17.03.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் உண்மையான தந்தையிடம் இருந்து உண்மையான கதையைச் செவிமடுத்து, சாதாரண மனிதனில் இருந்து நாராயணனாக மாறுகின்றீர்கள். நீங்கள் எல்லையற்ற தந்தையிடம் இருந்து, 21 பிறவிகளுக்குரிய உங்கள் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள்.
கேள்வி:
தந்தையின் எந்தக் கட்டளையைப் பின்பற்றுவதால் குழந்தைகளாகிய நீங்கள் தெய்வீகத்தன்மை வாய்ந்த புத்தி உடையவர்கள் ஆகின்றீர்கள்?பதில்:
தந்தையின் கட்டளை: சரீரத்தின் சகல உறவுகளையும் மறந்து, தந்தையையும், இராச்சியத்தையும் நினைவு செய்யுங்கள். நீங்கள் ஜீவன்முக்தி அடைவதற்காகவே சற்குரு இந்த ஸ்ரீமத்தை உங்களுக்குக் கொடுத்துள்ளார். இந்த ஸ்ரீமத்தைப் பின்பற்றுபவர்கள், அதாவது ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுபவர்கள், தெய்வீகப்புத்தி உடையவர்கள் ஆகுகின்றார்கள்.பாடல்:
இன்றைய மக்கள் இருளில் உள்ளனர்!ஓம் சாந்தி.
இதுவே கலியுக உலகமாகும். அனைவரும் இருளில் உள்ளனர். இதே பாரதம் ஒளியில் இருந்தது. ஆதியில் பாரதம் சுவர்க்கமாக இருந்தபொழுது, தங்களை இந்துக்கள் என அழைக்கும் இதே பாரத மக்கள், தேவர்களாக இருந்தனர். பாரத மக்கள் சுவர்க்க வாசிகளாக இருந்த பொழுது அங்கு வேறு தர்மம் இருந்ததில்லை. அங்கு ஒரு தர்மமே இருந்தது. 'சுவாக்" சுவர்க்கம், வைகுந்தம், பாகிஸ்ற் (சுவர்க்கத்தின் மறுபெயர்கள்) என்பன அனைத்தும் பாரதத்தின் மறுபெயர்களாகும். புராதன பாரதம் தூய்மையாகவும் மிக மிக செல்வம் நிறைந்ததாகவும் இருந்தது. இப்பொழுது கலியுகம் ஆகையால் பாரதம் முற்றிலும் ஏழ்மை அடைந்துள்ளது. அது சத்திய யுகமாக இருந்தது. நீங்கள் அனைவரும் பாரதவாசிகளே. நீங்கள் இருளில் இருக்கின்றீர்கள் எனவும், நீங்கள் சுவர்க்கத்தில் இருந்த பொழுது ஒளியில் இருந்தீர்கள் எனவும் அறிவீர்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் சுவர்க்கத்தின் இராஜ ராஜேஸ்வராகவும் (அரசன்) இராஜ இராஜேஸ்வரியாகவும் (அரசி) இருந்தனர். அது சந்தோஷ பூமியென்று அழைக்கப்பட்டது. புதிதாக வருபவர்களுக்காகவே தந்தை மீண்டும் விளங்கப்படுத்துகிறார். நீங்கள் தந்தையிடம் இருந்து உங்கள் சுவர்க்க ஆஸ்தியைப் பெற வேண்டும். இதுவே ஜீவன்முக்தி எனப்படும். இப்பொழுது ஒவ்வொருவரும் பந்தனம் நிறைந்த வாழ்க்கையையே வாழ்கிறார்கள். பொதுவாக உலகமும், குறிப்பாகப் பாரதமும் இராவணனின் சிறையான துன்ப வீட்டில் உள்ளனர். இராவணன் இலங்கையில் இருந்தான் என்றோ அல்லது இராமன் பாரதத்தில் இருந்தான் என்றோ இராவணன் வந்து சீதையை