால், நீங்கள் அவர்களுக்கு, ஓ.கே நாங்கள் பாபாவை கேட்கலாம், அல்லது மூத்த ஆசிரியர் ஒருவருக்கு எழுதிக் கேட்கலாம் எனக்கூறலாம். பாபா உங்களுக்கு கூற விரும்பினால் அவர் அவ்வாறு செய்திருப்பார். இல்லையெனில் நீங்கள் முன்னேறிச் செல்லும்போது நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என அவர் கூறுகின்றார். அவர் ஒரே நேரத்தில் அனைத்தையும் கூறுவதில்லை. இந்த விடயங்கள் அனைத்தும் புதியவை. தந்தை இங்கிருந்து வேதங்கள், சமயநூல்களில் என்ன உள்ளது என்று சாராம்சமாகக் கூறுகின்றார். அதுவும் பக்தி மார்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நீங்கள் அவற்றை மீண்டும் கற்கவேண்டும். பக்தியின் பாகம் நடிக்கப்பட வேண்டும். தூய்மை அற்றவராகின்ற பாகமும் நடிக்கப்பட வேண்டும். அவர்கள் பக்தியின் புதைமணலில் சிக்கிவிட்டதாகக அவர்கள் கூறுகின்றார்கள். வெளிப்படையாக அதிகளவு அழகு உள்ளது. அவர்கள் கானல் நீரின் உதாரணத்தைக் கொடுக்கின்றார்கள். பக்தியில் அதிக கவர்ச்சி உள்ளது. தந்தை கூறுகின்றார்: அது கானல் நீரைப் போன்றது. அவர்கள் அந்தப் புதைகுழியில் சிக்கியுள்ளார்கள். பின்னர் அதிலிருந்து வெளிவருவது அவர்களுக்கு கஷ்டமாகும்! அவர்கள் முழுமையாகவே அதில் சிக்கியுள்ளார்கள். அவர்கள் மற்றவர்களை அதிலிருந்து விடுவிக்கச்; சென்று தாங்களும் அதில் சிக்கிக் கொள்கின்றார்கள். பலர் இவ்வாறாக சிக்கிக் கொள்கிறார்கள். இந்த ஞானத்தைக் கேட்டு ஆச்சரியம் அடைந்தவர்கள் உள்ளனர். அவர்கள் அதைச் செவிமடுத்து மற்றவர்களுக்கும் கூறி, அவர்களை புதை மணலில் இருந்து அகற்றினார்கள். ஆயினும், பின்னர் முன்னேறிச் செல்லும்போது அவர்களே சிக்கிக் கொண்டார்கள். அவர்கள் அவ்வாறான முதல்தரமான நல்ல குழந்தைகளாக இருந்தார்கள். பின்னர் அவர்களை வெளியே வரச்செய்ய உதவுவது மிகவும் கஷ்டமாக உள்ளது. அவர்கள் தந்தையை மறக்கின்றபோது, அவர்களை அந்த புதைமணலில் இருந்து விடுவிப்பதற்கு அதிகளவு முயற்சி தேவைப்படுகின்றது. நீங்கள் எவ்வளவு தான் அவர்களுக்கு விளங்கப்படுத்தினாலும், அது அவர்களின் புத்திகளில் நிலைத்து இருப்பதில்லை. நீங்கள் இப்பொழுது எவ்வளவு தூரம் மாயை, இராவணனின் புதை மணலிருந்து வெளிவந்துள்ளீர்கள் எனப்புரிந்து கொள்ளமுடியும். எந்தளவிற்கு அதிகமாக அதிலிருந்து வெளிவந்துள்ளீர்களோ அந்தளவிற்கு அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டிருப்பீர்கள். அதிலிருந்து தாங்களாகவே வெளிவந்தவர்கள் மற்றவர்களையும் அதிலிருந்து விடுவிப்பதற்கான சக்தியைக் கொண்டிருப்பார்கள். சிலர் மிகவும் திறமைசாலிகள், ஆனால் மற்றவர்களோ அம்பை எய்வதில் பலவீனமானவர்களாக இருக்கின்றார்கள். “பில்” லினதும் (சுதேசி) அர்ச்சுனனினதும் உதாரணம் உள்ளது. அர்ச்சுனன் அவரது குருவுடன் வசித்தவர். அர்ச்சுனன் ஒருவர் மாத்திரமல்ல, தந்தைக்கு சொந்தமாகி தந்தையுடன் வாழ்கின்றவர்களே அர்ச்சுனர்கள் ஆவர். தந்தையுடன் வசிப்பவர்களுக்கும், வெளியில் வசிப்பவர்களுக்கும் இடையில் ஒரு போட்டி உள்ளது. பில் (ஏகலைவன்) வெளியில் வசித்தார், அத்துடன் அவர் முன்னால் சென்றார். ஒருவருடைய உதாரணமே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அது