16.08.26 Avyakt Bapdada Tamil Lanka Murli 16.03.2011 Om Shanti Madhuban
உங்கள் மனதால் சேவை செய்வதன் மூலம் பஞ்ச தத்துவங்களைத் தூய்மை (சதோகுணி) ஆக்குங்கள். நல்லாசிகளையும் தூய உணர்வுகளையும் கொண்டிருந்து உங்கள் சம்ஸ்காரங்களில் ஒத்திசைவை ஏற்படுத்தும் நடனத்தை ஆடுங்கள்.
இன்று, அதிபுனிதமான தந்தை தனது குழந்தைகளுடன் ஹோலியைக் கொண்டாடுவதற்காக வந்துள்ளார். நீங்கள் அனைவரும் ஹோலியைக் கொண்டாடுவதற்காகவே வந்திருக்கின்றீர்கள். தொலை தூரத்தில் அமர்ந்திருக்கும், எங்கும் உள்ள குழந்தைகள் அனைவரும்கூட ஹோலியைக் கொண்டாடுவதற்காகவே அமர்ந்திருக்கின்றார்கள். நீங்கள் எந்த நிற ஹோலியைக் கொண்டாடுவதற்காக இங்கு வந்திருக்கின்றீர்கள்? அனைத்திலும் மிகவும் மேன்மையான நிறம் இறைவனின் சகவாசமே என்பது உங்களுக்குத் தெரியும். இந்த நிறமே உங்களை சதா மிகவும் மேன்மையானவர்கள் ஆக்குகின்றது. தந்தை எவ்வாறு அதிமேலானவரோ, அவ்வாறே, இறை சகவாசமும் உங்களை அதிமேலானவர் ஆக்குகிறது. ஒவ்வொரு குழந்தையின் நெற்றியின் புருவ மத்தியிலும் ஒரு பாக்கிய நட்சத்திரம் பிரகாசிப்பதை அவர் பார்க்கின்றார். சக்கரம் முழுவதற்கும் இந்தப் பாக்கிய நட்சத்திரத்தை பாக்கியசாலிக் குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு எவராலும் அடைய முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இரட்டைத் தூய்மையானவர்களாக ஆகுவது, அதாவது, ஹோலி ஆகுவதே இந்த மேன்மையான பாக்கியம் ஆகும். தர்மாத்மாக்கள் இருக்கின்றார்கள், ஆனால் அவர்களின் சரீரங்கள் தூய்மையானவை அல்ல. எதிர்காலத்தில் பிராமண ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையாக இருப்பதுடன் தூய சரீரங்களையும் கொண்டிருப்பீர்கள். நீங்கள் நீங்கள் இரட்டைத் தூய்மையாக இருப்பதுடன், இரட்டைக் கிரீடத்தைப் பெற்றுக்கொள்வதே இதன் அடையாளம் ஆகும். சக்கரம் முழுவதிலும் நீங்கள் மாத்திரமே, இரட்டைக் கிரீடத்தைக் கொண்டவர்கள் ஆகின்றீர்கள். சங்கமயுகத்தில், தந்தையின் சகவாசம் என்ற நிறத்தைக் கொண்டிருப்பதனால் நீங்கள் இரட்டைத் தூய்மையானவர்கள் ஆகின்றீர்கள். சங்கம யுகத்தில் இறைவனின் நிறமே உங்களை இரட்டைத் தூய்மையானவர்கள் ஆக்குகின்றது. தந்தையுடன் இருப்பதனாலும், தந்தையுடன் இணைந்திருப்பதனாலும், இந்த ஹோலியில் நீங்கள் இரட்டை தூய்மையானவர்கள் ஆகின்றீர்கள். நீங்கள் சதா தந்தையின் சகவாசத்தை உங்கள் இதயத்தில் கொண்டிருக்கின்றீர்கள். இந்த நிறமானது மிக மேன்மையானது, இது உங்களை மிக மேன்மையானதாக ஆக்குகின்றது. மக்கள் பௌதீகமான நிறங்களைக் கொண்டு ஹோலியைக் கொண்டாடுகின்றார்கள், ஆனால் நீங்களோ தந்தையின் சகவாசம் என்ற நிறத்தின் மூலம் தூய்மையானவர்கள் ஆகுகின்றீர்கள். இதுவும்கூட இரட்டைத் தூய்மையே ஆகும். உங்கள் தூய்மையானது உலகத்திலேயே தனித்துவமானது, அது தந்தையினால் நேசிக்கப்படுகின்றது. உங்கள் ஹோலியானது இறைவனின் சகவாசம் என்ற நிறத்தினால் நிறமூட்டப்படுவதனால், இன்றும்கூட உங்கள் உருவச்சிலைகள் ஒழுங்கு முறையாக வழிபாடு செய்யப்படும் வகையில் அது உங்களை அரைக் கல்பத்திற்குத் தூய்மை ஆக்குகின்றது என்ற போதையை நீங்கள் கொண்டிருக்கின்றீர்கள். வேறு எவரது உருவச்சிலைகளும் அத்தகைய அன்புடன் வழிபடப்படுவதில்லை. உங்களாலேயே உங்கள் சொந்த சிலைகளைக் காணக்கூடியதாக இருக்கின்றது. மற்றவர்களும் வழிபடப்படப்படுகிறார்கள். எனினும் அவர்கள் இவ்வளவு காலத்திற்கோ அல்லது இவ்வாறு ஒழுங்குமுறையாகவோ வழிபாடு செய்யப்படுவதில்லை. நீங்கள் சதா உங்கள் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் பேணுகின்றீர்கள். நீங்கள் அதனைப் பேணுகின்றீர்கள், இல்லையா? நீங்கள் ஊக்கமாகவும் உற்சாகமாகவும் இருக்கின்றீர்களா? அவ்வாறாயின், உங்கள் கரங்களை உயர்த்துங்கள்! நீங்கள் அதனை ஒரு சிலவேளைகளுக்குப் பேணுகின்றீர்களா? அல்லது எந்நேரமுமா?