17.02.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது எந்த விதமான துன்பமோ அல்லது பாவமோ இல்லாத அமரத்துவ உலகை ஸ்தாபிப்பதற்கான கருவிகளாக இருக்கிறீர்கள். அதுவே விகாரமற்ற உலகம்.

கேள்வி:
இறை குடும்பத்தின் அற்புதமான திட்டம் என்ன?

பதில்:
இறை குடும்பத்தின் திட்டமானது, குடும்பத் திட்டத்தைக் கொண்டிருப்பதுடன், சத்தியம் எனும் ஒரு தர்மத்தை ஸ்தாபித்து, எண்ணற்ற மதங்கள் அனைத்தையும் அழிப்பதாகும். மக்கள் பிறப்பைக் கட்டுப்படுத்துவதற்குப் பல திட்டங்களை மேற்கொள்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: அவர்களுடைய திட்டம் நிறைவேறாது. நான் மாத்திரமே புதிய உலகை ஸ்தாபிக்க வருகின்றேன்; பின்னர் ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் மேலே வீட்டுக்குத் திரும்பிச் செல்வார்கள். வெகு சில ஆத்மாக்களே மீதமாக இருப்பார்கள்.

ஓம் சாந்தி.
இது ஒரு வீடும், பல்கலைக்கழகமும், அத்துடன் ஒரு ஸ்தாபனமும் ஆகும். ஆத்மாக்களான, குழந்தைகளாகிய நீங்கள், அவர் சிவபாபா என்றும், சரீரத்துக்குச் சொந்தமான ஓர் ஆத்மா ஒரு சாலிகிராம் என்றும் புரிந்து கொள்கின்றீர்கள். ஒரு சரீரம் “எனது ஆத்மா” எனக் கூறுவதில்லை. ஆத்மாவே “எனது சரீரம்” என்று கூறுகின்றார். ஆத்மாக்கள் அழிவற்றவர்கள், சரீரங்கள் அழியக் கூடியவை. நீங்கள் இப்பொழுது உங்களை ஆத்மாக்களாகக் கருதுகின்றீர்கள். எங்களுடைய பாபா சிவன், அவரே பரமதந்தை. அவரே உங்களுடைய பரம பாபா என ஆத்மாக்களாகிய நீங்கள் அறிவீர்கள். அத்துடன் அவர் பரம ஆசிரியரும், பரம குருவும் ஆவார். பக்தி மார்க்கத்திலே, மக்கள் “ஓ, தந்தையாகிய கடவுளே!” என்று அழைக்கின்றார்கள். மரணிக்கும் தறுவாயிலும் அவர்கள் “ஓ கடவுளே! ஹே ஈஸ்வரா!” எனக் கூறுகின்றார்கள். அவர்கள் அழைக்கின்றார்கள், ஆனால் ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தை ஒரேயொருவரே என்பது எவரது புத்தியிலும் மிகச்சரியாக இருப்பதில்லை. “ஓ தூய்மையாக்குபவரே!” எனக் கூறப்படுகின்றது. எனவே அவர் குருவும் ஆவார். அவர்கள் கூறுகின்றார்கள்: எங்களைத் துன்பத்தில் இருந்து விடுவித்து, அமைதி தாமத்துக்கு அழைத்துச் செல்லுங்கள். எனவே அவர் தந்தையும் அத்துடன், தூய்மையாக்குகின்ற சற்குருவும் ஆவார். பின்னர் எவ்வாறு உலகச் சக்கரம் சுழல்கின்றது எனவும், எவ்வாறு மனிதர்கள் 84 பிறவிகள் எடுக்கின்றார்கள் எனவும் உலகின் எல்லையற்ற வரலாறையும், புவியியலையும் விளங்கப்படுத்துவதாலும், அவரே பரம ஆசிரியரும் ஆகுகின்றார். அறியாமைப் பாதையில் தந்தையர்கள், ஆசிரியர்கள், குருமார்கள் அனைவரும் வேறுபட்டவர்கள். இங்கே, எல்லையற்ற தந்தையும், ஆசிரியரும், குருவும் அனைவரும் ஒருவரே. அதிகளவு வேறுபாடு உள்ளது! எல்லையற்ற தந்தை, குழந்தைகளாகிய உங்களுக்கு எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுக்கின்றார். அந்தத் தந்தையர்கள் எல்லைக்கு உட்பட்ட ஆஸ்திகளைக் கொடுக்கின்றனர். அந்தக் கல்விகளும் எல்லைக்கு உட்பட்டவை. உலக வரலாறையும், புவியியலையும் எவருமே