17.10.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, தீயதைக் கேட்காதீர்கள்! ஒரேயொரு தந்தை கூறுவதை மாத்திரமே செவிமடுங்கள். வீட்டில் வாழும் போதும் தாமரைமலர் போன்று வாழுங்கள்.
கேள்வி:
எந்த நாடகத்தை மிகச்சரியாக அறிந்திருப்பதனால், குழந்தைகள் என்றுமே குழப்பம் அடைவதில்லை?பதில்:
இன்பமும் துன்பமும், ஞானமும் பக்தியும் என்ற நாடகத்தை மிகச்சரியாக அறிந்திருப்பவர்கள் என்றுமே குழப்பம் அடைவதில்லை. கடவுள் எவருக்குமே துன்பம் விளைவிப்பதில்லை என்பது உங்களுக்குத் தெரியும். அவர் துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவர். அனைவரும் சந்தோஷத்தை இழக்கும் போது, அவர்களைத் துன்பத்திலிருந்து விடுவிக்கவே தந்தை வருகின்றார்.பாடல்:
அதிகாலையில் இங்கு வந்திருப்பவர் யாரோ?ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் எதனைச் செவிமடுத்தீர்கள்? நீங்கள் பக்திப்பாடல் ஒன்றைச் செவிமடுத்தீர்கள். பக்தி ஆங்கிலத்தில் ஃபிலோசஃபி (தத்துவம்) என்று அழைக்கப்படுகின்றது. அவர்கள் தத்துவத்தில் கலாநிதிப் பட்டம் போன்றவற்றைப் பெறுகின்றார்கள். இளையவர், வயோதிபர் அனைவருமே தத்துவத்தை (பக்தியை) அறிந்துள்ளார்கள். கடவுள் எங்கிருக்கின்றார் என்று நீங்கள் எவரிடத்திலாவது வினவினால், அவர் சர்வவியாபி என்று அவர்கள் பதில் அளிப்பார்கள். அதுவும் தத்துவமே. தந்தை சமயநூல்களில் உள்ள எதனையும் உங்களுக்குக் கூறுவதில்லை. பக்தர்கள் எவரையுமே ஞானக்கடல்கள் என்று அழைக்க முடியாது. அவர்களுக்கு இந்த ஞானமும் இருப்பதில்லை, அவர்கள் ஞானக்கடலின் குழந்தைகளும் இல்லை. அவர்களுக்கு ஞானக்கடலான தந்தையையும் தெரியாது, அவர்கள் தங்களை அவரின் குழந்தைகள் என்றும் கருதுவதில்லை. அவர்கள் கடவுளை சந்திப்பதற்கே பக்தி செய்கின்றார்கள். ஆனால் அவர்களுக்குக் கடவுளைத் தெரியாததால், அவர்கள் பக்தி செய்வதனால் என்ன நன்மையைப் பெறுகின்றார்கள்? பலரும் ‘தத்துவத்தில் கலாநிதி’ என்ற இந்தச் சிறிய பட்டத்தைப் பெறுகின்றார்கள். அவர்கள் அனைவரது புத்தியிலும் கடவுள் சர்வவியாபி என்ற ஒன்று மட்டுமே உள்ளது. அவர்கள் அதனைத் தத்துவம் என்று கருதுகின்றார்கள். இதன் ஊடாகவே அவர்கள் கீழே விழுகின்றார்கள். அதுவே தர்மத்திற்கான அவதூறு என்று அழைக்கப்படுகின்றது. பிறருடன் நாங்கள் சமயநூல்களையிட்டு விவாதிக்க முடியாது. நாங்கள் இதனை மனிதர்களிடம் இருந்து கற்கவில்லை. ஏனைய மனிதர்கள் அனைவரும் மனிதர்களிடமே கற்கின்றார்கள். அவர்கள் வேதங்கள், சமயநூல்கள் போன்றன அனைத்தையும் மனிதர்களிடமே கற்கின்றார்கள். மனிதர்களே அவற்றை எழுதியுள்ளார்கள். இந்த ஞானத்தை ஒரேயொரு ஆன்மீகத் தந்தையே உங்களுக்குக் கொடுக்கின்றார். உங்களுக்கு விளங்கப்படுத்துவதற்கு அவர் ஒருதடவை மாத்திரமே