18.08.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் செவிமடுக்கும் கட்டுக்கதைகள் எதனையும் நம்பாதீர்கள். உங்களிடம் எவராவது பொய்யான விடயங்களைக் கூறினால், ஒரு காதால் கேட்டு மறுகாதால் விட்டுவிடுங்கள்.
கேள்வி:
இந்த ஞானத்தின் சந்தோஷத்தைப் பேணும் குழந்தைகளின் அடையாளங்கள் என்ன?பதில்:
அவர்கள் தாம் கடந்தகாலத்தில் செய்த செயல்களின் கர்மக்கணக்குகளின் வேதனைகள் அனைத்தையும்; தொடர்ந்தும் சந்தோஷத்துடன் தீர்ப்பார்கள். இந்த ஞானத்தின் சந்தோஷத்தில் நீங்கள் வலியும், துன்பமும், வேதனையும் நிறைந்த உலகை மறக்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது சந்தோஷ உலகிற்குச் செல்கின்றீர்கள் என்பதை உங்கள் புத்தி அறிந்திருக்கின்றது. இராவணன் உங்களைச் சபித்து, உங்களுக்குத் துன்பத்தை விளைவித்தான். தந்தை இப்பொழுது உங்களை இந்தத் துன்பமும் வேதனையும் நிறைந்த உலகில் இருந்து அகற்றி, உங்களைச் சந்தோஷ உலகிற்கு அழைத்துச் செல்ல வந்திருக்கின்றார்.பாடல்:
உங்களைக் கண்டுகொண்டதனால், நாங்கள் முழு உலகையும் கண்டுகொண்டோம். வானம், பூமி அனைத்துமே எங்களுக்கு உரியதே.ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் பாடலைச் செவிமடுத்தீர்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு நிச்சயமாக மெய்சிலிர்க்க வேண்டும். ஏனெனில் அதில் சந்தோஷத்தைப் போன்று போஷாக்கு வேறு எதுவுமில்லை என்று கூறப்பட்டது. ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் இப்பொழுது எல்லையற்ற தந்தையைக் கண்டுள்ளீர்கள். ஒரேயொரு எல்லையற்ற தந்தை மாத்திரமே உள்ளார், அத்துடன் ஏனையோர் தந்தைக்கு உரியவர்கள் ஆகி அவரின் குழந்தைகள் ஆகும்போது அவர்களுக்கும் மெய்சிலிர்க்கும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் இராச்சியத்திற்கு உரியவர்களாக இருந்தீர்கள் என்பதையும், அதனைப் பின்னர் இழந்தீர்கள் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் மீண்டும் ஓர் இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள். இது பாரத மக்களுக்கான நற்செய்தியாகும். எனினும், அவர்கள் இதனைச் செவிமடுத்து, அதனை அவர்கள் நன்றாகப் புரிந்து கொண்டால் மாத்திரமே அது சாத்தியமாகும். இது உண்மையிலேயே சந்தோஷத்திற்கானதொரு விடயமாகும். தந்தை ஒவ்வொரு கல்பத்திலும் வருகின்றார். தந்தையின் பிறப்பு இங்கேயே நினைவு கூரப்படுகின்றது. விழாக்கள் அனைத்தும் இந்நேரத்திற்கானதே. தந்தை வந்து உங்களுக்கு மிகவும் இலகுவானதொரு பாதையைக் காட்டியுள்ளார். மக்கள் பலவகையான துன்பங்களை அனுபவம் செய்கின்றார்கள். இந்த ஞானத்தின் சந்தோஷத்தில் சகல வலியும், துன்பமும் அமிழ்த்தப்படுகின்றன. சுகயீனம் அடைந்திருந்த ஒருவர் முழுமையாக குணம் அடையவிருக்கும் தறுவாயில், அனைவரும் மிகவும் சந்தோஷப்படுவார்கள். சுகயீனமும், துன்பமும் மறக்கப்படுகின்றன. அவர்களின் சொந்தக் குடும்ப அங்கத்தவர்கள், அவர்களின் புகுந்தவீட்டினர், மற்றும் நண்பர்கள் அனைவரும் சந்தோஷப்படுவார்கள். நீங்கள் அனைவரும் உலக அதிபதிகளாக