18.02.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, இந்த உலகில் இருந்து மரணித்து, அந்தப் புதிய உலகிற்குச் செல்வதற்காக நீங்கள் இந்தப் பல்கலைக்கழகத்திற்கு வந்துள்ளீர்கள். உங்களுடைய அன்பு இப்பொழுது கடவுள் ஒருவர் மீதே இருக்கின்றது.

கேள்வி:
நீங்கள் செல்வந்தர்கள் ஆகுவதற்கு எந்த முறையில் தந்தையை நினைவுசெய்ய வேண்டும்?

பதில்:
தந்தை ஒரு புள்ளி ஆவார். ஒரு புள்ளியாகி, புள்ளியை நினைவு செய்யுங்கள், நீங்கள் செல்வந்தர்கள் ஆகுவீர்கள். நீங்கள் ஒன்றுக்குப் பக்கத்தில் ஒரு புள்ளியை (பூச்சியம்) எழுதும் பொழுது அது 10 ஆகுகின்றது, இன்னுமொரு பூச்சியத்தை அதன் பக்கத்தில் எழுதினால், அது 100 ஆகுகின்றது, பின்னர் அது 1000 ஆகுகின்றது. தந்தையை நினைவு செய்வதால் பூச்சியம் தொடர்ந்தும் சேர்க்கப்படுகின்றது, நீங்கள் தொடர்ந்தும் செல்வந்தர்களாக ஆகுகிறீர்கள். இந்த நினைவின் மூலம் மாத்திரமே நீங்கள் உண்மையான வருமானத்தைச் சம்பாதிக்கிறீர்கள்.

பாடல்:
விட்டிற்பூச்சிகளின் ஒன்றுகூடலில் சுவாலை ஏற்றப்பட்டுள்ளது.

ஓம் சாந்தி.
இப்பாடலின் அர்த்தம் மிகவும் தனித்துவமானது! அன்பு எதற்காக உருவாக்கப்படுகிறது? யாருக்காக? கடவுளிற்காக. ஏனெனில் நீங்கள் இவ்வுலகில் இருந்து மரணிக்கும் பொழுது, நீங்கள் அவரிடம் செல்கிறீர்கள். உங்களுக்கு இவ்வாறான அன்பு வேறு எவர் மீதாவது உள்ளதா? அத்தகைய அன்பிற்காக நீங்கள் மரணிப்பீர்கள் என எண்ணுகிறீர்களா? எவராவது அத்தகைய அன்பைக் கொண்டுள்;ளார்களா? இப்பாடலின் அர்த்தம் மிகவும் அற்புதமானது! விட்டிற்பூச்சியானது ஒரு சுடர் மீது அன்பைக் கொண்டுள்ளதால், அதை வட்டம் அடித்துப் பின்னர் அச்சுவாலையிலேயே மரணிக்கின்றது. நீங்களும் தந்தை மீது அன்பைக் கொண்டிருக்கும் பொழுது, உங்களது சரீரத்தை விடவேண்டும், அதாவது தந்தையை நினைவு செய்தவாறே உங்களது சரீரத்தை விடவேண்டும் என்று அர்த்தமாகும். இப்பாடலானது ஒரேயொருவருக்கு உரியது. அந்தத் தந்தை வரும்பொழுது அவர் மீது அன்பு கொண்டவர்கள் இவ்வுலகில் இருந்து மரணிக்க வேண்டும். நீங்கள் கடவுள் மீது அன்பு கொண்டிருக்கையில், மரணிக்கும் பொழுது எங்கு செல்வீர்கள்? நிச்சயமாகக் கடவுளிடமே செல்வீர்கள். மக்கள் கடவுளிடம் செல்வதற்காகத் தானங்கள், புண்ணியச் செயல்களைச் செய்து, யாத்திரைகள் போன்றவற்றிற்கும் செல்கிறார்கள். ஒருவர் இறக்கும் தருவாயில் உள்ள பொழுதும், கடவுளை நினைவு செய்யுமாறு மக்கள் அவரிடம் கூறுகின்றனர். கடவுள் மிகவும் புகழ்வாய்ந்தவர்! அவர் வரும்பொழுது முழு உலகையுமே முடிவுக்குக் கொண்டு வருகிறார். நீங்கள் இப்பழைய உலகிலிருந்து மரணித்து, புதிய உலகிற்குச் செல்வதற்காக இந்தப் பல்கலைக்கழகத்திற்கு வருகின்றீர்கள் என்பதைப் புரிந்து கொள்கிறீர்கள். இந்தப் பழைய உலகானது நரகமாகிய, தூய்மையற்ற உலகம் என்று அழைக்கப்படுகிறது. தந்தை