20.05.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, பாபா உங்களை அழிவற்ற வருமானம் ஒன்றைச் சம்பாதிக்கச் செய்வதற்காக வந்துள்ளார். நீங்கள் இப்பொழுது உங்களுக்கு வேண்டிய அளவிற்கு அழிவற்ற இந்த ஞான இரத்தினங்களைச் சம்பாதிக்க முடியும்.

கேள்வி:
அசுர சம்ஸ்காரங்களைத் தெய்வீக சம்ஸ்காரங்களாக மாற்றுவதற்குத் தேவைப்படும் விசேட முயற்சி என்ன?

பதில்:
உங்களின் சம்ஸ்காரங்களை மாற்றுவதற்கு, இயன்றளவுக்கு ஆத்ம உணர்வில் இருப்பதற்குப் பயிற்சி செய்யுங்கள். நீங்கள் சரீர உணர்விற்கு வருவதாலேயே அசுர சம்ஸ்காரங்கள் உருவாக்கப்படுகின்றன. உங்களின் அசுர சம்ஸ்காரங்களைத் தெய்வீக சம்ஸ்காரங்களாக மாற்றுவதற்குத் தந்தை வந்துள்ளார். இந்த முயற்சியைச் செய்யுங்கள்: முதலில், நான் ஓர் ஆத்மா, அதன் பின்னர் இந்தச் சரீரம் உள்ளது.

பாடல்:
நீங்கள் இரவை உறக்கத்திலும், பகலை உண்பதிலும் வீணாக்கினீர்கள்…

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் பல தடவைகள் இப்பாடலைக் கேட்டீர்கள். இது வீணாக்குவதற்கான காலம் அல்ல என ஆன்மீகத் தந்தை தொடர்ந்தும் ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு எச்சரிக்கை செய்கின்றார். இது பெருமளவு வருமானம் ஒன்றைச் சம்பாதிப்பதற்கான காலமாகும். தந்தை உங்களை ஒரு வருமானத்தைச் சம்பாதிக்கச் செய்வதற்காக வந்துள்ளார். பெருமளவு வருமானம் சம்பாதிக்க வேண்டியுள்ளது. நீங்கள் வேண்டிய அளவிற்கு சம்பாதித்துக் கொள்ளலாம். இந்த வருமானம் என்பது, உங்களின் புத்தியை அழிவற்ற இந்த ஞான இரத்தினங்களால் நிரப்புவதாகும். இந்த வருமானம் எதிர்காலத்திற்கு உரியது. அது பக்தி மார்க்கம், இது ஞானம். இராவண இராச்சியம் ஆரம்பமாகும் போதே பக்தி ஆரம்பிக்கின்றது என்பதையோ அல்லது தந்தை இராம இராச்சியத்தை ஸ்தாபிக்க வரும்போதே இந்த ஞானம் ஆரம்பம் ஆகுகின்றது என்பதையோ மக்கள் அறியார்கள். இந்த ஞானம் புதிய உலகிற்கானது, பக்தியோ பழைய உலகிற்கானது. தந்தை கூறுகின்றார்: இப்பொழுது, முதலில் உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். முதலாவதாக நீங்கள் ஆத்மாக்கள், அதன் பின்னரே சரீரங்கள் என்பது குழந்தைகளாகிய உங்களின் புத்திகளில் உள்ளது. எவ்வாறாயினும், நாடக நியதிப்படி, மக்கள் இதனைத் தவறாகப் புரிந்துகொண்டு, இதற்கு எதிர்மாறாக நினைக்கின்றனர். அதாவது, தாங்கள் முதலாவதாக சரீரங்கள் எனவும் அதன்பின்னரே ஆத்மாக்கள் எனவும் நினைக்கின்றனர். தந்தை கூறுகின்றார்: அவை அழியக்கூடியவை. நீங்கள் ஒன்றைத் துறந்து, இன்னொன்றை எடுக்கின்றீர்கள். சம்ஸ்காரங்கள் ஆத்மாவிலேயே உள்ளன. சரீர உணர்விற்கு வருவதால் உங்கள் சம்ஸ்காரங்கள் அசுரத்தனம் ஆகுகின்றன. பின்னர் உங்களின் அசுர சம்ஸ்காரங்களைத் தெய்வீகமானவையாக மாற்றுவதற்காகத் தந்தை வரவேண்டியுள்ளது. இந்த