இருந்தீர்கள் என்பதும், பின்னர் இராவணன் உங்களைச் சபித்தான் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இது வலியும், துன்பமும் நிறைந்த உலகமாகும். பின்னர், நாளை அது சந்தோஷ உலகமாக ஆகும். அந்தச் சந்தோஷ உலகம் நினைவுகூரப்படும் பொழுது, வலி, துன்பம் அனைத்தும் மறந்து போய்விடும். இது தமோபிரதான் உலகமாகும். பல வகையான கர்ம வேதனைகள் உள்ளன. கள்ளங்கபடம் அற்றவர்கள் பல துன்புறுத்தல்களுக்கு உள்ளாகுகின்றார்கள். பல வகையான தடைகள் ஏற்படும். இந்தத் தடைகளும் இந்தக் கர்மவேதனைகள் நிறைந்த நாட்களும் இன்னமும் சொற்ப காலத்திற்கே நீடிக்கும். தந்தை உங்களுக்குப் பொறுமையை கொடுத்துள்ளார்: இன்னமும் வெகுசில நாட்களே உள்ளன. இது முன்னைய கல்பத்திலும் இடம்பெற்றது. கர்மக் கணக்குகள் தீர்க்கப்பட வேண்டும். அவை அனைத்தையும் சந்தோஷத்துடன் தொடர்ந்தும் தீருங்கள். தந்தையையும் ஆஸ்தியையும் தொடர்ந்தும் நினைவு செய்யுங்கள். எந்தப் பாவச் செயல்களையும் செய்யாதீர்கள். தவறினால், இன்னமும் அதிகளவு தண்டனை கிடைப்பதுடன் உங்களின் அந்தஸ்தும் அழிக்கப்படும். ஒரேயொரு தந்தையை நினைவு செய்வது குழந்தைகளின் கடமை ஆகும். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்தால் உங்கள் பாவங்கள் அழியும். உங்கள் கர்மக்கணக்கு தீர்க்கப்படும். இன்னமும் சொற்ப காலமே எஞ்சியுள்ளது. நீங்களே குருடர்களின் ஊன்றுகோல்கள் என்பதால், தொடர்ந்தும் உங்கள் கர்மக்கணக்கைத் தீருங்கள். இதனை நீங்கள் ஞாபகத்தில் வைத்திருப்பதுடன், பிறருக்கும் பாதையைத் தொடர்ந்தும் காட்டுங்கள். பல தடைகள் வரும். தந்தையை நினைவு செய்யுங்கள் என இயன்றளவு அனைவருக்கும் கூறுங்கள். இவ்வார்த்தைகள் மிகவும் பிரபல்யமானவை. ‘மன்மனாபவ’ என்றால்: ஓ ஆத்மாக்களே, என்னை மாத்திரமே சதா நினைவு செய்தால், உங்கள் கடந்த காலப் பாவங்கள் எரிக்கப்படும். இதனையிட்டுக் குழப்பம் அடைய வேண்டியதில்லை. தந்தையை நினைவு செய்தால் நீங்கள் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகுவீர்கள். நீங்கள் 84 பிறவிச் சக்கரத்தைச் சுற்றி வந்திருக்கின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் இந்தச் சக்கரத்தைத் தொடர்ந்தும் சுற்றியிருக்கின்றீர்கள், இனியும் தொடர்ந்தும் சுற்றுவீர்கள். இது பழைய உலகமும், பழைய ஆடையும் ஆகும். இதனை மறந்து விடுங்கள்! இது ஆத்மாக்களின் எல்லையற்ற துறவறமாகும். அவர்களின் துறவறம் எல்லைக்கு உட்பட்டது. அவர்கள் தமது வீடுகளை விட்டுச் சென்று விடுகின்றார்கள். அது நாடகத்தில் அவர்களுக்கான பாகமாகும். அது மீண்டும் இடம்பெறும். கடந்து செல்கின்ற ஒவ்வொரு விநாடியும் நாடகத்தில் உள்ளது. பின்னர் அதே நாடகம் மீண்டும் மீண்டும் இடம்பெறும். சமயநூல்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்தின் புத்தகங்கள் ஆகும். பக்தியின் பின்னர் இந்த ஞானம் உள்ளது. ஏணிப்படத்தை எவருக்குமே விளங்கப்படுத்துதல் மிகவும் இலகுவானது. பிரதான படங்களை உங்கள் வீடுகளில் நீங்கள் வைத்திருக்கலாம். திரிமூர்த்தி படம் மிகவும் தெளிவானதாகும். ஆக உச்சியில் சிவன் உள்ளார். பிரம்மா, விஷ்ணு, சங்கரர் சூட்சும