18.10.26    Avyakt Bapdada     Tamil Lanka Murli    02.02.2012     Om Shanti     Madhuban


இப்போது, நினைவின் சொரூபத்தின் அனுபவத்தின் அதிகாரி ஆகுங்கள். எரிமலை யோகத்தினால் அனைவருக்கும் ஒளி மற்றும் சக்திக் கதிர்களின் ஒத்துழைப்பைக் கொடுங்கள்.


இன்று, பாப்தாதா தனக்கு முன்னாலும் எல்லா இடங்களிலும் உள்ள ஆத்மாக்களின் தனது சிறிய உலகைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். இந்த உலகம் சிறியதாக இருந்தாலும் அது மிகவும் அழகானது. ஏனென்றால், இந்த உலகில் உள்ள ஒவ்வோர் ஆத்மாவும் ஒரு மேன்மையான ஆத்மா ஆவார். இந்த ஆத்மாக்களே, பல்கோடிகளில் ஒரு கைப்பிடி அளவினர் ஆவார்கள். இந்த ஆத்மாக்களே தந்தையின் ஆஸ்திக்கான உரிமையைக் கொண்டவர்கள். பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும் பார்க்கும்போது மகிழ்ச்சி அடைகிறார். ஒவ்வொரு குழந்தையும் ஓர் அரச குழந்தையே. பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும் சுய இராச்சிய உரிமையும் உலக இராச்சிய உரிமையும் உள்ளவராக ஆக்கியுள்ளார். இந்த வேளையில், அனைவரும் சுய இராச்சிய அதிகாரத்தைக் கொண்டவர்கள். அதாவது, அவர்கள் தமது மனங்கள், புத்திகள், சம்ஸ்காரங்கள், தமது பௌதீகப் புலனங்கங்களின் அரசர்கள் ஆவார்கள். நீங்கள் புலன்களின் ஆதிக்கத்திற்கு உட்படவில்லை. நீங்கள் உங்களின் மனங்களின் அதிபதிகளாகவும் இருக்கிறீர்கள். அதேபோல், குழந்தைகளான நீங்கள் ஒவ்வொருவரும் உங்களை உங்களின் மனதின் அதிபதியாகவும் அத்துடன் உங்களின் சம்ஸ்காரங்களின் அதிபதியாகவும் கருதுகிறீர்களா? சிலவேளைகளில் நீங்கள் உங்களின் மனதின் அதிபதியாகவும் சிலவேளைகளில் உங்களின் மனம் உங்களின் அதிபதியாகவும் இல்லையல்லவா? ‘எனது மனம்’ என்று நீங்கள் சொல்கிறீர்கள். ‘மனமாகிய நான்’ என்று நீங்கள் சொல்வதில்லை. எனவே, நீங்களே உங்களுக்குச் சொந்தமானவற்றுக்கு அதிபதி ஆவீர்கள். உங்களின் மனம் சிலவேளைகளில் அதிபதி ஆகவில்லையே என்பதைச் சோதித்துப் பாருங்கள். இந்த வேளையில், பாப்தாதா ஒவ்வொருவரையும் சுய இராச்சிய உரிமை உள்ளவர்களின் ஆசனத்தில் இருத்தி உள்ளார். நீங்கள் தற்சமயம் சுய இராச்சிய அதிகாரிகள். ஏதிர்கால இராச்சியமும் உங்களுடையதே. உங்களுக்கு இரட்டை இராச்சியத்திற்கான உரிமை உள்ளது. சுய இராச்சிய உரிமையைக் கொண்டிருப்பதுடன் ஒவ்வொரு குழந்தைக்கும் சுயமரியாதை இருப்பதை பாப்தாதா பார்க்கிறார். எனவே, நான் சுய மரியாதை உடையதோர் ஆத்மா என்ற விழிப்புணர்வுடன் இருங்கள். அப்போது உங்களின் முன்னால் சுயமரியாதைப் பட்டங்களின் நீண்டதொரு பட்டியல் உங்களின் முன்னால் வருவதைப் பார்ப்பீர்கள். பலவகையான சுயமரியாதைகளின் மாலை உங்களின் முன்னால் வருகிறது, அல்லவா?