சதா தாம் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் இருக்கிறார்கள், அத்துடன் மற்றவர்களுக்கும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கிறார்கள் எனக் கூறுபவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! இதை சிலவேளைகளில் மட்டும் செய்பவர்கள் அன்றி, எல்லா வேளையும் செய்பவர்கள்! நீங்கள் “சதா” என்ற வார்த்தையை கீழ்க்கோடிட்டு விட்டீர்கள், அல்லவா? எவ்வாறாயினும், உங்கள் ஸ்திதி எத்தகையதாக இருப்பினும், உங்கள் பக்தர்கள் அதனை ஒரு பண்டிகையாகவே கொண்டாடுகின்றார்கள். நீங்கள் இறைவனின் சகவாசம் என்ற நிறத்தினால் நிறமூட்டப்படுவதனால், அவர்களும் நிறங்களைத் தெளிக்கின்றார்கள். ஆனால் அவர்கள் சரீர உணர்வினைக் கொண்டிருப்பதனால் பௌதீக நிறங்களைத் தெளிக்கின்றார்கள், அது பெருமளவு பணச் செலவினை ஏற்படுத்துகின்றது. இதன் முடிவாக சில சாயங்கள் (நிறமூட்டிகள்) சிறந்தனவாகவும் ஏனையவை தரமற்றவையாகவும் இருக்கின்றன. அவர்கள் இவ்வாறே இதனைக் கொண்டாடுகின்றார்கள். அவர்கள் நிச்சயமாக உங்கள் உற்சாகத்தின் ஞாபகார்த்தத்தினையே கொண்டாடுகின்றார்கள். கடவுளுக்குச் சொந்தமானவர்கள் ஆகுவதற்கு நீங்கள் அனைத்திற்கும் முதலில் உங்கள் பழைய சம்ஸ்காரங்களை எரிக்க வேண்டும். பின்னர், இறைவனின் சகவாசம் என்ற நிறத்தினால் நீங்கள் நிறமூட்டப்பட்டு இருப்பதனால், நீங்கள் எப்பொழுதும் கொண்டாடுகிறீர்கள். அவர்களும் முதலில் எதையாவது எரிக்கின்றார்கள், பின்னர் கொண்டாடுகின்றார்கள். ஆனால், அவர்கள் கொண்டாடும் விதத்திற்கும், நீங்கள் கொண்டாடும் விதத்திற்கும் இடையில் இரவிற்கும், பகலிற்கும் இடையிலான வித்தியாசம் உள்ளது. அவர்கள் சரீர உணர்வினைக் கொண்டவர்களாகவே இருக்கின்றார்கள். ஆனால் நீங்களோ ஆத்ம உணர்வுடையவர்களாக இருக்கின்றீர்கள். அவர்களிடம் சரீரங்களின் விழிப்புணர்வு உள்ளது, உங்களிடமோ ஆத்மாக்களின் விழிப்புணர்வு உள்ளது.
ஹோலி என்றால் கடந்ததை கடந்ததாகவே விட்டுவிடுதல் என்ற வழிகாட்டலை நீங்கள் பாப்தாதாவிடம் இருந்து பெற்றுள்ளீர்கள். அவர்களும்கூட ‘ஹோ லி’ (அது ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டது) பற்றிப் பேசுகின்றார்கள். ஆனால் அவர்கள் அதன் அர்த்தத்தினை நடைமுறையில் கொண்டு வருவதில்லை. நீங்கள் அனைவரும் அனைத்தையும் “ஹோ லி” ஆக்குகின்றீர்கள், அதாவது கடந்ததைக் கடந்ததாக ஆக்குகின்றீர்கள். நீங்கள் இதனைச் செய்கின்றீர்கள் அல்லவா? அல்லது நீங்கள் அதனை ஒரு சிலவேளைகளில்தான் செய்கின்றீர்களா? நீங்கள் கடந்த காலத்தை நினைவு செய்யும்போது உங்களுக்குப் பல வீணான எண்ணங்கள் வருகின்றன. உங்கள் நேரமும்கூட வீணாக்கப்படுகின்றது. உங்கள் நீண்டகாலத்திற்கான சம்ஸ்காரங்கள், உங்கள் விருப்பத்திற்கும் மாறாகச் செயற்படுகின்றன. இந்தச் சங்கமயுகத்தின் ஒவ்வொரு நிமிடமும் எதிர்கால 21 பிறவிகளுக்கான வெகுமதியைப் பெற்றுத் தரவல்லது, ஒவ்வோர் எண்ணமும் ஒவ்வொரு நிமிடமும் மிகப் பெறுமதி வாய்ந்தவை. கடந்த விநாடி ஒரு