20.08.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே ஸ்ரீமத்தைப் பின்பற்றி முக்தியையும் ஜீவன்முக்தியையும் அடைவதற்கான வழியை அனைவருக்கும் காட்டுங்கள். நாள் முழுவதும் தொடர்ந்தும் இவ்வியாபாரத்தைச் செய்யுங்கள்.
கேள்வி:
தந்தை உங்களுக்குக் கூறியுள்ள எந்தச் சூட்சுமமான விடயங்களை நீங்கள் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்?பதில்:
1) சத்தியயுகம் அமரத்துவ பூமியாகும். அங்கு ஓர் ஆத்மா ஓர் ஆடையை நீக்கி இன்னொன்றை எடுக்கின்றார். எவ்வாறாயினும் அங்கே மரணம் பற்றிய குறிப்பே கிடையாது. இதனாலேயே அது மரணபூமி என அழைக்கப்படுவதில்லை. 2) சிவபாபாவின் படைப்போ எல்லையற்றது. ஆனால் இந்நேரத்தில் பிராமணர்களாகிய நீங்கள் மாத்திரமே பிரம்மாவின் படைப்புக்கள் ஆவீர்கள். “திரிமூர்த்தி சிவன்” என்றே எவரும் கூறலாமே அன்றி “திரிமூர்த்தி பிரம்மா” என்றல்ல. இச்சூட்சுமமான விடயங்கள் அனைத்தையும் தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்தி உள்ளார். இவ்விடயங்கள் அனைத்தையும் பற்றிச் சிந்தித்து உங்கள் புத்திக்கான சொந்த உணவைத் தயாரித்துக் கொள்ளுங்கள்.ஓம் சாந்தி.
திரிமூர்த்தி கடவுள் சிவன் பேசுகின்றார். அம்மக்கள் திரிமூர்த்தி பிரம்மாவைப் பற்றிப் பேசுகின்றனர். தந்தை கூறுகின்றார்: திரிமூர்த்தி கடவுள் சிவன் பேசுகின்றார். திரிமூர்த்தி கடவுள் பிரம்மா பேசுகின்றார் எனக் கூறப்படுவதில்லை. திரிமூர்த்தி கடவுள் சிவன் பேசுகின்றார் என நீங்கள் கூற முடியும். அவர்கள் சிவனையும் சங்கரரையும் ஒன்றாகக் கலந்து விட்டார்கள். இது மிகத் தெளிவானது. திரிமூர்த்தி பிரம்மாவன்றி திரிமூர்த்தி கடவுள் சிவனே பேசுகின்றார். சங்கரர் தனது கண்ணைத் திறக்கும்போது விநாசம் இடம்பெறுவதாக மக்கள் கூறுகின்றனர். அவை அனைத்தும் புத்திகளால் புரிந்து கொள்ளப்பட வேண்டும். அந்த மூவர் மாத்திரமே பிரதான பாகங்களைக் கொண்டுள்ளனர். பிரம்மாவும் விஷ்ணுவும் 84 பிறவிகளுக்கான பெரிய பாகமொன்றைக் கொண்டுள்ளனர். நீங்கள் விஷ்ணுவினதும் பிரஜாபிதா பிரம்மாவினதும் அர்த்தத்தைப் புரிந்து கொண்டுள்ளீர்கள். இம்மூவரும் மாத்திரமே ஒரு பாகத்தைக் கொண்டுள்ளனர். “பிரம்மா” என்ற பெயர் ஆதிதேவர் என்றும் ஆதாம் என்றும் நினைவுகூரப்பட்டுள்ளது. பிரஜாபிதாவிற்கு ஓர் ஆலயம் உள்ளது. இது தற்போது பிரம்மா எனப் பெயரிடப்பட்டுள்ள விஷ்ணுவினுடைய, அதாவது கிருஷ்ணருடைய இறுதிப் பிறவியும் 84வது பிறவியும் ஆகும். பிரம்மாவும் விஷ்ணுவும் தெளிவாக்கப்பட வேண்டும். பிரம்மா தத்தெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றார். அவர்கள் இருவரும் சிவனின் குழந்தைகள் ஆவர். உண்மையில் ஒரு குழந்தை மாத்திரமே உள்ளார். பார்க்கப் போனால் பிரம்மா, சிவனின் குழந்தை