கடத்திச் சென்றான் என்றோ இல்லை. அவை அனைத்தும் கட்டுக் கதைகளாகும். கீதையே சமய நூல்களுள் இரத்தினம் போன்றது. அதாவது கீதை கடவுளால் உபதேசிக்கப்பட்டது. மனிதரால் ஒருவருக்கும் சற்கதியை அருள முடியாது. சத்திய யுகத்தில் ஜீவன் முக்தி அடைந்த தேவர்கள் இருந்தார்கள். அவர்கள் கலியுக இறுதியில் தமது ஆஸ்தியைப் பெற்றுக் கொண்டனர். பாரத மக்களுக்கு இது தெரியும் என்றோ அல்லது இது சமய நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது என்றோ இல்லை. சமய நூல்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்துக்கு உரியன. அந்த ஞானம் முழுவதும் பக்தி மார்க்கத்திற்கு உரியவை. சற்கதிக்குரிய இந்த ஞானத்தை மனிதர்கள் கொண்டிருக்கவில்லை. தந்தை கூறுகிறார்: மனிதர் மனிதருக்குக் குருவாக முடியாது. எந்தவொரு குருவினாலும் சற்கதியை அருள முடியாது. அக்குருமார்கள் உங்களைப் பக்தி செய்து, தானதர்மங்கள் கொடுக்குமாறு கூறுகிறார்கள். துவாபரயுகத்தில் இருந்து பக்திமார்க்கம் நிலவி வந்துள்ளது. சத்திய யுகத்திலும் திரேதாயுகத்திலும், இந்த ஞானத்தின் வெகுமதியே உள்ளது. இந்த ஞானம் அங்கும் தொடர்கின்றது என்றில்லை. பாரதம் பெற்ற ஆஸ்தி, சங்கம யுகத்தில் தந்தையால் கொடுக்கப்பட்டது. மீண்டும் அதனை நீங்கள் இப்பொழுது பெறுகிறீர்கள். நரக வாசிகளாகிய பாரத மக்கள் பெருந்துன்பத்தை அனுபவிக்கும் போது, துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவரான தூய்மையாக்கும் தந்தையை அழைக்கிறார்கள். யாருடைய துன்பத்தை அகற்ற? அனைவருடைய துன்பத்தையும் ஆகும். ஏனெனில், பொதுவாக உலகிலும், குறிப்பாகப் பாரதத்திலும் ஒவ்வொருவரிலும் ஐந்து விகாரங்களும் நிச்சயமாக உள்ளன. தந்தையே தூய்மை ஆக்குபவர். அவர் கூறுகிறார்: ஒவ்வொரு கல்பத்தின் சங்கம யுகத்திலும் நான் வந்து, அனைவருக்கும் சற்கதியை அருள்கிறேன். இவ்வுலகம் தூய்மையற்ற உலகம் என்பதால், அப்பாவிகளையும், பலவீனமானவர்களையும், கல்லுப் புத்தி உடையவர்களையும், நற்குணம் அற்றவர்களையும், குருமாரையும் ஈடேற்றுகின்றேன். சத்திய யுகம் தூய்மையான உலகமென அழைக்கப்படுகிறது. பாரதத்தில் இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் இருந்தது. தாம் சுவர்க்கத்தின் அதிபதிகளாக இருந்தார்கள் என்பதை பாரத மக்கள் அறிய மாட்டார்கள். தூய்மையற்ற உலகம் என்றால் பொய்யான உலகம் என்றும் தூய்மையான உலகம் என்றால் சத்திய உலகம் என்றும் அர்த்தமாகும். பாரதம் தூய்மையான உலகமாக இருந்தது. அது இலக்ஷ்மி நாராயணனின் சூரிய வம்சத்து இராச்சியமாக இருந்தது. இந்த பாரதமே ஒரு