19.12.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும் என்பதால், ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகவேண்டும். ஒரேயொரு தந்தையை நினைவு செய்யுங்கள், உங்களுடைய இறுதி எண்ணங்கள் உங்களை உங்கள் இலக்கிற்கு அழைத்துச் செல்லும்.

கேள்வி:
அற்புதமான தந்தை உங்களுக்கு எந்த அற்புதமான இரகசியத்தை வெளிப்படுத்தி உள்ளார்?

பதில்:
பாபா கூறுகிறார்: குழந்தைகளே, இந்த அநாதியான, அழிவற்ற நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. அதில் ஒவ்வொருவரினது பாகமும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நிகழ்கின்ற எதுவுமே புதியதல்ல. தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, இதில் என்னுடைய மகத்துவம் எதுவுமில்லை. நானும் நாடகத்தின் பந்தனத்தால் கட்டுண்டுள்ளேன். இந்த அற்புதமான இரகசியத்தை உங்களுக்குக் கூறுவதால், அது தந்தை தனது பாகத்திற்கு அந்தளவு முக்கியத்துவத்தை கொடுக்காதது போன்றுள்ளது.

பாடல்:
இறுதியில் நாம் காத்திருந்த அந்த நாளும் வந்துவிட்டது!

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் இந்தப் பாடலைப் பாடுகின்றார்கள். உங்களை மீண்டும் ஒருமுறை ஆரோக்கியமானவர்களாகவும் செல்வந்தர்களாகவும் ஆக்குவதற்காகவும், தூய்மை, அமைதி, சந்தோஷம் என்ற உங்களுடைய ஆஸ்தியை உங்களுக்குக் கொடுப்பதற்காகவும் தந்தை ஒரு கல்பத்திற்குப் பின்னர் வருகின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். அந்த பிராமணர்களும் ஆசீர்வாதங்கள் கொடுக்கின்றார்கள்: நீங்கள் நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பீர்களாக! நீங்கள் செல்வந்தர்களாக ஆகுவீர்களாக! பல குழந்தைகளைப் பெறுவீர்களாக! குழந்தைகளாகிய நீங்கள் ஓர் ஆஸ்தியைப் பெறுவதால், ஆசீர்வாதம் என்ற கேள்விக்கே இடமில்லை. குழந்தைகளாகிய நீங்கள் கற்கின்றீர்கள். 5000 ஆண்டுகளுக்கு முன்னரும்கூட தந்தை உங்களுக்குக் கற்பித்தல்களைக் கொடுத்து, உங்களை மனிதரிலிருந்து தேவர்களாகவும், சாதாரண மனிதரிலிருந்து நாராயணனாகவும் மாற்றினார் என்பது உங்களுக்குத் தெரியும். கற்கின்ற குழந்தைகளுக்கு, அவர்கள் என்ன கற்கின்றார்கள் என்பதும், யார் அவர்களுடைய ஆசிரியர் என்பதும் தெரியும். அவர்களுக்கு இடையேயும்கூட, அவர்கள் செய்கின்ற முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாகவே இது அவர்களுக்குத் தெரியும். “இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகிறது, அதாவது தேவ இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியும்” என்று குழந்தைகளாகிய நீங்கள் கூறுவீர்கள். ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் ஸ்தாபிக்கப்படுகின்றது. முன்னர், நாங்கள் சூத்திரர்களாக இருந்தோம், நாங்கள் இப்பொழுது பிராமணர்கள் ஆகியுள்ளோம், பின்னர் நாங்கள் தேவர்களாக ஆகுவோம். தாங்கள் சூத்திர குலத்திற்கு உரியவர்களாக இருக்கின்றோம் என்பது உலகிலுள்ள எவருக்கும் தெரியாது. இது உண்மையானது என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். தந்தை உங்களுக்கு உண்மையைக் கூறி, சத்தியமான பூமியை ஸ்தாபிக்கின்றார். சத்திய யுகத்தில் பொய், பாவம் முதலானவை இருக்காது. கலியுகத்தில் மாத்திரமே அஜாமிலைப் போன்ற பாவாத்மாக்கள் இருக்கின்றார்கள். இந்நேரம் இது ஆழ்நரகமாகும். நாளுக்கு நாள் ஆழ்நரகம் வெளியே புலப்படும். நாளுக்கு நாள் உலகம் மென்மேலும் தமோபிரதான் ஆகின்றது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளும் வகையிலேயே மனிதர்கள் செயல்களைச் செய்கின்றார்கள். இதில் காமமே கொடிய எதிரியாகும். அரிதாக வெகு சிலராலேயே தூய்மையாக நிலைத்திருக்க முடிகின்றது. ஆரம்ப காலத்தில் பக்கிரிகள் (சமயத் துறவிகள்) கூறுவதுண்டு: 12 முதல் 13 வயதுள்ள சிறுமிகளும்கூட பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் வகையில் கலியுகம் இருக்கும். அது இந்த நேரமேயாகும். குமாரர்களும் குமாரிகளும் தொடர்ந்தும் அழுக்கான செயல்களைச் செய்கின்றார்கள். தந்தை கூறுகிறார்: அனைவரும் முழுமையாக தமோபிரதான் ஆகும்போதே நான் வருகின்றேன். நானும்கூட நாடகத்தில் ஒரு பாகத்தைக் கொண்டுள்ளேன். நானும்கூட நாடக பந்தனத்தில் கட்டுண்டுள்ளேன். இது குழந்தைகளாகிய உங்களுக்குப் புதியதல்ல. இவ்வாறு தந்தை விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் சக்கரத்தைச் சுற்றி வருகின்றீர்கள், அதன் பின்னர் நாடகம் முடிவுக்கு வருகின்றது. இப்பொழுது தந்தையை நினைவு செய்யுங்கள். நீங்கள் சதோபிரதானாகி, சதோபிரதான் பூமிக்கு அதிபதிகள் ஆகுவீர்கள். அவர் உங்களுக்கு மிகவும் சாதாரண வழிமுறையில் விளங்கப்படுத்துகின்றார். தந்தை தன்னுடைய சொந்தப் பாகத்திற்கு அதிகளவு முக்கியத்துவத்தைக் கொடுக்கவில்லை. இது என்னுடைய பாகம், இது எதுவும் புதியதல்ல. நான் ஒவ்வொரு 5000 வருடங்களுக்கும் ஒருமுறை வரவேண்டும். நானும் நாடகத்தில் கட்டுண்டுள்ளேன். நான் வந்து, இலகுவான நினைவு யாத்திரையை எவ்வாறு கொண்டிருக்கலாம் என்பதைக் குழந்தைகளாகிய உங்களுக்குக் காட்டுகின்றேன். இந்நேரத்திற்கே கூறப்படுகின்றது: உங்கள் இறுதி எண்ணங்கள் உங்களை உங்கள் இறுதி இலக்கிற்கு இட்டுச் செல்லும். இது இறுதிக் காலம். தந்தை உங்களுக்கு ஒரு யுக்தியைக் காட்டுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள், நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். குழந்தைகளே, நீங்கள் புதிய உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள் என்பதை நீங்களும் புரிந்து கொள்கின்றீர்கள். தந்தை மீண்டும் மீண்டும் கூறுகிறார்: இது எதுவுமே புதியதல்ல. அவர்கள் ஜீனியின் கதை