18.05.25 Avyakt Bapdada Tamil Lanka Murli 25.03.2005 Om Shanti Madhuban
மாஸ்ரர் ஞான சூரியனாகி உங்களின் அனுபவக் கதிர்களைப் பரப்புங்கள். பாக்கியத்தை அருள்பவராகவும் தபஸ்வியாகவும் ஆகுங்கள்.
இன்று, பாப்தாதா எங்கும் உள்ள புனித அன்னங்களான தனது குழந்தைகளுடன் ஹோலியைக் கொண்டாட வந்துள்ளார். குழந்தைகளான நீங்களும் உங்களின் அன்பெனும் இழையால் கட்டப்பட்டு இங்கே ஹோலி கொண்டாடுவதற்காக வந்துள்ளீர்கள். ஒரு சந்திப்பைக் கொண்டாடுவதற்காக மிகுந்த அன்புடன் நீங்கள் இங்கே வந்துள்ளீர்கள். குழந்தைகளான உங்கள் எல்லோருடைய பாக்கியத்தையும் பாப்தாதா பார்த்தார். இது மகத்தானதொரு பாக்கியம்: நீங்கள் எந்தளவிற்கு அதிபுனிதமானவர்களோ, அதே அளவிற்கு, நீங்கள் அதிமேலானவர்களும் ஆவீர்கள். கல்பம் முழுவதையும் பாருங்கள். உங்களை விட உயர்வான பாக்கியத்தைக் கொண்டவர்கள் எவரும் இல்லை. உங்களின் பாக்கியம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? இப்போதும்கூட, நீங்கள் இறை பராமரிப்பால், இந்த இறை கல்வியால், இறை ஆசீர்வாதங்களால் பராமரிக்கப்படுகிறீர்கள். எதிர்காலத்திலும் நீங்கள் உலக இராச்சிய உரிமையைக் கொண்டவர்கள் ஆகுவீர்கள். நீங்கள் அப்படி ஆகவேண்டும். இது நிச்சயிக்கப்பட்டுள்ளது, உங்களுக்கு அந்த நம்பிக்கை உள்ளது. பின்னரும்கூட, நீங்கள் பூஜிக்கத்தகுதி வாய்ந்தவர் ஆகும்போது, மேன்மையான ஆத்மாக்களான உங்களைப் போல் வேறு எவரும் ஒழுங்குமுறையாக, மிகச்சரியான முறையில் பூஜிக்கப்பட மாட்டார்கள். எனவே, தற்போதும் எதிர்காலத்திலும் பூஜிக்கத்தகுதி வாய்ந்த ரூபத்திலும் நீங்களே அனைவரிலும் உயர்ந்தவர்கள், அதாவது, அதிமேலானவர்கள். உங்களின் உயிரற்ற விக்கிரகங்களின் ஒவ்வொரு செயலும் வழிபடப்படுகின்றன. மதத்தாபகர்களும் மகாத்மாக்களும் பலர் இருக்கிறார்கள். ஆனால் இறைவனின் அதிமேலான குழந்தைகளான நீங்கள் மட்டுமே ஒழுங்குமுறையாக மிகச்சரியாக வழிபடப்படுகிறீர்கள். இது ஏனென்றால், நீங்கள் இந்த வேளையில் ஒரு கர்மயோகியாக ஒவ்வொரு செயலையும் மிகச்சரியாகச் செய்கிறீர்கள். அதன் பலன், நீங்கள் மிகச்சரியாக வழிபடப்படுகிறீர்கள். நீங்கள் சங்கமயுகத்தில் செய்யும் முயற்சிகளுக்கேற்ற வெகுமதியைப் பெறுகிறீர்கள். எனவே, அதிமேலான இறைவன், குழந்தைகளான நீங்கள் அதிமேலான பேறுகளைப் பெறச் செய்கிறார்.
