19.08.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்கள் ஆதி தர்மத்தை நீங்கள் மறந்து விட்டதே, அனைத்திலும் மிகப்பெரிய தவறாகும். நீங்கள் இப்பொழுது தவறு செய்வதில் இருந்து விடுபட வேண்டும். உங்கள் வீட்டையும், உங்கள் இராச்சியத்தையும் நினைவு செய்யுங்கள்.

கேள்வி:
இந்த நேரம் முடிவுக்கு வருகின்றது என்பதைக் குழந்தைகளாகிய உங்களின் எந்த ஸ்திதி குறிப்பிடுகின்றது?

பதில்:
குழந்தைகளாகிய நீங்கள் சதா நினைவு யாத்திரை செய்வதில் போதை கொண்டிருக்கும் பொழுதும், உங்கள் புத்தி அலைபாய்வது முடிவுக்கு வரும்பொழுதும், உங்கள் வார்த்தைகளில் நினைவுச் சக்தி இருக்கும் பொழுதும், நீங்கள் முடிவற்ற சந்தோஷத்தில் நிலைத்திருக்கும் பொழுதும், உங்கள் முன்னிலையில் மீண்டும் மீண்டும் சத்தியயுக உலகக் காட்சிகள் தோன்றும் பொழுதும், நேரம் நெருங்கி விட்டது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். விநாசத்திற்கு நீண்ட காலம் இல்லை. ஆகையால் உங்கள் நினைவு அட்டவணையை அதிகரியுங்கள்.

பாடல்:
உங்களைக் கண்டதனால், நாங்கள் முழு உலகையும் கண்டு கொண்டோம்; பூமி, வானம் அனைத்தும் எங்களுக்கே உரியதாகும்.

ஓம் சாந்தி.
ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் இந்தப் பாடலின் அர்த்தத்தைப் புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் இப்பொழுது எல்லையற்ற தந்தையை அடைந்து விட்டீர்கள். நீங்கள் சுவர்க்கம் என்ற உங்கள் எல்லையற்ற ஆஸ்தியை எல்லையற்ற தந்தையிடம் இருந்து பெறுகின்றீர்கள். இந்த ஆஸ்தியை உங்களிடம் இருந்து எவராலும் அபகரிக்க முடியாது. இராவண இராச்சியம் ஆரம்பமாகும் பொழுது, ஆஸ்தியின் போதை மறைந்து விடுகின்றது. இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளாகிய உங்களிடம் உலக நாடகத்தின் இந்த ஞானம் உள்ளது. உலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கின்றது என்பதை ஒரு விளையாட்டு எனவும், அத்துடன் அதனை ஒரு நாடகம் எனவும் அழைக்கலாம். தந்தை உண்மையிலேயே வந்து உலகச் சக்கரத்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். பிராமணக் குலத்தைச் சேர்ந்தவர்களுக்கே அவர் விளங்கப்படுத்துகின்றார். குழந்தைகளாகிய உங்களுக்கு உங்கள் சொந்தப் பிறவிகளைப் பற்றித் தெரியாது. எனவே நான் அதனை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றேன். முன்னர் 8.4 மில்லியன் பிறவிகளை எடுத்த பின்னர், ஒரேயொரு மனிதப் பிறவியே எடுக்கின்றீர்கள் என்றே கேள்விப்பட்டீர்கள். அது அவ்வாறில்லை. ஆத்மாக்கள் வரிசைக்கிரமமாகக் கீழிறங்கி வருகின்றார்கள். நீங்கள் முன்னர் ஆதிசனாதன தேவதேவதா தர்மத்தைச் சேர்ந்த, பூஜிக்கத் தகுதியுடைய ஆத்மாக்களாக இருந்தீர்கள் என்பதும், பின்னர் நீங்கள் பூஜிப்பவர்களாக ஆகினீர்கள் என்பதும் உங்கள் புத்திகளில் உள்ளது. நினைவுகூரப்பட்டுள்ளது: நீங்கள் பூஜிக்கத்தகுதி உடையவர்களாக இருந்தீர்கள், பின்னர் பூஜிப்பவர்கள் ஆகினீர்கள். கடவுளையே