உலக வாசிகள் ஆவார்கள். அதற்கு மேல் அதிமேலான கடவுள் உள்ளார். தந்தையின் வாசஸ்தலமே ஆத்மாக்களாகிய உங்களது வாசஸ்தலமும் ஆகும் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதனை நீங்கள் நிர்வாணா உலகம் அல்லது அமைதிதாமம் என எவ்வாறு அழைத்தாலும் அது ஒன்றேயாகும். ‘அமைதிதாமம்’ என்ற பெயர் சரியானது. ‘நிர்வாணா உலகம்’ என்றால் சப்தத்திற்கு அப்பாலுள்ள உலகம், அதாவது, மௌன உலகம் என்று அர்த்தம். அது அமைதிதாமம் ஆகும். அதன் பின்னர் சந்தோஷமும் அமைதியும் செழிப்பும் நிறைந்த உலகம் உள்ளது. பின்னர், இந்தத் துன்பமும் அமைதியின்மையும் உள்ள உலகம் உள்ளது. அந்தச் சந்தோஷ உலகில் அளவற்ற பொக்கிஷங்கள் நிறைந்திருக்கும். இன்று எவ்வாறுள்ளது? நாளை எவ்வாறிருக்கும்? இன்று, இது கலியுகத்தின் இறுதியாகும், ஆனால் நாளை சத்தியயுகத்தின் ஆரம்பம் இருக்கும். இரவிற்கும் பகலிற்கும் உள்ள வேறுபாடு உள்ளது. ‘பிரம்மாவினதும், பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்களான பிராமணர்களினதும் இரவும் பகலும்’ என்று கூறப்படுகின்றது. தேவர்கள் பகலில் உள்ளனர், சூத்திரர்கள் இரவில் உள்ளனர். பிராமணர்களாகிய நீங்கள் இடையில் இருக்கின்றீர்கள். இச்சங்கமயுகத்தைப் பற்றி எவருக்கும் தெரியாது. மனிதர்கள் காரிருளில் இருக்கின்றார்கள். அனைவரையும் ஒளியின் உச்சத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டியது குழந்தைகளாகிய உங்களது கடமை ஆகும். அதே மகாபாரத யுத்தமே உங்கள் முன்னிலையில் உள்ளது. விநாச காலத்தில் அன்பற்ற புத்தி உடையவர்கள் விநாசத்திற்கும், விநாச காலத்தில் அன்பான புத்தியுடையவர்கள் வெற்றிக்கும் இட்டுச் செல்லப்படுவார்கள் என்று நினைவு கூரப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை பாபா உங்களுக்கு அதே இராச்சியத்தைக் கொடுக்கின்றார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அந்த இராச்சியத்தை எங்களிடம் இருந்து எவராலும் அபகரிக்க முடியாது. இராவணன் முதலில் துவாபர யுகத்திலேயே ஆரம்பித்தான். இராவணனே எங்கள் இராச்சியத்தை அபகரித்தான். ஆகையால், அவனை உங்கள் எதிரியாகக் கருதுங்கள். ஓர் எதிரியின் கொடும்பாவியே செய்யப்பட்டு எரிக்கப்படுகின்றது. அவன் மிகவும் பழைய எதிரி ஆவான். இது இராவண இராச்சியம் என்று கூறப்பட்ட பொழுதிலும் அது எவருடைய புத்திக்கும் எட்டுவதில்லை. ஆகையால், இது காரிருள் என்று அழைக்கப்படுகின்றது. எல்லையற்ற தந்தை ஞானம் நிறைந்தவர். அவர் தெய்வீகக் கண்ணை அருள்கின்ற ஞானத்தை அருள்பவர் என்று அழைக்கப்படுகின்றார். ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது இந்த ஞானம் என்ற மூன்றாவது கண்ணைப் பெற்றிருக்கின்றீர்கள். முன்னர், உங்களுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. இப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தெரியும். தந்தையே ஞானக்கடல் என்பதால் அவர் நிச்சயமாக இந்த ஞானத்தைப் பேசுவார். அப்படித்தானே? அவர் இந்த ஞானத்தைப் பேசாதுவிட்டால், எவ்வாறு இந்த ஞானம் வெளிப்படும்? தந்தை இந்த