ஹோலி என்றால் தூய்மை. நீங்களே அதிபுனிதமானவர்கள், அத்துடன் அதிமேலானவர்கள். இந்தப் பிராமண வாழ்க்கையின் அத்திவாரம் தூய்மை. உங்களின் எண்ணங்களிலேனும் சிறிதளவு தூய்மையின்மை இருந்தாலும் அது நீங்கள் மேன்மை அடைவதற்கு உங்களை அனுமதிக்காது. தூய்மையே சந்தோஷம் மற்றும் அமைதியின் தாய். தூய்மையே சகல பேறுகளினதும் சாவி. இதனாலேயே, உங்கள் எல்லோருடைய சுலோகமும் ‘தூய்மை ஆகுங்கள், யோகி ஆகுங்கள்’ என்பதாகும். ஹோலிப் பண்டிகையின் போதும் அவர்கள் முதலில் எதையாவது எரிக்கிறார்கள். பின்னரே கொண்டாடுகிறார்கள். முதலில் அதை எரிக்காமல் அவர்கள் கொண்டாடுவதில்லை: தூய்மையின்மையை எரித்தல். நீங்கள் யோக அக்கினியில் உங்களின் தூய்மை இன்மையை எரிக்கிறீர்கள். எனவே, அதன் ஞாபகார்த்தமாக, அவர்கள் நெருப்பில் எதையாவது எரிக்கிறார்கள். அதை எரித்த பின்னர், அவர்கள் தூய்மை ஆகியதும் சந்தோஷமாகக் கொண்டாடுகிறார்கள். நீங்கள் தூய்மை ஆகுவதன் ஞாபகார்த்தமாக, அவர்கள் ஒரு சந்திப்பைக் கொண்டாடுகிறார்கள். ஏனென்றால், நீங்கள் எல்லோரும் உங்களின் தூய்மை இன்மைகளை எரித்து, இறைவனின் சகவாசம் என்ற நிறத்தால் சிவப்பாகும்போது, நல்லாசிகளையும் தூய உணர்வுகளையும் கொண்டிருப்பதன் மூலம் சகல ஆத்மாக்களுடனும் ஒரு சந்திப்பைக் கொண்டாடுகிறீர்கள். இதன் ஞாபகார்த்தமே நீங்கள் ஒரு புண்ணியமான, சந்தோஷமான சந்திப்பைக் கொண்டிருப்பதாகும். இதனாலேயே, குழந்தைகளான நீங்கள் எல்லோரும் இந்த விழிப்புணர்வைக் கொண்டிருக்க வேண்டும் என பாப்தாதா நினைவூட்டுகிறார்: சதா எல்லோரிடம் இருந்தும் ஆசீர்வாதங்களைப் பெறுங்கள், எல்லோருக்கும் ஆசீர்வாதங்களை வழங்குங்கள். உங்களின் ஆசீர்வாதங்கள் என்ற நல்லாசிகளால் புண்ணிய சந்திப்பைக் கொண்டாடுங்கள். யாராவது உங்களின் மீது தீங்கான எண்ணங்களைக் கொண்டிருந்தாலும் அந்த ஆத்மா தூய்மையின்மையின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கிறார். அந்தத் தீய எண்ணங்களை நீங்கள் உங்களின் மனதில் ஏற்றுக் கொண்டால், உங்களால் சந்தோஷமாக இருக்க முடியுமா? நீங்கள் சந்தோஷத்தை அனுபவம் செய்கிறீர்களா? அல்லது, ‘ஏன்? என்ன? எப்படி? யார்?’ என்ற வீணான எண்ணங்களின் துன்பம் எதையாவது அனுபவம் செய்கிறீர்களா? அந்தத் தீய எண்ணங்களை ஏற்றுக் கொள்வது என்றால், உங்களைத் துக்கத்தையும் அமைதி இன்மையையும் அனுபவிக்கச் செய்தல் என்று அர்த்தம். அப்போது நீங்கள் பாப்தாதாவின் ஸ்ரீமத்திற்குக் கீழ்ப்படிவதில்லை: சந்தோஷத்தைக் கொடுத்து, சந்தோஷத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். எனவே, இப்போது குழந்தைகளான நீங்கள் எல்லோரும் எப்படி ஆசீர்வாதங்களைப் பெறுவது, எப்படி ஆசீர்வாதங்களைக் கொடுப்பது எனக் கற்றுக் கொண்டீர்கள்தானே? நீங்கள் இதைக் கற்றுக் கொண்டீர்களா?
