20.01.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, எல்லையற்ற தந்தையை நினைவுசெய்வது மறைமுகமான ஒன்றாகும். நினைவு, நினைவைக் கொண்டு வருகிறது. நினைவில் நிலைத்து இருக்காதவர்களை எவ்வாறு தந்தையால் நினைவுசெய்ய முடியும்?
கேள்வி:
முழுக் கல்பத்திலும் வேறெந்த நேரத்திலும் ஒருபொழுதும் கற்பிக்கப்படாத, எந்தக் கல்வியைக் குழந்தைகளாகிய நீங்கள் சங்கமயுகத்தில் கற்கின்றீர்கள்?பதில்:
உங்கள் சரீரத்திலிருந்து மரணித்து வாழ்ந்து, ஒரு பிரேதம் ஆகுவதற்கான கல்வி இந்நேரத்தில் மாத்திரமே கற்பிக்கப்படுகிறது. ஏனெனில், இந்நேரத்தில் நீங்கள் கர்மாதீத் ஆகவேண்டும். நீங்கள் ஒரு சரீரத்தில் இருக்கும்பொழுது, செயல்களைச் செய்ய வேண்டும். நீங்கள் ஒரு சரீரத்தில் இல்லாதபொழுது மாத்திரமே உங்கள் மனம் அமைதி நிறைந்ததாக இருக்க முடியும். இதனாலேயே, “மனதை வெல்பவர்கள் உலகை வெல்கிறார்கள்” எனக் கூறப்படக் கூடாது. “மாயையை வெல்பவர்களே உலகை வெல்பவர்கள்” என்பதாகவே இருக்க வேண்டும்.ஓம் சாந்தி.
தந்தை இங்கே அமர்ந்திருந்து, குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார், ஏனெனில் விவேகம் அற்றவர்களுக்கு மாத்திரமே கற்பிக்கப்படுவதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இப்பொழுது, அதிமேன்மையான கடவுளாகிய, எல்லையற்ற தந்தை வரும்பொழுது, யாருக்குக் கற்பிப்பார்? அவர் நிச்சயமாக அதிகளவு விவேகம் அற்றவர்களுக்கே கற்பிப்பார். “விநாச வேளையில் அன்பற்ற புத்திகளைக் கொண்டவர்கள்” என்பது பற்றி இதனாலேயே அவர்கள் பேசுகின்றார்கள். எவ்வாறு புத்தி அன்பற்றதாக ஆகியது? அவர்கள் 8.4 மில்லியன் உயிரினங்களைப் பற்றி எழுதி உள்ளார்கள். தந்தை 8.4 மில்லியன் பிறவிகளை எடுக்கிறார் எனவும் அவர்கள் கூறியுள்ளார்கள். பூனைகள், நாய்களிலும், உயிருள்ளவை அனைத்திலும் பரமாத்மா இருக்கிறார் என அவர்கள் கூறுகிறார்கள். இக்கருத்து இரண்டாவதாக விளங்கப்படுத்தப்பட வேண்டும் எனக் குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறப்பட்டு வந்துள்ளது. ஒரு புதியவர் வரும்பொழுது, எல்லாவற்றுக்கும் முதலில், எல்லைக்கு உட்பட்ட, எல்லையற்ற தந்தையர்களின் அறிமுகத்தை அவர்களுக்குக் கொடுங்கள் எனத் தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். அவர் எல்லையற்ற சிரேஷ்ட பாபாவும், இவர் எல்லைக்கு உட்பட்ட கனிஷ்ட பாபாவும் ஆவர். “எல்லையற்ற தந்தை” என்றால் எல்லையற்ற ஆத்மாக்களின் தந்தை என்பது அர்த்தம். ஓர் எல்லைக்கு உட்பட்ட தந்தை உயிருள்ளவர்களின் தந்தை ஆவார். அவர் ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தை. அனைவராலும் இந்த ஞானத்தை ஒரேயளவுக்குக் கிரகிக்க முடியாது. சிலர் 1 சதவீதத்தை மாத்திரம் கிரகிக்கிறார்கள், சிலர் 95 