பாப்தாதா ஒவ்வொரு குழந்தைக்கும் சுயமரியாதை என்ற மாலையை அணிவித்தார். சுயமரியாதை என்ற வார்த்தையைக் கேட்ட உடனேயே, உங்களின் விழிப்புணர்வில் வெவ்வேறு சுயமரியாதைப் பட்டங்கள் வருகிறதல்லவா? உங்களின் சுயமரியாதை அநாதியான வடிவில் எத்தனை மகத்தானது என்பதை நினைத்துப் பாருங்கள். நீங்கள் உங்களின் அநாதியான ரூபத்திற்குச் சென்றீர்களா? ஒவ்வொருவரின் சுயமரியாதையும்: நான் தந்தையின் ஜொலிக்கும் ஆத்மா ஆவேன். தந்தையின் சகவாசத்தைக் கொண்டிருப்பதனால், நீங்கள் விசேடமான, பிரகாசிக்கும் ஆத்மாக்கள் ஆவீர்கள். உங்களால் அதைப் பார்க்க முடிகிறதா? வானத்திலும் சில நட்சத்திரங்கள் விசேடமாகப் பிரகாசிக்கின்றன. அதேபோல், தந்தையுடன் இருப்பதனால் நீங்கள் பிரகாசிக்கும் நட்சத்திரங்கள் ஆவீர்கள். உங்களின் அநாதியான ரூபம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? உங்களால் ஒரு விநாடியில் உங்களின் அநாதியான ரூபத்தில் ஸ்திரமாக முடிகிறதா? இப்போது, ஒரு விநாடியில் அந்த அநாதியான ரூபத்தில் ஒரு விநாடிக்கு உங்களை ஸ்திரமாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் மிகவும் போதை அடைகிறீர்கள்! இப்போது முன்னேறுங்கள், நீங்கள் இப்போது உலகச் சக்கரத்தில் ஆரம்பத்திற்கு வந்துள்ளீர்கள். இந்த அப்பியாசத்தைச் செய்யுங்கள்: சத்திய யுக ஆரம்பத்தில் உங்களின் ரூபத்தைப் பாருங்கள். இது அத்தகையதொரு மேன்மையான ரூபம்: சந்தோஷ சொரூபம். இது சகல பேறுகளின் சொரூபமாக இருக்கும் ரூபம் ஆகும். துன்பத்தின் பெயரோ அல்லது சுவடோ இல்லை. பஞ்சபூதங்களும் அழகாகவும் சதோகுணியாகவும் இருக்கும். உங்களின் தேவ ரூபத்தை அனுபவம் செய்யுங்கள்! உங்களின் சொந்த ரூபத்தை உங்களால் பார்க்க முடிகிறதா? ஒருவர் அரசரோ, மகாத்மாவோ அல்லது அரசியல்வாதியோ யாராக இருந்தாலும் சகல பேறுகளின் சொரூபமாக இருக்கும் எவரையாவது பார்த்திருக்கிறீர்களா? எனவே, ஒரு விநாடிக்கு உங்களின் தேவ ரூபத்தில் உங்களை ஸ்திரப்படுத்துங்கள். நீங்கள் உங்களின் சுயமரியாதையில் இருப்பதை இரசிக்கிறீர்கள்தானே? நான் ஒரு தேவர். பாப்தாதா இந்த அப்பியாசத்தைச் செய்வித்தார். பின்னர் கீழிறங்கி வாருங்கள்: இது என்ன யுகம்? துவாபர யுகத்திலும் உங்களின் சுயமரியாதை, பூஜிக்கத்தகுதி வாய்ந்தவராக இருத்தல். பூஜிக்கத்தகுதி வாய்ந்தவராக இருப்பதே உங்களின் ரூபம். உங்களின் பூஜிக்கத்தகுதி வாய்ந்த ரூபத்தை உங்களால் பார்க்க முடிகிறதா? அனைவரும் உங்களை மிகுந்த பக்தியுடனும் ஒழுங்குமுறையாகவும் வழிபடுகிறார்கள். வேறு எவரும் இத்தகைய ஒழுங்குமுறையாக வழிபடப்படுவதில்லை. ஒருவர் மதத்தாபகரோ, ஒரு குருவோ, அரசியல்வாதியோ அல்லது ஒரு நடிகரோ யாராக இருந்தாலும் எவரும் இத்தகைய ஒழுங்குமுறையாக வழிபடப்படுவதில்லை. எனவே, உங்களின் சுயமரியாதையை நீங்கள் பார்த்தீர்களா? நீங்கள் அதை அனுபவம் செய்தீர்களா? இப்போது, சங்கமயுகத்திற்கு வாருங்கள். நீங்கள் அனைவரும் சக்கரத்தைச் சுற்றி வருகிறீர்களா? பின்னால் அமர்ந்திருப்பவர்கள், சக்கரத்தைச் சுற்றி வந்தீர்களா? உங்களின் கைகளை உயர்த்துங்கள்! உங்களின் சுயமரியாதையைப் பாருங்கள். ஏனென்றால், நீங்கள் சுய இராச்சிய உரிமை உள்ளவர்கள்தானே? சங்கமயுகத்தில், கடவுளே, பிரபுவான அவரே குழந்தைகளான உங்களின் வாழ்க்கைகளைத் தூய்மை என்ற சிறப்பியல்பால் நிரப்புகிறார். இந்தத் தூய்மையே, சகல வகையான அழியாத சந்தோஷத்தின் சுரங்கம் ஆகும். இவ்வாறு உங்களை ஆக்கியவர் யார்? கடவுள் அவரே அவ்வாறு ஆக்கினார். இப்போதும், நீங்கள் தந்தையிடம் இருந்து தூய்மை என்ற சொத்தின் நடைமுறை அத்தாட்சியைப் பெற்றுள்ளீர்கள். இப்போது, சோதித்துப் பாருங்கள்! தூய்மையே சகல பேறுகளுக்கும் அடிப்படை. நீங்கள் அனைவரும் தூய்மையால் மாஸ்ரர் சர்வசக்திவான்கள் ஆகியுள்ளீர்கள். எனவே சோதித்துப் பாருங்கள்: நான் சகல சக்திகளையும் பெற்றுள்ளேனா? சில குழந்தைகள் கூறுகிறார்கள்: தந்தை சகல சக்திகளையும் கொடுத்துள்ளார். ஆனால் சிலவேளைகளில் எமக்குத் தேவையான சக்தி சிறிது பிந்தியே வருகிறது. அந்தச் சூழ்நிலை முடிவடைந்த பின்னரே அது வருகிறது. இதற்கான காரணம் என்ன? தந்தை உங்களுக்கு அதை ஓர் ஆசீர்வாதமாக வழங்கினார். ஆனால் அப்படியிருந்தும், தேவைப்படும் நேரத்தில் அது உங்களிடம் வருவதில்லை. இதற்கான காரணம் என்ன? நீங்கள் மாஸ்ரர் சர்வசக்திவான் என்ற விழிப்புணர்வு ஆசனத்தில் அமர்ந்திருப்பதில்லை. ஒருவர் தனது பதவி என்ற ஆசனத்தில் அமர்ந்திருக்கும் போது மட்டுமே அவரின் கட்டளை கடைப்பிடிக்கப்படும். நீங்கள் எந்தவொரு சக்திக்குக் கட்டளை இடும்போதும் முதலில் சோதித்துப் பாருங்கள்: நான் விழிப்புணர்வு ஆசனத்தில் அமர்ந்திருக்கிறேனா? நான் சுயமரியாதை என்ற ஆசனத்தில் அமர்ந்திருக்கிறேனா? விழிப்புணர்வு என்ற ஆசனத்தில் உங்களை ஸ்திரப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் சகல சக்திகளும் வருவதற்குக் கட்டுப்பட்டுள்ளன. ஏனென்றால், சர்வசக்திவான் தந்தை உங்களை மாஸ்ரர் சர்வசக்திவான்கள் ஆக்கியுள்ளார். எனவே, நீங்கள் இத்தகைய சக்திவாய்ந்த சுயமரியாதையைக் கிரகித்த வண்ணம் முன்னேறுகிறீர்கள்தானே? உங்களின் சுயமரியாதையை நீங்கள் பார்த்துள்ளீர்களா? சங்கமயுகத்தின் பின்னர் நீங்கள் எங்கே செல்வீர்கள்? நீங்கள் திரும்பிச் செல்லும் பயணத்தில் செல்வீர்கள், அல்லவா? இதனாலேயே, நீங்கள் ஒவ்வொருவரும் நாள் முழுவதும் இந்த அப்பியாசத்தைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று பாப்தாதா விரும்புகிறார். இதற்காக மீண்டும் மீண்டும் நேரத்தை ஒதுக்குங்கள். உங்களுக்கு சுயமரியாதை மாலையை அணிவிப்பதன் மூலமும் நீங்கள் அதை அனுபவம் செய்வதன் மூலமும் பாப்தாதா உங்களுக்கு சுய இராச்சிய உரிமையை வழங்கி உள்ளார். ஆகவே, அந்த சுயமரியாதை உங்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் விடுவது என்பது சாத்தியமில்லை. உங்களின் ஆசனத்தில் அமர்ந்திருங்கள், அவ்வளவுதான்.