திடசங்கற்பத்துடன் ஒரு சத்தியம். திடசங்கற்பத்துடன் ஒரு சத்தியம் செய்யுங்கள்: நான் சந்தோஷத்தைக் கொடுக்க வேண்டும், அத்துடன் நான் சந்தோஷத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். நான் ஆசீர்வாதங்களைக் கொடுத்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் இந்தச் சத்தியத்தைச் செய்துள்ளீர்களா? உங்களுக்கு இந்தத் தைரியம் உள்ளதா? இன்றில் இருந்து, நான் ஆசீர்வாதங்களைப் பெற்று ஆசீர்வாதங்களைக் கொடுப்பேன் என்ற திடசங்கற்பமான எண்ணத்தைக் கொண்டிருப்பீர்கள் என்ற தைரியத்தைக் கொண்டிருப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! இது உறுதியா? பலவீனம் ஆகாதீர்கள். நீங்கள் பழுக்காமல் காயாக (பலவீனம்) இருந்தால், பறவைகள் காயை உண்டுவிடும். திடசங்கற்பமே வெற்றிக்கான சாவி ஆகும். உங்கள் எல்லோரிடமும் இந்தச் சாவி உள்ளதா? உங்களிடம் அது உள்ளதா? எல்லா வேளையும் உங்களிடம் அந்தச் சாவி உள்ளதா? மாயை அதைக் களவெடுக்க இல்லைத்தானே? அவளும் அந்தச் சாவியை விரும்புகிறாள். நீங்கள் சிந்திக்கும்போது, சதா இந்த எண்ணத்தை வெளிப்படுத்துங்கள். அது அமிழ்ந்து இருக்க வேண்டாம், ஆனால் அது வெளிப்பட்டு இருக்க வேண்டும்: நான் நிச்சயமாக இதைச் செய்ய வேண்டும். நான் நிச்சயமாக இதைச் செய்ய வேண்டும். இது ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டு விட்டது. இதுவே உங்களின் புத்தியில் நம்பிக்கை வைத்திருப்பதன் மூலம் வெற்றியாளர் ஆகுதல் எனப்படுகிறது. வெற்றி ஏற்கனவே நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நீங்கள் இதை மீண்டும் செய்ய வேண்டும். இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. இது ஏற்கனவே உருவாக்கப்பட்டது. இதை மீண்டும் செய்வதன் மூலம் நீங்கள் அதை மீண்டும் உருவாக்குகிறீர்கள். இது கஷ்டமா? சிலவேளைகளில் அது கஷ்டமாக உள்ளதா? அது ஏன் கஷ்டமாக உள்ளது? நீங்களாகவே இலகுவான விடயங்களைக் கஷ்டமாக ஆக்குகிறீர்கள். நீங்கள் சிறியதொரு தவறைச் செய்கிறீர்கள். அந்தத் தவறு என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அந்த வேளையில், பாப்தாதா அதிகளவு கருணையாக உணர்வது மட்டுமன்றி, அவர் உங்களின் மீதும் அன்பும் வைத்திருக்கிறார். அவர் என்ன ரூபத்தில் அந்த அன்பைக் கொண்டுள்ளார்? ஒருபுறம், தந்தை உங்களுடன் ஒன்றிணைந்து உள்ளார் என நீங்கள் சொல்கிறீர்கள். அவர் ஒன்றிணைந்து இருக்கிறாரா? உங்களுடன் இருப்பதல்ல, ஆனால் உங்களுடன் ஒன்றிணைந்து உள்ளாரா? அவர் ஒன்றிணைந்து இருக்கிறாரா? இரட்டை வெளிநாட்டவர்களே, அவர் ஒன்றிணைந்து இருக்கிறாரா? பின்னால் இருப்பவர்களே, அவர் ஒன்றிணைந்து இருக்கிறாரா? கலரியில் அமர்ந்திருப்பவர்களே, அவர் ஒன்றிணைந்து இருக்கிறாரா?