சதவீதத்தைக் கிரகிக்கிறார்கள். இது புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். சூரிய வம்சம் இருக்கும்; அரசர்கள், அரசிகள், பிரஜைகள் இருக்கிறார்கள். இது உங்கள் புத்தியில் பிரவேசிக்கிறது. பிரஜைகளின் மத்தியில் சகல விதமான மனிதர்களும் இருக்கிறார்கள். பிரஜைகள் என்றால் பிரஜைகள்! தந்தை விளங்கப்படுத்துகிறார்: இது ஒரு கல்வி. உங்கள் சொந்தப் புத்திக்கேற்ப நீங்கள் ஒவ்வொருவரும் கற்கிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் சொந்தப் பாகத்தைப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் முன்னைய கல்பத்தில் எவ்வளவுக்கு இக்கல்வியைக் கிரகித்தீர்களோ, அதையே இப்பொழுதும் கிரகிப்பீர்கள். கல்வியானது ஒருபொழுதும் மறைக்கப்பட்டிருக்க முடியாது. நீங்கள் எவ்வளவுக்குக் கற்கிறீர்கள் என்பதற்கேற்ப, உங்களுடைய அந்தஸ்தைப் பெறுகிறீர்கள். தந்தை விளங்கப்படுத்தி உள்ளார்: நீங்கள் மேலும் முன்னேறும் பொழுது, பரீட்சைகள் இருக்கும். நீங்கள் ஒரு பரீட்சையை எடுக்காமல், உங்களைத் தர மாற்றம் செய்ய முடியாது. இறுதியில் அனைத்து விடயங்களும் வெளிப்படுத்தப்படும். எவ்வாறாயினும், இப்பொழுதும், நீங்கள் என்ன அந்தஸ்துக்குத் தகுதிவாய்ந்தவர் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும். அனைவர் மத்தியிலும் இருக்கும் பொழுது, சங்கடத்தினால் நீங்கள் அனைவரும் உங்களின் கைகளை உயர்த்தினாலும், உங்களால் அப்படி ஆகுவது சாத்தியம் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும் என்பதை உங்கள் இதயத்தில் புரிந்து கொள்கிறீர்கள். எப்படியிருப்பினும், நீங்கள் உங்கள் கரங்களை உயர்த்துகிறீர்கள். அப்படி இருந்தும் உங்கள் கரங்களை உயர்த்துவது என்றால்… அறியாமை என்பதே இதன் அர்த்தம். அதிகளவு அறியாமை உள்ளது. அந்த (லௌகீக) மாணவர்களுக்கு அதிக விவேகம் உள்ளது எனத் தந்தை நேரடியாகவே புரிந்து கொள்கிறார். தாங்கள் ஒரு புலமைப்பரிசிலைக் கோருவதற்குத் தகுதியானவர்களாக இல்லாவிட்டால், தாங்கள் சித்தியடைய மாட்டோம் என்பதை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். அந்த லௌகீக மாணவர்கள் உங்களை விடவும் மேலானவர்கள். ஏனெனில் தங்கள் ஆசிரியர் தங்களுக்குக் கற்பிக்கின்ற பாடத்தில் தாங்கள் எவ்வளவு புள்ளிகளைக் கோருவார்கள் என்பதையாவது குறைந்தபட்சம் அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். நாங்கள் திறமைச்சித்தி அடைவோம் என அவர்கள் கூற மாட்டார்கள். இங்கே உள்ளவர்களுக்கு அந்தளவு விவேகம் கூட இருப்பதில்லை என்பதை இது காட்டுகிறது; அவர்களுக்குப் பெருமளவு சரீர உணர்வு உள்ளது. நீங்கள் இங்கு இலக்ஷ்மி நாராயணன் ஆகுவதற்கு வந்திருப்பதனால், உங்கள் செயற்பாடு மிகவும் சிறந்ததாக இருக்க வேண்டும். தந்தை கூறுகிறார்: விநாசவேளையில் சிலர் அன்பற்ற புத்தியைக் கொண்டுள்ளார்கள். அவர்கள் தந்தைக்கான மிகச்சரியான அன்பைக் கொண்டிராது விட்டால், அவர்களின் நிலைமை என்னவாகும்? அவர்களால் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோர முடியாமல் போய்விடும். “விநாசவேளையில் அன்பற்ற புத்தியைக் கொண்டிருப்பவர்கள்” என்பதன் அர்த்தத்தைத் தந்தை இங்கே அமர்ந்திருந்து, விளங்கப்படுத்துகிறார். குழந்தைகளாகிய உங்களாலேயே அதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியாதுவிடின், மற்றவர்கள் எதைப் புரிந்து கொள்வார்கள்? தாங்கள் சிவபாபாவின் குழந்தைகள் என நம்புகின்ற குழந்தைகள் அதன் அர்த்தத்தை முழுமையாகப் புரிந்து கொள்வதில்லை. தந்தையை நினைவு செய்வது மறைமுகமான ஒன்றாகும். கல்வி மறைமுகமானது இல்லை. அனைவரும் கல்வியில் வரிசைக்கிரமமானவர்களே: அனைவரும் ஒரேயளவுக்குக் கற்க மாட்டார்கள். அவர்கள் இன்னமும் சிறு குழந்தைகளே எனத் தந்தை உணர்ந்து கொள்கிறார். அவர்கள் மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை எல்லையற்ற தந்தையை நினைவு செய்வதில்லை. ஒருவர் பாபாவை நினைவு செய்கிறாரா, இல்லையா என்பதை எவ்வாறு புரிந்து கொள்வது? அவர்களிடம் இருந்து பாபா ஒரு கடிதத்தைப் பெறும் பொழுதும், தாங்கள் செய்கின்ற ஆன்மீகச் சேவையின் சேவைச் செய்தியை அவர்கள் எழுதும் பொழுதும் மாத்திரமே அது புரிந்து கொள்ளப்படும். நீங்கள் ஏதேனும் அத்தாட்சியைக் கொடுப்பது அவசியம். நினைவில் நிலைத்து இருக்காதவர்களும், சேவையின் எந்த அத்தாட்சியையும் கொடுக்காதவர்களும் சரீர உணர்வு உடையவர்கள். சிலர் தங்கள் செய்தியை எழுதுகிறார்கள்: பாபா, இன்ன இன்னார் வந்தார், நான் அவருக்கு இதை விளங்கப்படுத்தினேன். ஆகவே, குழந்தை இன்னமும் உயிருடன் இருக்கிறார் எனவும், சிறந்த சேவைச் செய்தியைக் கொடுக்கிறார் எனவும் தந்தை புரிந்து கொள்கிறார். சிலர் மூன்று தொடக்கம் நான்கு மாதங்கள் வரை ஒரு கடிதத்தைக் கூட எழுதுவதில்லை. பாபா எச்செய்தியையும் பெறாத பொழுது, குழந்தை இறந்து விட்டார் அல்லது நோய்வாய்ப்பட்டுள்ளார் என்பதைப் புரிந்து கொள்கிறார். நோயுற்று இருப்பவர்களால் எழுத முடியாமல் இருக்கும். தங்கள் ஆரோக்கியம் நன்றாக இல்லாததால், தாங்கள் முன்னர் எழுதவில்லை எனவும் சிலர் எழுதுகிறார்கள். சிலர் முற்றாகவே எச்செய்தியையும் கொடுப்பதில்லை; அவர்கள் நோய்வாய்ப்படுவது இல்லை, அவர்கள் சரீர உணர்வுடன் இருக்கிறார்கள். அப்பொழுது, தந்தை யாரை நினைவுசெய்வார்? நினைவு, நினைவைக் கொண்டு வருகிறது! எவ்வாறாயினும், சரீர உணர்வு உள்ளது. தந்தை வந்து விளங்கப்படுத்துகிறார்: நான் சர்வவியாபி என நீங்கள் கூறி, 8.4 மில்லியன் உயிரினங்களை விடவும் அதிக எண்ணிக்கையான உயிரினங்களில் என்னை