20.07.25    Avyakt Bapdada     Tamil Lanka Murli    25.02.2006     Om Shanti     Madhuban


இன்று, இந்தப் பண்டிகை தினத்தில், உங்களின் மனதில் மாயையிடம் இருந்து விடுபட்டிருப்பதற்கும் கருணைநிறைந்தவராக இருப்பதற்கும் மாஸ்ரர் முக்தியை அருள்பவராக ஆகுவதற்கும் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் ஒரு சத்தியத்தைச் செய்யுங்கள். தந்தையுடன் வீட்டுக்குத் திரும்பிச் செல்வதற்கு, அவருக்குச் சமமானவர் ஆகுங்கள்.


இன்று, எங்கும் உள்ள அதிகபட்ச அன்பான குழந்தைகளிடம் இருந்து ஊக்கமும் உற்சாகமும் நிறைந்த இனிமையிலும் இனிமையான அன்பும் நினைவுகளும் வாழ்த்துக்களும் பாப்தாதாவை வந்தடைகின்றன. பாப்தாதாவின் பிறந்தநாளுக்காக உற்சாகம் நிறைந்த வாழ்த்துக்கள் ஒவ்வொருவரின் மனதிலும் அமிழ்ந்துள்ளது. நீங்கள் எல்லோரும் குறிப்பாக இந்த வேளையில் வாழ்த்துக்களை வழங்க வந்தீர்களா அல்லது வாழ்த்துக்களைப் பெற வந்தீர்களா? பாப்தாதாவும் நீண்ட காலம் பிரிந்திருந்து இப்போது கண்டெடுக்கப்பட்ட அதியன்பிற்குரிய குழந்தைகளுக்கு, அவர்களின் பிறந்தநாளுக்காகப் பல, பல, பலமில்லியன் மடங்கு வாழ்த்துக்களை வழங்குகிறார். கல்பம் முழுவதிலும் இல்லாமல், இன்றுள்ள சிறப்பியல்பானது, தந்தைக்கும் குழந்தைகளுக்கும் ஒரே வேளையில் பிறந்தநாள் வருவதேயாகும். இது தனித்துவமான ஜயந்தி (பிறந்தநாள்) என்று அழைக்கப்படுகிறது. கல்பம் முழுவதிலும சுற்றி வந்து, நீங்கள் எப்போதாவது இத்தகைய ஜயந்தியைக் கொண்டாடி உள்ளீர்களா எனப் பாருங்கள். எவ்வாறாயினும், இன்று, பாப்தாதா குழந்தைகளின் ஜயந்தியைக் கொண்டாடுகிறார். குழந்தைகள் பாப்தாதாவின் ஜயந்தியைக் கொண்டாடுகிறார்கள். இது சிவஜயந்தி என்று அழைக்கப்படுகிறது. ஆனால், இந்த ஒரு ஜயந்தியில் ஏனைய பல ஜயந்திகள் அடங்கியுள்ள அத்தகையதொரு ஜயந்தி ஆகும். நீங்கள் தந்தைக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்க வந்துள்ளீர்கள் என்பதனாலும் தந்தையும் உங்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்க வந்துள்ளார் என்பதனாலும் நீங்கள் எல்லோரும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறீர்கள். ஏனென்றால், தந்தையும் குழந்தைகளும் ஒரே நாளில் பிறந்தநாளைக் கொண்டிருப்பது என்பது ஆழமான அன்பின் அடையாளம் ஆகும். தந்தையால் குழந்தைகள் இல்லாமல் எதையும் செய்ய முடியாது. குழந்தைகளாலும் தந்தை இன்றி எதையும் செய்ய முடியாது. பிறந்த நாள் ஒரே நாளிலேயே உள்ளது. நாங்கள் சங்கமயுகத்தில் ஒன்றாக இருக்க வேண்டும். ஏனென்றால், தந்தையும் குழந்தைகளும் ஒன்றிணைந்து உள்ளார்கள். உலக மாற்றத்திற்கான பணி ஒன்றாகவே செய்யப்படுகிறது. தந்தையாலும் அதைத் தனித்து செய்ய முடியாது. குழந்தைகளாலும் அதைத் தனித்துச் செய்ய முடியாது. நாங்கள் ஒன்றாகவே இருக்கிறோம். தந்தையின் சத்தியமானது, நாங்கள் ஒன்றாகவே வாழுவோம், நாங்கள் ஒன்றாகவே வீட்டுக்குத் திரும்பிச் செல்வோம் என்பதாகும். நாங்கள் ஒன்றாகவே திரும்பிச் செல்வோம், இல்லையா? நீங்கள் இந்த சத்தியத்தைச் செய்துள்ளீர்கள்தானே? தந்தைக்கும் குழந்தைகளுக்கும் இடையில் இத்;தகைய அன்பை நீங்கள் எப்போதாவது கண்டுள்ளீர்களா? நீங்கள் அதைப் பார்த்திருக்கிறீர்களா அல்லது அனுபவம் செய்துள்ளீர்களா? இதனாலேயே, இந்த சங்கமயுகம் முக்கியமானது. இந்தப் பண்டிகையின் ஞாபகார்த்தம், பல மேளாக்களில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிவஜயந்தி தினத்தில், பக்தர்கள் அழைக்கிறார்கள்: வாருங்கள்! ‘அவர் எப்போது வருவார்? அவர் எப்படி வருவார்?’ என அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் நீங்களோ கொண்டாடுகிறீர்கள்.