நீங்கள் அனைவரும் கவனம் செலுத்துவதை பாப்தாதா பார்த்தார். ஆனால் இப்போது, உங்களின் நாளாந்த நேர அட்டவணையை தொடர்ச்சியாக அமைத்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது, உங்களை உங்களின் சுயமரியாதையின் விழிப்புணர்வு ரூபத்தில் ஸ்திரமாக்கிக் கொள்ளுங்கள். உதாரணமாக, எவ்வாறு நீங்கள் எண்ணக் கட்டுப்பாட்டு வேளையைக் கடைப்பிடிக்கிறீர்களோ, அவ்வாறே சுயமரியாதையின் விழிப்புணர்விற்கும் ஒரு நேரத்தை நிச்சயம் செய்யுங்கள். ஆரம்ப காலப் பகுதியில் இருந்து திரும்பிச் செல்லும் பயணம் வரை விழிப்புணர்வில் கொண்டிருப்பதற்கு உங்களின் நாளாந்த செயல்பாடுகளில் ஒரு குறிப்பிட்ட நேரத்தை நிச்சயம் செய்யுங்கள். நீங்கள் இதை நடக்கும் போதும் அசையும் போதும்கூட செய்ய முடியும். ஏனென்றால், உங்களின் மனதை மட்டுமே நீங்கள் ஆசனத்தில் அமரச் செய்ய வேண்டும். பாப்தாதா பார்த்தார், உங்களுக்கு முன்னரும் கூறப்பட்டுள்ளது, அதாவது நீங்கள் அனைவரும் யோகம் செய்கிறீர்கள், ஆனால் இப்போது என்ன தேவை? இந்த இக்கட்டான நிலைமைகளைப் பார்க்கும்போது, உங்களுக்கு முன்னரே கூறப்பட்டுள்ள, இரட்டைப் பணியைச் செய்கின்ற எரிமலை யோகமே இப்போது தேவை. முதலில், உங்களால் உங்களின் பழைய சம்ஸ்காரங்களைத் தகனம் செய்யக்கூடியதாக இருக்கும். தற்சமயம், நீங்கள் உங்களின் சம்ஸ்காரங்களைக் கொல்கிறீர்கள். ஆனால் நீங்கள் அவற்றை எரிப்பதில்லை. அவற்றைக் கொன்ற பின்னரும் அவை சிலவேளைகளில் உயிர்பெற்று எழுகின்றன. இராவணன் கொல்லப்படுவது மட்டுமன்றி, எரிக்கப்படுவதைப் போல், நீங்கள் உங்களின் பழைய சம்ஸ்காரங்களைத் தகனம் செய்ய வேண்டும். இவையே அடிக்கடி உங்களின் தீவிர முயற்சிகளைக் குறைக்கின்றன. இதற்கு, உங்களுக்கு எரிமலை யோகம் தேவை. முதலில், உங்களுக்காக: எரிமலை யோகம் செய்வதனால் நீங்கள் ஒளி மற்றும் சக்தி ரூபம் ஆகுவீர்கள். இரண்டாவதாக, நீங்கள் அந்த ரூபத்தில் இருப்பதனால், உங்களால் உங்களின் கதிர்களின் ஒத்துழைப்பை மற்றவர்களுக்குக் கொடுக்க முடியும். எனவே இப்போது, நீங்கள் அனைவரும் உங்களின் யோகத்தை எரிமலை யோகமாக மாற்றிவிட்டீர்களா? இப்போது காலத்திற்கேற்ப, ஆத்மாக்கள் அனைவருக்கும் உங்களின் ஒத்துழைப்புத் தேவைப்படுகிறது. அமிர்த வேளையில், பாப்தாதா ஒவ்வொரு குழந்தைக்கும் அன்பை வழங்குகிறார்.