இட்டுள்ளீர்கள். மனிதர்கள் கல்லுப் புத்தியை உடையவர்கள் எனக் கூறப்பட்டுள்ளார்கள். கடவுளையிட்டு, அவர்கள் கூறுகிறார்கள்: கூழாங்கற்கள், கற்கள் அனைத்திலும் அவர் இருக்கிறார். ஆகவே, அது ஓர் எல்லையற்ற அவமதிப்பு, இல்லையா? ஆகவே, தந்தை கூறுகிறார்: அவர்கள் என்னை அதிகளவு அவதூறு செய்கிறார்கள்! நீங்கள் இப்பொழுது அனைத்தையும் வரிசைக்கிரமமாகப் புரிந்து கொள்கிறீர்கள். பக்தி மார்க்கத்தில், அவர்கள் பாடுகிறார்கள்: நீங்கள் வரும்பொழுது, நான் என்னை உங்களுக்கு அர்ப்பணிப்பேன். நான் உங்களை என்னுடைய வாரிசு ஆக்குவேன். நான் கூழாங்கற்களிலும், கற்களிலும் இருக்கிறேன் எனக் கூறி, நீங்கள் என்னை உங்கள் வாரிசு ஆக்குகிறீர்கள்! நீங்கள் என்னை அதிகளவு அவதூறு செய்கிறீர்கள்! இதனாலேயே தந்தை கூறுகிறார்: அதர்மம் தலைதூக்கும் பொழுது, நான் வருகிறேன். குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது தந்தையைத் தெரியும், ஆகவே நீங்கள் அவரை அதிகளவுக்குப் புகழ்கிறீர்கள். அவரைப் புகழ்வதை விடுங்கள், அவருடைய நினைவுக்கான இரண்டு வார்த்தைகளைக் கூட சிலர் எழுதுவதில்லை. அவர்கள் சரீர உணர்வு உடையவர்கள் ஆகுகிறார்கள். நீங்கள் தந்தையைக் கண்டுகொண்டீர்கள் எனக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். எங்களுடைய தந்தையே எங்களுக்குக் கற்பிக்கிறார். இவையே கடவுளின் வாசகங்கள். நான் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறேன். நான் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்து, எவ்வாறு உங்களால் உலக இராச்சியத்தைக் கோர முடியும் என்பதையும் காண்பிக்கிறேன். எல்லையற்ற தந்தையே உங்களுக்கு எவ்வாறு உலக இராச்சியத்தைக் கோருவது எனக் கற்பிக்கிறார் என்னும் போதை உங்களுக்கு இருந்திருந்தால், உங்களுக்கு முடிவற்ற சந்தோஷம் இருந்திருக்கும். அவர்கள் கீதையைக் கற்றாலும், ஒரு சாதாரண புத்தகத்தைப் போன்றே அதைக் கற்கிறார்கள். கீதையைக் கற்பவர்களுக்கோ அல்லது உரைப்பவர்களுக்கோ இந்தளவு சந்தோஷம் இருப்பதில்லை. அவர்கள் கீதையை வாசித்து முடிக்கும் பொழுது, தங்கள் வியாபாரத்தில் மும்முரமாகி விடுகிறார்கள். எல்லையற்ற தந்தையே உங்களுக்குக் கற்பிக்கிறார் என்பது இப்பொழுது உங்கள் புத்தியில் உள்ளது. கடவுள் தங்களுக்குக் கற்பிக்கிறார் என்பது வேறு எவருடைய புத்தியிலும் பிரவேசிப்பதில்லை. ஆகவே, ஒருவர் வரும்பொழுது, எல்லாவற்றுக்கும் முதலில், இரு தந்தையரைப் பற்றிய அறிமுகத்தை அவருக்கு விளங்கப்படுத்துங்கள். அவருக்குக் கூறுங்கள்: பாரதம் சுவர்க்கமாக இருந்தது, அது இப்பொழுது, நரகமாக உள்ளது. தாங்கள் கலியுகத்திலும், சத்தியயுகத்திலும் இருப்பதாக எவராலும் கூற முடியாது. ஒருவர் துன்பத்தை அனுபவம் செய்யும்பொழுது, அவர் நரகத்தில் இருக்கிறார், ஒருவர் சந்தோஷத்தை