விநாடியல்ல, ஆனால் அது பல பிறவிகளுக்கான வெகுமதியிலேயே பெருமளவு வேறுபாட்டை உருவாக்குகின்றது. நீங்கள் இந்த சங்கமயுகத்திலே எந்தவோர் எண்ணத்தையோ அல்லது நேரத்தையோ வீணாக்கக் கூடாது என பாப்தாதா ஏற்கனவே உங்களுக்குக் கூறியிருக்கின்றார். நீங்கள் சதா இறைவனின் நிறத்தினால் நிறமூட்டப்பட்டால், அதாவது, உங்களால் தந்தையைச் சதா உங்கள் சகபாடியாகக் கொண்டிருக்க முடிந்தால், இந்தச் சங்கமயுகத்தில் உங்களால் உங்களின் ஒவ்வோர் எண்ணத்தையும், ஒவ்வொரு கணப்பொழுதையும் அதாவது ஒவ்வொரு நிமிடத்தையும் பிரயோசனமாகப் பயன்படுத்த முடியும். ஆகவே உங்களின் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வோர் எண்ணமும் பிரயோசனமான முறையில் பயன்படுத்தப்படுகின்றதா? அல்லது அவை வீணாக்கப்படுகின்றனவா? எனச் சோதித்துப் பாருங்கள். ஏனெனில், இது ஒரு நிமிடத்திற்குரிய விடயமன்று. ஆனால் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வோர் எண்ணமும் 21 பிறவிகளுடன் தொடர்புபட்டது. இவற்றிற்கு அந்தளவு பெறுமதி உண்டு. ஆகவே, நீங்கள் இந்தளவு பெறுமதியை உங்கள் இதயத்தில் சதா கொண்டிருக்கின்றீர்களா எனச் சிந்தித்துப் பாருங்கள். “இப்பொழுது இல்லையேல் எப்பொழுதும் இல்லை” எனச் சங்கமயுகக் காலப்பகுதியைப் பற்றியே கூறப்பட்டுள்ளது. எப்பொழுதும் இந்தப் பெறுமதியை உங்கள் விழிப்புணர்வில் கொண்டிருங்கள். ஆகவே, நீங்கள் அனைவரும் இன்று ஹோலியைக் கொண்டாடினீர்கள். அதாவது, நீங்கள் உங்களை சதா தந்;தையின் சகவாசத்தினால் நிறமூட்டினீர்கள். நீங்கள் தந்தையின் நிறத்தினால் நிறமூட்டப்பட்டீர்களா என உங்களை நாள்பூராகவும் சோதித்தீர்களா? நீங்கள் கடவுளின் சகவாசத்தினுள் இருந்தீர்களா? அல்லது உங்கள் நேரம் மற்றும் எண்ணங்கள் வேறு எங்காவது சென்றதா? நீங்கள் இதனைச் சோதித்தீர்களா? இதனை ஆமோதித்துத் தலையசையுங்கள், கையை அசைக்காதீர்கள், தலையை அசையுங்கள்.
பாப்தாதா தொடர்ந்தும் உங்களுக்கு சமிக்ஞைகளைக் கொடுக்கின்றார்: உங்கள் மனதின் தூய சதோகுணி எண்ணங்களின் மூலம் தொடர்ந்தும் சடப்பொருளை (பஞ்சதத்துவங்கள்) சதோகுணி (தூயதாக) ஆக்குங்கள். நீங்கள் உங்களின் மனங்களின் மூலமான சேவையைச் செய்ய வேண்டும் என்று நினைவு செய்கின்றீர்களா? ஏனெனில் பஞ்சதத்துவங்கள் இப்பொழுது தமது பணியைப் பாரியளவில் கொண்டு நடாத்தப்போகின்றன. இது ஒரு சிறிய விடயமே, ஆனால் மனித ஆத்மாக்கள் பஞ்சதத்துவங்களைப் பெருமளவு கஷ்டப்படுத்தினார்கள், இதனாலயே அவையும் பெருமளவு கஷ்டத்தை உருவாக்க ஆரம்பிக்கும். இதனாலேயே தந்தை கூறுகின்றார்: நீங்கள் மாயையை வெல்வதற்கு முயற்சி செய்வதைப் போன்றே - இதிலும் கவனம் செலுத்துகின்றீர்கள், இல்லையா? நீங்கள் மாயைக்குச் சத்தியம் செய்தீர்கள்: ‘உனது கடமை இங்கு வருவது, எமது கடமை உன்னை வெல்வது’. நீங்கள் அனைவரும் இந்த சத்தியத்தைச் செய்திருக்கின்றீர்கள், இல்லையா? இல்லையா? நீங்கள் மாயையை வென்றவர்களாக வேண்டும் என்று விரும்புகின்றீர்கள், அல்லவா? அவ்வாறே நீங்கள் பஞ்சதத்துவங்களையும் வென்றவாகள் ஆக வேண்டும். ஏனென்றால் நீங்கள் இராச்சியத்தை ஆட்சி செய்ய விரும்புகின்றீர்கள், அல்லவா? உங்கள் இராச்சியம் வருகின்றது, இல்லையா? உங்களிடம் இந்த போதை இருக்கின்றதா? என்ன நடக்குமோ என அங்கலாய்த்து மக்கள் பயப்படுகின்றார்கள். ஆனால் இப்பொழுதே அமிர்த வேளையாகிய சங்கமயுகம் என்பது உங்களுக்குத் தெரியும். அமிர்த வேளையின் பின்னர் என்ன