ஞானத்தைக் கொடுப்பதனால், உங்களுக்கு அரைக்கல்பத்திற்குச் சற்கதி கிடைக்கின்றது என்பதை நீங்கள் காண்கின்றீர்கள். பக்தி அரைக்கல்பத்திற்கு நீடிக்க வேண்டும். சங்கமயுகத்திலேயே இந்த ஞானத்தினூடாகச் சற்கதி அருளப்படுகின்றது. குழந்தைகளின் எதுவும் மறைந்திருக்க முடியாது. தந்தை கூறுகின்றார்: நீங்கள் எந்தப் பிழையான செயல்களைச் செய்யும்போதும் பாபாவிடம் கூறிவிடுங்கள். பலரும் தொடர்ந்தும் தீய செயல்களில் ஈடுபடுகின்றார்கள் என்பதை பாபா அறிவார். இது இராவண இராச்சியம் ஆகும். மாயை உங்களை அறைகின்றாள். இருப்பினும், பலரும் அனைத்தையும் மறைக்கின்றனர். பாபா கூறுகின்றார்: நீங்கள் ஒரு தவறை செய்யும்போது, அதனை உடனடியாக பாபாவிடம் கூறுங்கள், எதிர்காலத்தில் அதிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு பாபா ஏதாவது ஒரு வழிகாட்டுவார். தவறினால், அது தொடர்ந்தும் அதிகரிக்கும். காமமே கொடிய எதிரியாகும். சிலர் பாபாவிற்கு எழுதுகின்றார்கள்: பாபா, மாயையிடம் இருந்து அதிகளவு எதிர்ப்பு உள்ளது. மாயையிடம் இருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்கும் அளவில் நீங்கள் எவருமே சதா யோகத்தில் நிலைத்திருப்பதில்லை. அதிகளவு சரீர உணர்வு உள்ளது. பலர் மாயையினால் அறையப்படுகின்றார்கள். பாபாவிற்கு எங்கும் இருந்து செய்திகள் கிடைக்கின்றன. பல பொய்யான கதைகள் பத்திரிகைகளில் அச்சிடப்படுகின்றன. இக்காலத்தில், மக்களால் பல கதைகள் கட்டப்படுகின்றன. அவர்கள் தமோபிரதான் ஆவார்கள். வியாசர் இரஜோ புத்தியுடையவராக இருந்தபோது, அவர் என்ன எழுதியிருக்கின்றார் எனப் பாருங்கள்! தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் பிறரிடம் இருந்து கேள்விப்படும் விடயங்களை நம்பிக் குழப்பம் அடையாதீர்கள். ‘இன்ன இன்னார் இதனைச் சொன்னார், இதனைச் செய்தார்’. அது உங்கள் புத்தியைப் பாழாக்கிவிடும். இது தமோபிரதான் உலகம் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. மாயை உங்களை விழுத்துவதற்கு முயற்சி செய்வாள். எவராவது உங்களுக்குப் பொய்யான கதைகளைக் கூறும்போது, அதனை ஒரு காதால் கேட்டு மறுகாதால் விட்டுவிடுங்கள். தொடர்ந்தும் மற்றவர்களுக்கு இந்தச் செய்தியைக் கொடுங்கள். தந்தை கூறுகின்றார்: நான் ஒரு செய்தியைக் கொண்டு வருகின்றேன். ஓ ஆத்மாக்களே, இப்பொழுது ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். எனது செய்தியைச் செவிமடுங்கள். என்னை மாத்திரம் நினைவுசெய்தால் போதும். என்னை நினைவு செய்பவர்கள் தமக்குத்தாமே நன்மை செய்கின்றார்கள். ஆத்மாக்களான நீங்கள் என்னை நினைவுசெய்ய வேண்டும், ஏனெனில் ஆத்மாவே மறந்துள்ளார். நீங்கள் இப்பொழுது தந்தையின் ஸ்ரீமத்தைப் பெறுகின்றீர்கள். இதில் ஆசீர்வாதங்கள் அல்லது கருணைகாட்டுதல் போன்ற எதற்கும் இடமில்லை. தந்தையை நினைவு செய்தால் போதும். எதனையும் கேட்கவோ அல்லது செய்யவோ வேண்டியதில்லை. உலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கின்றது என்பதையும் செவிமடுங்கள். இதனையிட்டு எந்த விவாதமும் அவசியமில்லை. காரிருளின் போதே தந்தை