18.06.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்வதற்கு, நீங்கள் யாருடைய குழந்தைகள் என்ற விழிப்புணர்வைச் சதா பேணுங்கள். நீங்கள் தந்தையை மறந்தால், உங்கள் சந்தோஷமும் மறைந்து விடும்.

கேள்வி:
எந்தக் குழந்தைகள் தந்தையைக் கண்டுகொண்டதால் நிரந்தர சந்தோஷத்துடன் உள்ளனர்?

பதில்:
தந்தையுடன் அனைத்து உறவுமுறைகளையும் ஏற்படுத்துகின்ற குழந்தைகளும், எந்தச் சரீரதாரிகளையும் நினைவு செய்யாமல் ஒரேயொரு தந்தையின் நினைவில் நிலைத்திருப்பதற்கு முயற்சி செய்கின்ற குழந்தைகளும் நிரந்தரமான சந்தோஷத்துடன் இருக்கின்றார்கள். சரீரதாரிகளின் நினைவு இருக்குமாயின், நீங்கள் பெருமளவில் அழ நேரிடும். உலக அதிபதிகளாக இருப்பவர்கள், ஒருபொழுதும் அழ மாட்டார்கள்.

பாடல்:
உங்கள் குழந்தைப் பருவ நாட்களை மறந்து விடாதீர்கள்.

ஓம் சாந்தி.
தந்தை கூறுகிறார்: இனிமையான குழந்தைகளே, நீங்கள் எல்லையற்ற தந்தையின் குழந்தைகள் என்பதை மறந்து விடாதீர்கள். நீங்கள் இதை மறந்தீர்களே ஆனால், அழுவதுடன், உங்கள் புத்தியும் அழுக்கான உலகை நோக்கி ஈர்க்கப்படும். தந்தையின் நினைவைக் கொண்டிருப்பதன் மூலம் நீங்கள் அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்கிறீர்கள். நீங்கள் தந்தையை மறப்பதனால், இந்தச் சந்தோஷம் மறைந்து விடுகிறது. நீங்கள் பாபாவின் குழந்தைகள் என்பதை எப்பொழுதும் நினைவில் வைத்திருங்கள். இல்லாவிடின், நீங்கள் அழுவீர்கள். ஏனைய அனைவரும் கடவுளின் குழந்தைகள். அனைவரும் கூறுகின்றனர்: ஓ பாபா! ஓ பரமாத்மாவாகிய பரமதந்தையே, எங்களைக் காப்பாற்றுங்கள்! எவ்வாறாயினும், எப்பொழுது தந்தையிடம் இருந்து நீங்கள் பாதுகாப்பைப் பெறுவீர்கள் என்பது எவருக்கும் தெரியாது. எப்பொழுது நீங்கள் தந்தையிடம் இருந்து முக்தியையும், ஜீவன்முக்தியையும் பெறுகின்றீர்கள் என்பது சாதுக்கள் அல்லது புனிதர்கள் எவருக்கும் தெரியாது, ஏனெனில் கடவுள் ஒவ்வொரு துணிக்கையிலும் உள்ளார் என அவர்கள் கூறியுள்ளனர். குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது எல்லையற்ற தந்தையைத் தெரியும். அவரே அதியன்பிற்கினிய தந்தை. வேறு எவரும் அவரைப் போல அன்பானவர் இல்லை. அத்தகைய தந்தையை அறியாமல் இருப்பது ஒரு பெரும் தவறாகும். ஏன் மக்கள் சிவனின் பிறந்தநாளைக் கொண்டாடுகின்றனர்? அவர் யார்? எவருக்கும் இது தெரியாது. தந்தை கூறுகிறார்: நீங்கள் மிகவும் விவேகம் அற்றவர்கள் ஆகியுள்ளீர்கள்! இராவணனாகிய மாயை உங்களை எவ்வாறாக்கி உள்ளாள் எனப் பாருங்கள். இது எனது பிறப்பிடம் என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது தெரியும். நான் ஒவ்வொரு 5000 வருடங்களும் ஒருமுறை