அறியார். இலக்ஷ்மி, நாராயணன் எவ்வாறு அவர்களுடைய இராச்சியத்தைப் பெற்றார்கள் அல்லது அவர்களுடைய இராச்சியம் எவ்வளவு காலம் நீடித்தது அல்லது இராமர், சீதை எவ்வளவு காலம் திரேதாயுகத்தை ஆட்சி செய்தார்கள் என எவருமே அறிய மாட்டார்கள். அவர்கள் எதையுமே அறியார்கள். எல்லையற்ற தந்தை உங்களுக்குக் கற்பிக்க வந்துள்ளார் என்பதைக் குழந்தைகளான நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். பாபாவும் உங்களுக்கு சற்கதிக்கான பாதையைக் காட்டுகின்றார். நீங்கள் 84 பிறவிகள் எடுத்ததனால், தூய்மை அற்றவர்கள் ஆகினீர்கள். நீங்கள் இப்பொழுது தூய்மையாக வேண்டும். இது தமோபிரதான் உலகம். அனைத்தும் சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகளுக்கூடாகச் செல்கின்றன. இந்த உலகின் யுகமும் பழையதில் இருந்து புதியதாகவும், பின்னர் புதியதில் இருந்து, பழையதாகவும் ஆகுகின்றது. சத்திய யுகத்தில் பாரதம் மாத்திரமே இருந்தது என்றும், தேவர்கள் அங்கே ஆட்சி செய்தார்கள் என்றும் அனைவருமே அறிவார்கள். அது தேவ, தேவியரின் இராச்சியமாக இருந்தது. அச்சா, பின்னர் என்ன நடந்தது? அவர்கள் மறுபிறவி எடுத்தார்கள். சதோபிரதானில் இருந்து, அவர்கள் சதோ, ரஜோ, பின்னர் தமோ நிலையை அடைந்தார்கள்; அவர்கள் இன்ன-இன்ன எண்ணிக்கையான பிறவிகளை எடுத்தார்கள். 5000 ஆண்டுகளுக்கு முன்னர் பாரதத்தில் இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியம் இருந்த பொழுது, மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 125 இலிருந்து 150 வருடங்களாக இருந்தது. அது அமரத்துவ உலகம் என்று அழைக்கப்படுகின்றது; அங்கே அகால மரணங்கள் ஒருபொழுதும் இருப்பதில்லை. இது மரணபூமி ஆகும். அமரத்துவ பூமியில், மக்கள் அமரத்துவமானவர்களாக உள்ளார்கள்; அவர்கள் நீண்ட ஆயுட்காலத்தைக் கொண்டுள்ளார்கள். சத்தியயுகத்தில், அது தூய இல்லற ஆச்சிரம் ஆகும். அது விகாரமற்ற உலகம் என அழைக்கப்படுகின்றது. இப்பொழுது இது விகாரமான உலகமாகும். நீங்கள் சிவபாபாவின் குழந்தைகள் என்பதை, இப்பொழுது அறிவீர்கள். நீங்கள் சிவபாபாவிடம் இருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். இவர் தாதாவும் (மூத்த சகோதரர்) ஆவார், அவர் பாட்டனார் ஆவார். நீங்கள் பாட்டனாரிடம் இருந்து ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். அனைவருக்கும் பாட்டனாரின் சொத்தில் ஓர் உரிமை உள்ளது. பிரம்மா மக்களின் தந்தை (பிரஜாபிதா) என்று அழைக்கப்படுகின்றார். ஆதாமும், ஏவாளும்: ஆதாமும் அவரது மனைவியும். அவர் அசரீரியான தந்தையான கடவுள். இவர் (பிரஜாபிதா) பௌதீகமான தந்தை ஆவார். இவருக்குத் தனது சொந்தச் சரீரம் உள்ளது, ஆனால் சிவபாபாவுக்கெனச் சொந்தமாக ஒரு சரீரம் இல்லை. நீங்கள் உங்கள் ஆஸ்தியை பிரம்மா பாபாவினூடாக, சிவபாபாவிடம் இருந்து பெறுகின்றீர்கள். நீங்கள் தந்தையினுடாக, பாட்டனாரின் சொத்தைப் பெறுகின்றீர்கள். நீங்கள் மீண்டும் ஒருமுறை பிரம்மா பாபாவினுடாக, சிவபாபாவினால், மனிதர்களில் இருந்து, தேவர்கள் ஆக்கப்படுகின்றீர்கள். அவர்கள் கிரந்தத்தில் (சீக்கியர்களின் சமயநூல்) “மனிதர்களைத் தேவர்கள் ஆக்குவதற்குக் கடவுளுக்கு