அது குறிக்கிறது என மக்கள் நம்புகிறார்கள். அவரே பூஜிக்கத்தகுதி உடையவராகவும், பூஜிப்பவராகவும் ஆகுகிறார் என்றும், அவை அனைத்தும் அவரது வடிவங்களே என்றும் மக்கள் நம்புகின்றார்கள். எண்ணிக்கையற்ற கருத்துக்களும், அபிப்பிராயங்களும் உள்ளன. நீங்கள் இப்பொழுது ஸ்ரீமத்தைப் பின்பற்றுகின்றீர்கள். நீங்கள் மாணவர்கள் என்றும், முதலில் நீங்கள் எதனையும் அறிந்து கொள்ளவில்லை என்றும், ஆனால் கற்பதனால், நீங்கள் இப்பொழுது ஒரு பிரதான பரீட்சையில் சித்தி அடைகின்றீர்கள் என்றும் நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். அந்த மாணவர்களும் முதலில் எதனையும் அறியாதவர்களாகவே உள்ளார்கள். பின்னர், தங்கள் பரீட்சையில் சித்தியெய்திய பின்னர், தாங்கள் சட்டநிபுணர் ஆகுவதற்கான பரீட்சையில் சித்தி அடைந்து உள்ளனர் என்பதைப் புரிந்து கொள்கின்றார்கள். நீங்கள் கற்று சாதாரண மனிதரிலிருந்து தேவர்களாக மாறுகின்றீர்கள் என்பதையும், அதிலும் நீங்கள் உலக அதிபதிகளாகவும் ஆகுகின்றீர்கள் என்பதையும் நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். அங்கே, ஒரேயொரு தர்மமும், ஒரே இராச்சியமும் மாத்திரமே உள்ளன. உங்கள் இராச்சியத்தை உங்களிடம் இருந்து எவராலும் அபகரிக்க முடியாது. அங்கே, நீங்கள் தூய்மையையும் அமைதியையும் சந்தோஷத்தையும் செழிப்பையும் கொண்டிருக்கின்றீர்கள்; உங்களிடம் அனைத்தும் உள்ளன. நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். அப்பாடல்களை நீங்கள் இயற்றவில்லை. அவை நாடகத்திற்கு ஏற்ப சந்தர்ப்பவசத்தால் குறிப்பிட்ட இந்நேரத்திற்காக இயற்றப்பட்டுள்ளன. மனிதர்களால் இயற்றப்பட்ட பாடல்களின் அர்த்தத்தைத் தந்தை உங்களுக்கு இங்கிருந்து விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் இப்பொழுது இங்கே மிகவும் அமைதியாக அமர்ந்திருந்து, தந்தையிடம் இருந்து ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். அதனை உங்களிடம் இருந்து எவராலும் அபகரிக்க முடியாது. அரைக்கல்பத்திற்கு நீங்கள் சந்தோஷ ஆஸ்தியைக் கொண்டிருக்கின்றீர்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நீங்கள் அரைக்கல்பத்திற்கு மேல் சந்தோஷத்தை அனுபவம் செய்கின்றீர்கள். பின்னர் இராவண இராச்சியம் ஆரம்பம் ஆகுகின்றது. தேவர்கள் எவ்வாறு பாவப் பாதையில் வீழ்கின்றார்கள் என்பதைக் காட்டுகின்ற விக்கிரகங்கள் ஆலயங்களில் உள்ளன. ஆடைகள் ஒரேமாதிரியானவை. பின்னர் அவை மாற்றம் அடைகின்றன. ஒவ்வோர் அரசரும் தனது சொந்த ஆடை, கிரீடம் போன்றவற்றைக் கொண்டிருக்கின்றார். பிரம்மாவின் மூலம் சிவபாபாவிடம் இருந்து உங்கள் ஆஸ்தியை நீங்கள் பெறுகின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிந்துள்ளீர்கள். ‘குழந்தைகளே, குழந்தைகளே’ எனத் தந்தை கூறுகின்றார். குழந்தைகளே, உங்கள் சொந்தப் பிறவிகளை உங்களுக்குத் தெரியாது. ஆத்மாக்களே இதனைச் செவிமடுக்கின்றனர். நான் ஓர் ஆத்மா, அன்றி ஒரு