முழுப் படைப்பும் படைப்பவரான தந்தையினுடையது. ஒரு லௌகீகத் தந்தையைத் தந்தை என அழைப்பது போன்று, அனைவரும் அவரை “தந்தை” என அழைக்கின்றனர். “பாபா”, “மம்மா” ஆகிய இரு வார்த்தைகளும் மிக இனிமையானவை. தந்தை மாத்திரமே படைப்பவர் என அழைக்கப்படுகின்றார். அவர் முதலில் ஒரு மனைவியை ஏற்று, பின்னர் ஒரு படைப்பை உருவாக்குகின்றார். எல்லையற்ற தந்தை கூறுகின்றார்: நான் வந்து இவரில் பிரவேசிக்கின்றேன். அவரது பெயர் போற்றப்படுகின்றது. அவர் “பாக்கிய இரதம்” என அழைக்கப்படுகின்றார். அவர்கள் காளைமாடு அன்றி, மனித உருவம் ஒன்றையே காண்பிக்கின்றனர். பாக்கிய இரதம் ஒரு மனித சரீரமாகும். தந்தை மாத்திரமே வந்து குழந்தைகளாகிய உங்களுக்குத் தனது சொந்த அறிமுகத்தைக் கொடுக்கின்றார். நீங்கள் பாப்தாதாவிடம் செல்கின்றீர்கள் என்றே எப்பொழுதும் கூறவேண்டும். நீங்கள் “தந்தை” என்று மாத்திரம் கூறினால் அது அசரீரியானவரையே குறிக்கும். நீங்கள் உங்களது சரீரத்தை நீக்கினால் மாத்திரமே அசரீரியான தந்தையிடம் செல்ல முடியும். எவராலும் அங்கு நினைத்த மாத்திரத்தில் சென்றுவிட முடியாது. தந்தை மாத்திரமே உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். தந்தையிடம் மாத்திரமே இந்த ஞானம் உள்ளது. இது அழிவற்ற இந்த ஞான இரத்தினங்களின் பொக்கிஷக் களஞ்சியம். தந்தை இந்த ஞான இரத்தினங்களின் கடல். இதில் தண்ணீர் என்ற கேள்விக்கே இடமில்லை. இது இந்த ஞான இரத்தினங்களின் பொக்கிஷக் களஞ்சியம். அவரிடம் இந்த ஞானம் உள்ளது. தண்ணீரை ஞானம் என்று கூறமுடியாது. மனிதர்களிடம் மருந்துகள் அல்லது சட்டம் பற்றிய ஞானம் உள்ளது போன்று, இதுவும் ஞானமே ஆகும். படைப்பவரினதும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றியதுமான இந்த ஞானத்தையிட்டே ரிஷிகளும், முனிவர்களும் தங்களிடம் ஞானம் இல்லை எனக் கூறுகின்றனர். படைப்பவர் ஒருவர் மாத்திரமே இந்த ஞானத்தைக் கொண்டிருக்க முடியும். அவரே விருட்சத்தின் விதையும் ஆவார். அவர் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய ஞானத்தைக் கொண்டிருக்கின்றார். அவர் வரும்போது மாத்திரமே இந்த ஞானத்தைப் பேச முடியும். நீங்கள் இப்பொழுது இந்த ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். எனவே, இந்த ஞானத்தின் மூலமாக நீங்கள் தேவர்கள் ஆகுகின்றீர்கள். முதலில், நீங்கள் இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள், அதன்பின்னர் வெகுமதியைப் பெறுகின்றீர்கள். அந்த நேரத்தில், இந்த ஞானத்திற்கான தேவை இருக்காது. தேவர்களிடம் இந்த ஞானம் இல்லாததால் அவர்கள் அறியாமையில் உள்ளார்கள் எனக் கூறமுடியாது. இல்லை, அவர்கள் இந்த ஞானத்தைக் கற்பதன் மூலமாகவே தங்களது அந்தஸ்தைப் பெறுகின்றனர். மக்கள் இந்த ஞானம் இல்லாததாலேயே தந்தையை அழைக்கின்றனர்: பாபா, வந்து