பொழுதும் அழியாததும், அழிக்க முடியாததும் ஆகும். அவர்களின் இராச்சியம் இருந்த பொழுது, வேறு எத்தேசமும் அங்கே இருக்கவில்லை. அந்த நாடுகள் பின்னரே வந்தன. ஒவ்வொரு கல்பமும் நூறாயிரக்கணக்கான வருடங்களைக் கொண்டதென சமய நூல்களில் எழுதியிருப்பதே மிகப் பெரிய தவறாகும். ஒரு கல்பம் நூறாயிரக்கணக்கான வருடங்களை உடையது அல்ல எனவும், அத்துடன் சத்தியயுகமும் நூறாயிரக்கணக்கான வருடங்களை உடையது அல்ல எனவும் தந்தை கூறுகின்றார். ஒவ்வொரு கல்பமும் 5000 வருடங்களை உடையது. மனிதர் 8.4 மில்லியன் பிறவிகளை எடுக்கிறார்கள் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் மனிதரை நாய்கள், பூனைகள் முதலியனவாக்கி விட்டனர். எவ்வாறாயினும் மிருகங்களின் பிறப்பு முற்றிலும் வேறுபட்டது. அவைகளில் 8.4 மில்லியன் வகைகள் உள்ளன. மனிதரில் ஒரு வகையே உள்ளது. அவர்கள் 84 பிறவிகள் எடுக்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தீர்கள். நாடகத்திட்டத்தின்படி பாரத மக்கள் தமது தர்மத்தை மறந்து விட்டனர். கலியுக இறுதியில் அவர்கள் முற்று முழுதாகத் தூய்மை அற்றவர்களாகி விட்டனர். சங்கம யுகத்தில் தந்தை வந்து உங்களைத் தூய்மை ஆக்குகின்றார். இது துன்ப பூமி என்று அழைக்கப்படுகிறது. பின்னர் சந்தோஷ உலகில் உங்கள் பாகம் மீண்டும் ஆரம்பமாகும். தந்தை கூறுகின்றார்: ஓ குழந்தைகளே, பாரத மக்களாகிய நீங்கள் சுவர்க்க வாசிகளாக இருந்தீர்கள். பின்னர் 84 பிறவிகள் ஏணியில் இறங்கி வந்தீர்கள். சதோ நிலையில் இருந்து நீங்கள் நிச்சயமாக ரஜோ, தமோ நிலைகளுக்கு வரவேண்டி இருந்தது. வேறு எவருமே தேவர்களாகிய உங்களைப்போல் செல்வந்தர்களாகவோ, எப்போதும் சந்தோஷமாகவோ, எப்போதும் ஆரோக்கியமாகவோ இருந்ததில்லை. பாரதம் செல்வம் மிக்கதாக இருந்தது! வைரங்களும் இரத்தினங்களும் பெருங் கற்களைப் போல் இருந்தன, அவை உடைக்கப்பட்டன. தந்தை, தான் எப்படி உங்கள் அனைவரையும் செல்வம் மிக்கவர்களாக ஆக்கினாரெனக் குழந்தைகளாகிய உங்களுக்கு நினைவூட்டுகின்றார்! நீங்கள் பதினாறு சுவர்க்கக் கலைகள் நிறைந்தவர்களாகவும், சகல தெய்வீகக் குணங்களும் நிறைந்தவர்களாகவும் இருந்தீர்கள். அரசனும் அரசியும் எவ்வாறோ, பிரஜைகளும் அவ்வாறே இருக்கின்றார்கள். அவர்களை இறைவன் இறைவி என்றும் அழைக்கலாம். எவ்வாறாயினும், ஒரேயொரு கடவுளே உள்ளார் எனவும், அவரே தந்தை என்றும் தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். அவரைப் பிரபு என்றோ ஈஸ்வரன் என்றோ அழைப்பதால், அவர் ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தை என்பதை நீங்கள் நினைவிற் கொள்வதில்லை. அவரே