இப்பொழுது புதிய உலகிற்கான பாதையை உங்களுக்குக் காட்டுகிறார். என்னை நினைவு செய்யுங்கள்! நான் தந்தையாகிய, சுவர்க்கக் கடவுள். நீங்கள் செல்வம், சொத்து, கட்டடங்கள் முதலியவற்றை அந்த லௌகீகத் தந்தையிடம் இருந்து பெறுகிறீர்கள். புத்திரிகள் ஆஸ்தியைப் பெறுவதில்லை. அவர்கள் மற்றவர்களது வீடுகளுக்கு அனுப்பப்படுகின்றனர், அவர்கள் வாரிசுகள் ஆகமுடியாது என்பதே அதன் அர்த்தமாகும். கடவுளே ஆத்மாக்கள் அனைவருக்கும் தந்தை ஆவார்; அனைவரும் அவரிடம் செல்ல வேண்டும். புதிய உலகில் வெகு சில மனிதர்களே இருப்பதனால், தந்தை நிச்சயமாக ஏதோ ஒருவேளையில் அனைவரையும் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்திருக்க வேண்டும். பழைய உலகில் ஏராளமான மனிதர்கள் உள்ளனர். புதிய உலகில் சொற்ப மனிதர்களே இருப்பதுடன், அங்கே பெருமளவு சந்தோஷமும் இருக்கின்றது. பழைய உலகில் ஏராளமான மனிதர்கள் இருப்பதுடன், பெருமளவு துன்பமும் உள்ளது, இதனாலேயே அவர்கள் அழைக்கிறார்கள். பாபு (காந்திஜி) கூறுவதுண்டு: 'ஓ, தூய்மையாக்குபவரே வாருங்கள்!" அவருக்கு உண்மையில் அவரைத் தெரியாது. பரமாத்மா பரமதந்தையான கடவுளே, தூய்மையாக்குபவர் என்றும், அவரே உலகிற்கு விடுதலை அளிப்பவர் என்றும் மக்கள் புரிந்து கொள்கிறார்கள். உலகிலுள்ள அனைவரும் இராமரையும், சீதையையும் நம்புகிறார்கள் என்பதல்ல. முழு உலகமுமே பரமாத்மா பரமதந்தையை விடுதலை அளிப்பவராகவும், வழிகாட்டியாகவும் கருதுகிறது. அவர் உங்களைத் துன்பத்தில் இருந்து விடுவிக்கிறார். அச்சா, பின்னர் யார் உங்களுக்குத் துன்பத்தை விளைவிப்பவர்? தந்தை உங்களுக்குத் துன்பத்தைக் கொடுக்க மாட்டார், ஏனெனில் அவரே தூய்மையாக்குபவர். அவரே உங்களைச் சந்தோஷ பூமியாகிய தூய உலகிற்கு அழைத்துச் செல்கிறார். நீங்கள் அந்த ஆன்மீகத் தந்தையின் ஆன்மீகக் குழந்தைகள். தந்தையைப் போன்றே குழந்தைகளும் இருப்பார்கள். ஒரு பௌதீகத் தந்தைக்குப் பௌதீகக் குழந்தைகள் உள்ளனர். நீங்கள் ஆத்மாக்கள் என்பதையும், பரமாத்மாவாகிய பரமதந்தை உங்களது ஆஸ்தியை உங்களுக்குக் கொடுப்பதற்காக வந்துள்ளார் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் அவருடைய குழந்தைகள் ஆகும்பொழுது நிச்சயமாக எங்களுடைய சுவர்க்க ஆஸ்தியைப் பெறுகின்றோம். அவரே சுவர்க்கத்தை ஸ்தாபிக்கிறார். நீங்கள் மாணவர்கள் என்பதை மறக்க வேண்டாம். மதுவனத்தில் சிவபாபா புல்லாங்குழல் (முரளி) இசைக்கின்றார் என்பது குழந்தைகளாகிய உங்களது புத்தியில் உள்ளது. இங்கே அது மூங்கிலால் ஆன புல்லாங்குழல் அல்ல. கிருஷ்ணர் நடனமாடுவது, புல்லாங்குழல் இசைப்பது அனைத்துமே பக்தி மார்க்கத்திற்கு உரியவை. எவ்வாறாயினும், சிவபாபா மாத்திரமே இந்த ஞானமாகிய புல்லாங்குழலை இசைக்கிறார். மிக நல்ல பாடல்களை இயற்றும் மக்கள் பலரும் உங்களிடம் வருவார்கள். பொதுவாக ஆண்களே பாடல்களை