எங்களுக்குப் பாதையைக் காட்டுங்கள். அதாவது, எவ்வாறு தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மையானவர்கள் ஆகமுடியும் என்ற ஞானத்தை எங்களுக்குக் கொடுங்கள். நீங்கள் சாந்திதாமத்தில் இருந்தே வந்தீர்கள் என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். ஆத்மாக்கள் அங்கே மௌனமாக வசிக்கின்றனர். நீங்கள் உங்களது பாகங்களை நடிப்பதற்காகவே இங்கே வந்தீர்கள். இது பழைய உலகம். எனவே, புதிய உலகம் நிச்சயமாக இருந்திருக்க வேண்டும். அது எப்போது இருந்தது என்பதையோ, அங்கே யார் ஆட்சிசெய்தார்கள் என்பதையோ எவரும் அறியார். இப்பொழுது நீங்கள் தந்தையிடம் இருந்து இதை அறிந்து கொண்டுள்ளீர்கள். தந்தையே ஞானக்கடலும் சற்கதியை அருள்பவரும் ஆவார். மக்கள் அவரை அழைக்கின்றனர்: பாபா, வந்து எங்கள் துன்பத்தை அகற்றி, அமைதியையும் சந்தோஷத்தையும் எங்களுக்கு அருளுங்கள். ஆத்மாக்கள் இதை அறிவார்கள். ஆனால் அவர்கள் தமோபிரதான் ஆகிவிட்டார்கள். இதனாலேயே தந்தை மீண்டும் ஒரு தடவை வந்து, தனது அறிமுகத்தைக் கொடுக்கின்றார். மனிதர்களுக்கு ஆத்மாவையோ பரமாத்மாவையோ தெரியாது. ஆத்மாக்களிடம் இறையுணர்விற்கு வருவதற்கான ஞானமேனும் கிடையாது. முன்னர், உங்களிடமும் இந்த ஞானம் இருக்கவில்லை. இப்பொழுது நீங்கள் இந்த ஞானத்தைப் பெற்றுள்ளதால், முன்னர் மனித முகத்தையும் குரங்கின் நடத்தையையும் நீங்கள் கொண்டிருந்தீர்கள் என்பதைப் புரிந்து கொள்கின்றீர்கள். தந்தை இப்பொழுது உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுத்துள்ளார். எனவே, நீங்கள் ஞானம் நிறைந்தவர் ஆகியுள்ளீர்கள். நீங்கள் படைப்பவரினதும் படைப்பினதும் ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். கடவுளே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். எனவே, பெருமளவு போதை இருக்க வேண்டும். பாபா ஞானக்கடல் ஆவார். அவரிடம் எல்லையற்ற இந்த ஞானம் உள்ளது. நீங்கள் யாரிடம் சென்றாலும், உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய ஞானத்தைக் கொடுப்பதைத் தவறவிடாதீர்கள். அவர்கள் ஆத்மா என்றால் என்ன என்பதையேனும் அறியாதுள்ளனர். அவர்கள் தந்தையை, துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவராகவும் நினைவு செய்கின்ற போதிலும், கடவுள் சர்வவியாபகர் என்றும் கூறுகின்றனர். தந்தை கூறுகின்றார்: நாடகத்தின்படி, அது அவர்களின் தவறல்ல. மாயை அவர்களின் புத்தியை முற்றிலும் சீரழித்து விட்டாள். பூச்சிகள் அழுக்கில் இருக்கும்போதே சந்தோஷத்தை உணரும். தந்தை உங்களை அழுக்கில் இருந்து அகற்ற வருகின்றார். மனிதர்கள் புதைசேற்றுக்குள் அகப்பட்டுள்ளனர். அவர்களிடம் இந்த ஞானம் எதுவும் இல்லை. எனவே, அவர்களால் என்ன செய்ய முடியும்? அவர்கள் புதைமணலுக்குள் சிக்குண்டுள்ளனர். அவர்களை விடுவிப்பது