வருகின்றது? காலை. “எங்கள் இராச்சியமே அந்தக் காலையில் வரப்போகின்றது” உங்களிடம் இந்தப் போதை இருக்கிறதல்லவா? “இது எங்களின் இராச்சியம்” என்ற போதை உங்களிடம் இருக்கின்றதா அல்லது அது மகாராத்திகளின் இராச்சியமா? இது உங்கள் அனைவருக்குமான இராச்சியமே. என்ன நடக்கும் என நீங்கள் கவலைப்படவில்லை. அனைத்திலும் சிறந்தவையே நடக்கும் என்று உங்களுக்குத் தெரியும். உங்கள் இராச்சியத்தில் பஞ்சதத்துவங்களும் கூட சதோபிரதானாகவே இருக்க வேண்டும். தூய்மையற்ற பஞ்சதத்துவத்தினை தூய்மையாக ஆக்கப்போவது யார்? அல்லது பஞ்சதத்துவத்தை இருப்பது போலவே இருக்க விட்டுவிடுவது சரியா? உங்களுடைய இராச்சியத்தில் அது அவ்வாறு இருக்க முடியுமா? முடியுமா? ஆம் அல்லது இல்லை எனக் கூறுங்கள்! அப்படி இருக்கலாமா? ஆகவே, பஞ்சதத்துவத்தை தூய்மை ஆக்குவது யார்? நீங்களே அதனைச் செய்வீர்கள், அல்லவா? இதனாலேயே இப்பொழுது முதலாவதாக நிகழ்ந்த சடுதியான காட்சியானது சிறியது, தற்பொழுதே இது ஆரம்பித்திருக்கின்றது. (ஜப்பானில் ஒரு பூகம்பமும் சுனாமியும் ஏற்பட்டு, அதனால் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டிருந்தது) இப்பொழுது, மேலும் பெரிய காட்சிகள் இன்னமும் வர இருக்கின்றன, அவை சடுதியாக வரும். நீங்கள் நினைக்காதவை கூட நடக்கப் போகின்றன.
பாப்தாதா நீண்ட காலமாகவே உங்களுக்கு “சடுதியாக” என்ற பாடத்தைப் புகட்டிக் கொண்டே இருக்கின்றார். எவ்வாறாயினும், இதனை நடைமுறையில் பார்க்கும் பொழுது, நீங்கள் பயப்படாது உங்கள் பணியை ஆரம்பிக்க வேண்டும். “தீ சுற்றி எரிந்தபொழுதும் இறைவனின் குழந்தைகள் பாதுகாக்கப் பட்டார்கள்” என்ற கதையை நீங்கள் கூறுகின்றீர்கள். ஆகவே, இப்பொழுதும் கூடக் குழந்தைகளான நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள்தானே? சோதனைத் தாள்கள் நிச்சயமாக வரவே செய்யும், ஆனால் நீங்கள் இரட்டைப் பணியைச் செய்ய வேண்டும். முதலில், நீங்கள் பயமற்றவர்களாக இருந்து அனைத்திற்கும் முகம் கொடுக்க வேண்டும். இரண்டாவதாக, பக்தர்களுக்கும் சந்தோஷத்தை இழந்திருக்கும் உங்கள் சகோதர சகோதரிகளுக்கும் யார் சேவை செய்யப் போகின்றார்கள்? நீங்கள் இறைவனின் சகவாசம் என்ற நிறத்தினால் நிறமூட்டப்பட்டு இருக்கின்றீர்கள். ஆகவே, நீங்கள் இறைவனின் சகவாசம் என்ன நிறத்தினால் பெற்றிருக்கும் அனைத்தையும் உங்கள் சகோதர சகோதரிகளுக்கும் பக்தர்களுக்கும் மிகுந்த அன்புடன் பகிர்ந்தளிக்க வேண்டும். துன்பத்தின்போது யார் நினைவு செய்யப்படுகின்றார்? அவர்கள் அவரைக் கடவுள் எனக் கருதுகின்றார்களோ இல்லையோ, கட்டாயத்தின் பேரில் அவர்கள் நிச்சயமாகவே “ஓ தந்தையே! ஓ கடவுளே!” எனக் கூறுவார்கள். ஆகவே கடவுளின் குழந்தைகளாகிய நீங்களே இப்பொழுது துன்பத்தில் இருக்கும் அனைவருக்கும் ஆதாரமாக வேண்டும். நீங்கள் தந்தையிடம் இருந்து பெற்றுக்கொண்ட கதிர்கள் மற்றும் நல்லாசிகள், தூய உணர்வுகளின் மூலம் அவர்களின் ஆதாரம் ஆகுங்கள். எப்படி இருப்பினும் அவர்கள் உங்கள் குடும்பம் அல்லவா? ஒரு குடும்பத்தில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு வழங்கப்படுகின்றது. அதன் பெயரே “சகயோகம்” (ஒத்துழைப்பு), மேன்மையான யோகம் என்பதாகும். இதுவே ஆதாரம் அளிப்பதற்கான வழிமுறை. உங்களுக்கான ஒரு நேரத்தை ஒதுக்குமாறு ஒரு செய்தி உங்களுக்குக் கொடுக்கப்பட்டது. “இது நடக்கும்” என்று நினைக்காதீர்கள். நீங்கள் எண்ணக் கட்டுப்பாட்டுத் தியானத்திற்கும் அமிர்த