19.06.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் சிவபாபாவிற்குக் கொடுக்கும் மலர்களை அவரால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் அவர் பூஜிப்பவராகவோ அல்லது பூஜிக்கத்தகுதி வாய்ந்தவராகவோ ஆகுவதில்லை. நீங்களும் மலர் மாலைகள் எதனையும் சங்கமயுகத்தில் அணியக்கூடாது.

கேள்வி:
யாரால் எதிர்கால இராச்சியத்தின் சிம்மாசனத்திற்கான உரிமையைக் கோர முடியும்?

பதில்:
இந்த நேரத்தில் தாயினதும் தந்தையினதும் இதய சிம்மாசனத்தை வெற்றி கொள்பவர்களே எதிர்காலச் சிம்மாசனத்தில் அமர்பவர்கள் ஆகுவார்கள். குழந்தைகள் தமது தாய் தந்தையை முந்திச் செல்வது ஓர் அற்புதம் ஆகும். அவர்கள் முயற்சி செய்து தமது பெற்றோரையும் முந்திச் செல்கின்றார்கள்.

பாடல்:
ஆகாயம் என்ற உங்கள் சிம்மாசனத்தை விட்டிறங்கி பூமிக்கு வாருங்கள்!

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்ட அன்பான குழந்தைகளான நீங்கள் பாடலைச் செவிமடுத்தீர்கள். சர்வவியாபி என்ற கருத்து இப்பாடலுடன் அற்றுப் போகின்றது. பாரத மக்கள் இப்பொழுது மிகவும் சந்தோஷம் இன்றி இருப்பதால், அவர்கள் அவரை நினைவு செய்கின்றார்கள். இப்பாடல்கள் அனைத்தும் நாடகத்திற்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளன. உலக மக்களுக்கு இது தெரியாது. தந்தை வந்து தூய்மை அற்றவர்களைத் தூய்மையாக்கி மக்களைத் துன்பத்தில் இருந்து அகற்றி அவர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கின்றார். அதே தந்தையே வந்துள்ளார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் அதனை இனங்கண்டுள்ளீர்கள். அவரே இங்கு அமர்ந்திருந்து உங்களிடம் கூறுகின்றார்: நான் ஒரு சாதாராண சரீரத்தில் பிரவேசித்து முழு உலகினதும் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய இரகசியத்தை உங்களிடம் கூறுகின்றேன். ஒரேயொரு உலகமே உள்ளது. குழந்தைப் பருவத்தில் சரீரம் புதியதாகவும் பின்னர் பழையதாகவும் ஆகுவதைப் போன்றே இவ்வுலகமும் பழையதாகவும் புதியதாகவும் ஆகுகின்றது. புதியது ஒன்றும், பழையது ஒன்றும் என இரண்டு சரீரங்கள் உள்ளன என நீங்கள் கூறுவதில்லை. சரீரம் ஒன்றே, ஆனால் அது புதியதில் இருந்து பழையது ஆகுகின்றது. அவ்வாறே ஒரேயொரு உலகமே உள்ளது. இப்பொழுது அது புதியதில் இருந்து பழையது ஆகியுள்ளது. அது எப்பொழுது புதிதாக இருந்தது? எவராலும் உங்களுக்கு இதனைக் கூற முடியாது. தந்தை வந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே, உலகம் புதிதாக இருந்தபோது, பாரதமும் புதிதாக இருந்தது. அப்பொழுது அது சத்தியயுகம் என்று அழைக்கப்பட்டது. அதே பாரதமே இப்பொழுது பழையதாகி உள்ளது. இது பழைய உலகம் என அழைக்கப்படுகின்றது. அந்தப் புதிய உலகம் இப்பொழுது பழையதாகி உள்ளதால், அது மீண்டும் நிச்சயமாகப் புதியதாக ஆகவேண்டும். குழந்தைகள் சிலர் புதிய உலகின் காட்சிகளைக் கண்டிருக்கின்றார்கள். நல்லது, யார் அப்புதிய உலகின் அதிபதிகளாக இருந்தார்கள்? உண்மையில், இலக்ஷ்மியும் நாராயணனுமே அதிபதிகளாக