ஆவார். அவர்கள் பாப்பும் தாதாவும் ஆவர். விஷ்ணு பற்றிய குறிப்பே கிடையாது. சிவபாபா, பிரஜாபிதா பிரம்மா மூலமாகவே ஸ்தாபனையை மேற்கொள்கின்றாரே அன்றி விஷ்ணு மூலமாக அல்ல. சிவபாபாவிற்குக் குழந்தைகள் உள்ளனர். பிரம்ம பாபாவிற்கும் குழந்தைகள் உள்ளனர். எனினும் விஷ்ணுவிற்குக் குழந்தைகள் இருப்பதாகவோ அல்லது இலக்ஷ்மி நாராயணனுக்குப் பல குழந்தைகள் இருப்பதாகவோ நீங்கள் கூறமுடியாது. இது புத்திகளுக்கான உணவாகும். நீங்களே உங்களின் சொந்த உணவைத் தயாரிக்க வேண்டும். விஷ்ணுவே மிக நீண்ட பாகத்தைக் கொண்டிருப்பதாகக் கூறமுடியும். அவர்கள் காட்டுகின்ற 84 பிறவிகளுக்கான பல்வகை ரூபம் விஷ்ணுவிற்கு உரியதே அன்றி பிரம்மாவிற்கு உரியதல்ல. உருவாக்கப்பட்டுள்ள பல்வகை ரூபம் விஷ்ணுவினுடையதே. அவர்கள் பிரஜாபிதா பிரம்மாவின் பெயரை முதலில் குறிப்பிட்டாலும் அவர் குறுகிய பாகத்தை மாத்திரமே கொண்டிருக்கின்றார். இதனாலேயே காட்டப்படுகின்ற பல்வகை ரூபம் விஷ்ணுவினுடையதே ஆகும். அவர்கள் உருவாக்கி உள்ள நான்கு கரங்களைக் கொண்ட உருவமும் விஷ்ணுவினுடையதே. உண்மையில் அந்த அணிகலன்கள் உங்களுக்கே உரியவை. இவ்விடயங்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டும். எந்த மனிதராலும் இதை விளங்கப்படுத்த முடியாது. தந்தை பல புதிய வழிகளில் தொடர்ந்தும் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். தந்தை கூறுகின்றார்: “திரிமூர்த்தி கடவுள் சிவன் பேசுகின்றார்” எனக் கூறுவது சரியானது. விஷ்ணு, பிரம்மா, சிவன்: இவர்களில் பிரஜாபிதா பிரம்மா மாத்திரமே குழந்தை ஆவார். விஷ்ணுவைக் குழந்தை என அழைப்பதில்லை. அவர்கள் படைப்பைப் பற்றிப் பேசுகின்ற போதிலும் படைப்பு பிரம்மாவினுடையதே ஆகும். படைப்பு பின்னர் வெவ்வேறு பெயர்களிலும் ரூபங்களிலும் நிகழ்கின்றது. அந்த ஒரேயொருவரின் (சிவபாபா) பாகமே பிரதானமானது. இந்நேரத்தில் பிரம்மாவின் பாகம் மிகவும் சிறியதாகும். விஷ்ணுவின் இராச்சியம் எவ்வளவு காலத்திற்குத் தொடர்கின்றது? சிவபாபாவே முழு விருட்சத்தினதும் விதை ஆவார். அவரது படைப்புக்கள் சாலிகிராம்கள் என அழைக்கப்படுகின்றனர். பிரம்மாவின் படைப்புக்கள் பிராமணர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். பிரம்மாவின் படைப்புக்கள் சிவனுடையதைப் போன்று பெரியதல்ல. சிவனின் படைப்பே மிகப்பெரியதாகும். சகல ஆத்மாக்களும் அவரது குழந்தைகள் ஆவர். பிராமணர்களாகிய நீங்கள் மாத்திரமே பிரம்மாவின் படைப்புக்கள். நீங்கள் எல்லைக்கு உட்பட்டவர்களாக ஆகுகின்றீர்கள். சகல ஆத்மாக்களும் சிவனின் படைப்புக்கள். அது எல்லையற்றது. அவர் எல்லையற்ற எண்ணிக்கையான ஆத்மாக்களுக்கு நன்மை செய்கின்றார். அவர் பிரம்மா