வேளைக்கும் என நேரங்களை நிர்ணயித்திருக்கின்றீர்கள். இல்லையா? அவ்வாறே, உங்கள் பணிக்கேற்ப, காலத்திற்கு ஏற்ப, இப்பொழுது இந்த மனதின் மூலமான சேவையானது மிகவும் அவசியமானதாகும். ஆகவே, இதற்காக நேரத்தை ஒதுக்குங்கள். கருணை கொண்டிருங்கள்! உபகாரி ஆகுங்கள்! உங்கள் சுயமரியாதை என்ன? உலக உபகாரிகள். ஆகவே, நீங்கள் கருணையைக் கொண்டிருக்கின்றீர்களா? அல்லது “அது நடக்கும்” என்று நினைக்கின்றீர்களா? நீங்கள் இதில் கவனயீனமாக இருக்கக்கூடாது. ஏனெனில் நீங்கள் யாருக்கெல்லாம் சகாஷ் கொடுக்கின்றீர்களோ அவர்கள் உங்கள் பக்தர்கள் ஆகுவார்கள். ஆகவே, நீங்கள் என்ன செய்யவேண்டும்? நீங்கள் இந்தக் கவனத்தைச் செலுத்துகின்றீர்களா? நீங்கள் இதில் கவனம் செலுத்துகின்றீர்கள், இது அதிகரிக்கும் என்று நினைப்பவர்கள், உங்கள் கரங்களை உயர்த்துங்கள்! நீங்கள் உங்கள் கரங்களை உயர்த்துகின்றீர்கள் பின்னர் தாழ்த்துகின்றீர்கள். இது தொலைக்காட்சியில் தெளிவாகத் தெரிகின்றது. உங்களில் பெரும்பான்மையானோர் உங்கள் சுயமரியாதையை நடைமுறையில் கொண்டுவருவீர்களாயின், இப்போது சங்கமயுகத்தில் கூட ஆத்மாக்கள் உங்கள் புகழையே பாடுவார்கள்: ‘ஆஹா கடவுளின் குழந்தைகளே ஆஹா! நீங்கள் எங்களுக்கு எவ்வளவோ ஆதாரத்தைக் கொடுத்திருக்கின்றீர்கள்!’ உங்களுக்கு இது ஆதாரம் வழங்குதல் என்ற ஒரு விடயமாகும். ஆனால் அவர்கள் உங்கள் புகழையே அரைக் கல்பத்திற்குப் பாடுகின்றார்கள். நீங்கள் அவர்களின் மூதாதைகள் ஆகின்றீர்கள். நீங்களே மூதாதைகள். பிராமணர்கள் விருட்சத்தின் படத்தில் எங்கே அமர்ந்திருக்கின்றார்கள்? நீங்கள் அதன் அடியிலேயே அமர்ந்திருக்கின்றீர்கள், இல்லையா? ஆகவே, நீங்களே, மூதாதைகள், இல்லையா? பக்தர்களின் குரலை உங்களால் செவிமடுக்க முடிகின்றதா? உங்களையே சற்று எச்சரியுங்கள். நீங்களே துன்பத்தில் இருப்பவர்களுக்கு ஆதாரமாக வேண்டும். துன்பத்தில் இருப்பவர்களுக்கு ஆதாரமாக வேண்டும் என நீங்கள் நினைக்கும் பொழுது, உங்களால் அவர்களின் குரலைச் செவிமடுக்கக் கூடியதாக இருக்கும்.
ஆகவே, நீங்கள் அனைவரும் ஹோலியைக் கொண்டாடினீர்களா? சங்கமயுகம் முழுவதுமே ஹோலியே. நீங்கள் சதா இறைவனின் சகவாசம் என்ற நிறத்திற்குள்ளேயே இருக்கின்றீர்கள். ஞாபகார்த்தம் ஒன்று அல்லது இரண்டு தினங்களுக்குக் கொண்டாடப்படுகிறது. ஆனால் நீங்களோ சங்கமயுகம் முழுவதிலும் இறை சகவாசத்தில் இருக்கிறீர்கள். உங்களுக்கு இந்த போதை இருக்கின்றது, இல்லையா? அந்த அப்பாவி நாதியற்ற மக்கள் சதா வேண்டுகின்றார்கள்: ‘கடவுளே, எங்களுக்கு இதைச் செய்யுங்கள்! அதைச் செய்யுங்கள்!’ எவ்வாறாயினும் துன்பத்தின் எவ்விதமான காட்சிகளும் உங்கள் கனவில்கூட வரமுடியாது என்பதற்கான உத்தரவாதத்தை நீங்கள் 21 பிறவிகளுக்குப் பெற்று விட்டீர்கள். உங்கள் எண்ணங்களில்கூட துன்பத்தின் அலைகள் வரமுடியாது. நீங்கள் ஒவ்வொருவரும் எக்காலத்திற்குமாக இராச்சியத்தைப் பெற விரும்பினால், உங்கள் சத்தியயுகக் குடும்பத்தையும், இராஜரீகப் பிரஜைகளையும், சாதாரண பிரஜைகளையும் இந்நேரத்திலேயே உருவாக்க வேண்டும். உங்களுக்கு இதற்கான உத்தரவாதம் 21 பிறவிகளுக்கு இருக்கின்றது. சிறிதளவு சேவை செய்வதற்கு சற்று நேரத்தை ஒதுக்குங்கள், ஏனெனில் உங்களிடம் எண்ணங்களின் சக்தி இருக்கின்றது. நீங்கள் தந்தையிடமிருந்து பெற்றுக் கொண்டவை அனைத்தையும் உங்கள் சகோதர, சகோதரிகளுக்கும் கொடுங்கள்.