கடினம். நீங்கள் அவர்களை அரைவாசி அல்லது முக்கால் பகுதி விடுவித்தாலும்கூட, அவர்கள் கையை விட்டுவிட்டு மீண்டும் அதனுள் வீழ்ந்து விடுகின்றனர். மற்றவர்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கும் சில குழந்தைகள் தந்தையின் வழிகாட்டல்களுக்கு எதிராகச் செயல்களைச் செய்வதால் தாங்களே மாயையால் அறையப்படுகின்றனர். அவர்கள் மற்றவர்களைச் புதைசேற்றில் இருந்து விடுவிக்க முயற்சி செய்துவிட்டு, பின்னர் தாங்களே அதனுள் வீழ்ந்து விடுகின்றனர். பின்னர் அவர்களை அதிலிருந்து விடுவிப்பதற்குப் பெருமளவு முயற்சி தேவைப்படுகின்றது. ஏனெனில், அவர்கள் மாயையால் தோற்கடிக்கப்படுகின்றனர். அவர்கள் செய்த பாவங்களால், அவர்களின் மனச்சாட்சி உள்ளே இருந்து அவர்களை உறுத்துகின்றது. இது மாயையுடனான யுத்தம். நீங்கள் இப்பொழுது யுத்த களத்தில் உள்ளீர்கள். அவர்கள் பௌதீகச் சக்திக்கு எதிராகச் சண்டையிடும் வன்முறையான சேனையினர், நீங்களோ வன்முறையற்ற சேனையினர். நீங்கள் அகிம்சை மூலமாக உங்கள் இராச்சியத்தைக் கோருகின்றீர்கள். இரு வகையான வன்முறைகள் உள்ளன. ஒன்று காம வாளைப் பயன்படுத்துவது, மற்றையது ஒருவரை அடிப்பது. நீங்கள் இப்பொழுது இரட்டை அகிம்சாவாதி ஆகுகின்றீர்கள். இந்த ஞான சக்தியின் யுத்தம் பற்றி எவருமே அறியமாட்டார்கள். அகிம்சை என்றால் என்ன என்பதும் எவருக்கும் தெரியாது. பக்தி மார்க்கத்துச் சம்பிரதாயங்கள் மிகவும் பரந்தவை. மக்கள் பாடுகின்றனர்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! எவ்வாறாயினும், நான் எப்படி வந்து, அனைவரையும் தூய்மை ஆக்குகின்றேன் என்பது எவருக்கும் தெரியாது. கீதையில் அவர்கள் மனிதனைக் கடவுளாக அழைக்கின்ற தவறைச் செய்துவிட்டனர். மனிதர்களே சமயநூல்களை உருவாக்கினர். மனிதர்களே அவற்றை வாசிக்கின்றனர். தேவர்களுக்குச் சமயநூல்களை வாசிக்க வேண்டிய அவசியமில்லை. அங்கு சமயநூல்கள் எவையும் கிடையாது. ஞானம், பக்தி, பின்னர் ஆர்வமின்மை. எதில் ஆர்வமின்மை? பக்தியிலும், பழைய உலகிலும் ஆர்வமின்மை காணப்படுகின்றது. பழைய சரீரத்தில் ஆர்வமின்மை காணப்படுகின்றது. தந்தை கூறுகின்றார்: உங்கள் கண்களால் காண்பவை எவையும் எஞ்சியிருக்க மாட்டாது. இந்தத் தீய உலகில் ஆர்வமின்மை உள்ளது. நீங்கள் தெய்வீகக் காட்சிகள் மூலம் புதிய உலகின் காட்சிகளையும் காண்கின்றீர்கள். நீங்கள் புதிய உலகிற்காகக் கற்கிறீர்கள். இந்தக் கல்வி இந்தப் பிறப்பிற்கானது அல்ல. ஏனைய கல்விகள் அனைத்தும் குறித்த அந்தப் பிறவியில் அந்தக் காலப் பகுதிக்கானவை. இப்பொழுது சங்கம யுகமாகும். நீங்கள் இப்பொழுது கற்பவற்றிற்கான வெகுமதியைப் புதிய உலகில் பெறுவீர்கள். நீங்கள் அத்தகைய பெரிய வெகுமதியை எல்லையற்ற தந்தையிடம் இருந்து பெறுகின்றீர்கள். நீங்கள் எல்லையற்ற தந்தையிடம் இருந்து எல்லையற்ற சந்தோஷத்தைப் பெறுகின்றீர்கள். எனவே, குழந்தைகளாகிய நீங்கள் முழு முயற்சி செய்வதுடன், ஸ்ரீமத்தையும் பின்பற்ற வேண்டும். தந்தை அதிமேலானவர். அவர் மூலம் நீங்கள் மேன்மையானவர் ஆகுகின்றீர்கள். அவர் எப்பொழுதும் மேன்மையானவர். அவர் உங்களை மேன்மையானவர்கள் ஆக்குகின்றார். 