அதிக நேரம் எடுக்கவில்லை” என்று அவரின் புகழைப் பாடுகின்றார்கள். உங்களை அவ்வாறு ஆக்கியவர் யார்? கடவுள்! கிரந்தத்தில் பெருமளவு புகழ் உள்ளது. பாபா கூறுகின்றார்: அல்பாவை நினைவு செய்யுங்கள், பின்னர் பீற்றாவான, இராச்சியம் உங்களுக்கு உரியதாகும். குருநானக்கும் கூறியுள்ளார்: பிரபுவின் பெயரை உச்சரியுங்கள், நீங்கள் சந்தோஷத்தைப் பெறுவீர்கள். அவர்கள் அந்த அசரீரியான, அமரத்துவ ரூபமான தந்தையின் புகழ் பாடுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள், நீங்கள் சந்தோஷத்தைப் பெறுவீர்கள். இப்பொழுது அனைவரும் தந்தையை நினைவு செய்கின்றார்கள். யுத்தம் முடிவடைந்த பின்னர், இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியத்தில் ஒரு தர்மம் மாத்திரமே இருக்கும். இந்த விடயங்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டும். கடவுள் பேசுகின்றார்: கடவுள் மாத்திரமே தூய்மையாக்குபவர் எனவும், ஞானக்கடல் எனவும் அழைக்கப்படுகின்றார். அவர் மாத்திரமே துன்பத்தை நீக்கிச் சந்தோஷத்தை அருள்பவர். நாங்கள் தந்தையின் குழந்தைகள் ஆதலால், நிச்சயமாகச் சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். உண்மையில், பாரத மக்களே சத்தியயுகத்தில் இருந்தார்கள். ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் அமைதிதாமத்தில் இருந்தார்கள். இப்பொழுது ஆத்மாக்கள் அனைவரும் இங்கே கீழே வருகின்றார்கள். பின்னர் நாங்கள் சென்று, தேவர்களாகி, சுவர்க்கத்தில் எமது பாகங்களை நடிப்போம். இப்பழைய உலகம் துன்ப பூமியும், புதிய உலகம் சந்தோஷ பூமியும் ஆகும். ஒரு வீடு பழையதாகும் பொழுது எலிகளும், பாம்புகளும் வெளிப்படுகின்றன. இந்த உலகமும் அவ்வாறானதே. இந்தச் சக்கரத்தின் கால எல்லை 5000 ஆண்டுகள். இப்பொழுது இது இறுதியாகும். காந்தியும் புதிய உலகமும், புது டெல்லியுமான கடவுளின் (இராமரின்) இராச்சியம் இருக்க வேண்டும் என்றே விரும்பினார். எவ்வாறாயினும் இது தந்தையின் பணி மாத்திரமே. தேவர்களின் இராச்சியம் மாத்திரமே இராம இராச்சியம் என்று அழைக்கப்படுகின்றது. அந்தப் புதிய உலகில் நிச்சயமாக இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியம் இருக்கும். முதலில் இராதையும், கிருஷ்ணரும் வெவ்வேறு இராச்சியத்துக்குச் சொந்தமானவர்கள். பின்னர் அவர்களின் திருமணத்தில் அவர்கள் இலக்ஷ்மி, நாராயணன் ஆகுகின்றார்கள். அவர்கள் இந்தப் பிறவியில் நிச்சயமாக அவ்வாறான செயல்களைச் செய்திருக்க வேண்டும். தந்தை இங்கே இருந்து செயல், நடுநிலைச் செயல், பாவச் செயலின் தத்துவத்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இராவண இராச்சியத்தில் மக்கள் செய்கின்ற செயல்கள் அனைத்தும் பாவச்செயல்கள். சத்தியயுகத்தில் செயல்கள் நடுநிலையானவை. இதுவும் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் அவர்கள் பெயரை மாற்றி விட்டார்கள். அது ஒரு தவறு. ஸ்ரீ கிருஷ்ணரின் பிறப்பு