சரீரம் அல்ல. மனிதர்கள் அனைவரும் சரீர உணர்வில் இருப்பதால், தங்கள் சரீரங்களின் பெயரின் பெருமையில் உள்ளார்கள்; தாங்கள் ஆத்மாக்கள் என்பதை அவர்கள் முற்றிலும் அறியார்கள். ஒவ்வோர் ஆத்மாவும் பரமாத்மா என்றும், பரமாத்மாவே ஒவ்வோர் ஆத்மாவும் என்றும் அவர்கள் கூறுகின்றார்கள். நீங்கள் உலக அதிபதிகளான, தேவர்கள் ஆகுகின்றீர்கள் என்பதைத் தந்தை ஆத்மாக்களாகிய உங்களுக்கு இப்பொழுது விளங்கப்படுத்தி உள்ளார். நீங்கள் தேவர்கள் ஆகுகின்றீர்கள், பின்னர் சத்திரிய வம்சத்திற்குள் செல்கின்றீர்கள் என்ற இந்த ஞானம் இப்பொழுதே உங்களுக்குக் கொடுக்கப்படுகின்றது. 84 பிறவிகளின் கணக்கும் இருக்க வேண்டும். அனைவருமே 84 பிறவிகளை எடுப்பார்கள் என்றில்லை; ஆத்மாக்கள் அனைவரும் ஒரேநேரத்தில் ஒன்றாக மேலிருந்து கீழே வருவதில்லை. எந்தச் சமயங்கள் வருகின்றன, எவ்வாறு வருகின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். பழைய வரலாறு பின்னர் புதியதாக ஆகுகின்றது. இப்பொழுது இது தூய்மையற்ற உலகமாகும். அங்கே, அது தூய்மையான உலகமாகும். பின்னர் ஏனைய சமயங்கள் வருகின்றன. இங்கே, இந்தக் கர்ம ஷேத்திரத்தில் ஒரேயொரு நாடகமே உள்ளது. நான்கு பிரதான சமயங்கள் உள்ளன. தந்தை இச்சங்கமயுகத்தில் பிரம்மாவின் சமுதாயத்தை ஸ்தாபிப்பதற்காக வருகின்றார். அவர்களும் பல்-வகை ரூபத்தை உருவாக்கி உள்ளார்கள். ஆனால் அதில் ஒரு தவறு உள்ளது. தந்தை வந்து உங்களுக்கு அனைத்தையும் விளங்கப்படுத்தி, நீங்கள் தவறு செய்வதிலிருந்து உங்களை விடுவிக்கின்றார். தந்தை பிறவி எடுப்பதற்கெனத் தனக்கென ஒரு சரீரத்தைக் கொண்டிருப்பதோ அல்லது அவர் தவறுகள் செய்வதோ இல்லை. அவர் ஒரு குறுகிய காலத்திற்கு இங்கே வந்து, குழந்தைகளாகிய உங்களுக்கு அமைதி தாமத்திற்கும், உங்கள் வீட்டிற்குமான பாதையைக் காட்டுவதற்காக இவரின் இரதத்தில் பிரவேசிக்கின்றார். அவர் உங்களுக்குப் பாதையை மாத்திரம் காட்டவில்லை, அவர் உங்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையும் கொடுக்கின்றார். ஒவ்வொரு கல்பத்திலும் நீங்கள் வீட்டிற்குச் சென்று, பின்னர் வந்து, உங்கள் சந்தோஷப் பாகங்களை நடிக்கின்றீர்கள். ஆத்மாக்களாகிய எங்கள் ஆதிதர்மம், அமைதி என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் மறந்து விட்டீர்கள். இந்தத் துன்ப உலகில் எவ்வாறு அமைதி இருக்க முடியும்? இவ்விடயங்கள் அனைத்தையும் நீங்கள் இப்பொழுது அறிந்துள்ளீர்கள். நீங்கள் பிறருக்கும் விளங்கப்படுத்துகின்றீர்கள். நாளடைவில், அனைவருமே தொடர்ந்தும் இங்கே வருவார்கள். உலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கின்றது, அதன் ஆயுட்காலம் என்ன என்பதை வெளிநாட்டவர்களும் அறிந்து கொள்வார்கள். வெளிநாட்டவர்கள் உங்களிடம் வருவார்கள், குழந்தைகளும் உலகச் சக்கரத்தைப் பற்றிய இரகசியங்களை அங்கு சென்று விளங்கப்படுத்துவார்கள். கிறிஸ்து கடவுளிடம் சென்று விட்டதாக அவர்கள் நம்புகின்றார்கள். கிறிஸ்துவை