வருகின்றேன். கலியுகம் முடிவுக்கு வருகையில், 40000 வருடங்களுக்குப் பின்னர் அவர் வருவார் என அவர்கள் கூறுகின்றனர். திரிமூர்த்தியின் படம் காட்டப்பட்டுள்ளது. அவர்கள் ஒரு வீதிக்கு, திரிமூர்த்தி வீதி எனவும் பெயரிட்டுள்ளனர். ஆனால் எவருக்கும் படத்திலுள்ள பிரம்மா, விஷ்ணு, சங்கரரின் மூன்று ரூபங்களும் தெரியாது. பிரம்மா என்ன செய்தார்? விஷ்ணுவும் சங்கரும் என்ன செய்கின்றார்கள்? அவர்கள் எங்கே வசிக்கின்றனர்? மக்களுக்கு எதுவும் தெரியாது; அவர்கள் முழுமையான இருளில் இருக்கின்றனர். தந்தையே படைப்பவர். அவரது இந்தப் படைப்பு மிகவும் பெரியது! நாடகம் எல்லையற்றது, அதில் எல்லையற்ற எண்ணிக்கையிலான மனிதர்கள் உள்ளனர். 5000 வருடங்களுக்கு முன்னர் சத்தியயுகம் இருந்த பொழுது, இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமாக பாரதம் இருந்த பொழுது, அங்கு வேறெந்த இராச்சியமும் இருக்கவில்லை. அவர்கள் கூறுகின்றனர்: இறைவி ஸ்ரீ இலக்ஷ்மியும், இறைவர் ஸ்ரீ நாராயணரும். அவர்கள் இராமர் சீதையையும், இறைவர் இராமர், இறைவி சீதா எனக் குறிப்பிடுகின்றனர். இறைவர் நாராயணரும், இறைவி இலக்ஷ்மியும் எங்கிருந்து வந்தனர்? அவர்கள் கடந்த காலத்தில் ஆட்சிபுரிந்தனர். ஆனால், ஒருவருக்கேனும் அவர்களது வாழ்க்கை வரலாறு தெரியாது. கடவுள் துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவர் என அவர்கள் தொடர்ந்தும் பாடுகிறார்கள். ஆனால், எவ்வாறு அவர் துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவராக உள்ளார் என்பது எவரது புத்தியிலும் பதிவதில்லை. அவர் அனைவருக்கும் என்ன சந்தோஷத்தைக் கொடுக்கிறார்? அனைவரது துன்பத்தையும் எப்பொழுது அவர் நீக்கினார்? அவர்களுக்கு எதுவும் தெரியாது. குழந்தைகளாகிய நீங்கள் இறைவி இலக்ஷ்மியும், இறைவர் நாராயணரும் போல் ஆகுவதற்கு இங்கு இப்பொழுது இராஜயோகத்தைக் கற்கிறீர்கள். இறைவர் இராமரும் இறைவி சீதாவும் இங்கேயே உருவாக்கப்படுகிறார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். சத்தியயுகத்தில் நீங்கள் உங்கள் 8 பிறவிகளையும் பூர்த்திசெய்து, பின்னர் இராமர், சீதையின் இராச்சியத்திற்குச் செல்கிறீர்கள். இங்கு நீங்கள் 21 பிறவிகளுக்கு உங்கள் எல்லையற்ற இராச்சியத்தை ஸ்தாபிக்கிறீர்கள். தேவ தேவிகளாகிய நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள். சுவர்க்கம் மேலே ஆகாயத்தில் இல்லை. எவருக்கும் இது தெரியாது. அவர்கள் முற்றாகச் சீரழிந்த புத்தியைக் கொண்டுள்ளனர். அவர்கள் கூறுகின்றனர்: இன்னார் சுவர்க்கத்திற்குச் சென்று விட்டார். எவ்வாறாயினும் அவர்கள் எதனையும் புரிந்து