மூலம் சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார். பிராமணர்களாகிய நீங்கள் பின்னர் சென்று சுவர்க்கத்தில் வசிக்கின்றீர்கள். வேறு எவரையும் சுவர்க்க வாசிகள் என்று அழைக்க முடியாது. ஏனைய அனைவரும் அமைதிதாமம் எனப்படுகின்ற நிர்வாணா தாமவாசிகள் ஆகுகின்றனர். சிவபாபாவினுடைய சேவையே அதியுயர்வானது: அவர் சகல ஆத்மாக்களையும் திரும்பவும் தன்னுடன் அழைத்துச் செல்கின்றார். ஒவ்வொருவருடைய பாகமும் வேறுபட்டது. சிவபாபா கூறுகின்றார்: எனது பாகமும் வேறானது. நான் உங்கள் அனைவரையும் உங்களது கணக்குகளைத் தீர்க்குமாறு செய்கின்றேன். நான் உங்களைத் தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மையாக்கி திரும்பவும் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றேன். நீங்கள் இங்கு தூய்மை ஆகுவதற்கு முயற்சி செய்கின்றீர்கள். ஏனைய அனைவரும் தீர்ப்புக் காலத்தில் தங்களின் கணக்குகளைத் தீர்த்து வீடு திரும்புவார்கள். அவர்கள் முக்திதாமத்தில் அமர்ந்திருப்பார்கள். உலகச் சக்கரம் தொடர்ந்தும் சுழல வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் பிரம்மா மூலம் பிராமணர்களாகி பின்னர் தேவர்கள் ஆகுகின்றீர்கள். பிராமணர்களாகிய நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் சேவை செய்கின்றீர்கள். நீங்கள் முக்தியையும் ஜீவன்முக்தியையும் அடைய விரும்பினால் இவ்வாறு செய்யலாம் எனக் கூறுவதன் மூலம் நீங்கள் மனிதர்களுக்குப் பாதையைக் காட்டுகின்றீர்கள். அந்த இரண்டுக்குமான திறவுகோல் உங்கள் கரங்களிலேயே உள்ளது. அத்துடன் யார் முக்தி அடைவார்கள் என்பதையும் யார் ஜீவன்முக்தி அடைவார்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். நாள் முழுவதும் இவ்வியாபாரத்தையே செய்யுங்கள். ஒருவர் பலசரக்குக் கடையொன்றை நடாத்துகையில் அது நாள் முழுவதும் அவரது புத்தியில் உள்ளது. படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றி அறிவதும் மற்றவர்களுக்கு முக்திக்கும் ஜீவன்முக்திக்குமான பாதையைக் காட்டுவதுமே உங்கள் வியாபாரமாகும். இந்தத் தர்மத்திற்கு உரியவர்கள் தோன்றுவார்கள். தங்களின் சொந்தச் சமயங்களை மாற்றாத வேறு சமயங்கள் பல உள்ளன. தேவ தர்மம் மறைந்து விட்டதால் சிலர் பௌத்த சமயத்தை ஏற்றுக் கொள்கின்றனர். தான் ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்தைச் சார்ந்தவர் என எந்தவொரு மனிதரும் இப்பொழுது கூறுவதில்லை. தேவர்களின் படங்கள் மிகவும் பயனுள்ளவை. ஆத்மாக்கள் அழிவற்றவர்கள்; அவர்கள் ஒருபோதும் மரணிப்பதில்லை. ஓர் ஆத்மா ஒரு சரீரத்தை நீக்கி வேறொன்றை எடுத்து தொடர்ந்தும் தனது பாகத்தை நடிக்கின்றார். அவ்வுலகத்தை மரணபூமி என அழைக்க முடியாது. அது அமரத்துவ பூமியாகும். ஆத்மாக்கள் தங்களது