அவர்கள் கடவுளின் மகன் எனக் கருதுகின்றார்கள். நீங்கள் யாசகர்களாக இருப்பதைப் போல், கிறிஸ்துவும் மறுபிறப்பு எடுத்து இப்பொழுது யாசகர் வடிவில் உள்ளார் என்றும் சிலர் நம்புகின்றார்கள். பிச்சைக்காரராக இருப்பது என்றால் தமோபிரதானாக இருத்தல் என்று அர்த்தம். கிறிஸ்து இங்கு இருக்கின்றார் என அவர்கள் நம்பிய பொழுதும், அவர் மீண்டும் எப்பொழுது வருவார் என்பதை அவர்கள் அறியாதுள்ளார்கள். அச்சமயத்தின் ஸ்தாபகர் தனக்குரிய நேரத்தில் அச்சமயத்தை ஸ்தாபிப்பதற்காக வருவார் என நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்த முடியும். அவரை ஒரு குருவென அழைக்க முடியாது; அவர் ஒரு சமயத்தை ஸ்தாபிக்கவே வருகின்றார். ஒரேயொருவரே சற்கதியை அருள்பவர் ஆவார். சமயங்களை ஸ்தாபிப்பதற்காக வந்த அவர்கள் அனைவரும் மறுபிறவிகள் எடுத்து இப்பொழுது தமோபிரதான் ஆகியுள்ளார்கள். இறுதியில், முழு விருட்சமும் முற்றாக உக்கிய நிலையை அடைகின்றது. முழு விருட்சமும் இப்பொழுது எவ்வாறு இங்கே நிற்கின்றது என்பதையும், தேவ தர்மத்தின் அத்திவாரம் இல்லாமல் இருப்பதையும் நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள் (பெரிய ஆலமரத்தின் உதாரணம் உள்ளது). தந்தை மாத்திரமே இவ்விடயங்களைக் குழந்தைகளாகிய உங்களுக்கு இங்கே அமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு சந்தோஷத்துடன் இருக்க வேண்டும். நீங்கள் தேவர்களாக இருந்தீர்கள் என்பதையும், நீங்கள் மீண்டும் ஒருமுறை அவ்வாறு ஆகுகின்றீர்கள் என்பதையும் அறிந்துள்ளீர்கள். நீங்கள் இங்கே சத்திய நாராயணனின் கதையைச் செவிமடுக்கவே வந்துள்ளீர்கள். அதன் மூலம் நீங்கள் சாதாரண மனிதரில் இருந்து நாராயணனாக மாறுகின்றீர்கள். ஒருவர் நாராயணன் ஆகினால், நிச்சயமாக இலக்ஷ்மியும் இருக்க வேண்டும். இலக்ஷ்மியும் நாராயணனும் இருந்தால், அவர்களுக்கான இராச்சியமும் இருக்க வேண்டும். அவர்களால் தாமாகவே இலக்ஷ்மி நாராயணனாக ஆக முடியாது, அத்துடன் அவர்கள் மாத்திரமே இருக்கவும் முடியாது. இலக்ஷ்மி ஆகுவதற்கான வேறொரு கதை இல்லை, ஒருவர் நாராயணர் ஆகுவதுடன், இன்னொருவர் இலக்ஷ்மியும் ஆகுகின்றார். இலக்ஷ்மி சிலவேளைகளில் நாராயணனாகவும், நாராயணன் சிலவேளைகளில் இலக்ஷ்மியாகவும் ஆகுகின்றார்கள். சில பாடல்கள் மிகவும் சிறந்தவை. மாயை உங்களை மூச்சுத் திணறச் செய்யும் பொழுது, இப்பாடல்களைக் கேட்டால், நீங்கள் மிகவும் முகமலர்ச்சி அடைவீர்கள். ஒருவர் நீந்தக் கற்கும் பொழுது, அவர் முதலில் மூச்சுத் திணற ஆரம்பிக்கின்றார், அப்பொழுது அவர்கள் அவரைப் பற்றிப் பிடித்துக் கொள்கின்றார்கள். இங்கும் பலர் மாயையினால் மூச்சுத் திணறுகின்றார்கள். பலரும் நீச்சல் அடிக்கின்றார்கள்; அவர்கள் விரைந்து செல்கின்றார்கள். நீங்களும் மறுபக்கம் செல்லவே விரைந்து செல்கின்றீர்கள். என்னை மாத்திரம் சதா நினைவு செய்யுங்கள். நீங்கள் நினைவில் நிலைத்திருக்காத பொழுது, மூச்சுத் திணறுகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: இந்த நினைவு யாத்திரையின் மூலமே உங்கள் படகுகள் அக்கரை செல்ல முடியும். சில நீச்சல் வீரர்கள் மிகவும் திறமைசாலிகள். சிலரோ திறமை குறைவாகவே உள்ளனர். இங்கும் அவ்வாறே. சிலர் பாபாவிற்குத் தமது அட்டவணைகளை அனுப்புகின்றார்கள். அவர்கள் நினைவு அட்டவணை என்பதை மிகச்சரியாகப் புரிந்து கொள்கின்றனரா, இல்லையா என்பதை பாபா பரிசீலிக்கின்றார். நாள் முழுவதிலும் தாம் ஐந்து மணித்தியாலங்கள் நினைவில் நிலைத்திருந்ததாகச் சிலர் கூறுகின்றார்கள். நான் அதனை நம்புவதில்லை. நிச்சயமாக அதில் ஏதோ தவறு உள்ளது. சிலர் தாங்கள் எந்நேரமும் இங்கே கற்றுக் கொண்டிருக்கின்றோம் என்றும், அந்த நேரம் முழுவதும் தமது அட்டவணைகளும் நன்றாக உள்ளன என்றும் நினைக்கின்றார்கள். ஆனால் அது அவ்வாறல்ல. இங்கே கற்பதற்காக அமர்கின்ற பலரின் புத்திகள் வெளியே எங்காவது திசை திரும்புகின்றன. அவர்கள் அவதானத்துடன் செவிமடுப்பதில்லை. அத்தகைய விடயங்கள் பக்தி மார்க்கத்திலும் இடம்பெறுகின்றன. ஒரு சந்நியாசி ஒரு கதையைக் கூறிக் கொண்டிருக்கும் பொழுது இடையில் நிறுத்தி, தான் என்ன கூறுவதாக அவரைச் செவிமடுத்துக் கொண்டிருக்கும் எவரிடமாவது கேட்பார். ஒருவர் பித்துப் பிடித்தவரைப் போல் (ஒருமுகப்பட்டுச் செவிமடுக்காது இருந்தால்) அமர்ந்திருந்தால், அவரிடமே அவர் அவ்வாறு கேட்கின்றார். எவ்வாறாயினும் அந்த நபரின் புத்தி அலைந்து திரிவதால், அவரால் சந்நியாசிக்குச் சரியாகப் பதிலளிக்க முடிவதில்லை. அவர்கள் ஒரு வார்த்தையையேனும் செவிமடுப்பதில்லை. இங்கும் அவ்வாறே நடக்கின்றது. பாபா தொடர்ந்தும், அனைத்தையும் அவதானித்துக் கொண்டிருக்கின்றார். சிலரின் புத்திகள் வெளியில் அலைந்து திரிவதையும் பாபா புரிந்து கொள்கின்றார். அவர்கள் வெறுமனே இங்குமங்கும் பார்த்தவாறு இருக்கின்றார்கள். இங்கு வருகின்ற சில புதியவர்கள் அவ்வாறு உள்ளனர். அவர்கள் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதை பாபா புரிந்து கொள்கின்றார். ஆகையாலேயே பாபா கூறுகின்றார்: இங்கு வகுப்புகளுக்குப் புதியவர்கள் விரைவில் வருவதற்கு அனுமதி அளிக்காதீர்கள். இல்லாவிட்டால், அவர்கள் சூழலைப் பாழாக்கி விடுவார்கள். நீங்கள் முன்னேறிச் செல்லும் வேளையில் நல்ல குழந்தைகள் இங்கு அமர்ந்திருக்கும் பொழுதே வைகுந்தத்திற்குச் செல்வதைப் பார்ப்பீர்கள். அவர்கள் பெரும் சந்தோஷத்தில் இருப்பார்கள். அவர்கள் மீண்டும் மீண்டும் வைகுந்தத்திற்குச் சென்று வருவார்கள். நேரம் இப்பொழுது மிகவும் நெருங்கி விட்டது. உங்கள் ஸ்திதி நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கு ஏற்ப, வரிசைக்கிரமமாக அவ்வாறு ஆகும். நீங்கள் உங்கள் சுவர்க்க மாளிகைகளை மீண்டும் மீண்டும் பார்ப்பீர்கள். உங்களுக்குக் காட்டப்பட வேண்டிய, அவ்விடயங்களின் காட்சிகளை நீங்கள் தொடர்ந்தும் காண்பீர்கள். நேரம் இப்பொழுது நெருங்கி உள்ளதை உங்களால் பார்க்க முடியும். இப்பொழுது எந்தளவிற்கு ஆயத்தங்கள் இடம்பெறுகின்றன