இயற்றுபவர்கள். நீங்கள் இந்த ஞானப் பாடல்களை மாத்திரம் பாடவேண்டும். அதன் மூலம் உங்களால் சிவபாபாவை நினைவுசெய்ய முடியும். தந்தை கூறுகிறார்: அல்ஃபாவாகிய என்னை நினைவு செய்யுங்கள்! தந்தை ஒரு புள்ளி என அழைக்கப்படுகின்றார். வியாபாரிகள் ஒரு பூச்சியத்தை எழுதும் பொழுது, அவர்கள் அதைச் சிவா என்றே கருதுகின்றார்கள். நீங்கள் ஒன்றிற்குப் பக்கத்தில் ஒரு பூச்சியத்தை எழுதும் பொழுது, அது 10 ஆகுகின்றது, இன்னொரு பூச்சியத்தைச் சேர்க்கும் பொழுது, அது 100 ஆகுகின்றது. பின்னர் இன்னொரு பூச்சியத்தை சேர்க்கும் பொழுது, அது 1000 ஆகுகின்றது. நீங்களும் சிவனை நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் எவ்வளவுக்கு அதிகமாகச் சிவனை நினைவு செய்கிறீர்களோ, அந்தளவுக்கு அதிகமான பூச்சியங்கள் சேர்க்கப்படுவதுடன், நீங்கள் அரைக் கல்பத்திற்குச் செல்வந்தர்களாகவும் ஆகுவீர்கள். அங்கே ஏழைகள் எவரும் இருக்க மாட்டார்கள். அங்கே அனைவரும் சந்தோஷமாக உள்ளனர்; துன்பம் என்ற குறிப்பே இல்லை. தந்தையின் நினைவால் உங்களது பாவங்கள் தொடர்ந்து அகற்றப்பட்டு, நீங்கள் மிகவும் செல்வந்தர்களாக ஆகுகின்றீர்கள். இது உண்மையான தந்தையிடம் இருந்து உண்மையான வருமானத்தைச் சம்பாதித்தல் என அறியப்படுகிறது. இவ்வருமானமே உங்களுடன் வரும். மனிதர்கள் அனைவரும் வெறுங்கையுடன் திரும்பிச் செல்வார்கள். நீங்களோ உங்கள் கைகளை நிறைத்தவாறே செல்வீர்கள். தந்தையை நினைவு செய்யுங்கள்! தந்தை விளங்கப்படுத்தி உள்ளார்: தூய்மை இருந்தால், நீங்கள் அமைதியையும், செழிப்பையும் பெறுவீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள், முதலில் தூய்மையாக இருந்தீர்கள், பின்னர் தூய்மை அற்றவர்கள் ஆகினீர்கள். சந்நியாசிகள் அரைவாசித் தூய்மையானவர்கள் என அழைக்கப்படுகின்றார்கள்; உங்கள் துறவறமானது முழுமையானது. அவர்கள் (சந்நியாசிகள்) எவ்வளவு சந்தோஷத்தைப் பெறுகின்றார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அவர்கள் சொற்ப சந்தோஷத்தைக் கொண்டிருக்கின்றார்கள், துன்பத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. அவர்கள் முன்னர் என்றுமே சர்வவியாபகம் பற்றிப் பேசுவதில்லை. சர்வவியாபகம் பற்றிப் பேசுவதால் அவர்கள் தொடர்ந்தும் கீழே இறங்கினார்கள். உலகில் பலவகையான ஒன்றுகூடல்கள் உள்ளன, ஏனெனில் அவற்றின் மூலம் அவர்கள் ஒரு வருமானத்தை ஈட்டிக் கொள்கின்றார்கள்; அதுவும் அவர்களின் வியாபாரம் ஆகும். கூறப்படுகின்றது: சாதாரண மனிதரிலிருந்து நாராயணன் ஆகுதல் என்ற வியாபாரத்தை விட ஏனைய வியாபாரங்கள் அனைத்தும் தூசைப் போன்றவை. அரிதாகவே சிலர் இந்த வியாபாரத்தைச் செய்கின்றார்கள். தந்தைக்கு உரியவர்களாகிய பின்னர், நீங்கள் அனைத்தையும், உங்கள் சரீரத்தையும் கூட, தந்தைக்குக் கொடுக்கிறீர்கள். ஏனெனில், உங்களுக்குப் புதிய சரீரங்கள் வேண்டும். தந்தை