ஒன்றை கூறுகின்றார்கள். தனக்கு ஏதாவது வேலை வேண்டுமென அது கூறிய போது, ஏணியில் மேலேறிக் கீழே இறங்குமாறு அதற்குக் கூறப்பட்டது. தந்தையும் கூறுகிறார்: இது ஏறுவதும் இறங்குவதும் பற்றிய நாடகமாகும். நீங்கள் தூய்மை அற்றவர்களில் இருந்து, தூய்மையானவர்களாகவும், தூய்மையானவர்களிலிருந்து, தூய்மை அற்றவர்களாகவும் ஆகவேண்டும். இது கடினமானதல்ல. இது மிகவும் இலகுவானது என்றாலும், நீங்கள் எதனுடன் யுத்தம் புரியவேண்டி உள்ளது? இதைப் புரிந்து கொள்ளாததால், அவர்கள் சமய நூல்களில் ஒரு யுத்தத்தைக் காட்டுகிறார்கள். உண்மையில், இராவணனாகிய மாயையை வெற்றி கொள்வதற்கு மிகப் பெரிய யுத்தம் இடம்பெறுகிறது. குழந்தைகளாகிய நீங்கள் தந்தையை மீண்டும் மீண்டும் நினைவு செய்கையில், உங்களுடைய நினைவு துண்டிக்கப்படுகிறது என்பதை நீங்கள் அவதானிக்கிறீர்கள். மாயை சுவாலையை அணைத்து விடுகிறாள். இதன் அடிப்படையில் “குலேபகாவலி” (பூனை வந்து, விளைக்கைத் தட்டிவிடுகின்றது) என்ற கதை உள்ளது. குழந்தைகள் வெற்றி அடைகின்றார்கள். அவர்கள் நன்றாக முன்னேறிச் சென்றாலும், மாயை வந்து விளக்கை அணைத்து விடுகிறாள். குழந்தைகள் கூறுகின்றார்கள்: பாபா, மாயையின் பல புயல்கள் வருகின்றன. குழந்தைகளுக்கு பலவகையான புயல்கள் வருகின்றன. சில வேளைகளில், 8 முதல் 10 வருடங்கள் பழமை வாய்ந்த மிக நல்ல விருட்சத்தைப் போன்றவர்களும்கூட விழக்கூடிய அளவுக்கு கடுமையான புயல்கள் வருகின்றன. குழந்தைகளுக்கு இது தெரியும். மாலையின் மிக நல்ல மணிகளாக இருந்தவர்கள், இன்று இங்கே இல்லை என்றும் அவர்கள் பேசுகிறார்கள். யானையை விழுங்கிய முதலையின் உதாரணமும் உள்ளது. அது மாயையின் புயலாகும். தந்தை கூறுகிறார்: ஐந்து விகாரங்களையிட்டு தொடர்ந்தும் எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் நினைவில் இருந்தால், பலமானவர்கள் ஆகுவீர்கள். ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுங்கள். நீங்கள் ஒருமுறை மாத்திரமே தந்தையிடம் இருந்து இந்தக் கற்பித்தல்களைப் பெறுகிறீர்கள். வேறு எவரும் உங்களை “ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுங்கள்” என்று கூறமாட்டார்கள். சத்தியயுகத்திலும்கூட எவரும் இதைக் கூறமாட்டார்கள். நீங்கள் உங்கள் பெயரையும், ரூபத்தையும் இடத்தையும், காலப்பகுதியையும் நினைக்கின்றீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் இப்போது வீடு திரும்ப வேண்டும் என நான் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறேன். ஆரம்பத்தில் நீங்கள் சதோபிரதானாக இருந்தீர்கள். சதோ, ரஜோ, தமோ நிலைகளில் நீங்கள் முழுமையாக 84 பிறவிகளை எடுத்துள்ளீர்கள். அதிலும் பிரம்மா, முதல் இலக்கத்தவர் ஆவார். ஏனையோருக்கு 83 பிறவிகளாக இருக்கலாம். ஆனால் இவர் (பிரம்மா) முழுமையாக 84 பிறவிகள் எடுக்கிறார். ஆரம்பத்தில் இவர் ஸ்ரீ நாராயணனாக இருந்தார். இவரைப்பற்றி ஏதாவது கூறுவதென்றால் அது அனைவருக்கும் கூறப்படுவதாக அமையும்: அவர் தனது பல பிறவிகளின் இறுதிப் பிறவியில் இந்த ஞானத்தை எடுத்த பின்னர் நாராயணன் ஆகுகின்றார். விருட்சப் படத்தில், அவர் ஆரம்பத்தில் ஸ்ரீநாராயணனாகவும் இறுதியில் பிரம்மாவாகவும் காட்டப்படுகிறார். கீழே, அவர் இராஜயோகம் கற்கிறார். மக்களின் தந்தையை ஒருபோதும் பரமதந்தை என அழைக்க முடியாது. ஒரேயொருவரை மாத்திரமே, பரமதந்தை என அழைக்க முடியும். இவர் மக்களின் தந்தை (பிரஜாபிதா) என்று அழைக்கப்படுகிறார். இவரோ சரீரதாரி, அவர் சரீரமற்றவர். ஒரு பௌதீக தந்தை, ‘தந்தை’ என்றும், இவர் மக்களின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார்கள். அந்தப் பரமதந்தை, பரந்தாமத்தில் வசிக்கிறார். மக்களின் தந்தை பரந்தாமத்தில் வசிக்கிறார் என நீங்கள் கூறமாட்டீர்கள். அவர் இங்கு பௌதீக உலகிலேயே இருக்கின்றார். அவர் சூட்சும உலகில்கூட இருப்பதில்லை. பௌதீக உலகிலேயே மக்கள் வாழ்கின்றார்கள். மக்களின் தந்தையை கடவுள் என அழைக்க முடியாது. கடவுளுக்கு சரீரத்துக்கான பெயர் இல்லை. பெயர் வழங்கப்படுகின்ற, மனித சரீரத்தில் இருந்து அவர் வேறுபட்டவர். ஆத்மாக்கள் அங்கே வாழும்போது, அவர்கள் பௌதீக பெயர், ரூபத்திற்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கின்றார்கள். எவ்வாறாயினும் அவர்கள் ஆத்மாக்களே. சாதுக்களுக்கும், புனிதர்களுக்கும் எதுவுமே தெரியாது. அவர்கள் தமது இல்லறத்தை விட்டுச் சென்றாலும், அவர்கள் உலக விகாரங்களில் அனுபவப்பட்டவர்கள். சிறு குழந்தைகள் இதனைப் பற்றி எதுவுமே முற்றாக அறியாதவர்கள் என்பதனாலேயே அவர்கள் மகாத்மாக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு ஐந்து விகாரங்களைப் பற்றி எதுவுமே தெரியாது. ஒரு சிறு குழந்தை தூய்மையானவர் எனக் கூறப்படுகின்றார். இந்நேரத்தில், எவருமே தூய்மையான ஆத்மாவென அழைக்கப்படுவதில்லை. அவர்கள் இளமையில் இருந்து, முதுமை அடைந்திருந்தாலும், அவர்கள் தூய்மை அற்றவர்களே. தந்தை விளங்கப்படுத்துகிறார்: ஒவ்வொருவருக்கும் தமக்கென ஒரு தனிப்பட்ட பாகம் நாடகத்தில் பதியப்பட்டுள்ளது. இச்சக்கரத்தில் நீங்கள் எத்தனை சரீரத்தை எடுக்கிறீர்களோ, எத்தனை செயல்களில் ஈடுபடுகிறீர்களோ, அனைத்தும் மீண்டும் இடம்பெறும். அனைத்திற்கும் முதலில், நீங்கள் ஆத்மாவை இனங்காண வேண்டும். அத்தனை சிறிய ஆத்மாவில், 84 பிறவிகளின் அழியாத பாகம் பதியப்பட்டுள்ளது. இதுவே அதி அற்புதமான விடயம். ஆத்மா அழியாதவர், நாடகமும் அழியாதது. இது முன்னரே நிச்சயிக்கப்பட்டது. எப்போது இது ஆரம்பித்தது என்பதை உங்களால் கூறமுடியாது. இதுவே இயற்கை எனக் கூறப்படுகிறது. ஆத்மா எப்படியானவர் என்பதைப் பற்றியோ, நாடகம் எப்படிப் படைக்கப்பட்டது என்பதைப் பற்றியோ எவராலும் எதுவும் செய்ய முடியாது. ஒரு கடலிற்கும், வானத்திற்கும் எப்படி எல்லை இல்லையோ, இதுவும் அழியாத நாடகமாகும். இது மிகவும் அற்புதமானது! பாபா எவ்வாறு அற்புதமானவரோ, அவ்வாறே, இந்த ஞானமும் அற்புதமானது. எவராலும் இந்த ஞானத்தை உங்களுக்குக் கொடுக்க முடியாது. பல நடிகர்கள் தமது சொந்தப் பாகத்தை நடிக்கிறார்கள். எப்போது இந்த நாடகம் படைக்கப்பட்டது என எவரும் கேள்வி எழுப்ப முடியாது. பலரும் வினவுகிறார்கள்: இன்பமும் துன்பமும் நிறைந்த உலகை கடவுள் ஏன் படைத்தார்? எவ்வாறாயினும் அது அநாதியானது. பிரளயம் ஏற்படாது. அது அநாதியானது என்பதால், அது ஏன் படைக்கப்பட்டது என நீங்கள் கேட்க முடியாது. நீங்கள் விவேகமானவர்கள் ஆகும்போது மட்டுமே, தந்தை உங்களுக்கு ஆத்மாவின் ஞானத்தைக் கொடுக்கிறார். நீங்கள் நாளுக்கு நாள் முன்னேறுகிறீர்கள். ஆரம்பத்தில் பாபா உங்களுக்கு மிகவும் குறைவாகவே விளங்கப்படுத்தினார். அவை அற்புதமான விடயங்கள், அத்துடன் அவை உங்களை ஈர்த்திழுக்கும் வகையில் கவர்ச்சியானவையாக இருந்தன. அத்துடன் பக்தியின் கவர்ச்சியும் இருந்தது. கம்சனின் இடத்தில் இருந்து கிருஷ்ணர் கொண்டு செல்லப்பட்டார் எனச் சமயநூல்களில் காட்டப்படுகிறது. அப்படிப்பட்ட கம்சன் போன்ற அசுரர்கள் இருக்கவில்லை என்பது இப்போது உங்களுக்குத் தெரியும். கீதை, பாகவதம், மகாபாரதம் போன்றன அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன, ஆனால் அவற்றில் எதுவும் இல்லை. தொன்றுதொட்டே தசேரா (இராவணனின் கொடும்பாவியை எரித்தல்) தொடர்கிறது என அவர்கள் நம்புகிறார்கள். இராவணன் எப்படிப்பட்டவன் என்பது எவருக்குமே தெரியாது. தேவர்கள் அனைவரும், கீழிறங்கி வரும்பொழுது, தொடர்ந்தும் தூய்மை அற்றவர்கள் ஆகுகிறார்கள். அவர்கள் தூய்மை அற்றவர்கள் ஆகியதால், அவர்களே அதிகளவு அழைத்தார்கள். எனவே, அவர்கள் அழைக்கிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே! தந்தை மட்டுமே இவ்விடயங்களை விளங்கப்படுத்துகிறார். உலகச் சக்கரத்தின் ஆரம்பம், நடு, இறுதியைப் பற்றி வேறு எவருக்குமே தெரியாது. இவ்வாறு ஆகுவதன் மூலம், நீங்கள் பூகோளத்தை ஆள்பவர்களாக ஆகுகிறீர்கள் என நீங்கள் அறிவீர்கள். திரிமூர்த்தியில் எழுதப்பட்டிருக்கிறது: இது உங்களுக்கான இறை தந்தையின் பிறப்புரிமை. பிரம்மாவின் மூலம் ஸ்தாபனையும், சங்கரரின் மூலம் விநாசமும், விஷ்ணுவின் மூலம் பராமரித்தலும் பெறுகிறது என்று கூறப்படுகிறது. விநாசம் நிச்சயமாக இடம்பெறவே வேண்டும். புதிய உலகில் மிகக் குறைந்த எண்ணிக்கையினரே இருப்பார்கள். இப்போது எண்ணற்ற சமயங்கள் உள்ளன. ஒரேயொரு ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் இப்போது இல்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். எனவே அந்த ஒரு தர்மம் நிச்சயமாகத் தேவை. மகாபாரதம் கீதையோடு