சத்தியயுகத்திலேயே இடம்பெறுகின்றது. சிவனே அசரீரியான பரமதந்தை ஆவார். ஸ்ரீகிருஷ்ணர் ஒரு சரீரதாரி. முதலில் சிவனுடைய பிறந்ததினம் இருக்கின்றது. பின்னர் அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்ததினத்தைப் பாரதத்தில் கொண்டாடுகின்றார்கள். அவர்கள் சிவராத்திரி (சிவனின் இரவு) பற்றிப் பேசுகின்றார்கள். தந்தை வந்து, பாரதத்திற்குச் சுவர்க்க இராச்சியத்தைக்; கொடுக்கின்றார். சிவனின் பிறந்ததினத்தின் பின்னர் ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்ததினம் உள்ளது. இவை இரண்டிற்கும் மத்தியில், ராக்கி இருக்கின்றது, ஏனெனில் தூய்மையும் தேவைப்படுகின்றது. பழைய உலகின் விநாசமும் இருக்க வேண்டும். எனவே யுத்தம் இடம்பெற்று அனைத்தும் அழிக்கப்படுகின்றன. பின்னர் நீங்கள் வந்து, புதிய உலகில் ஆட்சிசெய்கிறீர்கள். நீங்கள் இம் மரணபூமியான, இந்தப் பழைய உலகிற்காகக் கற்கவில்லை. உங்கள் கல்வி அந்த அமரத்துவ பூமியான, புதிய உலகிற்கானது. இவ்வாறான வேறு எந்த ஒரு கல்லூரியும் இல்லை. தந்தை கூறுகின்றார்: இப்பொழுது இது மரணபூமியின் இறுதி, எனவே நீங்கள் விரைவாகக் கற்றுத் திறமைசாலிகள் ஆகவேண்டும். அவர் தந்தையும், தூய்மையாக்குபவரும் ஆவார். அத்துடன் அவர் உங்களுக்குக் கற்பிக்கின்றார். இது இறை தந்தையின் பல்கலைக்கழகம். கடவுள் பேசுகின்றார்: ஸ்ரீ கிருஷ்ணர் சத்தியயுகத்தின் இளவரசர். அவரும் சிவபாபாவிடம் இருந்தே ஆஸ்தியைப் பெறுகின்றார். இந்நேரத்தில், நீங்கள் அனைவரும் உங்கள் எதிர்கால ஆஸ்தியைக் கோருகின்றீர்கள். நீங்கள் எவ்வளவுக்குக் கற்கின்றீர்களோ, அதற்கேற்ப, உங்கள் ஆஸ்தியைப் பெறுவீர்கள். நீங்கள் கற்காதுவிடின், உங்கள் அந்தஸ்தும் குறைந்து விடும். நீங்கள் எங்கு வாழ்ந்தாலும், தொடர்ந்தும் கற்க வேண்டும். முரளிகள் வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. பாபா ஒவ்வொரு நாளும் தொடர்ந்தும் உங்களை எச்சரிக்கின்றார். குழந்தைகளே, தந்தையை நினைவு செய்யுங்கள், ஏனெனில் அதனைச் செய்வதனால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். ஆத்மாக்களில் உள்ள கறை அகற்றப்படும். ஆத்மாக்கள் 100 சதவீதம் தூய்மையாக வேண்டும். இப்பொழுது அவர்கள் தூய்மை அற்றவர்கள். மக்கள் பெருமளவு பக்தி செய்கின்றனர். நூறாயிரக்கணக்கான மக்கள் யாத்திரைகளுக்கும், ஒன்றுகூடல்களுக்கும் செல்கின்றார்கள். அது பிறவிபிறவியாகத் தொடர்ந்து நடைபெறுகின்றது. அவர்கள் பல ஆலயங்கள் போன்றவற்றைக் கட்டி, அதிகளவு முயற்சி செய்கின்றார்கள். இருப்பினும், அவர்கள் தொடர்ந்தும் ஏணியில் கீழிறங்கி வந்துள்ளார்கள். உங்களுடைய மேலேறுகின்ற ஸ்திதியின் மூலம், நீங்கள் சந்தோஷ பூமிக்குச் செல்வீர்கள் எனவும், பின்னர் நீங்கள் கீழே வரவேண்டும் எனவும் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். கலைகள் பின்னர் தொடர்ந்தும் குறைவடையும். ஒரு புதிய வீட்டின் பகட்டு 10 வருடங்களின் பின்னர் நிச்சயமாகக் குறைவடைகின்றது. நீங்கள் சத்தியயுகம் எனும் புதிய உலகில் இருந்தீர்கள். 