17.06.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிமையான குழந்தைகளே, சூரிய வம்சத்து இராஜ அந்தஸ்தைப் பெறுவதற்கு, உங்களிடமுள்ள அனைத்தையும் தந்தையிடம் அர்ப்பணியுங்கள். சூரிய வம்சத்து இராஜ அந்தஸ்து என்பது ஒரு குளிரூட்டப்பட்ட அனுமதிச் சீட்டு ஆகும்.
கேள்வி:
ஏன் குழந்தைகளாகிய உங்களைத் தவிர உலகிலுள்ள வேறு எவரும் அதிக பாக்கிய சாலிகள் அல்ல?பதில்:
எல்லையற்ற தந்தை குழந்தைகளாகிய உங்கள் முன்னால் நேரடியாக உள்ளார். அவரிடமிருந்து நீங்கள் எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் எல்லையற்ற தந்தைக்கும் ஆசிரியருக்கும் சற்குருவுக்கும் உரியவர்கள் ஆகியுள்ளதுடன் நீங்கள் எல்லையற்ற பேறுகளையும் அவரிடம் இருந்து பெறுகிறீர்கள். உலக மக்களுக்கு அவரைத் தெரியாது, ஆகவே எவ்வாறு அவர்களால் உங்களைப் போன்று பாக்கியசாலிகளாக இருக்க முடியும்?பாடல்:
உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர் மிகவும் பாக்கியசாலி.ஓம் சாந்தி.
பிராமண குல அலங்காரங்களாகத் திகழ்கின்ற குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது பிராமண சமுதாயத்திற்கு உரியவர்கள் என்றும், நீங்களே தேவ சமுதாயத்தினர் ஆகுவீர்கள் என்றும் உங்களுக்குத் தெரியும். தந்தை இங்கிருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். எல்லையற்ற தந்தை உங்களுக்கு முன்னால் இருப்பதனால் அவரிடமிருந்து நீங்கள் எல்லையற்ற ஆஸ்தியையும் பெறுகிறீர்கள், இதைவிட உங்களுக்கு வேறு என்ன வேண்டும்? பக்தி மார்க்கம் எப்பொழுது ஆரம்பித்தது என்பது எவருக்கும் தெரியாது. பக்தி மார்க்கத்து பக்தர்கள் கடவுளை நினைவு செய்கிறார்கள். அதாவது மணவாட்டிகள் மணவாளனை நினைவு செய்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு அவரைத் தெரியாது என்பது ஓர் அதிசயமே! தனது மணவாளனை அறியாத மணவாட்டியை எப்போதாவது பார்த்துள்ளீர்களா? அவள் அவரை அறியாதிருந்தால் அவள் எவ்வாறு அவரை நினைவு செய்ய முடியும்? கடவுளே அனைவருக்கும் தந்தை ஆவார். குழந்தைகள் தந்தையை நினைவு செய்கின்றனர். எவ்வாறாயினும் அவரை இனம் காணாது நினைவு செய்தல் என்பது நேரத்தை வீணாக்குவது ஆகும். இதனாலேயே அவரை நினைவு செய்வதன் மூலம் அவர்கள் எந்தப் பலனையும் பெறுவதில்லை. அவரை அவர்கள் நினைவு செய்த போதிலும், எவரும் இலக்கையோ குறிக்கோளையோ அடைவதில்லை. கடவுள் யார் என்பது பற்றியோ அல்லது அவரிடமிருந்து எதனைப் பெறுகின்றார்கள் என்பதோ அவர்களுக்குத் தெரியாது. கிறிஸ்து, புத்தர், ஏனைய சமய ஸ்தாபகர்கள் அனைவரும் சமயங்களைப் போதிப்பவர்களே. அவர்களது சீடர்கள் அவர்களை நினைவு செய்கின்றனர். எவ்வாறாயினும், அவர்களை நினைவு செய்வதன் மூலம் எதைப் பெறுகின்றார்கள் என்பது அந்தச் சீடர்களுக்குத் தெரியாது. ஒரு பௌதீகக் கல்வி அதைவிடவும் சிறந்ததாகும். அவர்களது புத்தியில் இலக்கும் குறிக்கோளும் ஆவது இருக்கிறது. நீங்கள் தந்தையிடம் இருந்து எதைப் பெறுகிறீர்கள்? நீங்கள் ஆசிரியரிடம் இருந்து எதைப் பெறுகிறீர்கள்? குருவிடமிருந்து