நீங்கள் மிக நல்ல இலட்சியத்தை வைத்திருப்பதையும் அத்துடன் தைரியத்தைப் பேணுவதையும் பாப்தாதா பார்த்தார். அமிர்தவேளையில் நீங்கள் கவனத்தைப் பேணும் அளவானது, பகல் பொழுதில் குறைவடைகிறது. இதற்கான காரணம் என்ன? நீங்கள் செயலில் ஈடுபடும்போது, ஒரு கர்மயோகியாக செயல்பட வேண்டி இருப்பதனால், வேறுபாடு ஏற்படுகிறது. நீங்கள் வெறுமனே யோகம் செய்பவர்கள் அல்ல, ஆனால் யோகி வாழ்க்கை வாழுபவர்கள். வாழ்க்கை என்பது எல்லா வேளைக்கும் உரியது, சிலவேளைக்கு மட்டுமல்ல. எனவே, இப்போது பாப்தாதா எதை விரும்புகிறார்? பொதுவாக, உங்களில் பெரும்பாலானோர் அன்பெனும் பாடத்தில் சித்தி அடைந்துள்ளீர்கள். அன்பென்ற பாடத்தில், உங்களில் பெரும்பாலானோர் ‘எனது பாபா, எனது பாபா’ என்று கூறுவதன் மூலம் அன்பை அனுபவம் செய்வதை பாப்தாதா கண்டார். அன்பெனும் பாடத்தில் உங்களில் பெரும்பாலானோர் சித்தி அடைந்துள்ளீர்கள். இப்போது நீங்கள் எதில் சித்தி அடைய வேண்டும்? தந்தைக்குச் சமமானவர் ஆகுவதில். உங்கள் அனைவருக்கும் என்ன தேவை? நீங்கள் அனைவரும் தந்தைக்குச் சமமானவர் ஆகவிரும்புகிறீர்களா அல்லது தந்தை, தந்தையாகவே இருக்க நீங்கள் வெறுமனே குழந்தைகளாக இருப்பீர்களா? எனவே, நீங்கள் தந்தைக்குச் சமமானவர் ஆகவேண்டும். அன்பைக் கொண்டிருத்தல் என்றால் அதன் அர்த்தம் என்ன? நீங்கள் அன்பு வைத்திருக்கும் நபர் உங்களுக்குக் கூறுவதை நீங்கள் நிச்சயமாகச் செய்ய வேண்டும் என்பதே அதன் அர்த்தம். நீங்கள் அனைவரும் தந்தையை நேசிக்கிறீர்கள். தந்தையும் உங்களின் மீது அன்பு வைத்துள்ளார். அவ்வாறாயின், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! உங்களுக்கு அன்பு இருக்கிறதா? நல்லது. எனவே இப்போது, உங்களுக்கு அன்பு இருப்பதைப் போல், தந்தைக்குச் சமமானவர் ஆகுகின்ற இலட்சியமும் உங்களுக்குள் இருக்க வேண்டும் என்றே பாப்தாதா விரும்புகிறார். இதற்காக உங்களின் கைகளை உயர்த்துங்கள்! உங்களுக்கு இந்த நம்பிக்கை இருக்கிறது, நீங்கள் மிக நன்றாக உங்களின் கைகளை உயர்த்துகிறீர்கள். பாப்தாதா இதைப் பார்க்கிறார்.

