17.08.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே பாப்பினதும் தாதாவினதும் கதை அற்புதமானது. தந்தை மூத்த சகோதரரின் (தாதா) சரீரத்தில் பிரவேசிக்கும் பொழுதே பிரம்மாகுமார்களும் குமாரிகளுமாகிய உங்களால் ஆஸ்திக்கான ஓர் உரிமையைக் கோர முடியும்.

கேள்வி:
நாடகம் நிச்சயிக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருந்தாலும் குழந்தைகளாகிய நீங்கள் எந்த இலக்கை நிச்சயமாக வைத்திருக்க வேண்டும்?

பதில்:
முயற்சி செய்வதற்கும் முன்னேறிப் பாய்ந்து செல்வதற்கும் ஆகும். அதாவது நீங்கள் நிச்சயமாகத் தந்தையின் நினைவில் நிலைத்திருப்பதற்கும் விநாசம் நடைபெறுவதற்கு முன்னர் கர்மாதீதம் ஆகுவதற்குமான இலக்கை வைத்திருக்க வேண்டும். கர்மாதீதம் ஆகுவது என்றால் கலியுகத்தவரில் இருந்து சத்தியயுகத்தவர் ஆகுவதாகும். இந்தக் குறுகிய காலம் முயற்சி செய்வதற்கே உள்ளது, ஆகவே விநாசம் நடைபெறுவதற்கு முன்னர் நீங்கள் உங்கள் ஸ்திதியை ஆட்ட, அசைக்க முடியாததாக ஆக்க வேண்டும்.

ஓம் சாந்தி.
ஓம் சாந்தி. எந்த இருவர் இதனைக் கூறுகிறார்கள்? ஒருவர் பாபாவும் மற்றவர் தாதாவும் ஆவர். “முன்னொரு காலத்தில் ஓர் அரசரும் ஓர் அரசியும் இருந்தார்கள்” என ஆரம்பித்து மக்கள் ஒரு கதையைக் கூறுகிறார்கள். இப்பொழுது இவை புதிய விடயங்களாகும். ஒருவர் பாபாவும் மற்றவர் தாதாவும் ஆவார்கள். நீங்கள் கூறுவீர்கள்: 5000 வருடங்களுக்கு முன்னர் சிவபாபாவும் பிரம்ம தாதாவும் இருந்தார்கள். அனைவரும் சிவனின் குழந்தைகள். ஆத்மாக்கள் அனைவரும் ஒரேயொரு தந்தையின் குழந்தைகள். எப்படியும் அவர்கள் குழந்தைகளே. பிரம்மாவின் குழந்தைகளாகிய பிராமணர்களும் இருந்தார்கள். பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் பிரம்மாகுமார்களும் குமாரிகளுமாக இருந்தார்கள். அவர்களுக்குக் கற்பித்தவர் யார்? சிவபாபாவே ஆவார். பிரம்மாகுமார்களும் குமாரிகளுமே பிரஜாபிதா பிரம்மாவின் பல குழந்தைகள் ஆவார்கள். நீங்கள் உண்மையிலேயே சிவபாபாவின் குழந்தைகளும் அத்துடன் அவருடைய பேரக் குழந்தைகளும் என்பதைப் பிரம்மாகுமார்களும் குமாரிகளுமாகிய நீங்கள் நம்புகிறீர்கள். எப்படியிருப்பினும் நீங்கள் அவருடைய குழந்தைகள், ஆனால் பிரம்மாவினூடாக பாட்டனாரிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைக் கோருவதற்காக நீங்கள் இப்பொழுது அவருடைய பேரக் குழந்தைகள் ஆகிவிட்டீர்கள். சிவபாபா என்று அழைக்கப்படுகின்ற பாட்டனாரிடம் இருந்து நீங்கள் இப்பொழுது ஓர் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். எவ்வாறாயினும் நீங்கள் பிரம்மாகுமார்களும் குமாரிகளுமாக இருப்பதனால் நீங்கள் இவரை தாதா என்று அழைக்கிறீர்கள். பாட்டனாரிடம் இருந்தே ஆஸ்தி பெறப்படுகிறது, பிரம்ம தாதாவிடம் இருந்தல்ல. நீங்கள் அந்தத் தந்தையிடம் இருந்து வைகுந்தவாசிகள் ஆகுவதற்கான உங்கள் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். நீங்கள் அரைக்கல்பத்துக்கு