எதைப் பெறுகிறீர்கள்? வேறு எவராலும் இவற்றைப் புரிந்து கொள்ள முடியாது. இங்கு, நீங்கள் முதலில் தந்தைக்கும், பின்பு ஆசிரியருக்கும் பின்னர் சற்குருவுக்கும் உரியவர்கள் ஆகுகிறீர்கள். தந்தையையும் ஆசிரியரையும் விட குருவே உயர்ந்தவர் ஆவார். நீங்கள் தந்தைக்கு உரியவர்கள்; என்ற நம்பிக்கையைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது கொண்டிருக்கிறீர்கள். பாபா 5000 வருடங்களுக்கு முன்னர் வந்தது போல் இப்பொழுதும் வந்து எங்களை உலக அதிபதிகள் ஆக்குகிறார். அதாவது, எங்களை அமைதி தாமத்தின் அதிபதிகள் ஆக்குகின்றார். தந்தை கூறுகிறார்: அன்பிற்கினிய குழந்தைகளே, நீங்கள் என்னிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைக் கோரிக் கொள்வீர்கள், இல்லையா? அனைவரும் கூறுகின்றனர்: ஆம் பாபா! ஏன் நாங்கள் கோரக் கூடாது? நல்லது, நீங்கள் இராமரைப் போல் சந்திர வம்ச இராஜ அந்தஸ்தைக் கோருவதையிட்டு சந்தோஷப்படுகிறீர்களா? உங்களுக்கு என்ன வேண்டும்? தந்தை தன்னுடன் ஒரு பரிசைக் கொண்டு வந்துள்ளார். நீங்கள் சூரிய வம்சத்து இலக்ஷ்மியையா அல்லது சந்திர வம்சத்து சீதையையா திருமணம் புரிவீர்கள்? உங்கள் முகத்தையாவது பாருங்கள்! நீங்கள் ஸ்ரீ நாராயணனையா அல்லது ஸ்ரீ இலக்ஷ்மியையா திருமணம் புரிவதற்குத் தகுதிவாய்ந்தவர்களாக உள்ளீர்கள்? தகுதிவாய்ந்தவர்கள் ஆகாமல் உங்களால் எவ்வாறு அவர்களைத் திருமணம் புரிய முடியும்? முன்னைய சக்கரத்தில் விளங்கப்படுத்தியதைப் போன்று தந்தை இப்பொழுது இங்கிருந்து விளங்கப்படுத்துகிறார். அவர் மீண்டும் ஒருமுறை எங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். நீங்கள் மீண்டுமொரு முறை உங்கள் ஆஸ்தியைக் கோருவதற்காக வந்துள்ளீர்கள். எல்லையற்ற தந்தையிடம் இருந்து எல்லையற்ற ஆஸ்தியைக் கோருவதே உங்கள் இலக்கும் குறிக்கோளும் ஆகும். அதுவே சூரிய வம்சத்து ராஜ அந்தஸ்து ஆகும். சந்திர வம்சம் இரண்டாம் தரமாகும். பல்வேறு வகுப்புக்கள் உள்ளன: குளிரூட்டப்பட்ட வகுப்பு, முதல் வகுப்பு, மற்றும் இரண்டாம் வகுப்பு என்பன. ஆகவே சத்தியயுக இராச்சியம் முழுவதையும் குளிரூட்டப்பட்டதாகக் கருதுங்கள். குளிரூட்டப்பட்டதை விட உயர்ந்த வகுப்பு வேறெதுவும் இல்லை. பின்னர் முதற்தர வகுப்பு உள்ளது. தந்தை கூறுகிறார்: இப்பொழுது, நீங்கள் குளிரூட்டப்பட்ட சூரியவம்சத்து இராச்சியத்தையா அல்லது முதற்தர சந்திர வம்சத்து இராச்சியத்தையா கோரப் போகிறீர்கள்? இரண்டாவது வகுப்பில் வரிசைக்கிரமமான வாரிசுகள் ஆகுவதே அதைவிடக் குறைவாக ஆகுவதாகும். நீங்கள் பின்னர் இறுதிப் பகுதியில் வந்து ஓர் இராச்சியத்தை ஆளுவீர்கள். இல்லாவிடின் மூன்றாவது வகுப்பில் பிரஜைகளுக்கான அனுமதிச்சீட்டுக்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. பல்வேறு வகுப்புக்கள் வரிசைக்கிரமமான முறையில் உள்ளன: முதற்தர ஒதுக்கப்பட்ட வகுப்புக்கள், இரண்டாம் தர ஒதுக்கப்பட்ட வகுப்புக்கள். எவ்வாறாயினும் அங்கும் சந்தோஷம் உள்ளது. பலவிதமான பெட்டிகள் உள்ளன. செல்வந்தர்கள் குளிரூட்டப்பட்ட