கூறுகின்றார்: உங்களால் கிருஷ்ணரின் பூமிக்குச் செல்ல முடியும். ஆனால் அது ஆத்மாக்களாகிய நீங்கள் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகினால் மாத்திரமே முடியும். “எங்களைத் தூய்மை ஆக்குங்கள்!” என்று நீங்கள் ஸ்ரீகிருஷ்ண பூமியில் கூற மாட்டீர்கள். இங்கு மனிதர்கள் அனைவரும் அழைக்கின்றார்கள்: ஓ விடுதலை அளிப்பவரே, வாருங்கள்! எங்களை இந்தப் பாவாத்மாக்கள் நிறைந்த உலகிருந்து விடுவியுங்கள்! தந்தை இப்பொழுது உங்களைத் திரும்பவும் தன்னுடன் அழைத்துச் செல்வதற்காக வந்திருக்கின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். அங்கே செல்வது நல்லதாகும். மக்கள் அமைதியை விரும்புகின்றார்கள். அமைதி என்றால் என்ன? எவருமே செயல்கள் செய்யாமல் இருக்க முடியாது. அமைதி தாமத்திலேயே அமைதி இருக்கின்றது. எவ்வாறாயினும், நீங்கள சரீரங்களை ஏற்றுச் செயல்களை ஆற்ற வேண்டும். சத்தியயுகத்தில் நீங்கள் செயல்களைச் செய்தாலும் உங்களுக்கு அமைதி உள்ளது. அமைதியற்ற மக்;கள் துன்பத்தை அனுபவம் செய்கின்றார்கள், அதனாலேயே அவர்கள் தாங்கள் எவ்வாறு அமைதியைப் பெறலாம் என வினவுகின்றார்கள். அமைதிதாமமே உங்கள் இல்லம் என்பதைக் குழந்தைகளான நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். சத்தியயுகத்தில் அமைதியும் சந்தோஷமும் உள்ளன் அங்கே அனைத்தும் உள்ளன. உங்களுக்கு அது வேண்டுமா அல்லது அமைதி மாத்திரம் வேண்டுமா? இங்கே துன்பம் உள்ளதால், மக்கள் தூய்மை ஆக்குகின்ற தந்தையை இங்கே அழைக்கின்றார்கள். மக்கள் கடவுளைச் சந்திப்பதற்காகவே பக்தி செய்கின்றார்கள். பக்தி முதலில் கலப்படம் அற்றதாகவும், பின்னர் அது கலப்படம் உள்ளதாகவும் ஆகுகின்றது. கலப்படமான பக்தியில் மக்கள் என்ன செய்கின்றார்கள் எனப் பாருங்கள். அனைத்தும் மிகத் தெளிவாக ஏணிப்படத்தில் காட்டப்பட்டுள்ளது, ஆனால் முதலில் யார் கடவுள் என நீங்கள் நிரூபிக்க வேண்டும். ஸ்ரீ கிருஷ்ணரை அவ்வாறாக்கியவர் யார்? அவரது முன்னைய பிறவியில் அவர் யாராக இருந்தார்? இவ்விடயங்களை நீங்கள் மிகவும் சாதுரியமாக விளங்கப்படுத்த வேண்டும். நல்ல சேவையைச் செய்கின்றவர்களின் இதயங்கள் அதனை அவதானிக்கின்றன. ஒரு பல்கலைக்கழகத்தில் நன்றாகக் கற்பவர்கள் நிச்சயமாக முன்னேறிச் செல்கிறார்கள். அது வரிசைக்கிரமமானது, இருப்பினும் சில மந்தபுத்தி உள்ளவர்களும் இருக்கின்றார்கள். ஆத்மாக்கள் சிவபாபாவிடம் கூறுகின்றார்கள்: எனது புத்தியில் உள்ள பூட்டைத் திறவுங்கள்! தந்தை கூறுகின்றார்: நான் உங்கள் புத்தியில் உள்ள பூட்டைத் திறக்கவே வந்துள்ளேன். ஆனால் உங்கள் பூட்டானது இலகுவாகத் திறக்கப்படாத வகையில் உங்கள் செயல்கள் உள்ளன! அவ்வாறாயின் பாபாவினால் என்ன செய்ய முடியும்? பல பாவங்கள் செய்யப்பட்டுள்ளன. அத்தகைய குழந்தைகளை இட்டு பாபாவினால் என்ன செய்ய முடியும்? தாங்கள் போதுமானளவு