ஓர் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள், பின்னர் நீங்கள் இராவணனிடம் இருந்து ஒரு சாபத்தைப் பெற்றுத் தொடர்ந்தும் கீழிறங்கி வருகிறீர்கள். அது நீங்கள் கீழிறங்கி வருவதற்கான தீய சகுனங்களைக் கொண்டிருப்பதைப் போலுள்ளது. இராகு சகுனங்களாகிய உங்களின் தீய சகுனங்கள் அகற்றப்பட்டுள்ளன என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இராகுவினுடையதே மிகவும் தீய சகுனங்கள் ஆகும். வியாழ சகுனங்களே மிகவும் உயர்ந்த சகுனங்கள். இராகுவின் சகுனங்கள் இருந்த நேரத்தில் ஐந்து விகாரங்களின் காரணமாக நீங்கள் அவலட்சணமானவர்கள் ஆகினீர்கள். தந்தை இப்பொழுது உங்களுக்கு மீண்டும் ஒருமுறை கூறுகிறார்: விகாரங்களைத் தானம் செய்யுங்கள், அப்பொழுது கிரகணத்தின் சகுனங்கள் அகற்றப்பட்டு விடும். இது உங்களையே குறிக்கிறது. அவர்கள் இது சூரிய சந்திர கிரகணங்களைக் குறிப்பிடுவதாக எடுத்துக் கொள்கிறார்கள். ஒரு கிரகணம் ஏற்படும்பொழுது மக்கள் ஒரு தானத்தைக் கேட்கிறார்கள். இங்கு தந்தை உங்களுக்குக் கூறுகிறார்: ஐந்து விகாரங்களைத் தானம் செய்யுங்கள், தீய சகுனங்கள் அகற்றப்படும். இவ்விகாரங்களினூடாக நீங்கள் பாவாத்மாக்கள் ஆகிவிட்டீர்கள். சரீர உணர்வே பிரதான விடயம் ஆகும். எல்லாவற்றுக்கும் முதலில் நீங்கள் சதோபிரதானாக இருந்தீர்கள், பின்னர் நீங்கள் சதோ ரஜோ தமோ ஸ்திதிகளினூடாகச் சென்றீர்கள்; நீங்கள் 84 பிறவிகளை எடுத்தீர்கள். தேவர்கள் உண்மையிலேயே 84 பிறவிகளை எடுக்கிறார்கள் எனும் உறுதியான நம்பிக்கை உங்களுக்கு உள்ளது. அவர்களே முதலில் தந்தையைச் சந்திப்பவர்களாக இருக்க வேண்டும். ஆத்மாக்கள் பரமாத்மாவிடம் இருந்து நீண்டகாலமாகப் பிரிந்திருந்தார்கள் என்பது நினைவுகூரப்படுகிறது. தந்தை கூறுகிறார்: நான் சத்தியயுகத்துக்கு அனுப்பிய முதலாமவர்கள் நீங்களே ஆவீர்கள், நீங்களே இப்பொழுது முதலில் என்னைச் சந்திப்பதற்கு வந்துள்ளீர்கள். முன்னர் நீங்கள் இதனைப் பாடுவது வழக்கம். ஆனால் இப்பொழுது தந்தை இங்கே அமர்ந்திருந்து உங்களுக்கு இதன் மிகச்சரியான அர்த்தத்தைக் கூறுகிறார். தந்தை இங்கே அமர்ந்திருந்து உங்களுக்கு வேதங்கள், சமயநூல்கள், தபஸ்யா, செபித்தல், சுலோகங்கள் போன்ற அனைத்தினதும் சாராம்சத்தை விளங்கப்படுத்துகிறார். சக்கரம் புரிந்துகொள்வதற்கு மிகவும் இலகுவானது. இப்பொழுது கலியுகத்தினதும் சத்தியயுகத்தினதும் சங்கமயுகமே உள்ளது. யுத்தம் உங்கள் முன்னிலையில் உள்ளது. சத்தியயுகம் ஸ்தாபிக்கப்பட்டு வருகிறது என்னும் நம்பிக்கையும் உங்களுக்கு உள்ளது. கலியுகத்திலுள்ள அனைவரினதும் சரீரங்கள் அழிக்கப்படும். ஆத்மாக்கள் அனைவரும் தூய்மையாகி தங்கள் கர்மக் கணக்குகளைத் தீர்த்து வீடு திரும்புவார்கள். இதுவே அனைவருக்கும் கணக்கைத் தீர்ப்பதற்கான காலமாகும். ஆத்மாக்கள் தங்கள் சரீரங்களை விட்டு நீங்கி வீடு திரும்புவார்கள். இந்நேரத்தில் இது