பாப்தாதாவிற்கு பக்தர்களிடம் அன்பு உள்ளது. அத்துடன் அவர்களுக்காக அவர் கருணை கொள்கிறார். அவர்கள் அதிகளவு முயற்சி செய்வதுடன், தொடர்ந்து அதிகளவில் அவரைத் தேடுகிறார்கள். நீங்கள் அவரைத் தேடுகிறீர்களா? அல்லது, தந்தை உங்களைக் கண்டுபிடித்தாரா? யார் யாரைத் தேடினார்கள்? நீங்கள் அவரைத் தேடினீர்களா? நீங்கள் தொடர்ந்து சுற்றி வந்தீர்கள். எவ்வாறாயினும், தந்தையைப் பாருங்கள். குழந்தைகளான நீங்கள் எந்த மூலையில் தொலைந்து இருந்தாலும் அவர் உங்களைக் கண்டுபிடித்தார். பலர் பாரதத்தின் பல பிராந்தியங்களில் இருந்து வந்தார்கள். வெளிநாடுகளும் அதில் சளைத்ததில்லை. குழந்தைகளான நீங்கள் 100 நாடுகளில் இருந்து வந்துள்ளீர்கள். நீங்கள் என்ன முயற்சி செய்தீர்கள்? தந்தைக்குச் சொந்தம் ஆகுவதற்கு நீங்கள் என்ன முயற்சி செய்தீர்கள்? நீங்கள் ஏதாவது முயற்சி செய்தீர்களா? செய்தீர்களா? தந்தைக்குச் சொந்தம் ஆகுவதற்காக முயற்சி செய்தவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! பக்தியில் நீங்கள் தந்தையைத் தேடுவதற்காக முயற்சி செய்தீர்கள். ஆனால், தந்தை உங்களைக் கண்டு பிடித்ததும், நீங்கள் ஏதாவது முயற்சி செய்தீர்களா? செய்தீர்களா? நீங்கள் ஒரு விநாடியில் ஒரு பேரத்தைச் செய்தீர்கள். ஒரு வார்த்தையால் அந்தப் பேரம் செய்யப்பட்டது. அந்த ஒரு வார்த்தை என்ன? ‘எனது’. குழந்தைகள், ‘எனது பாபா’ எனச் சொன்னார்கள். தந்தையும், ‘எனது குழந்தைகள்’ எனக் கூறினார். அந்தப் பேரம் செய்யப்பட்டது. இந்தப் பேரம் இலகுவானதா அல்லது கஷ்டமானதா? இது இலகுவானதுதானே? இது சிறிது கஷ்டம் என்று உணர்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! சிலவேளைகளில் உங்களுக்கு அது கஷ்டமாக இருக்கிறதுதானே? அல்லது, உங்களுக்கு அது கஷ்டமாக இல்லையா? அது இலகுவானது. ஆனால், உங்களின் பலவீனங்கள் அது கஷ்டமாக இருக்கும் அனுபவத்தை உங்களுக்குக் கொடுக்கிறது.