எல்லையற்ற தந்தை ஆவார். பாரத மக்கள் சிவனின் பிறந்த நாளைக் கொண்டாடிய பொழுதிலும், அவர்களில் ஒருவருக்கேனும் அவர் உண்மையில் எப்போது வந்தார் எனத் தெரியாதென அவர் விளங்கப்படுத்துகின்றார். அவர்கள் கல்லுப் புத்தியுள்ள கலியுகத்தினர். அவர்கள் தெய்வீகப் பிரபுக்களாக இருந்து, இப்பொழுது கல்லுப் பிரபுக்களாகி விட்டனர்! அவர்கள் அரசர்களாகவும், அரசிகளாகவும் இல்லாததால் அவர்களைப் பிரபுக்கள் என்று கூட அழைக்க முடியாது. ஆரம்பத்தில் இது தெய்வீக அரசரின் பூமியாக இருந்திருக்கின்றது. பின்னர் இது அசுரர்களின் இராச்சியம் ஆகின்றது. இது ஒரு நாடகம். அவை எல்லைக்கு உட்பட்ட நாடகங்கள். இதுவே எல்லையற்ற நாடகம் ஆகும். இந்த நேரத்திலேயே ஆரம்பம் முதல் இறுதி வரை உலக வரலாறு, புவியியல் ஆகியவற்றை நீங்கள் அறிகிறீர்கள்: வேறெவரும் இதை அறிய மாட்டார்கள். தேவர்கள் பாரதத்தில் இருந்த பொழுது முழு உலகுக்கும் அவர்களே அதிபதிகளாக இருந்தனர். அவர்கள் பாரதத்திலேயே இருந்தனர். தந்தை பாரத மக்களாகிய உங்களுக்கு நினைவூட்டுகின்றார். சத்திய யுகத்தில் ஆதிசனாதன தேவ தேவியர்களுக்கு மேன்மையான தர்மம் இருந்தது. அவர்கள் மேன்மையான செயல்களைச் செய்தார்கள். அவர்கள் 84 பிறவிகள் முலமாகக் கீழே இறங்கி வரவேண்டி இருந்தது. தந்தை இங்கிருந்து, இப்பொழுது இது எவ்வாறு உங்களது பல பிறவிகளின் இறுதிப் பிறவி என்னும் கதையைக் கூறுகின்றார். இது ஒருவரைப் பற்றிய கேள்வி மாத்திரமல்ல. யுத்தகளம் போன்றவையும் இல்லை. பாரத மக்கள் அது தங்களுடைய (இலக்ஷ்மி நாராயணனின்) இராச்சியம் என்பதையும் மறந்து விட்டனர். சத்திய யுகத்திற்கு அதிக காலம் கொடுத்ததன் மூலம் அவர்கள் அதனை வெகு தொலைவிற்குக் கொண்டு சென்று விட்டனர். மனிதர் எவருமே கடவுளாக இருக்க முடியாதெனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். மனிதர்களால் மனிதர்களுக்கு சற்கதி அருள முடியாது. அனைவருக்கும் சற்கதி அளிப்பவரும் தூய்மை அற்றவர்களைத் தூய்மையாக்குபவரும் ஒருவரே எனக் கூறப்படுகிறது. இது பொய்யான உலகமாகும். சத்தியமான தந்தையே சத்திய உலகை ஸ்தாபிப்பவர். பக்தர்கள் அனைவரையும் வழிபடுகின்றார்கள். ஆனால் பக்தி மார்க்கத்தில் அவர்கள் வழிபடும் ஒருவரது வாழ்க்கை வரலாற்றையேனும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. அவர்கள் சிவனின் பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார்கள். தந்தையே புதிய உலகத்தை உருவாக்குபவர். அவரே தந்தையாகிய சுவர்க்கக் கடவுள்...... எல்லையற்ற சந்தோஷத்தைத் தருபவரும் அவரே. சத்திய