உங்கள் புத்திகளில் உள்ளது. நீங்கள் கர்மாதீதம் ஆகும்வரை சங்கமயுகத்திலேயே இருப்பீர்கள். அந்தப் பக்கத்தில் பில்லியன்கணக்கான மக்களும் இந்தப் பக்கத்தில் உங்களில் மிகச்சிலரும் இருக்கிறீர்கள். நம்பிக்கையை விருத்தி செய்கின்ற புத்தியை உடைய உங்களிற் பலரும் இருக்கிறீர்கள். நம்பிக்கை நிறைந்த புத்தியுள்ளவர்கள் வெற்றியாளர்களாகி பின்னர் விஷ்ணுவின் கழுத்து மாலை ஆகுகிறார்கள். ஒன்று உருத்திராட்ச மாலையும் மற்றையது உருண்டா மாலையும் ஆகும். முகங்களை உடைய சிறிய மணிகளைக் கொண்டதே உருண்டா மாலை ஆகும். அவையே எவ்வாறு ஆத்மாக்களாகிய நாங்கள் வந்து தந்தையின் கழுத்து மாலையின் மணிகளாகி பின்னர் இங்கு வரிசைக்கிரமமாக வருகிறோம் என்பதற்கான சின்னங்கள் ஆகும். எட்டினதும் 108 இனதும் 16108 இனதும் மாலைகள் உள்ளன. அங்கு ஐந்து முதல் பத்தாயிரமா அல்லது 16 ஆயிரமா உள்ளன என்பதைக் கணக்கிட முடியாது. இம்மாலைகள் நினைவு கூரப்படுகின்றன. பாபா வினவுகிறார்: நீங்கள் ஏன் இவ்விடயங்கள் அனைத்தையும் பற்றிச் சிந்திக்கிறீர்கள்? எவ்வாறாயினும் முன்னைய கல்பத்தில் சத்திய, திரேதா யுகங்களில் பலர் அரசர்கள் ஆகினார்கள். இப்பொழுதும் அத்தனை அரசர்கள் இருப்பார்கள். 100 பேர் அரசர்கள் ஆகுகிறார்களா அல்லது 200 அல்லது 300 பேர் அரசர்கள் ஆகுகிறார்களா என நீங்கள் வினவக்கூடாது. தந்தை கூறுகிறார்: நீங்கள் மேலும் அண்மித்து வரும்பொழுது மேலும் அனைத்தையும் புரிந்து கொள்வீர்கள். இன்று நாங்கள் இங்கு இருக்கிறோம். நாளை விநாசம் நடைபெற்ற பின்னர் சத்தியயுகத்தில் மிகச்சொற்ப தேவர்களே இருப்பார்கள். வளர்ச்சி பின்னரே நடைபெறுகிறது. உங்களால் சத்தியயுகத்தின் அறிகுறிகளையும் காண முடியும். அங்கு நூறாயிரக் கணக்கானவர்களா அல்லது மேலும் அதிகமானவர்களா அல்லது நூறாயிரம் பேர்களா அல்லது ஒன்பது முதல் பத்தாயிரம் பேர்களா இருப்பார்கள் என்பதை உங்களால் மிகச்சரியாகக் கூற முடியாது. ஆம் நீங்கள் முழுமையாகவே மிகச்சரியானவர்கள் ஆகுவதற்குத் தகுதி பெறும்பொழுது மேலும் காட்சிகளைக் காண்பீர்கள். மேலும் பெருமளவைப் புரிந்து கொள்வதற்கு இப்பொழுது இன்னமும் நேரம் எஞ்சியுள்ளது. நீங்கள் தொடர்ந்தும் பல காட்சிகளைக் காண்பீர்கள். யுத்தத்துக்கான பல முன்னேற்பாடுகள் நடைபெறுகின்றன. அனைத்தும் தொடர்ந்தும் அதிக விலையுடையதாக ஆகும். வெளிநாட்டில் பெருமளவு வரி விதிக்கப்படும். அனைத்தும் மிகவும் விலையுயர்ந்ததாக ஆகும். பின்னர் அனைத்தும் மிகவும் மலிவானதாக இருக்கும். சத்தியயுகத்தில் நீங்கள் எதிலும் பணத்தைச் செலவிட வேண்டிய தேவை இருக்க மாட்டாது. சுரங்கங்கள் போன்ற அனைத்தும் நிறைந்திருக்கும். புதிய உலகில் பல பௌதீகமான சௌகரியங்கள் இருக்கின்றன. இலக்ஷ்மியும் நாராயணனும் பல பௌதீகமான சௌகரியங்களைக் கொண்டிருந்தார்கள். ஸ்ரீநாத் ஆலயத்தில் அவர்கள் விக்கிரகங்கள் அனைத்துக்கும் பல்வேறு வகையான உணவுகளைப் படைக்கிறார்கள். அங்கு