அனுமதிச் சீட்டையே வாங்குவார்கள். உங்களினுள் யார் செல்வந்தர்கள் ஆகுகின்றீர்கள்? தந்தைக்கு அனைத்தையும் கொடுப்பவர்கள். “பாபா, இவை அனைத்தும் உங்களுடையதே” பாரதத்திலேயே “வியாபாரி, நகைவியாபாரி, மந்திரவாதி” என்ற புகழ் பாடப்படுகிறது. இவை அனைத்தும் தந்தையின் புகழே அன்றி ஸ்ரீகிருஷ்ணரின் புகழ் அல்ல. ஸ்ரீகிருஷ்ணர் தனது ஆஸ்தியைக் கோரியதுடன் சத்திய யுகத்தில் தனது வெகுமதியையும் பெற்றுக் கொண்டார். அவரும் தந்தைக்கு உரியவரே. அவர் அந்த வெகுமதியை எங்கிருந்தோ பெற்றிருக்க வேண்டும். இலக்ஷ்மியும் நாராயணனும் தங்கள் வெகுமதியை சத்தியயுகத்தில் அனுபவம் செய்கின்றனர். அவர்கள் நிச்சயமாக தமது வெகுமதியைக் கடந்த காலத்திலேயே உருவாக்கியிருக்க வேண்டும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது மிகத் தெளிவாகப் புரிந்து கொள்கிறீர்கள். நேருவின் வெகுமதி மிகச் சிறந்தது! அவர் நிச்சயமாக சிறந்த செயல்களையே புரிந்திருக்க வேண்டும். கிரீடம் இல்லாவிடினும் அவர் பாரதத்தின் சக்கரவர்த்தியாக இருந்தார். பாரதத்தின் புகழ் அதிகளவில் உள்ளது. பாரதத்தைப் போன்று மேன்மையாக வேறெந்தத் தேசமும் இருக்க முடியாது. பரமாத்மா பரமதந்தையின் பிறந்த இடம் பாரதமே ஆகும். இந்த இரகசியம் எவரது புத்தியிலும் பதிவதில்லை. அரைச் சக்கரத்திற்கு அனைவருக்கும் அமைதியையும் சந்தோஷத்தையும் பரமாத்மா மாத்திரமே கொடுக்கிறார். பாரதமே முதற்தரமான யாத்திரை ஸ்தலம் ஆகும். எவ்வாறாயினும், நாடகத்திற்கேற்ப, உலகின் நிலைமை எவ்வாறாகி உள்ளது எனப் பாருங்கள், ஏனெனில் ஒரேயொரு தந்தை மறக்கப்பட்டுள்ளார்! இதனாலேயே சிவபாபா மீண்டும் ஒருமுறை வந்துள்ளார். எவரோ ஒருவர் இதற்குக் கருவியாக வேண்டும். தந்தை கூறுகிறார்: இப்பொழுது சரீரமற்றவர் ஆகுங்கள்! நீங்கள் ஓர் ஆத்மா என்ற நம்பிக்கையைக் கொண்டிருங்கள். ஆத்மாக்களாகிய அவர்கள் யாருடைய குழந்தைகள் என்பது எவருக்கும் தெரியாது. அது ஓர் அற்புதமே! அவர்கள் கூறுகின்றனர்: ஓ தந்தையாகிய கடவுளே, கருணை காட்டுங்கள்! மக்கள் சிவனின் பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனர். ஆனால் அவர் எப்பொழுது வந்தார் என்பது அவர்களுக்குத் தெரியாது. இது 5000 வருடங்களுக்கான விடயம் ஆகும். தந்தையே வந்து புதிய உலகமாகிய சத்தியயுகத்தை ஸ்தாபிக்கின்றார். சத்தியயுகத்தின் கால எல்லை நூறாயிரக்கணக்கான வருடங்கள் அல்ல. அங்கே காரிருள் உள்ளது. பலர் கீதையின் செய்தியைக் கேட்பதற்குச் செல்கின்றனர். எவ்வாறாயினும், அதைக் கற்பிப்பவர்களோ அல்லது கற்பவர்களோ எதையும் புரிந்து கொள்வதில்லை. தந்தை அனைத்தையும் மிக இலகுவாக விளங்கப்படுத்துகிறார்! தந்தையையே நினைவு செய்யுங்கள்! வீட்டில் வசிக்கும் போதும் தாமரைமலர் போல் தூய்மையாக இருங்கள். விஷ்ணுவிற்கு அனைத்து ஆபரணங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அவருக்கு சங்குடன் மலரும் கொடுக்கப்பட்டுள்ளது. உண்மையில், அவற்றைத் தேவர்களுக்குக் கொடுக்க முடியாது. இவை அத்தகைய ஆழமான, அதிக கவனம் செலுத்த வேண்டிய