தொடர்புடையது. இச்சக்கரம் தொடர்ந்தும் சுழல்கிறது. ஒரு விநாடியேனும் அது நிற்க முடியாது. இது எதுவும் புதிதல்ல. நீங்கள் பல தடவைகள் இராச்சியத்தைப் பெற்றிருக்கிறீர்கள். முழுமையாகத் திருப்தி அடைந்தவர்கள், மிகவும் முதிர்ச்சியாகவும் தீவிரமாகவும் இருப்பார்கள். பல தடவைகள் தாம் இராச்சியத்தைப் பெற்றிருக்கிறோம் என்பதையும், இறுதியாகத் தமது இராச்சியத்தை பெற்றது, நேற்று நடந்த ஒரு விடயமே என்பதையும் அவர்கள் உள்ளார்த்தமாகப் புரிந்து கொள்கிறார்கள். நேற்று நாங்கள் தேவர்களாக இருந்தோம், சக்கரத்தைச் சுற்றிய பின்னர், இப்போது நாங்கள் தூய்மை அற்றவர்கள் ஆகிவிட்டோம், இப்போது நாங்கள் யோக சக்தியின் மூலம் உலக இராச்சியத்தைப் பெறுகிறோம். தந்தை கூறுகிறார்: நீங்கள் ஒவ்வொரு சக்கரத்திலும், இராச்சியத்தைப் பெறுகிறீர்கள். இதில் சிறிதளவேனும் வித்தியாசம் இருக்க முடியாது. ஓர் இராச்சியத்தில் சிலர் உயர்ந்த அந்தஸ்தையும், சிலர் குறைந்த அந்தஸ்தையும் பெறுகிறார்கள். இதுவே நீங்கள் செய்கின்ற முயற்சிக்கான பெறுபேறுகளாகும். முன்னர் நீங்கள் குரங்குகளை விடவும் மோசமானவர்களாக இருந்தீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்போது தந்தை உங்களை ஆலயத்தில் அமரத் தகுதிவாய்ந்தவர்களாக ஆக்குகிறார். தாம் முன்னர் உண்மையிலேயே எதற்கும் பயனற்றவர்களாக இருந்தோம் என்பதையும், இப்போது பவுண் பெறுமதி உடையவர்களாக ஆகுகின்றோம் என்பதையும் ஆத்மாக்களான நல்ல குழந்தைகள் உணர்கிறார்கள். தந்தை ஒவ்வொரு கல்பத்திலும் சதப் பெறுமதியுடைய எங்களை, பவுண் பெறுமதி உடையவர்களாக ஆக்குகிறார். முன்னைய கல்பத்தில் இருந்தவர்களாலேயே இதனை மிகவும் நன்றாகப் புரிந்து கொள்ள முடியும். நீங்கள் கண்காட்சிகள் போன்றவற்றை நடாத்தும்போது, அது எதுவும் புதியதல்ல. இதன் மூலமாகவே நீங்கள் அமரத்துவ பூமியை ஸ்தாபிக்கிறீர்கள். பக்தி மார்க்கத்தில், தேவியர்களுக்கு எத்தனையோ பல ஆலயங்கள் உள்ளன. அவை அனைத்தும் பக்தர்களுக்கான சம்பிரதாயங்கள் ஆகும். பூஜிக்கத் தகுதிவாய்ந்தவராக இருப்பதற்கு சம்பிரதாயங்கள் எதுவுமே தேவையில்லை. தந்தை கூறுகிறார்: நாளுக்கு நாள், நான் உங்களுக்கு ஆழமான கருத்துக்களை விளங்கப்படுத்துகிறேன். ஆரம்ப காலத்தில் இருந்து உங்களிடம் பல கருத்துக்கள் உள்ளன. அவற்றைக் கொண்டு நீங்கள் இப்போது என்ன செய்வீர்கள்? அவை கைவிடப்படும். இந்நேரத்தில் பாப்தாதா புதிய கருத்துக்களைத் தொடர்ந்தும் விளங்கப்படுத்துகிறார். மிகச் சிறிய புள்ளியான ஆத்மாவிலேயே சகல பாகமும் பதியப்பட்டிருக்கிறது. இவ்விடயங்கள் உங்கள் ஆரம்பகால குறிப்பு புத்தகத்தில் இருக்காது. பழைய கருத்துக்களை இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? இறுதிக் கால பெறுபேறால் மட்டுமே பயன் உள்ளது. தந்தை கூறுகிறார்: முன்னைய கல்பத்திலும் நான் இதை அவ்வாறே