1250 வருடங்களின் பின்னர், இராம இராச்சியம் ஆரம்பமாகியது. உலகம் இப்பொழுது முற்றிலும் தமோபிரதான் ஆகியுள்ளது. பல்வேறு மனிதர்கள் இருக்கின்றார்கள்! இவ்வுலகம் பழையதாகி விட்டது. அந்த மக்கள் தொடர்ந்தும் குடும்பக் கட்டுப்பாட்டுக்காகப் பல திட்டங்களைச் செய்கிறார்கள். அவர்கள் தொடர்ந்தும் அதிகளவு குழப்பம் அடைகின்றார்கள். இது தந்தையாகிய கடவுளின் பணி மாத்திரமே என்று நாங்கள் எழுதுகின்றோம். ஒன்பது இலட்சத்தில் இருந்து ஒரு மில்லியன் வரையான மக்கள் சென்று சத்தியயுகத்தில் வசிப்பார்கள். மீதி அனைவரும் சென்று அவர்களது இனிய வீட்டில் இருப்பார்கள். இது இறை குடும்பத் திட்டமாகும்: ஒரு தர்மத்தின் ஸ்தாபனையும், ஏனைய அனைத்து மதங்களினதும் விநாசமும். தந்தை தனது வேலையைச் செய்கின்றார். அம்மக்கள் கூறுகின்றார்கள்: நீங்கள் காமத்தில் ஈடுபட அனுமதிக்கப்படுகின்றீர்கள். ஆனால், மேலும் குழந்தைகளைப் பெறாதீர்கள்! அந்த முறையில் எதையுமே நிறைவேற்ற முடியாது. இந்தத் திட்டம் எல்லையற்ற தந்தையின் கைகளில் மாத்திரமே உள்ளது. தந்தை கூறுகின்றார்: நான் மாத்திரமே துன்ப பூமியைச் சந்தோஷ பூமி ஆக்குவதற்கு வருகின்றேன். நான் ஒவ்வொரு 5000 வருடங்களிலும் கலியுகத்தின் இறுதிக்கும், சத்தியயுகத்தின் ஆரம்பத்திற்கும் இடையில் வருகின்றேன். இது இப்பொழுது, இத்தூய்மையற்ற உலகமானது அந்தத் தூய உலகம் ஆகுகின்ற சங்கமயுகம் ஆகும். இப்பழைய உலகை அழித்து, அப்புதிய உலகை ஸ்தாபிப்பது தந்தையினுடைய பணி மாத்திரமே ஆகும். சத்தியயுகத்தில் ஒரு தர்மம் மாத்திரமே இருந்தது. இலக்ஷ்மியும், நாராயணனும் சக்கரவர்த்தினியும் சக்கரவர்த்தியுமாக, உலக அதிபதிகளாக இருந்தார்கள். யாருடைய ஞாபகார்த்தமாக மணிமாலை உருவாக்கப்பட்டது என்பதை நீங்களும் அறிவீர்கள். உச்சியில் மலராகிய (குஞ்சம்) சிவபாபாவும், பின்னர் இரட்டை மணிகளான பிரம்மாவும், சரஸ்வதியும் இருக்கின்றனர். இது அவர்களின் மாலை; இது உலகை நரகத்தில் இருந்து சுவர்க்கமாகவும், தூய்மை அற்றதில் இருந்து தூய்மையாகவும் ஆக்குபவர்களுக்கு உரியது. சேவை செய்த பின்னர் மரணித்தவர்கள் நினைவு கூரப்படுகின்றார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: அவர்கள் சத்தியயுகத்தில் தூய்மையாக இருந்தார்கள்; அது தூய இல்லறப் பாதையாக இருந்தது. அவர்கள் இப்பொழுது தூய்மை அற்றவர்கள். பாடப்பட்டுள்ளது: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! வந்து எங்களைத் தூய்மை ஆக்குங்கள்! நீங்கள் சத்தியயுகத்தில் இவ்வாறு அழைக்க மாட்டீர்கள். சந்தோஷமாக இருக்கும் பொழுது எவருமே தந்தையை நினைவு செய்வதில்லை. துன்ப நேரத்திலேயே அனைவரும் அவரை நினைவு செய்கின்றார்கள். தந்தையே விடுதலை அளிப்பவரும், கருணை நிறைந்தவரும், பேரானந்தமானவரும் ஆவார். அவர் வந்து, அனைவருக்கும் முக்தியையும், ஜீவன்முக்தியையும் அளிக்கின்றார். மக்கள் அவரை அழைக்கின்றார்கள்: வந்து எங்களின் இனிய வீட்டிற்கு எங்களை அழைத்துச் செல்லுங்கள். இப்பொழுது சந்தோஷம் எதுவும் இல்லை. இப்பொழுது மக்களினாலான