இருந்தார்கள். ஆதிசனாதன தேவதேவியரே அவ்வுலகின் அதிபதிகளாக இருந்தார்கள். தந்தை இதனைக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது நீங்கள் இதனைச் சதா நினைவுசெய்ய வேண்டும். தந்தை பரந்தாமத்தில் இருந்து எங்களுக்கு இதனைக் கற்பிக்கவே வந்துள்ளார். அவர் எங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கவே வந்துள்ளார். எல்லாப் புகழும் அவருக்கே உரியதாகும். இவருக்கென எப்புகழும் இல்லை. இந்த நேரத்தில் அனைவரும் சீரழிந்த புத்திகளை உடையவர்களாக இருப்பதால் அவர்களுக்கு எதுவுமே புரியாது. ஆகையாலேயே நான் வந்திருக்கின்றேன், அத்துடன் இப்பாடல்களும் இயற்றப்பட்டுள்ளன. இப்பாடலுடன் சர்வவியாபி என்ற கருத்து அற்றுப் போகின்றது. ஒவ்வொருவரும் தத்தமது பாகத்தைக் கொண்டிருக்கின்றார்கள். தந்தை உங்களுக்கு மீண்டும் மீண்டும் கூறுகின்றார்: சரீர உணர்வைத் துறந்து, ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகி, உங்கள் பௌதீகப் புலன்களினூடாக இக்கற்பித்தல்களைக் கிரகியுங்கள்! நீங்கள் இந்த பாபாவை பார்த்தாலும் கூட நடந்து திரியும் போதெல்லாம் சிவபாபாவையே நினைவு செய்யுங்கள். சிவபாபாவே அனைத்தையும் செய்கின்றார் என்றும் அங்கு பிரம்மா இல்லை என்றும் நீங்கள் எப்பொழுதும் கருத வேண்டும். அவரது வடிவம் உங்கள் கண்களில் தென்படும்போதும், உங்கள் புத்தி சிவபாபாவுடனேயே இருக்க வேண்டும். சிவபாபா இங்கில்லாதிருந்தால், இவரின் ஆத்மாவினாலும் சரீரத்தினாலும் எப்பயனும் இல்லை. சிவபாபா இவருக்குள் இருக்கின்றார் என்றும் இவரினூடாகவே அவர் கற்பிக்கின்றார் என்றும் எப்பொழுதும் நினைவு செய்யுங்கள். இவர் உங்கள் ஆசிரியர் அல்ல. அவரே பரம ஆசிரியர் ஆவார். நீங்கள் அவரையே நினைவு செய்ய வேண்டும். சரீரத்தை ஒருபொழுதும் நினைவு செய்யாதீர்கள். உங்கள் புத்தியின் யோகத்தைத் தந்தையுடன் இணைத்திருங்கள். குழந்தைகள் அவரை நினைவுசெய்து கூறுகின்றார்கள்: இந்த ஞானத்தையும் யோகத்தையும் கற்பிக்க மீண்டும் ஒருமுறை வாருங்கள். பரமாத்மாவான பரமதந்தையை அன்றி வேறு எவராலும் இராஜயோகத்தைக் கற்பிக்க முடியாது. அவர் மாத்திரமே அமர்ந்திருந்து இந்த கீதைஞானத்தைக் கூறுகின்றார் என்பது குழந்தைகளாகிய உங்களது புத்தியில் உள்ளது. அதன் பின்னர் இந்த ஞானம் மறைந்து விடுகின்றது. அங்கு அதற்கான அவசியம் இருக்க மாட்டாது. ஏனெனில் இராச்சியம் ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டிருப்பதுடன் நீங்கள் சற்கதி அடைந்திருப்பீர்கள். சீரழிந்திருக்கும் உங்களுக்குச் சற்கதி அளிப்பதற்கே ஞானம் கொடுக்கப்படுகின்றது. ஏனைய அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கு உரியதாகும். பக்தி மார்க்கத்திற்குரிய கிரியைகள், தபஸ்யா, தான தர்மங்கள் போன்றவற்றைச் செய்வதன் மூலம் என்னை எவராலும் அடைய முடியாது. ஆத்மாக்களின் இறக்கைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஆத்மாக்கள் கற்புத்தி உடையவர்களாக இருக்கின்றார்கள். நான் கல்லாக இருப்பவர்களைத் தெய்வீகமாக மாற்றவே