பாப்தாதா முன்னரும் உங்களுக்குக் கூறியுள்ளார்: பிராமணக் குடும்பத்தின் மத்தியில் சம்ஸ்காரங்களில் ஒத்திசைவை ஏற்படுத்துகின்ற நடனத்தை ஆடுகின்றீர்களா என சதா சோதித்துப் பாருங்கள். நீங்கள் அந்த நடனத்தை ஆடுவதற்கான திகதியை நிச்சயித்துக் கொள்ளுமாறு பாப்தாதா உங்களிடம் கேட்டிருந்தார். அது நிச்சயிக்கப்பட முடியுமா? முடியுமா? முதல் வரிசையில் உள்ளவர்களே, பேசுங்கள்! உங்களின் கரங்களை உயர்த்துங்கள்! அது நிகழுமா? பாண்டவர்களும்கூட உங்கள் கரங்களை உயர்த்த வேண்டும். பாண்டவர்கள் இன்றி சற்கதி இருக்க முடியாது. அச்சா. இப்பொழுது இது கடைசி முறையாகும். இன்னமும்; ஒரு சந்திப்பே எஞ்சியுள்ளது. அதற்கு, நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்காகக் கொண்டிருக்கப் போகின்ற திடசங்கற்ப எண்ணத்தை நிச்சயித்து, அதனை எழுதவேண்டும். முழு பிராமணக் குடும்பமும் தங்களின் பழைய சம்ஸ்காரங்களைப் பயன்படுத்துவதை நிறுத்துவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்? “அது உங்களின் சொந்த சம்ஸ்காரமோ அல்லது மற்றவர்களின் சம்ஸ்காரங்களோ, இவை உங்களில் ஆதிக்கம் செலுத்தக் கூடாது.” இந்தத் திகதி நிச்சயிக்கப்பட முடியுமா? முடியுமா? உங்களின் கைகளை உயர்த்துங்கள்! அச்சா. அனைவரது புகைப்படங்களையும் எடுங்கள். ஏனெனில், நீங்கள் “சடுதியாக” என்ற காட்சியைப் பார்த்தது போன்றே, அனைத்தும் சடுதியாகவே நிகழப்போகின்றது. இதனாலேயே பாப்தாதா ஆயத்தங்களைப் பார்க்க விரும்புகின்றார். நீங்கள் மற்றவர்களுக்கு நல்லாசிகளை வழங்குவதுடன், தூய உணர்வுகளையும் கொண்டிருக்கின்றீர்கள் - நீங்கள் மற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக ஒரு நிகழ்ச்சித் திட்டத்தை ஒழுங்கு செய்ததை பாப்தாதா பார்த்தார். எனவே, நீங்கள் ஒவ்வோர் ஆத்மாவின் மீதும் நல்லாசிகளையும், தூய உணர்வுகளையும் சதா கொண்டிருந்தால்....... அது எப்படியோ வரிசைக்கிரமமாகவே இருக்கும். உங்களின் ஞாபகார்த்த மாலையில், அனைவரும் முதலாம் இலக்கத்தவராக உள்ளனரா? அவர்கள் வரிசைக்கிரமமாகவே உள்ளனர். இருந்தும், அவர்கள் மாலையில் கோர்க்கப்படுகின்றனர், இல்லையா? அவர்கள் ஏன் ஓர் இலக்கத்தைப் பெற்றனர்? அவர்கள் வேறுபட்ட சம்ஸ்காரங்களைக் கொண்டுள்ளனர். எனினும், அவர்களின் சம்ஸ்காரங்களைப் பார்ப்பதற்குப் பதிலாக, நீங்கள் நல்லாசிகளையும், தூய உணர்வுகளையும் கொண்டிருக்க வேண்டும். இறுதியில், அவர்களும் பிராமணக் குடும்பத்தின் ஒரு பகுதியினரே. அவர்கள் எத்தகையவர்களாக இருந்தாலும் பரவாயில்லை, அவர்கள் ‘எனது குடும்பத்தினர்’, இல்லையா? நீங்கள் “மேரா பாபா”(எனது பாபா) எனக் கூறுவது போன்றே அதுவும் ‘எனது குடும்பம்’. உங்களில் பெரும்பான்மையினர் உங்களின் கரங்களை உயர்த்தியது நல்லது. எனவே, நீங்கள் அனைவரும் இந்த ஆர்வத்தையும், உற்சாகத்தையும் கொண்டிருக்கின்றீர்கள், இதனாலேயே நீங்கள் உங்கள் கரங்களை உயர்த்தினீர்கள். எனவே, ஒருவரோடொருவர் ஒத்துழைப்பவராக இருங்கள். நல்லாசிகளும், தூய உணர்வுகளும் நிறைந்த பார்வை, மனோநிலை, மற்றும் விழிப்புணர்வைக் கொண்டிருக்கும்போது, இந்த நடனத்தை ஆடுவது ஒரு பெரிய விடயமாக இருக்காது. இதில் சிறந்த இலக்கத்தைக் கோரி, தாங்கள் கொடுத்த திகதியில் நடைமுறையில் இதைச் செய்பவர்கள் மிகவும் தனித்துவமானதும், அழகானதுமான ஒரு பரிசைப் பெறுவார்கள். பரிசு என்னவென்று பாபா உங்களுக்கு இப்பொழுது கூறமாட்டார், ஆனால் அவர் ஒரு பரிசு வழங்குவார். ஏன்? நீங்கள் சேவை செய்வதற்காக நேரத்தை ஒதுக்க வேண்டும், இல்லையா? சம்ஸ்காரங்களுக்கு இடையில் உள்ள சிக்கல்கள் உங்கள் நேரத்தை எடுத்து விடுகின்றன. இதனாலேயே, உங்களுக்கு நேரத்திற்கான தேவை உள்ளது. இது ஓகே யா?