கற்கவில்லை என மாணவர்கள் ஆசிரியரிடம் கூறுவார்கள். ஆசிரியர் என்ன செய்வார்? ஆசிரியர் கருணை காட்ட மாட்டார். ஒருவேளை அவர் உங்களுக்கு மேலதிக நேரத்தைக் கொடுக்கக் கூடும். அது தடை செய்யப்படுவதில்லை. கண்காட்சி பரந்தளவில்; திறக்கப்பட்டுள்ளன் அங்கே சென்று நீங்கள் பயிற்சி செய்யலாம். பக்தி மார்க்கத்தில் சிலர் உங்களை மாலையை உருட்டுமாறு கூறுகின்றார்கள். ஏனையோர் ஒரு மந்திரத்தை நினைவு செய்யுமாறு கூறுகின்றார்கள். இங்கே தந்தை தனது சொந்த அறிமுகத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார், தந்தையை நினைவு செய்யுங்கள். இவ்வாறு செய்வதனால் நீங்கள் உங்கள் ஆஸ்தியைப் பெறுவீர்கள். எனவே உங்கள் முழு ஆஸ்தியையும் தந்தையிடம் இருந்து நீங்கள் மிகவும் நன்றாகப் பெற்றுக் கொள்ள வேண்டும். இதிலும் தந்தை கூறுகின்றார்: என்றுமே விகாரத்தில் ஈடுபடாதீர்கள்! உங்களுக்கு விகாரத்தின் சுவை சிறிதளவு இருந்தாலும், அது அதிகரிக்கும். ஒரு தடவை சிகரட் பிடிக்கும் ருசி ஏற்பட்டாலும், அந்த சகவாசத்தின் வசப்படுவதால், அந்தப் பழக்கம் அதிகரிக்கும். பின்னர் அந்தப் பழக்கத்தைக் கைவிடுவது கடினமாகி விடுகின்றது. அதன்பின்னர் அவர்கள் அதிகளவு சாக்குப் போக்குகள் சொல்வார்கள். எந்த பழக்கங்களையும் வளர விடக்கூடாது. தீய பழக்கங்களை விட்டுவிட வேண்டும். தந்தை கூறுகின்றார்: வாழும் பொழுதே உங்கள் சரீரம் என்ற உணர்வைத் துறந்து, என்னை நினைவு செய்யுங்கள். தூய உணவு மட்டுமே பிரசாதமாகத் தேவர்களுக்குப் படைக்கப்படுகின்றது. ஆகையால் நீங்களும் தூய உணவை மாத்திரமே உண்ண வேண்டும். இக்காலத்தில், உங்களால் தூய நெய்யையேனும் பெற முடியாதுள்ளது; அதற்கு மாறாக அவர்கள் எண்ணெயைப் பயன்படுத்துகின்றார்கள். அங்கே எண்ணெய் போன்றவை இருக்க மாட்டாது. இங்கே அவர்கள் பால் பண்ணைகளில் தூய நெய், போலியான (கலப்படம் உள்ளது) நெய் இரண்டையும் வைத்திருக்கின்றார்கள். அவர்கள் இரண்டையும் 'தூய நெய்” எனக் கூறிய பொழுதிலும், அவற்றின் விலையில் ஒரு வித்தியாசம் உள்ளது. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் மலர்களைப் போன்று மலர்ந்து, மலர்ச்சியானவர்களாக இருக்க வேண்டும். சுவர்க்கத்தில் இயற்கை அழகுள்ளது. அங்கே பஞ்ச தத்துவங்களும் சதோபிரதானாக உள்ளன. இங்குள்ள எவராலும் இலக்ஷ்மி நாராயணனைப் போன்று இயற்கை அழகை உருவாக்க முடியாது. தங்கள் பௌதீகக் கண்களால் அவர்களை எவராலும் காண முடியாது. ஆம், அவர்கள் காட்சிகளைக் காண்கிறார்கள். ஆனால், அவர்களின் காட்சிகளைக் கண்ட பின்னரும், அதேபோன்ற படங்களை எவராலும் உருவாக்க முடியாது. ஆம், ஓர் ஓவியருக்கு ஒரு காட்சி கிடைத்து, அவர் அந்நேரத்தில் இருந்து தொடர்ந்தும் ஒரு படத்தை வரைய ஆரம்பித்தாலும் கூட அது சிரமமாகவே இருக்கும். ஆகையால் குழந்தைகளாகிய நீங்கள் பெருமளவு போதையைக் கொண்டிருக்க