அனுபவம் செய்யும்பொழுது, அவர் சுவர்க்கத்தில் இருக்கிறார். தங்களுக்குப் பெருமளவு சந்தோஷம் இருப்பதாகவும், சந்தோஷமற்ற மக்கள் நரகத்தில் இருப்பதாகவும் பலர் கூறுகிறார்கள். அவர்களின் மாளிகைகள், கட்டடங்கள் போன்றவை அவர்களிடம் இருக்கின்றன. அவர்கள் பெருமளவுக்குப் வெளிப்புறச் சந்தோஷத்தைப் பார்க்கிறார்கள். சத்தியயுகத்துச் சந்தோஷத்தை இங்கு அனுபவம் செய்ய முடியாது என நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். அவை இரண்டும் ஒன்று அல்ல, ஆகவே சத்தியயுகத்தைக் கலியுகம் எனவும், கலியுகத்தைச் சத்தியயுகம் எனவும் அழைக்க முடியும் என்பதல்ல. அதை நம்புபவர்கள், அறியாமையில் உள்ளவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். ஆகவே, எல்லாவற்றுக்கும் முதலில், அவர்களுக்குத் தந்தையைப் பற்றிய கோட்பாட்டைக் கூறுங்கள். தந்தை தனது சொந்த அறிமுகத்தைக் கொடுக்கிறார். வேறு எவருக்கும் அவரைத் தெரியாது. கடவுள் சர்வவியாபி என அவர்கள் கூறுகிறார்கள். ஆத்மாவின் ரூபமும், பரமாத்மாவின் ரூபமும் ஒன்றே என நீங்கள் இப்பொழுது படங்களில் காண்பிக்கிறீர்கள். அவரும் ஓர் ஆத்மாவே, ஆனால் அவர் பரமாத்மா என அழைக்கப்படுகிறார். தந்தை இங்கே அமர்ந்திருந்து, தான் எவ்வாறு வருகிறார் என விளங்கப்படுத்துகிறார். ஆத்மாக்கள் அனைவரும் அங்கு பரந்தாமத்தில் வசிக்கிறார்கள். வெளியிலுள்ள மக்களால் இவ்விடயங்களைப் புரிந்துகொள்ள முடியாது. பாஷையும் மிகவும் இலகுவானது. கீதையில், ஸ்ரீகிருஷ்ணரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் ஸ்ரீகிருஷ்ணர் கீதையைப் பேசவில்லை. அவரால் அனைவருக்கும் கூற முடியாது: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள்! சரீரதாரிகளை நினைவு செய்வதால், பாவங்கள் அழிக்கப்பட முடியாது. கூறப்பட்டுள்ளது: கடவுள் ஸ்ரீகிருஷ்ணர் பேசுகிறார்: சரீர உறவினர்கள் அனைவரையும் துறந்து, சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள்! எவ்வாறாயினும், ஸ்ரீகிருஷ்ணருக்கும் சரீர உறவினர்கள் இருக்கிறார்கள், அத்துடன் அவர் ஒரு சிறு குழந்தையே. இது அத்தகையதொரு பெரும் தவறு! ஒரேயொரு தவறின் காரணமாகப் பெருமளவு வேறுபாடு உள்ளது. கடவுள் சர்வவியாபியாக இருக்க முடியாது. “அனைவருக்கும் சந்தோஷத்தை அருள்பவர்” என நீங்கள் கூறுபவர், சீரழிவையும் அடைகிறாரா? கடவுளால் எப்பொழுதாவது சீரழிவை அடைபவராக முடியுமா? இவ்விடயங்கள் அனைத்தும் கடையப்பட வேண்டும். இது நேரத்தை வீணாக்குவதற்கான ஒரு விடயமல்ல! தங்களுக்கு நேரமில்லை என மக்கள் கூறுகிறார்கள். வந்து, பாடநெறியைக் கற்குமாறு நீங்கள் அவர்களுக்குக் கூறும்பொழுது, அவர்கள் தங்களுக்கு நேரமில்லை எனக் கூறுகிறார்கள். அவர்கள் இரண்டு நாட்களுக்கு வருவார்கள், நான்கு