வந்துள்ளேன். தந்தை கூறுகின்றார்: பல மனிதர்கள் இருக்கின்றார்கள்! அவர்கள் கடுகு விதைகளைப் போன்று முழு உலகிலும் நிறைந்துள்ளார்கள். அனைவரும் இப்பொழுது அழிய உள்ளார்கள். சத்தியுகத்தில் இத்தனை மனிதர்கள் இருப்பதில்லை. அந்தப் புதிய உலகில் உங்களுக்கு அதிகளவு பௌதீக சௌகரியங்கள் இருந்தபோதிலும் மனிதர்கள் வெகு சிலரே வாழ்வார்கள். இங்கே பல மக்கள் இருப்பதால் அவர்கள் அனைவருக்கும் உண்பதற்குப் போதியளவு உணவு இல்லாதுள்ளது. இப்பொழுது பூமி பழையதாகவும் வறண்டதாகவும் உள்ளது. பின்னர் அது புதியதாகும். அங்கே, அனைத்தும் புதிதாகவே இருக்கும். அதன் பெயர் மிக இனிமையானது: சுவர்க்கம், பாகிஸ்ட், தேவர்களின் புதிய உலகமாகும். பழைய உலகை அழித்துவிட்டுப் புதிய உலகில் இருக்கவே இதயம் விரும்புகின்றது. இப்பொழுது அந்தப் புதிய உலகமான சுவர்க்கத்திற்குச் செல்வது என்ற ஒன்று மாத்திரமே உள்ளது. பழைய சரீரத்திற்கு எந்தப் பெறுமதியும் இல்லை. சிவபாபாவிற்கு தனக்கெனச் சரீரம் எதுவும் இல்லை. குழந்தைகள் கூறுகின்றார்கள்: நாங்கள் பாபாவிற்கு மாலை இட விரும்புகின்றோம். எவ்வாறாயினும் நீங்கள் இவருக்கு மாலை இட்டால், உங்கள் புத்தியின் யோகம் அவரிடமே செல்லும். சிவபாபா கூறுகின்றார்: மாலைக்கு அவசியம் இல்லை. நீங்கள் மாத்திரமே பூஜிப்பவர்களாகவும், பூஜிக்கத்தகுதி வாய்ந்தவர்களாகவும் ஆகுகின்றீர்கள். நீங்களே பூஜிப்பவர்களாகவும் ஆகி, பின்னர் பூஜிக்கத்தகுதி வாய்ந்தவர்களாகவும் ஆகுகின்றீர்கள். ஆகையால் நீங்கள் உங்கள் சொந்த விக்கிரங்களையே வழிபட ஆரம்பித்தீர்கள். பாபா கூறுகின்றார்: நான் பூஜிக்கத்தகுதி வாய்ந்தவராக ஆகுவதும் இல்லை, எனக்கு பூக்கள் போன்றவற்றிற்கான அவசியமும் இல்லை. நான் ஏன் அவற்றை அணிய வேண்டும்? ஆகையாலேயே பாபா ஒருபோதும் மாலை போன்ற எதனையும் அணிவதில்லை. நீங்கள் பூஜிக்கத்தகுதி வாய்ந்தவர்கள் ஆகுவதால் பின்னர் நீங்கள் விரும்பியளவிற்கு மலர்களை அணிந்து கொள்ளுங்கள். நான் குழந்தைகளாகிய உங்களது அதி அன்பிற்குரிய கீழ்ப்படிவான தந்தை ஆவேன். நான் உங்கள் ஆசிரியரும் உங்கள் சேவகனும் ஆவேன். முக்கியஸ்தர்களும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் கடிதங்களில் கையெழுத்திடும் போது அவர்கள் மின்டோ அல்லது கேசோன் (20 நூற்றாண்டின் ஆரம்பத்தில் வைஸ்ரோய்ஸ்) என எழுதுவதுண்டு. அவர்கள் ஒருபோதும் இன்ன பிரபு என எழுதுவதில்லை. இங்கே, ஸ்ரீ இலக்ஷ்மி நாராயணன், ஸ்ரீ இன்னார் என அவர்கள் எழுதுகின்றார்கள். ஸ்ரீ என்ற பட்டத்தை அவர்கள் தமக்கு மிகவும் இலகுவாகச் சூட்டிக் கொள்கின்றார்கள். தந்தை இங்கே அமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார்: இப்பொழுது இந்தச் சரீரத்தை நினைவு செய்யாதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் ஓர் ஆத்மா என்ற நம்பிக்கையுடன் தந்தையை நினைவு செய்யுங்கள். இப்பழைய உலகில் ஆத்மா, சரீரம் இரண்டுமே தூய்மை அற்றதாகவே உள்ளது. தங்கம் 9 கரட்டாக இருக்கும் போது, அதனைப் பயன்படுத்திச் செய்கின்ற நகையும் ஒன்பது