யுகத்தில் சந்தோஷம் நிலவியது. அது எவ்வாறு, யாரால் ஸ்தாபிக்கப்பட்டது? அவர் நரக வாசிகளைச் சுவர்க்க வாசிகளாகவும், சீரழிந்தவர்களை மேன்மையான தேவர்களாகவும் ஆக்கினார். தந்தை ஒருவருக்கே இந்தக் கடமை உள்ளது. குழந்தைகளாகிய உங்களை நான் தூய்மைப்படுத்துகின்றேன். நீங்கள் சுவர்க்கத்தின் அதிபதி ஆகின்றீர்கள். பின்னர் உங்களைத் தூய்மை அற்றவராக ஆக்குபவர் யார்? இந்த இராவணன்! சந்தோஷத்தையும் துக்கத்தையும் தருபவர் கடவுளென மனிதர் கூறுகிறார்கள். தந்தை கூறுகிறார்: நான் அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கின்றேன்! பின்னர் அரைக் கல்பத்திற்கு நீங்கள் தந்தையை நினைவு செய்வதில்லை. இராவண இராச்சியம் தொடங்கும் பொழுது, நீங்கள் அனைவரையும் வழிபட ஆரம்பிக்கிறீர்கள். இதுவே உங்களின் பல பிறவிகளின் கடைசிப் பிறவியாகும். நீங்கள் வினவுகிறீர்கள்: பாபா நான் எத்தனை பிறவிகள் எடுத்துள்ளேன்? தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, நீங்கள் உங்கள் பிறவிகளையே அறியாதவர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் முழு 84 பிறவிகளையும் எடுத்துள்ளீர்கள். நீங்கள் 21 பிறவிகளுக்குரிய உங்கள் ஆஸ்தியைப் பெற வந்துள்ளீர்கள். அதாவது, உங்கள் சத்தியமான பாபாவிடம் இருந்து இந்த ஞானத்தைக் கேட்கவும் சாதாரண மனிதனிலிருந்து நாராயணனாகும் சத்தியமான கதையைக் கேட்கவும் வந்துள்ளீர்கள். இது ஞானம், அது பக்தி. அதி மேன்மையான ஆன்மாவே வந்து இந்த ஆன்மீக ஞானத்தை உங்களுக்குத் தருகின்றார். குழந்தைகளே! ஆத்ம உணர்வு உடையவர் ஆகுங்கள். உங்களை ஆத்மாவெனக் கருதி, சதா தந்தையையே நினைவு செய்யுங்கள். சிவபாபாவே ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தை ஆவார். ஆத்மாக்கள் அனைவரும் அதிமேன்மையான உலகிலிருந்து வந்து, ஓர் சரீரத்தில் பிரவேசம் செய்து, அவர்களின் பாகத்தை நடிக்கிறார்கள். இது (இவ்வுலகம்) செயல்களின் களம் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு முக்கியமான நாடகம். ஆத்மாக்கள் தங்களின் நல்ல அல்லது தீய சம்ஸ்காரத்திற்கேற்ப நல்ல அல்லது தீய மனிதப் பிறவிகளை எடுக்கிறார்கள். தூய்மையாக இருந்த இவர், இப்பொழுது தூய்மை அற்றவர் ஆகிவிட்டார். இது உங்களுக்கும் பொருந்தும். உங்கள் தந்தையான நான், இராவணனின் இந்த அந்நிய உலகிற்கு ஒரு தூய்மையற்ற சரீரத்தில் வரவேண்டி உள்ளது. நான் முதலாம் இலக்கத்தைப் பெறுபவரின் சரீரத்தில் பிரவேசிக்க வேண்டும். சூரிய வம்சத்தினரே முழு 84 பிறவிகளையும் எடுக்கிறார்கள். இவர் பிரம்மா, நீங்கள் பிராமணர்கள். தந்தை தினமும் இதனை