ஆடையை மாற்றுகின்றனர். இவை மிகச் சூட்சுமமான விடயங்களும் புரிந்து கொள்ளப்பட வேண்டியவையும் ஆகும். இவை மேலோட்டமான விடயங்கள் அல்ல. மக்கள் திருமணம் செய்யும்போது சிலர் அனைத்தையும் சிறிது சிறிதாகவும் ஏனையோர் மொத்தமாகவும் பெறுகின்றனர். சிலர் அனைத்தையும் வெளிப்படையாகவே கொடுக்கின்றனர். சிலர் அனைத்தையும் ஒரு சூட்கேஸில் வைத்துப் பூட்டிக் கொடுக்கின்றனர். சகல வகையான மக்களும் உள்ளனர். நீங்கள் அனைவரும் மணவாட்டிகள் என்பதால் நீங்கள் அனைவருமே முழுமையான ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். தந்தையே மணவாளன் ஆவார். அவர் குழந்தைகளாகிய உங்களை அலங்கரித்து உங்களுக்கு உலக இராச்சியத்தை முழுமையாகக் கொடுக்கின்றார். நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள். நினைவே பிரதான விடயமாகும். இந்த ஞானம் மிக இலகுவானது. நீங்கள் அதைப் பற்றிச் சிந்திக்கும்போது அது அல்பாவை நினைவு செய்வதற்கான கேள்வியே ஆகும். எனினும் நினைவே உடனடியாக நழுவி விடுகின்றது. பொதுவாக தாங்கள் பாபாவை மறந்து விடுவதாகப் பலரும் கூறுகின்றனர். நீங்கள் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்தும் போதெல்லாம் எப்பொழுதும் “நினைவு” என்ற வார்த்தையையே பயன்படுத்துங்கள். “யோகம்” என்ற வார்த்தை தவறானது. ஓர் ஆசிரியர் தனது மாணவர்களை நினைவு செய்கின்றார். தந்தையே பரமாத்மா ஆவார். ஆத்மாக்களாகிய நீங்கள் பரம் அல்ல. நீங்கள் தூய்மை அற்றவர்கள். இப்பொழுது தந்தையை நினைவுசெய்யுங்கள். ஒருவரின் ஆசிரியரும் தந்தையும் குருவும் நினைவு செய்யப்படுகின்றனர். குருமார் அமர்ந்திருந்து சமயநூல்களை உரைப்பதுடன் மந்திரங்களையும் கொடுக்கின்றனர். பாபாவிடம் ஒரேயொரு மந்திரமே உள்ளது: மன்மனாபவ! பின்னர் என்ன நிகழ்கின்றது? மத்தியாஜிபவ! நீங்கள் பின்னர் விஷ்ணுதாமத்திற்குச் செல்வீர்கள். நீங்கள் அனைவருமே அரசர்களாகவும் அரசிகளாகவும் ஆகுவீர்கள் என்றில்லை. அரசரும் அரசியும் பிரஜைகளும் உள்ளனர். திரிமூர்த்தியே பிரதான விடயமாகும். சிவபாபாவின் பின்னர் மனித உலகைப் படைக்கின்ற பிரம்மா உள்ளார். அவர் பிராமணர்களை உருவாக்குகின்றார். அவர் இங்கிருந்து பிராமணர்களுக்குக் கற்பிக்கின்றார். இது புதிய விடயமாகும். பிராமணர்களாகிய நீங்கள் சகோதர, சகோதரிகள் ஆவீர்கள். வயதானவர்களும் கூறுகின்றனர்: நாங்கள் சகோதர, சகோதரிகள். இது உள்ளார்த்தமாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டியது அன்றி அநாவசியமாகக் கூறப்படுவதற்கு அல்ல. கடவுள் பிரஜாபிதா பிரம்மா மூலமாக உலகைப் படைத்தார். நீங்கள் அனைவரும் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் என்பதால் நீங்கள் அனைவரும் சகோதர, சகோதரிகள் ஆகியுள்ளீர்கள். இவ்விடயங்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டும். உங்களுக்குக் கற்பிப்பவர் யார் என்பதையிட்டுக் குழந்தைகளாகிய