வருகின்றார். இதனாலேயே சிவனின் இரவு கொண்டாடப்படுகின்றது. ஸ்ரீகிருஷ்ணரின் பிறப்பும் இரவிலேயே கொண்டாடப்படுகிறது. அவர்கள் இரவில் கோயில்களில் கீரும் (அரிசிப் பாயாசம்) பூரியும் செய்கின்றார்கள். நீங்கள் சிவனுக்கு என்ன செய்வீர்கள்? அவர் அசரீரியானவர். பாபா எக்கணத்தில் வருகின்றார் என்பதையோ அவர் எவ்வாறு வெளியேறுகின்றார் என்பதையோ எவரும் அறிய மாட்டார்கள். அவர் இரதத்திலேயே சதாகாலமும் வசிப்பதில்லை. அவர் வந்து, வந்தே போகின்றார். நீங்கள் சிவபாபாவின் பேரக் குழந்தைகள் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் அவரிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். பிரம்மாவும் ஓர் ஆஸ்தியை அவரிடமிருந்து பெறுகின்றார். அவர் ஒரு மனிதரே. ஸ்ரீகிருஷ்ணர் சற்கதி அடைவதில் முதல் இலக்கத்தைக் கொண்டுள்ளார். அவர் அனைவராலும் நேசிக்கப்படுகின்றார். ஏனெனில், அவர் சதோபிரதான் குழந்தைப் பருவத்தில் உள்ளார். அவர் சற்றுப் பெரியவர் ஆகியதும், அவரின் ஸ்திதி சதோ ஆகுகின்றது. அதன் பின்னர் இரஜோ, தமோ ஸ்திதிகள் உள்ளன. ஸ்ரீராதையும், ஸ்ரீகிருஷ்ணரும் பின்னர் இலக்ஷ்மி நாராயணன் ஆகுகின்றார்கள். முன்னர் இந்த ஞானத்தைக் கொடுத்தவர்களுக்கே தந்தை இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். பாரதத்தில் தேவர்கள் வாழ்ந்தார்கள். ஆகையாலேயே அவர்களுக்கு பாரதத்தில் அதிகளவு கோயில்கள் உள்ளன. கிறிஸ்தவர்களின் தேவாலயங்களில் நீங்கள் கிறிஸ்துவை மாத்திரமே பார்க்கின்றீர்கள். தேவர்களுக்கோ பல ஆலயங்கள் உள்ளன. தந்தை உங்களை மனிதர்களில் இருந்து தேவர்கள் ஆக்குவதற்காக வந்துள்ளார். அதாவது, அவர் பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்க வேண்டும். தந்தையை நினைவு செய்வதனால் நாங்கள் தூய்மை ஆகுகின்றோம். தந்தையுடன் நாங்களும் பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குகின்றோம். நாங்களும் தந்தையுடன் வந்தது போன்றுள்ளது. பக்தி மார்க்கத்தில் தேவர்களுக்கான ஆலயங்களையும், சிலைகளையும் கட்டுவதற்கு அவர்கள் அதிகளவு செலவழிக்கின்றார்கள். அவர்கள் அவற்றைச் செய்த பின்னர் அவற்றைப் பராமரிக்கின்றார்கள், பின்னர் அவற்றை அழித்து விடுகின்றார்கள். அவர்கள் அந்தச் சிலைகளை ஒன்பது நாட்களுக்குள் மூழ்கச் செய்கின்றார்கள். அவர்களின் மீது அவர்கள் அதிகளவு அன்பு கொண்டுள்ளார்கள். கல்கத்தாவில் தேவியரின் ஒன்பது இரவுகளின் விழாவான நவராத்திரியைக் கொண்டாடுகின்றார்கள். நீங்கள் இப்பொழுது இவ்விடயங்கள் அனைத்தினாலும் வியப்படைந்துள்ளீர்கள். முன்னர், நாங்களும் அதில் பங்குபற்றினோம். அவர்கள் கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவழிக்கின்றார்கள். அதிகளவில் குருட்டு நம்பிக்கை காணப்படுகிறது! இராமாயணம் போன்றவற்றின் மீது அவர்கள் அதிகளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அந்தக் கதைகளைச் செவிமடுக்கும் பொழுது அவர்கள் கண்ணீரும் சிந்துகின்றார்கள். அவை அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கு உரியவை. அதில் எந்த நன்மையும் இல்லை. பாபா