அரசாங்கமே உள்ளது. சத்தியயுகத்தில் அரசரும், அரசியும், பிரஜைகளும் இருக்கின்றார்கள். நீங்கள் எவ்வாறு உலகின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள் என்று தந்தை உங்களுக்குக் கூறுகின்றார். அங்கே உங்களிடம் அதிகளவு செல்வம், முடிவற்ற செல்வம் இருக்கின்றது. அங்கே கட்டடங்கள் தங்கக் கட்டிகளினாலேயே கட்டப்படுகின்றன. தங்கக் கட்டிகள் இயந்திரங்களால் செய்யப்படும். பின்னர் அவர்கள் அந்தத் தங்கக் கட்டிகளில் வைரங்களையும், இரத்தினங்களையும் பதிப்பார்கள். துவாபரயுகத்திலும் கூட அதிகளவு வைரங்கள் இருந்தன! அவை பின்னர் கொள்ளை அடிக்கப்பட்டன. இப்பொழுது தங்கம் எங்குமே காணப்படுவதில்லை. இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தந்தை கூறுகின்றார்: நான் 5000 வருடங்களுக்கு ஒருமுறை வருகின்றேன். பழைய உலகின் விநாசத்துக்கு அணுக்குண்டுகள் போன்றவை உருவாக்கப்படுகின்றன. அது விஞ்ஞானம் ஆகும். தங்களுடைய சொந்தக் குலத்தையே அழிக்கக்கூடிய அவ்வாறான பொருட்களைக் கண்டுபிடிப்பதற்கு அவர்கள் தமது புத்தியைப் பயன்படுத்துகின்றார்கள். அவர்கள் அந்தப் பொருட்களைக் களஞ்சியப்படுத்தி வைப்பதற்காக உற்பத்தி செய்வதில்லை. ஒத்திகைகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. இராச்சியம் ஸ்தாபிக்கப்படும் வரை யுத்தம் ஆரம்பிக்க மாட்டாது. ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன் இயற்கை அனர்த்தங்களும் இவை அனைத்திலும் அடங்குகின்றன. அதிகளவு மக்கள் இருக்க மாட்டார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இந்தப் பழைய உலகை மறக்க வேண்டும். உங்கள் இனிய வீட்டையும், சுவர்க்க இராச்சியத்தையும் நினைவு செய்யுங்கள். ஒரு புதிய வீடு கட்டப்படுகின்ற பொழுது, ஒருவரின் புத்தியானது புதிய வீட்டையே நினைவு செய்கின்றது. அப்புதிய உலகம் இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகின்றது. தந்தையே அனைவருக்கும் சற்கதி அருள்பவர். ஆத்மாக்கள் அனைவரும் வீடு திரும்புவார்கள், அவர்களின் சரீரங்கள் இங்கேயே அழிக்கப்படும். தந்தையின் நினைவின் மூலமே ஆத்மாக்கள் தூய்மை ஆகுகின்றார்கள். நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும். தேவர்கள் தூய்மையானவர்கள். சிகரட்டுகள், புகையிலை போன்றவை ஒருபொழுதும் தேவர்களின் விக்கிரகங்களின் முன்னால் வைக்கப்படுவதில்லை; அவர்கள் வைஷ்ணவர்கள். அது விஷ்ணு தாமம் என்று அழைக்கப்படுகின்றது. அது விகாரமற்ற உலகம், ஆனால் இதுவோ விகார உலகம். நீங்கள் இப்பொழுது விகாரமற்ற உலகிற்குச் செல்ல வேண்டும். மிகச் சிறிதளவு நேரமே எஞ்சியுள்ளது. அனைத்துமே அணுக்குண்டுகளால் அழிக்கப்படும் என்பதை நீங்களே புரிந்துகொள்ள முடியும். யுத்தம் நிச்சயமாக இடம்பெறும். தங்களை யாரோ அவற்றைச் செய்யுமாறு தூண்டுவதாகவும், அதனாலேயே தொடர்ந்தும் அவற்றை உருவாக்குவதாகவும் அவர்கள் கூறுகின்றார்கள். தங்களுடைய சொந்தக் குலமே அவற்றால் அழியும் என அறிந்திருந்தாலும், அவர்களால் அவற்றை உற்பத்தி செய்வதை நிறுத்த