உண்மையான பக்தர்கள் - சுயநலமான பக்தர்கள் இல்லை, உண்மையான பக்தர்கள் - இந்தத் தினத்தில் மிகுந்த அன்புடன் விரதம் இருப்பதை பாப்தாதா பார்க்கிறார். நீங்கள் எல்லோரும் விரதத்திற்கான சத்தியத்தைச் செய்தீர்கள். அவர்கள் சில தினங்களுக்கு விரதம் இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் எல்லோரும் இந்த நேரத்தின் சத்தியம், அநாதியாக 21 பிறவிகளுக்கு நீடித்திருக்கும் வகையில் சத்தியம் செய்துள்ளீர்கள். அந்த மக்களோ ஒவ்வொரு வருடமும் கொண்டாடி, விரதம் இருக்கிறார்கள். ஆனால் நீங்களோ கல்பத்தில் ஒரு தடவை மட்டும் விரதம் இருப்பதற்கான இந்தச் சத்தியத்தைச் செய்துள்ளீர்கள். அதனால், நீங்கள் 21 பிறவிகளுக்கு உங்களின் மனங்களில் நீங்கள் விரதத்திற்கான சத்தியத்தைச் செய்ய வேண்டியதில்லை. பௌதீகமாகவும் விரதம் இருக்க வேண்டிய தேவையில்லை. நீங்கள் ஒரு விரதத்தையும் கடைப்பிடிக்கிறீர்கள். என்ன விரதத்தை நீங்கள் கடைப்பிடிக்கிறீர்கள்? தூய்மையான மனோபாவம், பார்வை மற்றும் செயல்களுக்கான விரதம். நீங்கள் தூய்மையான வாழ்க்கை வாழ்வதற்கான சத்தியத்தைச் செய்துள்ளீர்கள். உங்களின் வாழ்க்கையே தூய்மை ஆகியுள்ளது. அது பிரம்மச்சரியம் என்ற தூய்மை மட்டுமல்ல. ஆனால், உங்களின் வாழ்க்கைகளில், உங்களின் உணவில், தொடர்பில், உலகில், சம்ஸ்காரங்களில் எல்லாமே தூய்மையாக உள்ளன. நீங்கள் இத்தகைய விரதத்திற்கான சத்தியத்தைச் செய்துள்ளீர்கள்தானே? செய்துள்ளீர்களா? குறைந்தபட்சம் ஆம் எனத் தலை அசையுங்கள். நீங்கள் இத்தகைய சத்தியத்தைச் செய்திருக்கிறீர்களா? அதை உறுதியாகச் செய்திருக்கிறீர்களா? அது உறுதியாக உள்ளதா அல்லது சிறிது பலவீனமாக உள்ளதா? அச்சா, நீங்கள் விரதத்திற்கான இந்தச் சத்தியத்தை ஒரு பெரும் தீய ஆவியான காமத்திற்கு எதிராகச் செய்துள்ளீர்களா அல்லது ஏனைய நான்கிற்கும் விரதம் இருப்பதற்கான சத்தியத்தைச் செய்துள்ளீர்களா? நீங்கள் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால், பின்தொடரும் ஏனைய நான்கிற்கும் விரதம் இருப்பதற்கான சத்தியத்தையும் நீங்கள் செய்துள்ளீர்களா? கோபம் இல்லாமல் இருப்பதற்கான விரதத்திற்கான சத்தியத்தைச் செய்திருக்கிறீர்களா? அல்லது, அதற்கான அனுமதி உங்களுக்கு இருக்கிறதா? கோபம் கொள்வதற்கான அனுமதி உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா? அது இரண்டாம் இலக்கம். அதனால் அது பரவாயில்லையா? அப்படி இல்லைத்தானே? மாபெரும் தீய ஆவியை நீங்கள் மாபெரும் தீய ஆவியாகக் கருதி, உங்களின் மனம், வார்த்தைகள், செயல்களில் அதன் விரதத்திற்கான சத்தியத்தை உறுதியாக்கி உள்ளதைப் போல், கோபத்தை விட்டு விரதம் இருப்பதற்கான சத்தியத்தையும் நீங்கள் செய்துள்ளீர்களா? கோபத்தை விடுவதற்கான விரதத்தின் உறுதியான சத்தியத்தைத் தாம் செய்துள்ளோம் எனச் சிலர் கருதுகிறீர்களா? பேராசை, பற்று, அகங்காரம் என்ற குழந்தைகள் அல்லது சந்ததி பின்னரே வருகின்றன. ஆனால் இன்று, பாப்தாதா கோபத்தைப் பற்றியே கேட்கிறார். கோபத்தில் இருந்து விடுபடும் விரதத்திற்கான சம்பூரணமான சத்தியத்தைச் செய்து, உங்களின் எண்ணங்களில் எந்தவிதமான கோபமும் இல்லை, உங்களின் மனதில் கோபத்தின் உணர்வு எதுவும் இல்லை என்று யாராவது இருக்கிறீர்களா? இன்று, சிவஜயந்தி. பக்தர்கள் விரதம் இருக்கிறார்கள். எனவே, பாப்தாதாவும் உங்களை உங்களின் விரதத்தைப் பற்றியே கேட்பார், அப்படித்தானே? தமது கனவுகளிலேனும் சிறிதளவு கோபத்தின் சுவட்டையும் கொண்டிருக்க முடியாது என்று உணர்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! அது வரமுடியாது. யாராவது இருக்கிறீர்களா? அது ஒருபோதும் வருவதில்லையா? அது எப்போதாவது வருகிறதா? (சிலர் தமது கைகளை உயர்த்தினார்கள்). அச்சா, தமது கைகளை உயர்த்தியவர்களின் புகைப்படங்களை எடுங்கள். ஏனென்றால், நீங்கள் உங்களின் கைகளை உயர்த்துவதை பாப்தாதா அப்படியே ஏற்றுக் கொள்ள மாட்டார். உங்களின் சகபாடிகளிடம் இருந்தும் அவர் ஒரு சான்றிதழைக் கேட்பார். அதன்பின்னர் அவர் ஒரு பரிசு கொடுப்பார். இது நல்லது. ஏனென்றால், கோபத்தின் சுவடாக பொறாமை இருப்பதை பாப்தாதா பார்த்திருக்கிறார். பொறாமை, கோபத்தின் குழந்தை. அவர்கள் தைரியமாக இருப்பது நல்லதே. அதற்காக பாப்தாதா அவர்களைப் பாராட்டுகிறார். எவ்வாறாயினும், அவருக்கு ஒரு சான்றிதழ் கிடைத்த பின்னரே உங்களுக்கு ஒரு பரிசு கொடுக்கப்படும். ஏனென்றால், பாப்தாதா உங்களுக்கு அவர் கொடுத்த வீட்டுவெலையின் பெறுபேற்றையும் பார்க்கிறார்.