கரட்டாவே இருக்கும். தங்கத்துடன் மாசு கலக்கப்பட்டுள்ளது. ஆத்மாக்கள் செயல்களின் தாக்கத்திற்கு உட்படுவதில்லை என என்றுமே கருதாதீர்கள். இந்த நேரத்தில் உங்களுக்கு இந்த ஞானம் உள்ளது. நீங்கள் அரைக்கல்பத்திற்கு, அதாவது, 21 பிறவிகளுக்கு வெகுமதியைப் பெறுகின்றீர்கள். ஆகையால் அதிகளவு முயற்சி செய்ய வேண்டும். எவ்வாறாயினும் குழந்தைகளாகிய நீங்கள் மீண்டும் மீண்டும் மறந்து விடுகின்றீர்கள். சிவபாபா பிரம்மாவின் மூலம் எங்களுக்குக் கற்பித்தல்களைக் கொடுக்கின்றார். பிரம்மாவின் ஆத்மாவும் அவரையே நினைவு செய்கின்றார். பிரம்மா, விஷ்ணு, சங்கரர் போன்றோர் சூட்சும உலக வாசிகள் ஆவார்கள். தந்தை முதலில் சூட்சும உலகையே ஸ்தாபிக்கின்றார். நிர்வாணா தேசமே அதிமேலான இடமாகும். ஆத்மாக்களின் நிர்வாணா தேசமே அனைத்திலும் அதிமேலானதாகும். பக்தர்கள் அனைவரும் ஒரேயொரு கடவுளையே நினைவு செய்கின்றார்கள். எவ்வாறாயினும், அவர்கள் தமோபிரதான் ஆகி, தந்தையை மறந்து விட்டதால், அவர்கள் கற்கள், கூழாங்கற்கள் போன்றவற்றை நினைவு செய்கின்றார்கள். நடப்பவை அனைத்தும் நாடகத்தில் பதிவு செய்யப்படுகின்றன என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். ஒரு நாடகத்தில் ஏதாவது படம் பிடிக்கப்பட்டதும் - உதாரணமாக, ஒரு காட்சியில் ஒரு பறவை குறுக்கே பறக்கும் போது படம் பிடிக்கப்பட்டிருந்தால் - அது மீண்டும் மீண்டும் தொடர்ந்தும் இடம்பெறும். ஒரு பட்டம் பறந்தால், அது பதிவு செய்யப்பட்டிருந்தால், அதுவும் மீண்டும் மீண்டும் தொடர்ந்தும் இடம்பெறும். இங்கும், ஒரு நாடகத்தின் ஒவ்வொரு விநாடியும் தொடர்ந்தும் இடம்பெறும், அது தொடர்ந்தும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. நீங்கள் நடிகர்கள், முழு நாடகத்தையும் நீங்கள் பற்றற்ற பார்வையாளர்களாகவே பார்க்கின்றீர்கள். ஒவ்வொரு விநாடியும் நாடகத்திற்கு ஏற்பவே கடந்து செல்கின்றது. ஓர் இலை அசைந்தால், அதுவும் நாடகத்தில் கடந்து செல்லும் காட்சியாகும்.கடவுளின் வழிகாட்டல்களுக்கு ஏற்பவே ஒவ்வோர் இலையும் அசைகின்றது என்றில்லை. இல்லை. இவை அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளன. இது மிகவும் தெளிவாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும். தந்தை மாத்திரமே வந்து இராஜயோகத்தைக் கற்பித்து, நாடகத்தைப் பற்றிய இந்த ஞானத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார்.மிகவும் நல்ல படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மணிக்கூட்டின் முள் சங்கமயுகத்தில் காட்டப்பட்டுள்ளது. இது கலியுக இறுதியினதும், சத்தியயுக ஆரம்பத்தினதும் சங்கமம் ஆகும். பழைய உலகில் எண்ணிலடங்காத சமயங்கள் உள்ளன. புதிய உலகில் இவை இருக்க மாட்டாது. தந்தை எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதால் நாங்கள் இறை மாணவர்கள் என்றே குழந்தைகளாகிய நீங்கள் எப்பொழுதும் நினைக்க வேண்டும். கடவுள் பேசுகின்றார்: நான் உங்களை அரசர்களுக்கு எல்லாம் அரசர் ஆக்குகின்றேன். அரசர்கள் இலக்ஷ்மி