நாட்களுக்கு வர மாட்டார்கள். அவர்கள் கற்காதுவிடின், அவர்களால் எவ்வாறு இலக்ஷ்மி நாராயணன் ஆகமுடியும்? மாயையின் விசை அதிகளவுக்கு உள்ளது. தந்தை விளங்கப்படுத்துகிறார்: ஒவ்வொரு விநாடியும், ஒவ்வொரு நிமிடமும் திரும்பத் திரும்ப அதே போன்று கடந்து செல்கிறது. அவை தொடர்ந்தும் எண்ணற்ற தடவைகள் திரும்பத் திரும்ப நடைபெறும். நீங்கள் இப்பொழுது தந்தை கூறுவதைச் செவிமடுக்கிறீர்கள். பிறப்பு, இறப்புச் சக்கரத்தினுள் பாபா வருவதில்லை. பிறப்பு, மறுபிறவிச் சக்கரம் முழுவதிலும் வருபவரையும், அதில் வராதவரையும் உங்களால் ஒப்பீடு செய்ய முடியும். ஒரேயொரு தந்தையே பிறவி எடுப்பதும் இல்லை அல்லது மரணிப்பதும் இல்லை. ஏனைய அனைவரும் இச்சக்கரத்தினுள் இருக்கிறார்கள். இதனாலேயே பிரம்மா, விஷ்ணு இருவரின் படங்களையும் பிறப்பு, மறுபிறப்பு எடுப்பதாக நீங்கள் காட்டுகிறீர்கள். அவர்கள் தொடர்ந்தும் தங்கள் பாகங்களை நடிக்கிறார்கள்: பிரம்மா விஷ்ணு ஆகுகிறார், விஷ்ணு பிரம்மா ஆகுகிறார்: அது முடிவடையாது. அனைவரும் வந்து, இப்படங்களைப் பார்த்துப் புரிந்து கொள்வார்கள். இது இலகுவில் புரிந்து கொள்ளப்பட வேண்டியதொன்று. நீங்கள் பிராமணர்கள் பின்னர் நீங்கள் தேவர்களாகவும், சத்திரியர்களாகவும், வைசியர்களாகவும், சூத்திரர்களாகவும் ஆகுவீர்கள் என்பதும், தந்தை வரும்பொழுது, பின்னர் நீங்கள் பிராமணர்கள் ஆகுவீர்கள் என்பதும் உங்கள் புத்தியில் பிரவேசிக்க வேண்டும். இதை நினைவு செய்யுங்கள், நீங்கள் சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுபவர்கள் ஆகுவீர்கள். நினைவில் நிலைத்திருக்க இயலாத பலர் உள்ளார்கள். பிராமணர்களாகிய நீங்கள் மாத்திரமே சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுபவர்கள் ஆகுகிறீர்கள். தேவர்கள் இவ்வாறு ஆகுவதில்லை. நீங்கள் எவ்வாறு சக்கரத்தைச் சுற்றிச் செல்கிறீர்கள் என்னும் இந்த ஞானத்தை இப்பொழுது பெறுவதனால், தேவர்கள் ஆகுகிறீர்கள். உண்மையில், சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுபவர்கள் என அழைக்கப்படத் தகுதியானவர்களாக மனிதர்கள் எவரும் இருப்பதில்லை. பாரத மக்களின் சம்பிரதாயங்கள் வேறுபட்டவையாக இருப்பதைப் போன்றே, மரண பூமியாகிய மனித உலகமும், முழுமையாகவே வேறுபட்டது. அனைவருடைய சம்பிரதாயங்களும் வேறுபட்டவை. தேவர்களின் சம்பிரதாயங்கள் வேறுபட்டவை. மரண பூமியின் மக்களின் சம்பிரதாயங்கள் வேறுபட்டவை. பகலுக்கும், இரவுக்கும் இடையிலான வேறுபாடு இருப்பதனாலேயே தாங்கள் தூய்மை அற்றவர்கள் என அனைவரும் கூறுகிறார்கள். அவர்கள் அழைக்கிறார்கள்: ஓ கடவுளே! தூய்மையற்ற உலகவாசிகளாகிய எங்கள் அனைவரையும் தூய்மை ஆக்குங்கள்! 