17.05.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு மலராகி விட்டீர்களா என உங்களைச் சோதித்துப் பாருங்கள். சரீரத்தின் அகங்காரத்தைக் கொண்டிருப்பதனால். நீங்கள் ஒரு முள்ளாகவில்லையே என்பதையும் சோதனை செய்யுங்கள். உங்களை முட்களில் இருந்து மலர்களாக மாற்றுவதற்கே தந்தை வந்துள்ளார்.
கேள்வி:
எந்த நம்பிக்கையின் அடிப்படையில், நீங்கள் தந்தையின் மீது துண்டிக்கப்படாத அன்பை வைத்திருக்க முடியும்?பதில்:
நீங்கள் ஓர் ஆத்மா என்ற நம்பிக்கையை முதலில் கொண்டிருக்கும் பொழுது, தந்தை மீது அன்பைக் கொண்டிருப்பீர்கள். அசரீரியான தந்தை இந்தப் பாக்கிய இரதத்தில் பிரசன்னமாகி இருக்கின்றார் என்ற துண்டிக்கப்படாத நம்பிக்கையை நீங்கள் கொண்டிருப்பது அவசியம். இவரின் மூலம் அவர் எங்களுக்குக் கற்பிக்கின்றார். இந்த நம்பிக்கை துண்டிக்கப்படும் பொழுது, உங்கள் அன்பு குறைவடைகிறது.ஓம் சாந்தி.
முட்களை மலர்களாக மாற்றுகின்ற கடவுள் பேசுகின்றார்; அதாவது, பூந்தோட்டத்தின் அதிபதியான கடவுள் பேசுகின்றார். குழந்தைகளாகிய நீங்கள், முட்களிலிருந்து மலர்களாக மாறுவதற்காக இங்கே வந்துள்ளதை அறிவீர்கள். முன்னர் நீங்கள், முட்களாக இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் மலர்கள் ஆகுவதை நீங்கள் அனைவரும் புரிந்துகொள்கின்றீர்கள். தந்தை பெருமளவு புகழப்படுகின்றார். அவர்கள் கூறுகின்றார்கள்: தூய்மையாக்குபவரே, வாருங்கள்! அவர் படகோட்டியும் பூந்தோட்டத்தின் அதிபதியும் ஆத்மாக்களை விடுவிப்பவரும் ஆவார். அவரைப் பல பெயர்களினால் குறிப்பிட்டாலும், அவரது ஒரே ரூபமே எல்லா இடங்களிலும் காணப்படுகின்றது. ஞானக்கடலாகவும் சந்தோஷக் கடலாகவும் இருக்கின்ற அவரது புகழ் பாடப்படுகின்றது. நீங்கள் இப்பொழுது அந்த ஒரேயொரு தந்தையுடன் அமர்ந்திருக்கிறீர்கள் என்பதை அறிவீர்கள். முட்களைப் போன்ற மனிதர்களாகிய நீங்கள், இப்பொழுது மலர்களைப் போன்ற தேவர்களாக மாறுவதற்காக வந்துள்ளீர்கள். இதுவே உங்கள் இலக்கும் குறிக்கோளும் ஆகும். இப்பொழுது நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் இதயத்தினுள்ளே பார்த்து உங்களையே கேளுங்கள்: என்னிடம் தெய்வீகக் குணங்கள் இருக்கின்றனவா? நான் அனைத்துத் தெய்வீகக் குணங்களாலும் நிறைந்துள்ளேனா? முன்னர் நீங்கள் தேவர்களின் புகழ் பாடியதுடன், உங்களை முட்களாகவும் கருதி வந்தீர்கள். உங்களிடம் ஐந்து விகாரங்களும் இருப்பதால், நீங்கள் பாடினீர்கள்: நான் நற்குணங்கள் அற்றவன், என்னிடம் எவ்வித நற்குணங்களும் இல்லை. சரீர உணர்வும் ஆணவத்தின் மிகவும் பலமான ஒரு வடிவமாகும். உங்களை நீங்கள் ஆத்மாக்களாகக் கருதும்பொழுது, தந்தையின் மீது பெருமளவு அன்பு இருக்க முடியும். அசரீரியான தந்தை இந்த இரதத்தில் பிரசன்னமாகி இருக்கின்றார் என்பதை இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். இந்த நம்பிக்கை ஏற்பட்ட பின்னரும், அது