வேண்டும். பாபா இப்பொழுது எங்களை வீட்டிற்கு மீண்டும் அழைத்துச் செல்வதற்காகவே வந்திருக்கின்றார். நாங்கள் எங்கள் சுவர்க்க ஆஸ்தியைத் தந்தையிடம் இருந்து பெறப் போகின்றோம். எங்களின் 84 பிறவிகள் இப்பொழுது முடிவுக்கு வருகின்றன. அத்தகைய எண்ணங்களை உங்கள் புத்தியில் கொண்டிருப்பதனால், நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள். விகாரத்தைப் பற்றிய எண்ணம் சற்றேனும் இருக்கக்கூடாது. தந்தை கூறுகின்றார்: காமமே கொடிய எதிரி. ஆகையாலேயே திரௌபதி கதறி அழைத்தாள். அவளுக்கு ஐந்து கணவர்கள் இருக்கவில்லை. அவள் தன்னைக் காப்பாற்றுமாறு அழைத்தாள், ஏனெனில் துச்சாதனன் அவளைத் துயில் உரிந்தான். அவள் எவ்வாறு 5 கணவர்களைக் கொண்டிருக்க முடியும்? அவ்விடயங்கள் சாத்தியம் இல்லை! குழந்தைகளாகிய நீங்கள் புதிய கருத்துக்களைத் தொடர்ந்தும் பெற்றுக் கொள்வதால், நீங்கள் படங்களைத் தொடர்ந்தும் மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் எவற்றையாவது மாற்றி அதிக வார்த்தைகளைச் சேர்க்க வேண்டும். ஒரு குறுகிய காலத்தில் நீங்கள் பாரதத்தைத் தேவதைகளின் பூமியாக மாற்றுவீர்கள் என எழுதுங்கள்; நீங்கள் இந்தச் சவாலை விடுக்க வேண்டும். ஒரு தந்தை தனது குழந்தைகளுக்குக் கூறுவார்: மகன் தந்தையைக் காட்டுகிறார், தந்தை மகனைக் காட்டுகிறார். எந்தத் தந்தை? சிவனும், சாலிகிராம்களும்; அவர்கள் நினைவு கூரப்படுகின்றனர். சிவபாபா விளங்கப்படுத்தும் எதையும் பின்பற்றுங்கள். 'தந்தையைப் பின்பற்றுங்கள்" என அவரைப் பற்றியே கூறப்படுகிறது. நீங்கள் லௌகீகத் தந்தையர்களைப் பின்பற்றியதால், தூய்மை அற்றவர்கள் ஆகினீர்கள். உங்களைத் தூய்மை ஆக்குவதற்காக, அவர் தன்னைப் பின்பற்றச் செய்கிறார். வேறுபாடு ஒன்று உள்ளது. 'இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, என்னைப் பின்பற்றித் தூய்மை ஆகுங்கள்" எனத் தந்தை கூறுகிறார். என்னைப் பின்பற்றுவதால் மாத்திரமே, நீங்கள் சுவர்க்க அதிபதிகள் ஆகுவீர்கள். உங்களுடைய லௌகீகத் தந்தையர்களைப் பின்பற்றுவதால், நீங்கள் 63 பிறவிகளாக ஏணியில் கீழிறங்கி வந்தீர்கள். தந்தையைப் பின்பற்றுவதால் நீங்கள் மேலே ஏறுகிறீர்கள். நீங்கள் தந்தையுடன் திரும்பிச் செல்ல வேண்டும். தந்தை கூறுகிறார்: இந்த இரத்தினங்கள் ஒவ்வொன்றும் நூறாயிரக்கணக்கான ரூபாய்கள் பெறுமதி வாய்ந்தன. உங்களுக்குத் தந்தையை தெரியும், நீங்கள் அவரிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். தாங்கள் பிரம்ம தத்துவத்துடன் இரண்டறக் கலப்பார்கள் என அவர்கள் கூறுகிறார்கள். எவராலும் இரண்டறக் கலக்க முடியாது; அவர்கள் மீண்டும் வர வேண்டும். தந்தை உங்களுக்குத் தினமும் விளங்கப்படுத்துகிறார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, அனைத்திற்கும் முதலில் தந்தையின் அறிமுகத்தை