வருகிறார். நாங்கள் இப்பொழுது மனிதர்களிடம் இருந்து எதனையும் கற்கத் தேவையில்லை. நீங்கள் இப்பொழுது ஆன்மீகத் தந்தை கூறுவதை மாத்திரமே செவிமடுக்க வேண்டும். ஆன்மீகக் குழந்தைகளாகிய ஆத்மாக்களே அவர் கூறுவதைச் செவிமடுக்கிறார்கள். அம்மனிதர்கள் அனைவரும் மனிதர்களுக்கே விடயங்களை விபரிக்கின்றார்கள். இந்த ஞானத்தை ஆன்மீகத் தந்தை கொடுக்கின்றார். ஆனால், அதனை மனிதர்களே கொடுக்கின்றார்கள். இந்த பாபாவும் ஒரு சரீரதாரியே. அவர்களிடம் கூறுங்கள்: இவரினூடாக ஆன்மீகத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். ஆத்மாவான நான் அவரிடம் செவிமடுத்ததை, ஆத்மாவான நானே சரீரத்தினூடாகப் பிறருக்கு விபரிக்கிறேன். இது ஆன்மீக ஞானம். ஏனைய அனைத்தும் பௌதீகமானவை. பக்தி மார்க்கத்தில் அவர்கள் சரீரத்தை வழிபடுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: உங்களை ஒரு மனிதன் என்றோ அல்லது ஒரு பக்தன் என்றோ நீங்கள் கருதக் கூடாது. உங்களை ஓர் ஆத்மா என்று கருதி, தந்தையான என்னை நினைவு செய்யுங்கள். ஆத்மாக்களான நீங்கள் சகோதரர்கள். ஆத்மாக்கள் பரமாத்மாவிடம் இருந்து நீண்ட நாட்கள் பிரிந்திருந்தார்கள் என்று நினைவு கூரப்பட்டுள்ளது. நாங்கள் மனிதர்கள் கூறுவதைச் செவிமடுக்கக் கூடாது. உங்களிடம் யாராவது கேள்விகள் கேட்டால், உங்கள் ஞானம் எந்தச் சமயநூல்களிலும் உள்ள ஞானம் அல்ல என்று அவரிடம் கூறுங்கள். நாங்கள் அதனைத் தத்துவம் என்று அழைக்கின்றோம். அதாவது அது பக்தி மார்க்கத்திற்கான ஞானம் ஆகும். ஒரேயொரு தந்தை மாத்திரமே சற்கதிக்கான ஞானத்தைக் கொடுக்கின்றார். ஒரேயொருவரே அனைவருக்கும் சற்கதி அருள்பவர் என்று நினைவு கூரப்பட்டுள்ளார். குழந்தைகளாகிய நீங்கள் எவருடனும் விவாதிக்கக் கூடாது. தந்தை கூறுகின்றார்: நானே ஞானக்கடலும், ஞானத்தின் அதிகாரியும் ஆவேன். நான் சமயநூல்கள் போன்ற எதனையும் உங்களுக்குக் கூறுவதில்லை. என்னுடைய இந்த ஞானம் ஆன்மீகமானது. ஆனால் ஏனைய ஞானம் அனைத்தும் பௌதீக விடயங்கள் பற்றிய அறிவே. அந்த ஆன்மீக ஒன்றுகூடல்கள் பக்தி மார்க்கத்திற்கானவை. ஆன்மீகத் தந்தை இங்கே அமர்ந்திருந்து ஆத்மாக்களான உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். ஆகையாலேயே ஆத்ம உணர்வுடையவர் ஆகுவது என்பது ஒரு முயற்சி என்று குழந்தைகள் உணர்கின்றார்கள். ஆத்மாக்களாகிய நாங்கள் தந்தையிடம் இருந்து எங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றோம். ஒரு (லௌகீகத்) தந்தையின் குழந்தைகள் நிச்சயமாகத் தமது தந்தையின் சிம்மாசனத்திற்கு (பதவிக்கு) வாரிசுகள் ஆகுகின்றார்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் சரீரதாரிகளே ஆவார்கள். அவர்களது குழந்தைகள் தமது ஆஸ்தியைத் தமது லௌகீகத் தந்தையிடம் இருந்து பெறுகின்றார்கள். இது ஒரு தனித்துவமான விடயம். சத்தியயுகத்திலும் பௌதீகமான விடயங்கள் உள்ளன. அங்கே ஆன்மீகத் தந்தையிடம் இருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுகின்றோம் என்று நீங்கள் கூறமாட்டீர்கள். சரீர உணர்வு துண்டிக்கப்பட வேண்டும். நான் ஓர் ஆத்மா, நான் தந்தையை நினைவு செய்ய வேண்டும். பாரதத்தின் புராதன யோகம் நினைவுகூரப்பட்டுள்ளது. ‘யாத்’ (நினைவு) என்ற வார்த்தை இந்தி வார்த்தை. இந்த நேரத்தில் உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுப்பது யார்? எந்த மனிதருக்கும் இது தெரியாது. பிறவி பிறவியாக மனிதர்களுடனேயே மனிதர்கள் உரையாடிக் கொண்டிருக்கின்றார்கள். இப்பொழுது, ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுடன் உரையாடுகின்றார். ஆத்மாவே உங்களுடன் உரையாடுகின்றார். ஆகையாலேயே இது ஆன்மீக ஞானம் எனப்படுகின்றது. கீதையையும் அவர்கள் ஆன்மீக ஞானம் என்றே கருதுகின்றார்கள். எனினும் அதில் அவர்கள் சரீரதாரியான ஸ்ரீகிருஷ்ணரின் பெயரை குறிப்பிட்டுள்ளார்கள். தந்தை கூறுகின்றார்: எந்த மனிதரிடமும் இந்த ஞானம் இருக்க முடியாது. எவராவது உங்களிடம் விவாதம் புரிந்தால், அவரிடம் கூறுங்கள்: உங்களது ஞானம் பக்திக்கு உரியது. அது மனிதர்களால் எழுதப்பட்ட சமயநூல்களிலுள்ள ஞானம். ஞானக்கடலான ஒரேயொரு தந்தையிடம் மாத்திரமே இந்த உண்மையான ஞானம் உள்ளது. அவரே இப்பொழுது உங்களுக்கு இந்த ஞானத்தை கொடுக்கின்றார். அவர் பரமதந்தை என்று அழைக்கப்படுகின்றார். அந்த அசரீரியானவர் வழிபாடு செய்யப்படுகின்றார். ஏனைய அசரீரியானவர்கள் வழிபாடு செய்யப்பட்டால், அவர்களும் அவரின் குழந்தைகளே. அவர்கள் களிமண்ணில் சாலிகிராம்களைச் செய்து அவற்றை வழிபடுகின்றார்கள். அவர்கள் யாகம் வளர்க்கின்றார்கள். பரமாத்மாவான பரமதந்தை அசரீரி உலகில் வாழ்கின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். ஆத்மாக்களாகிய நாங்களும் அங்கேயே வாழ்கின்றோம். அந்த ஞானக்கடல் வந்து இந்த ஞானத்தைக் கூறுவதன் மூலம் அனைவருக்கும் சற்கதி அருள்கின்றார். அவர் தொலைதூரத்தில் வாழும் பரமாத்மாவான பரமதந்தை ஆவார். சகோதர்களான ஆத்மாக்கள் அனைவரும் ஒரு பாகத்தைப் பெற்றிருக்கின்றார்கள். பின்னர் ஒரு சரீரத்தை எடுக்கும் போதே அவர்கள் சகோதர சகோதரிகள் ஆகுகிறார்கள். ஆத்மாக்கள் அனைவரும் ஒரேயொரு தந்தையின் குழந்தைகள் ஆவார்கள். ஓர் ஆத்மா சுவர்க்கத்தில் ஒரு சரீரத்திற்குள் வரும் போது சந்தோஷம் உள்ளது. ஆனால் நரகத்தில் துன்பமே உள்ளது. இது ஏன் நடக்கின்றது? ஞானமும் பின்னர் பக்தியும் உள்ளது என்று விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. அது பகலும், இது இரவும் ஆகும். ஞானம் சந்தோஷத்தை ஏற்படுத்துகின்றது, பக்தி துன்பத்தை விளைவிக்கின்றது. இந்த நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது. கடவுள் சந்தோஷத்தையும் துன்பத்தையும் கொடுக்கின்றார் என்றில்லை. மக்கள் சந்தோஷத்தை இழந்திருக்கும் போதே அவர்கள் கடவுளை அழைக்கின்றார்கள். அவர் சந்தோஷத்தை அருள்பவர் என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் சந்தோஷத்திற்கான காலம் முடிவடையும் போதே, ஐந்து விகாரங்களான இராவணனால் துன்பம் ஆரம்பம் ஆகுகின்றது. இது மிகச்சரியாகப் புரிந்து கொள்ள வேண்டியதொரு நாடகம். இது ஆன்மீக ஞானம். ஏனைய அனைத்தும் பௌதீக விடயங்களுக்கான அறிவே. நாங்கள் அதனைச் செவிமடுக்க விரும்புவதில்லை. எங்களுக்குக் கிடைத்துள்ள கட்டளை: அசரீரியான தந்தையாகிய நான் கூறுவதை மாத்திரமே செவிமடுங்கள். தந்தை கூறுகின்றார்: தீயதைக் கேட்காதீர்கள்! நாங்கள் கடவுள் கூறுவதை மாத்திரமே செவிமடுக்கின்றோம் ஆனால் நீங்கள் மனிதர்கள் கூறுவதைச் செவிமடுக்கின்றீர்கள். இரவிற்கும் பகலிற்குமான வித்தியாசம் உள்ளது. கல்விமான்கள் போன்றோரும் கூட, சமயநூல்களைக் கற்கின்றார்கள். நாங்களும் அவற்றை அதிகளவு கற்றுள்ளோம். இப்பொழுது கடவுள் கூறுகின்றார்: நீங்கள் பல குருமார்களை ஏற்றுக் கொண்டிருக்கின்றீர்கள். இப்பொழுது அவர்கள் அனைவரையும் கைவிட்டு நான் உங்களுக்குக் கூறுவதைச் செவிமடுங்கள். கடவுள் அசரீரியானவர், அவரது பெயர் சிவன். நாங்கள் இப்பொழுது அவர் கூறுவதைச் செவிமடுக்கின்றோம். தந்தையே தனது சொந்த அறிமுகத்தையும் தனது படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியின் அறிமுகத்தையும் எங்களுக்குக் கொடுக்கின்றார். எனவே நாங்கள் ஏன் உங்களிடம் இருந்து சமயநூல்களில் உள்ள விடயங்களைச் செவிமடுக்க வேண்டும்? நாங்கள் உங்களுக்கு ஆன்மீக ஞானத்தைக் கூறுகின்றோம். நீங்கள் விரும்பினால் அதைக் கேளுங்கள். இதில் குழப்பம் அடைதல் என்ற கேள்விக்கே இடமில்லை. முழு உலகமும் ஒரு பக்கம் உள்ளது, ஆனால் உங்களில் வெகுசிலரே இருக்கின்றீர்கள். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: என்னை நினைவு செய்தால், உங்கள் மீதுள்ள பாவச்சுமைகள் அகற்றப்பட்டு, நீங்கள் தூய்மையானவர்கள் ஆகுவீர்கள். தூய்மை ஆகுபவர்களே தூய உலகிற்கு அதிபதிகள் ஆகுகின்றார்கள். பழைய உலகம் இப்பொழுது மாற்றமடைய வேண்டும். கலியுகத்தின் பின்னர் சத்தியயுகம் வரவேண்டும். சத்தியயுகமே தூய உலகமாகும். கலியுகத்திலேயே, மக்கள் என்னை உலகைத் தூய்மையாக்க வாருங்கள் என்று அழைக்கின்றார்கள். எனவே நான் இப்பொழுது வந்துள்ளேன். சதா என்னை மாத்திரமே நினைவு செய்யுங்கள்! உலகம் இப்பொழுது மாற்றம் அடைகின்றது. இதுவே உங்கள் இறுதிப்பிறவி. அசுர இராச்சியமான இப்பழைய உலகம் அழிக்கப்பட்டு, இராம இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது. ஆகையாலேயே