குழந்தைகளான நீங்கள் ஒவ்வொருவரும் சந்தோஷமாகவும் உங்களின் முகத்திலும் நடவடிக்கைகளிலும் சந்தோஷப் பாக்கியத்தைக் கொண்டிருப்பதும் புலப்பட வேண்டும் என்றே பாப்தாதா விரும்புகிறார். ஏனென்றால் காலத்திற்கேற்ப, உங்களின் முகம் அதிகளவு சேவை செய்யும். இதற்கான தேவை உள்ளது. இப்பொழுதில் இருந்தே இந்த இலட்சியத்தை நீங்கள் வைத்திருக்க வேண்டும் என்றே பாப்தாதா விரும்புகிறார். இப்போது பிளாற்றினம் ஆண்டு விழா என்பதனால், அனைவருக்கும் சேவை செய்வதற்கான ஊக்கமும் உற்சாகமும் உள்ளன. அதேபோல், உங்களின் முகத்தாலும் சேவை செய்வதற்கான உற்சாகத்தைக் கொண்டிருங்கள். ஏனென்றால், நாளுக்கு நாள், நிச்சயமாக இக்கட்டான வேளைகள் வரப் போகின்றன. அத்தகைய வேளையில், உங்களின் முகம் ஆத்மாக்களை மலர்ச்சி நிறைந்ததாக ஆக்க வேண்டும்.