அவர்கள் தாங்களே உண்கின்ற மிகவும் போஷாக்கான பல உணவுகளைச் சமைக்கிறார்கள். தாங்கள் தேவர்களுக்குப் போக்கைப் படைத்துள்ளார்கள் என அவர்கள் கூறுவார்கள். நாங்கள் தேவர்களுக்குப் போக்கைப் படைக்காது விட்டால் அவர்கள் குழப்பம் அடைவார்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள். இதில் குழப்பம் அடைவதற்கான கேள்வியே கிடையாது. நீங்கள் எவருடனும் குழப்பம் அடைவதில்லை. நாடகத்துக்கேற்ப விநாசம் நடைபெற வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். கலியுகம் மாற்றம் அடைந்து சத்தியயுகமாக மாறும். நாடகத்துக்கேற்ப மீண்டும் புதிய சக்கரம் ஆரம்பமாக உள்ளது என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். நீங்களும் நாடகத்தினால் கட்டுப்பட்டு இருக்கிறீர்கள். நாடகத்துக்கேற்ப தந்தை வந்து விட்டார். நாடகத்தில் ஒரு விநாடி வித்தியாசம் கூட இருக்க முடியாது. பாபா வந்ததை நீங்கள் பார்த்ததைப் போன்றே மிகச்சரியாக அடுத்த கல்பத்திலும் அது நடைபெறும். சமயநூல்களில் அவர்கள் சக்கரத்துக்கு ஒரு நீண்ட கால எல்லையைக் கொடுத்து விட்டார்கள். உண்மையிலேயே விநாசம் முன்னிலையில் உள்ளது என்பது இப்பொழுது குழந்தைகளாகிய உங்களின் புத்திகளில் உள்ளது. நீங்கள் இப்பொழுது முன்னேறிப் பாய்ந்து செல்கிறீர்கள். நீங்கள் தந்தையை நினைவுசெய்து நிச்சயமாகக் கர்மாதீத ஸ்திதியை அடைய வேண்டும் என்பதை அறிவீர்கள். அதாவது நீங்கள் கலியுகத்தவர்களில் இருந்து சத்தியயுகத்தவர்களாக மாற வேண்டும். நீங்கள் இப்பொழுது முயற்சி செய்யாது விடின் உங்கள் அந்தஸ்து அழிக்கப்படும். ஓ ஆத்மாக்களே நீங்கள் இப்பொழுது தூய்மை அற்றவர்களாகி விட்டீர்கள். பல வகையான மக்கள் வருவார்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். ஏனைய சமயங்களுக்கு மாற்றப்பட்டவர்களும் தொடர்ந்தும் வெளிப்படுவார்கள். அவர்கள் வந்து தந்தையிடம் இருந்து தங்கள் ஆஸ்தியைக் கோருவதற்கான தங்கள் சொந்த முயற்சியைத் தொடர்ந்தும் செய்வார்கள். அவர்கள் பிராமண தர்மத்துக்குள் வந்து பின்னர் தேவ தர்மத்துக்குள் செல்வார்கள். அவர்கள் பிராமண தர்மத்துக்குள் வராது விட்டால் அவர்களால் எவ்வாறு தேவ தர்மத்துக்குள் செல்ல முடியும்? நாளுக்கு நாள் பிராமணர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்கிறது. விநாசம் முன்னிலையில் உள்ளதைப் பார்க்கும் பொழுது அவர்கள் கூறுவார்கள்: நீங்கள் கூறுவது சரியானதே. பின்னர் வளர்ச்சி ஏற்படும். பிராமண விருட்சம் வளர்ந்து நிறைந்துவிடும். பின்னர் நீங்கள் அனைவரும் வீடு திரும்புவீர்கள். பின்னர் தேவ விருட்சம் வளரும். நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் இராஜயோகத்தைக் கற்கிறீர்கள். இந்தச் சங்கமயுகமே நன்மை அளிக்கும் யுகம் என்று அழைக்கப்படுகிறது. கடலுடனான கங்கையின் சந்திப்பு என்று அறியப்பட்டுள்ள சங்கமயுகத்தின் புகழ் உள்ளது. அவை