வீட்டில் வாழும் போதும் இந்த இறுதிப்பிறவியில் நீங்கள் ஒரு தாமரைமலர் போன்;று தூய்மையானவர் ஆக வேண்டும். இது நச்சுக்கடல். ஒரு தாமரைமலர் தண்ணீருக்கு மேலேயே உள்ளது. ஆகையால் இப்பொழுது நீங்கள் உங்கள் குடும்பத்துடன் வீட்டில் வாழும் போதும் ஒரு தாமரைமலர் போன்று தூய்மை ஆகவேண்டும். நாங்கள் ஓர் இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றோம் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். முழு உலகமும் இப்பொழுது மாற்றம் அடைய வேண்டும். அந்தச் சமய ஸ்தாபகர்கள் தத்தமது சொந்த சமயங்களையே ஸ்தாபிக்கின்றார்கள். முதன்முதலில் தூய்மையாக இருந்த அவர்கள், பின்னர் தூய்மை அற்றவர்கள் ஆகுகின்றார்கள். ஒரேயொரு சற்குருவே சற்கதியை அருள்பவர் ஆவார். மனிதர்கள் சற்கதியைப் பெற விரும்பும் போது, ஒரு குருவை ஏற்றுக் கொள்கின்றார்கள். அதிகளவு பாவம் இருக்கும் போதே, ஆன்மீகத் தந்தை உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். நீங்கள் பக்தியின் பலனான இந்த ஞானத்தைக் கடவுளிடமிருந்து பெறுகின்றீர்கள். கடவுள் பக்தி செய்வதற்கு உங்களுக்குக் கற்பிப்பதில்லை. அவர் உங்களுக்கு ஞானத்தையே கொடுக்கின்றார். அவர் கூறுகின்றார்: சதா என்னை மாத்திரமே நினைவு செய்தால் உங்கள் பாவங்கள் அழியும். தூய்மை ஆகுவதற்கு வேறு எவ்வழியும் இல்லை. புதிய உலகில் அனைவரும் சுவர்க்கவாசிகளாக இருந்தார்கள். இப்பொழுது பழைய உலகில் அனைவரும் நரகவாசிகளாக இருக்கின்றார்கள். ஆகையாலேயே தந்தை கூறுகின்றார்: நான் அனைவரையும் ஈடேற்றவே வருகின்றேன். நான் வந்து இந்த ஆன்மீக ஞானத்தைக் கொடுக்கின்றேன். தந்தை தனது சொந்த அறிமுகத்தைக் கொடுக்கின்றார்: நான் உங்கள் தந்தை ஆவேன். இப்பொழுது இது நரகம். புதிய உலகம் சுவர்க்கம் என்று அழைக்கப்படுகின்றது. இங்கேயே சுவர்க்கமும் நரகமும் (ஒரேநேரத்தில்) உள்ளன என்று உங்களால் எவ்வாறு கூற முடியும்? அதிகளவு செல்வம் நிறைந்தவர்கள் தாம் சுவர்க்கத்தில் இருப்பதாகக் கருதுகின்றார்கள். சுவர்க்கம் புதிய உலகில் உள்ளது. சுவர்க்கம் எவ்வாறு இங்கிருக்க முடியும்? ஆகையாலேயே நாங்கள் மனிதர்கள் கூறுவதைச் செவிமடுப்பதில்லை. தந்தை கூறுகின்றார்: நீங்கள் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆக விரும்பினால், சதா என்னை மாத்திரமே நினைவு செய்யுங்கள். இந்த ஞானம் நாள்முழுவதும் உங்கள் புத்தியில் நிலைத்திருக்க வேண்டும். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தை ஒருவரிடமிருந்து மாத்திரமே ஆன்மீக விடயங்களைச் செவிமடுங்கள். எதனையிட்டும் எவரிடமும் விவாதம் செய்யாதீர்கள்.2. ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுங்கள். சதோபிரதான் ஆகுவதற்கு ஒரேயொரு தந்தையின் நினைவில் நிலைத்திருங்கள்.