பேசினேன். நீங்கள் வரிசைக்கிரமமாக, தொடர்ந்து கற்கிறீர்கள். சில பாடங்களில் நீங்கள் தளம்பலாம். தொழிலில்கூட தீய சகுனம் உள்ளது. அதனால் உங்களுக்கு மாரடைப்பு வந்துவிடக் கூடாது. உங்கள் சொந்தக் கால்களில் நின்று மீண்டும் முயற்சி செய்யுங்கள். சிலர் கடனாளிகள் ஆகிய பின்னரும், வேறொரு தொழிலைத் தொடங்கி மிகவும் செல்வந்தர்கள் ஆகிவிடுகிறார்கள். இங்கும் எவரேனும் விகாரத்தில் வீழ்ந்துவிட்டால், தந்தை கூறுகிறார்: நல்ல முயற்சி செய்து, உயர்ந்ததோர் அந்தஸ்தை அடையுங்கள். மீண்டும் ஏறத் தொடங்க வேண்டும். தந்தை கூறுகிறார்: நீங்கள் வீழ்ந்து விட்டீர்கள், எனவே மீண்டும் நீங்கள் இப்பொழுது மேலே ஏறவேண்டும். பலரும் வீழ்ந்த பின், மீண்டும் மேலே ஏற முயற்சிக்கிறார்கள். பாபா அதற்கு தடை விதிப்பதில்லை. அப்படியான பல ஆத்மாக்கள் வருவார்கள் என்பது தந்தைக்குத் தெரியும். தந்தை கூறுவார்: முயற்சி செய்யுங்கள். அவர்கள், குறைந்தபட்சம் ஓரளவுக்காவது உதவியாளர்கள் ஆகுவார்கள். இது நாடகத்துக்கு அமையவே நடைபெறுகிறது எனக் கூறப்படுகிறது. தந்தை கூறுவார்: ஓகே குழந்தாய், இப்போது உங்களுக்கு திருப்தியா? நீங்கள் பெருமளவு தடுமாறினீர்;கள். இப்போது மீண்டும் ஒருமுறை முயற்சி செய்யுங்கள். எல்லையற்ற தந்தையே இவ்வாறு கூறுவார், இல்லையா? பலரும் பாபாவைச் சந்திக்க வருகிறார்கள். நான் அவர்களிடம் கூறுவதுண்டு: எல்லையற்ற தந்தை கூறுவதை, நீங்கள் செவிமடுக்க மாட்டீர்களா? நீங்கள் தூய்மையாக மாட்டீர்களா? தந்தை, தன்னை ஆத்மா எனக் கருதி, ஆத்மாக்களோடு பேசுகிறார். எனவே அம்பு நிச்சயமாக இலக்கைத் தாக்குகிறது. உதாரணத்திற்கு, அம்பினால் ஒரு பெண் தாக்கப்பட்டால், அவள் கூறுவாள்: நான் இச்சத்தியத்தைச் செய்வேன். கணவனோ அம்பினால் தாக்கப்படாமல் இருக்கலாம். அவள் முன்னேறிச் செல்லும்போது, கணவனையும் முன்னேற்ற முயற்சி செய்வாள். மனைவிகளால் இந்த ஞானத்துக்கு அழைத்து வரப்பட்ட, அத்தகைய பல ஆண்கள் உள்ளனர். அதன் பின்னர் தனது மனைவியே, தனது குரு என அவர்கள் ஒவ்வொருவரும் கூறுவார்கள். அந்த பிராமணர்கள் ஒரு திருமண பந்தனத்தை நடாத்தி வைக்கும்போது, மணப்பெண்ணிடம், 'இனி உனது கணவனே உனக்குக் கடவுள்" எனக் கூறுகிறார்கள். இங்கு தந்தை கூறுகிறார்: ஒரே ஒரு தந்தையே உங்களுக்கு அனைத்தும் ஆவார். என்னுடையவர் ஒருவரேயன்றி, வேறு எவரும் அல்லர். அனைவரும் அவரையே நினைவு செய்கிறார்கள். நீங்கள் அந்த ஒருவருடனேயே யோகம் செய்யவேண்டும். இச்சரீரம்கூட என்னுடையதல்ல. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தீய சகுனங்கள் ஏதாவது ஏற்படும் போதெல்லாம், மனந்தளர்ந்து அமர்ந்து விடாதீர்கள். பாபாவின் நினைவில் நிலைத்திருப்பதன் மூலம் மீண்டும் ஒரு தடவை முயற்சி செய்து உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோரிக் கொள்ளுங்கள்.