துண்டிக்கப்படுகின்றது. நீங்கள், இந்தப் பாக்கிய இரதமான பிரஜாபிதா பிரம்மாவின் சரீரத்தில் இருக்கின்ற, சிவபாபாவிடம் வந்துள்ளதாகக் கூறுகின்றீர்கள். ஆத்மாக்களாகிய எங்கள் அனைவரினதும் தந்தையே ஒரேயொரு சிவபாபா. அவர் இந்த இரதத்தில் பிரசன்னமாகி உள்ளார். இந்த நம்பிக்கை மிகவும் உறுதியாக இருக்க வேண்டும். இதிலேயே மாயை சந்தேகத்தை ஏற்படுத்துகின்றாள். ஒரு குமாரிக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு, திருமணம் செய்யவுள்ள பொழுது, அவள் தனது கணவரிடமிருந்து பெருமளவு சந்தோஷம் கிடைக்கும் என நம்புகின்றாள். எவ்வாறாயினும், என்ன சந்தோஷத்தை அவள் பெறுகின்றாள்? அவள் உடனடியாகவே தூய்மை அற்றவளாக ஆகுகின்றாள். அவள் குமாரியாக இருக்கும்வரை, அவளின் தாய், தந்தை போன்ற அனைவரும் அவள் தூய்மையாக இருப்பதால், அவளுக்குத் தலை வணங்குகிறார்கள். அவள் தூய்மை அற்றவள் ஆகியதும், அவள் அனைவருக்கும் தலைவணங்க ஆரம்பிக்க வேண்டியுள்ளது. இன்று அனைவரும் அவளுக்குத் தலை வணங்குகின்றார்கள். நாளை அவள் அனைவருக்கும் தலை வணங்குவாள். குழந்தைகளாகிய நீங்கள், இப்பொழுது சங்கமயுகத்தில் அதிமேன்மையான மனிதர்கள் ஆகுகின்றீர்கள். நாளை நீங்கள் எங்கே இருப்பீர்கள்? இன்று இந்த வீடுகள் போன்றவை எப்படி இருக்கின்றன? எங்கும் அசுத்தமான செயல்கள் இடம்பெறுகின்றன. இது விலைமாதர் இல்லம் என அழைக்கப்படுகின்றது; அனைவரும் விகாரத்தின் மூலம் பிறப்பு எடுக்கின்றார்கள். நீங்கள் மாத்திரமே சிவாலயத்தில் வசித்தீர்கள். 5000 வருடங்களுக்கு முன்னர் நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருந்தீர்கள். அங்கே துன்பத்தின் பெயரோ, சுவடோ இருக்கவில்லை. நீங்கள் மீண்டும் அவ்வாறு ஆகுவதற்கே இப்பொழுது இங்கே வந்துள்ளீர்கள். மக்கள் சிவாலயத்தைப் பற்றி எதுவுமே அறிந்திருக்கவில்லை. சுவர்க்கம் சிவாலயம் என அழைக்கப்படுகிறது. சிவபாபா சுவர்க்கத்தை ஸ்தாபித்தார். “பாபா” என அனைவரும் கூறுகின்றார்கள். ஆனால் அவர்களிடம் தந்தை எங்கே இருக்கின்றார் என வினவுங்கள், அவர் சர்வவியாபி என அவர்கள் கூறுவார்கள். அவர் பூனைகளிலும் நாய்களிலும் மீன், முதலைகளிலும் இருக்கின்றார் என அவர்கள் கூறுகின்றார்கள். அதில் பெரும் வித்தியாசம் உள்ளது! தந்தை கூறுகின்றார்: நீங்கள் அதிமேன்மையான மனிதர்களாக இருந்தீர்கள். ஆனால் உங்கள் 84 பிறவிகளை எடுத்ததும், இப்பொழுது நீங்கள் என்னவாகி விட்டீர்கள்? நீங்கள் நரகவாசிகள் ஆகிவிட்டீர்கள். இதனாலேயே அனைவரும் அழைக்கின்றனர்: “ஓ தூய்மை ஆக்குபவரே, வாருங்கள்!” தந்தை இப்பொழுது அனைவரையும் தூய்மை ஆக்குவதற்கு வந்துள்ளார். அவர் கூறுகின்றார்: இந்த இறுதிப் பிறவியில் நஞ்சு அருந்துவதை நிறுத்துங்கள். எவ்வாறாயினும், அவர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தை இப்பொழுது கூறுகின்றார்: தூய்மை ஆகுங்கள்! அனைவரும் “பாபா” எனக் கூறுகின்றார்கள்: அனைத்துக்கும் முதலில் ஆத்மாக்கள் அந்த பாபாவை நினைவுசெய்த பின்னர், இந்த பாபாவை நினைவு செய்கின்றார்கள். அந்த பாபா அசரீரியானவர். இந்த பாபா சரீரதாரி. பரமாத்மா இங்கே அமர்ந்திருந்து, தூய்மையற்ற ஆத்மாக்களாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். ஆரம்பத்தில் நீங்களும் தூய்மையாக இருந்தீர்கள். நீங்கள், தந்தையுடன் இருந்தீர்கள், பின்னர் உங்கள் பாகங்களை நடிப்பதற்காக இங்கே வந்தீர்கள். இந்தச் சக்கரத்தை மிக நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். இப்பொழுது நீங்கள் புதிய உலகான, சத்திய யுகத்திற்குச் செல்ல வேண்டும். சுவர்க்கத்துக்குச் செல்ல வேண்டும் என்பதே உங்கள் விருப்பம். ஸ்ரீ கிருஷ்ணரைப் போன்றொரு குழந்தை வேண்டுமென நீங்கள் கேட்டீர்கள். உங்களை அவரைப் போன்றவர் ஆக்குவதற்காகவே நான் இப்பொழுது வந்துள்ளேன். அங்கே குழந்தைகள் அனைவரும் ஸ்ரீ கிருஷ்ணரைப் போன்றே இருக்கிறார்கள்; அவர்கள் சதோபிரதான் மலர்கள் ஆவார்கள். நீங்கள் இப்பொழுது கிருஷ்ண தாமத்திற்குச் செல்ல இருக்கின்றீர்கள். நீங்கள் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். உங்களையே கேளுங்கள்: நான் ஒரு மலராகி விட்டேனா? நான் சரீர உணர்வு உடையவராகி, ஒரு முள்ளாக ஆகுகின்றேனா? மனிதர்கள் தங்களை ஆத்மாக்களாகக் கருதுவதை விடவும் சரீரங்களாகவே கருதுகின்றார்கள். நீங்கள் ஆத்மாக்கள் என்பதை மறப்பதனால், தந்தையையும் மறந்து விடுகின்றீர்கள். தந்தையிடமிருந்து தந்தையை அறிந்து கொள்வதன் மூலமே நீங்கள் தந்தையின் ஆஸ்தியைப் பெற முடியும். அனைவரும் தங்கள் ஆஸ்தியை எல்லையற்ற தந்தையிடம் இருந்தே பெறுகின்றார்கள். தனது ஆஸ்தியைப் பெறாத ஓர் ஆத்மாவேனும் இல்லை. தந்தை மாத்திரமே வந்து, அனைவரையும் தூய்மையாக்கி, அவர்களை நிர்வாணா தாமமாகிய, வீட்டுக்குத் திரும்பவும் அழைத்துச் செல்கின்றார். ஒளி, ஒளியுடன் அல்லது பிரம்ம தத்துவத்துடன் கலக்கின்றது என அவர்கள் கூறுகின்றனர். அவர்களிடம் இந்த ஞானம் எதுவும் இல்லை. யாரிடம் நீங்கள் வந்திருக்கின்றீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்தச் சத்தியத்தின் சகவாசம் (சற்சங்கம்) மனிதருடன் அல்ல. ஆத்மாக்களாகிய நீங்கள் பரமாத்மாவிடம் இருந்து பிரிக்கப்பட்டிருந்தீர்கள், இப்பொழுது அவருடைய சகவாசத்தைக் கண்டடைந்து விட்டீர்கள். 5000 வருடங்களுக்கு ஒருமுறை மாத்திரமே சத்தியமானவரின் உண்மையான சகவாசத்தை நீங்கள் பெறுகின்றீர்கள். சத்திய, திரேதா யுகங்களில் சற்சங்கங்கள் இருப்பதில்லை. எவ்வாறாயினும், பக்தி மார்க்கத்தில் பல சற்சங்கங்கள் இருக்கின்றன. உண்மையில், ஒரேயொரு தந்தை மாத்திரமே சத்தியமானவர். நீங்கள் இப்பொழுது அவரின் சகவாசத்தில் அமர்ந்திருக்கின்றீர்கள். நீங்கள் இறை மாணவர்கள், கடவுளே உங்களுக்குக் கற்பிக்கிறார் என்ற விழிப்புணர்வை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். இதுவும் உங்களின் பெரும் பாக்கியமாகும். “எங்கள் பாபா