இன்று, நீங்கள் இந்தப் பிறந்தநாளைக் கொண்டாடுகிறீர்கள். எனவே, ஒரு பிறந்தநாளில் என்ன செய்வார்கள்? முதலில், ஒரு கேக் வெட்டுவார்கள். எனவே, இப்போது, இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன, ஒரு மாதம் எஞ்சியுள்ளது. இந்த இரண்டு மாதங்களில், உங்களின் வீணான எண்ணங்களின் கேக்கை வெட்டினீர்களா? நீங்கள் மிக இலகுவாக கேக் வெட்டுகிறீர்கள்தானே? நீங்கள் இதை இன்றும் வெட்டுவீர்கள். ஆனால், வீணான எண்ணங்களின் கேக்கை வெட்டுவீர்களா? நீங்கள் அதை வெட்ட வேண்டும்தானே? நீங்கள் தந்தையுடன் வீட்டுக்குத் திரும்பிச் செல்வீர்கள் என்ற உறுதியான சத்தியத்தைச் செய்திருக்கிறீர்கள்தானே? நீங்கள் ஒன்றாக இருப்பீர்கள், ஒன்றாகத் திரும்பிச் செல்வீர்கள் என்று சத்தியம் செய்துள்ளீர்கள். நீங்கள் ஒன்றாகத் திரும்பிச் செல்ல விரும்பினால், நீங்கள் சமமானவர்கள் ஆகவேண்டும்தானே? சிறிதளவு எஞ்சி இருந்தால், ஏற்கனவே இரண்டு மாதங்கள் பூர்த்தியாகிவிட்டன. இன்று, இந்தப் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக நீங்கள் பல இடங்களில் இருந்து வந்துள்ளீர்கள். நீங்கள் விமானங்கள், புகையிரதங்கள், கார்களின் மூலம் வந்துள்ளீர்கள். நீங்கள் இங்கே ஓடோடி வந்திருப்பதைப் பார்த்து பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். எவ்வாறாயினும், ஒரு பிறந்த நாளில், எல்லாவற்றுக்கும் முதலில், ஒரு பரிசு வழங்கப்படுகிறது. எனவே, ஒரு மாதம் எஞ்சியுள்ளது. பின்னர் ஹோலியும் வந்துவிடும். ஹோலியின்போது, நீங்கள் எதையாவது எரிப்பீர்கள். அதனால், இன்னமும் எஞ்சியுள்ள வீணான எண்ணங்களின் சிறிய விதைகள் எவையாயினும் அவை அடிமரத்தை வெளிப்படச் செய்யும். சிலவேளைகளில் கிளைகளையும் வெளிப்படச் செய்யும். எனவே, இன்று, இந்தப் பண்டிகை தினத்தில், உங்களின் மனதில் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் - வார்த்தைகளில் மட்டும் ஊக்கம், உற்சாகம் இல்லை, ஆனால் உங்களின் மனதிலுள்ள ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் - எஞ்சியுள்ள சிறிதளவு எவையாயினும், அது உங்களின் எண்ணங்களிலோ, உங்களின் வார்த்தைகளிலோ அல்லது உங்களின் உறவுமுறைகளிலும் தொடர்புகளிலும் இருந்தாலும், தந்தையின் பிறந்தநாளின் போது, உங்களால் இந்தப் பரிசைத் தந்தையிடம் கொடுக்க முடியுமா? உங்களின் மனதில் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் உங்களால் அதைக் கொடுக்க முடியுமா? அது உங்களின் நன்மைக்காக என்பதைத் தந்தை காண வேண்டும். ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் தாம் இதை நடைமுறையில் நிச்சயமாகச் செய்து காட்டுவோம் என்று தைரியமாக இருப்பவர்கள், நிச்சயமாகத் தாம் சிறந்தவர்கள் ஆகுவோம் என நினைப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! நீங்கள் எதையாவது துறக்க வேண்டும். அதனால் கவனமாகச் சிந்தியுங்கள். உங்களின் வார்த்தைகளிலும் இல்லை. உங்களின் தொடர்புகள் மற்றும் உறவுமுறைகளிலும் இல்லை. இந்தளவு தைரியம் உங்களுக்கு இருக்கிறதா? உங்களுக்குத் தைரியம் இருக்கிறதா? மதுவனத்தைச் சேர்ந்தவர்களிடமும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களிடமும் அது உள்ளது. பாரத மக்களுக்கும் தைரியம் உள்ளது. ஏனென்றால், பாப்தாதா உங்களை நேசிக்கிறார். அதனால் நீங்கள் எல்லோரும் ஒன்றாகத் திரும்பிச் செல்ல வேண்டும், எவருமே பின்னால் விடுபடக்கூடாது என்றே அவர் உணர்கிறார். நீங்கள் தந்தையுடன் திரும்பிச் செல்வீர்கள் என்று சத்தியம் செய்திருப்பதனால், நீங்கள் சமமானவர்கள் ஆகவேண்டும். உங்களுக்குத் தந்தையின் மீது அன்பு உள்ளதல்லவா? நீங்கள் கஷ்டப்பட்டு உங்களின் கைகளை உயர்த்தவில்லைத்தானே?