நாராயணனை வழிபடுவதுண்டு. நானே அவர்களைப் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்குகின்றேன். பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்தவர்கள் இப்பொழுது பூஜிப்பவர்கள் ஆகியுள்ளார்கள். நீங்களே பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்தீர்கள் என்றும், இப்பொழுது நீங்கள் பூஜிப்பவர்கள் ஆகியுள்ளீர்கள் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். பாபா அவ்வாறு ஆகுவதில்லை. பாபா கூறுகின்றார்: நான் பூஜிக்கத்தகுதி வாய்ந்தவராகவோ அல்லது பூஜிப்பவராகவோ ஆகுவதில்லை. ஆகையாலேயே நான் மாலை அணிவதும் இல்லை, நான் பிறருக்கு மாலை அணிவிக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஆகையால் நான் ஏன் மலர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்? நீங்களும் மலர்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது. சட்டப்படி அந்தத் தேவர்கள் மாத்திரமே அவற்றை அணியும் உரிமை உடையவர்கள். ஏனெனில் அவர்களின் ஆத்மா, சரீரம் இரண்டும் தூய்மையானவை. அவர்கள் மாத்திரமே மலர்கள் அணிவதற்குரிய உரிமை உடையவர்கள். அங்கே, சுவர்க்கத்தில், நறுமணம் வீசும் மலர்கள் மாத்திரமே இருக்கும். மலர்கள் நறுமணம் கமழச் செய்யவே உள்ளன. அவற்றைச் சூடிக் கொள்ளவும் முடியும். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளாகிய நீங்கள் விஷ்ணுவின் கழுத்து மாலையாகிக் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் வரிசைக்கிரமமாக சிம்மாசனத்தில் அமர்வீர்கள். முன்னைய கல்பத்தில் நீங்கள் செய்த முயற்சிக்கு ஏற்ப, இப்பொழுது அத்தகைய முயற்சியையே செய்கின்றீர்கள். தொடர்ந்தும் அவ்வாறே செய்வீர்கள். அது வரிசைக்கிரமமாகவே இருக்கும். இன்னார் அதிகளவு சேவை செய்பவர் எனப் புத்தி கூறுகின்றது. ஒரு கடையிலும் ஒருவர் அக்கடையின் சொந்தக்காரராகவோ அல்லது பங்காளராகவோ அல்லது நிர்வாகியாவோ இருக்கலாம். அவருக்குக் கீழே வேலை செய்வர்களுக்கும் கூடப் பதவியுயர்வு கிடைப்பதுண்டு. இங்கும் அவ்வாறே. நீங்கள் தாயையும் தந்தையையும் வெற்றி கொள்ள வேண்டும். தாய் தந்தையை எவ்வாறு முந்திச் செல்ல முடியும் என நீங்கள் திகைக்கின்றீர்கள். குழந்தைகளான நீங்கள் முயற்சி செய்வதற்கும் உங்களைச் சிம்மாசனத்தில் அமரும் தகுதியுடையவர்கள் ஆக்குவதற்கும் தந்தை உதவி செய்கின்றார். ஆகையாலேயே கூறப்படுகின்றது: எனது இதய சிம்மாசனத்தை வெற்றி கொண்டால், நீங்கள் எதிர்கால சிம்மாசனத்தில் அமரும் தகுதி பெறுவீர்கள். நீங்கள் சாதாரண மனிதரில் இருந்து நாராயணன் ஆகுமளவிற்கு அத்தகையதொரு முயற்சியைச் செய்யுங்கள். ஒரேயொரு பிரதானமான இலட்சியமும் குறிக்கோளுமே உள்ளன. ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுவதுடன், அதில் பல்வேறு அந்தஸ்துகளும் உள்ளன. நீங்கள் மாயையை வெற்றி கொள்வதற்கு முழுமையாக முயற்சி செய்ய வேண்டும். உங்கள் குழந்தைகள் போன்றோருடன் நீங்கள் அதிகளவு அன்புடன் பழக வேண்டும். ஆனால் ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராகவே இருக்க வேண்டும். பக்தி மார்க்கத்தில் நீங்கள் கூறுவதுண்டு: கடவுளே, இவை அனைத்தும் உங்களால் கொடுக்கப்பட்டவை. எங்கள் பொறுப்பில் கொடுக்கப்பட்டவற்றை நீங்கள் மீண்டும் எடுத்துக் கொண்டீர்கள். நல்லது. அவ்வாறாயின் அழுவதற்கான அவசியம் இல்லை! எவ்வாறாயினும் இது அழுகின்ற உலகம். மக்கள் பல கதைகள் கூறுகின்றார்கள். பற்றை வென்ற ஓர் அரசரின் கதையைக் கூறுகின்றார்கள். அவர் எந்த வலியையும் உணரவில்லை. அவர் தனது சரீரத்தை நீக்கி இன்னொன்றை எடுத்தார். அங்கே எந்த நோயும் இருப்பதில்லை. அங்கே, உங்கள் சரீரங்கள் என்றென்றும் ஆரோக்கியமாகவே இருக்கும். அவை 21 பிறவிகளுக்கு எந்த நோய்களும் அற்றிருக்கும். சில குழந்தைகள் காட்சிகளைக் கண்டிருக்கின்றார்கள். அங்கிருக்கும் சம்பிரதாயங்கள், அவர்கள் எவ்வாறான ஆடைகள் போன்றவற்றை அணிவார்கள், அங்கே எவ்வாறு திருமணங்கள் இடம்பெறும் போன்றவற்றின் காட்சிகளை அவர்கள் கண்டுள்ளார்கள். இப்பொழுது அந்தப் பாகம் கடந்து விட்டது. அந்த நேரத்தில் உங்களுக்கு அதிகளவு இந்த ஞானம் இருக்கவில்லை. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் நாளுக்குநாள் அதிகளவு சக்தியைப் பெறுகின்றீர்கள். இவை அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளன. அது ஓர் அற்புதமாகும்! பரமாத்மாவான பரமதந்தைக்கும் மிகவும் முக்கியமானதொரு பாகம் உள்ளது. அவர் அங்கிருக்கும்போது, பக்தி மார்க்கம் உட்பட தான் செய்கின்ற சகல செயல்களையும் பற்றி உங்களுக்கு இங்கே அமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார். சக்கரத்தில் ஒருமுறை மாத்திரமே நான் இங்கே வருகின்றேன். அசரீரியானவரை வழிபட்டுக் கொண்டிருக்கும் பலரும் உள்ளனர். எவ்வாறாயினும், பரமாத்மா பரமதந்தை எவ்வாறு வந்து எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்றொரு விடயத்தை அவர்கள் அனைவரும் அறியத் தவறியுள்ளார்கள். அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் பெயரைக் கீதையில் இட்டுள்ளார்கள். ஆகையாலேயே அசரீரியானவரின் மீதுள்ள அவர்களின் அன்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கடவுளே வந்து எங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்து, உலகை மாற்றியுள்ளார். உலகம் தொடர்ந்தும் மாறிக் கொண்டிருக்கின்றது. யுகங்கள் தொடர்ந்தும் சுழல்கின்றன. நீங்கள் இப்பொழுது இந்த உலக நாடகச் சக்கரத்தைப் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். மக்கள் எதனையும் அறியாதுள்ளார்கள். அவர்கள் சத்தியயுகத் தேவர்களையுமே அறியாதுள்ளார்கள். தேவர்களின் அடையாளங்கள் மாத்திரமே எஞ்சியுள்ளன. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: எப்பொழுதும் நீங்கள் சிவபாபாவிற்கு உரியவர் என்றும் அவரே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்றும் கருதவேண்டும். சிவபாபா எப்பொழுதும் பிரம்மாவினூடாகவே கற்பித்தல்களைக் கொடுக்கின்றார். அதன் பின்னர் நீங்கள் சிவபாபாவை நினைவு செய்து தொடர்ந்தும் அதிகளவு களிப்படைவீர்கள். வேறு எவரும் அத்தகையதொரு தந்தையான கடவுளாக இருக்க முடியுமா? அவரே தந்தையும், ஆசிரியரும், சற்குருவும் ஆவார். சில தந்தையரும் பாடசாலைகளில் கற்பிக்கின்றார்கள். அவர்களின் குழந்தைகள் கூறுவதுண்டு: எனது தந்தையே எனக்கு ஆசிரியரும் ஆவார். எவ்வாறாயினும், அந்தத் தந்தை குருவாகவும் இருக்க முடியாது. ஆம், அவர் ஆசிரியராக இருக்க முடியும். ஒரு லௌகீகத் தந்தையை ஒருபோதும் குரு என்று அழைக்க முடியாது. இவரின் லௌகீகத் தந்தையும் கற்பிக்கும் ஓர் ஆசிரியராகவே இருந்தார். அவர் எல்லைக்கு உட்பட்ட ஆசிரியரும், தந்தையும் ஆவார். அவர் எல்லைக்கு அப்பாற்பட்ட தந்தையும் ஆசிரியரும் ஆவார். உங்களை இறை மாணாக்கர் என்று நீங்கள் கருதுவதே மகாபாக்கியமாகும். தந்தையான கடவுளே எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பது மிகவும் தெளிவாக உள்ளது! பாபா மிகவும் இனிமையானவர் ஆவார்! அன்பிற்கினியவருக்கும் காதலிக்கும் இடையில் உள்ள அன்பைப் போன்று இனிய விடயங்களும் நினைவு செய்யப்படுகின்றன. அவர்கள் விகாரத்திற்காக ஒருவரையொருவர் நினைவு செய்வதில்லை. அவர்கள் ஒருவரையொருவர் தொடர்ந்து பார்த்துக் கொண்டு மாத்திரமே இருக்கின்றார்கள். ஆத்மாக்களாகிய நாங்கள் பரமாத்மாவான தந்தையுடன் யோகம் செய்கின்றோம். ஆத்மா கூறுகின்றார்: பாபா ஞானக்கடலும் அன்புக்கடலும் ஆவார். அவர் இந்தத் தூய்மையற்ற உலகிற்குள் ஒரு தூய்மையற்ற சரீரத்திற்குள் பிரவேசித்து எங்களை மிகவும் மேன்மையானவர்கள் ஆக்குகின்றார்கள்! மனிதனைத் தேவர்கள் ஆக்குவதற்கு கடவுளுக்கு அதிகளவு காலம் எடுக்கவில்லை என்று நினைவு கூரப்படுகின்றது. நீங்கள் வைகுந்தத்திற்கு ஒரு விநாடியில் செல்கின்றீர்கள். நீங்கள் மனிதர்களில் இருந்து ஒரு விநாடியில் தேவர்கள் ஆகுகின்றீர்கள். இதுவே உங்கள் இலட்சியமும் குறிக்கோளும் ஆகும். இதற்கு நீங்கள் கற்க வேண்டும். குருநானக்கும் கூறினார்: கடவுள் அழுக்கான, தூய்மையற்ற ஆடைகளைச் சலவை செய்கின்றார். இது லக்ஸ் (இலக்கு) சவர்க்காரமாகும். பாபா கூறுகின்றார்: நான் மிகவும் சிறந்த சலவைக்காரன்! நான் உங்கள் ஆடைகளை, ஆத்மாக்களாகிய உங்களை மற்றும் உங்கள் சரீரங்களை மிகவும் தூய்மையாகவும் சுத்தமாகவும் சலவை செய்கின்றேன்! இவரை (தாதா) நீங்கள் நினைவு செய்யவேனும் கூடாது. இந்த முழுப் பணியும் சிவபாபாவுடையதாகும். ஆகையால் அவரை மாத்திரமே நினைவு செய்யுங்கள். அவர் இவரையும் விட இனிமையானவர் ஆவார். அவர் ஆத்மாக்களாகிய உங்களிடம் கூறுகின்றார்: இக்கண்களால் நீங்கள் பிரம்மாவின் இரதத்தைப் பார்த்தாலும் சிவபாபாவையையே நினைவு செய்யுங்கள்! சிவபாபா உங்களை இவரினூடாகச் சிப்பிகளில் இருந்து வைரங்களைப் போன்று ஆக்குகின்றார். நல்லது.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையின் இதய சிம்மாசனத்தை வெற்றிகொள்ள முயற்சி செய்யுங்கள். குடும்பத்தில் ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராக இருந்து, அனைவருடனும் அன்புடன் பழகுங்கள். பற்றை வென்றவர் ஆகுங்கள்.