நீங்கள் பெருமளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். திரிமூர்த்தி சிவனாகிய சிவபாபா. பிரம்மாவின் பாகம் மிகவும் குறுகிய காலத்திற்கே உள்ளது. விஷ்ணுவின் பாகம் சத்தியயுக இராச்சியத்தில் எட்டுப் பிறவிகளுக்கு நீடிக்கின்றது. பிரம்மா ஒரு பிறவிக்கான பாகத்தையே கொண்டுள்ளார். எனவே விஷ்ணுவின் பாகமே நீண்டதாகக் கூறப்படுகின்றது. திரிமூர்த்தி சிவனே பிரதானமானவர். பின்னர் குழந்தைகளாகிய உங்களை விஷ்ணுதாமத்தின் அதிபதிகள் ஆக்குகின்ற பிரம்மாவின் பாகம் உள்ளது. பிராமணர்களாகிய நீங்கள் பிரம்மா மூலம் உருவாக்கப்படுகின்றீர்கள். நீங்கள் பின்னர் தேவர்கள் ஆகுகின்றீர்கள். எனவே இவர் உங்களின் ஆன்மீகத் தந்தை ஆவார். நீங்கள் இப்பொழுது நம்பிக்கை வைத்திருக்கின்ற இத்தந்தை (பிரம்மா) ஒரு குறுகிய காலத்திற்கு மாத்திரமே உள்ளார். அவர் ஆதிதேவர் என்றும் ஆதாம் என்றும் ஏவாள் என்றும் அழைக்கப்படுகின்றார். அவரின்றி எவ்வாறு உலகம் உருவாக்கப்பட்டிருக்க முடியும்? ஆதிதேவரும் ஆதிதேவியும் உள்ளனர். பிரம்மாவின் பாகம் சங்கமயுகத்தில் மாத்திரமே உள்ளது. தேவர்களின் பாகங்கள் அதிக காலத்திற்கு நீடிக்கின்றன. தேவர்கள் சத்தியயுகத்தில் மாத்திரமே உள்ளனர் எனக் கூறப்படுகின்றது. திரேதாயுகத்தில் அவர்கள் சத்திரியர்கள் எனப்படுகின்றனர். நீங்கள் பெறுகின்ற இக்கருத்துக்கள் மிகவும் ஆழமானவை. உங்களால் அவை அனைத்தையும் பற்றி ஒரேசமயத்தில் பேசமுடியாது. அவர்கள் திரிமூர்த்தி பிரம்மாவைப் பற்றிப் பேசுகின்றனர். அவர்கள் சிவனை அகற்றி விட்டனர். நாங்கள் திரிமூர்த்தி சிவனைப் பற்றிப் பேசுகின்றோம். அப்படங்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கு உரியவை. மக்கள் பிரம்மா மூலம் உருவாக்கப்படுகின்றனர். நீங்கள் தேவர்கள் ஆகுகின்றீர்கள். விநாச காலத்தில் இயற்கை அனர்த்தங்கள் இடம்பெறுகின்றன. விநாசம் நிகழவே வேண்டும். கலியுகத்தின் பின்னர் சத்தியயுகம் இருக்கும். இச்சரீரங்கள் அனைத்தும் அழிக்கப்பட உள்ளன. அனைத்தும் நடைமுறையில் நிகழ வேண்டும். அவர் தனது கண்ணைத் திறப்பதால் அது நிகழ்வதில்லை. சுவர்க்கம் மறையும் நேரத்தில் பூகம்பங்கள் போன்றவையும் இருக்கும். அந்நேரத்தில் சங்கரர் தனது கண்ணைத் திறந்து மூடுகின்றாரா? துவாரகையும் இலங்கையும் நீரூக்கடியில் சென்றதாக நினைவுகூரப்படுகின்றது. தந்தை இப்பொழுது விளங்கப்படுத்துகின்றார்: நான் கல்லுப்புத்தி உடையவர்களைத் தெய்வீகப்புத்தி உடையவர்களாக மாற்றுவதற்கு வந்துள்ளேன். மக்கள் அழைக்கின்றனர்: ஓ தூய்மையாக்குபவரே வாருங்கள்! வந்து உலகைத் தூய்மை