இங்கே இருக்கின்றார்”. அவரே தந்தையாகவும் ஆசிரியராகவும் குருவாகவும் ஆகுகின்றார். அவர் இந்த நேரத்திலேயே இந்த மூன்று பாகங்களையும் நடிக்கின்றார். அவர் குழந்தைகளாகிய உங்களைத் தனக்குரியவர்கள் ஆக்குகின்றார். தந்தை கூறுகின்றார்: நினைவுசெய்வதன் மூலமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். தந்தையை நினைவு செய்வதன் மூலம் உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, பின்னர் நீங்கள் ஒளிக் கிரீடத்தைப் பெறுவீர்கள். அது ஓர் அடையாளச் சின்னமேயாகும்; நீங்கள் ஒளியைக் காண்பீர்கள் என்பதல்ல. அது தூய்மையின் அடையாளச் சின்னம். வேறு எவருமே இந்த ஞானத்தைப் பெறமுடியாது. ஒரேயொரு தந்தையே இதனைக் கொடுக்கின்றார். அவரிடம் முழு ஞானமும் உள்ளது. தந்தை கூறுகின்றார்: நான் மனித உலக விருட்சத்தின் விதை ஆவேன். இது தலைகீழான விருட்சம். இது கல்ப விருட்சம். முன்னர் தெய்வீக மலர்களின் விருட்சம் இருந்தது. அது இப்பொழுது ஐந்து விகாரங்களினால் ஒரு முட்காடு ஆகிவிட்டது. முதன்மையான விகாரம் சரீர உணர்வே. அங்கே சரீர உணர்வு இருப்பதில்லை. அங்கே தாங்கள்; ஆத்மாக்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள். ஆனால் அவர்கள் பரமாத்மாவாகிய தந்தையை அறிந்து கொள்வதில்லை. தாம் ஆத்மாக்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்கின்றார்கள். அவ்வளவே. அவர்களிடம் வேறு எந்த ஞானமும் இல்லை. பல பிறவிகளின் பின்னர் உங்கள் தோல் பழையதாகி விட்டது, அது இப்பொழுது சுருங்கிப் போய்விட்டது என உங்களுக்கு இப்பொழுது கூறப்பட்டுள்ளது. இபபொழுது நீங்கள் அதனை நீக்க வேண்டும். (பாம்பின் உதாரணம் உள்ளது). இப்பொழுது ஆத்மாக்களும் சரீரங்களும் தூய்மை அற்றவையாக உள்ளன. ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மை ஆகியதும், உங்கள் சரீரங்களை நீக்குவீர்கள். ஆத்மாக்கள் அனைவரும் வீடு திரும்புவார்கள். இந்த நாடகம் முடிவுக்கு வருகின்றது என்ற ஞானம் இப்பொழுது உங்களிடம் உள்ளது. இப்பொழுது நாங்கள் தந்தையுடன் வீடு திரும்ப வேண்டும். ஆகவே நாங்கள் வீட்டை நினைவுசெய்ய வேண்டும். இந்தச் சரீரங்கள் துறக்கப்பட வேண்டும். இந்தச் சரீரங்கள் அழிக்கப்பட்டதும் இந்த உலகமும் அழிக்கப்பட்டு விடும். பின்னர் நீங்கள் உங்கள் புதிய வீட்டுக்குச் சென்று, புதிய உறவுமுறைகளை வளர்த்துக் கொள்வீர்கள். அந்த மக்கள் இங்கேயே மறுபிறவிகளை எடுக்க வேண்டும். ஆனால் நீங்கள் மலர்களின் உலகில் பிறவிகளை எடுப்பீர்கள். தேவர்கள் தூய்மையானவர்கள் என அழைக்கப்படுகின்றார்கள். நீங்கள் மலர்களாக இருந்தீர்கள். பின்னர் முட்களாகி, அதன்பின்னர் மீண்டும் ஒருமுறை மலர்களின் உலகிற்குச் செல்வீர்கள் என்பதைப் புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் மேலும் முன்னேறும் பொழுது, பல காட்சிகளைக் காண்பீர்கள். இவை அனைத்தும் விளையாட்டுக்களே. மீரா