அனைத்தும் பக்தி மார்க்கத்துக்கு உரியவை. நீங்கள் அனைவரும் ஞானக்கடலிடம் இருந்து வெளிப்பட்டுள்ள இந்த ஞான கங்கைகள் ஆவீர்கள். “தூய்மையாக்குபவர்” என்னும் வார்த்தை “ஞானக்கடல்” எனும் வார்த்தையுடன் தொடர்புபட்டது. கங்கையே தூய்மையாக்குபவர் என அம்மக்கள் எண்ணுவதனால் அவர்கள் தொடர்ந்தும் கங்கையில் நீராடுகிறார்கள். இந்த நதிகள் சத்தியயுகத்தில் இருந்தே இருந்து வருகின்றன. இந்நாட்களில் சில இடங்களில் நதிகளும் மக்களை மூழ்கடிக்கின்றன. பஞ்சதத்துவங்கள் தமோபிரதானாகி விட்டன, கடலும் தமோபிரதானாகி விட்டது. மிகச்சொற்ப ஆழிப் பேரலைகளே ஏற்பட்ட பொழுதும் அவை அனைத்தையும் அழித்து விடுகின்றன. சத்தியயுகத்தில் பாரதத்தில் ஜமுனை நதிக்கரையில் எங்களில் சிலர் மாத்திரமே இருப்போம். டெல்கி தேவதைகளின் பூமியாக இருந்தது, அது மீண்டும் அவ்வாறு ஆகவுள்ளது. சத்தியயுகத்தில் சரீரத்தில் வாழும் ஆத்மாக்கள் சிலர் மாத்திரமே இருக்கிறார்கள், பின்னர் அவர்களின் எண்ணிக்கை படிப்படியாகத் தொடர்ந்தும் அதிகரிக்கிறது. இப்பொழுது இது கலியுக முடிவு, பல மனிதர்கள் இருக்கிறார்கள்! இது ஓர் எல்லையற்ற நாடகம். இது மிகவும் நன்றாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும். மக்கள் தங்களை நடிகர்களாகக் கருதினாலும் சக்கரத்தின் கால எல்லை 5000 வருடங்கள் என்பதை அவர்களில் எவருமே அறிய மாட்டார்கள். 84 பிறவிகளுக்கும் 8.4 மில்லியன் பிறவிகளுக்கும் இடையில் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. நீங்கள் இப்பொழுது ஞானோதயத்தைப் பெற்று விட்டீர்கள். நீங்கள் தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். தந்தை கூறுகிறார்: மன்மனாபவ! தந்தையை நினைவு செய்யுங்கள். கடவுள் சிவன் பேசுகிறார். ஸ்ரீகிருஷ்ணர் ஞானக்கடல் அல்ல. கடவுளின் புகழுக்கும் தேவர்களின் புகழுக்கும் இடையில் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. அவர்கள் தெய்வீகக் குணங்கள் அனைத்தும் நிறைந்தவர்கள் என்பதே தந்தை படைக்கின்ற புதிய படைப்பின் புகழாகும். நீங்கள் இப்பொழுது அவ்வாறு ஆகுகிறீர்கள். தந்தையின் புகழுக்கும் தேவர்களின் புகழுக்கும் இடையில் பகலுக்கும் இரவுக்குமான வேறுபாடு உள்ளது. இது இராஜயோகம் ஆகும். கடவுள் இராஜயோகத்தைக் கற்பிக்கிறார் என்பது நினைவு கூரப்பட்டுள்ளது. அவர் அசரீரியானவர் ஆதலால் அவர் நிச்சயமாக அசரீரியிலிருந்து பௌதீகத்துக்குள் வரவேண்டும். கடவுளின் புகழ் அதிகளவுக்கு உள்ளதனால் இங்கு அவர் நிச்சயமாக வரவேண்டும். அவருடைய பிறவி தெய்வீகமானதும் தனித்துவமானதும் ஆகும். வேறு எவருடைய பிறப்பும் ஒரு தெய்வீகப் பிறப்பாக நினைவு கூரப்படுவதில்லை. அவர் லௌகீகத் தந்தை என்றும் மற்றவர் கடவுள் என மக்கள் நினைவு செய்கின்ற இவ்வுலகத்துக்கு அப்பாற்பட்ட தந்தையும் என்பது குழந்தைகளாகிய உங்களுக்கும் விளங்கப்படுத்தப்பட்டு உள்ளது. மூன்றாவது தந்தை சூட்சுமத் தந்தை