19.10.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
இனிய குழந்தைகளே, இப்பொழுது சரீரமற்றவராக இருப்பதைப் பயிற்சி செய்யுங்கள். அழிகின்ற சரீரங்களுக்கான உங்களின் அன்பைத் துண்டித்து, சிவபாபாவின் மீது மாத்திரம் அன்பு செலுத்துங்கள்.
கேள்வி:
இந்த எல்லையற்ற பழைய உலகில், ஏற்கனவே ஆர்வமின்மையைக் கொண்டுள்ள ஆத்மாக்களின் அடையாளங்கள் என்ன?பதில்:
அவர்கள் பௌதீகக் கண்களால் எதையாவது பார்க்கும்போதும், அதைப் பார்க்காமல் இருப்பார்கள். அவர்களுடைய புத்தியில் இவை அனைத்தும் அழியப்போகின்றது, மக்கள் அனைவரும் முன்னரே மரணித்து விட்டார்கள், அமைதி தாமத்திற்கும், சந்தோஷ தாமத்திற்கும் செல்ல வேண்டும் என்ற விழிப்புணர்வு இருக்கும். அவர்களுடைய பற்று அகற்றப்படுகின்றது. அவர்கள் யோக ஸ்திதியில் இருந்து ஒருவருடன் பேசும்போது, அந்த நபர் அவர்களால் கவரப்படுவார். அவர்களுக்கு இந்த ஞானத்தின் போதை இருக்கும்.பாடல்:
ஓம் நமசிவாயஓம் சாந்தி.
தந்தை கூறுகின்றார்: இனிய குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது சிவபாபாவை அறிவீர்கள். எனவே இந்தப் பாடல்களைப் பாடும்போது, பக்தி மார்க்கத்தில் உள்ளவர்கள் போல் தோன்றும். பக்தி மார்க்கத்தில் உள்ளவர்கள் “ஓம் நமசிவாய” அல்லது “தாயும் தந்தையும் ஆனவரே” எனக் கூறுகின்ற போதிலும், அவர்கள் அவரை அறியமாட்டார்கள். நீங்கள் சுவர்க்கம் எனும் ஆஸ்தியைச் சிவபாபாவிடம் இருந்து பெறவேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையைக் கண்டுகொண்டீர்கள். அவரிடம் இருந்து சுவர்க்கம் எனும் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். இதனாலேயே அவரை நினைவு செய்கின்றீர்கள். நீங்கள் சிவபாபாவைக் கண்டுகொண்டுள்ளீர்கள். ஆனால் இந்த உலகம் கண்டுகொள்ளவில்லை. அவரைக் கண்டு கொண்டவர்களாலும் மிக நன்றாக முன்னேறிச் செல்ல முடியாதுள்ளது. பாபாவின் வழிகாட்டல்கள் மிக இனிமையானவை. ஆத்ம உணர்வு உடையவராக இருப்பீர்களாக! சரீரமற்றவர்களாக இருக்கின்ற உணர்வைக் கொண்டிருப்பீர்களாக! அவர் ஆத்மாக்களுடனேயே பேசுகின்றார். ஆத்ம உணர்வுள்ள தந்தை, ஆத்ம உணர்வுள்ள குழந்தைகளுடன் பேசுகின்றார். அவர் ஒருவரே இருக்கின்றார். அவர் மதுவனத்தில் குழந்தைகளாகிய உங்களுடன் அமர்ந்திருக்கின்றார். தந்தை உண்மையில் உங்களுக்குக் கற்பிக்க வந்துள்ளார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். சிவபாபாவை தவிர வேறு எவராலும் இந்தக் கல்வியை உங்களுக்குக் கற்பிக்க முடியாது. பிரம்மாவினாலோ அல்லது விஷ்ணுவினாலோ கூட முடியாது. அமரத்துவக் கதையைக் கூறுவதன் மூலம் தூய்மை அற்றவர்களைத் தூய்மை ஆக்குவதற்காகத் தந்தையே வந்துள்ளார். அவர் நிச்சயமாக அதை இங்கேயே கூறவேண்டும். அவர் அதை அமர்நாத்தில் கூறுவதில்லை. அமரத்துவக் கதையே