இப்பொழுது எங்களை மிகவும் விவேகமானவர் ஆக்குகின்றார்! நீங்கள் இவ்விடயங்கள் அனைத்தையும் இங்கேயே செவிமடுக்கின்றீர்கள். ஆனால் நீங்கள் இங்கு செவிமடுக்கின்ற எதனையும் மறக்கக் கூடாது. அனைத்தையும் ஞாபகத்தில் வைத்திருங்கள்! இங்கிருந்து நீங்கள் செல்வதற்கு முன்னர் முற்றாகப் புத்துணர்ச்சி பெறுங்கள். உங்களை ஓர் ஆத்மாவென்று கருதி, நீங்கள் பார்க்கின்ற, உங்கள் சரீரம் உட்பட அனைத்தையும் மறந்து விடுங்கள். இவை அனைத்தும் இடுகாடாகும். தந்தை கூறுகின்றார்: டெல்கியில் உள்ள பிர்லா ஆலயத்தில் (இலக்ஷ்மி நாராயணனின் ஆலயம்) எழுதப்பட்டுள்ளது: பாரதம் தேவலோகமாக இருந்தது, அதனை தர்மராஜ் ஸ்தாபித்தார். இந்த உலகம் இப்பொழுது இடுகாடாகப் போகின்றது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: காமச்சிதையில் அமர்ந்ததால், அனைவருமே முற்றாக எரிந்து போயுள்ளார்கள். ‘கோபச்சிதை’ என்று கூறப்படவில்லை. ‘காமச்சிதை’ என்றே கூறப்பட்டுள்ளது. அதில் சிறிதளவு போதை அல்லது அரைவாசி போதை காணப்படுகிறது. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே இங்கே அமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார். ஒரு தகுதியற்ற குழந்தையே தந்தையின் குலப்பெயரை இழிவடையச் செய்கின்றார் என்று கூறப்படுகின்றது. தந்தையின் கௌரவம் இல்லாமல் போகிறது. எல்லையற்ற தந்தை மேலும் கூறுகின்றார்: உங்கள் முகங்களை நீங்கள் அழுக்கடையச் செய்யும் பொழுது, தேவர்களாக ஆகவுள்ள பிராமணக் குலத்தின் பெயருக்கே நீங்கள் அவதூறு ஏற்படுத்துகின்றீர்கள். தூய்மைச் சக்தியினால் பாரதத்தை நீங்கள் மீண்டும் ஒருமுறை மேன்மையான தேவர்களின் உலகமாக மாற்றுகின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். உங்களைப் பொறுத்தவரை இது பொதுவானதாகும். மகாபாரத யுத்தம் சற்று முன்னிலையிலேயே உள்ளது என்பதை உங்களால் பார்க்க முடிகிறது. இந்த யுத்தத்தினூடாகவே சுவர்க்க வாசல் திறக்கப்படுகின்றது. மகாபாரத யுத்தம் சமயநூல்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் என்ன நடந்தது என்பதை அவர்கள் காட்டவில்லை. அவர்கள் பிரளயம் ஏற்படும் என்று மாத்திரமே கூறியுள்ளார்கள். ஒருபுறம் அவர்கள் ஸ்ரீகிருஷ்ணர் தனது தாயின் கருப்பையில் பிறப்பதைப் போன்றும், மறுபுறம் அவர் அரசமர இலையில் பெருவிரலைச் சூப்பிய வண்ணம் மிதந்து வருவதாகவும் காட்டியுள்ளார்கள். அவர்கள் எதனையும் புரிந்து கொள்ளவில்லை. அங்கே நீங்கள் கருப்பை என்ற மாளிகையில் அதிகளவு சௌகரியத்துடன் இருப்பீர்கள். அவரால் எவ்வாறு கடலில் ஓர் இலையின் மீது மிதந்து வரமுடியும்? அது சாத்தியமில்லை. முழு நாடகமும் முன்கூட்டியே நிச்சயிக்கப்பட்டது என்பதை நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். ஒவ்வொரு கல்பத்திலும் இவ்வாறாகவே இடம்பெற்றது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது உங்களுக்கும் பிறருக்கும் நன்மை செய்ய வேண்டும். இதுவே பிரதானமானது. தந்தையே சுவர்க்கத்தைப் படைப்பவர் ஆவார். அவர் தந்தையான சுவர்க்கக் கடவுள் என்று அழைக்கப்படுகின்றார். ஆகையால், குழந்தைகளாகிய