84 பிறவிகள் எடுக்கையில் நீங்கள் சீரழிந்து விட்டீர்கள். தந்தை கூறுகின்றார்: நான் பிறப்பு, இறப்புச் சக்கரத்தினுள் வருவதில்லை. இப்பொழுது நான் இந்தப் பாக்கிய இரதத்தினுள் பிரவேசிக்கின்றேன். குழந்தைகளாகிய நீங்கள் அவரை இனங்கண்டிருக்கிறீர்கள். உங்களின் விருட்சம் இன்னமும் சிறிதாகவே உள்ளது. விருட்சத்திற்குப் புயல்களும் வருகின்றன, இலைகள் தொடர்ந்தும் வீழ்கின்றன. பல மலர்கள் வெளிப்படுகின்றன. பின்னர் புயல்கள் வரும்போது அவை வீழ்ந்து விடுகின்றன. சில பழங்களும் மிக நன்றாக வெளிப்படுகின்றன, இருந்தும் அவைகூட மாயையின் புயல்களால் வீழ்ந்து விடுகின்றன. மாயையின் புயல்கள் சக்திவாய்ந்தவை. அந்தப் பக்கத்தில் பௌதீகச் சக்தி உள்ளது, இந்தப் பக்கத்தில் யோக சக்தி, அதாவது, நினைவுச் சக்தி உள்ளது. “நினைவு” என்ற வார்த்தையை நீங்கள் உறுதியாக்கிக் கொள்ள வேண்டும். அம்மக்கள் “யோகம்” பற்றிப் பேசுகின்றார்கள். உங்களுடையது நினைவு ஆகும். நடந்தும் உலாவியும் திரியும்போது தொடர்ந்தும் தந்தையை நினைவுசெய்யுங்கள். இது யோகம் என அழைக்கப்படுவதில்லை. “யோகம்” என்ற வார்த்தை சந்நியாசிகளால் மிகவும் பிரபல்யம் வாய்ந்தது. அவர்கள் பல வகையான யோகங்களைக் கற்பிக்கின்றார்கள். தந்தை மிக இலகுவாக உங்களுக்குக் கற்பிக்கின்றார்: நடக்கும்போதும், அமர்ந்திருக்கும் போதும், உலாவித் திரியும்போதும் தொடர்ந்தும் தந்தையை நினைவு செய்யுங்கள். நீங்கள் அரைக் கல்பமாக என் காதலிகளாக இருந்து வந்தீர்கள். நீங்கள் என்னை நினைவு செய்து வந்தீர்கள். நான் இப்பொழுது வந்துவிட்டேன். ஆத்மா என்றால் என்ன என்பதை எவரும் புரிந்து கொள்வதில்லை. இதனாலேயே தந்தை வந்து, உங்களை இதை உணருமாறு செய்கின்றார். இது புரிந்து கொள்ளப்பட வேண்டிய மிகவும் சூட்சுமமான விடயம். ஆத்மாக்கள் மிகவும் சூட்சுமமானவர்களும் அழிவற்றவர்களும் ஆவார்கள். ஓர் ஆத்மாவோ அல்லது அவரது பாகமோ அழிக்கப்பட முடியாது. சாதாரண புத்தியைக் கொண்டவர்களுக்கு இந்த விடயங்களைப் புரிந்துகொள்வது மிகவும் சிரமம். இந்த விடயங்கள் சமயநூல்களில் குறிப்பிடப்படவில்லை. குழந்தைகளாகிய நீங்கள் தந்தையை நினைவு செய்வதற்குப் பெருமளவு முயற்சி செய்ய வேண்டும். இந்த ஞானம் மிக இலகுவானது, ஆனால் நினைவு பற்றிக் கூறப்படும்போது, தந்தை மீது அன்பற்ற புத்தியைக் கொண்டவர்களும் தந்தை மீது அன்பான புத்தியைக் கொண்டவர்களும் உள்ளனர். ஒருவரது நினைவு சிறந்ததாக உள்ளபோது, அவரது புத்தியில் தந்தை மீது அன்பு உள்ளது எனக் கூறப்படுகின்றது. உங்கள் அன்பு