இன்று, மதுவனம், பாண்டவபவன், கியான் சரோவர் அத்துடன் இந்த இடத்தின் வாசிகளும் வேறொரு மண்டபத்தில் இருந்து முரளியைக் கேட்பதாக செய்திகளை பாப்தாதா பெற்றார். எனவே, பாப்தாதா அவர்களையும் கேட்கிறார்: பாப்தாதா ஒன்றிணைந்து இருக்கிறாரா? அவர்கள் தமது கைகளை உயர்த்துகிறார்கள். அவர் ஒன்றிணைந்து இருக்கும்போது, சர்வசக்திவான் பாப்தாதாவே ஒன்றிணைந்து இருக்கும்போது, நீங்கள் ஏன் தனித்து இருக்கிறீர்கள்? நீங்கள் பலவீனமாக இருந்தாலும், பாப்தாதா சர்வசக்திவான் ஆவார். நீங்கள் தனித்து இருக்கும்போதே பலவீனம் ஆகுகிறீர்கள். ஒன்றிணைந்த ரூபத்தில் இருங்கள். பாப்தாதா ஒவ்வொரு குழந்தையுடனும் ஒவ்வொரு கணமும் ஒத்துழைக்கிறார். தந்தை சிவன் ஏன் பரந்தாமத்தில் இருந்து வந்திருக்கிறார்? அவர் ஏன் வந்துள்ளார்? அவர் குழந்தைகளான உங்களுடன் ஒத்துழைப்பதற்கே வந்துள்ளார். பாருங்கள், பிரம்மாபாபாவும் பௌதீகமானவரில் இருந்து சூட்சுமமானவர் ஆகினார். எதற்காக? பௌதீக ரூபத்தை விட, சூட்சும ரூபத்தினூடாக, அவரால் எல்லோருக்கும் அதிகபட்ச ஒத்துழைப்பைக் கொடுக்க முடியும். எனவே, பாப்தாதா உங்களுக்குத் தனது ஒத்துழைப்பைக் கொடுக்க முன்வரும்போது, நீங்கள் ஏன் தனித்து இருக்கிறீர்கள்? ஏன் உங்களைச் சிரமப்படுவதில் ஈடுபடுத்துகிறீர்கள்? நீங்கள் 63 பிறவிகளாகச் சிரமப்பட்டீர்கள். இப்போதும் உங்களை அந்தச் சிரமப்படும் சம்ஸ்காரங்கள் இழுக்கின்றனவா? அன்பிலே திளைத்திருங்கள். அன்பிலே மூழ்கி இருங்கள். அன்பானது உங்களைச் சிரமப்படுவதில் இருந்து விடுவிக்கும். உங்களுக்குச் சிரமப்படுவது பிடிக்குமா? அல்லது, உங்களின் பழக்கவழக்கங்களின் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகுகிறீர்களா? நீங்கள் இலகு யோகிகள். பாப்தாதா பரந்தாமத்தில் இருந்து குழந்தைகளான உங்களுக்காக ஒரு விசேடமான பரிசைக் கொண்டு வந்துள்ளார். அவர் என்ன பரிசைக் கொண்டு வந்துள்ளார் என உங்களுக்குத் தெரியுமா? அவர் தனது உள்ளங்கையில் சுவர்க்கத்தையே கொண்டு வந்துள்ளார். அவர் குழந்தைகளான உங்களுக்காக இராச்சிய பாக்கியத்தைக் கொண்டு வந்திருப்பதைக் காட்டும் படம் ஒன்றும் உங்களிடம் உள்ளது. இதனாலேயே, நீங்கள் சிரமப்படுவதை பாப்தாதா விரும்புவதில்லை.
பாப்தாதா ஒவ்வொரு குழந்தையும் சிரமப்படுவதில் இருந்து விடுபட்டு, அன்பிலே மூழ்கி இருக்க வேண்டும் என விரும்புகிறார். எனவே, இன்று நீங்கள் உங்களின் மனதால் ஹோலியை எரித்து, சிரமப்படுவதில் இருந்தும் மாயையுடன் போராடுவதில் இருந்தும் விடுபடுவீர்களா? நீங்கள் அதை எரிப்பீர்களா? எதையாவது எரிப்பது என்றால், அதன் பெயரையும் சுவட்டையும் முற்றாக மறையச் செய்வதாகும். எப்பொழுது எல்லாம் ஏதாவது எரிக்கப்படுகிறதோ, அப்போது அதன் பெயரும் சுவடும் சம்பூரணமாக முடிந்துவிடும். எனவே, நீங்கள் இத்தகைய ஹோலியைக் கொண்டாடுவீர்களா? நீங்கள் உங்களின் கைகளை அசைக்கிறீர்கள். உங்களின் கைகளைப் பார்க்கும்போது பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். ஆனால்...... ஓர் ஆனால் உள்ளது. இந்த ஆனால் என்பதைப் பற்றி பாபா உங்களுக்குச் சொல்லட்டுமா? உங்களின் மனதின் கையை அசையுங்கள். உங்களின் பௌதீகக் கைகளை அசைப்பது மிகவும் இலகுவானது. நீங்கள் அதைச் செய்ய வேண்டும் என்பதை உங்களின் மனம் ஏற்றுக் கொண்டால், அது ஏற்கனவே நிறைவேறி விட்டது. பல புதியவர்கள் வந்துள்ளார்கள். சந்திப்பைக் கொண்டாடுவதற்காக முதல் தடவையாக வந்திருப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! இரட்டை வெளிநாட்டவர்களிலும் முதல் தடவை வந்திருப்பவர்கள் இருக்கிறார்கள்.