பலரைக் குறிக்கின்றது. இந்த ஞானமே அம்பு ஆகும். எந்தளவிற்கு நீங்கள் தந்தையை நினைவு செய்கின்றீர்கள் என ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள முடியும். நீங்கள் வேறு எவரையாவது நினைவு செய்கின்றீர்களா? நல்ல ஆடைகளை அணிய வேண்டும், நல்ல உணவை உண்ண வேண்டும் என்ற பேராசை உங்களுக்கு இல்லை, அல்லவா? நீங்கள் இங்கே நல்லனவற்றை அணிந்தால், அங்கே அது குறைக்கப்படும். இங்கே நாங்கள் எளிமையாக இருக்க வேண்டும். தந்தை கூறுகின்றார்: உங்களுடைய சரீரத்தையும் மறக்க வேண்டும். அது தமோபிரதான் பழைய சரீரமாகும். நீங்கள் உலகின் அதிபதிகள் ஆகின்றீர்கள். ஆசைகளைப் பற்றியே அறியாதவர்களாக இருங்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் இங்கே நகை அணியக் கூடாது. அவர் ஏன் இதைக் கூறுகின்றார்? இதற்குப் பல காரணங்கள் உள்ளன. உங்களுடைய நகை தொலைந்து விட்டால், நீங்கள் அதை பி.கே களுக்கு கொடுத்து விட்டதாக மக்கள் கூறுவார்கள். இரண்டாவதாக நீங்கள் சுற்றித்திரிகின்ற போது, கள்வர்கள் உங்களிடம் இருந்து களவாடுவார்கள். இந்நாட்களில் களவெடுக்கும் பல பெண்கள் உள்ளனர். பெண்களும் களவாட ஆரம்பித்து விட்டனர். உலகின் நிலைமையைப் பாருங்கள். இந்த உலகம் சரியாக விபச்சாரவிடுதி போன்றது என்பதை நீங்கள் அறிவீர்கள்! நாங்கள் இங்கே சிவபாபாவுடன் சிவாலயத்தில் அமர்ந்திருக்கின்றோம். அவரே சத்தியமானவர், உயிர்வாழ்பவர், பேரானந்த சொரூபமானவர். ஆத்மாவின் புகழ்ச்சியும் உள்ளது. ஆத்மாவே கூறுகின்றார்: நான் ஜனாதிபதி ஆகியுள்ளேன், நான் இன்னார், இன்னார். ஆத்மாக்களாகிய நீங்கள் கூறுகின்றீர்கள்: நான் ஒரு பிராமணன். நான் எனது ஆஸ்தியை பாபாவிடம் இருந்து பெறுகின்றேன். ஆத்ம உணர்வில் நிலைத்திருங்கள்! இதற்கே முயற்சி தேவையாகும். “இவர் எனது இன்னார், இது என்னுடையது.” நீங்கள் இவை அனைத்தையும் நினைவு செய்கின்றீர்கள், ஆனால் ஆத்மாக்களாகிய நீங்கள் சகோதரர்கள் என்பதை மறந்து விடுகின்றீர்கள். “எனது” என்ற உணர்வுகள் அனைத்தும் இங்கேயே அகற்றப்பட வேண்டும். நான் ஓர் ஆத்மா, இவரது ஆத்மாவும் இதை அறிவார். தந்தை விளங்கப்படுத்துகின்றார், நான் செவிமடுக்கின்றேன். நானே அவருக்கு முதலில் செவிமடுக்கின்றேன். நானும் அதைக் கூறமுடியும் ஆயினும், குழந்தைகளின் நன்மைக்காகவே நான் கூறுகின்றேன்: எப்போதும் சிவபாபாவே விளங்கப்படுத்துகின்றார் எனக் கருதுங்கள். இந்த ஞானக்கடலைக் கடைவது குழந்தைகளின் கடமை ஆகும். நீங்கள் செய்வதையே, நானும் செய்கின்றேன். வேறு எவ்வாறு அவர் முதல் இலக்கத்தைக் கோரமுடியும்? ஆயினும் அவர் தன்னை மறைமுகமாகவே வைத்துள்ளார். அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத்தந்தை ஆன்மீகக்குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ‘எனது’ என்ற உணர்வுகள் அனைத்தையும் துறந்து உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். ஆத்ம உணர்வில் நிலைத்து இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். முழுமையாக, எளிமையாக இருங்கள். நல்ல ஆடைகளை அணிதல் அல்லது நல்ல உணவை உண்ணுதல் போன்ற எந்த ஒரு ஆசையையும் முற்றிலும் அறியாதவர்களாக ஆகுங்கள்.