நாங்கள் பின்னர் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுகின்றோம். பாரதத்தில் மக்கள் சிவனின் பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்கள். எனவே நிச்சயமாக அவர் பாரதத்திற்கு எதனையோ கொடுத்திருக்க வேண்டும். அவர் இப்பொழுது உங்களுக்குச் சுவர்க்க இராச்சியத்தைக் கொடுத்துள்ளார். தந்தையே சற்கதியை அருள்பவர். ஞானக்கடலான தந்தை மாத்திரமே வந்து உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். தந்தை இப்பொழுது உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். அவர் மீண்டும் 5000 வருடங்களின் பின்னரும் வருவார். பிராமண குலத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்தும் வருவார்கள் என்ற நம்பிக்கை குழந்தைகளாகிய உங்களுக்கு உள்ளது. அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் உங்களுக்கும் பிறருக்கும் நன்மை செய்யுங்கள். எவராவது உங்களுக்கு பொய்யான தகவல்களைக் கொடுக்கும் பொழுது அவற்றைச் செவிமடுங்கள், எனினும் அவர்கள் கூறுவதை அலட்சியப்படுத்துங்கள். அவற்றையிட்டுக் குழப்பம் அடையாதீர்கள்.2. தேவர்களாக வரவுள்ள பிராமண குல அலங்காரத்தின் பெயருக்கு என்றுமே அவதூறு ஏற்படாதிருப்பதில் கவனம் செலுத்துங்கள். பிழையான செயல்களை என்றுமே செய்யாதீர்கள். உங்கள் கடந்த கால கர்மக்கணக்கை தீருங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் கிரீடத்தைக் கொண்டிருந்து, இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருந்து, உங்களின் இலக்கின் போதையுடனும் விழிப்புணர்வுடனும் உங்களின் பௌதீகப் புலன்களை உங்களின் கட்டளைகளுக்கேற்ப செயற்பட வைப்பீர்களாக.சங்கமயுகத்தில், குழந்தைகளான நீங்கள் அனைவரும் பாப்தாதாவிடம் இருந்து ஒரு கிரீடத்தையும் ஒரு சிம்மாசனத்தையும் பெற்றுள்ளீர்கள். தூய்மைக் கிரீடம் உள்ளது. அத்துடன் பொறுப்புகளின் கிரீடமும் உள்ளது. அமரத்துவ சிம்மாசனமும் அத்துடன் இதய சிம்மாசனமும் உள்ளன. நீங்கள் இரட்டைக் கிரீடாதாரியாகி இரட்டை சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும்போது, இயல்பாகவே உங்களின் போதையையும் இலக்கையும் நினைவு செய்வீர்கள். அப்போது உங்களின் பௌதீகப் புலன்கள் கூறும்: ‘ஆமாம், எனது பிரபுவே!’ தமது கிரீடத்தையும் சிம்மாசனத்தையும் விட்டு விடுபவர்களின் கட்டளைகளுக்கு அவர்களின் பணியாட்கள்கூடக் கீழ்ப்படிய மாட்டார்கள்.
சுலோகம்:
பலவீனமான எண்ணங்களைக் கொண்டிருத்தல், உங்களைப் பல கேள்விகளைக் கேட்கச் செய்கிறது. அது சந்தோஷமான இதயத்தைக் கொண்டவராக ஆக்குவதில்லை.அவ்யக்த சமிக்ஞை: தூய்மையற்றதன் விதையை முடித்து, முற்றிலும் சுத்தமானவராக (தூய்மையானவராக) ஆகுங்கள்.
இறை சேவையின் மகத்தான புண்ணியம், தூய்மையின் தானம் ஆகும். நீங்களும் தூய்மையாகி, மற்றவர்களையும் தூய்மை ஆக்குவது என்றால் ஒரு புண்ணியாத்மா ஆகுவதாகும். ஏனென்றால், நீங்கள் ஓர் ஆத்மாவைத் தற்கொலை செய்யும் மகாபாவத்தில் இருந்து விடுவிக்கிறீர்கள். தூய்மை இன்மை ஆத்மாவின் தற்கொலை ஆகும். தூய்மை, வாழ்க்கைத்தானம் ஆகும்.