திரான்சில் நடனமாடினார், ஆனால் அவரிடம் ஞானம் இருக்கவில்லை. மீரா சுவர்க்கத்திற்குச் செல்லவில்லை; அவர் இங்கேயே எங்கோ ஓரிடத்தில் இருப்பார். அவர் இந்தப் பிராமணக் குலத்திற்கு உரியவரானால், எங்காவது இந்த ஞானத்தைப் பெறுவார். அவர் திரான்சில் நடனம் ஆடியதால், சுவர்க்கத்துச் சென்றுவிட்டார் என்றில்லை. பலர் இவ்வாறு நடனமாடினர். அவர்கள் திரான்சில் சென்று, அனைத்தையும் கண்டு திரும்பிய பின்னர் விகாரத்தில் ஈடுபடுவார்கள். “நீங்கள் மேலேறினால், சுவர்க்கத்தின் இனிமையைச் சுவைப்பீர்கள், ஆனால் உங்கள் நிலை தாழ்ந்தால்…..” என்பது நினைவுகூரப்படுகின்றது. நீங்கள் இந்த ஞானத்தையும் யோகத்தையும் கற்றால், சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுவீர்கள் எனத் தந்தை உறுதி அளிக்கின்றார். நீங்கள் தந்தையை விட்டு நீங்கிச் சென்றால், சாக்கடையில் (விகாரம்) வீழ்கிறீர்கள். இதில் வியப்படைந்து தந்தைக்கு உரியவர்கள் ஆகியவர்களும் இருக்கின்றார்கள். அவர்கள் இந்த ஞானத்தைச் செவிமடுத்து, அனைவருக்கும் கூறினார்கள். பின்னர் அவர்கள் ஓடிவிட்டார்கள். அவர்கள் மாயையினால் மிகக் கடுமையாகக் காயப்படுகின்றார்கள். இப்பொழுது தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால், நீங்கள் தேவர்கள் ஆகுகின்றீர்கள். ஆத்மாக்கள், சரீரங்கள் இரண்டுமே மேன்மையானதாக வேண்டும். தேவர்கள் விகாரத்தின் மூலம் பிறப்பெடுக்க மாட்டார்கள். அந்த உலகம் விகாரமற்ற உலகம். ஐந்து விகாரங்களும் அங்கிருக்க மாட்டாது. சிவபாபா சுவர்க்கத்தை உருவாக்கினார். இப்பொழுது இது நரகம். நீங்கள் மீண்டும் ஒருமுறை சுவர்க்கவாசிகள் ஆகுவதற்கு இப்பொழுது இங்கே வந்துள்ளீர்கள். நன்றாகக் கற்பவர்கள் சுவர்க்கத்திற்குச் செல்வார்கள். நீங்கள் மீண்டும் கற்பதுடன், ஒவ்வொரு சக்கரத்திலும் தொடர்ந்தும் கற்பீர்கள். இந்தச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது. இது எவருமே விடுபட முடியாத, ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட நாடகமாகும். எதனை நீங்கள் பார்த்தாலும், உதாரணமாக ஒரு நுளம்பு பறந்தால், அது அடுத்த சக்கரத்திலும் அதேபோன்று பறக்கும். இதனைப் புரிந்து கொள்வதற்கு, மிகச்சிறந்த புத்தி தேவைப்படுகின்றது. இந்த நாடகத்தின் படப்பிடிப்பு தொடர்ந்தும் இடம்பெறுகின்றது. இது செயற்களம். நீங்கள் உங்கள் பாகங்களை நடிப்பதற்காக பரந்தாமத்தில் இருந்து இங்கே வருகின்றீர்கள். உங்களில் சிலர் இக்கல்வியில் மிகவும் திறமைசாலிகள் ஆகுகின்றீர்கள், சிலர் இன்னும் கற்றுக்கொண்டு இருக்கின்றீர்கள். சிலர் கற்று, பழையவர்களை விடவும் திறமைசாலிகள் ஆகுகின்றனர். ஞானக் கடல் அனைவருக்கும் கற்பிக்கின்றார். நீங்கள் தந்தைக்கு உரியவர்கள் ஆகியதும், உலக ஆஸ்தி உங்களுடையது ஆகுகின்றது. ஆம், தூய்மை அற்றவர்களாகி விட்ட ஆத்மாக்கள் நிச்சயமாகத் தூய்மையாக்கப்பட வேண்டும். எல்லையற்ற