ஆவார்; இவரே அற்புதமான தந்தை ஆவார். அந்தப் பரலோகத் தந்தை உங்களைத் தத்தெடுக்கும்போது உங்களுக்கு இந்தச் சூட்சுமத் தந்தை இடையில் இருப்பார். பிரஜாபிதா பிரம்மாவுக்குப் பல்வேறு குழந்தைகள் உள்ளார்கள். சிவபாபா வந்து உங்களைப் பிரம்மாவினூடாகத் தனக்கு உரியவர்கள் ஆக்குகிறார். பலர் பிரம்மாகுமார்களும் குமாரிகளுமாக ஆகுகிறார்கள். ஒரு லௌகீகத் தந்தைக்கு அநேகமாக எட்டு முதல் பத்து குழந்தைகள் இருப்பார்கள். அச்சா, சிவபாபாவே பரலோகத் தந்தை ஆவார். அவருக்குப் பல குழந்தைகள் இருக்கிறார்கள். ஆத்மாக்கள் அனைவரும் கூறுகிறார்கள்: நாங்கள் அனைவரும் சகோதரர்கள். நாங்கள் இப்பொழுது மீண்டும் ஒருமுறை சங்கமயுகத்தில் இந்தச் சூட்சுமத் தந்தையைக் கண்டடைந்து விட்டோம். அங்கு உங்களுக்கு இந்த ஞானம் இருக்க மாட்டாது. தந்தை வந்து புதிய உலகத்தைப் படைக்கும் பொழுது மாத்திரமே நீங்கள் பிரஜாபிதா பிரம்மா எனும் தந்தையைச் சந்திக்கிறீர்கள். ஆகவே இது ஒரு சூட்சுமப் பிறவி ஆகும். எவராலும் இதனைப் புரிந்து கொள்ள முடியாது. அவர்கள் லௌகீகத் தந்தைமார்கள். மற்றவர் அப்பாற்பட்ட தந்தையும் இவர் சங்கமயுகத்துச் சூட்சுமத் தந்தையும் ஆவர். உங்களுக்கு சத்தியயுகத்தில் இருந்தே லௌகீகத் தந்தையர்கள் இருப்பார்கள். அங்கு எவரும் இவ்வுலகிற்கு அப்பாற்பட்ட தந்தையை நினைவு செய்வதில்லை. அங்கு உங்களுக்கு ஒரு தந்தை மாத்திரமே இருக்கிறார். அங்கு எவரும் “ஓ கடவுளே! ஓ பரமாத்மாவே!” என்று கடவுளை நினைவு செய்வதோ அல்லது கூறுவதோ இல்லை. துவாபரயுகத்தில் பக்தி மார்க்கம் ஆரம்பிக்கும் பொழுது உங்களுக்கு இரு தந்தையர்கள் இருக்கிறார்கள். சங்கமயுகத்தில் உங்களுக்கு மூன்று தந்தையர்கள் இருக்கிறார்கள். இந்நேரத்தில் நீங்கள் பிரஜாபிதா பிரம்மாவைச் சந்திக்கிறீர்கள். நீங்கள் இப்பொழுது இவருக்கு உரியவர்கள். இவர் உங்களுடைய சூட்சுமத் தந்தை என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் இப்பொழுது இவ்விடயங்களை மிகவும் நன்றாகப் புரிந்துகொண்டு நினைவு செய்கிறீர்கள். உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள். சத்தியயுகத்தில் கடவுளை நினைவு செய்யத் தேவையில்லை. துன்ப வேளையின் பொழுதே அனைவரும் பரலோகத் தந்தையை நினைவு செய்கிறார்கள். இது புரிந்து கொள்வதற்கு மிகவும் இலகுவானது. சத்திய திரேதா யுகங்களில் உங்களுக்கு ஒரு தந்தை மாத்திரமே இருக்கிறார். துவாபரயுகத்தில் உங்களுக்கு இரு தந்தையர்கள் இருக்கிறார்கள். இந்நேரத்தில் நீங்கள் இப்பொழுது எவரினூடாக உங்கள் ஆஸ்தியைக் கோருகிறீர்களோ அந்தச் சூட்சுமத் தந்தைக்கு உரியவர்கள் ஆவீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே பின்னர் தேவர்களாக ஆகுகின்ற பிராமணர்கள் ஆகுகிறீர்கள். உங்கள் பௌதீகக் கண்களின் மூலம் நீங்கள் பார்க்கும் விநாசத்தை நீங்கள் அவதானிக்க வேண்டும். அவர்கள் குண்டுகளை வீசும்பொழுது