விடயங்களாகும். அவை பிராமணர்களது ஆபரணங்கள். ஆனால் அவற்றை எவ்வாறு பிராமணர்களுக்குக் கொடுக்க முடியும்? இன்று அவர்கள் பிராமணர்கள், நாளை அவர்கள் சூத்திரர்கள் ஆகுகின்றனர். பிரம்மா குமார் ஒருவர் சூத்திர குமார் ஆகுகின்றார்! இதற்கு மாயைக்கு நீண்ட காலம் எடுப்பதில்லை. நீங்கள் தவறிழைத்து தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றாது விட்டால், உங்களது புத்தி பாழாகி விட்டால், மாயை உங்களை பலமாக அறைந்து, உங்கள் முகத்தைத் திருப்பி விடுவாள். மக்கள் கோபத்தில் கூறுகின்றனர்: உங்கள் முகத்தைத் திருப்பும் வகையில் நான் உங்களைப் பலமாக அறைவேன்! மாயையும் அவ்வாறுதான். நீங்கள் தந்தையை மறக்கும் போது, மாயை ஒரு விநாடியில் உங்களை அறைந்து உங்கள் முகத்தையும் திருப்பி விடுகிறாள். நீங்கள் ஜீவன் முக்தியை ஒரு விநாடியில் பெறுகிறீர்கள். மாயையும் அந்த ஜீவன்முக்தியை ஒரு விநாடியில் முடித்து விடுகிறாள். பல சிறந்த குழந்தைகளும் மாயையின் பிடியில் அகப்பட்டுக் கொள்கிறார்கள்! யாராவதொருவர் கவனயீனமாக இருப்பதை அவள் பார்க்கும்போது, உடனடியாகவே அவரை அறைந்து விடுகிறாள். தந்தை வந்து உங்களது முகத்தைப் பழைய உலகிலிருந்து திருப்புகிறார். ஒரு பழைய குடிலில் வாழுகின்ற ஏழைத் தந்தை ஒருவர் புதிய வீட்டைக் கட்டும் போது, புதிய வீடு மிக விரைவில் தயாராகிவிடும் எனவும் தாங்கள் அங்கு சென்று வாழ்வார்கள் என்றும் பழைய கட்டடத்தை பின்னர் இடித்து விடுவார்கள் எனவும் அவரது குழந்தைகளின் புத்திகளில் பதிந்துவிடுகிறது. தந்தை தனது உள்ளங்கையில் வைகுந்தமாகிய சுவர்க்கத்தைக் குழந்தைகளுக்காகக் கொண்டு வந்துள்ளார். அவர் கூறுகிறார்: அன்பிற்கினிய குழந்தைகளே! அவர் ஆத்மாக்களிடம் பேசுகிறார். இந்தக் கண்களினூடாகக் குழந்தைகளாகிய உங்களை அவர் பார்க்கின்றார். தந்தை விளங்கப்படுத்துகிறார்: நானும் நாடகத்தால் கட்டுண்டுள்ளேன். நாடகத்தை விலக்கி என்னால் எதையும் செய்ய முடியும் என்றல்ல. இல்லை. ஒரு குழந்தை நோய்வாய்ப்பட்டால், அவரை என்னால் குணமாக்க முடியும் என்றோ அல்லது சத்திர சிகிச்சையில் இருந்து அவரை விடுவிக்க முடியும் என்றோ இல்லை. அனைவரும் தங்கள் கர்மத்தின் பலன்களை எதிர் கொள்ளவே வேண்டும். நீங்கள் உங்கள் மீது பெருமளவு சுமையைக் கொண்டிருக்கிறீர்கள். ஏனெனில் நீங்களே மூத்தவர்கள். சதோபிரதானில் இருந்து நீங்கள் முழுமையாகத் தமோபிரதான் ஆகியுள்ளீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தந்தையைக் கண்டு கொண்டீர்கள். எனவே நீங்கள் உங்கள் ஆஸ்தியை அவரிடமிருந்து கோரிக் கொள்ள வேண்டும். நாடகத்திற்கு ஏற்ப ஒவ்வொரு சக்கரத்திலும் நீங்கள் தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைக் கோருகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். சூரிய, சந்திர வம்சங்களைச் சார்ந்தவர்கள் நிச்சயம் வருவார்கள். தேவர்களாக இருந்தவர்கள் சூத்திரர்கள் ஆகினார்கள், அவர்களே பிராமணர்கள் ஆகி பின்னர் தேவ சமுதாயத்தினர் ஆகுவார்கள். தந்தையைத் தவிர வேறு