பாப்தாதா இந்த ஒன்றுகூடலில், இந்த பிராமணக் குடும்பத்தில் உள்ள எல்லோரும் தந்தைக்குச் சமமான முகங்களைக் கொண்டிருக்க வேண்டும் என பாப்தாதா விரும்புகிறார். திடசங்கற்பமான எண்ணங்களைக் கொண்டிருப்பதில் தைரியத்தைக் கொண்டிருங்கள். இது பெரியதொரு விடயம் அல்ல. ஆனால், சகித்துக் கொள்ளும் சக்தியும் ஏற்றுக் கொள்ளும் சக்தியும் தேவைப்படுகின்றன. சகித்துக் கொள்ளும் சக்தி மற்றும் ஏற்றுக் கொள்ளும் சக்தி என்ற இந்த இரண்டு சக்திகளையும் கொண்டிருப்பவர்களால் கோபத்தில் இருந்து விடுபட முடியும். பிராமணக் குழந்தைகளான உங்கள் எல்லோருக்கும் சகல சக்திகளையும் பாப்தாதா ஆசீர்வாதத்தின் வடிவில் வழங்கியுள்ளார். உங்களின் பட்டமே மாஸ்ரர் சர்வசக்திவான்கள் என்பதாகும். ஒரேயொரு சுலோகனை நினைவு செய்யுங்கள், அவ்வளவுதான். ஒரு மாதத்தில் நீங்கள் சமமானவர்கள் ஆக விரும்பினால், ஒரேயொரு சுலோகனை நினைவு செய்யுங்கள். இது ஒரு சத்தியம்: துன்பத்தைக் கொடுக்காதீர்கள், துன்பத்தை எடுக்காதீர்கள். நாள் முழுவதும் எவருக்கும் துன்பத்தை ஏற்படுத்தவில்லை என்பதை உங்களில் பலர் சோதிக்கிறீர்கள், ஆனால் நீங்கள் மிக இலகுவாகத் துன்பத்தை எடுத்துக் கொள்கிறீர்கள். துன்பத்தை எடுப்பதற்கு, அதை ஏற்படுத்தியவர் யாரோ ஒருவர் இருக்க வேண்டும். அதனால் நான் எதையும் செய்யவில்லை, மற்ற நபர்தான் கொடுத்தார் எனச் சொல்வதன் மூலம் நீங்கள் சொல்வதை நியாயப்படுத்துகிறீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் ஏன் அதை எடுத்தீர்கள்? நீங்கள்தான் அதை எடுக்கிறீர்களா அல்லது நீங்கள்தான் அதை ஏற்படுத்துகிறீர்களா? உங்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்தியவர் ஒரு தவறு செய்துவிட்டார். எனவே, தந்தைக்கு அந்தக் கர்மக்கணக்கு மற்றும் நாடகத்தைப் பற்றித் தெரியும். ஆனால் நீங்கள் ஏன் அதை எடுக்கிறீர்கள்? பெறுபேற்றிலே, துன்பத்தை ஏற்படுத்துவது என்று வரும்போது, நீங்கள் அதைப் பற்றிச் சிந்திக்கிறீர்கள் என்பதை பாப்தாதா பார்க்கிறார். அப்படியிருந்தும், நீங்கள் மிக விரைவாகத் துன்பத்தை எடுத்துக் கொள்கிறீர்கள். இதனாலேயே, உங்களால் சமமானவர் ஆக முடியாமல் உள்ளது. யார் உங்களுக்கு அதை ஏற்படுத்தினாலும், நீங்கள் அதை எடுக்கக்கூடாது. இல்லாவிட்டால், உணர்ச்சிகள் என்ற நோய் அதிகரிக்கும். ஆகவே, உங்களின் உணர்ச்சிகள் சிறிய விடயங்களில் அதிகரித்தால், வீணான எண்ணங்கள் இல்லாமல் போகாது. அந்த நிலையில், எப்படி உங்களால் தந்தையுடன் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல முடியும்? தந்தை உங்களை நேசிக்கிறார். அதனால் தந்தையால் உங்களைத் தனியே விட்டுச் செல்ல முடியாது. அவர் நிச்சயமாக உங்களைத் தன்னுடன் திருப்பி அழைத்துச் செல்லவே வேண்டும். இதை ஏற்றுக் கொள்கிறீர்களா? உங்களுக்கு இது பிடித்திருக்கிறதா? உங்களுக்கு இது பிடித்திருந்தால், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! நீங்கள் பின்னால் தொடர்ந்து செல்லப் போவதில்லைத்;தானே? நீங்கள் ஒன்றாக வீட்டுக்குத் திரும்பிச் செல்ல விரும்பினால், நிச்சயமாக நீங்கள் ஒரு பரிசைக் கொடுக்க வேண்டும். ஒரு மாதத்திற்கு, நீங்கள் எல்லோரும் பயிற்சி செய்ய வேண்டும்: துன்பத்தைக் கொடுக்கவும் கூடாது, துன்பத்தை எடுக்கவும் கூடாது. ‘நான் அவருக்குத் துன்பம் கொடுக்கவில்லை, ஆனால் அவர்தான் அதை எடுத்துக் கொண்டார்’ எனச் சொல்லாதீர்கள். நிகழ்வுகள் நடக்கும். மற்றவர்களைப் பார்க்காதீர்கள், உங்களைப் பாருங்கள். நான், ‘ஓ அர்ச்சுனா’ ஆகவேண்டும்.