எனப் பாருங்கள். தந்தை கூறுகின்றார்: உலகிலுள்ள மனிதர்கள் அனைவரும் ஒரு விநாடியில் எவ்வாறு மண்ணோடு மண்ணாகிப் போகின்றார்கள் என்று பாருங்கள். ஒரு குண்டு போடப்பட்டவுடன், அனைத்தும் அழிவடைந்து விடுகின்றது. உங்கள் இராச்சியம் இப்பொழுது ஸ்தாபிக்கப்படுவதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் இப்பொழுது நினைவு யாத்திரையில் மிகவும் போதையில் நிலைத்திருக்க வேண்டும். உங்கள் திருஷ்டியால் எவரது இலக்கையும் தாக்கும் அளவிற்குத் தேவையான சக்தியால் உங்களை நீங்கள் நிரப்ப வேண்டும். இறுதியில் நீங்களே இந்த ஞான அம்புகளால் பீஷ்ம பிதாமகர் போன்றோரைத் தாக்குபவர்களாக இருப்பீர்கள். நீங்கள் உண்மையையே கூறுகின்றீர்கள் என்பதை அவர்கள் உடனடியாகப் புரிந்து கொள்வார்கள். தூய்மை ஆக்குபவரான ஞானக்கடல் மாத்திரமே ஒரேயொரு அசரீரியான கடவுள் ஆவார். ஸ்ரீகிருஷ்ணர் அவ்வாறு இருக்க முடியாது. அவரின் பிறப்பு காட்டப்பட்டுள்ளது. ஸ்ரீகிருஷ்ணரால் அந்த அதே முகச்சாயல்களை மீண்டும் பெற முடியாது. அவர் மீண்டும் சத்தியயுகத்திலேயே அதே முகச்சாயல்களைப் பெறுவார். அனைவரது முகச்சாயல்களும் ஒவ்வொரு பிறவியிலும் வெவ்வேறானவையாக உள்ளன. நாடகத்தில் இப்பாகம் இவ்வாறாகவே உருவாக்கப்பட்டுள்ளது. அங்கே, அனைவரும் இயற்கையாகவே அழகான முகச்சாயல்களைக் கொண்டிருப்பார்கள். இப்பொழுது, நாளுக்கு நாள் தொடர்ந்தும் சரீரங்களும் தமோபிரதான் ஆகுகின்றன. அவர்கள் முதலில் சதோபிரதானாக உள்ளனர். பின்னர் சதோ, இரஜோ, தமோ ஸ்திதிகளைக் கடந்து செல்கின்றனர். எத்தகைய குழந்தைகள் தொடர்ந்தும் பிறக்கின்றன எனப் பாருங்கள். சிலருக்குக் கால்கள் இல்லை, சிலர் குள்ளர்களாக உள்ளார்கள். எத்தனை வேறுபாடான விடயங்கள் நடக்கின்றன எனப் பாருங்கள். அத்தகைய விடயங்கள் சத்தியயுகத்தில் இருப்பதில்லை. அங்கே, தேவர்களுக்குத் தாடி போன்றவை இருப்பதில்லை; அவர்கள் அனைவரும் நன்றாக முகச்சவரம் செய்திருப்பார்கள். அவர்களின் கண்களில் இருந்தும், முகச்சாயலில் இருந்தும் அவர்கள் ஆண்களா அல்லது பெண்களா என்று உங்களால் கூறமுடியும். நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும் பொழுது, பல காட்சிகளைக் காண்பீர்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு அதிகளவு சந்தோஷம் இருக்க வேண்டும். பாபா ஒவ்வொரு கல்பத்திலும் இராஜயோகம் கற்பிப்பதற்காக வந்து, உங்களைச் சாதாரண மனிதர்களில் இருந்து தேவர்களாக மாற்றுகின்றார். ஏனைய சமயத்தைச் சேர்ந்த அனைவரும் தத்தமது பிரிவுகளுக்குச் செல்வார்கள் என்பதையும் குழந்தைகளான நீங்கள் அறிவீர்கள். ஆத்மாக்களின் விருட்சம் காட்டப்பட்டுள்ளது. படங்களில் பல திருத்தங்களும் செய்யப்படும். படங்கள் தொடர்ந்தும் மாற்றம் செய்யப்படும்; உதாரணத்திற்குச் சூட்சும உலகைப் பற்றி பாபா கொடுத்த விளக்கம் உள்ளது. சந்தேகப் புத்தி உடையவர்கள் கூறுகின்றனர்: இது என்ன? முன்னர் நீங்கள் இவ்வாறு கூறினீர்கள். இப்பொழுது வேறு