விளங்கப்படுத்துகிறார். எவ்வாறாயினும், கல்லுப் புத்தி உள்ளவர்களை தெய்வீகப்புத்தி உள்ளவர்களாக மாற்றுவது உங்கள் மாமியார் வீட்டிற்குப் போவது போன்று இல்லை! ஓ ஆத்மாக்களே, இப்பொழுது ஆத்ம உணர்வு உடையவர் ஆகுங்கள்! ஓ ஆத்மாக்களே, ஒரே தந்தையையும், இராச்சியத்தையும் நினைவு செய்யுங்கள்! சரீர உறவுகளைத் துறந்தீர்கள் என்றால் நீங்கள் தெய்வீகப்புத்தி உடையவர்கள் ஆகுவீர்கள்! ஒவ்வொருவரும் மரணிக்க வேண்டும். இப்பொழுது அனைவரும் ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர். அனைவருக்கும் சற்கதியை அளிப்பவராக சற்குருவைத் தவிர வேறு எவருமே இருக்க முடியாது. தந்தை கூறுகின்றார்: ‘ஓ பாரதத்தின் குழந்தைகளே, ஆரம்பத்தில் நீங்கள் தெய்வீகப் புத்தி உடையவராக இருந்தீர்கள்.’ ஆத்மாக்களும் பரமாத்மாவும் நீண்ட காலத்திற்குப் பிரிந்திருந்தார்கள் என்று நினைவு கூரப்படுகிறது. ஆகையால் தேவதேவியரின் தர்மத்தைச் சேர்ந்த பாரத மக்களாகிய நீங்களே முதன் முதலில் வந்தீர்கள். ஏனைய தர்மங்களைச் சேர்ந்தவர்கள் பின்னரே வந்ததனால், அவர்கள் குறைந்த எண்ணிக்கையான பிறவிகளையே எடுக்கின்றனர். உலக விருட்சம் எவ்வாறு வளர்கிறதென தந்தை இங்கிருந்து விளங்கப்படுத்துகின்றார். இவ்விடயத்தைக் கிரகிப்பவர்களுக்கு இது மிகவும் இலகுவாக இருக்கும். ஆத்மாவே அனைத்தையும் கிரகிக்கிறார். ஆத்மாவே பாவ ஆத்மாவாகவோ அல்லது புண்ணிய ஆத்மாவாகவோ ஆகின்றார். இது உங்களின் 84 வது பிறவி, கடைசிப்பிறவி. நீங்கள் இப்பொழுது ஓய்வுபெறும் நிலையில் உள்ளீர்கள். ஓய்வு பெறும் நிலையில் உள்ளவர்கள், ஒரு மந்திரத்தைப் பெறுவதற்காக குரு ஒருவரை ஏற்கிறார்கள். நீங்கள் இப்பொழுது வெளியில் உள்ள அவ்வாறான குருமார்களை உடையவர்கள் அல்லர். நானே உங்கள் அனைவருக்கும் தந்தையாகவும், ஆசிரியராகவும், சற்குருவாகவும் இருக்கிறேன். 'தூய்மையாக்குபவரான சிவபாபா" என்று நான் அழைக்கப்படுகிறேன். உங்களுக்கு இப்பொழுது ஞாபகம் வந்துள்ளது. அவரே ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தை ஆவார். ஆத்மாக்கள் அழிவற்றவர்கள் ஆகையால், ஆத்மாக்கள் உண்மையாகவும் உயிருள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். ஒவ்வோர் ஆத்மாவிலும் ஒரு பாகம் பதியப்பட்டுள்ளது. தந்தையும் சத்தியமானவர், உயிருள்ளவர் ஆவார். அவர் மனித உலக விருட்சத்தின் விதை ஆக இருப்பதனால், அவர் கூறுகின்றார்: இந்த முழு விருட்சத்தினதும் ஆரம்பம், மத்தி, இறுதியை நான் அறிவேன். இதனாலேயே நான் ‘ஞானம் நிறைந்தவர்’ என அழைக்கப்படுகிறேன். உங்களுக்கும் விதையானவரில் இருந்து