தந்தையைத் தொடர்ந்தும் நினைவுசெய்வதே, தூய்மை ஆகுவதற்கான இலகுவான வழியாகும். குழந்தைகளாகிய நீங்கள் இந்தப் பழைய உலகில் விருப்பமின்மையைக் கொண்டிருக்க வேண்டும். பின்னர் முக்தி தாமமும் ஜீவன்முக்தி தாமமும் உள்ளன. நாங்கள் ஒரு தந்தையைத் தவிர வேறு எவரையும் நினைவுசெய்ய வேண்டியதில்லை. அதிகாலைப் பொழுதில் விழித்தெழுந்து, பயிற்சி செய்யுங்கள்: நான் சரீரமின்றி வந்தேன், நான் சரீரமின்றியே திரும்பிச் செல்ல வேண்டும். ஆகவே நான் ஏன் சரீரதாரிகளை நினைவுசெய்ய வேண்டும்? காலையில் அமிர்த வேளையில் விழித்தெழுந்து, இவ்வாறாக உங்களுடனே பேசுங்கள். அதிகாலைப் பொழுது, அமிர்தவேளை என அழைக்கப்படுகின்றது. ஞானக்கடலிடம் ஞான அமிர்தம் உள்ளது. ஆகவே ஞானக்கடல் கூறுகின்றார்: அதிகாலைப் பொழுது மிகவும் நல்லது. அதிகாலைப் பொழுதில் விழித்தெழுந்து, பெருமளவு அன்புடன் தந்தையை நினைவுசெய்யுங்கள்: பாபா, 5000 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் உங்களைக் கண்டுகொண்டேன். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது என்னை நினைவுசெய்யுங்கள். உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். நிச்சயமாக நீங்கள் சதோபிரதான் ஆகவேண்டும். தந்தையை நினைவுசெய்யும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டால், நீங்கள் தொடர்ந்து சந்தோஷமான நிலையில் இருப்பதுடன், சரீர உணர்வும் தொடர்ச்சியாக அகற்றப்பட்டுவிடும். அப்பொழுது சரீரத்தின் உணர்வு இருக்க மாட்டாது; பெருமளவு சந்தோஷம் இருக்கும். நீங்கள் தூய்மையாக இருந்தபொழுது, மிகவும் சந்தோஷமாக இருந்தீர்கள். இந்த ஞானம் அனைத்தையும் உங்கள் புத்தியில் வைத்திருக்க வேண்டும். முதலில் வருபவர்களே நிச்சயமாக 84 பிறவிகளையும் எடுப்பார்கள். பின்னர் சந்திர வம்சத்தவர் ஒரு சில பிறவிகள் குறைவாக எடுப்பார்கள். அதன்பின்னர் இஸ்லாம் மதத்தவர் அதிலும் குறைவான பிறவிகளை எடுப்பார்கள். விருட்சமும் வரிசைக்கிரமமாகவே தொடர்ந்தும் வளர்கின்றது. தேவ தர்மமே, பிரதான தர்மமாகும். பின்னர் இதிலிருந்து மூன்று சமயங்கள் தோன்றுகின்றன. அதன்பின்னர், கிளைகளும் சிறு கொப்புகளும் தோன்றுகின்றன. இப்பொழுது இந்த நாடகத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியும். இந்த நாடகம் ஒரு பேன் போன்று மெதுவாகத் தொடர்ந்தும் நகர்கின்றது; அது வினாடிக்கு, வினாடி தொடர்ந்தும் நகர்கின்றது. இதனாலேயே “ஒரு வினாடியில் முக்தி” என்பது நினைவு கூரப்படுகின்றது. ஆத்மாக்கள் தங்கள் தந்தையை நினைவு செய்கின்றார்கள்: பாபா, நாங்கள் உங்கள் குழந்தைகள். ஆகவே நாங்கள் சுவர்க்கத்தில் இருக்க வேண்டும். எனவே நாங்கள் ஏன் இன்னமும் நரகத்தில் உள்ளோம்? தந்தை சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார், எனவே ஏன் நாங்கள் இன்னமும் நரகத்தில் இருக்கின்றோம்? தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் சுவர்க்கத்திலே இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் 84 பிறவிகளையும் எடுத்ததனால், அனைத்தையும் மறந்து விட்டீர்கள். இப்பொழுது மீண்டும் ஒருமுறை எனது வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள். தந்தையின் நினைவைக் கொண்டிருப்பதனால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். ஆத்மாக்களில் கலப்படம் கலக்கப்பட்டுள்ளது. சரீரங்கள் ஆத்மாக்களின் அணிகலன். ஆத்மாக்கள் தூய்மையாகும் பொழுது, தூய சரீரங்களைப் பெறுகின்றனர். நீங்கள் சுவர்க்கத்திலே இருந்தீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இப்பொழுது தந்தை மீண்டும் ஒருமுறை வந்துள்ளார். அவரிடமிருந்து நீங்கள் உங்களுடைய முழு ஆஸ்தியையும் பெற வேண்டும். ஐந்து விகாரங்களும் துறக்கப்பட வேண்டும். சரீர உணர்வும் துறக்கப்பட வேண்டும். அனைத்தையும் செய்யும் பொழுதும் தந்தையைத் தொடர்ந்தும் நினைவு செய்யுங்கள். ஆத்மாக்கள் தங்கள் அன்பிற்கினியவரை அரைக் கல்பமாக நினைவு செய்கின்றார்கள். அந்த அன்பிற்கினியவர் இப்பொழுது வந்துள்ளார். அவர் கூறுகின்றார்: நீங்கள் காமச் சிதையில் அமர்ந்ததனால் அவலட்சணமாகி விட்டீர்கள். நான் இப்பொழுது உங்களை அழகானவர்கள் ஆக்குவதற்கு வந்துள்ளேன். இதற்காகவே யோக அக்கினி உள்ளது. ஞானம் ஒரு சிதை என அழைக்கப்பட முடியாது. இந்த யோகத்தின் சிதை உள்ளது. நினைவுச் சிதையில் இருப்பதனால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். கியான், ஞானம் என அழைக்கப்படுகிறது. தந்தை உங்களுக்கு உலகின் ஆரம்பம், மத்தி இறுதியின் ஞானத்தைக் கூறுகின்றார். தந்தையே அதிமேலானவர். பின்னர், பிரம்மா, விஷ்ணு, சங்கரரும், அதன்பின்னர் சூரிய சந்திர வம்சங்களும் உள்ளன. அதன் பின் ஏனைய சமயங்களின் உப பிரிவுகளும் உள்ளன. இந்த விருட்சம் மிகப் பெரிதாக வளர்கின்றது. இந்த நேரத்தில் இந்த விருட்சத்தின் அத்திவாரம் எதுவும் இல்லை. இதனாலேயே ஆலமரத்தின் உதாரணம் கொடுக்கப்பட்டுள்ளது. தேவ தர்மம் மறைந்து விட்டது. மக்கள் தங்கள் தர்மத்திலும் தங்கள் செயல்களிலும் சீரழிந்தவர்கள் ஆகிவிட்டார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது மேன்மையானவர்கள் ஆகுவதற்கு, மேன்மையான செயல்களைச் செய்கின்றீர்கள். நீங்கள் உங்கள் கண்களைக் குற்றம் அற்றதாக ஆக்குகின்றீர்கள். நீங்கள் இப்பொழுது சீரழிந்த செயல்களைச் செய்யக்கூடாது; தீய பார்வை இருக்கக்கூடாது. உங்களையே சோதியுங்கள்: நான் இலக்ஷ்மியைத் திருமணம் செய்வதற்குத் தகுதியானவரா? நான் என்னை ஓர் ஆத்மாவாகக் கருதி, தந்தையை நினைவு செய்கின்றேனா? தினமும் உங்கள் அட்டவணையைப் பரீட்சித்து உங்களையே வினவுங்கள்: நாள் முழுவதும் நான் சரீர உணர்வு உடையவராகி ஏதாவது பாவச் செயல் செய்தேனா? அவ்வாறிருப்பின், நூறு மடங்கு தண்டனை கிடைக்கும். நீங்கள் உங்கள் அட்டவணையை வைத்திருப்பதற்கு மாயை அனுமதிப்பதில்லை. நீங்கள் அதனை 