2. உங்களுடைய பாகத்தை நடிக்கின்ற போதும், செயல்களைச் செய்கின்ற போதும் உங்களுடைய ஆதிதர்மமான அமைதியில் ஸ்திரமாக நிலைத்திருங்கள். அமைதி தாமத்தையும், சந்தோஷ தாமத்தையும் நினைவு செய்யுங்கள். இந்தத் துன்ப உலகை மறவுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஆன்மீக போதை மற்றும் கருணை என்ற நற்குணங்களுடன் உலகைப் புதுப்பித்தல் என்ற பணியைச் செய்யும் உலக உபகாரி ஆகுவீர்களாக.

நீங்கள் ஓர் உலக உபகாரி ஆகுவதற்கு, இரண்டு பிரதானமான நற்குணங்கள் அவசியமானவை. ஒன்று, இறை, ஆன்மீக போதை. மற்றையது, கருணை. ஒரே வேளையில் உங்களிடம் ஆன்மீக போதையும் கருணையும் சமமாக இருக்குமாயின், உங்களின் ஆன்மீக ஸ்திதி உருவாக்கப்படும். எனவே, எப்பொழுதெல்லாம் நீங்கள் ஒரு பணியைச் செய்கிறீர்களோ அல்லது எதையாவது கூறுகிறீர்களோ, உங்களிடம் ஆன்மீக போதையும் கருணையும் சமமாக உள்ளனவா என்பதைச் சோதித்துப் பாருங்கள். இறைவிகளின் படங்களில், இந்த நற்குணங்கள் இரண்டும் சமமாகக் காட்டப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் உங்களால் உலகைப் புதுப்பித்தல் என்பதற்குக் கருவி ஆகமுடியும்.

சுலோகம்:
உங்களின் வீணான எண்ணங்களைத் தந்தையிடம் அன்புடன் அர்ப்பணியுங்கள். இதுவே உண்மையான பலி ஆகும்.

அவ்யக்த சமிக்கை: சதா முகமலர்ச்சியுடன் இருப்பதற்கு, இலகு சுபாவத்தைக் கொண்டவராகவும் சகித்துக் கொள்பவராகவும் ஆகுங்கள்.

எந்தளவிற்கு உங்களிடம் இலகுவான சுபாவம் இருக்கிறதோ, அந்தளவிற்கு உங்களின் நினைவும் இலகுவானது ஆகிவிடும். எந்தளவிற்கு நீங்கள் ஒவ்வொரு சூழ்நிலையிலும் தெளிவாக, அதாவது சுத்தமாக இருக்கிறீர்களோ, அந்தளவிற்கு நீங்கள் இலகுவாகவும் எளிமையாகவும் இருப்பீர்கள். நீங்கள் எதை விரும்புகிறீர்களோ, உங்களின் படைப்பும் அதே சம்ஸ்காரங்களைக் கொண்டிருக்கும். ஆகவே, ஒவ்வொரு நற்குணத்தினதும் நடைமுறை உதாரணம் ஆகுங்கள்.