கொள்வதில்லை. அச்சா, கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள் அனைவரும் சுவர்க்கத்திற்குச் செல்வார்களா? அவர்கள் பின்னர் வந்து, தங்களது சொந்தச் சமயத்தை ஸ்தாபிக்கிறார்கள். ஆகவே எவ்வாறு அவர்களால் சுவர்க்கத்திற்குச் செல்ல முடியும்? சுவர்க்கம் என்று குறிப்பிடப்படுவது என்ன என்பதே அவர்களுக்குத் தெரியாது. தாம் ஒளியினுள் கலப்பதாகச் சந்நியாசிகள் கூறுகின்றனர். தாம் நிர்வாணா தாமத்திற்குச் செல்வதாகவும், அங்கு நிர்வாணாவில் ஓர் உலகம் இருப்பதாகவும் சிலர் கூறுகின்றனர். அது ஒரு வசிப்பிடம் ஆகும்; ஒளியானது ஒளியினுள் கலப்பது என்ற கேள்விக்கே இடமில்லை. அவர்கள் ஒளியினுள் கலப்பதாக இருந்தால், ஆத்மாக்கள் அழிவதுடன், முழு நாடகமும் முடிவடைந்து விடும். இந்த நாடகத்தில் இருந்து எந்த ஆத்மாவாலும் விடுபட முடியாது. எவராலும் அநாதியான முக்தியைப் பெற முடியாது. எவருமே பாடலின் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதும் இல்லை, ஜீவன்முக்தியின் அர்த்தத்தையும் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் ஆத்மா என்பதன் அர்த்தத்தையோ அல்லது பரமாத்மா என்பதன் அர்த்தத்தையோ புரிந்து கொள்வதும் இல்லை. தந்தை கூறுகிறார்: உங்கள் முகங்கள் மனிதர்களைப் போன்றவை. அவை தேவர்களைப் போன்றவை. சத்திய யுக ஆரம்பத்தில் தேவர்கள் இருந்தார்கள். அவர்களது இராச்சியம் 2500 வருடங்கள் நீடித்தன. பின்னர், மிகுதி 2500 வருடங்களில், ஏனைய அனைத்துச் சமயங்களும் வந்தன. சக்கரத்தின் கால எல்லை 5000 வருடங்கள் எனக் கூறுவதற்குப் பதிலாக, அவர்கள் கல்ப விருட்சத்தின் கால எல்லையை நூறாயிரக்கணக்கான வருடங்கள் எனக் கூறுகின்றனர். இருப்பினும், நீங்கள் விளங்கப்படுத்துவதைப் புரிந்து கொள்வதற்கு அவர்கள் வரவும் மாட்டார்கள். முன்னைய கல்பத்தில் வந்து இவ்விடயங்களைப் புரிந்து கொண்டவர்களே, மீண்டும் வருவார்கள். முதலில் அது தங்கள் வீட்டையும், குடும்பத்தையும் விடுத்துக் காட்டுக்குச் செல்வதால், சந்நியாசிகள் ஏற்றுக் கொள்கின்ற, எல்லைக்கு உட்பட்ட துறவறம் என்பதை விளங்கப்படுத்துங்கள். முதலில் அவர்கள் சதோபிரதானாக இருந்தனர். இப்பொழுது அவர்கள் தமோபிரதானாக ஆகியுள்ளதுடன், காடுகளில் இருந்து திரும்பி வந்து, பாரிய மாளிகைகளைக் கட்டுகின்றனர். அந்தச் சந்நியாசிகள் தங்கள் தூய்மையின் அடிப்படையில் நிச்சயமாகப் பாரதத்திற்கு ஆதாரத்தை வழங்கி உள்ளனர். அவர்கள் பாரதத்திற்குச் சேவை செய்துள்ளனர். துறவற சமயம் இல்லை என்றால் பாரதம் முழுமையாக விகாரத்தினால் எரிந்து, முழுமையாகவே தூய்மை அற்றதாகி இருந்திருக்கும். இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. அவர்கள் முதலில் தூய்மைச் சக்தியைக் கொண்டிருந்ததால், பாரதத்திற்கு அதன் மூலம்; ஆதாரத்தை வழங்கினார்கள். பாரதம் தேவர்களின் இராச்சியமாக இருந்த பொழுது, அது செல்வம் மிக்கதாக இருந்தது. அவர்கள் வைரங்கள் பதிக்கப்பட்ட பாரிய மாளிகைகளைக் கொண்டிருந்தனர். அவை அனைத்தும் எங்கு சென்றன? அவை அனைத்தும் கீழே சென்றன. இலங்கையும், துவாரகையும் கடலுக்குக் கீழ் மூழ்கியதாக அவர்கள் கூறுகின்றனர். அவை இப்பொழுது இல்லை. தங்க மாளிகைகள் இருந்தன. அவர்களால் ஆலயங்களில் வைரங்களைப் பதிக்க முடியுமாயின், அவர்கள் எவற்றைத்தான் அங்கு கொண்டிருக்காமல் இருந்திருப்பார்கள்? குழந்தைகளாகிய நீங்கள் அதிக சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும்! பாபா மீண்டும் ஒருமுறை வந்து விட்டார். அவர் கூறுகிறார்: தந்தையை நினைவு செய்யுங்கள்! உங்கள் பாவங்கள் அழிக்கப்படுவதற்குக் காரணமாக இருக்கின்ற, ஒரேயொருவரையே நீங்கள் நினைவுசெய்ய வேண்டும். ஆனால் நீங்கள் இதை மறந்து, சரீரதாரிகளை நினைவு செய்கின்றீர்கள். சரீரதாரிகளை நினைவு செய்வதனால் நன்மை இல்லை. தந்தை கூறுகிறார்: சதா என்னை மட்டும் நினைவு செய்யுங்கள்! சரீரதாரிகளை நினைவு செய்யாதீர்கள். உங்கள் தாய் இறந்தாலும் அல்வா சாப்பிடுங்கள். ஒரேயொரு தந்தையின் நினைவைக் கொண்டிருப்பதனாலேயே, ஒரு வருமானம் சம்பாதிக்கப்படுகிறது. நாங்கள் சிவபாபாவின் குழந்தைகள், அவரிடமிருந்து நாங்கள் எங்களின் ஆஸ்தியைக் கோரிக் கொள்ள வேண்டும். நீங்கள் இந் நேரத்தில் தந்தையை நினைவு செய்யாவிடின், பெருமளவில் மனம் வருந்தி, அழ நேரிடும். உலக அதிபதிகளாக இருக்கின்றவர்களுக்கு அழ வேண்டிய தேவை என்ன இருக்கிறது? நீங்கள் தந்தையை மறக்கும் பொழுதே, மாயை உங்களை அடிக்கிறாள். இதனாலேயே பாபா உங்களுக்கு மீண்டும் மீண்டும் விளங்கப்படுத்துகிறார்: தந்தையையும், ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள்! அமரத்துவப் பிரபு அமர்ந்திருந்து, பார்வதிக்கு மாத்திரம் அமரத்துவக் கதையைக் கூறியிருக்க மாட்டார்; நிச்சயமாக அங்கு பலர் இருந்திருக்க வேண்டும். தந்தை மனிதர்கள் அனைவருக்கும் விளங்கப்படுத்துகிறார்: இப்பொழுது, தூய்மை அற்றவர்கள் ஆகாதீர்கள்! இந்த இறுதிப் பிறவியில் தூய்மை ஆகுங்கள்! சுவர்க்கத்தில் விகாரங்கள் இல்லை. சுவர்க்கத்திலும் விகாரங்கள் இருப்பின், சுவர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையிலான வேறுபாடு என்ன? மக்கள் தேவர்களின் புகழைப் பாடுகிறார்கள்: நீங்கள் தெய்வீகக் குணங்கள் அனைத்தும் நிறைந்தவர்கள், 16 சுவர்க்கக் கலைகளும் நிரம்பியவர்கள். கடவுள் வந்து அனைவரையும் இறைவர், இறைவிகள் ஆக்குகின்றார். கடவுளைத் தவிர வேறெவராலும் உங்களை அவ்வாறு ஆக்க