பாருங்கள், பாப்தாதா அறிக்கையைப் பார்த்திருக்கிறார். எனினும், பெரும்பாலானோருக்கு, அது திருப்தியான அறிக்கையாக இல்லை. இதனாலேயே, பாப்தாதா அதை ஒரு மாதத்திற்குக் கீழ்க்கோடிடுகிறார். இதை நீங்கள் ஒரு மாதம் பயிற்சி செய்தால், இந்தப் பழக்கத்தை நீங்கள் ஏற்படுத்திக் கொள்வீர்கள். நீங்கள் இந்தப் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இது எப்படியும் நடக்கிறது, இது போதும் என அதை இலேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இல்லை. நீங்கள் பாப்தாதாவை நேசித்தால், அன்பினால் கோபம் என்ற ஒரு விகாரத்தை உங்களால் பலி கொடுக்க முடியாதா? தியாகத்தின் அடையாளம், கட்டளைகளைப் பின்பற்றுபவராக இருப்பதாகும். வீணான எண்ணங்கள் இறுதிக் கணங்களில் அதிகளவு ஏமாற்றத்தை ஏற்படுத்தும். ஏனென்றால், எங்கும் துன்பத்தின் சூழல், இயற்கையின் சூழல், ஆத்மாக்களின் சூழல் என்பவை உங்களைக் கவரும். உங்களிடம் வீணான எண்ணங்களின் பழக்கம் இருக்குமாக இருந்தால், நீங்கள் வீணான எண்ணங்களின் பிரச்சனையில் அகப்பட்டுக் கொள்வீர்கள். எனவே, இன்று, பாப்தாதாவிற்கு விசேடமாக தைரியத்தின் எண்ணம் ஏற்பட்டது: நீங்கள் வெளிநாட்டில் வசித்தாலென்ன அல்லது பாரதத்தில் வசித்தாலென்ன, நீங்கள் எல்லோரும் ஒரேயொரு பாப்தாதாவின் குழந்தைகள் ஆவீர்கள். எனவே, எங்கும் உள்ள குழந்தைகளான நீங்கள் எல்லோரும் வெற்றி சொரூபங்களாகி, ‘காமமோ அல்லது கோபமோ இல்லை, நாங்கள் கடவுளின் குழந்தைகள்’ என்று அறிவிக்கும் வகையில் தைரியத்தையும் திடசங்கற்பத்தையும் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் மற்றவர்களைக் குடிப்பதையும் புகைப்பதையும் விடச் செய்கிறீர்கள். ஆனால், இன்று, பாப்தாதா உங்களைக் கோபம் மற்றும் காம விகாரங்களில் இருந்து விடுபட வேண்டும் என்று ஊக்கப்படுத்துகிறார். அத்துடன் நீங்கள் இதை உலக மேடையிலும் காட்ட வேண்டும். உங்களுக்கு இது பிடித்திருக்கிறதா? தாதிகளுக்கு இது பிடித்திருக்கிறதா? முதல் வரிசையில் இருப்பவர்களுக்கு இது பிடித்திருக்கிறதா? மதுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கு இது பிடித்திருக்கிறதா? மதுவனத்தைச் சேர்ந்தவர்களும் இதை விரும்புகிறார்கள். வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு இது பிடித்திருக்கிறதா? எனவே, உங்களுக்குப் பிடித்த விடயத்தைச் செய்வது பெரிய விடயமா? பாப்தாதாவும் மேலதிகமான கதிர்களை வழங்குவார். இது ஆசீர்வாதங்களை வழங்கி, ஆசீர்வாதங்களை எடுத்துக் கொள்ளும் பிராமணக் குடும்பம் என்ற ஒரு சித்திரம் புலப்பட வேண்டும். ஏனென்றால், காலமும் அழைக்கிறது. முன்னோடிக் குழுவினரின் இதய அழைப்பும் பாப்தாதாவிடம் உள்ளது. மாயையும் இப்போது களைப்படைந்து விட்டாள். அவளும் இப்போது நாங்கள் அவளை விடுவிக்க வேண்டும் என்றே விரும்புகிறாள். நீங்கள் அவளை விடுவிக்கிறீர்கள். ஆனால் அவ்வப்போது, அவளுடன் நீங்கள் சிறிதளவு நட்பைப் பேணுகிறீர்கள். ஏனென்றால், நீங்கள் அவளுடன் 63 பிறவிகளாக நண்பர்களாக இருந்திருக்கிறீர்கள். எனவே, பாப்தாதா கூறுகிறார்: ஓ மாஸ்ரர் முக்தியை அருள்பவர்களே, இப்போது எல்லோருக்கும் முக்தியை அருளுங்கள். ஏனென்றால், நீங்கள் முழு உலகமும் ஏதாவதொன்றை அடையச் செய்ய வேண்டும். நீங்கள் அதிகளவில் செய்ய வேண்டும். ஏனென்றால், தற்சமயம், காலம் உங்களின் சகபாடியாக உள்ளது. ஆத்மாக்கள் எல்லோரையும் முக்தி அடையச் செய்ய வேண்டும். இது அதற்கான நேரமாகும். வேறொரு வேளையில், நீங்கள் முயற்சி செய்தாலும், அது சரியான நேரமாக இருக்காது. உங்களால் அதை அருள முடியாது. இதுவே இப்போது அந்த நேரம். இதனாலேயே, பாப்தாதா கூறுகிறார்: எல்லாவற்றுக்கும் முதலில் உங்களுக்கு முக்தியை அருளுங்கள். பின்னர் உலகிலுள்ள ஆத்மாக்கள் எல்லோருக்கும் முக்தியின் துளியை வழங்குங்கள். அவர்கள் அழைக்கிறார்கள்: சந்தோஷம் அற்றவர்களின் அழைப்பின் ஒலியை உங்களால் கேட்க முடியவில்லையா? நீங்கள் உங்களுடன் மும்முரமாக இருந்தால், உங்களால் அந்த ஒலியைக் கேட்க முடியாது. மீண்டும் மீண்டும், ‘சந்தோஷம் அற்ற எங்களின் மீது கருணை காட்டுங்கள்!’ என்ற பாடலை அவர்கள் பாடுகிறார்கள். நீங்கள் நீண்ட காலத்திற்கு உங்களைக் கருணை நிறைந்தவராகவும் கனிவாகவும் இருக்கும் சம்ஸ்காரங்களால் நிரப்பவில்லை என்றால், எப்படி உங்களின் உயிரற்ற விக்கிரகங்களை கருணை, கனிவு மற்றும் கருணைநிறைந்தவராக இருக்கும் அதிர்வலைகளால் நிரப்புவீர்கள்?