முதல் தடவை வந்திருக்கும் உங்கள் எல்லோருக்கும் குறிப்பாக உங்களின் பாக்கியத்தை உருவாக்குவதற்காக பாப்தாதா உங்களைப் பாராட்டுகிறார். ஆனால் நீங்கள் இந்தப் பாராட்டுக்களை உங்களின் விழிப்புணர்வில் வைத்திருக்க வேண்டும். உங்கள் எல்லோருக்கும் கடைசியாக வந்து வேகமாகச் செல்லக்கூடிய வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் இறுதிப் பெறுபேறுகள் இன்னமும் வெளிவரவில்லை. இறுதியாக (கடைசி) வருபவர்களும் ஆரம்பத்தில் வந்தவர்களின் பின்னாலேயே நீங்கள் வந்துள்ளீர்கள். அதனால் கடைசியாக வருபவர்களும் வேகமாகச் சென்று முதலாவதாக வர முடியும். உங்களுக்கு அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உங்களால் முன்னே செல்ல முடியும். எப்போதும் இந்த இலட்சியத்தை வைத்திருங்கள்: நான், அதாவது, இந்த ஆத்மாவான நான், வேகமாகச் சென்று முதல் வகுப்பில் வரவேண்டும். ஆம், விஐபி கள் பலர் வந்துள்ளார்கள். உங்களுக்கு விஐபி என்ற பட்டங்கள் உள்ளன. வந்துள்ள விஐபி கள் எல்லோரும் உங்களின் கைகளை உயர உயர்த்துங்கள். (இந்தியா முழுவதிலும் இருந்து வந்துள்ள 150 விருந்தினர்கள் பாப்தாதாவின் முன்னால் அமர்ந்திருந்தார்கள்) உங்கள் வரவு நல்வரவாகட்டும். உங்களின் வீட்டுக்கு வரவேற்கிறேன். நல்வரவுகள். இப்போது,உங்களை அறிமுகப்படுத்துவதற்காக நீங்கள் விஐபிகள் என்று அழைக்கப்படுகிறீர்கள். ஆனால் இப்போது, விஐபிகளில் இருந்து நீங்கள் விவிவிஐபிகள் ஆகவேண்டும். பாருங்கள், தேவதேவியர்கள், உங்களின் உயிரற்ற விக்கிரகங்கள், விவிவிஐபியினர். எனவே, நீங்களும் நிச்சயமாக அந்த மூதாதையரைப் போல் ஆகவேண்டும். குழந்தைகளான உங்களைப் பார்ப்பதில் பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். நீங்கள் ஓர் உறவுமுறைக்குள் வந்துள்ளீர்கள். வந்திருக்கும் விஐபி களான நீங்கள் எழுந்து நில்லுங்கள். அங்கே அமர்ந்திருப்பதில் நீங்கள் களைப்படைந்து இருக்க வேண்டும், அதனால் எழுந்து நில்லுங்கள். அச்சா.
தற்சமயம், பாப்தாதா மீண்டும் மீண்டும் இரண்டு விடயங்களில் உங்களின் கவனத்தை ஈர்க்கிறார்: 1) நிறுத்துதல். ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள். ஒரு புள்ளி வையுங்கள். 2) உங்களின் களஞ்சியத்தைச் சேமியுங்கள். இரண்டும் அத்தியாவசியமானவை. குறிப்பாக மூன்று பொக்கிஷங்களைச் சேமியுங்கள்: 1) உங்களின் முயற்சிகளின் வெகுமதியை, அதாவது, உங்களின் முயற்சிகளின் நடைமுறைப் பலனைச் சேமியுங்கள். 2) சதா திருப்தியாக இருந்து மற்றவர்களையும் திருப்திப்படுத்துங்கள். நீங்கள் மட்டும் திருப்தியாக இருக்காதீர்கள். ஆனால் மற்றவர்களையும் திருப்திப்படுத்துங்கள். அதன் பெறுபேறாக, ஆசீர்வாதங்களைச் சேமியுங்கள். சிலவேளைகளில், சில குழந்தைகள் தமது ஆசீர்வாதக் கணக்குகளில் சேமிக்கிறார்கள். ஆனால், தொடர்ந்து முன்னேறும்போது, அவர்கள் அற்ப விடயங்களால் குழப்பம் அடைந்து தைரியத்தை இழக்கிறார்கள். அதனால் தாம் ஏற்கனவே சேமித்துள்ள பொக்கிஷங்களையும் அழித்து விடுகிறார்கள். எனவே, உங்களின் ஆசீர்வாதக் கணக்கில் சேமியுங்கள். அதைச் செய்வதற்கான வழிமுறை, நீங்களும் திருப்தியாக இருப்பதுடன் மற்றவர்களையும் திருப்திப்படுத்துவதே ஆகும். 3) சேவை செய்வதன் மூலம் நீங்கள் பெறுகின்ற பலனையும் பொக்கிஷங்களையும் சேமியுங்கள். சேவை செய்யும்போது, குறிப்பாக பணிவானதொரு கருவியாக, தூய, மென்மையான வார்த்தைகளுடன் எல்லையற்ற சேவை செய்யுங்கள். ‘இது என்னுடையது அல்ல, ஆனால் பாபாவினுடையது. கரவன்ஹாரான பாபா (மற்றவர்களின் மூலம் எல்லாவற்றையும் செய்பவர்) கரன்ஹாரான (எல்லாவற்றையும் செய்பவர்) என் மூலம் அனைத்தையும் செய்விக்கிறார்’. இது எல்லையற்ற சேவை. இந்த மூன்று கணக்குகளையும் சோதித்துப் பாருங்கள். ‘நான் இந்த மூன்று பொக்கிஷங்களையும் சேமித்துள்ளேனா?’ ‘எனது’ என்ற எந்தவிதமான உணர்வும் நீக்கப்பட வேண்டும். முற்றிலும் ஆசைகளின் அறிவே இல்லாதவர் ஆகுங்கள். இந்த வருடம் நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்களோ என நீங்கள் நினைக்கிறீர்கள். இப்போது இந்தப் பருவகாலம் முடிவிற்கு வருவதால், ஆறு மாதங்களுக்கு நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்? முதலில், உங்களின் கணக்குகளில் சேமியுங்கள். எந்த மூலையிலும் எந்தவிதமான எல்லைக்குட்பட்ட ஆசைகளும் இல்லையே என முழுமையாகச் சோதித்துப் பாருங்கள். ‘நான்’ அல்லது ‘எனது’ என்ற உணர்வு இல்லைத்தானே என்பதைச் சோதித்துப் பாருங்கள். நீங்கள் எடுப்பவர்களா? பாக்கியத்தை அருள்பவர்கள் ஆகுங்கள். எடுப்பவர்களாக அல்ல. பெயர், புகழ், மதிப்பு போன்ற எதுவாயினும் வேண்டும் எனக் கேட்பவர்கள் ஆகாதீர்கள். தானிகள் ஆகுங்கள். பாக்கியத்தை அருள்பவர்கள் ஆகுங்கள்.