முடியாதுள்ளது. சங்கரர் மூலம் விநாசம் என்பதும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. விநாசம் முன்னால் உள்ளது. விநாசத்துக்கான சுவாலைகள் இந்த ஞான யாகத்தில் இருந்தே வெளியாகுகின்றன. நீங்கள் இப்பொழுது சுவர்க்க அதிபதிகள் ஆகுவதற்கே கற்கின்றீர்கள். இந்தப் பழைய உலகம் அழிக்கப்பட்டு, மீண்டும் புதியதாக உள்ளது. இந்தச் சக்கரம் தொடர்ந்து சுழல்கின்றது. வரலாறு மீண்டும் இடம்பெற வேண்டும். முதலில் ஆதிசனாதன தேவி தேவதா தர்மமும், பின்னர் சந்திர வம்சத்து, சத்திரிய தர்மமும் இருக்கின்றன. பின்னர் இஸ்லாமியர்கள், பௌத்தர்கள் போன்றோர் வருகின்றனர், பின்னர் நிச்சயமாக முதல் இலக்கம் மீண்டும் வந்து, ஏனைய அனைத்தும் அழிக்கப்படுகின்றது. யார் குழந்தைகளான உங்களுக்குக் கற்பிப்பவர்? அசரீரியான சிவபாபர் அவரே ஆசிரியரும், சற்குருவும் ஆவார். அவர் வந்ததுமே உங்களுக்குக் கற்பிக்க ஆரம்பிக்கின்றார்; இதனாலேயே சிவனின் பிறந்ததினமே, கீதையின் பிறந்ததினம் என எழுதப்பட்டுள்ளது: கீதையின் பிறந்ததினமே ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்ததினமும் ஆகும். சிவபாபா சத்தியயுகத்தை ஸ்தாபிக்கின்றார். ஸ்ரீ கிருஷ்ணரின் பூமியே சத்தியயுகம் என்று அழைக்கப்படுகின்றது. ஒரு சாதுவோ, புனிதரோ அல்லது மனிதரோ உங்களுக்குக் கற்பிப்பதில்லை. துன்பத்தை நீக்கிச் சந்தோஷத்தை அருள்பவரான, எல்லையற்ற தந்தையே உங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர் உங்களுக்கு 21 பிறவிகளுக்கான ஆஸ்தியைக் கொடுக்கின்றார். விநாசம் இடம்பெற வேண்டும். இந்நேரத்தைப் பற்றியே கூறப்பட்டுள்ளது: சிலரின் செல்வம் புதைந்து போனது, சிலரின் செல்வம் அரசாங்கத்தினால் களவாடப்பட்டது….. பெருமளவு திருட்டு போன்றவையும் நடக்கும். நெருப்பும் எரியும். அனைத்துமே இந்த யாகத்தில் அர்ப்பணிக்கப்படும். இப்பொழுது எங்கேயாவது சிறிதளவு தீ பரவினால், அது உடனேயே அணைக்கப்படுகின்றது. அதற்கு இன்னமும் சிறிது நேரம் எடுக்கும். அனைவரும் ஒருவருடன் ஒருவர் சண்டையிடுவர். அவர்களின் சண்டையை நிறுத்துவதற்கு எவருமே இருக்க மாட்டார்கள். இரத்த ஆறு ஓடிய பின்னர், பாலாறுகள் பாயும். அதுவே காரணமின்றி இரத்தம் சிந்துதல் என அழைக்கப்படுகின்றது. சில குழந்தைகள் காட்சிகளைக் கண்டார்கள், ஆனால் அந்நேரத்தில் நீங்களும் அனைத்தையும் உங்கள் பௌதீகக் கண்களால் பார்ப்பீர்கள். விநாசம் இடம்பெறும் முன்னர், தந்தையை நினைவு செய்யுங்கள், ஆத்மாக்களாகிய நீங்கள் தமோபிரதானில் இருந்து, சதோபிரதான் ஆகுவீர்கள். தந்தை புதிய உலக ஸ்தாபனைக்காக உங்களைத் தயார் ஆக்குகின்றார். இராச்சியம் முழுமையாக ஸ்தாபிக்கப்பட்டதும், விநாசம் இடம்பெறும். அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. விஷ்ணு பூமிக்குச் செல்வதற்கு உங்களைத் தகுதியானவர்கள் ஆக்குங்கள். சம்பூரணமாகத் தூய்மை ஆகுங்கள். தூய்மையற்ற உணவையும், பானத்தையும் துறவுங்கள். விநாசம் இடம்பெறும் முன்னர், உங்களிடம் உள்ள அனைத்தையும் தகுதியான முறையில் பயன்படுத்துங்கள்.