முடியாது. ஒரேயொரு கடவுளே உள்ளார். இறைவர், இறைவிகளின் இராச்சியம் நினைவுகூரப்படுகிறது. அங்கு அதே அரசர், அரசி, பிரஜைகளே இருக்கின்றனர். ஆனால் அவர்கள் இறைவர், இறைவிகள் என்று அழைக்கப்படுவதில்லை. அது ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் என அழைக்கப்படுகிறது. எவருக்கும் இது தெரியாது. தந்தை இந்த ஆத்மாவிற்கும் (பிரம்மா) விளங்கப்படுத்துகிறார். இரண்டு ஆத்மாக்கள் உள்ளனர்: ஒருவர் தந்தை, மற்றவர் தாதா. ஓர் ஆத்மா 84 பிறவிகளை எடுக்கின்றார், மற்றவர் மறுபிறப்பிற்கு அப்பாற்பட்டவர். தந்தை ஒருபொழுதும் மறுபிறப்பு எடுப்பதில்லை. முழு உலகையும் தூய்மை ஆக்குவதற்காக அவர் ஒரு தடவை மாத்திரமே வந்து, எங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறார். தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: நான் இவரினுள் பிரவேசிக்கிறேன். இவர் 84 பிறவிகளை அனுபவம் செய்துள்ளார். இப்பொழுது இது இவரது பல பிறவிகளின் இறுதிப் பிறவியாகும். நான் அசரீரியானவர். ஆகவே குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்க நான் எவ்வாறு வருகின்றேன்? தூண்டுதல் மூலம் எதுவும் இடம்பெற மாட்டாது. கடவுள் ஸ்ரீகிருஷ்ணரின் வாசகங்கள் இருக்க முடியாது. அவர் எவ்வாறு வர முடியும்? அவர் 16 சுவர்க்கக் கலைகள் நிறைந்த, சத்தியயுகத்து இளவரசர். பின்னர் திரேதா யுகத்தில் 14 கலைகள் இருக்கின்றன. ஆகவே பின்னர் ஏன் அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரைத் துவாபர யுகத்தில் காட்டியுள்ளனர்? அவர் முதலில் வர வேண்டும். தந்தை விளங்கப்படுத்துகிறார்: முதலில் தந்தையை நினைவு செய்யுங்கள், இல்லாவிடின் மாயை உங்களை மிகவும் பலமாக அடிப்பாள். நீங்கள் தொட்டதும் சுருங்கி விடுகின்ற, “தொட்டாற் சுருங்கிச் செடி” உள்ளது. உங்கள் நிலைமையும் அவ்வாறே ஆகுகிறது. நீங்கள் தந்தையை நினைவு செய்யாத பொழுது, அனைத்தும் முடிவடைந்து விடுகின்றது. “உங்கள் குழந்தைப் பருவ நாட்களை மறந்து விடாதீர்கள்” என்று நீங்கள் பாடலில் செவிமடுத்தீர்கள். நீங்கள் தந்தையை மறந்தால், ஏதோவொரு வகையில் பாதிக்கப்படுவீர்கள். தந்தை கூறுகிறார்: நீங்கள் எனது குழந்தைகள். உங்கள் சரீரங்கள் நஞ்சினால் உருவாக்கப்பட்டுள்ளன, அவர்கள் உங்களுடைய சரீரங்களின் பௌதீகப் பெற்றோர்கள். அவர் அசரீரியான தந்தையும், இவர் ஆன்மீகத் (அலௌகீக) தந்தையும் ஆவர். இவர் எல்லைக்கு உட்பட்டவராக இருந்தார், இப்பொழுது எல்லையற்றவர் ஆகியுள்ளார். பாருங்கள், இந்த லௌகீக மகளும் (தாதி நிர்மல் சாந்தா) இங்கே அமர்ந்திருக்கிறார். லௌகீகமானவரும், ஆன்மீகமானவரும், அப்பாலுள்ளவரும் இருக்கின்றார்கள். சிவபாபாவிற்கு