இப்போது துன்பம் அதிகளவில் அதிகரிக்கிறது. அது தொடர்ந்தும் அதிகரிக்கும். ஆகவே, மாஸ்ரர் சூரியனாகி உங்களின் அனுபவக் கதிர்களைப் பரப்புங்கள். சூரியன் ஒரே வேளையில் பல வகையான பேறுகளைக் கொடுக்கிறது. அது ஒரு பேற்றினை மட்டும் கொடுப்பதில்லை. அது ஒளியை மட்டும் கொடுப்பதில்லை. அது வலுவையும் கொடுக்கிறது. பல பேறுகளை நீங்கள் பெறச்செய்கிறது. அதேபோல், நீங்கள் எல்லோரும் இந்த ஆறு மாதங்களும் இந்த ஞானத்தின் சூரியர்களாகி சந்தோஷம், சுகம், அமைதி, ஒத்துழைப்பின் கதிர்களைப் பரப்ப வேண்டும். அவர்களுக்கு ஓர் அனுபவத்தைக் கொடுங்கள். மற்றவர்கள் உங்களின் முகங்களைப் பார்த்ததும் அவர்களின் துன்ப அலைகளின் மத்தியில் குறைந்தபட்சம் அவர்களால் புன்னகை செய்யக்கூடியதாக இருக்க வேண்டும். உங்களின் திருஷ்டியின் ஊடாக, அவர்கள் தைரியத்தைப் பெற வேண்டும். அதனால், நீங்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் பாக்கியத்தை அருள்பவர்களாகவும் தபஸ்வி ஆத்மாக்களாகவும் ஆகவேண்டும். தவத்தின் தீச்சுடர்கள் ஏதாவதொரு அனுபவத்தைக் கொடுக்கும் வகையில் தவம் செய்யுங்கள். அவர்கள் வார்த்தைகளை மட்டும் கேட்பதாக இருக்கக்கூடாது. ஆனால் அவர்களுக்கு ஓர் அனுபவத்தையும் வழங்குங்கள். அனுபவம் அமரத்துவமானது. வார்த்தைகள் வெறும் வார்த்தைகளே. அவை குறுகிய காலத்திற்கு விரும்பப்படுகின்றன. ஆனால் அவை நிரந்தரமாக நினைவு செய்யப்படுவதில்லை. ஆகவே, அனுபவத்தின் அதிகாரியாகி, ஓர் அனுபவத்தைக் கொடுங்கள். உங்களுடன் உறவுமுறையில் அல்லது தொடர்பில் வருகின்ற எவருக்கும் உங்களின் ஒத்துழைப்பின் மூலமும் பாப்தாதாவின் இணைப்பின் மூலமும் தைரியத்தையும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் வழங்குங்கள். அவர்களைக் கடினமாக உழைக்கச் செய்யாதீர்கள். நீங்களும் சிரமப்படக் கூடாது, மற்றவர்களையும் சிரமப்பட அனுமதிக்கக் கூடாது. நீங்கள் கருவிகள்தானே? சீரியஸாக இருப்பவர்களும் அந்த ஊக்கத்தையும் உற்சாகத்தையும் உணரும் வகையில் ஊக்கத்தினதும் உற்சாகத்தினதும் அதிர்வலைகளை உருவாக்குங்கள். அவர்களின் மனங்கள் சந்தோஷத்தில் நடனம் ஆட வேண்டும். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கேட்டீர்களா? ஒவ்வோர் இடத்திலும் எத்தனை ஆத்மாக்களை நீங்கள் உறுதி ஆக்கியுள்ளீர்கள் என்ற பெறுபேறுகளை நாங்கள் பார்ப்போம். நீங்கள் எந்தளவிற்கு உறுதியானவர்கள் ஆகியுள்ளீர்கள்? ஏனைய எத்தனை ஆத்மாக்களை நீங்கள் உறுதியானவர்கள் ஆக்கியுள்ளீர்கள்? பாபா சாதாரணமான அட்டவணைகளைப் பார்க்க மாட்டார்: ‘நான் எந்தவிதமான தவறுகளையும் செய்யவில்லை, நான் பொய்களைப் பேசவில்லை, நான் எந்தவிதமான பாவச் செயல்களையும் செய்யவில்லை. ஆனால், எத்தனை ஆத்மாக்களுக்கு நான் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுத்தேன்? எத்தனை பேருக்கும் நான் ஓர் அனுபவத்தையும் திடசங்கற்பத்திற்கான சாவியையும் கொடுத்தேன்?’ இது ஓகேயா? நீங்கள் அதைச் செய்ய வேண்டும்தானே? நீங்கள் அதைச் செய்வீர்கள் என பாப்தாதா ஏன் கூற வேண்டும்? இல்லை, நீங்கள் அதைச் செய்யவே வேண்டும். நீங்கள் இதைச் செய்யாவிட்டால், யார்தான் செய்வார்கள்? உங்களுக்குப் பின்னால் வருபவர்களா? நீங்கள் தந்தையிடம் இருந்து ஒவ்வொரு கல்பமும் உரிமையைப் பெற்றுள்ளீர்கள். இப்போதும் அதைப் பெறுகிறீர்கள். ஒவ்வொரு கல்பமும் அதைப் பெறுவீர்கள். இத்தகைய திடசங்கற்பமான குழந்தைகளின் ஒன்றுகூடலை பாப்தாதா நிச்சயமாகப் பார்க்கப் போகிறார். இது ஓகேயா? நீங்கள் அப்படி ஆகப் போகிறீர்கள் என்றால் உங்களின் கைகளை உயர்த்துங்கள். உங்களின் மனதின் கைகளை உயர்த்துங்கள். உங்களின் திடசங்கற்பமான நம்பிக்கைக் கரங்களை உயர்த்துங்கள். நீங்கள் எல்லோரும் இதில் சித்தி அடைந்துள்ளீர்கள். நீங்கள் சித்தி அடைந்துள்ளீர்கள்தானே? அச்சா.
இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் குழந்தைகளான உங்கள் எல்லோருக்கும் வெகு தொலைவில் அமர்ந்திருந்தாலும் இறைவனின் அன்பை அனுபவிக்கும் குழந்தைகளுக்கும் சதா புனிதமானவர்களாக இருக்கும், அதாவது, தூய்மையின் அத்திவாரத்தை உறுதியாக்கிய குழந்தைகளுக்கும் தமது கனவுகளிலேனும் தூய்மையின்மையின் சுவடுகள் எவற்றில் இருந்தும் தொலைவில் இருக்கும் மகாவீர் மற்றும் மகாவீரினிக் குழந்தைகளுக்கும் ஒவ்வொரு கணமும் தமது சேமிப்புக் கணக்குள் அனைத்தையும் சேமிக்கும் சம்பூரணமான, முழுமையான குழந்தைகளுக்கும் தந்தைக்குச் சமமாக இருக்கும் குழந்தைகளுக்கும் சதா திருப்தி இரத்தினங்களாக இருப்பதுடன் தாமும் திருப்தியாக இருந்து மற்றவர்களையும் திருப்திப்படுத்துபவர்களுக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவும் ஆசீர்வாதங்களும் நமஸ்தேயும்.
தாதிகளிடம்: தாதிகள் குருபாய்கள் (குருவுக்கு அடுத்தபடியாக வரிசையில் இருப்பவர்). எனவே, பாபாவிற்குப் பக்கத்தில் இருங்கள். சகோதரர்கள் ஒன்றாகவே அமர்வார்கள். இது நல்லது. பாப்தாதா ஒவ்வொரு நாளும் அன்புடன் உங்களுக்கு மசாஜ் செய்கிறார். நீங்கள் கருவிகள்தானே? இந்த மசாஜ் உங்களை அசைய வைக்கிறது. இது நல்லது. உங்கள் எல்லோருடைய உதாரணங்களைப் பார்க்கும்போது, எல்லோரும் தைரியத்தைப் பெறுகிறார்கள். சேவை செய்வதிலும் கருவியாக இருக்கும் உணர்வுடன் கருவி தாதிகளைப் போல் முன்னேறுகிறார்கள். இது நல்லது. கரவன்ஹாரே உங்களைச் செயல்பட வைக்கிறார், எல்லோரையும் அசையச் செய்கின்ற ஒரேயொருவர் உங்களை அசைய வைக்கிறார் என்ற உங்கள் எல்லோருடைய உறுதியான நம்பிக்கை - கருவியாக இருக்கும் இந்த உணர்வே சேவை இடம்பெறச் செய்கிறது. ‘நான்’ என்ற உணர்வு ஏதாவது இருக்கிறதா? ‘நான்’ என்ற உணர்வு ஏதாவது உள்ளதா? இது நல்லது. நீங்கள் முழு உலகின் முன்னாலும் கருவி உதாரணங்கள், அப்படித்தானே? எனவே, பாப்தாதா குறிப்பாகத் தொடர்ந்தும் அன்பையும் ஆசீர்வாதங்களையும் வழங்குகிறார். அச்சா. பலர் வந்திருப்பது நல்லதல்லவா? கடைசிச் சந்திப்பு வேகமாக நடந்துள்ளது.