இன்று, பாப்தாதா அமிர்த வேளையில் சுற்றி வந்தார். அவர் எதைக் கண்டார்? நீங்கள் அனைவரும் உங்களின் சொந்த ஆர்வத்துடன் அமர்ந்திருக்கிறீர்கள். ஆனால் அனைத்திலும் மகத்தான அதிகாரம், உங்களின் சொந்த அனுபவத்தின் அதிகாரம் ஆகும். நீங்கள் அமர்ந்திருப்பதை பாபா கண்டார், ஆனால் நீங்கள் அனுபவத்தின் அதிகாரி ஆகவேண்டும். நீங்கள் அந்த விழிப்புணர்வுடன் அமர்ந்திருக்கிறீர்கள். ஆனால் அந்த விழிப்புணர்வின் சொரூபமாக இருப்பதை நீங்கள் அனுபவம் செய்ய வேண்டும். நீங்கள் குறுகிய காலத்திற்கு அனுபவத்தின் அதிகாரியாக இருக்கும் ஆனந்தத்தை அனுபவம் செய்கிறீர்கள். நீங்கள் பாப்தாதாவின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதாக நினைக்கிறீர்கள். ஆனால், உங்களை அந்த விழிப்புணர்வின் சொரூபமாக இருப்பதை அனுபவம் செய்தல், அந்த அனுபவத்தில் தன்னையே மறந்திருத்தல் - இது மேலும் அதிகரிக்க வேண்டும். ஏனென்றால், அனைத்திலும் பெரிய அதிகாரம், அனுபவத்தின் அதிகாரமே. விழிப்புணர்வின் சொரூபமாக இருத்தல், அனுபவசாலியாக இருத்தல் எனப்படுகிறது. எனவே, அந்த அனுபவத்தில் திளைத்திருங்கள். உங்களின் விழிப்புணர்வில் உள்ள ரூபத்தின் அனுபவத்தில் நிலைத்திருங்கள். இது அதிகமாகத் தேவைப்படுகிறது. ஏனென்றால், ஓர் அனுபவத்தை ஒருபோதும் மறக்க முடியாது. சிலவேளைகளில், நீங்கள் எதையாவது இன்னொருவரின் அனுபவத்துடன் தொடர்புபடுத்திப் பார்க்க முயற்சி செய்கிறீர்கள். ஏனென்றால், அனுபவத்திற்கு அந்தத் தாக்கம் உள்ளது. நீங்கள் குறிப்பிட்ட ரூபத்தின் விழிப்புணர்வின் சொரூபமாக உங்களை வைத்திருக்கிறீர்கள். எனவே, அந்த அனுபவத்தில் திளைத்திருங்கள். அந்த அனுபவம் உங்களின் முயற்சிகளிலும் அதிகளவில் உதவி செய்யும். நீங்கள் அனுபவத்தின் அதிகாரிகளாக இருப்பதில் வரிசைக்கிரமமாக இருப்பதை பாப்தாதா கண்டார். எனவே இப்போது, அனுபவத்தின் அதிகாரியாக இருக்கும் பயிற்சியில் அதிகளவு கவனம் செலுத்துங்கள். அனுபவத்தின் சொரூபமாக இருக்கும் ஸ்திதி சதா அகத்தே அமிழ்ந்திருக்கும். இத்தகைய ஆத்மாவின் முகமும் செயல்களும் சேவை செய்யும்.