எவராலும் இந்த விடயங்களை விளங்கப்படுத்த முடியாது. தந்தை குழந்தைகளாகிய உங்களை மிக இனிமையானவர்களாகவே காண்கிறார்! அவர் கூறுகிறார்: நீங்களே சென்ற கல்பத்தைச் சேர்ந்த எனது அதே குழந்தைகள். நான் வந்து உங்களுக்கு ஒவ்வொரு கல்பத்திலும் கற்பிக்கிறேன். இவை அத்தகைய அற்புதமான விடயங்கள்! அசரீரியான தந்தை பேசுகிறார். அவர் ஒரு சரீரத்தின் மூலமே பேசுவார். ஓர் ஆத்மா தனது சரீரத்தில் இருந்து பிரிந்ததும் அவரால் பேச முடியாது. ஆத்மா பற்றற்றவர் ஆகுகின்றார். தந்தை இப்பொழுது கூறுகிறார்: நீங்கள் சரீரமற்றவர் ஆகுவீர்களாக! நீங்கள் உங்களது சுவாசத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அல்ல. இல்லை. உங்களை ஓர் அழிவற்ற ஆத்மாவாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆத்மாவாகிய என்னுள் 84 பிறவிகளின் பாகம் பதியப்பட்டுள்ளது. தந்தையே கூறுகிறார்: ஆத்மாவான நான் செய்கின்ற ஒவ்வொரு செயலும் என்னுள் பதியப்பட்டுள்ளது. பக்தி மார்க்கத்திலும் எனது பாகம் தொடர்கிறது. பின்னர் இந்த ஞான மார்க்கத்தில் நான் இங்கு வந்து உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கிறேன். பக்தி மார்க்கத்தில் இருப்பவர்களிடம் இந்த ஞானம் எதுவுமே இல்லை. என்றுமே மதுபானம் அருந்தியிராதவரால் எவ்வாறு அதன் சுவையை அறிந்திருக்க முடியும்? அவர்கள் இந்த ஞானத்தை எடுக்கும் போதே அதை அவர்களால் அறிய முடியும். இந்த ஞானத்தின் மூலம் சற்கதி கிடைக்கிறது. ஆகவே நிச்சயமாக ஞானக் கடலே சற்கதியைக் கொடுப்பவர் ஆவார். தந்தை கூறுகிறார்: நானே அனைவருக்கும் சற்கதியை அருளுபவர். சர்வோதய தலைவரும் (அனைவரிடமும் கருணை உடையவர்) இருக்கிறார். பல வகைகள் உள்ளன. உண்மையில், ஒரேயொரு தந்தையே அனைவர் மீதும் கருணையைக் கொண்டிருக்கிறார். அவர்கள் தந்தையிடம் கூறுகின்றனர்: ஓ கடவுளே கருணை காட்டுங்கள்! ஆகவே அனைவரிடத்திலும் கருணை கொண்டுள்ள ஒருவர் அவரே ஆவார். ஏனைய அனைவராலும் எல்லைக்கு உட்பட்ட கருணையையே கொண்டிருக்க முடியும். தந்தை முழு உலகையும் சதோபிரதான் ஆக்குகிறார். பஞ்சதத்துவங்களும் சதோபிரதான் ஆகுகின்றன. இதுவே பரமாத்மாவின் பணி ஆகும். சர்வோதயா என்பது மிகவும் பரந்தது. அவர் அனைவர் மீதும் முழுமையான கருணையைக் கொண்டிருக்கிறார். சுவர்க்கத்தின் ஸ்தாபனையில் எவரும் சந்தோஷமற்று இருக்கவில்லை. அங்கு முதற்தரமான தளபாடங்களும் பௌதீக சொத்துக்கள் போன்றனவும் இருக்கும். துன்பத்தை விளைவிக்கக் கூடிய எந்த விலங்குகளோ பூச்சிகளோ அங்கு இருக்கமாட்டாது. இங்கு முக்கியஸ்தர்களின் வீடுகளில் அதிகளவு சுத்தம் இருக்கிறது. உங்களால் ஈயைக் கூட ஒருபோதும் காண முடியாது. அங்கு நுளம்புகளும் வர மாட்டாது. அவற்றிற்கு சுவர்க்கத்திற்கு வருவதற்கான சக்தி இல்லை. அழுக்கை உருவாக்கக் கூடிய எவையும் அங்கு இருக்க மாட்டாது. அங்கு மலர்கள் போன்றவற்றின் இயற்கையான நறுமணம் இருக்கும். பாபா உங்களுக்கு சூட்சும லோகத்தில் அருந்துவதற்கு குளிர்பானம் (சுபிராஸ்) கொடுக்கிறார். எவ்வாறாயினும் சூட்சும லோகத்தில் எதுவுமில்லை. அவை