இவர்கள் அனைவரும் மதுவனவாசிகள், இல்லையா? (பாப்தாதா முன்வரிசையில் அமர்ந்திருப்பவர்களைப் பார்க்கிறார்) நீங்கள் இதை விரும்புகின்றீர்களா? ஏனெனில், மதுவனத்தைச் சார்ந்தவர்கள் விஷேடமானவர்கள். பாப்தாதா மதுவனவாசிகள் மீதும் இதயபூர்வமாகப் பெருமளவு அன்பு வைத்துள்ளார். மதுவன வாசிகளும் பாப்தாதா மீது அன்பு வைத்துள்ளனர். பாபா மேலும் கூறுகின்றார்: நீங்கள் தந்தைமீது அன்பு வைத்துள்ளீர்கள், அது எப்பொழுதும் இருக்கவே செய்யும், அதை அழிக்க முடியாது. நீங்கள் இதில் அமரத்துவமானவர்கள். இதனாலேயே நீங்கள் மதுவனவாசிகள் ஆகியுள்ளீர்கள். மதுவனத்தைச் சார்ந்தவர்கள் எங்கு சென்றாலும், மக்கள் அவர்களை என்ன பார்வையுடன் பார்க்கின்றனர்? அவர்கள் மதுவனத்தைச் சார்ந்தவர்கள், அவர்கள் மதுவனத்தைச் சார்ந்தவர்கள்! என்றேயாகும். எனவே, இதில் கவனம் செலுத்துங்கள், இறுதித் தடவைக்கு முன்பாக, அனைவரும் தங்களின் குறிப்புக்களைப் போடக்கூடிய ஓரிடத்தை மதுவனத்தில் நிச்சயித்துக் கொள்ளுங்கள். எவ்வாறாயினும், இது இறுதித் தடவைக்கு முன்பாக இருக்க வேண்டும்.
நீங்கள் அனைவரும் ஹோலியைக் கொண்டாடினீர்களா? உங்களுக்குத் தினமும் ஹோலி தான். இப்பொழுதும்கூட, இது நீங்கள் வெளிப்புறமாகக் கொண்டாட வேண்டிய ஒன்றாகும். நீங்கள் அதைக் கொண்டாட எங்கே செல்வீர்கள்? நீங்கள் இங்கேயே கொண்டாடுவீர்கள், இல்லையா? எவ்வாறாயினும், அது வழக்கம், சம்பிரதாயங்களுக்கு ஏற்ப நடக்கிறது. பாப்தாதாவின் ஆழமாக நேசிக்கப்படுகின்ற, எங்கும் உள்ள அதியன்பான குழந்தைகளான நீங்கள் வெகுகாலம் தொலைந்திருந்து இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டவர்களும் அத்துடன் தங்களின் சுயமரியாதையைப் பேணுபவர்களும் ஆவீர்கள். அத்தகைய ஒவ்வொரு குழந்தைக்கும் பாப்தாதா பல்கோடி மடங்கு அன்பையும் நினைவுகளையும், அத்துடன் இதயபூர்வமான தனது அன்பையும், பரிவையும் வழங்குகின்றார். எல்லா இடங்களிலும் பாபாவைப் பார்த்தும், செவிமடுத்தும் கொண்டிருப்பவர்கள் சந்தோஷமாக இருப்பதை பாப்தாதா பார்க்கின்றார். அச்சா.