5000 வருடங்களுக்கு முன்னர் தூய உலகம் இருந்தது என்பதும், அது சத்தியயுகம் என அழைக்கப்பட்டது என்பதும் உங்களின் புத்தியில் உள்ளன. திரேதா யுகத்தை அவ்வாறு அழைப்பதில்லை. முதலில் முதல் வகுப்பும், பின்னர் இரண்டாம் வகுப்பும் உள்ளன எனத் தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். ஆகவே வருகின்ற எவரும் அதைக் கேட்பதில் வியப்பு அடையுமாறு நீங்கள் ஒவ்வொரு விடயத்தையும் மிகவும் நன்றாக விளங்கப்படுத்த வேண்டும். சிலர் பெருமளவுக்கு வியப்படைகிறார்கள், ஆனால் தாங்கள் நிச்சயமாகத் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதை அவர்கள் கேட்கும் பொழுது, அவர்களுக்கு முயற்சி செய்ய நேரம் இருப்பதில்லை. காம விகாரமே மனிதர்களைத் தூய்மை அற்றவர்கள் ஆக்குகிறது. அதை வெற்றி கொள்வதனால், நீங்கள் உலகை வெல்பவர்கள் ஆகுவீர்கள். தந்தையும் உங்களுக்குக் கூறியுள்ளார்: காம விகாரத்தை வெற்றி கொள்வதனால், உலகை வெல்பவர்கள் ஆகுங்கள். மனிதர்கள் கூறுகிறார்கள்: மனதை வெல்வதனால், உலகை வெல்பவர்கள் ஆகுங்கள். உங்கள் மனத்தைக் கட்டுப்படுத்துங்கள். உங்களுக்கு ஒரு சரீரம் இல்லாத பொழுது மாத்திரமே, உங்கள் மனதால் அமைதி நிறைந்ததாக இருக்க முடியும். இல்லாவிட்டால், மனதால் ஒருபொழுதும் அமைதி நிறைந்ததாக இருக்க முடியாது. நீங்கள் செயல்களைச் செய்வதற்கு, ஒரு சரீரத்தைப் பெறுகிறீர்கள். ஆகவே, எவ்வாறு உங்களால் இங்கு உங்கள் கர்மாதீத ஸ்திதியில் நிலைத்திருக்க முடியும்? கர்மாதீத ஸ்திதியானது ஒரு பிரேதமாக இருப்பதைப் போன்றது எனக் கூறப்பட்டுள்ளது: - மரணித்து வாழ்வதும், உங்கள் சரீரத்தில் இருந்து பற்றற்றிருப்பதும் ஆகும். உங்களுக்குச் சரீரத்தில் இருந்து பற்றற்றவர் ஆகுவதற்கான கல்வியே கற்பிக்கப்படுகிறது. ஓர் ஆத்மா ஒரு சரீரத்தில் இருந்து வேறுபட்டவர். ஓர் ஆத்மா பரந்தாமத்து வாசி. ஒரு சரீரத்தில் ஓர் ஆத்மா பிரவேசிக்கும் பொழுதே, அவர் ஒரு மனிதர் என அழைக்கப்படுகிறார். நீங்கள் செயல்களைச் செய்வதற்கு ஒரு சரீரத்தைப் பெறுகிறீர்கள். ஓர் ஆத்மா தனது சரீரத்தை விட்டு நீங்கும் பொழுது, செயல்களைச் செய்வதற்கு இன்னுமொரு சரீரத்தைப் பெற வேண்டும். நீங்கள் செயல்களைச் செய்யத் தேவையில்லாத பொழுது மாத்திரமே, உங்களால் அமைதிநிறைந்தவராக இருக்க முடியும். அசரீரி உலகில் செயல்கள் கிடையாது. இங்கேயே உலகச் சக்கரம் சுழல்கிறது. நீங்கள் தந்தையையும், உலகச் சக்கரத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். இது ஞானம் என அழைக்கப்படுகிறது. உங்களுடைய கண்கள் தூய்மை அற்றவையாகவும், குற்றம் உடையவையாகவும் இருக்கும் வரை, உங்களால் தூய்மையான எதையும் பார்க்க இயலாதிருக்கும். இதனாலேயே உங்கள் ஒவ்வொருவருக்கும் இந்த ஞானம் என்னும் மூன்றாவது கண் தேவை. நீங்கள் உங்களுடைய கர்மாதீத ஸ்திதியை அடையும் பொழுது மாத்திரமே, அதாவது, நீங்கள் தேவர்கள் ஆகும்பொழுது