அனைவருக்கும் கொடுங்கள். உங்களைத் தூய்மை ஆக்குவதற்காக, அப்பால் உள்ள தந்தை உங்களுக்குத் தூய்மை எனும் ஆஸ்தியைக் கொடுக்கிறார். இதனாலேயே, 'எங்களைத் தூய்மை ஆக்குங்கள்!" என மக்கள் எல்லையற்ற தந்தைக்குக் கூறுகிறார்கள். அவரே தூய்மையாக்குபவர். லௌகீகத் தந்தை 'தூய்மையாக்குபவர்" என்று அழைக்கப்பட மாட்டார். 'ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்!" என அவரும் (லௌகீகத் தந்தை) தொடர்ந்தும் அழைக்கிறார். எனவே, அனைவருக்கும் இரண்டு தந்தைமாரினதும் அறிமுகத்தைக் கொடுங்கள். உங்கள் லௌகீகத் தந்தையர்கள் உங்களைத் திருமணம் முடித்து, தூய்மை அற்றவர்கள் ஆகும்படி உங்களைக் கூறுகின்றனர். ஆனால் இந்த உலகிற்கு அப்பால் உள்ள தந்தையோ, உங்களைத் தூய்மை ஆகுமாறு கூறுகிறார். 'என்னை நினைவு செய்வதால், நீங்கள் தூய்மை ஆகுவீர்கள்" என அவர் கூறுகிறார். ஒரேயொரு தந்தையே அனைவரையும் தூய்மை ஆக்குகிறார். இந்த கருத்துக்கள் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்கு மிகவும் சிறந்தவை. பல்வேறு வகையான இந்த ஞானக் கருத்துக்களைக் கடைந்து, அவற்றைப் பிறருக்கும் விளங்கப்படுத்துங்கள். இது உங்களுடைய தொழிலாகும். நீங்கள் தூய்மை அற்றவர்களைத் தூய்மை ஆக்குபவர்கள். அப்பாலுள்ள தந்தை இப்பொழுது கூறுகிறார்: இப்பொழுது தூய்மை ஆகுங்கள், ஏனெனில் விநாசம் முன்னே நிற்கின்றது. நீங்கள் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? நீங்கள் நிச்சயமாக அப்பாலுள்ள தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். 'நான் அப்பாலுள்ள தந்தையைப் பின்பற்றி, தூய்மை அற்றவர் ஆகுவதை நிறுத்துவேன்" என்ற இந்தச் சத்தியத்தைக் கண்காட்சியில் நீங்கள் எழுத வேண்டும். 'நான் இந்த உத்தரவாதத்தைத் தந்தைக்குக் கொடுக்கிறேன்" என எழுதுங்கள். அனைத்தும் தூய்மையிலேயே தங்கியுள்ளது. குழந்தைகளான நீங்கள் இரவுபகலாகச் சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். அல்பாவாகிய தந்தை, எங்களுக்கு பீட்டாவாகிய, இராச்சியமான, சுவர்க்க ஆஸ்தியைக் கொடுக்கின்றார். சிவனின் பிறந்த நாள் என்றால், பாரத சுவர்க்கத்தின் பிறந்த நாளாகும் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். கீதையே அனைத்துச் சமயநூல்களினதும் இரத்தினமாகும். “தாயாகிய கீதையே” என்று கூறப்படுகிறது. நீங்கள் தந்தையிடம் இருந்து மாத்திரமே உங்கள் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். சிவபாபாவே கீதையைப் படைப்பவர். நீங்கள் அப்பாலுள்ள தந்தையிடம் இருந்து, தூய்மை எனும் உங்கள் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் இறை மாணவர்கள் என்ற விழிப்புணர்வை எப்பொழுதும் பேணுங்கள். எந்த அசுத்தமான பழக்கத்தையும் உருவாக்காதீர்கள், ஆனால் அவற்றை முடித்து விடுங்கள். விகாரம் பற்றிய சிறிதளவு எண்ணங்கள் கூட இருக்கக்கூடாது.