ஆசீர்வாதம்:
உங்கள் செயல்களின் ஊடாக தெய்வீகக் குணங்களை தானம் செய்கின்ற ஒளியாகவும் இலேசாகவும் உள்ள (டபிள்லைட்) தேவதை ஆகுவீர்களாக.தமது செயல்களால் தெய்வீகக் குணங்களை தானம் செய்கின்ற குழந்தைகளின் முகங்களும் செயல்களும் தேவதைகளை போன்றதாகவே தென்படும். அவர்கள் தம்மை ஒளியாகவும் இலேசாகவும் உள்ள (டபிள்லைட்) தேவதைகளாக அனுபவம் செய்வார்கள். அதாவது, அவர்கள் ஒளியாகவும் (பிரகாசமாகவும்) இலேசாகவும் (சுமையற்றவர்களாகவும்) இருப்பார்கள். அவர்கள் எதனையுமே ஒரு சுமையாக உணர மாட்டார்கள். அவர்கள் தாம் செய்கின்ற ஒவ்வொரு செயலிலும் உதவியை அதாவது தம்மை ஏதோ ஒரு சக்தி இயக்குவதாக அனுபவம் செய்கிறார்கள். அவர்கள் தமது அனைத்துச் செயல்களிலும் மகாதானிகளாக இருப்பதால், அவர்கள் அனைவரிடம் இருந்தும் ஆசீர்வாதங்களையும் நல்லாசிகளையும் பெறுகிறார்கள்.
சுலோகம்:
சேவையில் வெற்றி நட்சத்திரம் ஆகுங்கள், பலவீனமாக இருக்காதீர்கள்.அவ்யக்த சமிக்ஞை: மற்றவர்களை ஈடேற்றும் மனப்பான்மையைக் கொண்டிருந்து, உங்களை இகழ்பவர்களையும் ஈடேற்றுங்கள்.
உங்களுடன் என்ன வகையான ஆத்மாக்கள் தொடர்பில் வந்தாலும், அவர்கள் சதோகுணியோ அல்லது தமோகுணியோ, எப்போதும் அனைவருக்காகவும் தூய எண்ணங்களைக் கொண்டிருங்கள். உங்களை இகழ்பவர்களையும் எப்போதும் ஈடேற்றுங்கள். எந்தவோர் ஆத்மாவிற்காகவும் ஒருபோதும் வெறுப்பான பார்வையைக் கொண்டிராதீர்கள். ஏனென்றால், இந்த ஞானம் இல்லாததால் அந்த ஆத்மா ஆதிக்கத்திற்கு உள்ளாகி இருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியும். அந்த ஆத்மாவிற்கு எந்தவிதப் புரிந்துணர்வும் இல்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். புரிந்துணர்வு இல்லாமல் நடக்கும் ஒரு குழந்தையை எவரும் ஒருபோதும் வெறுக்க மாட்டார்கள். அதற்குப் பதிலாக, அந்தக் குழந்தைக்காக கருணை மற்றும் அன்பான உணர்வுகளே இருக்கும்.
மாதேஸ்வரிஜியின் விலைமதிக்க முடியாத வாசகங்கள்
1. கியான், யோகம், மற்றும் தெய்வீகக் குணங்களை கிரகித்தலே வாழ்க்கையின் அடிப்படையாகும்.