சத்திய நாராயணனின் கதையாகும். தந்தை கூறுகின்றார்: நான் இந்தக் கதையை இங்கேயே கூறுகின்றேன், ஏனைய அனைத்தும் பக்தி மார்க்கத்தின் தடுமாற்றங்கள். அசரீரியான ஒருவரே, இராமரும் சற்கதி அருள்பவரும் ஆவார். அவரே தூய்மையாக்குபவரும் ஞானக்கடலும் அமைதிக்கடலும் ஆவார். விநாசத்திற்கான நேரத்திலேயே அவர் வருகின்றார். பரமதந்தை பரமாத்மா மாத்திரமே முழு உலகினதும் குருவாக இருக்க முடியும். அவர் அசரீரியானவர். தேவர்களும் மனிதர்களே, ஆனால் அவர்கள் தெய்வீகக் குணங்கள் நிறைந்த மனிதர்கள் ஆகையால் அவர்கள் தேவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். நீங்கள் இப்பொழுது இந்த ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். இந்த ஞானமார்க்கத்திலே, உங்களுடைய ஸ்திதியை நீங்கள் ஸ்திரமாக வைத்திருக்க வேண்டும். இயன்றளவிற்கு தந்தையை நினைவு செய்யுங்கள். சரீரமற்றவர் ஆகுங்கள். ஏன் சரீரங்களின் மீது அன்பு வைக்கின்றீர்கள்? பாபா கூறுகின்றார்: சிவபாபாவை நினைவுசெய்து பின்னர் இவரிடம் வாருங்கள். நீங்கள் தாதாவைச் சந்திக்கப் போவதாக மக்கள் நினைக்கின்றார்கள். நீங்கள் இவரைச் சந்திக்கும் போது சிவபாபாவையே நினைவு செய்கின்றீர்கள் என்பதை அறிவீர்கள். அங்கே, புள்ளிகளான அசரீரியான ஆத்மாக்களே இருக்கின்றார்கள். உங்களால் ஒரு புள்ளியைச் சந்திக்க முடியாது. எனவே எவ்வாறு நீங்கள் சிவபாபாவைச் சந்திப்பீர்கள்? இதனாலேயே இங்கே விளங்கப்படுத்தப்பட்டுள்ளது: ஓ ஆத்மாக்களே, உங்களை ஆத்மாக்களாகக் கருதி நீங்கள் சிவபாபாவைச் சந்திக்கின்றீர்கள் என்பதை உங்களின் புத்தி நினைவு செய்ய வேண்டும். இது மிக ஆழமான இரகசியம். பலரால் சிவபாபாவை நினைவு செய்ய முடியாதுள்ளது. பாபா விளங்கப்படுத்துகின்றார்: எப்பொழுதும் சிவபாபாவையே நினைவு செய்யுங்கள். சிவபாபா உங்களைச் சந்திக்க வந்துள்ளார். பாபா, நான் இப்பொழுது உங்களுக்குச் சொந்தம். சிவபாபா இவரினுள் பிரவேசித்து இந்த ஞானத்தைப் பேசுகின்றார். அவர் அசரீரியான ஆத்மா. நீங்களும் ஆத்மாக்களே. ஒரேயொரு தந்தையே குழந்தைகளுக்குக் கூறுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். நீங்கள் உங்களின் புத்திகளில் அவரை நினைவு செய்யவேண்டும். நாங்கள் தந்தையிடம் வந்துள்ளோம். பாபா இந்தத் தூய்மையற்ற சரீரத்தில் பிரவேசித்துள்ளார். நாங்கள் உங்களின் முன்னால் வந்தவுடன் இந்த நம்பிக்கை ஏற்படுகின்றது: சிவபாபா நான் இப்பொழுது உங்களுக்குச் சொந்தமாவேன். சதா என்னை நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும் என முரளியிலும் கூட நீங்கள் செவிமடுக்கின்றீர்கள். அதே தூய்மையாக்குகின்ற தந்தை இவரே என நீங்கள் அறிவீர்கள். அவரே உண்மையான சற்குரு ஆவார். பரமதந்தை பரமாத்மாவிடம் பாண்டவர்களாகிய