ஆக்குங்கள்! எவ்வாறாயினும் இப்பொழுது இது கலியுகம் என்பதையும் அதன் பின்னர் சத்தியயுகம் வரும் என்பதையும் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் சந்தோஷத்தில் நடனமாட வேண்டும். ஒரு சட்டநிபுணர் தனது பரீட்சைகளில் சித்தி அடையும்போது அவரினுள்ளே இத்தகைய எண்ணங்கள் எழுகின்றன: இப்பொழுது நான் பணம் சம்பாதித்து ஒரு வீடு கட்டுவேன், நான் இதைச் செய்வேன். நீங்கள் இப்பொழுது ஓர் உண்மையான வருமானத்தைச் சம்பாதிக்கின்றீர்கள். சுவர்க்கத்தில் நீங்கள் பெறுகின்ற அனைத்தும் புதியனவே. சோமநாதர் ஆலயம் எவ்வாறிருக்கும் எனச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்! ஒரேயொரு ஆலயம் மாத்திரம் இருக்க முடியாது. அவ்வாலயம் இப்பொழுது 2500 வருடங்கள் பழமை வாய்ந்ததாகும். அதைக் கட்டிமுடிப்பதற்குக் காலம் எடுத்திருக்கும். அவர்கள் அவ்வாலயத்தில் வழிபட்டிருப்பார்கள், பின்னர் அது கொள்ளை அடிக்கப்பட்டிருக்கும். அது கட்டி முடிக்கப்பட்ட உடனேயே கொள்ளை அடிக்கப்பட்டிருக்க மாட்டாது. பல ஆலயங்கள் இருந்திருக்க வேண்டும். அவர்கள் வழிபடுவதற்காக ஆலயங்களைக் கட்டினார்கள். தந்தையை நினைவு செய்வதால் நீங்கள் சத்தியயுகத்திற்குச் செல்வீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையானவர்கள் ஆகுவீர்கள். நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். முயற்சியின்றி எதுவும் நிகழாது. “ஒரு விநாடியில் ஜீவன்முக்தி” என்பது நினைவுகூரப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் அதை எவராலும் சுலபமாக அடைய முடியாது. நீங்கள் ஒரு குழந்தை ஆகினால் நிச்சயமாக அதைப் பெறுவீர்கள் என்பது புரிந்து கொள்ளப்படுகின்றது. நீங்கள் இப்பொழுது முக்திதாமத்திற்குச் செல்ல முயற்சி செய்கின்றீர்கள். நீங்கள் தந்தையின் நினைவில் நிலைத்திருக்க வேண்டும். நாளுக்கு நாள் தந்தை குழந்தைகளாகிய உங்களின் புத்தியைச் சீர்திருத்துகின்றார். தந்தை கூறுகின்றார்: நான் உங்களுக்கு மிக ஆழமான விடயங்களைக் கூறுகின்றேன். ஆத்மாக்கள் புள்ளிகள் என்றும் பரமாத்மாவும் ஒரு புள்ளியே என்றும் ஆரம்பத்தில் உங்களுக்குக் கூறப்படவில்லை. அது ஏன் உங்களுக்கு முன்னரே கூறப்படவில்லை என நீங்கள் கேட்கக்கூடும். அவ்வாறு நாடகத்தில் இருக்கவில்லை. அது ஆரம்பத்திலேயே உங்களுக்குக் கூறப்பட்டிருந்தால் நீங்கள் எதையும் புரிந்து கொண்டிருக்க மாட்டீர்கள். அனைத்தும் உங்களுக்குப் படிப்படியாக விளங்கப்படுத்தப்படுகின்றன. இது இராவண இராச்சியம். இராவண இராச்சியத்தில் அனைவரும் சரீர உணர்வு உடையவர்கள் ஆகுகின்றனர். சத்தியயுகத்தில் அனைவரும் ஆத்ம உணர்வில் உள்ளனர்: தாங்கள் ஆத்மாக்கள் என்பதை அவர்கள் அறிவார்கள். அவர்களின் சரீரங்கள் முழுமையாக