துவாபர யுகத்தில், நீங்களும் கருணை நிறைந்தவர்கள் ஆகி, உங்களின் உயிரற்ற விக்கிரகங்களால் எல்லோருக்கும் கருணை காட்டுவீர்கள் என்பதை இரட்டை வெளிநாட்டவர்களான நீங்கள் புரிந்து கொண்டீர்களா? அவை உங்களின் உருவங்கள், அப்படித்தானே? அல்லது, அவை இந்தியாவில் இருப்பவர்களின் உருவங்களா? அவை உங்களின் உருவங்கள் என்பதை வெளிநாட்டவர்களான நீங்கள் நம்புகிறீர்களா? எனவே, அந்த விக்கிரகங்கள் என்ன செய்கின்றன? அந்த விக்கிரகங்களின் முன்னால் செல்லும்போது மக்கள் என்ன கேட்கிறார்கள்? அவர்கள் தொடர்ந்தும், ‘கருணை, கருணை’ என்றே உச்சாடனம் செய்கிறார்கள். அதனால் இப்போது சங்கமயுகத்தில் நீங்கள் உங்களின் உயிர்வாழும் ரூபங்களை இந்த அதிர்வலைகளால் நிரப்பினால் மட்டுமே, துவாபர, கலியுகங்களில் மக்கள் உங்களின் உயிரற்ற விக்கிரகங்களில் இருந்து அனுபவத்தைப் பெறுவார்கள். பக்தர்கள் நிச்சயமாக நன்மை அடைவார்கள்தானே? பக்தர்களும் உங்களின் சந்ததியினர், அல்லவா? நீங்கள் எல்லோரும் முப்பாட்டனாரின் குழந்தைகள். எனவே, அவர்கள் பக்தர்களோ அல்லது சந்தோஷம் அற்றவர்களோ, அவர்களும் உங்களின் சந்ததியினரே. எனவே, நீங்கள் கருணை கொள்கிறீர்களா? உங்களிடம் அது உள்ளது. ஆனால் நீங்கள் எங்கேயாவது சிறிது மும்முரமாகி விடுகிறீர்கள். இப்போது உங்களுக்காக முயற்சி செய்வதில் நீங்கள் அதிகளவு நேரத்தைச் செலவிடக் கூடாது. மற்றவர்களுக்குக் கொடுப்பதில் நேரத்தைச் செலவிடுங்கள். இவ்வாறு வழங்குவது பின்னர் பெறுகின்ற வடிவத்தைப் பெறும். அற்பமான விடயங்களில் அகப்பட்டுக் கொள்ளாதீர்கள். முக்தி தினத்தைக் கொண்டாடுங்கள். இன்றைய தினத்தை முக்தி தினமாகக் கொண்டாடுங்கள். இது ஓகேயா? ஆம், முதல் வரிசையில் இருப்பவர்களே, இது சரிதானே? மதுவனவாசிகளே, இது சரிதானே?

இன்று, மதுவனத்தைச் சேர்ந்தவர்கள் மிகவும் அழகாகத் தென்படுகிறார்கள். ஏனென்றால், எல்லோரும் மதுவனத்தில் இருப்பவர்களை மிக விரைவாகப் பின்பற்றுகிறார்கள். ஒவ்வொரு விடயத்திலும் மக்கள் மதுவனத்தைச் சேர்ந்தவர்களை மிக விரைவாகப் பின்பற்றுகிறார்கள். ஆகவே, மதுவனத்தைச் சேர்ந்தவர்கள் முக்தி தினத்தைக் கொண்டாடினால், மற்றவர்களும் அதைப் பின்பற்றுவார்கள். மதுவனவாசிகளான நீங்கள் எல்லோரும் மாஸ்ரர் முக்தியை அருள்பவர்கள் ஆகவேண்டும். நீங்கள் அத்தகையவர்கள் ஆகவேண்டுமா? (எல்லோரும் தமது கைகளை உயர்த்தினார்கள்.) பலர் இருக்கிறார்கள். அச்சா. நீங்கள் இங்கே தனிப்பட்ட முறையில் அமர்ந்திருந்தாலென்ன அல்லது இந்தத் தேசத்தில் அமர்ந்திருந்தாலென்ன அல்லது வெளிநாடுகளில் தொலைவில் இருந்தவண்ணம் கேட்டுக் கொண்டு அல்லது பார்த்துக் கொண்டு இருப்பவர்களுக்கும் பாப்தாதா குழந்தைகளான உங்கள் எல்லோரையும் இந்த அப்பியாசத்தைச் செய்ய வைப்பார். நீங்கள் எல்லோரும் தயாரா? சகல எண்ணங்களையும் அமிழ்த்துங்கள். இப்போது, ஒரு விநாடியில், உங்களின் மனதினாலும் புத்தியாலும் உங்களின் இனிய வீட்டுக்குச் செல்லுங்கள். இப்போது, பரந்தாமத்தில் இருந்து சூட்சும வதனத்திற்குச் செல்லுங்கள். இப்போது, சூட்சும வதனத்தில் இருந்து பௌதீக உலகிலுள்ள உங்களின் சுவர்க்க இராச்சியத்திற்குச் செல்லுங்கள். இப்போது, உங்களின் அதி புண்ணிய சங்கமயுகத்திற்கு வாருங்கள். இப்போது, மதுவனத்திற்கு வாருங்கள். இந்த முறையில், மீண்டும் மீண்டும் சுயதரிசனச் சக்கரதாரி ஆகி, தொடர்ந்தும் சக்கரத்தைச் சுற்றி வாருங்கள். அச்சா.