எவ்வாறு விருட்சம் வெளிவருகின்றது எனும் இந்த ஞானம் முழுவதும் உண்டு. விருட்சம் வளர்வதற்குக் காலம் எடுக்கிறது. தந்தை கூறுகின்றார்: நானே விதை ஆவேன். இறுதியில் இந்த முழு விருட்சமுமே முற்றாக உக்கிய நிலையை அடைகிறது. தேவதேவியரின் தர்மத்தின் அத்திவாரம் இப்பொழுது இல்லாமல் இருப்பதைப் பாருங்கள். அது மறைந்து விட்டது. தேவதர்மம் மறைந்த பின்பே தந்தை வர வேண்டியுள்ளது. அவர் ஒரு தர்மத்தை ஸ்தாபித்து, ஏனைய தர்மங்களை அழியச் செய்கிறார். பிரஜாபிதா பிரம்மா மூலமே ஆதிசனாதன தேவி தேவதா தர்மத்தை ஸ்தாபிக்கின்றார். நீங்கள் சீரழிந்த மனிதரில் இருந்து மேன்மையுள்ள தேவர்கள் ஆகுவதற்கு இங்கு வந்துள்ளீர்கள். இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டதும், முடிவற்றதும் ஆகும். தந்தை வந்துள்ளார். ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்களும், அசரீரியான உலக வாசிகளும் ஆவார்கள். ஒவ்வொருவரும் அந்தத் தந்தையை நினைவு செய்கிறார்கள். துன்ப காலத்திலேயே அனைவரும் அவரை நினைவு செய்கிறார்கள். இராவணனின் இராச்சியத்தில் துன்பம் நிலவுகிறது. அனைவருக்கும் ஜீவன்முக்தி அருள்பவரான தந்தை, ஒருவரே என இங்கு யாவரும் நினைவு செய்கிறார்கள். அவர் புகழப்படுகிறார். தந்தை வரவில்லை எனில், உங்களை யார் தூய்மை ஆக்குவார்கள்? தற்பொழுது கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள் உட்பட அனைத்து மனிதர்களும் தமோபிரதானாக உள்ளனர். ஒவ்வொருவரும் நிச்சயமாக மறுபிறவி எடுத்தே ஆகவேண்டும். இப்பொழுது நரகத்தில் ஒவ்வொருவரும் மறுபிறவி எடுக்கிறார்கள். இந்து சமய மக்கள் கூறுவது போல் அவர்கள் சந்தோஷத்தை அனுபவம் செய்வதில்லை: ஒருவர் இறக்கும் போது அவர் சுவர்க்கவாசி ஆகின்றார் என்றால், அவர் அதுவரை நரகத்திலேயே இருந்திருக்கின்றார் என்றே அர்த்தம். ஆகையால் உங்கள் வாயில் ரோஜா இருப்பதாக! (அவர் சுவர்க்கத்திற்குச் சென்றது உண்மை ஆகட்டும்!) அவர் சுவர்க்கத்திற்குச் சென்று விட்டாரெனில், நீங்கள் ஏன் நரகத்திலுள்ள தூய்மையற்ற உணவை ஊட்டுகிறீர்கள்? மக்கள் சரீரத்தை விட்டுச் சென்ற ஆத்மாக்களுக்கு உணவு ஊட்டுகிறார்கள். வங்காளத்தில் அவர்கள் மீன், முட்டை ஆகியவற்றையும் ஊட்டுகிறார்கள். அத்தகைய உணவை அவர்கள் உண்பதற்கான அவசியம்தான் என்ன? எவரும் வீட்டிற்குத் திரும்ப முடியாது. முதலாவது இலக்கத்தைப் பெறுபவரே 84 பிறவிகள் எடுக்க வேண்டி உள்ளது. இந்த ஞானத்தில் சிரமம் எதுவுமில்லை. பக்தி மார்க்கத்தில் பெரும் முயற்சி செய்கிறார்கள். இராமரின் பெயரை உச்சரிக்கும் பொழுது அவர்களுக்குப் புல்லரிக்கின்றது. அவை அனைத்தும் பக்தி மார்க்கமே. சூரியன் சந்திரன் ஆகியன ஒளியைத் தருவன, அவை தேவர்களல்ல. உண்மையில் இந்நேரத்தில் உள்ளவர்களான ஞான சூரியனும், ஞானச் சந்திரனும், ஞான நட்சத்திரங்களுமே இப்புகழுக்கு உரியவர்கள். நல்லது.