நீங்களே அன்பான புத்தியைக் கொண்டுள்ளீர்கள். ஏனைய அனைவரும் ஒருவர் அல்லது இன்னொருவர் மீது அன்பற்ற புத்தியைக் கொண்டுள்ளனர். சிவபாபாவுக்குச் சொந்தமானவர்களின் சந்தோஷப் பாதரசம், மிக உயர்வாக இருக்கவேண்டும். நேரம் நெருங்கி வரும்போது, உங்கள் 84 பிறவிகள் முடிவுக்கு வருகின்றன எனச் சந்தோஷம் அடைவீர்கள். இப்பொழுது இது கடைசிப் பிறவி, நாங்கள் வீட்டுக்குத் திரும்புகின்றோம். ஏணிப்படம் மிகவும் நல்லது, இது அதில் மிகத்தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் நாள் முழுவதும் உங்கள் புத்தியைப் பயன்படுத்த வேண்டும். இந்தப் படங்களுக்கு வர்ணம் தீட்டுபவர்கள், அதிகளவு ஞானத்தைக் கடைதல் வேண்டும். தலைவர்களும் இதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். மேன்மையான, சத்தியயுக, தேவ இராச்சியத்தில் 900,000 பேர் இருப்பார்கள் என நீங்கள் சவால் விடுகின்றீர்கள். இதற்கு என்ன அத்தாட்சி என ஒருவர் கேட்கக்கூடும். இது புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயம் என அவருக்குக் கூறுங்கள். சத்தியயுகத்தில் விருட்சம் மிகச் சிறியதாக இருக்கும். அங்கே ஒரு சமயமும் நிச்சயமாகக் குறைந்தளவு மக்களுமே இருப்பார்கள். ஏணிப்படத்திலே இந்த ஞானம் அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளது. உதாரணமாக கும்பகர்ணனின் படத்தைப் பாருங்கள். பிரம்மாகுமாரிகள் இந்த ஞானத்தை அருந்தக் கொடுக்கும் போது, அந்த மக்கள் நஞ்சைக் கேட்பதாக அதைச் சித்தரியுங்கள். பாபா தொடர்ந்தும் முரளியில் அனைத்து வழிகாட்டல்களையும் கொடுக்கின்றார். ஒவ்வொரு படத்தினதும் விளக்கம் மிக நல்லது. இந்த பாரதம் சுவர்க்கமாக இருந்தது என இலக்ஷ்மி, நாராயணனின் படத்தில் விளங்கப்படுத்துங்கள். ஒரு தர்மம் மாத்திரம் இருந்ததால், எவ்வளவு மனிதர்கள் இருந்திருப்பார்கள்? இப்பொழுது விருட்சம் மிகப்பெரிதாக வளர்ந்து விட்டது. விநாசம் இப்பொழுது இடம்பெற வேண்டும். ஒரு தந்தையே பழைய உலகை மாற்றுகின்றார். முக்கியமான நான்கு அல்லது ஐந்து படங்கள் மூலம் அம்பு உடனடியாக ஒருவரைத் தைக்க முடியும். நாடகத்துக்கேற்ப, இந்த ஞானக்கருத்துக்கள் நாளுக்கு நாள் ஆழமாக ஆகுகின்றன. எனவே படங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். குழந்தைகளாகிய உங்களது புத்தியிலும் மாற்றம் ஏற்படுகின்றது. முன்னர் சிவபாபா ஒருபுள்ளி என நீங்கள் புரிந்திருக்கவில்லை. ஏன் இது முன்னரே கூறப்படவில்லை என நீங்கள் கேட்கக் கூடாது. தந்தை கூறுகின்றார்: ஆரம்பத்தில் அனைத்தையும் விளங்கப்படுத்த முடியாது. தந்தை ஞானக்கடல் ஆவார். எனவே அவர் தொடர்ந்தும் இந்த ஞானத்தைக் கொடுப்பார். திருத்தங்களும் தொடர்ந்து இடம்பெறும். அவர் அனைத்தையும் உங்களுக்கு முன்கூட்டியே கூறுவதில்லை. அந்த