இன்று, பாப்தாதா குழந்தைகளின் பதிவேடுகளைப் பார்த்தார். முதலில், எரிமலை யோகத்தைக் கொண்டிருப்பதில் அதிக கவனம் செலுத்துங்கள். இதன் மூலம் நீங்கள் உங்களின் சுபாவம் மற்றும் சம்ஸ்காரங்களை மாற்றுவதற்கான உதவியைப் பெற முடியும். இப்போதும் நீங்கள் உங்களின் சுபாவம் என்று அழைக்கும் உங்களின் சம்ஸ்காரங்கள், தமது வேலையை அவ்வப்போது செய்கின்றன. மற்றும்படி பாப்தாதா களிப்படைகிறார். எதையிட்டு? பாப்தாதா எதையிட்டுக் களிப்படைகிறார் என்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் முரளிகளைச் செவிமடுப்பதை பாப்தாதா கண்டார். தற்காலத்தில், நீங்கள் உங்களின் நேர அட்டவணையில் அதிக கவனம் செலுத்துகிறீர்கள். உங்களின் கவனம் (அட்டென்ஷன்) அதிகரித்துள்ளது. உங்களின் சம்ஸ்காரங்களின் பதட்டம் (டென்ஷன்) தொடர்ந்து குறைவடையும். பாப்தாதா உங்களுக்கு முன்னரும் கூறியுள்ளார், எப்பொழுதெல்லாம் டென்ஷன் ஏற்படுகிறதோ, அதற்கு ஒரு ‘அ’ வைச் சேருங்கள், அங்கே அட்டென்ஷன் இருக்கும். அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும். இது உறுதியான சத்தியம். நாங்கள் ஒன்றாகத் திரும்பிச் செல்வோம், நாங்கள் ஒன்றாக ஆட்சி செய்வோம். நீங்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்கிறீர்களா? அல்லது, சிலவேளைகளில் மட்டும் சந்தோஷமாக இருக்கிறீர்களா? நீங்கள் சிலவேளைகளில் மட்டுமன்றி, எப்போதும் சந்தோஷமாக இருப்பதாக நம்புபவர்கள், கவனமாகச் சிந்தித்த பின்னர் உங்களின் கைகளை உயர்த்துங்கள்! அச்சா. நீங்கள் கவனமாகச் சிந்தித்த பின்னர் உங்களின் கைகளை உயர்த்துகிறீர்கள். சந்தோஷம் என்பது உங்களுக்குச் சொந்தமான ஒன்று. உங்களுக்குச் சொந்தமான ஒன்றை நீங்கள் ஏன் இழக்க வேண்டும்? எனவே, இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் முன்னேற வேண்டும். நாங்கள் இப்போது என்ன செய்யலாம்? ஒவ்வொரு நிலையமும் தடைகளில் இருந்தும் வீணான எண்ணங்களில் இருந்தும் விடுபட்டு இருப்பது சாத்தியமா? இது சாத்தியமா? அல்லது, இதற்காக உங்களுக்கு நேரம் தேவையா? இதுவரை, எந்தவொரு நிலையத்தில் இருந்தும் தமது நிலையம் தடைகளில் இருந்து சதா விடுபட்டு இருப்பதாகவும் தமது சகபாடிகளும் தடைகளில் இருந்து விடுபட்டு இருப்பதாகவும் அறிக்கை பாப்தாதாவிற்குக் கிடைக்கவில்லை. நீங்கள் மட்டுமன்றி, உங்களின் சகபாடிகளும் அவ்வாறே இருக்க வேண்டும். அந்த நேரமும் வரும். அது நடக்கும், ஏனென்றால், குழந்தைகளான நீங்களே அவ்வாறு ஆக வேண்டும். இறுதியில் வந்து, தீவிர முயற்சியாளராகி முன்னால் சென்றதாக எவரின் உதாரணமும் இல்லை. நீங்கள் அனைவரும் பெரும்பான்மையாக முன்னேறிச் செல்ல வேண்டும். உங்களில் பெரும்பாலானோருக்கு முரளியின் மீது அன்பு இருப்பதை பாப்தாதா கண்டார். எவ்வாறாயினும், ஜகதாம்பா தனது நடைமுறை வாழ்க்கையில் செய்து காட்டியதைப் போல், தந்தை எதைக் கூறினாலும் அது செய்யப்பட வேண்டும். அவர் தனது இலட்சியத்தை வைத்திருந்து, அந்த முயற்சியில் கவனமும் செலுத்தினார். முன்னோடிக் குழுவிற்குச் சென்று விட்ட உங்களின் தீதி மற்றும் தாதிகளும் அந்தக் கவனத்தைச் செலுத்தினார்கள். அவர்கள் இப்போது உங்களுக்காகக் காத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் கேட்கிறார்கள்: சம்பூரணத்திற்கான வாசல்கள் எப்போது திறக்கும்? ஒருவரோ அல்லது இரண்டு பேரோ மட்டும் வாசல்களைத் திறக்கப் போவதில்லை. எனவே இப்போது, வாசல்களைத் திறப்பதற்கான நேரத்தை நெருக்கமாகக் கொண்டு வாருங்கள். சம்பூரணம் ஆகுவது என்றால், காலத்தை நெருக்கமாகக் கொண்டு வருதல் என்று அர்த்தம். அச்சா.

பாப்தாதா எங்கும் உள்ள குழந்தைகளான உங்கள் அனைவருக்கும் தனது இதயபூர்வமான அன்பை வழங்குகிறார். அத்துடன் கூடவே, பாப்தாதா உங்களுக்கு இரண்டு மாதங்களுக்காகக் கொடுத்த வீட்டுவேலையைப் பற்றியும் உங்கள் அனைவருக்கும் நினைவூட்டுகிறார். ஏன்? பொதுவாக, இந்த வீணான எண்ணங்கள் உங்களின் முயற்சிகளைத் தீவிரம் ஆக்குவதற்குப் பதிலாக அவற்றைச் சாதாரணமானவை ஆக்குகின்றன. ஆகவே, அன்பு மற்றும் நினைவுடன் கூடவே, எங்கும் உள்ள குழந்தைகளான உங்கள் அனைவருக்கும் பாப்தாதா நினைவூட்டுகிறார்: இப்போது, சங்கமயுகக் காலம் மிகவும் அழகானது மற்றும் மேன்மையானது! இந்த சங்கமயுகத்தில் மட்டுமே நீங்கள் தந்தையிடம் இருந்து சகல பொக்கிஷங்களையும் பெறுகிறீர்கள். சங்கமயுகத்தின் ஒவ்வொரு வினாடியும் மகத்தானது. ஆகவே, எப்போதும் சங்கமயுகத்தின் பெறுமதியை உங்களின் புத்திகளில் வைத்திருங்கள். சங்கமயுகத்தின் ஒரு விநாடி, உங்களை அதிகளவு பேறுகளைப் பெறச் செய்கிறது. நீங்கள் எதைப் பெற்றுள்ளீர்கள்? என்று யாராவது உங்களைக் கேட்டால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்? பிராமணர்களான எங்களின் இதயங்களில் எந்தவிதக் குறைவும் இல்லை. நாங்கள் விரும்பியதை அடைந்து விட்டோம். இப்போது அதைப் பயன்படுத்துங்கள், தீவிர முயற்சியாளராகி, காலத்தை நெருக்கமாகக் கொண்டு வாருங்கள். அச்சா. அனைவருக்கும் உற்சாகம் உள்ளது என்பதை பாப்தாதா பார்த்தார். எனவே, சதா இந்த உற்சாகத்தைத் தொடர்ந்து அதிகரியுங்கள். அச்சா.