மாத்திரமே, உங்கள் கண்கள் மூலம் தேவர்களைப் பார்ப்பீர்கள். எவ்வாறாயினும், இச்சரீரங்களில் இருக்கும் பொழுது, உங்களால் உங்கள் கண்கள் மூலம் ஸ்ரீகிருஷ்ணரைப் பார்க்க இயலாது. நீங்கள் ஒரு காட்சியைக் காண்பதால் மட்டுமே எதையும் அடைய முடியாது. நீங்கள் தற்காலிகமான சந்தோஷத்தை மாத்திரமே அனுபவம் செய்வதுடன், அதன் மூலம் உங்கள் விருப்பமும் (ஸ்ரீகிருஷ்ணரைப் பார்ப்பதற்கான) பூர்த்திசெய்யப்பட்டுள்ளது. நாடகத்தில் காட்சிகள் நிச்சயிக்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் பேறு எதுவும் கிடையாது. அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. நான் ஓர் ஆத்மா, எனது சரீரத்திலிருந்து வேறுபட்டவர். உங்கள் சரீரத்தில் வாழும்பொழுதே, மரணித்து வாழ்கின்ற, ஒரு பிரேதமாக இருப்பதைப் பயிற்சி செய்வதனால், உங்கள் ஸ்திதியைக் கர்மாதீதம் ஆக்குங்கள்.2. சேவையின் அத்தாட்சியைக் கொடுங்கள். சரீர உணர்வைத் துறந்து, உங்கள் செய்தியை நேர்மையாகக் கொடுங்கள். திறமைச்சித்தி அடைவதற்கு முயற்சி செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு மாஸ்டர் அமைதிக்கடலாக இருந்து, அமைதி சொரூபமான உங்கள் ஸ்திதி மூலம் அமைதியின் அதிர்வலைகளைப் பரப்புவீர்களாக.தற்சமயத்தில், உலகில் உள்ள பெரும்பான்மை ஆத்மாக்களின் மகத்தான தேவை என்னவெனில், உண்மையான அமைதியே ஆகும். உலகில் ஏன் அமைதியின்மை நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன, அது தொடர்ந்தும் அதிகரிக்கும். நீங்களே அமைதி அற்றவராக இருப்பதும், பிறரின் அமைதியற்ற சூழலும் உங்களை ஓர் அமைதியான ஸ்திதியில் நிலைத்து இருப்பதற்கு அனுமதிப்பதில்லை. அமைதி இன்மைக்குரிய பதற்றத்தின் அனுபவம் அதிகரிக்கும். அத்தகையதொரு நேரத்தில் மாஸ்டர் அமைதிக் கடல்களான குழந்தைகளாகிய நீங்கள், அமைதி இன்மைக்குரிய எண்ணங்களை அமிழ்த்தி விட்டு, குறிப்பாக, அமைதிக்கான அதிர்வலைகளைப் பரப்ப வேண்டும்.
சுலோகம்:
தந்தையின் தெய்வீகக் குணங்கள் அனைத்தையும் அனுபவம் செய்வதற்கு, சதா ஞான சூரியனின் முன்னால் இருங்கள்.அவ்யக்த சமிக்ஞை: இந்த அவ்யக்த மாதத்தில், பந்தனத்திலிருந்து விடுபட்டிருந்து, ஜீவன் முக்தி ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.
இப்பொழுது, உங்கள் நேரம், உங்கள் எண்ணங்கள், உங்கள் சக்தியைச் சேமிப்பதற்கும், புள்ளி வடிவாக இருக்கின்ற உங்கள் ஸ்திதியை அதிகரிப்பதற்கும் ஒரு திட்டத்தைத் தீட்டுங்கள். எவ்வளவு அதிக காலத்திற்கு ஒரு புள்ளியாக இருக்கின்ற ஸ்திதியில் இருக்கிறீர்களோ, அதற்கேற்ப, நீங்கள் தீய ஆவி அல்லது தீய சம்ஸ்காரங்கள் எதனாலும் தாக்கப்பட மாட்டீர்கள். நீங்கள் அவற்றிலிருந்து விடுபட்டிருப்பீர்கள், அத்துடன் உங்கள் சக்தி ரூபமும் அவற்றை விடுவிக்கும்.