நிலையில் அது செயற்கையாகத் தெரியும். சடுதியாக எதுவும் நடக்கின்றபோது, அதுவே நாடகம் எனக் கூறப்படும். மம்மா கடைசி வரைக்கும் இருந்திருக்க வேண்டும், அவர் ஏன் விட்டுச் சென்றார்? இது நடந்திருக்;கக் கூடாது என நீங்கள் கூறமுடியாது. நாடகத்தில் என்ன நடந்தாலும் அது சரியானதே. பாபா கூறியவை எல்லாம் நாடகத்திற்கு ஏற்பவே அவர் கூறினார். நாடகத்தில் எனது பாகம் அப்படியானது! பாபாவும் அனைத்தையும் நாடகத்திலேயே விட்டுவிடுவார். மக்கள் அது கடவுளின் விருப்பம் எனக் கூறுகின்றனர். கடவுள் கூறுகின்றார்: இது நாடகத்தின் விதி. கடவுள் ஒன்றைக் கூறினாலும் அல்லது இவர் ஒன்றைக் கூறினாலும் அது நாடகத்தில் உள்ளதே. தவறாக எதுவும் நடந்தாலும், அதுவும் நாடகத்தில் உள்ளதே, அது மீண்டும் சீராக்கப்படும். ஏறுகின்ற ஸ்திதியும் நிச்சயமாக உள்ளது. நீங்கள் உயரத்தில் ஏறுகின்றபோது, சிலநேரங்களில் நடுக்கம் இருக்கும். அவை அனைத்தும் மாயையின் புயல்கள். மாயை இருக்கும் வரைக்கும், பாவமான எண்ணங்கள் நிச்சயமாக வரும். சத்தியயுகத்தில் மாயை இருக்க மாட்டாள். எனவே அங்கே பாவமான எண்ணங்கள் பற்றிய கேள்வி இல்லை. சத்தியயுகத்தில் ஒருபோதும் செயல்கள் பாவகரமாக இருப்பதில்லை. வெகுசில நாட்களே எஞ்சியிருப்பதால், இது எங்களின் கடைசிப்பிறவி என்ற சந்தோஷம் இருக்கிறது. நீங்கள் இப்பொழுது அமரத்துவபூமிக்குச் செல்வதற்காகச் சிவபாபாவிடம் இருந்து அமரத்துவக்கதையைச் செவிமடுக்கின்றீர்கள். நீங்களே இந்த விடயங்களைப் புரிந்து கொள்கின்றீர்கள். மக்கள் அமர்நாத்திற்குச் சென்று அதிகளவு தடுமாறித் திரிகின்றார்கள். பார்வதிக்கு அமரத்துவக் கதையைக் கூறியது யார் என அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் அங்கே சிவனின் ரூபத்தைக் காட்டுகின்றார்கள். அச்சா. சிவன் யாரில் அமர்ந்திருக்கின்றார்? அவர்கள் சிவனையும், சங்கரரையும் காட்டி உள்ளார்கள். சிவன், சங்கரரின் மீது அமர்ந்திருந்து இக்கதையைக் கூறினாரா? அவர்கள் எதையும் புரிந்து கொள்வதில்லை. பக்திமார்க்கத்தில் இன்றும் மக்கள் அங்கே யாத்திரை செல்கின்றார்கள். உண்மையில் கதை நீளமானதல்ல. அது உண்மையில் “மன்மனாபவ”இ அவ்வளவு தான்! விதையை நினைவு செய்யுங்கள். நாடகச் சக்கரத்தை நினைவு செய்யுங்கள். பாபாவிடமுள்ள ஞானத்தை ஆத்மாக்களாகிய நாங்களும் கொண்டிருக்கின்றோம். அவர் ஞானக்கடல், ஆத்மாக்களாகிய நாங்களும் இந்த ஞானத்தின் மாஸ்டர் ஞானக்கடல்கள் ஆகுகின்றோம். நீங்கள் இதுபற்றிய போதையைக் கொண்டிருக்க வேண்டும். அவர் சகோதரர்களாகிய (ஆத்மாக்கள்) எங்களுடன் பேசுகின்றார். ஒரு சரீரத்தினுடாக மாத்திரமே அவரால் பேசமுடியும். நீங்கள் இதுபற்றி எந்தச் சந்தேகமும் கொள்ளக்கூடாது. நீங்கள் தந்தையை நினைவு செய்கின்ற போது, இந்த