2 முதல் 4 நாட்களுக்கு எழுதி விட்டுப் பின்னர் நிறுத்தி விடுகிறீர்கள். தந்தை மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். அவர் கருணையுள்ளவர். குழந்தைகளாகிய நீங்கள் அவரை நினைவு செய்திருந்தால் உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டிருக்கும் என அவர் உணர்கிறார். இதற்கு முயற்சி தேவை. நீங்கள் உங்களுக்கு இழப்பை ஏற்படுத்தக்கூடாது. ஞானம் மிக இலகுவானது. அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. அமிர்த வேளையில் விழித்தெழுந்து, தந்தையுடன் இனிய உரையாடலைச் செய்யுங்கள். சரீரமற்றவர் ஆகுவதைப் பயிற்சி செய்யுங்கள். தந்தையைத் தவிர வேறு எவரையும் நினைவு செய்யாதிருப்பதில் கவனம் செலுத்துங்கள்.2. உங்களுடைய பார்வையை மிகவும் சுத்தமானதாகவும் தூய்மையானதாகவும் ஆக்குங்கள். தெய்வீக மலர்களின் தோட்டம் உருவாக்கப்படுகின்றது. ஆகவே, ஒரு மலர் ஆகுவதற்கு முழு முயற்சி செய்யுங்கள். ஒரு முள் ஆகாதீர்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களுடன் சுயபரிசோதனை செய்து, சக்திவாய்ந்த ஸ்திதியில் உங்களின் மனதால் சேவை செய்யும் சான்றிதழைப் பெறுவீர்களாக.உலகிற்கு ஒளி மற்றும் சக்தியின் ஆசீர்வாதத்தைக் கொடுப்பதற்கு, நினைவினால் உங்களில் சுயபரிசோதனை செய்வதன் மூலம் அமிர்த வேளையில் சூழலைச் சக்திசாலி ஆக்குங்கள். அப்போது உங்களின் மனதால் சேவை செய்வதற்கான சான்றிதழைக் பெறக்கூடியதாக இருக்கும். இறுதிக் கணங்களில், ஒரு கணப் பார்வையால் மற்றவர்களை அப்பால் எடுத்துச் செல்லும் சேவையையும் உங்களின் சொந்த மனோபாவத்தால் மற்றவர்களின் மனோபாவங்களை மாற்றுகின்ற சேவையையும் நீங்கள் உங்களின் மனதால் செய்ய வேண்டும். உங்களின் மேன்மையான விழிப்புணர்வால் எல்லோருக்கும் சக்தியை வழங்க வேண்டும். இந்த முறையில் அவர்களுக்கு ஒளியையும் சக்தியையும் வழங்குகின்ற பயிற்சியைச் செய்யும்போது, சூழல் தடைகளில் இருந்து விடுபட்டதாகும். மேலும் இந்தக் கோட்டையும் பலமானது ஆகும்.
சுலோகம்:
ஒரு விவேகி ஆத்மா ஒரே வேளையில் மூன்று வகையான சேவைகளைச் செய்வார்: எண்ணங்கள் மூலம், வார்த்தைகளின் மூலம், செயல்களின் மூலம்.அவ்யக்த சமிக்கை: ஆன்மீக இராஜரீகம் மற்றும் தூய்மையின் ஆளுமையைக் கடைப்பிடியுங்கள்.
ஒரு விநாடியில் முக்தியையும் ஜீவன்முக்தியையும் பெற முடியும் என நீங்கள் சவால் விடுக்கிறீர்கள். இதை நடைமுறையில் செய்வதற்கு, உங்களின் சுய மாற்றத்தின் வேகம் ஒரு விநாடியை அடைய வேண்டும். உங்களின் சுய மாற்றத்தால் மற்றவர்கள் மாற்றப்பட வேண்டும். பிரம்மாகுமார்களான நீங்கள் தமது மனோபாவம், பார்வை, செயல்கள், வார்த்தைகளை மாற்றுவதாக அவர்கள் அனுபவம் செய்ய வேண்டும். இத்துடன் கூடவே, தூய்மையினது ஆளுமையினதும் ஆன்மீக இராஜரீகத்தினதும் அனுபவத்தையும் கொடுங்கள். அவர்கள் வந்து உங்களைச் சந்தித்த உடனேயே, அவர்கள் இந்த ஆளுமையால் கவரப்பட வேண்டும்.