2. நீங்கள் உயிர்வாழும் பொழுதே சரீர உணர்வை மறந்து, தந்தையை நினைவு செய்யுங்கள். இந்த ஞானத்தின் பல்வேறு கருத்துக்களைக் கடைந்து, தூய்மை அற்றவர்களைத் தூய்மை ஆக்குகின்ற தொழிலைச் செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் திரிமூர்த்தி திருப்திச் சான்றிதழின் மூலம் சதா வெற்றியாளராகி, ஒரு மேன்மையான அந்தஸ்திற்கான உரிமையைக் கோருவீர்களாக.

சதா வெற்றிநிறைந்தவர் ஆகுவதற்கு, நீங்கள் தந்தையுடனும் குடும்பத்துடனும் நல்லதொரு தொடர்பை வைத்திருக்க வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் மூன்று சான்றிதழ்களைக் கோர வேண்டும்: தந்தையிடம் இருந்து, உங்களிடம் இருந்து மற்றும் குடும்பத்திடம் இருந்து. குடும்பத்தைத் திருப்திப்படுத்துவதற்கு, இந்தச் சிறிய விடயத்தை நினைவு செய்யுங்கள்: மரியாதை கொடுக்கின்ற இசைத்தட்டு சதா இசைக்க வேண்டும். இதில் சுயநலமற்றவர் ஆகுங்கள். தந்தையைத் திருப்திப்படுத்துவதற்கு, நேர்மையாக இருங்கள். உங்களைத் திருப்தியாக வைத்திருப்பதற்கு, சதா ஸ்ரீமத் என்ற கோட்டிற்குள் இருங்கள். இந்த மூன்று சான்றிதழ்களும் உங்களை உயர்ந்ததோர் அந்தஸ்திற்கான உரிமையைப் பெறச் செய்யும்.

சுலோகம்:
ரூபத்தைப் பார்க்காமல், உயிர்வாழும் ரூபத்தையும் தெய்வீகச் செயல்களையும் பார்ப்பவர்கள், மேன்மையான நடத்தையைக் கொண்டிருப்பார்கள்.

அவ்யக்த சமிக்ஞை: ஒற்றுமை மற்றும் நம்பிக்கை என்ற சிறப்பியல்புடன், வெற்றி நிறைந்தவர் ஆகுங்கள்.

ஆத்மாக்கள் அனைவருக்கும் இந்த ஞானோதயத்தை வழங்குவதற்கு, நீங்கள் தொடர்ந்து நல்லாசிகளையும் உபகார உணர்வுகளையும் கொண்டிருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். அதேபோல், நிலையான ஸ்திதியில் ஸ்திரமாக இருப்பதன் மூலம் இந்தத் தெய்வீக ஒன்றுகூடலின் சக்தியை அதிகரிப்பதற்கு வெவ்வேறு வழிமுறைகளை முயற்சி செய்யுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம், மக்களால் நடைமுறை ரீதியாக இந்தத் தெய்வீக ஒன்றுகூடலின் ரூபத்தின் காட்சியைக் காணக்கூடியதாக இருக்கும். இந்தத் தெய்வீக ஒன்றுகூடலின் சம்பூரணமான, ஸ்திரமான மற்றும் நிலையான ஸ்திதி பிரபல்யம் அடையும்போது, பாப்தாதாவை வெளிப்படுத்துதல் நெருக்கமாக வந்துவிடும்.