ஒன்றைக் கூறுகின்றீர்கள்! இலக்ஷ்மி நாராயணனின் இரு வடிவங்களும் இணைக்கப்பட்டு, விஷ்ணு என்று அழைக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், நான்கு கரங்களுடன் எம்மனிதரும் இருப்பதில்லை. அவர்கள் இராவணனைப் பத்துத் தலைகளுடன் காட்டுகின்றார்கள். அவ்வாறான மனிதர்கள் இருப்பதில்லை. பொம்மை விளையாட்டைப் போல், அவர்கள் இராவணனின் கொடும்பாவியை ஒவ்வொரு வருடமும் எரிக்கின்றார்கள். சமயநூல்கள் இல்லாது தம்மால் வாழ முடியாது எனவும், சமயநூல்களே தமது உயிர் எனவும் மக்கள் கூறுகின்றார்கள். கீதைக்கு இருக்கின்ற மரியாதையைப் பாருங்கள். இங்கே பெரிய மலை போல் முரளிகள் உள்ளன. அவற்றைக் வைத்திருந்து நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்? நாளுக்கு நாள் நீங்கள் புதிய கருத்துக்களைத் தொடர்ந்தும் செவிமடுக்கிறீர்கள். ஆம், கருத்துக்களைக் குறித்துக் கொள்ளுதல் நல்லதாகும். நீங்கள் சொற்பொழிவு ஆற்றும்பொழுது, நீங்கள் பேச வேண்டிய பல கருத்துக்களை மீட்டல் செய்கின்றீர்கள். உங்களிடம் தலைப்புகளின் பட்டியல் ஒன்று இருக்க வேண்டும். இன்று, நான் இந்தத் தலைப்பை விளங்கப்படுத்துவேன். இராவணன் யார், இராமர் யார்? உண்மை என்ன? இவை அனைத்தையும் நான் உங்களுக்கு விளங்கப்படுத்துவேன். இந்நேரத்தில் இராவண இராச்சியம் முழு உலகிலும் நிலவுகின்றது; அனைவரிடமும் ஐந்து விகாரங்கள் உள்ளன. தந்தை வந்து இராம இராச்சியத்தை மீண்டும் ஒருமுறை ஸ்தாபிக்கின்றார். இது வெற்றியும், தோல்வியும் நிறைந்த விளையாட்டாகும். ஐந்து விகாரங்களான, இராவணனால் நீங்கள் எப்படித் தோற்கடிக்கப்படுகின்றீர்கள் எனப் பாருங்கள். முன்னர் இல்லறப்பாதை தூய்மையாக இருந்தது. இப்பொழுது அது தூய்மையற்றதாகி உள்ளது. இலக்ஷ்மியும் நாராயணனும் பின்னர் சரஸ்வதியும் பிரம்மாவும் ஆகுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: நான் இவரின் பல பிறவிகளின் இறுதிப் பிறவியில் இவருக்குள் பிரவேசிக்கின்றேன். நீங்கள் கூறுகின்றீர்கள்: நானும் பல பிறவிகளின் பின்னரே, தந்தையிடம் இருந்து இந்த ஞானத்தைப் பெறுகின்றேன். இவ்விடயங்கள் அனைத்தும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். சிலருக்கு மந்த புத்தி உள்ளது. அதனால் அவர்கள் எதனையும் புரிந்துகொள்ளாத புத்திகளைக் கொண்டுள்ளார்கள். ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது. பலரும் வந்து, பின்னர் நீங்கிச் சென்று விட்டனர்; அவர்கள் மீண்டும் வருவார்கள். அவர்கள் பிரஜைகளின் மத்தியில், சில சதங்கள் பெறுமதியான அந்தஸ்தைப் பெறுவார்கள். அவர்களும் தேவைப்படுகின்றார்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் இக்கல்வியைப் பூர்த்திசெய்து, சாதாரண மனிதரில் இருந்து, உலக அதிபதிகளான, தேவர்களாக மாறுவீர்கள் என்ற போதையை எப்பொழுதும் பேணுங்கள். உங்கள் இராச்சியத்தில் தூய்மை, அமைதி, சந்தோஷம், அனைத்தும் இருக்கும். அதனை எவராலும் உங்களிடம் இருந்து அபகரிக்க முடியாது.