முதல் தடவையாக வந்திருப்பவர்கள் யார்? எழுந்து நில்லுங்கள்! இவர்கள் அனைவரும் முதல் தடவையாக வந்துள்ளனர். அச்சா. நீங்கள் மதுவனவாசிகள் ஆகுகின்ற பாக்கியத்தை முதல் தடவையாகப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் இங்கு முதல் தடவையாக வந்ததற்காக உங்களின் சகோதர, சகோதரிகளும், பாப்தாதாவும் உங்களைப் பாராட்டுகின்றனர். இப்பொழுதும்கூட உங்களுக்கு வாய்ப்பு இருப்பதை பாப்தாதா பார்க்கின்றார். ஏனெனில், நீங்கள் சற்றுத் தாமதமாக வந்திருந்தாலும், நீங்கள் விரும்பினால், நீங்கள் இறுதியாக வந்திருந்தாலும்கூட விரைவாகச் சென்று முதலாம் இலக்கத்தைக் கோரி, முதலாம் பிரிவிற்குள் வரமுடியும். இது இன்று வந்துள்ள குழந்தைகள் அனைவருக்கும் பாப்தாதாவின் ஆசீர்வாதம் ஆகும். நீங்கள் ஸ்ரீமத்தை தந்தையின் மேன்மையான வாசகங்களாகக் கருதிப் பின்பற்றினால், ஸ்ரீமத் உங்களை மேன்மையான பிரிவிற்குள் அழைத்துச் செல்லும். நீங்கள் மிகப்பெரிய குடும்பத்தின் மத்தியிலும் தந்தையின் ஆசீர்வாதங்களைப் பெற்றுள்ளீர்கள். அத்துடன் அவர்களின் நல்லாசிகளும் தூய உணர்வுகளும் இருப்பதால், உங்களுக்கு வேண்டிய அளவிற்கு நீங்கள் முன்னேறிச் செல்லலாம். அவர்கள் அனைவரும் உங்களுக்கு இதயபூர்வமான ஆசீர்வாதங்களை வழங்குவார்கள். நீங்கள் எங்கே வகுப்பிற்குச் சென்றாலும், தொடர்ந்தும் ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள். இந்த ஆசீர்வாதங்கள் உங்களைத் தீவிர முயற்சியாளர்கள் ஆக்குவதுடன், உங்களை முன்னேறச் செய்யும், இந்த நம்பிக்கையைக் கொண்டிருங்கள்! அச்சா. இப்போது பாப்தாதா கூறுகிறார்: அனைவருக்கும் மிக அற்புதமான, அழகான இரவு வணக்கம். அச்சா.
ஆசீர்வாதம்:
உங்கள் ஒவ்வோர் எண்ணத்திலும் செயலிலும் வெற்றி அடைவதன் மூலம் முழுமை ரூபம் ஆகுவீர்களாக.நீங்கள் உருவாக்கும் எண்ணங்கள் சக்திவாய்ந்தவையாக ஆகும்போது, உங்களின் எண்ணங்களில் வெற்றி ஏற்படுகிறது. அதிகளவு எண்ணங்களை உருவாக்குபவர்களால் அவற்றைப் பராமரிக்க முடியாது. இதனாலேயே உங்களின் படைப்பு எத்தனை பெரியதோ, அந்தளவிற்கு நீங்கள் சக்தியற்றவர்களாக இருப்பீர்கள். அதனால், அனைத்திற்கும் முதலில், உங்களின் வீணான படைப்பை நிறுத்துங்கள். அப்போது நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உங்களின் செயல்களில் வெற்றி அடைவதற்கான வழிமுறை, நீங்கள் அந்தச் செயலைச் செய்வதற்கு முன்னர் ஒவ்வொரு செயலினதும் ஆரம்பம், மத்தி, முடிவைப் பற்றி அறிந்து கொள்வதே ஆகும். இவ்வாறு செய்வதன் மூலம், நீங்கள் முழுமை ரூபம் ஆகுவீர்கள்.
சுலோகம்:
சரியான வேளையில் தங்களைத் துன்பத்தில் இருந்தும் ஏமாற்றத்தில் இருந்தும் பாதுகாத்துக் கொள்பவர்கள், ஞானம் நிறைந்தவர்கள் (புரிந்துணர்வைக் கொண்டவர்கள்) ஆவார்கள்.அவ்யக்த சமிக்ஞை: தூய்மையற்றதன் விதையை முடித்து, முற்றிலும் சுத்தமானவராக (தூய்மையானவராக) ஆகுங்கள்.
புனித அன்னமான குழந்தைகளான உங்களின் உணவு, பானம், தொடர்பாடல் தூய்மையாக இருக்க வேண்டும். தூய்மை இன்மையின் பெயரோ அல்லது சுவடோ இருக்க முடியாது. ஏனென்றால் நீங்கள் தூய உலகிற்குச் செல்லப் போகின்றீர்கள். அங்கே தூய்மை இன்மையின் அல்லது அசுத்தத்தின் பெயரோ அல்லது சுவடோ இருக்காது. நீங்கள் இத்தகைய புனித அன்னங்கள் ஆகும்போது, எதிர்காலத்தில் ‘அதிபுனிதமானவர்கள்’ என்று அழைக்கப்படுவீர்கள்.
விசேட அறிவித்தல்: மாதத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமையில் யோகத்தைப் பயிற்சி செய்யுங்கள்.
இன்று மாதத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை. அதனால் சகோதர, சகோதரிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து மாலை 6.30 இலிருந்து 7.30 வரை யோகம் செய்வார்கள். உங்களின் பரம தூய ரூபத்தில் ஸ்திரமாக இருந்து, தூய்மையின் தெய்வீகக் கதிர்களைப் பரப்புங்கள். அத்துடன் சகாஷின் ரூபத்தில் தூய தூண்டுதல்களைக் கொடுக்கும் சேவையையும் செய்யுங்கள். ஆத்மாக்கள் அனைவருக்கும் தூய்மையாகவும் யோகியாகவும் ஆகுங்கள்.