பிரதானமான இரட்டை வெளிநாட்டு ஆசிரியர்களிடம்: நீங்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து எல்லோரையும் பராமரிப்பதற்குக் கருவிகள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் எல்லோரும் மிக நல்ல பாகத்தை நடிக்கிறீர்கள். நீங்களும் புத்துணர்ச்சி அடைவதுடன் மற்றவர்களையும் புத்துணர்ச்சி ஆக்குகிறீர்கள். நீங்கள் நல்ல நிகழ்ச்சிகளைச் செய்கிறீர்கள். பாப்தாதா அவற்றை விரும்புகிறார். நீங்கள் புத்துணர்ச்சி பெறும்போது மட்டுமே உங்களால் மற்றவர்களைப் புத்துணர்ச்சி ஆக்க முடியும். மிகவும் நல்லது. நீங்கள் எல்லோரும் மிக நன்றாகப் புத்துணர்ச்சி பெற்றீர்கள். பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். மிகவும் நல்லது. ஓம் சாந்தி.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் ஞானம் நிறைந்த ஸ்திதியால் பிரதிகூலமான சூழ்நிலைகளையும் வெற்றி கொள்ளும் அங்கதனைப் போன்ற ஆட்ட, அசைக்க முடியாதவர் ஆகுவீர்களாக.இராவண இராச்சியத்தில், எந்தவொரு பிரதிகூலமான சூழ்நிலையோ அல்லது நபரோ உங்களைச் சிறிதளவேனும் உங்களின் எண்ணங்களிலேனும் அசைக்க முடியாது. இந்த முறையில் ஆட்ட, அசைக்க முடியாதவராக இருக்கும் ஆசீர்வாதத்தைப் பெற்றவர் ஆகுங்கள். ஏனென்றால், வருகின்ற எந்தவொரு தடையும் உங்களை விழச் செய்வதற்காக வருவதில்லை. ஆனால் உங்களைப் பலசாலி ஆக்குவதற்காகவே வருகின்றன. ஞானம் நிறைந்தவராக இருப்பவர்கள் ஒருபோதும் எந்தவொரு பரீட்சையைப் பார்த்தாலும் குழப்பம் அடைய மாட்டார்கள். மாயையால் எந்தவொரு வடிவத்திலும் வர முடியும். ஆனால் நீங்கள் உங்களின் யோக அக்கினியை ஏற்றி வைத்து, உங்களின் ஞானம் நிறைந்த ஸ்திதியில் இருங்கள். அப்போது தடைகள் அனைத்தும் இயல்பாகவே முடிந்துவிடும். அப்போது உங்களால் ஆட்ட, அசைக்க முடியாத ஸ்திதியில் ஸ்திரமாக இருக்க முடியும்.
சுலோகம்:
தூய எண்ணங்களின் பொக்கிஷங்களை நீங்கள் சேமித்திருக்கும்போது, உங்களின் நேரம் வீணான எண்ணங்களால் வீணாக்கப்பட மாட்டாது.அவ்யக்த சமிக்கை: ஆன்மீக இராஜரீகம் மற்றும் தூய்மையின் ஆளுமையைக் கடைப்பிடியுங்கள்.
தூய்மையின் ஆளுமையின் அடிப்படையில், தந்தை பிரம்மா ஆதிதேவராகவும் முதல் இளவரசராகவும் ஆகினார். அதேபோன்று, நீங்கள் தந்தையைப் பின்பற்ற வேண்டும். அத்துடன் முதலாம் இலக்கத்தவராக இருக்கும் ஆளுமையைக் கொண்டவர்களின் பட்டியலிலும் வரவேண்டும். ஏனென்றால், பிராமணப் பிறப்பின் சம்ஸ்காரங்கள் தூய்மையானவை. உங்களின் பெருந்தன்மையும் மகத்துவமும் தூய்மையை அடிப்படையாகக் கொண்டவை.