கலப்படமற்றதாக இருக்க வேண்டும். உங்களையே கேளுங்கள்: நான் எந்தளவிற்குத் தந்தையை நினைவுசெய்கின்றேன்? நீங்கள் தொடர்ந்தும் தந்தை மீது அன்பு கொண்டிருப்பதன் மூலம் உங்களின் கர்மாதீத நிலையை அடைந்து, உங்கள் சரீரத்தைத் துறப்பீர்கள் என்பதையும் புரிந்து கொள்கின்றீர்கள். பின்னர் யுத்தம் ஆரம்பமாகும். எந்தளவிற்கு நீங்கள் தந்தை மீது அதிக அன்பு வைத்திருக்கின்றீர்களோ, அந்தளவிற்குத் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகுவீர்கள். பரீட்சை ஒரு தடவை மாத்திரமே இடம்பெறும். காலம் முடிவிற்கு வந்து, அனைவரது புத்தியும் தந்தை மீது அன்பு கொண்டிருக்கும்போது விநாசம் இடம்பெறும். அதுவரைக்கும் யுத்தம் போன்றவை தொடர்ந்தும் இடம்பெறும். வெளிநாட்டவர்கள், மரணம் தங்கள் முன்னிலையில் நிற்பதாகவும் எவரோ தங்களைக் குண்டுகளைத் தயாரிக்கத் தூண்டுவதாகவும் நினைக்கின்றனர். எவ்வாறாயினும், அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்? அது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களின் விஞ்ஞானச் சக்தியால் தங்களின் சொந்தக் குலத்திற்கே மரணத்தை ஏற்படுத்துகின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் கூறுகின்றீர்கள்: எங்களைத் தூய உலகிற்கு அழைத்துச் செல்லுங்கள். எவ்வாறாயினும், பாபா உங்கள் சரீரத்தைக் கொண்டு செல்ல மாட்டார். தந்தை மரணங்களுக்கு எல்லாம் மரணம் (மகா காலன்) ஆவார். இவ்விடயங்களை வேறு எவரும் அறியமாட்டார்கள். நினைவுகூரப்பட்டுள்ளது: “வேடனுக்குக் கொண்டாட்டம், இரைக்குத் திண்டாட்டம்”. விநாசம் நிறுத்தப்பட்டு, அமைதி நிலவ வேண்டும் என அவர்கள் கூறுகின்றனர். எவ்வாறாயினும், விநாசம் இடம்பெறாமல் எப்படி அமைதியும் சந்தோஷமும் ஸ்தாபிக்கப்பட முடியும்? இதனாலேயே நீங்கள் நிச்சயமாகச் சக்கரத்தை விளங்கப்படுத்த வேண்டும். சுவர்க்க வாயில்கள் இப்பொழுது திறக்கின்றன. பாபா கூறியுள்ளார்: இதில் ஒரு புத்தகத்தை அச்சிடுங்கள்: சாந்தி தாமத்திற்கும், சந்தோஷ தாமத்திற்குமான வாயில். இதன் அர்த்தத்தை எவரும் புரிந்துகொள்ள மாட்டார்கள். இது மிக இலகுவானது. எனினும், மில்லியன் கணக்கானோரில் ஒரு கைப்பிடியளவினரே அரிதாக இதைப் புரிந்து கொள்கின்றனர். கண்காட்சிகள் போன்றவற்றில் நீங்கள் மனம் சோர்ந்து விடக்கூடாது. பிரஜைகளும் உருவாக்கப்படுகின்றனர். இலக்கு உயர்வானது, அதற்கு முயற்சி தேவை. நினைவிற்கு முயற்சி தேவைப்படுகின்றது. இதிலேயே பலர் தோல்வி அடைகின்றனர். உங்கள் நினைவு கலப்படமற்றதாக இருக்க வேண்டும். மாயை மீண்டும் மீண்டும் உங்களை மறக்கச் செய்கின்றாள். எவருமே முயற்சி செய்யாமல் உலக அதிபதி ஆகமுடியாது. முழு முயற்சி செய்யப்பட வேண்டும். நாங்கள் சந்தோஷ பூமியின் அதிபதிகளாக இருந்தோம். நாங்கள் பல தடவைகள் சக்கரத்தைச் சுற்றி