சகோதர, சகோதரிகள் எவரும் கிடையாது. அத்துடன் அவருக்கு லௌகீகமானவரும், ஆன்மீகமானவரும், அப்பாலுள்ளவரும் கிடையாது. இதில் அதிகளவு வேறுபாடுள்ளது! ஒரேயொரு தந்தைக்குச் சொந்தம் ஆகுதல் என்பது உங்கள் மாமியார் வீட்டிற்குப் போவதைப் போன்றதல்ல! அத்தகைய தந்தையுடன் அனைத்து உறவுமுறைகளையும் ஏற்படுத்துவதற்குக் காலம் எடுக்கிறது. சிவபாபாவின் நினைவில் நிலைத்து இருப்பதற்குப் பெரும் முயற்சி தேவைப்படுகிறது. 50 வருடங்களாக இருக்கின்ற பொழுதும், முழு நாளும் சிவபாபாவின் நினைவில் நிலைத்திராத, அத்தகைய குழந்தைகளும் உள்ளனர். ஏனைய அனைவரையும் மறந்து, ஒரேயொருவரை மாத்திரம் நினைவு செய்வதற்குப் பெருமளவு முயற்சி எடுக்கிறது. சிலர் பாபாவை ஒரு சதவீதம் நினைவு செய்கின்றனர். சிலர் அவரை இரண்டு சதவீதம் நினைவு செய்கின்றனர், சிலரோ அரிதாகவே அரை சதவீதமாவது நினைவு செய்கின்றனர். இது மிக உயர்ந்த இலக்காகும். தந்தை கூறுகிறார்: உங்கள் குழந்தைப் பருவத்தை மறந்து விடாதீர்கள். நீங்கள் சுவர்க்க ஆஸ்தியைத் தந்தையிடம் இருந்து பெறுகின்றீர்கள். புதிய உலகிற்குச் செல்வதற்காக நீங்கள் உயிருடன் மரணித்து, தந்தைக்கு உரியவர்கள் ஆகுவதற்கு வந்துள்ளீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். ஆகவே, நீங்கள் நிரந்தர சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். ஓ! நாங்கள் இரட்டைக் கிரீடம் அணிபவர்கள் ஆகுவோம்! சத்திய யுகத்தில் தேவர்கள் 16 கலைகள் நிறைந்தவர்கள், பின்னர் 14 கலைகள் நிறைந்தவர்கள் என்று கூறப்படுவது ஏன் என்பதை மக்கள் அறியார்கள். அவர்களுக்கு முற்றாகவே எதுவும் தெரியாது. பக்தி மார்க்கத்துச் சமயநூல்கள் மீண்டும் உருவாக்கப்படும். ஹத்தயோகமும், யாத்திரைகள் போன்றனவும் மீண்டும் தோன்றும், ஆனால் அவற்றினூடாக என்ன இடம்பெறும்? அவற்றின் மூலம் எவராவது சுவர்க்கத்திற்குச் செல்வார்களா? இல்லை! மக்கள் மந்திரசக்தியினால் பல விடயங்களைச் செய்கின்றனர். மந்திரசக்தியைக் கொண்ட பலர் உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் அவர்களைத் துரத்திச் செல்கின்றனர். அவர்கள் கைக் கடிகாரங்களையும், வேறு பொருட்களையும் மந்திரசக்தியினால் தோன்றச் செய்கின்றனர். அவை அனைத்தும் தற்காலிகமானதே என அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அதற்குப் பெருமளவு முயற்சி செய்யப்பட வேண்டும். மந்திரசக்தியைக் கற்பதற்குப் புத்தகங்களும் உள்ளன. நூறாயிரக்கணக்கான மக்கள் அவர்களைத் துரத்திச் செல்கின்றனர். நீங்கள் பாபாவிடம் இருந்து உங்கள் சுவர்க்க ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். நீங்கள் உங்களுடைய கண்களால் பார்க்கின்ற