அனைத்தும் காட்சிகளே ஆகும். சுவர்க்கத்தில் மிகச் சிறந்த மலர்களும், தோட்டங்களும் இருக்கும். சூட்சும லோகத்தில் தோட்டம் இருப்பதில்லை. அவை அனைத்தும் காட்சிகளே. நீங்கள் இங்கிருக்கும் போது காட்சிகளைப் பெறுகிறீர்கள். இந்தப் பாடல் முதற்தரமானது. நீங்கள் தந்தையைக் கண்டுவிட்டீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும், எனவே உங்களுக்கு வேறென்ன வேண்டும்? நீங்கள் எல்லையற்ற தந்தையிடம் இருந்து எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். ஆகவே நீங்கள் தந்தையை நினைவு செய்ய வேண்டும். தந்தையின் வழிகாட்டல்கள் மிகவும் பிரசித்தமானவை. நாங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் அதி மேன்மையானவர்கள் ஆகுவோம். ஏனைய அனைத்தும் ஒவ்வொருவரினதும் அசுர வழிகாட்டல்கள் ஆகும். இதனாலேயே சத்திய யுகத்தில் நிலையான சந்தோஷம் இருக்கின்றது என்பது அவர்களுக்குத் தெரியாது. இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமே அங்கு உள்ளது. அவர்களே குழந்தைப் பருவத்தில் ராதை, கிருஷ்ணராக இருந்தனர். அவர்களது எந்த தெய்வீகச் செயல்களையும் மக்கள் சித்தரிப்பதில்லை. சுவர்க்கத்தில் அனைத்துக் குழந்தைகளும் முதற்தரமானவர்கள். அங்கு குறும்புத்தனம் போன்றவற்றிற்கான கேள்விக்கே இடமில்லை. நல்லது.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் உங்கள் முகத்தைப் பழைய உலகிலிருந்து திருப்பி இருப்பதால், மாயை உங்கள் முகத்தை தன்னை நோக்கித் திருப்புவதற்கு அனுமதித்து விடும்வகையில், நீங்கள் கவனயீனமாக இருக்கக்கூடாது. ஸ்ரீமத்தை மீறாதீர்கள்! தந்தையிடம் இருந்து உங்கள் முழு ஆஸ்தியையும் கோரிக் கொள்ளுங்கள்.2. உங்களிடமுள்ள அனைத்தையும் தந்தையிடம் அர்ப்பணியுங்கள். உண்மையான வாரிசாகி, சத்தியயுகத்திற்கான குளிரூட்டப்பட்ட அனுமதிச் சீட்டை கோரிக் கொள்ளுங்கள். உங்கள் புத்தியில் உங்கள் இலக்கையும் குறிக்கோளையும் கொண்டிருந்தவாறு முயற்சி செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் அவ்யக்த ஸ்திதியைப் பயிற்சி செய்வதன் மூலம் உங்களின் சொந்த ஆதி ஸ்திதியால் பிரதிகூலமான சந்தர்ப்பங்கள் அனைத்திற்கும் முகங்கொடுப்பவர் ஆகுவீர்களாக.அவ்யக்த ஸ்திதியைப் பயிற்சி செய்யும் பழக்கத்தை நீங்கள் உருவாக்கியதும் உங்களால் உங்களின் ஆதி ஸ்திதியில் சகல சூழ்நிலைகளுக்கும் முகங்கொடுக்கக் கூடியதாக இருக்கும். இந்தப் பழக்கம் உங்களை நீதிமன்றத்திற்குச் செல்வதில் இருந்து பாதுகாக்கும். ஆகவே, இதை நீங்கள் உங்களின் இயல்பான பயிற்சியாகவும் சுபாவமாகவும் ஆக்கும்போது, இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும். ஏனென்றால், நீங்கள் சகல சூழ்நிலைகளையும் வெற்றி கொள்வதுடன் அனைத்திற்கும் முகங்கொடுக்கும் சக்தியைக் கிரகிக்கும்போது திரைகள் விலகும். இதற்கு, உங்களின் பழைய பழக்கவழக்கங்கள், சம்ஸ்காரங்கள், சூழ்நிலைகள் அனைத்தின் மீதும் முழுமையான விருப்பமின்மையைக் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகும்.