மனிதர்கள் மரணிக்கிறார்கள். ஜப்பானில் குண்டு வீசப்பட்ட பொழுது எவ்வாறு மக்கள் அனைவரும் மரணித்தார்கள் என்பதை நீங்கள் கண்டீர்கள். இங்கு தொடர்ந்தும் எல்லாக் காலமும் யுத்தம் நடக்கின்றது. தாங்கள் மேலும் மேலும் சலிப்படைகிறார்கள் என அவர்களே கூறுகிறார்கள். சில யுத்தங்கள் பத்து வருடங்களுக்கும் மேலாகத் தொடர்கிறது. ஒரு விநாடியில் குண்டுகளின் மூலம் அனைத்தும் அழிக்கப்பட்டு விடும். ஏதோவொரு பொறி பற்றியவுடன் முழு நகரமும் அழிக்கப்படுகிறது. குண்டுகள் போன்றனவும் போடப்படும், தீயும் ஏற்படும். ஸ்தாபனையையும் விநாசத்தையும் மேற்கொள்வதற்குத் தந்தை வந்து விட்டார் என்பதைக் குழந்தைகளான நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். ஆகவே இவை அனைத்தும் நிச்சயமாக நடைபெறும். இப்பொழுது முயற்சி செய்வதற்கான நேரமாகும். மாயை மீண்டும் மீண்டும் உங்கள் புத்தியின் யோகத்தைத் துண்டிக்கிறாள். நீங்கள் இன்னமும் அசைக்க முடியாதவர்களாகவும் ஸ்திரமானவர்களாகவும் ஆகவில்லை. நீங்கள் கூறுகிறீர்கள்: பாபா மாயையின் புயல்கள் பல வருகின்றன. சிலர் அரை மணித்தியாலம் கூடத் தந்தையை நினைவு செய்வதில்லை. தந்தை கூறுகிறார்: நீங்கள் கர்மயோகிகள். நீங்கள் எட்டு மணித்தியாலங்களுக்கு இந்தச் சேவையைச் செய்ய வேண்டும். நீங்கள் பாபாவை எட்டு மணித்தியாலங்களுக்கு நினைவுசெய்ய இயலும் வகையில் அதிகளவு முயற்சியைச் செய்யுங்கள். அவரை நினைவு செய்வதனால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இது யோகாக்கினி என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முயற்சி தேவை. வீட்டில் உங்கள் குடும்பங்களுடன் வாழும்பொழுதே தந்தையை நினைவு செய்யுங்கள். தங்கள் வீடுகளையும் குடும்பங்களையும் விட்டு நீங்கி பாபாவின் குழந்தைகள் ஆகியுள்ளவர்கள், வீட்டில் தங்கள் குடும்பங்களுடன் வாழ்பவர்களைப் போல் அந்தளவுக்கு அவரை நினைவு செய்வதில்லை என பாபாவும் உங்களுக்குக் கூறுகிறார்; அவர்கள் பாபாவைப் பெருமளவு நினைவு செய்கிறார்கள். அர்ச்சுனனினதும் சுதேசியினதும் (ஏகலைவன்) கதை உள்ளது. தந்தையை நினைவு செய்வதற்கு முயற்சி தேவைப்படுகிறது, சக்கரமும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். நிச்சயமாக மகாபாரத யுத்தம் இருக்கும். அது சத்தியயுகத்தில் நடைபெறுவதில்லை. குழந்தைகளாகிய நீங்களும் குருடர்களுக்கான கைத்தடிகள் ஆகவேண்டும். தந்தையை நினைவு செய்வதற்கும் சக்கரத்தை நினைவு செய்வதற்கும் சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுபவர்கள் ஆகுவதற்குமான பாதையை அனைவருக்கும் காட்டுங்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. குறைந்தபட்சம் எட்டு மணித்தியாலங்களுக்கு நினைவில் நிலைத்திருக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் ஸ்திதியை ஆட்ட அசைக்க முடியாததாக ஆக்குவதற்கு உங்கள் நினைவின் பயிற்சியை அதிகரியுங்கள். கவனயீனமாக இருக்காதீர்கள்.