எதுவும் எஞ்சப் போவதில்லை. தந்தை விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் சரீரமற்றவர்களாக வந்து, சரீரங்களினூடாக உங்கள் பாகங்களை நடித்தீர்கள். உங்களுக்கு 8.4 மில்லியன் பிறவிகளின் கணக்கைக் கூறவேண்டுமாயின், அதற்கு 12 மாதங்கள் எடுக்கும். அது அசாத்தியம்! உங்களுக்கு 84 பிறவிகளின் கணக்கைக் கூறுவது மிகவும் இலகுவானது. நீங்கள் தொடர்ந்தும் 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றுகிறீர்கள். சூரிய வம்சம் உள்ளபொழுது, சந்திர வம்சம் இருப்பதில்லை. சூரிய வம்சம் முடிவுக்கு வரும்பொழுதே, சந்திர வம்சம் தோன்றுகிறது. நீங்கள் இப்பொழுது பிராமண குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், பின்னர் நீங்கள் தேவ வம்சத்தினர் ஆகுவீர்கள் என்பதுவும் உங்களுக்கு இப்பொழுது தெரியும். இதனாலேயே நீங்கள் இந்தக் கல்வியைக் கற்கிறீர்கள். பின்னர் ஏணியில் கீழிறங்கியதும் நீங்கள் வைசியர்களாகவும், சூத்திர குலத்தினராகவும் ஆகுகின்றீர்கள். நீங்கள் இப்பொழுது உங்கள் 84 பிறவிகளையும் நினைவு செய்கிறீர்கள். நீங்கள் இந்தச் சக்கரத்தையும் நினைவுசெய்ய வேண்டும். தந்தையை நினைவு செய்வதனால், நீங்கள் சதா ஆரோக்கியமாகவும், சதா செல்வந்தர்களாகவும் ஆகுவதுடன், உங்கள் பாவங்களும் அழிக்கப்படும். சக்கரத்தைத் தெரிந்து கொள்வதனால், நீங்கள் பூகோளத்தை ஆட்சிசெய்பவர்கள் ஆகுகின்றீர்கள். இந்தப் பழைய உலகம் சுடுகாடாகப் போகின்றது என்பது உங்களுக்குத் தெரியும்; எதுவும் எஞ்ச மாட்டாது. அனைத்தும் முடிவடைந்து விடும். “இராமர் சென்றார், இராவணனும் சென்றான்” எனக் கூறப்பட்டுள்ளது. சத்தியயுகத்தில் இராமரின் குடும்பம் மிகவும் சிறியதாக இருக்கும்! இராவணனது குடும்பம் இப்பொழுது மிகவும்; பெரியதாக உள்ளது! இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகிறது என்பது குழந்தைகளான உங்களுக்குத் தெரியும். முதலில், அனைத்திற்கும் சில முயற்சிகள் செய்யப்பட வேண்டும். தந்தை உங்களை முயற்சி செய்யத் தூண்டுகிறார்;: குழந்தைகளே, என்னை நினைவு செய்யுங்கள்! உங்களுக்கு எல்லையற்ற சுவர்க்க இராச்சியத்தைக் கொடுக்கின்ற தந்தையை நீங்கள் நினைவுசெய்ய மாட்டீர்களா? நீங்களே சுவர்க்க அதிபதிகளாக இருந்தீர்கள் என்பதைத் தந்தை உங்களுக்கு நினைவூட்டுகிறார். இப்பொழுது மீண்டும் ஒருமுறை முயற்சி செய்து, சுவர்க்க அதிபதிகள் ஆகுங்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. எந்தச் சூழ்நிலையிலும் “தொட்டாற்சுருங்கிச் செடி” போல் ஆகாதீர்கள். உங்களது இறை குழந்தைப் பருவத்தை மறந்து, வாடி விடாதீர்கள். உங்கள் கண்களால் பார்க்கின்ற எவற்றையும் பார்த்தும் பாராதிருங்கள்.