சுலோகம்:
அனைத்தையும் செய்யும்போதும் உங்களை ஒரு கருவியாகக் கருதிக் கொள்ளுங்கள், அதனால் எந்தவொரு செயலைச் செய்யும்போதும் நீங்கள் களைப்படைய மாட்டீர்கள்.அவ்யக்த சமிக்கை: சதா முகமலர்ச்சியுடன் இருப்பதற்கு, இலகு சுபாவத்தைக் கொண்டவராகவும் சகித்துக் கொள்பவராகவும் ஆகுங்கள்.
சுத்தமான இதயங்களைக் கொண்டிருக்கும் குழந்தைகளின் மீது பாப்தாதா அதிகளவு அன்பு வைத்திருக்கிறார். சுத்தமான இதயங்களைக் கொண்டவர்கள் சதா பாப்தாதாவின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பார்கள். அவர்களின் மனோபாவம், பார்வை, வார்த்தைகள், உறவுமுறைகள் மற்றும் தொடர்புகளில் அவர்கள் அனைவருடனும் சமமாக இலகுவாகவும் எளிமையாகவும் தெளிவாகவும் இருப்பார்கள். இலகுத்தன்மையின் அடையாளம், உங்களின் இதயம், தலை, வார்த்தைகள் ஆகிய அனைத்தும் சமமாக இருக்கும். உங்களின் இதயத்தில் ஒரு விடயத்தைக் கொண்டிருந்து, உங்களின் வார்த்தைகளில் வேறு ஒன்றைக் கொண்டிருப்பது என்பது இலேசான தன்மையின் அடையாளம் அல்ல. இலகுவான சுபாவத்தைக் கொண்டிருப்பவர்கள், சதா பணிவான இதயத்தைக் கொண்டவர்களாகவும் அகங்காரம் அற்றவர்களாகவும் தன்னலம் கருதாதவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் இலகுவான, எளிமையான இதயங்களைக் கொண்டிருப்பார்கள். அவர்கள் எளிமையான வார்த்தைகளைப் பேசுவார்கள். எளிமையான மனோபாவத்தையும் பார்வையையும் கொண்டிருப்பார்கள்.
மாதேஷ்வரியின் பெறுமதிமிக்க மேன்மையான வாசகங்கள்
மனித உலகினதும், தேவ உலகினதும், பேய்களின் உலகினதும், தீய ஆவிகளின் உலகினதும் விரிவாக்கம்
பல மக்களிடம் உள்ள கேள்வி: நாங்கள் தூய்மையற்ற மனித ஆத்மாக்களைப் பற்றிப் பேசும் போது, பேய்கள் என நாம் யாரைக் கூறுகின்றோம்? அவர்கள் உண்மையாக உள்ளார்களா அல்லது கற்பனையா? அல்லது வெறும் சந்தேகமா? இன்று தெளிவாக அது விளங்கப்படுத்தப்படுகிறது. மனிதர்கள் பாவச் செயல்களை செய்யும் போது, அவர்கள் பல வகையான துன்பங்களினூடாகச் செல்ல வேண்டியுள்ளது. அதனை அவர்கள் அவர்களின் மனிதப் பிறவியிலேயே அனுபவிக்க வேண்டியுள்ளது, மிருகங்களிலோ, பறவைகளிலோ அல்லது வேறு எந்த உயிரினங்களின் பிறவிகளிலோ அல்ல. மிருகங்களை விட மனிதர்களுக்கே சந்தோஷத்தையும் துன்பத்தையும் அனுபவம் செய்வதற்கான அதிகளவு கொள்ளளவு உள்ளது. இந்த உலக நாடகத்தில் மனிதர்களுக்கே பிரதான பாகம் உள்ளது. மிருகங்களும் பறவைகளும் இந்த உலக நாடகத்திற்கு அழகு சேர்ப்பவை. முழு சக்கரத்திற்குள்ளும், சத்தியயுகத்தின் ஆரம்பம் முதல், கலியுக கடைசி வரை, மனிதர்களாகிய நீங்கள் 84 பிறவிகளை எடுத்திருக்கிறீர்கள். ஆனால் பல்வகை விலங்குகளும் பறவைகளும் 8.4 மில்லியன் பிறவிகளை எடுத்திருக்கக்கூடும். கடவுளைத் தவிர வேறு எவராலும் எங்களுக்கு இந்த இரகசியத்தை விளங்கப்படுத்த முடியாது. ஆத்மாக்களின் வசிப்பிடம் பிரம்ம