முதிர்ச்சி அடையும் போது தாங்கள் அவற்றைத் துறந்து வேறு சிறிய சரீரங்களை எடுக்கவேண்டும் என்பதை அவர்கள் புரிந்து கொள்கின்றார்கள். ஓர் ஆத்மா முதலில் சிறிய சரீரத்தைக் கொண்டிருக்கின்றார், பின்னர் அது வளர்ச்சி அடைகின்றது. இங்கு அனைவரும் வெவ்வேறு வயதுகளில் உள்ளனர். சிலருக்கு அகால மரணம் சம்பவிக்கின்றது. சிலர் 125 வயது வரை உயிர்வாழ்கின்றனர். எனவே தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள் என்பதையிட்டுப் பெருமளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். தூய திருமணம் செய்துகொள்வது சந்தோஷப்பட வேண்டிய விடயமன்று. அது உண்மையில் ஒரு பலவீனமே ஆகும். ஒரு பெண் தான் தூய்மையாக இருக்க விரும்புவதாகக் கூறினால் எவருமே அவளைப் பலவந்தப்படுத்த முடியாது. எவ்வாறாயினும் அவள் சிறிதளவில் இந்த ஞானத்தையே கொண்டிருந்தால் பயப்படவே செய்வாள். ஒரு இளம்பெண் மோசமாக அடிக்கப்பட்டால் அவள் பொலிஸிற்கு முறைப்பாடு செய்ய முடியும். அவர்கள் வழக்கை விசாரணை செய்வார்கள். மக்கள் மிருகங்களைக் கொலை செய்யும்போது அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அவர்கள் தண்டிக்கப்படுகின்றார்கள். குழந்தைகளாகிய உங்களை எவரும் அடிக்க முடியாது. குமார்களையும் எவரும் அடிக்க முடியாது. அவர்கள் தங்கள் சொந்தப் பணத்தைச் சம்பாதிக்க முடியும்; அவர்கள் தங்களது சொந்த வாழ்வாதாரதிற்காகச் சம்பாதிக்க முடியும். வயிற்றுக்கு அதிகம் தேவையில்லை. ஒருவரது வயிற்றுக்கு நான்கு முதல் ஐந்து ரூபாய்கள் வரையே தேவைப்படுகின்றது, இன்னொருவரின் வயிற்றுக்கோ 400 முதல் 500 ரூபாய்கள் வரை தேவைப்படுகின்றது. சிலரிடம் பெருமளவு பணம் உள்ளபோது அவர்கள் பேராசை கொண்டவர்களாக ஆகுகின்றனர். ஏழைகளிடம் பணமேதும் இல்லை. எனவே அவர்களுக்குப் பேராசையும் இருக்காது. அவர்கள் தங்களிடமுள்ள காய்ந்த சப்பாத்திகளைக் கொண்டு சந்தோஷப்படுகின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. நீங்கள் சிறந்தவற்றை உண்பதில் அதிக ஆர்வம் கொண்டிருக்கக் கூடாது. அங்கு நீங்கள் பெற முடியாதது என்று எதுவுமே இல்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் ஓர் எல்லையற்ற இராச்சியத்தையும் எல்லையற்ற சந்தோஷத்தையும் பெறுகின்றீர்கள். அங்கு நோய்கள் போன்ற எதுவும் கிடையாது. நீங்கள் ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் சந்தோஷத்தையும் கொண்டிருப்பீர்கள். அங்கு உங்களிடம் அனைத்துமே இருக்கின்றன. அங்கு வயதான காலத்திலும் நீங்கள் மிக நன்றாகவே இருக்கின்றீர்கள். நீங்கள் அதிகச் சந்தோஷத்தைக் கொண்டிருப்பீர்கள். அங்கு எவ்விதச் சிரமமும் இருக்காது. பிரஜைகளும் அவ்வாறே இருக்கின்றார்கள். எவ்வாறாயினும் நீங்கள் ஒரு பிரஜை ஆகினாலே போதும் என எண்ணாதீர்கள். அது இங்குள்ள சுதேசிகளைப் போன்றே இருக்கும். நீங்கள் சூரிய வம்ச இலக்ஷ்மி நாராயணனாக ஆகவேண்டுமாயின் அந்தளவு முயற்சியைச் செய்ய வேண்டும். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. பிரம்மாவின் புதிய படைப்புக்களாகிய நாங்கள் சகோதர, சகோதரிகள் ஆவோம். இது உள்ளார்த்தமாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும். அதைப் பற்றி மற்றவர்களுடன் பேச வேண்டிய அவசியமில்லை. சிவபாபாவே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்ற சந்தோஷத்தை எப்பொழுதும் பேணுங்கள்.2. உணவிற்கும் பானத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்காதீர்கள். பேராசையைத் துறந்து எல்லையற்ற இராச்சியத்தின் சந்தோஷத்தை நினைவு செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் பல்வகையான ‘இல்லறங்களில்’ இருந்து விடுபடுவதன் மூலம் பற்றை வென்றவராகவும் நினைவின் சொரூபமாகவும் ஆகுவீர்களாக.உங்களின் இல்லறம், தெய்வீகக் குடும்பத்தின் இல்லறம், சேவையின் இல்லறம், எல்லைக்கு உட்பட்ட பேறுகளின் இல்லறம் என்பவற்றின் மீதான பற்றை வென்றவர் ஆகுவதெனில் நீங்கள் பற்றற்றவர் ஆகுவதற்கு, பாப்தாதாவின் அன்பான ரூபத்தை உங்களின் முன்னால் வைத்திருந்து நினைவின் சொரூபம் ஆகவேண்டும். நினைவின் சொரூபம் ஆகுவதன் மூலம் நீங்கள் இயல்பாகவே பற்றை வென்றவர் ஆகுவீர்கள். சகல வகையான இல்லறங்களில் இருந்தும் விடுபடுவது என்றால் ‘நான்’ என்ற உணர்வை முடித்து பற்றை வென்றவர் ஆகுதல் என்று அர்த்தம். இந்த முறையில் பற்றை வென்றவர்கள் ஆகும் குழந்தைகளான நீங்கள், நீண்ட காலத்திற்கு முயற்சி செய்வதன் மூலம் நீண்ட காலத்திற்கு வெகுமதிக்கான உரிமையைப் பெறுவீர்கள்.
சுலோகம்:
ஒரு தாமரை மலரைப் போல் பற்றற்றவராக இருங்கள், நீங்கள் தொடர்ந்து இறையன்பைப் பெறுவீர்கள்.அவ்யக்த சமிக்கை: ஓர் இலகு யோகியாக இருப்பதற்கு இறை அன்பை அனுபவிப்பவராக இருங்கள்.
முதல் இலக்க விட்டில் பூச்சிகள், தங்களைப் பற்றிய எந்தவித உணர்வையும் கொண்டிருக்க மாட்டார்கள். இதன் அர்த்தம் என்னவென்றால் அவர்களிடம் சரீர உணர்வு இருக்காது. அது இரவோ அல்லது பகலோ அவர்களுக்குப் பசியோ அல்லது தாகமோ இருந்தாலும் அவர்களின் சந்தோஷம் அல்லது சௌகரியத்திற்கான வசதிகள் இருந்தாலும் அவர்கள் அவை எவற்றிலும் தங்கியிருக்க மாட்டார்கள். அவர்கள் முற்றுமுழுதாகத் தமது சரீரங்களைப் பற்றிய விழிப்புணர்வு அற்றவர்களாக இருப்பார்கள். அதாவது அவர்கள் சதா தீச்சுவாலையின் அன்பிலே திளைத்திருப்பார்கள். எப்படித் தீச்சுவாலை ஒளியின் வடிவில் ஒளி மற்றும் சக்தியின் வடிவில் இருக்கிறாரோ அந்தத் தீச்சுவாலையைப் போல் அவர்களும் ஒளி மற்றும் சக்தி ரூபங்களாக ஆகுவார்கள்.