ஞானம் அனைத்தும் உங்கள் புத்தியில் பிரவேசிக்கும். தந்தையை நினைவு செய்வதன் மூலமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படுவதுடன், பற்றுகள் அனைத்தும் தொடர்ந்தும் முடிவடையும். சிலர் பெயரளவிற்கே அன்பு கொண்டுள்ளனர். எங்களுக்கும் அது பொருந்தும். நாங்கள் இப்பொழுது சந்தோஷ தாமத்திற்குச் செல்கின்றோம். இது ஏற்கனவே அனைவரும் மரணித்து விட்டது போன்றது. எனவே ஏன் எங்களின் இதயத்தில் அவர்கள் மீது பற்று வைக்க வேண்டும்? நாங்கள் முதலில் அமைதிதாமத்திற்குச் சென்று பின்னர் சந்தோஷ தாமத்திற்குச் சென்று ஆட்சி செய்வோம். இதுவே பழைய உலகைப் பொறுத்தவரை ஆர்;வமின்மையைக் கொண்டிருப்பது என அழைக்கப்படுகின்றது. தந்தை கூறுகின்றார்: உங்கள் பௌதீகக் கண்களால் காண்பவை அனைத்தும் அழியப்போகின்றன. விநாசத்தின் பின்னர் நீங்கள் சுவர்க்கத்தைக் காண்பீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது மிகவும் இனிமையானவர்கள் ஆகவேண்டும். ஒருவர் யோக ஸ்திதியில் இருந்து பேசும்போது அவர் அதிகளவு கவர்ச்சியுடைவராக இருக்கின்றார். இந்த ஞானம் எப்படிப்பட்டது என்றால், நீங்கள் ஏனைய அனைத்தையும் மறக்கின்றீர்கள். அச்சா.
இனிமையிலும், இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத்தந்தை ஆன்மீகக்குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.தாரணைக்கான சாராம்சம்:
1. இந்த ஞானப்பாதையில் நீங்கள் உங்களின் ஸ்திதியை மிகவும் உறுதியாக்கிக் கொள்ள வேண்டும். சரீரமற்றவர் ஆகுங்கள்! ஒரு தந்தை மீது உண்மையான அன்பைக் கொண்டிருங்கள்.2. நாடகத்தின் விதியில் அசைக்க முடியாதவராக இருங்கள். நாடகத்தில் என்ன நடந்தாலும் அது சரியானதே. உங்களை ஒருபோதும் அசைக்க விடாதீர்கள். ஒருபோதும் எதைப்பற்றியும் சந்தேகம் கொள்ளாதீர்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் பலவீனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, உங்களின் சம்பூரணமான, முழமையான ரூபத்தை வெளிப்படுத்தி அதன் மூலம் காட்சிகளை அருளும் ரூபம் ஆகுவீர்களாக.இந்த உலகம், சென்ற கல்பத்தின் உங்களின் சம்பூரணமான, முழுமையான ரூபத்தையும் பூஜிக்கத்தகுதி வாய்ந்த ரூபத்தையும் நினைவு செய்கிறது. ஆகவே, இப்போது நடைமுறை வடிவில் உங்களின் முழுமையான ரூபத்தை வெளிப்படுத்துங்கள். கடந்த காலத்தின் பலவீனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, உங்களின் பழைய சம்ஸ்காரங்களையும் சுபாவத்தையும் திடசங்கற்பத்துடன் முடித்து விடுங்கள். மற்றவர்களின் பலவீனங்களைப் பிரதி செய்யாதீர்கள். உங்களின் புத்தியில் குறைபாடுகளைக் கிரகிப்பதை நிறுத்தி விடுங்கள். தெய்வீகக் குணங்களைக் கிரகிக்கும் சதோபிரதான் புத்தியைக் கொண்டிருங்கள். அப்போது நீங்கள் காட்சிகளை அருளும் ரூபம் ஆகுவீர்கள்.