2. இந்நாடகம் முழுமையாகவே மிகச்சரியாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே எவருடனும் குழப்பம் அடையாதீர்கள். புத்தியில் நம்பிக்கை உடையவர்கள் ஆகுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் துண்டித்தல், வடிவமைத்தல், இணைத்தல் என்ற மூன்று சொற்களை உணர்ந்தவராக இருப்பதன் மூலம் சதா வெற்றியாளர் ஆகுவீர்களாக.

இந்தக் கல்வியினதும் இந்தக் கற்பித்தல்களினதும் சாராம்சம் இந்த மூன்று கூற்றுக்களே. 1) கர்ம பந்தனங்கள் துண்டிக்கப்பட வேண்டும். 2) உங்களின் சம்ஸ்காரங்களும் சுபாவமும் வடிவமைக்கப்பட வேண்டும். 3) ஒரேயொரு தந்தையுடன் சகல உறவுமுறைகளையும் நீங்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த மூன்று கூற்றுக்களும் உங்களைச் சம்பூரணமாக வெற்றியாளர் ஆக்கும். இதற்கு உங்களின் கண்களால் நீங்கள் பார்க்கின்ற எவையும் ஏற்கனவே அழிந்து விட்டன என்பதை எப்போதும் உணர்ந்தவராக இருங்கள். அவற்றைப் பார்க்கும்போதும் தொடர்ந்து உங்களின் புதிய உறவுமுறைகளையும் புதிய உலகையும் பாருங்கள். நீங்கள் ஒருபோதும் தோற்கடிக்கப்பட மாட்டீர்கள்.

சுலோகம்:
யோகி ஒருவரின் அடையாளம், அவனோ அல்லது அவளோ எப்போதும் சுத்தமாகவும் தெளிவாகவும் இருப்பதாகும்.

அவ்யக்த சமிக்ஞை: தூய்மையற்றதன் விதையை முடித்து முற்றிலும் சுத்தமானவராக (தூய்மையானவராக) ஆகுங்கள்.

உங்களுக்குள் ஏதாவது தூய்மை இன்மை இருந்தால் அல்லது உங்களின் எண்ணங்களிலேனும் இந்த பிராமண வாழ்க்கையில் நீங்கள் ஒரு கோட்பாட்டை மீறினால் சிம்மாசனத்தில் அமர்வதற்குப் பதிலாக நீங்கள் இறங்கும் ஸ்திதிக்குள் செல்வீர்கள். நீங்கள் ஏதாவது பாவச் செயலைச் செய்யாமல் போகலாம். ஆனால் வீணான செயலை நீங்கள் செய்தாலும் வருந்துவதற்குப் பதிலாக உங்களுக்குள் புரிந்துணர்வு ஏற்படும். அது தவறு என்பதையும் அது நடக்கக்கூடாது என்பதையும் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். அது ஒரு முள்ளைப் போல் குத்தும். ஆகவே வீணானவை அனைத்தில் இருந்தும் விடுபட்டவர் ஆகுங்கள்.