வந்தோம். இப்பொழுது நாங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். மாயை பல தடைகளை உருவாக்குகின்றாள். எவ்வாறு, இன்று, ‘வித்யுட் மண்டலி’ என அழைக்கப்படுகின்ற அமைப்பிற்கு நீங்கள் விளங்கப்படுத்தினீர்கள், அதாவது, இன்று நீங்கள் இதைச் செய்தீர்கள்…. என்ற சேவைச் செய்தியையும் பாபா பெறுகின்றார். இப்பொழுது, நாடகத்திற்கேற்ப, தாய்மார்கள் போற்றப்பட வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் தாய்மாரை முன்னால் வைப்பதில் அக்கறை கொண்டிருக்க வேண்டும். இது உயிருள்ள தில்வாலா ஆலயமாகும். நீங்கள் உயிருள்ள ரூபமாகி, தொடர்ந்தும் அங்கே ஆட்சிபுரிவீர்கள். பக்தி மார்க்கத்தைச் சார்ந்த அந்த ஆலயங்கள் எஞ்சியிருக்க மாட்டாது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் ஒரேயொரு தந்தை மீது கலப்படமற்ற அன்பைக் கொண்டிருப்பதன் மூலம் உங்கள் கர்மாதீத நிலையை அடைய வேண்டும். இப்பழைய உலகின் மீதும், இப்பழைய சரீரங்களின் மீதும் எல்லையற்ற விருப்பமின்மையைக் கொண்டிருங்கள்.

2. தந்தையின் வழிகாட்டல்களுக்கு எதிரான எந்தச் செயல்களையும் செய்யாதீர்கள். யுத்த களத்தில் ஒருபோதும் தோற்கடிக்கப்படாதீர்கள். இரட்டை அகிம்சாவாதி ஆகுங்கள்.

ஆசீர்வாதம்:
தந்தை செய்வதைப் போல், உங்களின் நல்லாசிகளால், உங்களை அவமதிப்பவர்களையும் ஈடேற்றிச் சேவை செய்வீர்களாக.

தந்தை தன்னை அவமதிப்பவர்களையும் ஈடேற்றுகிறார். அதேபோல், என்ன வகையான ஆத்மா உங்களின் முன்னால் வந்தாலும் உங்களின் கருணை உணர்வுகளாலும் நல்லாசிகளாலும் அந்த ஆத்மாவை உங்களால் மாற்ற முடியும். இதுவே உண்மையான சேவை. எப்படி விஞ்ஞானிகளால் மணலிலும் எதையாவது வளர்க்க முடிகிறதோ, அதேபோல், கருணை நிறைந்தவர்கள் ஆகி உங்களை இகழ்பவர்களையும் ஈடேற்றுவதற்கு மௌன சக்தியைப் பயன்படுத்துங்கள். அதன்மூலம் நிலத்தை மாற்றுங்கள். உங்களின் சுய மாற்றத்தினாலும் நல்லாசிகளாலும் எந்த வகையான ஆத்மாவையும் மாற்ற முடியும். ஏனென்றால், நல்லாசிகள் நிச்சயமாக வெற்றியை ஏற்படுத்தும்.

சுலோகம்:
இந்த ஞானத்தைக் கடைவதே, சதா மலர்ச்சியாக இருப்பதற்கான அடிப்படையாகும்.

அவ்யக்த சமிக்கை: ஆன்மீக இராஜரீகம் மற்றும் தூய்மையின் ஆளுமையைக் கடைப்பிடியுங்கள்.

கல்பம் முழுவதிலும் பிராமணர்களான உங்களைப் போல் எவருக்கும் ஆன்மீக ஆளுமை இருந்ததில்லை. இது ஏனென்றால், உங்களின் ஆளுமையை உருவாக்குகின்ற ஒரேயொருவர், அதிமேலான பரமாத்மாவே ஆவார். அனைவரிலும் மிக உயர்ந்த ஆளுமைகளைக் கொண்ட உங்களின் எண்ணங்களிலும் கனவுகளிலும் சம்பூரணமான தூய்மை உள்ளது. இந்தத் தூய்மையுடன் ஆளுமைகளான உங்களின் முகங்களிலும் நடத்தைகளிலும் ஆன்மீகம் உள்ளது. ஆளுமைகளான நீங்கள் சதா இந்தத் தூய்மையில் ஸ்திரமாக இருக்கும்போது, இயல்பாகவே உங்களால் எல்லோருக்கும் சேவை செய்ய முடியும்.