சுலோகம்:
உங்களின் விழிப்புணர்வில் உங்களின் அநாதியான, ஆதியான நற்குணங்களை வைத்திருந்து, அவற்றை நடைமுறையில் கடைப்பிடியுங்கள்.அவ்யக்த சமிக்ஞை: மற்றவர்களை ஈடேற்றும் மனப்பான்மையைக் கொண்டிருந்து, உங்களை இகழ்பவர்களையும் ஈடேற்றுங்கள்.
யாராவது உங்களை இகழ்ந்தாலோ அல்லது பொய்யாகக் குற்றஞ் சாட்டினாலோ, கோபப்படாதீர்கள். பிராமணர்களான உங்களின் கடமை, உங்களை இகழ்பவர்களையும் ஈடேற்றுவதே. அவர்கள் உங்களை இகழும்போது, நீங்கள் அவர்களை அரவணைக்க வேண்டும். இதுவே அற்புதம். இது மாற்றம் எனப்படுகிறது. உங்களை அரவணைப்பவர்களையும் அரவணைத்தல் பெரிய விடயம் அல்ல. எவ்வாறாயினும், உங்களை இகழ்கின்ற ஒருவரையும் உங்களின் உண்மையான நண்பராகக் கருதும்போது நீங்கள் மற்றவர்களை ஈடேற்றுபவர் என்று அறியப்படுவீர்கள்.
மாதேஷ்வரியின் விலைமதிக்க முடியாத வாசகங்கள்.
1. பிரம்மாவின் சரீரம் அசரீரியான கடவுளுக்காக நிச்சயிக்கப்பட்ட சரீரமாகும்.
கடவுள் பிரம்மாவின் சரீரத்தினூடாகவே கற்பிக்கின்றார் என்ற முழு நம்பிக்கையை நாங்கள் கொண்டிருக்க வேண்டும். இந்த விடயத்தையிட்டு பல மாணவர்கள் கேள்விகள் கேட்கின்றார்கள். அமிர்தவேளையில், அசரீரியான கடவுள் பிரம்மாவின் பௌதீக சரீரத்திற்குள் பிரவேசிக்கும் போது, அந்த நேரத்தில் சரீரத்தில் என்ன மாற்றங்கள் இடம்பெறுகின்றன. அவர்கள் கேட்கின்றார்கள்: அந்த நேரத்தி;ல், நீங்கள் அமர்ந்திருந்து கடவுள் எவ்வாறு வருகின்றார் என அவதானிக்கின்றீர்களா? கடவுள் பிரவேசிக்கும் போது, அவரின் கண்களோ முகமோ மாற்றம் அடைவதில்லை என விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. இல்லை. ஆனால் நாங்கள் திரான்ஸில் செல்லும் போது, கண்களும் முகமும் மாறுகின்றன. எவ்வாறாயினும், சரீரதாரியான பிரம்மாவின் பாகம் மறைமுகமானது. கடவுள் அவரின் சரீரத்திற்குள் பிரவேசிக்கும் போது, அதனை எவருமே அறியமாட்டார்கள். அவரின் சரீரம் இதற்காக முன்பதிவு (ரிசேவ்) செய்யப்பட்டுள்ளது, ஆகையாலேயே அவர் ஒரு விநாடியில் வந்து ஒரு விநாடியில் செல்கின்றார். இந்த இரகசியம் புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஏதாவது ஒரு விடயத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் நீங்கள் கல்வியை