2. நீங்கள் ஒரேயொரு தந்தையின் நினைவைக் கொண்டிருப்பதாலேயே, ஒரு வருமானத்தைச் சம்பாதிக்கிறீர்கள். ஆகவே, சரீரதாரிகளை நினைவு செய்வதால், அழாதீர்கள். தந்தையையும், ஆஸ்தியையும் நினைவுசெய்து, உலக இராச்சியத்தைக் கோருங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் மேன்மையான வழிகாட்டல்களைப் பின்பற்றுவதன் அடிப்படையில் சக்தி சொரூபமாகி, மாயையின் சகவாசத்தின் எந்தவிதமான ஆதிக்கத்திற்கும் அப்பாற்பட்டு இருப்பீர்களாக.

சில குழந்தைகள் முறைப்பாடு செய்கிறார்கள் - தமது உறவினர்கள் தாம் செய்வதைக் கேட்பதில்லை, தமக்கு நல்ல சகவாசம் இல்லை, இதனாலேயே தம்மால் சக்திசாலிகள் ஆக முடியவில்லை. எவ்வாறாயினும், நீங்கள் இந்த ஞானத்தின் சொரூபமாக இருப்பதுடன் அதனால் சக்தி சொரூபமாகவும் ஆகுகின்ற ஆசீர்வாதத்தை நீங்கள் பெற்றுள்ளீர்கள். ஆகவே, மேன்மையான வழிகாட்டல்களைப் பின்பற்றுவதன் அடிப்படையில் உங்களின் ஸ்திதியை அசைக்க முடியாததாக ஆக்குங்கள். ஒவ்வொருவரின் பாகத்தையும் ஒரு பற்றற்ற பார்வையாளராக அவதானியுங்கள். உங்களின் சதோகுணி பாகத்தை நடிப்பதில் ஸ்திரமாக இருங்கள். சதா தந்தையின் சகவாசத்தில் இருங்கள். அப்போது நீங்கள் தமோகுணி ஆத்மாக்களின் சகவாசத்தின் நிறத்தால் நிறமூட்டப்பட மாட்டீர்கள்.

சுலோகம்:
ஒரு கர்மயோகி என்பவர் செயல்கள் என்ற கல்ப விருட்சத்தின் கிளையில் அமர்ந்திருந்த வண்ணம் செயல்களைச் செய்யும்போது அப்பாற்பட்டு இருப்பவர் ஆவார்.

அவ்யக்த சமிக்கை: சதா முகமலர்ச்சியுடன் இருப்பதற்கு, இலகு சுபாவத்தைக் கொண்டவராகவும் சகித்துக் கொள்பவராகவும் ஆகுங்கள்.

ஆத்மாக்கள் சிலரிடம் குறிப்பிட்ட வகையான சுபாவங்கள் காணப்படும். அவர்கள் தொடந்தும் தமது விருப்பத்திற்கு மாறாக, அந்த சுபாவத்துடன் செயல்படுவார்கள். ‘நான் அதைச் செய்ய விரும்பவில்லை, ஆனால் அது எனது சுபாவம்’ என்று அவர்கள் கூறுவார்கள். அதேபோல், அனைவரும் உங்களை இலகுவான மற்றும் இயல்பான யோகிகள் என்று அனுபவம் செய்யும் வகையில் குழந்தைகளான உங்களிடம் இலகுவான மற்றும் எளிமையான சுபாவங்கள் இருக்க வேண்டும். ‘நான் என்ன செய்வது? எப்படி நான் யோகம் செய்வது?’ இவை அனைத்தும் முடிவடைய வேண்டும். நீங்கள் சதா ஒத்துழைப்பவர்கள், அதாவது, யோகிகள் ஆவீர்கள். இந்த ஒரு விடயத்தை உங்களின் இயல்பான சுபாவம் ஆக்குவதன் மூலம் நீங்கள் சகல பாடங்களிலும் முழுமை ஆகுவீர்கள்.