எங்கும் உள்ள அன்பான, அதிர்ஷ்டசாலிக் குழந்தைகள் எல்லோருக்கும் சுய இராச்சிய அதிகாரத்தினால் சதா சுய மாற்றத்தை ஏற்படுத்தும் அரச குழந்தைகளுக்கும் திடசங்கற்பத்துடன் சதா வெற்றி பெறும் வெற்றி நட்சத்திரங்களுக்கும் சதா சந்தோஷமாக இருக்கும் குழந்தைகள் எல்லோருக்கும் பாப்தாதாவினதும் குழந்தைகளினதும் இன்றைய பிறந்த நாளுக்காகப் பற்பல வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும் அன்பும் நினைவுகளும் உரித்தாகுக. இத்தகைய மேன்மையான குழந்தைகளுக்கு நமஸ்தே.

ஆசீர்வாதம்:
உலகிற்கு நன்மை செய்யும் உங்களின் பொறுப்பைப் புரிந்து கொள்வதன் மூலம் உங்களின் நேரம் மற்றும் சக்திகளில் சிக்கனமாக இருக்கும் ஒரு மாஸ்ரர் படைப்பாளர் ஆகுவீர்களாக.

உலகிலுள்ள ஆத்மாக்கள் எல்லோரும் மேன்மையான ஆத்மாக்களான உங்களின் குடும்பமே. குடும்பம் எத்தனை பெரியதோ, அந்தளவிற்கு நீங்கள் சிக்கனமாக இருப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஆத்மாக்கள் எல்லோரையும் உங்களுக்கு முன்னால் வைத்திருந்த வண்ணம், உங்களை எல்லையற்ற சேவைக்குக் கருவியாகக் கருதி, உங்களின் நேரம் மற்றும் சக்திகளைச் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள். உங்களுக்காக சம்பாதித்து, அதிலிருந்து உண்டு அதை முடித்தல் - இந்த முறையில் கவனயீனம் ஆகாதீர்கள். உங்களின் பொக்கிஷங்கள் எல்லாவற்றுக்கும் வரவுசெலவுத் திட்டத்தைப் போடுங்கள். உங்களின் விழிப்புணர்வில் மாஸ்ரர் படைப்பவராக இருக்கும் ஆசீர்வாதத்தை வைத்திருந்து, சேவை செய்வதற்காக நேரத்தினதும் சக்தியினதும் களஞ்சியத்தைச் சேமியுங்கள்.

சுலோகம்:
ஒரு மகாதானியின் எண்ணங்களும் வார்த்தைகளும் தொடர்ந்து ஆத்மாக்களை ஆசீர்வாதங்களைப் பெறச் செய்யும்.

அவ்யக்த சமிக்கை: எண்ணங்களின் சக்தியைச் சேமித்து, மேன்மையான சேவைக்குக் கருவி ஆகுங்கள்.

உங்களிடம் என்ன சூட்சுமமான சக்திகள் உள்ளனவோ, அவை அமைச்சர்களோ அல்லது மகாமந்திரிகளோ, அவற்றை உங்களின் கட்டளைகளின்படி செயல்பட வையுங்கள். உங்களின் அரசசபை இப்போது நன்றாகச் செயல்பட்டால், நீங்கள் தர்மராஜின் சபைக்குச் செல்ல வேண்டியதில்லை. தர்மராஜூம் உங்களை வரவேற்பார். எவ்வாறாயினும், இப்போது உங்களிடம் கட்டுப்படுத்தும் சக்தி இல்லாவிட்டால், இறுதிப் பெறுபேற்றிலே உங்களின் தண்டப்பணத்தைக் கட்டுவதற்காக நீங்கள் தர்மராஜ்புரிக்குச் செல்ல வேண்டியிருக்கும். தண்டனையே தண்டப்பணம் ஆகும். தெளிவாகுங்கள், நீங்கள் எந்தவிதமான தண்டப்பணத்தையும் கட்ட வேண்டியதில்லை.

அறிவித்தல்: இன்று மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை. சகல சகோதரர்களும் சகோதரிகளும் ஒன்றாக மாலை 6.30 இலிருந்து 7.30வரை யோகத்தில் அமர்ந்திருந்து இதை அனுபவம் செய்யுங்கள்: பக்தர்களின் அழைப்பைக் கேளுங்கள். எல்லோருடைய ஆசைகளையும் பூர்த்தி செய்யும் சேவையைச் செய்வதற்கு, கருணைநிறைந்தவராகவும் உங்களின் தேவ ரூபத்தில் அருகின்ற சொரூபமாகவும் ஆகுங்கள்.