தத்துவம், அதாவது, அசரீரி உலகமாகும். மிருக ஆத்மாக்களால் பிரம்ம தத்துவத்திற்கு செல்ல முடியாது. அவை இந்த பிரபஞ்சத்திற்குள்ளேயே தமது பாகத்தை நடிக்கின்றன. அவற்றுக்கும் அமிழ்வதும் தோன்றுவதும் என்ற பாகங்களும், சதோ, இரஜோ, தமோ ஸ்திதிகளினூடாக செல்லும் பாகங்களும் இருக்கின்றன. எனவே, நாம் பஞ்சதத்துவங்களின் விரிவாக்கத்திற்குள் அதிகமாகச் செல்லக் கூடாது. முதலில் ஆத்மாக்களாகிய எங்களுக்கு நன்மை செய்ய வேண்டும். அதாவது ‘மன்மனாபவ’ ஆக இருக்க வேண்டும். நாங்கள் இப்பொழுது மனித ஆத்மாக்களுக்கு வருவோம். தூய்மையற்ற செயல்களைச் செய்து, பாவம் செய்கின்ற ஆத்மாக்கள் தமது தூய்மையற்ற சம்ஸ்காரங்களுக்கு ஏற்ப பிறப்பு, இறப்புச் சக்கரத்திற்குள் வருகின்றார்கள். அவர்கள் ஆரம்பம் முதல் மத்தியினூடாக இறுதிவரை, அதாவது மரணிக்கும் கணம் வரையில் தாம் செய்த பாவங்களிற்கான காட்சிகளை பெற்று, சூட்சுமமான வழியில் தண்டனையை அனுபவம் செய்கின்றார்கள். ஒரு குறுகிய காலத்தில் அவர்கள் பல பிறவிகளின் பாவங்களுக்கான துன்பத்தை அனுபவம் செய்து பின்னர் தமது சரீரத்தை நீங்கிச் செல்கின்றார்கள். மேலும் துன்பத்தை கருப்பைகளின் சிறையில் அனுபவம் செய்கின்றார்கள். பின்னர் அவர்களின் சம்ஸ்காரங்களுக்கு ஏற்ப, அவர்கள் அத்தகைய பெற்றோருக்கு பிறந்து அங்கே வாழ்க்கையில் சந்தோஷத்தையும் துன்பத்தையும் அனுபவம் செய்கின்றார்கள். இதுவே ஆரம்பம், மத்தி, இறுதி எனப்படுகின்றது. எவ்வாறாயினும் சில ஆத்மாக்கள் சரீரங்களைப் பெறுவதில்லை. அவர்கள் சூட்சும வடிவங்களில் பேய்களாக இந்த உலகில் சுற்றித் திரிகின்றார்கள். இதுவும் ஒரு வகையான தண்டனையே, அதாவது ஒரு வகையான வேதனையே ஆகும். அந்தத் தூய்மையற்ற ஆத்மா இன்னோர் ஆத்மாவுடன் ஒரு கர்மக்கணக்கைக் கொண்டிருக்கும் போது, அந்த ஆத்மாவிற்குள் பிரவேசித்து அந்த ஆத்மாவிற்கு துன்பத்தை விளைவிக்கின்றார். அதாவது கர்மக் கணக்கை தீர்த்த பின்னர் சென்று வேறு ஒரு சரீரத்தை எடுக்கின்றார். சில மனித ஆத்மாக்கள் தாம் பிரவேசித்தவரை அடிக்கின்றார்கள். அந்த நபருக்கு அவர்கள் அதிகளவு வேதனையைக் கொடுக்கின்றார்கள். எவ்வாறாயினும், இதுவும் கர்மக் கணக்கை தீர்ப்பதற்கான ஒரு வகையான வேதனையே ஆகும். எனவே மனித சரீரத்தில் மாத்திரமே அனைவரும் சந்தோஷத்தையும் துன்பத்தையும் அனுபவம் செய்கின்றார்கள். முக்தி தாமத்தில் இருந்து இந்த பௌதீக உலகிற்கு நடிக்க வருகின்ற ஆத்மாக்கள், இடையில் முக்தி தாமத்திற்கு திரும்பிச் செல்ல முடியாது என்பது உங்களுக்கு விளங்கப்படுத்தப்படுகின்றது. அவர்கள் தாம் செய்த தூய அல்லது தூய்மையற்ற செயல்களிற்கு ஏற்ப, இன்ப துன்ப சம்ஸ்காரங்களைப் பெற்று, இன்ப துன்ப சக்கரத்திற்குள் வருகின்றார்கள். ஆத்மாக்கள் அனைவரும் மறுபிறவி எடுக்கின்றார்கள், கடவுள் மாத்திரமே மறுபிறவி எடுப்பதில்லை. அச்சா.