பரமாத்மா பரமதந்தையிடம் இருந்து இந்த ஞானத்தை நீங்கள் பெறுகிறீர்கள் என்ற நம்பிக்கையை நீங்கள் கொண்டிருக்கின்றீர்கள். இந்த ஞானத்தின் பிரதானமாக மூன்று கருத்துக்கள் உள்ளன, அதிலேயே உங்கள் முயற்சியில் நீங்கள் முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும். முதலாவது யோகம்- அதாவது கடவுளை சதா நினைவு செய்தல். இதிலேயே எங்கள் பாவங்கள் அழிகின்றன. இரண்டாவது ஞானம்: முழு உலகமான பிரமாந்தத்தின் ஆரம்பம், மத்தி, மற்றும் இறுதியும் ஆகும். இந்த ஞானம் எங்களுக்கு இருந்தால் மாத்திரமே எங்கள் வாழ்க்கையில் நடைமுறையில் மாற்றங்கள் இருக்கும். எங்களுக்கான நல்ல பெறுபேறுகளையும் நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். மூன்றாவது கருத்து, சகல தெய்வீகக் குணங்களாலும், 16 சுவர்க்கக் கலைகளாலும் நிறைந்திருக்கும் எங்கள் தகைமைகளை பெறுதல். அப்பொழுதே எங்களால் தேவர்கள் ஆக முடியும். நாங்கள் நடந்து உலாவித்திரியும் போதும், உண்ணும் போதும், பருகும் போதும் இந்த மூன்று கருத்துகளிலும் நாங்கள் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம். இந்த ஒரு பிறவியில் மாத்திரமே எங்களுக்கு ஞான சக்தியும், யோக சக்தியும், தெய்வீகக் குணங்களின் கிரகித்தலும் உள்ளது. மூன்றும் தொடர்புடையது. இந்த ஞானம் இல்லாது யோகம் செய்ய முடியாது, யோகம் இல்லாது தெய்வீகக் குணங்களை கிரகிக்க முடியாது. இந்த மூன்றின் அடிப்படையில் எங்கள் வாழ்க்கை தங்கியிருந்தாலே எங்கள் பாவக் கணக்கை எங்களால் தீர்த்து நல்ல செயல்களை செய்ய முடியும். இதுவே இறை வாழ்க்கை எனப்படுகின்றது.
2. பாரதத்தின் புராதன யோகம் கடவுளால் கற்பிக்கப்படுகின்றது.
எங்களுடைய இந்த இறை யோகமானது, புராதன யோகம் என பாரதத்தில் பிரபல்யமாக உள்ளது. இந்த யோகம் அழியாத யோகம் என்று அழைக்கப்படுவது ஏன்? ஏனெனில் அது பரமாத்மா பரமதந்தையினால் கற்பிக்கப்படுகின்றது. ஏனைய மனித ஆத்மாக்களும் யோகத்தைக் கற்பித்தாலும், இதற்காகவே யோக ஆச்சிரமங்கள் திறக்கப்பட்டாலும், அவர்களால் இந்த புராதன யோகத்தைக் கற்பிக்க முடியாது. அத்தகைய யோகம் இருக்குமாயின், எங்கே அந்த சக்தி? நாளுக்கு நாள், பாரதம் பலவீனமாக ஆகுகின்றது, அவர்களின் யோகம் அழியக்கூடியது என்பதையே இது காட்டுகின்றது. நீங்கள் யாருடன் யோகம் செய்கின்றீரகளோ, அவரால் மாத்திரமே உங்களுக்கு இந்த யோகத்தைக் கற்பிக்க முடியும். நாங்கள் பிறருடன் யோகம் செய்யக் கூடாது. அவ்வாறாயின், அவர்களால் எவ்வாறு எங்களுக்குக் கற்பிக்க முடியும். கடவுளால் மாத்திரமே இந்தப் பணியை செய்ய முடியும். அவரால் மாத்திரமே எங்களுக்கு இந்த இரகசியத்தைக் கூற முடியும். ஆனால் ஏனையோர் வெறுமனே தாம் எங்களுக்கு யோகம் கற்பிப்போம் எனத் தொடர்ந்தும் கூறுகின்றார்கள். கடவுளால் மாத்திரமே புராதன யோகத்தை எங்களுக்குக் கற்பித்து, தேவ இராச்சியத்;தின் சூரிய சந்திர வம்சங்களை ஸ்தாபிக்க முடியும் என நாங்கள் அறிவோம். கடவுள் ஒவ்வொரு கல்பத்திலும் வந்து, இந்த புராதன யோகத்தை எங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர் கூறுகின்றார்: ஓ ஆத்மாக்களே, கடவுளான என்னுடன் சதா யோகத்தைக் கொண்டிருங்கள், அப்பொழுது உங்கள் பாவங்கள் அழிந்து விடும். அச்சா.