2. மாயையின் புயல்கள் எதுவும் உங்களைத் தாக்காத வகையில், நினைவின் மூலம் உங்கள் ஸ்திதியை மிகவும் உறுதியானது ஆக்கிக் கொள்ளுங்கள். தொடர்ந்தும் விகாரங்களில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

ஆசீர்வாதம்:
உயிருள்ள வெளிச்ச வீடாகவிருந்து சகல சக்திகளும் என்ற உங்கள் ஒளியினால் ஆத்மாக்கள் அனைவருக்கும் பாதையை காட்டுவீர்களாக.

உலக நன்மை என்ற சேவைக்காக, நீங்கள் பரந்தாமத்திலிருந்து அவதரித்த ஓர் ஆத்மா என்ற விழிப்புணர்வில் சதா இருந்தால், நீங்கள் கொண்டிருக்கின்ற எண்ணங்களிலும் நீங்கள் பேசுகின்ற வார்த்தைகளிலும் உலக நன்மை அமிழ்ந்திருக்கும். இந்த விழிப்புணர்வு ஒரு வெளிச்சவீடாக செயற்படும். ஒரு வெளிச்ச வீட்டிலிருந்து ஒரு நிறத்தின் ஒளி வெளிப்படுவதைப் போன்று, உயிருள்ள வெளிச்ச வீடுகளாகிய உங்களிடம் இருந்து வெளிப்படும் சகல சக்திகளது ஒளியும், ஆத்மாக்கள் அனைவருக்கும் பாதையின் ஒவ்வோர் அடியையும் காட்டுகின்ற வேலையை தொடர்ந்தும் செய்யும்.

சுலோகம்:
அன்பு மற்றும் ஒத்துழைப்பு என்பவற்றுடன், சக்தி சொரூபமாகவும் ஆகுங்கள். அப்பொழுது நீங்கள் இராச்சியத்தில் முன்னிலையில் ஓர் இலக்கத்தைக் கோருவீர்கள்.

அவ்யக்த சமிக்ஞை: இப்பொழுது முழுமையாகவும் கர்மாதீத்தாகவும் ஆகுகின்ற ஆழமான அக்கறையைக் கொண்டிருங்கள்.

செயலாற்றுவது இயல்பானது போன்றே, கர்மாதீத் ஆக இருப்பதும் இயல்பாக இருக்கட்டும். செயல்களைச் செய்வதுடன் நினைவிலும் நிலைத்திருங்கள். சதா கர்மயோகி ஸ்திதியில் இருப்பவர்கள் இலகுவாக கர்மாதீத் ஆகுகிறார்கள். நீங்கள் விரும்பும் போது, செயல்களை செய்ய ஆரம்பியுங்கள், பின்னர் விரும்பும் போது விடுபட்டிருங்கள், இதனை அவ்வப்போது தொடர்ந்தும் பயிற்சி செய்யுங்கள்.