விட்டுச் செல்வதாக இருக்கக் கூடாது. நாளுக்கு நாள், கல்வி ஆழமாகவும் தெளிவாகவும் ஆகுகின்றது. ஒரேநேரத்தில் முழுப் பாடநெறியையும் நீங்கள் கற்பதில்லை. அது உங்களுக்கு தெளிவுபடுத்தப்படுகின்றது. சமய ஸ்தாபகர்கள் வரும் போது, தூய ஆத்மாக்களும் அவர்களுடன் வந்து, தமது சொந்தப் பாகத்தை நடிக்கின்றார்கள். அதன் பின்னர் அந்த ஆத்மாக்கள் இன்ப, துன்ப பாகங்களை நடிக்க வேண்டியுள்ளது. அவர்கள் மீண்டும் திரும்பி செல்வதில்லை. எவ்வாறாயினும் அசரீரியான பரமாத்மா வரும் போது, அவர் இன்ப துன்பத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்கின்றார். அவர் தனது பாகத்தை நடித்த பின்னர் திரும்பிச் சென்று விடுகின்றார். இந்தக் கருத்தை நாங்கள் எங்கள் புத்தியினால் புரிந்து கொள்ள வேண்டும்.
2. ஆத்மாக்களுக்கும் பரமாத்மாவிற்கும் இடையில் தெய்வீகக் குணத்திற்கும் வலிமைக்கும் இடையிலேயே வேறுபாடு உள்ளது.
வடிவத்தைப் பொறுத்தவரையில் ஆத்மாக்களுக்கும்; பரமாத்மாவிற்கும் இடையில் வேறுபாடு இல்லை. பரமாத்மாவும் அதே ஒளி வடிவம் உடையவர் ஆவார். ஆத்மாக்களின் அதே அளவையே பரமாத்மாவும் கொண்டிருக்கின்றார். எவ்வாறாயினும், தெய்வீகக் குணத்திலும் சக்திகளிலும் நிச்சயமாக ஆத்மாக்களுக்கும் பரமாத்மாவிற்கும் இடையில் வேறுபாடு உள்ளது. தெய்வீகக் குணங்கள் அனைத்தும் கடவுளின் புகழாகும். கடவுள் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் அப்பாற்பட்டவர். அவர் சர்வசக்திவான். அவரது சகல சக்திகளுமே வேலை செய்கின்றன. மனித ஆத்மாக்களின் சக்திகள் வேலை செய்கின்றன என்றில்லை. கடவுளின் பாகமே தொடர்கின்றது. கடவுள் வந்து ஒரு பாகத்தை நடித்தாலுமே, அவர் பற்றற்றவராகவே இருக்கின்றார். எவ்வாறாயினும், ஓர் ஆத்மா ஒரு பாகத்தில் நடிப்பதற்காக பிரவேசிக்கும் போது, அவர் ஒரு நடிகர் ஆகுகின்றார். கடவுள் ஒரு பாகத்திற்குள் வருகின்றார், ஆனால் எந்தவொரு கர்மபந்தனத்தில் இருந்தும் விடுபட்டிருக்கின்றார். ஓர் ஆத்மா ஒரு பாகத்தை நடிப்பதற்காக பிரவேசிக்கும் போது, அவர் சில கர்ம பந்தனங்களினால் கட்டுண்டிருக்கின்றார். இதுவே ஆத்மாக்களுக்கும் பரமாத்மாவிற்கும் இடையேயான வேறுபாடு. அச்சா.