2. யோக சக்தியினால் ஆத்மாவை சுத்தமாகவும் தூய்மையாகவும் ஆக்குங்கள்! அக்கண்களால் அனைத்தையும் பார்க்கும் போதும் ஒரேயொரு தந்தையை மாத்திரமே நினைவு செய்யுங்கள்! இங்கே நீங்கள் மலர் மாலைகளை ஏற்றுக் கொள்ளாதீர்கள், ஆனால் நறுமணம் கமழும் மலர்கள் ஆகுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் எந்தவொரு வெகுமதிக்குமான ஆசைகள் அனைத்தையும் துறந்து, நல்லதொரு முயற்சியைச் செய்கின்ற மேன்மையான முயற்சியாளர் ஆகுவீர்களாக.

மேன்மையான முயற்சியாளர் என்றால் தனது முயற்சிகளுக்காக ஏதாவது வெகுமதியை அனுபவம் செய்வதற்கான எந்தவிதமான ஆசையையும் கொண்டிராதவர். எங்கே ஆசைகள் உள்ளனவோ, அங்கே சுத்தம் முடிவடைந்து விடுகிறது. அத்துடன் நீங்கள் சதா எண்ணங்களைக் கொண்டவர் ஆகுகிறீர்கள். இங்கே தமது வெகுமதிகளை அனுபவம் செய்ய விரும்புவர்கள், தமது எதிர்கால வருமானங்களைச் சேகரிப்பதை இல்லாமல் செய்து விடுகிறார்கள். ஆகவே, ஆசை (இச்சா) என்ற வார்த்தைக்குப் பதிலாக, நல்லது (அச்சா) என்ற வார்த்தையை நினைவில் வைத்திருங்கள். ஒரு மேன்மையான முயற்சியாளர் எப்போதும் மாசற்றவர் ஆகுவதற்கான முயற்சியையே செய்வார். அவர் ஒருபோதும் எதிலும் தோல்வி அடைய மாட்டார்.

சுலோகம்:
வசதிகளை ஒரு தாமரை மலர் போல் இருந்தவண்ணம் பயன்படுத்துங்கள். ஏனென்றால், அவை உங்களின் கர்ம யோகத்தின் பலன் ஆகும்.

அவ்யக்த சமிக்ஞை: சதா முகமலர்ச்சியுடன் இருப்பதற்கு, இலகு சுபாவமுள்ளவராகவும், சகிப்பவராகவும் இருங்கள்.

முழுமையான துறவிகளாக இருக்கும் குழந்தைகள் நிச்சயமாக இலேசானதன்மை மற்றும் சகிப்புத்தன்மை என்ற பிரதானமான நற்குணங்களைக் கொண்டிருப்பார்கள். இத்தகைய குழந்தைகள் மலர்ச்சியாக இருப்பார்கள், அத்துடன் அவர்கள் அனைவரையும் கவர்வார்கள். அவர்கள் ஒருவரோடு ஒருவர் அன்பாக இருப்பார்கள். இலேசான தன்மை இருக்காவிட்டால், அன்பு இருக்க முடியாது. சாகார் ரூபத்தில் நீங்கள் கண்டீர்கள் - எந்தளவிற்கு அவர் ஞானம் நிறைந்தவராக இருந்தாரோ, அந்தளவிற்கு அவரின் சுபாவம் இலேசாகவும் எளிமையாகவும் இருந்தது. அவர் முதிர்ச்சியானவர்களுடன் முதிர்ச்சியாகவும் குழந்தைகளுடன் குழந்தையாகவும் இருந்தார்.