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. இந்த 84 ஆவது இறுதிப் பிறவியில் பாவச் செயல்கள் எதனையும் செய்ய வேண்டாம். புண்ணியாத்மா ஆகுவதற்கு முழு முயற்சி செய்யுங்கள். முற்றிலும் தூய்மையானவர்கள் ஆகுங்கள்.2. உங்கள் புத்தியைத் தெய்வீகமானது ஆக்குவதற்கு சரீர உறவுகள் யாவற்றையும் மறந்து, ஆத்ம உணர்வில் இருப்பதற்குப் பயிற்சி செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் சதா சக்தியால் நிரம்பியவராகி, உங்களின் பழைய சம்ஸ்காரங்கள் மற்றும் தடைகளில் இருந்து விடுபடுவீர்களாக.நீங்கள் எந்த வகையான தடை, பலவீனம் அல்லது பழைய சம்ஸ்காரத்தில் இருந்தும் விடுபட விரும்பினால், சக்தியைக் கிரகியுங்கள். அதாவது, சகல அணிகலன்களையும் அணியும் ரூபம் ஆகுங்கள். சதா சகல அணிகலன்களையும் அணிந்திருப்பவர்கள், எதிர்காலத்தில் விஷ்ணு வம்சத்தில் ஒருவர் ஆகுகிறார்கள். தற்சமயம் அவர்கள் வைஷ்ணவர்களாக இருப்பதனால், எந்தவொரு தமோகுணி எண்ணமோ அல்லது சம்ஸ்காரமோ அவர்களைத் தொட முடியாது. அவர்கள் இலகுவாக இந்தப் பழைய உலகில் இருந்து, அதாவது, இந்த உலகின் எந்த விடயத்தில் இருந்தும் அல்லது எந்தவொரு மனிதரில் இருந்தும் அப்பால் விலகிச் செல்கிறார்கள். எந்தவொரு காரணத்திற்காகவும் அவர்களை எவராலும் தொட முடியாது.
சுலோகம்:
ஒவ்வொரு கணமும் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒரு சமநிலையைப் பேணுவதே, அனைவரின் ஆசீர்வாதங்களையும் பெறுவதற்கான வழிமுறை ஆகும்.அவ்யக்த சமிக்ஞை: உங்கள் நம்பிக்கை என்ற அத்திவாரத்தை பலப்படுத்தி, சதா பயமற்றவராகவும் கவலையற்றவராகவும் இருங்கள்.
இரண்டு நண்பர்களில் ஒருவரை யாராவது இகழ்ந்தால், மற்ற நண்பர் முற்றிலும் அவரின் மனோபாவத்தை மாற்றி விடுவார். எங்கு நம்பிக்கை உள்ளதோ, அங்கே வார்த்தைகளின் அர்த்தமும் மாற்றப்பட்டு, சூழ்நிலையும் சிறியதாக ஆக்கப்படும். எனவே, ஒவ்வொருவரின் சிறப்பியல்புகளையும் பாருங்கள். உங்களில் பலர் இருந்தாலும், நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இருப்பதைக் காண முடியும். ஒன்றுகூடல் ஒரே வழியில் ஒற்றுமையாக இருக்கும். யாராவது ஒருவரைப் பற்றி இன்னொருவர் உங்களிடம் இகழ்ச்சியாகப் பேசினாலும், அவருக்கு ஆதரவளிப்பதற்குப் பதிலாக, அவ்வாறு கூறுபவரின் மனோபாவத்தை மாற்றுங்கள்.