ஆசீர்வாதம்:
உங்களின் சொந்த ரூபத்தால் உங்களின் பக்தர்களுக்கு உங்களின் ஒளிக்கிரீடத்தின் காட்சியை அருளுகின்ற இஷ்ட தெய்வம் ஆகுவீர்களாக.

நீங்கள் தந்தையின் குழந்தைகளாகி, தூய்மைக்கான சத்தியத்தைச் செய்யும்போது, அதற்குப் பலனாக ஒளிக்கிரீடத்தைப் பெற்றீர்கள். இந்த ஒளிக்கிரீடத்துடன் ஒப்பிடும்போது இரத்தினங்கள் பதித்த கிரீடம் எதுவுமே இல்லை. எந்தளவிற்கு அதிகமாக உங்களின் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களில் தூய்மையைக் கிரகிக்கிறீர்களோ, அந்தளவிற்கு உங்களின் ஒளிக்கிரீடம் தெளிவாக ஆகும். அப்போது நீங்கள் உங்களின் பக்தர்களுக்கு முன்னால் விசேடமான இஷ்ட தெய்வமாக வெளிப்படுத்தப்படுவீர்கள்.

சுலோகம்:
சதா பாப்தாதாவின் பாதுகாப்புக் குடையின் கீழ் இருங்கள், நீங்கள் தடைகளை அழிப்பவர் ஆகுவீர்கள்.

அவ்யக்த சமிக்ஞை: மற்றவர்களை ஈடேற்றும் மனப்பான்மையைக் கொண்டிருந்து, உங்களை இகழ்பவர்களையும் ஈடேற்றுங்கள்.

பாப்தாதா ஒவ்வொரு பணியிலும் குழந்தைகளான உங்களுடன் ஒத்துழைக்கிறார், அவர் இறுதிவரை தொடர்ந்தும் ஒத்துழைப்பார். பாபா எவரையும் வெறுப்பதில்லை. அவர் தன்னை இகழ்பவர்களுக்காகவும் எப்போதும் சாதகமான எண்ணங்களைக் கொண்டிருக்கிறார். ஆகவே, தந்தையைப் பின்பற்றுங்கள். சதா ஒவ்வோர் ஆத்மாவிற்காகவும் தூய நோக்கங்களையும் சாதகமான உணர்வுகளையும் கொண்டிருங்கள். ஒருவர் ஏன் எதைச் செய்தார் என்று நினைப்பதற்குப் பதிலாக, ஒவ்வோர் ஆத்மாவிற்கும் உங்களால் எப்படி நன்மை செய்ய முடியும் என்று சிந்தித்துப் பாருங்கள். அப்போது நீங்கள் அனைவருக்கும் சாதகமான எண்ணங்களைக் கொண்டிருக்கும் உலக உபகாரி ஆத்மா என்று அழைக்கப்படுவீர்கள்.

விசேட அறிவித்தல்: மாதத்தின் மூன்றாம் ஞாயிற்றுக் கிழமைக்கான யோகப் பயிற்சி.

இன்று மாதத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை. சகல சகோதரர்களும் சகோதரிகளும் மாலை 6.30 இலிருந்து 7.30 வரை ஒன்றுகூடி யோகத்தில் இருக்க வேண்டும். உங்களின் அமைதிநிறைந்த ரூபத்தில் ஸ்திரமாகி, அமைதிக்கடலின் ஆழத்திற்குள் சென்று, ஆழமான, பரம அமைதியையும் குளிர்மையையும் அனுபவம் செய்யுங்கள். ஆத்மாக்கள் அனைவருக்கும் அமைதியைத் தானம் செய்யும் சேவையைச் செய்யுங்கள்.