2. கற்று விரைவில் திறமைசாலிகள் ஆகுங்கள். எவ்விதமான பாவச்செயல்களும் செய்யாதிருப்பதில் கவனம் செலுத்துங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் முறைப்பாடுகளை (ஃபரியாத்) நினைவாக (யாத்) மாற்றி, ஓர் இயல்பான, நிலையான யோகி ஆகுவீர்களாக.

சங்கமயுகத்தின் சிறப்பியல்பானது நீங்கள் இப்பொழுது முயற்சி செய்து, உடனடியாக அதன் பலனைப் பெறுவதாகும். நீங்கள் ஒரு நிமிடம் நினைவு சொரூபம் ஆகும்பொழுது, பேறை உடனடியாக அனுபவம் செய்கின்றீர்கள். எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்படுகின்றது.ஆனாலும் உங்களின் நிகழ்கால மேன்மையான பாக்கியமானது எதிர்காலத்தில் பெறுவதை விடவும் மேலும் அதி மேன்மையானது. உங்கள் பாக்கியத்தின் போதையைப் பேணுங்கள், இயல்பான நினைவை நீங்கள் கொண்டிருப்பீர்கள். நினைவு இருக்கும் இடத்தில், முறைப்பாடுகள் இருக்க முடியாது. “என்னால் என்ன செய்ய முடியும்? எவ்வாறு என்னால் இதனைச் செய்ய முடியும்? என்னால் இதைச் செய்ய முடியாது, எனக்குச் சில உதவிகளைச் செய்யுங்கள்.” இவை முறைப்பாடுகள். எனவே, முறைப்பாடு செய்வதை நிறுத்தி விட்டு, இயல்பான, நிலையான யோகி ஆகுங்கள்.

சுலோகம்:
தங்களை விருந்தாளிகள் என்று கருதியவாறு முன்னேறிச் செல்பவர்களே மகத்துவத்தின் ஸ்திதியை அனுபவம் செய்கின்றனர்.

அவ்யக்த சமிக்ஞை: ஒற்றுமை மற்றும் நம்பிக்கை என்ற சிறப்பியல்புடன், வெற்றி நிறைந்தவர் ஆகுங்கள்.

நீங்கள் ஒன்றுகூடலின் சக்தி, அன்புச் சக்தி, ஒருவர் மற்றவரின் ஒத்துழைப்புச் சக்தி, சகிக்கும் சக்தியைச் சேகரிக்கும் பொழுது, மாயையால் உங்களைத் தாக்க முடியாது, அப்பொழுது வெற்றி முரசு ஒலிக்கும். நீங்கள் அனைவரும் ஒற்றுமையாகக் காணப்படும் பொழுதும், ஒரேயொருவரின் அன்பில் திளைத்திருக்கும் பொழுதும், நிலையான, ஸ்திரமான ஸ்திதியில் இருக்கும் பொழுதும் வெளிப்பாட்டின் அறிகுறிகள் அப்பொழுது புலப்படும். உங்கள் அனைவரினதும் சத்தியமானது இவ்வெளிப்பாட்டை ஏற்படுத்தும்.