2. இக்கரையிலிருந்து அக்கரைக்குச் செல்வதற்கு, நினைவு யாத்திரையில் சிறந்த நீச்சல் வீரர் ஆகுங்கள். மாயை உங்களைத் திணறச் செய்ய அனுமதிக்காதீர்கள். உங்களைச் சோதித்த பின்னர் நினைவு அட்டவணையை முதலில் நன்றாகப் புரிந்து கொண்டு, பின்னர் அதனை எழுதுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஞானம் நிறைந்தவராகி, முயற்சி செய்யும் கணக்கை அறிந்து, அதன் வெகுமதியைப் பெற்றுக் கொள்வதன் மூலம் வேகமாக முன்னேறுவீர்களாக.

நீண்ட காலத்திற்கு முயற்சி செய்வதன் மூலம் உங்களின் வெகுமதியை உருவாக்குவதற்கான நேரம் இதுவே ஆகும். ஆகவே, ஞானம் நிறைந்தவராகி, வேகமாக முன்னேறுங்கள். இதில், இன்று இல்லையேல் நாளை நீங்கள் மாறுவீர்கள் என நினைக்காதீர்கள். இது கவனக்குறைவாகும். இதுவரை, பாப்தாதாவே சகல உறவுமுறைகளின் அன்புடன்கூடிய அன்புக்கடலாக இருக்கிறார். குழந்தைகளின் கவனயீனத்தையும் சாதாரணமான முயற்சிகளையும் பார்க்கும்போதும் கேட்கும்போதும் அவர் உங்களுக்கு மேலதிக மதிப்பெண்களை வழங்கி, உங்களை முன்னேறச் செய்கிறார். எனவே, ஞானம் நிறைந்தவராகி, அந்த விசேடமான ஆசீர்வாதத்தின் நன்மையை எடுத்துக் கொள்ளுங்கள். தைரியத்தைப் பேணுவதன் மூலம் நீங்கள் உதவியைப் பெற்றுக் கொள்வீர்கள்.

சுலோகம்:
சடப்பொருளுக்கு வேலையாட்கள் ஆகுபவர்கள் சந்தோஷம் இல்லாமலே இருப்பார்கள். ஆகவே, சடப்பொருளை வென்றவர்கள் ஆகுங்கள்.

அவ்யக்த சமிக்கை: ஓர் இலகு யோகியாக இருப்பதற்கு, இறை அன்பை அனுபவிப்பவராக இருங்கள்.

ஒருவர் கடலின் ஆழத்திற்குள் இருக்கும்போது, அவரால் கடலைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியாது. தந்தையில் அமிழ்ந்து இருப்பதெனில், அதாவது, சகல நற்குணங்களில் கடலில் அமிழ்ந்து இருப்பதெனில், அன்பிலே திளைத்திருத்தல் என்ற ஸ்திதி எனப்படுகிறது. எனவே, நீங்கள் தந்தையில் அமிழ்ந்திருக்க வேண்டியதில்லை. ஆனால், தந்தையின் நினைவிலும் அன்பிலும் அமிழ்ந்திருங்கள்.